யூனியன் வங்கியின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு (CSR)
பொறுப்புணர்வுமிக்க கூட்டாண்மை பிரஜை என்ற ரீதியில், யூனியன் வங்கியானது, தமது செயற்பாடுகள், பொருளாதாரம், சுற்றுச்சூழல், பொதுநலன் மற்றும் சமூக அக்கறை போன்ற விடயங்கள் யூனியன் வங்கியின் எதிர்காலத்துடன் ஒருங்கிணைந்துள்ளது என்பதை வங்கியானது, அறிந்துள்ளது. இதன் காரணமாக , குறித்த விடயங்களை பாதுகாத்தல் மற்றும் குறித்த பொறுப்புணர்வினை நிறைவேற்றுதல் தொடர்பில் அக்கறையுடன் செயற்படுதல் வங்கியின் முக்கிய இலக்காக உள்ளதுடன், தனிநபர்கள் மற்றும் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து யூனியன் வங்கி ஊழியர்களதும் கடப்பாடாக உள்ளது.
யூனியன் வங்கியின் கூட்டாண்மை சமூகப்பொறுப்புணர்வு கோட்பாடுகள்
யூனியன் வங்கியின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு இலக்குகள் சமூகத்தின் நலன்பேணல்களை உள்ளடக்கியுள்ளதுடன், சுற்றுச்சூழல் மீது தாக்கத்தினையும் செலுத்துகின்றது.
வங்கியின் முதன்மை இலக்காக சமுதாயத்தின் நலன்பேணல் விளங்கவுள்ளதுடன், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மீது கவனம் செலுத்தல் முக்கிய விடயங்களாக கருதப்படும்.
வங்கியின் சமூக பொறுப்புணர்வு முனைப்புகள், குறித்த இந்த பிரிவிற்கு பெறுமதியை அளிக்கும் அடிப்படையின் கீழ் முனைவாக்கப்படும்
சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார தாக்கங்களை குறைப்பதற்கு இயலுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் வகையில் வங்கியின் அனைத்து நடவடிக்கைகளும் அமையும்
யூனியன் வங்கியின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு இலக்குவைக்கப்பட்ட பரப்புகள்

சமூகம் – இளைஞர் மற்றும் சிறுவர்
இந்த பிரிவின் கீழ், சிறந்த சமூகக்கட்டமைப்பைக் கொண்ட உலகினை உருவாக்கும் நோக்குடனும், இலங்கையின் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு வலுவூட்டும் நோக்குடனும், எமது அர்ப்பணிப்புணர்வுடன் கூடிய அனுபவமிக்க பணியாளர்களின் உதவியுடன், யூனியன் வங்கியானது பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் முனைப்புகளை முன்னெடுக்கும்.
இலக்கு வைக்கப்படும் பரப்புகள் :
கல்வி
ஆரோக்கியம்
திறன் மேம்படுத்தல்
தொழின்வாழ்க்கை வழிகாட்டல்
இதற்கு மேலதிகமாக, நிதிச்சேவைகள் வழங்குனர் என்ற ரீதியில், நாடளாவிய ரீதியில் பன்முக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஒரு ஸ்தாபனம் என்ற வகையில், வங்கியானது, பின்வரும் விடயங்கள் குறித்தும் தமது ஆதரவினை அளிக்கும்;
சமூக சீர்கேடுகள்
இயற்கை பேரழிவுகள் மற்றும்
ஏனைய அவசரகால நிலமைகள்
செயற்திட்டம்

Union Bank உடன் மீண்டும் பாடசாலைக்கு

மத்துகம பறைகம வித்தியாலய சிறுவர்களுக்கு யூனியன் வங்கி உதவி
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





