யூனியன் வங்கி மீதி மாற்றல் திட்டத்துடன் நிதிசார் சுதந்திரத்தை அனுபவியுங்கள். ஏனைய வங்கிகளில் நீங்கள் நிலுவையில் கொண்டிருக்கும் கடன் அட்டை மீதிகளை யூனியன் வங்கி கடன் அட்டைக்கு கவர்ச்சிகரமான சலுகைகளுடன் மாற்றி பெருமளவு சேமிப்பை அனுபவியுங்கள்.
யூனியன் வங்கி கடன் அட்டை மீதி மாற்றல் திட்டம்
- 36 மாதங்கள் வரை 0% வட்டி
- நிலையான கையாளல் கட்டணத்துடன் 3, 6, 12, 24 மற்றும் 36 மாதங்கள் வரை நெகிழ்ச்சியான மீளச் செலுத்தும் திட்டங்கள்
உதாரணம்: 100,000/- மீதியை மாற்றும் போது
| காலம் | ஏனைய வங்கி கடன் அட்டை வட்டி வீதம் வருடாந்தம் 36% தெரிவு செய்யப்பட்ட காலத்துக்கு | யூனியன் வங்கியின் கையாளல் கட்டணம் | யூனியன் வங்கியால் அறவிடப்படும் நிலையான கையாளல் கட்டணம் | யூனியன் வங்கி மீதி மாற்றல் திட்டத்தினூடான சேமிப்பு |
| 3 மாதங்கள் | Rs. 9,000/- | 6% | Rs. 6,000/- | Rs. 3,000/- |
| 6 மாதங்கள் | Rs.18,000/- | 8.5% | Rs. 8,500/- | Rs. 9,500/- |
| 12 மாதங்கள் | Rs.36,000/- | 14.5% | Rs. 14,500/- | Rs. 21,500/- |
| 24 மாதங்கள் | Rs.72,000/- | 27% | Rs. 27,000/- | Rs. 45,000/- |
| 36 மாதங்கள் | Rs.108,000/- | 39% | Rs. 39,000/- | Rs. 69,000/- |
தேவையானவை
- யூனியன் வங்கியின் கடன் அட்டை வாடிக்கையாளராக இருத்தல்.
- மீதி மாற்றல் திட்டத்துக்கு தகைமையுடைய ஆகக்குறைந்த தொகை ரூ. 10,000/-.
- ஆகக்கூடிய தகைமை பெறுமதி என்பது அட்டை உரிமையாளர் கொண்டுள்ள கடன் எல்லையை பொறுத்ததாக அமைந்திருப்பதுடன், வங்கியினால் அது தீர்மானிக்கப்படும்.
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட மீதி மாற்ற விண்ணப்பப் படிவம்.
- நிலுவைத் தொகையை செலுத்தி முடிக்குமாறு மற்றைய வங்கிக்கு முகவரியிடப்பட்ட கடிதம்.
- மற்றைய வங்கி கடன் அட்டையின் இறுதி மாதாந்த அறிக்கை.
- யூனியன் வங்கி கடன் அட்டை மீதி மாற்றல் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய
- யூனியன் வங்கி கடன் அட்டை மீதி மாற்றல் வேண்டுகோள் படிவத்தை பதிவிறக்கம் செய்ய
நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
- எந்தவொரு மீதி மாற்றல் விண்ணப்பப் படிவத்தையும் எவ்வேளையிலும் ஏற்றுக் கொள்வதற்கு அல்லது நிராகரிப்பதற்கான முழு தீர்மானத்தை மேற்கொள்ளும் ஏக உரிமையை யூனியன் பாங்க் ஒஃவ் கொழும்பு பிஎல்சி தன்வசம் கொண்டுள்ளது.
- மீதி மாற்றல் திட்டம் என்பது யூனியன் பாங்க் ஒஃவ் கொழும்பு பிஎல்சியினால் அதன் கடன் அட்டை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு சேவை என்பதுடன், வங்கியின் விருப்பத்துக்கமைய இதை மீளப் பெற அல்லது மாற்றத்தை ஏற்படுத்த அதிகாரம் உள்ளது.
- தமது நிலுவையிலுள்ள மீதித் தொகையை செலுத்துமாறு அறுவுறுத்தி மற்றைய வங்கிக்கு அனுப்புவதற்காக யூனியன் வங்கிக்கு கோரிக்கை கடிதமொன்றை வழங்க அட்டை உரிமையாளர் உடன்படுகிறார்.
- அட்டை உரிமையாளரின் மீதி மாற்ற விண்ணப்பப் படிவம் அங்கிகரிக்கப்பட்டால், குறித்த மீதி மாற்றல் கொடுக்கல் வாங்கலை வங்கி மேற்கொள்வதற்கு விண்ணப்பதாரியின் கையொப்பமிடப்பட்ட விண்ணப்பப் படிவம் வங்கிக்கு வழங்கப்படும் அங்கிகாரமாக அமைவதுடன், வாடிக்கையாளரின் எழுத்து மூல விசேட அறிவித்தல்கள் எதுவும் காணப்படாவிடின் குறித்த கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்படும்.
- விண்ணப்பிக்கப்பட்ட மீதி மாற்றல் தொகையை ஈடு செய்ய அட்டை உரிமையாளரின் கடன் எல்லை பெறுமதி போதுமானதாக காணப்படாவிடின், கோரப்பட்ட மீதி மாற்றல் தொகையின் ஒரு பகுதியை மாத்திரம் அனுமதித்து செலுத்துவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரத்தை வங்கி தன்வசம் கொண்டுள்ளது.
- விண்ணப்பப் படிவம் அங்கிகரிக்கப்பட்டதும், அட்டை உரிமையாளரின் யூனியன் வங்கி கடன் அட்டையிலிருந்து மாதாந்த தவணை அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்ட தொகை அறவிடப்படும். அங்கிகரிக்கப்பட்ட மீதி மாற்றத் தொகைக்கான கொடுப்பனவு ஆணை வழங்கப்படும் என்பதுடன், வாடிக்கையாளரின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
- மற்றைய வங்கிக்கு கொடுப்பனவை செலுத்துவதற்கு உடன்படுவதுடன், அதற்கான பொறுப்பையும் அட்டை உரிமையாளர் ஏற்கிறார்.
- யூனியன் வங்கி கடன் அட்டை மீதி மாற்றல் தொகைக்கு அறவிடப்படும் வட்டி வீதம், ஏனைய நிலுவை மீதிகள் / கொடுக்கல் வாங்கல்களுக்கு பொருந்தாது.
- கடன் அட்டை கணக்கில் காணப்படும் கடன் எல்லைப் பெறுமதியில் மீதி மாற்றல் தொகை மற்றும் வட்டி தொகையுடன் குறைக்கப்படும் என்பதுடன், மாதாந்த தவணைக்கட்டணங்கள் அறவிடப்பட்டு அவற்றுக்கான கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும் போது அவை விடுவிக்கப்படும்.
- மீதி மாற்றல் கொடுக்கல் வாங்கலை முன்கூட்டியே முடிவுறுத்தலின் போது அட்டை உரிமையாளருக்கு வங்கி கட்டணங்கள் மீள வழங்கலுக்கான தகைமையை பெறாது.
- மீதி மாற்றல் தவணைக் கட்டணத்துடனான மொத்த நிலுவைத் தொகை குறிப்பிட்ட மாதத்தில் செலுத்த வேண்டிய இறுதித் திகதிக்கு முன்னதாக செலுத்தப்படாதபட்சத்தில், செலுத்தப்படாத தவணைக்கட்டணம் அமுலிலுள்ள வட்டி வீதத்துடன் யூனியன் வங்கி கடன் அட்டை மீது அறவிடப்படும்.
