யூனியன் வங்கி தேசிய தொழில்முயற்சியாண்மை விருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் 3ஆம் கட்டத்தை ஆரம்பித்துள்ளது

யூனியன் வங்கி, மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் தேசிய புத்தாக்க முகவரமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, பொது மற்றும் தனியார் பங்காண்மையிலமைந்த தேசிய தொழில்முயற்சியாண்மை விருத்தி நிகழ்ச்சித் திட்டத்தை (NEDP) 2024ஆம் ஆண்டில் ஆரம்பித்திருந்தது. இந்தத் திட்டத்தின் 3ஆம் கட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யூனியன் வங்கி அறிவித்துள்ளது. யூனியன் வங்கி சமூக தொழில்முயற்சியாண்மை பாடசாலையின் நிகழ்ச்சி நிரலுக்கமைய, வியாபார உரிமையாளர்கள் மற்றும் வியாபார ஆரம்பிப்பு சிந்தனையைக் கொண்டிருப்பவர்களின் திறன்களை கட்டியெழுப்பும் நோக்கில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதனூடாக, அறிவு, புத்தாக்கம் மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி ஆகியவற்றை ஊக்குவிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

சந்தைப்படுத்தல் பிரிவின் உப தலைவர் திஷானி திசாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “நிகழ்ச்சித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளதுடன், இதில் 200க்கும் அதிகமான ஏற்கனவே காணப்படும் மற்றும் புதிதாக ஈடுபடவுள்ள வியாபார உரிமையாளர்கள் அடங்கியுள்ளனர். இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல், இதற்கு அதிகம் கேள்வி நிலவுவதை நாம் அவதானித்ததுடன், வழங்கப்பட்டுள்ள தெரிவு விதிமுறைகளின் பிரகாரம் பங்குபற்றுனர்கள் கவனமான முறையில் தெரிவு செய்யப்படுகின்றனர். நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த பங்குபற்றுனர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை நாம் அவதானித்துள்ளோம். குறிப்பாக, வட பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களும் நாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதனூடாக, வியாபார உரிமையாளர்களுக்கு தமது திறன்களை மேம்படுத்திக் கொள்வது மட்டுமன்றி, தமது வியாபாரங்களை போட்டிகரமான வணிக சூழலில் கட்டியெழுப்பிக் கொள்வதிலும் நாட்டம் காண்பிக்கின்றமையை அவதானிக்க முடிகின்றது. மேலும், முன்னைய இரு பிரிவுகளிலும் சான்றிதழ் கற்கையை பூர்த்தி செய்தவர்களின் வெற்றிக் கதைகளுக்கு செவிமடுப்பதற்கான வாய்ப்பும் புதிய பங்குபற்றுனர்களுக்கு கிடைத்திருந்தது. இதன் போது தமக்கு கிடைத்த வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்திக் கொண்டனர், தமது தயாரிப்புகளுக்கு எவ்வாறு அதிகம் கேள்வியை ஏற்படுத்தியிருந்தனர் மற்றும் தம் வியாபாரங்களை வெற்றிப் பாதையில் எவ்வாறு வழிநடத்தியிருந்தனர் என்பது பற்றிய கருத்துகளை பகிர்ந்திருந்தனர். இந்தத் திட்டத்தில் பங்கேற்பதையிட்டு யூனியன் வங்கி பெருமை கொள்வதுடன், இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க தொடர்ச்சியாக ஆதரவளிக்கும் மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கும், தேசிய புத்தாக்க முகவரமைப்புக்கும் நன்றி தெரிவிக்கிறோம். வியாபார உரிமையாளர்களுக்கு தமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளக் கிடைக்கும் இலவச வாய்ப்பாக இது அமைந்திருப்பதுடன், நாம் வியாபாரம் மேற்கொள்ளும் சமூகத்திற்கு மீள வழங்குவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் இது அமைந்துள்ளது.” என்றார்.

படம்: யூனியன் வங்கி அணியினர், NEDP பங்குபற்றுனர்களும், மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் தேசிய புத்தாக்க முகவரமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் காணப்படுகின்றனர்.

Leave a comment

For security, use of Google's reCAPTCHA service is required which is subject to the Google Privacy Policy and Terms of Use.

බැංකු

  • Amana Bank PLC
  • Bank of Ceylon
  • Cargills Bank Ltd
  • Citibank
  • Commercial Bank of Ceylon PLC
  • DFCC Bank
  • Hatton National Bank PLC
  • HDFC Bank
  • HSBC Ltd
  • National Development Bank PLC
  • Nations Trust Bank
  • Pan Asia Banking Corporation
  • People’s Bank
  • Public Bank Berhard
  • Sampath Bank PLC
  • Seylan Bank PLC
  • Standard Chartered Bank

ආයතන

  • Merchant Bank of Sri Lanka Finance
  • Central Finance PLC
  • Commercial Leasing and Finance PLC
  • HNB Finance
  • LB Finance PLC
  • People’s Leasing and Finance PLC
  • Softlogic Finance Plc
  • Singer Finance (Lanka) PLC