உங்கள் கொடுக்கல் வாங்கல்களை 0% வட்டியில்லாத சம அளவுத் தொகையை மாதாந்தம் மீளச் செலுத்தும் வசதியை யூனியன் வங்கி கடன் அட்டை உங்களுக்கு வழங்குகிறது.
ஒரு தடவை கையாளல் கட்டணங்களுடன் 0% தவணைமுறை மீளச் செலுத்தும் திட்டம்
சம்பந்தப்பட்ட தொழிற்துறைகளில், ஏதேனும் ஊக்குவிப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவகையில் இந்தச் சலுகை பொருத்தமானதாக அமைந்திருக்கும்.
- ரூ. 50,000 க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு சகல வகையான கார்ட்களுக்கும் 12 மாதங்கள் வரை 0% தவணைமுறையில் மீளச் செலுத்தும் திட்டங்கள் கிடைக்கும்.
- பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர் கார்ட்களில், ரூ. 100,000 க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு 24 மாதங்கள் வரை 0% தவணைமுறையில் மீளச் செலுத்தும் திட்டங்கள் கிடைக்கும்.
ஒவ்வொரு மாத காலப்பகுதிக்கு பொருத்தமான ஒரு தடவை கையாளல் கட்டணம் வருமாறு.
| காலம் (மாதம்) | கட்டணம் (ரூ.) |
|---|---|
| 3 | – |
| 6 | 990.00 |
| 12 (ரூ. 100,000 இற்கு குறைந்த) | 1,900.00 |
| 12 (ரூ. 100,000 இற்கு உயர்ந்த) | 2,400.00 |
| 18 | 2,900.00 |
| 24 (ரூ. 250,000 இற்கு குறைந்த) | 3,900.00 |
| 24 (ரூ. 250,000 இற்கு உயர்ந்த) | 5,400.00 |
| 29 | 5,400.00 |
| 36 | 9,900.00 |
கையாளல் கட்டணங்களுடன் தவணைமுறை மீளச் செலுத்தும் திட்டம்
- ரூ. 20,000க்கு மேற்பட்ட எந்தவொரு கொள்வனவுக்கான தொகையையும் 0% தவணைமுறை மீளச் செலுத்தல் திட்டமாக பிரித்துக் கொள்ளவும்.
- சிறந்த நிதி முகாமைத்துவத்துக்காக 3, 6,12,18, 24 மற்றும் 36 மாதங்கள் வரை மீளச் செலுத்தும் வசதியை பெறுங்கள்.
- மாற்றிக் கொள்ள, உங்கள் கடன் அட்டை வகையை பொருத்து பின்வரும் தொகைகளுக்கு பரிமாற்றம் செய்யலாம்:
| கோல்ட் | பிளாட்டினம் | சிக்னேச்சர் | |
|---|---|---|---|
| மாற்றக்கூடிய ஆகக்குறைந்த தொகை | 20,000 | 20,000 | 20,000 |
| மாற்றக்கூடிய அதிகபட்ச தொகை | 250,000 | 500,000 | 750,000 |
- தகுதியானதாயின், உலகெங்கிலும் மேற்கொள்ளும் கொள்வனவுகளை 0% தவணை கொடுப்பனவாக மாற்றிக் கொள்ள முடியும்.
- மாற்றும்போது, பின்வரும் கட்டணங்கள் பொருந்தும். இக்கட்டணத்தையும் தவணைகளில் செலுத்த நீங்கள் தேர்வு செய்யலாம்.
| பதவிக்காலம் (மாதங்கள்) | மேலதிக கட்டணம் (பரிவர்த்தனை தொகையின் சதவீதம் %) | பதவிக்காலம் (மாதங்கள்) | மேலதிக கட்டணம் (பரிவர்த்தனை தொகையின் சதவீதம் %) |
|---|---|---|---|
| 3 | 5% | 18 | 20% |
| 6 | 8% | 24 | 26% |
| 12 | 14% | 36 | 38% |
- மேலதிக கட்டணம் / கையாளுகை கட்டணம் இல்லாத 0% திட்டங்களை வழங்கும் வணிக விபரங்களை வங்கி அவ்வப்போது அறிவிக்கும். இவற்றினை அறிய https://www.unionb.com/0-installment-plans/
- தவணை திட்டத்திற்கு மாற்ற, பரிவர்த்தனை செய்து 14 நாட்களுக்குள் எமது 24 மணிநேர அழைப்பு நிலையமான 0117 818181 உடன் தொடர்பு கொள்ளவும்.
நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
- கொடுக்கல் வாங்கல் இடம்பெற்று 3 மாத காலப்பகுதியினுள் மாத்திரம் குறித்த கொடுக்கல் வாங்கலை 0% வட்டியில்லாத தவணைமுறை மீளக் கொடுப்பனவு திட்டத்துக்கு மாற்றிக் கொள்ள முடியும்.
