0117 818181

யூனியன் வங்கியின் முகவர் வங்கிச் சேவை என்பது, நாடு முழுவதையும் சேர்ந்த பரந்தளவு அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களை கொண்டு தெரிவு செய்யப்பட்ட வங்கிச் சேவைகளை வழங்குகின்றமையால் எளிமையானது, சௌகரியமானது மற்றும் நெகிழ்ச்சியானது. இந்தச் சேவை இலவசமாக வழங்கப்படுவதுடன், முற்பதிவு செய்து கொள்ள வேண்டியதில்லை. பாதுகாப்பானது என்பதுடன், உங்கள் இருப்பிடத்துக்கு அருகாமையில் அமைந்திருக்கின்றமையால், வங்கிக் கொடுக்கல் வாங்கல்களை உடனுக்குடன் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

யூனியன் வங்கியினால் நியமிக்கப்பட்டுள்ள பின்வரும் முகவர்களினூடாக, வாடிக்கையாளர்களுக்கு கிளை வலையமைப்பினூடாக கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுக்க முடியும்.

  அங்கீகாரம் பெற்ற முகவர் விற்பனையாளர்  
மொபிடெல் பிரைவட் லிமிடெட் மொபிடெல் கிளைகள் பட்டியலுக்கான இணைப்பு
SLT கிளைகள் பட்டியலுக்கான இணைப்பு
கார்கில்ஸ் சிலோன் பிஎல்சி கார்கில்ஸ் ஃபுட்சிட்டி விற்பனை நிலையங்கள் ( கிரெடிட் கார்ட் கொடுப்பனவுகள் மட்டுமே) பட்டியலுக்கான இணைப்பு
  மேலும் முகவர்கள் விரைவில் உள்ளடக்கப்படுவார்கள்    

முகவர்களால் வழங்கப்படும் சேவைகள்

  • எந்தவொரு யூனியன் வங்கி சேமிப்புக் கணக்குக்கும் பண வைப்புகளை மேற்கொள்ளல் (நாளொன்றுக்கு ரூ. 50,000 வரை)
  • யூனியன் வங்கி கடன் அட்டை கொடுப்பனவுகளை மேற்கொள்ளல் (நாளொன்றுக்கு ரூ. 100,000 வரை)
  • யூனியன் வங்கி கடன் மீளச் செலுத்தல்களை மேற்கொள்ளல் (நாளொன்றுக்கு ரூ. 100,000 வரை)

இந்த சேவையை நீங்கள் ஏன் பயன்படுத்த வேண்டும்

  • இந்தச் சேவையை பயன்படுத்த முற்பதிவு தேவையில்லை என்பதுடன், முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது
  • சௌகரியமானது, பாதுகாப்பானது மற்றும் வசிப்பிடத்துக்கு அருகாமையில் காணப்படுகின்றது
  • நீடித்த வங்கி நேர அணுகல் வசதியை வழங்குகின்றது

பண வைப்பொன்றை எவ்வாறு மேற்கொள்வது

  • அருகிலுள்ள யூனியன் வங்கி அங்கீகாரம் பெற்ற விற்பனையாளரை நாடவும்.
  • யூனியன் வங்கியில் வைப்புச் செய்ய வேண்டும் என்பதை அறிவித்து, பின்வரும் படிமுறைகளை பின்பற்றவும்:

படி 1: முகவருக்கு பின்வரும் தகவல்களை வழங்கவும்: சேமிப்புக் கணக்கு இலக்கம், வைப்புத் தொகை, வைப்பாளரின் தொடர்பு இலக்கம், NIC

படி 2: முகவருக்கு பணத்தை கையளிக்கவும் (காசோலைகளை அல்ல)

படி 3: SMS உறுதிப்படுத்தல் கிடைக்கும் வரை காத்திருக்கவும்

கடன் அட்டை கொடுப்பனவு அல்லது கடன் மீளச் செலுத்தலை எவ்வாறு மேற்கொள்வது

படி1: யூனியன் வங்கி கடன் அட்டை கொடுப்பனவுகளுக்கு, கடன் அட்டை மீளச் செலுத்தல் கணக்கு இலக்கத்தை வழங்கவும் (கடன் அட்டை இலக்கத்தை வழங்க வேண்டாம்)

கடன் மீளச் செலுத்துகைகளுக்கு, கடன் மீளச் செலுத்தும் சேமிப்புக் கணக்கு இலக்கம், தொகை, தொடர்பு இலக்கம் (வைப்பாளரின் தொடர்பு இலக்கம்) மற்றும் NIC ஆகியவற்றை வழங்கவும்.

படி2: பணத்தை ஒப்படைக்கவும்

படி3: தெரிவு செய்யப்பட்ட முகவர், யூனியன் வங்கியுடன் தொடர்பை ஏற்படுத்தி கொடுக்கல் வாங்கலை முன்னெடுப்பதுடன், யூனியன் வங்கி தகவல்களை உறுதி செய்து, உடனடியாக கொடுக்கல் வாங்கலை பூர்த்தி செய்து அதனை உறுதிப்படுத்தும் வகையில் வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் இலக்கத்துக்கு வைப்புச் செய்த தொகையை உறுதி செய்து SMS ஒன்றை அனுப்பும்.

கொடுக்கல் வாங்கல் பூர்த்தியானதும் அதனை உறுதி செய்யும் SMS அல்லது பற்றுச்சீட்டை வாடிக்கையாளருக்கு முகவர் வழங்குவார்.

முகவர்களால் பின்வரும் சேவைகள் வழங்கப்படமாட்டாது

  • வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல்
  • வங்கி அட்டைகள் மற்றும் காசோலகைள் வழங்கல்;
  • கடன்கள் மற்றும்/அல்லது நிதி கொடுக்கல் வாங்கல்களை கையாளல்
  • காசோலைகளை பணமாக மாற்றிக் கொள்ளல்
  • வெளிநாட்டு நாணயத்தில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வது

மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள அழையுங்கள் 011 5800800

தொடர்புகளுக்கு

    எங்களுடன் தொடர்புகொள்ள

    0117 818181

    மின்னஞ்சல்

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC