பிரதான மற்றும் மேலதிக கடன் அட்டைதாரர்களின் உரிமைகள், பொறுப்புகள் மற்றும் கடப்பாடுகள்
- பிரதான அட்டைதாரரினால் பரிந்துரைக்கப்படும் நபருக்கு யூனியன் வங்கி தனது சொந்த தீர்மானத்தின் பிரகாரம் மேலதிக அட்டை ஒன்றை வழங்கும். மேலதிக அட்டை(கள்) வழங்கல் என்பது வங்கியினால் வெளியிடப்படும் நியதி மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக அமைந்திருக்கும்.
- மேலதிக அட்டையை (களை) வைத்திருக்கும் நபர்(கள்) மற்றும் பிரதான அட்டைதாரர் ஆகியோர் இணைந்து அட்டையை(களை) பயன்படுத்தியமைக்கான கொடுக்கல் வாங்கல்கள், கட்டணங்கள் ஆகியவற்றுக்கு பொறுப்பாளிகளாக அமைந்திருப்பார்கள்.
- மேலதிக அட்டையின் செல்லுபடித்தன்மை என்பது, பிரதான அட்டையின் செல்லுபடித்தன்மையில் தங்கியிருக்கும். மேலதிக அட்டை அல்லது மேலதிக அட்டைதாரருக்கான உடன்படிக்கை இரத்துச் செய்யப்படுவதனூடாக, பிரதான அட்டை அல்லது பிரதான அட்டைதாரருடனான உடன்படிக்கையை வங்கி இரத்துச் செய்யாது.
- பிரதான அட்டைதாரரும், மேலதிக அட்டைதாரரும் தமது அட்டை மீது வழங்கப்பட்டுள்ள எல்லைப் பெறுமதியை பகிர்ந்து கொள்வார்கள், மாறாக பிரதான அட்டைதாரரால் மேலதிக அட்டைதாரருக்கு(களுக்கு) குறைந்த கடன் எல்லைப் பெறுமதியை நிர்ணயிக்குமாறு வங்கிக்கு அறிவுறுத்த முடியும்.
- மேலதிக அட்டையை இரண்டாக வெட்டி, எழுத்து மூல கோரிக்கையுடன் வங்கிக்கு மேலதிக கடன் அட்டைக்கான வசதியை இரத்துச் செய்யுமாறு பிரதான அட்டைதாரர் கோர முடியும்.
- பிரதான மற்றும் மேலதாக அட்டைதாரர்களுக்கிடையே எழும் ஏதேனும் முரண்பாடுகள், யூனியன் வங்கியுடன் பிரதான மற்றும் மேலதிக அட்டைதாரர்கள் கொண்டுள்ள பொறுப்புகள் மற்றும் கடப்பாடுகளை எவ்விதத்திலும் பாதிப்பதாக அமையக்கூடாது.
- மேலதிக அட்டைதாரரினால் பயன்படுத்தப்படும் சகல கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் ஏதேனும் கட்டணங்கள் போன்றன பிரதான அட்டைதாரரின் பொறுப்பாக கருதப்படுவதுடன், அவற்றை மீளச் செலுத்த வேண்டும்.
- மேலதிக அட்டைதாரரின் சட்டபூர்வமான இயலாமை அல்லது திறனற்ற தன்மை அல்லது மேலதிக அட்டைதாரரால் நியதி நிபந்தனைகள் மீறப்படுகின்றமை காரணமாக ஏற்படக்கூடிய இழப்புகள், சேதங்கள், பொறுப்புகள், செலவுகள் மற்றும் விரயங்கள் போன்றவற்றிலிருந்து வங்கியை பிரதான அட்டைதாரர் விடுவித்து பாதுகாக்க வேண்டும்.
- உடன்படிக்கையில் மீறல் ஏதும் ஏற்படாதிருக்கும் சந்தர்ப்பத்தில் மேலதிக அட்டை(களை) உரிய காலத்தில் வங்கி சுயமாக புதுப்பிக்கும்.
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