- கோரிக்கை கிடைக்கும் வரையில் மற்றும் வங்கியினால் கொடுக்கல் வாங்கல் மாற்றப்படும் வரை, குறித்த கொடுக்கல் வாங்கல் மீது ஏற்கனவே அறவிடப்பட்ட வட்டித் தொகை எதுவும் மீளப் பெறமாட்டாது.
- யூனியன் வங்கி கடன் அட்டை(கள்) ஊடாக வாடிக்கையாளர் முழுத் தொகையையும் செலுத்தும் போது மாத்திரம் 0%வட்டியில்லாத தவணைமுறை மீளச் செலுத்தலுக்கான தகைமையை பெற முடியும்.
- 0% வட்டியில்லாத தவணைமுறை மீளச் செலுத்தும் திட்டத்தை பணத்துக்கு மற்றும்/அல்லது விற்பனை நிலையங்களின் இதர ஏனைய ஊக்குவிப்புத் திட்டங்களுடன் அல்லது சலுகைகளுடன் பயன்படுத்த முடியாது.
- 0% வட்டியில்லாத தவணைமுறை மீளச் செலுத்தும் திட்டம் யூனியன் பாங்க் ஒஃவ் கொழும்பு பிஎல்சியினால் அதன் கடன் அட்டை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு சலுகையாகும். இதை மீளப் பெற அல்லது மாற்றங்கள் செய்ய அல்லது விதிமுறைகள், நியதிகள் மற்றும் நிபந்தனைகளில் முழுமையாக அல்லது பகுதியளவு மாற்றங்களை எந்தவேளையிலும் முன்னறிவித்தல்கள் எதுவுமின்றி ஏற்படுத்த வங்கி முழு அதிகாரத்தையும் கொண்டுள்ளது.
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கொடுக்கல் வாங்கல்களை இணைத்து அல்லது ஏற்கனவே காணப்படும் நிலுவைத் தொகைகள் இந்த தவணை முறை மீளச் செலுத்தக்கூடிய வசதிக்கு உள்வாங்கப்படமாட்டாது.
- விற்பனையாளரினால் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம் தொடர்பில் யூனியன் பாங்க் ஒஃவ் கொழும்பு பிஎல்சி எவ்விதமான பொறுப்பையும் ஏற்காது.
- அட்டை உரிமையாளரின் கடன் அட்டை கணக்கில் காணப்படும் கணக்கு மீதியின் பிரகாரம் 0% வட்டியில்லாத தவணைமுறை மீளச் செலுத்தும் வசதி வழங்கப்படும்.
- ஒவ்வொரு தவணைப் பெறுமதியும் கடன்அட்டை உரிமையாளரின் கணக்கிலிருந்து மாதாந்த அடிப்படையில் அறவிடப்படும், எனவே ஒவ்வொரு தவணைக்கட்டணமும் கடன் அட்டை கணக்கில் பற்று வைக்கப்படும் கொடுக்கல் வாங்கலை போன்று அமைந்திருக்கும் என்பதுடன், அதை அட்டை உரிமையாளர் செலுத்த வேண்டும்.
- மொத்த கொடுக்கல் வாங்கல் தொகை கடன் அட்டை கணக்கில் குறைக்கப்படும்/பற்று வைக்கப்பட்டு, மாதாந்த தவணைக்கட்டணங்கள் செலுத்தப்படும் போது அந்தத் தொகை குறைக்கப்படும்.
- கடன் அட்டை அறிக்கையில் காண்பிக்கப்பட்டுள்ள முழு நிலுவைத்தொகையை செலுத்த வேண்டிய இறுதித்திகதிக்கு முன்னதாக செலுத்துவதன் மூலமாக தவணைக்கட்டணத்தின் (ங்களின்) மீது வட்டி அறவிடப்படுவதை தவிர்த்துக் கொள்ளலாம்.
- தமது கடன் அட்டை மீது வாடிக்கையாளர் மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகள், யூனியன் வங்கி கடன் அட்டைகள் கொடுப்பனவு ஒதுக்கீடு விதிமுறையின் பிரகாரம் மேற்கொள்ளப்படும் என்பதை அட்டை உரிமையாளர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
- மாதாந்த தவணைக்கட்டணத்தின் மீது ரிவோட்ஸ் புள்ளிகளை அட்டை உரிமையாளர் பெறமாட்டார்.
- வழங்கப்படும் ஊக்குவிப்புத்திட்டங்களின் பிரகாரம் இங்கே தரப்பட்டுள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகள் வேறுபடக்கூடும்.
- யூனியன் வங்கி கடன் அட்டையின் பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்ந்து அமுலில் இருக்கும்.
- இந்த நியதிகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பில் ஏதேனும் மறுப்பு எழுந்தால், யூனியன் பாங்க் ஒஃவ் கொழும்பு பிஎல்சியினால் மேற்கொள்ளப்படும் தீர்மானம் இறுதியானதாகும்.
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