- தமது கடன் அட்டை மீது தாம் மேற்கொண்ட கொடுப்பனவுகள் யூனியன் வங்கி கடன் அட்டைகள் மீதான வங்கியின் உயர்மட்ட கொடுப்பனவு ஒதுக்கீட்டு திட்டத்தின் பிரகாரம் அமைந்திருக்கும் என்பதற்கு அட்டை உரிமையாளர் உடன்படுகிறார்.
- யூனியன் வங்கி கடன் அட்டை நிலுவைத் தொகைக்கு அதிகமாக செலுத்தப்படும் தொகைகள் கட்டணப்பட்டியலில் உள்ளடக்கப்படாத கட்டணங்களிலிருந்து கழிப்படமாட்டாது என்பதால் மீதி மாற்றத் தொகை மீது முன்கூட்டிய கொடுப்பனவாக கருதப்படமாட்டாது.
- எந்தவொரு தவணைக்கட்டணத்தையும் அட்டை உரிமையாளர் செலுத்தத் தவறும்பட்சத்தில், நிலுவையிலுள்ள மாற்றப்பட்ட மீதித் தொகையை திரட்டி மொத்தமாக அறவிடக்கூடிய அதிகாரத்தை யூனியன் பாங்க் ஒஃவ் கொழும்பு பிஎல்சி தன்வசம் கொண்டுள்ளது.
- மீதி மாற்ற கொடுக்கல் வாங்கல் தொகை அல்லது அதன் மாதாந்த தவணைக்கட்டணங்கள் மீது வெகுமதி புள்ளிகளை அட்டை உரிமையாளர் பெறமாட்டார்.
- முழுத்தவணைக்கட்டணங்களும் செலுத்தி முடிக்கும் முன்னதாக அட்டை உரிமையாளர் கடன் அட்டை ரத்துச் செய்தால் அல்லது மீதி மாற்றல் திட்டத்தை ரத்துச் செய்தால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிலுவையிலுள்ள மீதி மாற்றத் தொகை மற்றும் வட்டி/கட்டணங்கள் போன்றன அட்டையிலிருந்து அறவிடப்படும்.
- வட்டி அல்லது ஏனைய வங்கி கடன் அட்டை நிலுவைத்தொகைக்கு அதிகமான தொகை, மேலதிக நிலுவைக்கான கட்டணங்கள், காலம் தாழ்த்திய கொடுப்பனவு கட்டணம், நிதிசார் கட்டணங்கள் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய வங்கி கடன் அட்டையின் ஏனைய எந்தவொரு கட்டணங்கள்/பொறுப்புகள் அல்லது எந்தவொரு காரணத்தினாலும் ஏனைய வங்கியின் கடன் அட்டை நிலுவைத்திகதிக்கு முன்னதாக கொடுப்பனவை மேற்கொள்ள யூனியன் வங்கி தவறுகின்மையால் ஏழும் கட்டணம் போன்ற அனைத்திலிருந்தும் யூனியன் பாங்க் ஒஃவ் கொழும்பு பிஎல்சி விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு வங்கி எவ்விதத்திலும் பொறுப்பாகாது.
- மீதி மாற்ற கோரிக்கை வங்கியினால் அங்கிகரிக்கப்படும் பட்சத்தில், அட்டை உரிமையாளருக்கு அதற்கான கையாளல் கட்டணத்தை யூனியன் வங்கிக்கு செலுத்த நேரிடும்.
- யூனியன் வங்கி கடன் அட்டைகளுக்கான பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகளை மீறாத வகையிலும், அவற்றுக்கு மேலானதாகவும் இந்த நியதிகள் அமைந்திருக்கும். தெரிவு செய்யப்பட்ட அட்டை உரிமையாளர்களுக்கு விசேடமான சலுகையாக இது வழங்கப்படுவதுடன், இதில் அடங்கியுள்ள எந்த விடயமும் யூனியன் வங்கி கடன் அட்டை பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகளை மீறுவதாக அமைந்திருக்காது.
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





