உங்கள் யூனியன் வங்கி கடன் அட்டையை பயன்படுத்தி எவ்வித மேலதிக கட்டணங்களுமின்றி ரிவோட் புள்ளிகளை சேகரியுங்கள்.
ரிவோட்களை சேகரிப்பது எவ்வாறு
| கோல்ட் | பிளாட்டினம் | சிக்னேச்சர் |
| பொருந்தாது | செலவிடும் ஒவ்வொரு 300 ரூபாய்க்கும் 1 புள்ளி | செலவிடும் ஒவ்வொரு 200 ரூபாய்க்கும் 1 புள்ளிகள் |
*தேர்ந்தெடுக்கப்பட்ட வணிக நிலையங்களில்
விற்பனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் e-வணிக கொடுக்கல் வாங்கல்கள் போன்றவற்றுக்கு ரிவோட் புள்ளிகள் வழங்கப்படும்.
யூனியன் வங்கி கடன் அட்டை வெகுமதி திட்டம்
உங்கள் கடன் அட்டையை பயன்படுத்தும் ஒவ்வொரு தடவையும், மேலதிக கட்டணங்கள் எதுவுமின்றி யூனியன் வங்கி வெகுமதி புள்ளிகளை சேகரிக்கவும்.

Voucher worth Rs. 1,000
Points Required : 5,000

Voucher worth Rs. 1,000
Points Required : 5,000

Voucher worth Rs. 1,000
Points Required : 5,000

Voucher worth Rs. 1,000
Points Required : 5,000

Voucher worth Rs. 1,000
Points Required : 5,000
ரிவோட்களுக்கான நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
- கட்டணங்கள் மற்றும் குறித்த வகையான சில கொடுக்கல் வாங்கல்களுக்கான கொடுப்பனவுகளுக்கு புள்ளிகள் வழங்கப்படாது, இதில் பண கொடுக்கல் வாங்கல்கள், மீதி மாற்றல் கொடுக்கல் வாங்கல்கள், தவணைக்கட்டண கொடுக்கல் வாங்கல்கள், கட்டணங்கள் மற்றும் வட்டி போன்றன அடங்கியுள்ளன.
- வங்கியினால் தீர்மானிக்கப்படும் கணிப்பீட்டு முறைக்கமைய புள்ளிகள் வழங்கப்படும்.
- கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகள் கட்டணப்பட்டியல் உடன்பாடற்ற நிலைகள் காரணமாக மீளளிப்புகள் இடம்பெறின் புள்ளிகளில் சீராக்கங்கள் மேற்கொள்ளப்படும்.
- ஏதேனும் ஒரு கொடுக்கல் வாங்கல் எந்தவொரு காரணத்தினாலும் மறுக்கப்பட்டால் அல்லது மீளளிக்கப்பட்டால் குறித்த கொடுக்கல் வாங்கல்களால் சேர்ந்த புள்ளிகள் வங்கியினால் திருப்பப்படும்.
- ரிவோட்ஸ் புள்ளிகள் திட்டத்தினால் சேகரிக்கப்பட்ட புள்ளிகள் அட்டை உரிமையாளரின் உரிமையாக அமைந்திருக்காது அத்துடன், வங்கியின் விசேட திட்டமொன்றினூடாக முன் அனுமதியின்றி எந்தநிலையிலும் பிரிதொருவருக்கு மாற்ற முடியாது.
- அட்டையின் மீது திரட்டப்பட்ட ரிவோட்ஸ் புள்ளிகளின் சாராம்சம் அடிக்கடி அறிக்கைகளினூடாக வழங்கப்படும். குறித்த அறிக்கையில் தொடர்பில் எழும் எந்தவொரு மறுப்புகளும் வங்கிக்கு அறிக்கை கிடைத்து 20 தினங்களுக்குள் அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்கப்படாவிடின், அனைத்தும் சரியானதாக கருதப்படும்.
- திட்டத்தினூடாக சேகரிக்கப்பட்ட புள்ளிகளுக்கு எவ்விதமான பணப் பெறுமதியும் காணப்படாது.
- இயங்கு நிலையிலுள்ள (கட்டணம் செலுத்தப்படாமல் நிலுவையிலற்ற) அட்டைகள் மற்றும் இந்த வெகுமதியை பயன்படுத்துவதற்கான தகைமையை பெறுவார்கள்.
- வங்கியினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் தொலைபேசி, இணைய வங்கியியல், மொபைல் வங்கியியல் அல்லது ஏனைய முறைகளில் புள்ளிகள் வெகுமதியை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படும், அவ்வாறான பயன்படுத்தல்களுக்கான பொறுப்பை அட்டை உரிமையாளர் ஏற்க வேண்டும்.
- புள்ளிகளை பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகளாக பட்டியல்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் / சேவைகள் போன்றன அவற்றின் கிடைப்பனவை பொறுத்து அமைந்திருக்கும். குறித்த பொருட்கள் / சேவைகள் கிடைக்காமைக்கு வங்கி பொறுப்பாகாது. குறித்த பொருட்கள்/சேவைகள் பயன்படுத்துவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட காலப்பகுதியை கொண்டிருக்கும்.
- திட்டத்தினூடாக வழங்கப்பட்ட வெகுமதியினைக் கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளுடன் தொடர்புடைய மறுப்புகள் வாடிக்கையாளர் மற்றும் சேவை வழங்குநரால் தீர்க்கப்பட வேண்டும். அவ்வாறான பிணக்குகளை தீர்ப்பதில் வங்கி எவ்விதத்திலும் பொறுப்பாளியாகாது.
- பிரதான அட்டைதாரருக்கு மாத்திரம் புள்ளிகளை பயன்படுத்துவதற்கான அதிகாரம் காணப்படும்.
- வாடிக்கையாளர் தமது அன்பளிப்பு வவுச்சரை தாம் விரும்பிய நபருக்கு வழங்கலாம். அன்பளிப்பு வவுச்சர் வங்கியின் காசாளரால் வாடிக்கையாளருக்கு அல்லது அவரால் பிரேரிக்கப்பட்டவருக்கு வழங்கப்பட்ட பின்னர் அல்லது தபாலில் அனுப்பப்பட்ட பின்னர் அல்லது கூரியரால் ஒப்படைக்கப்பட்ட பின்னர் வங்கியால் எவ்வித பொறுப்புகளும் ஏற்கமாட்டாது. தொலைந்த அல்லது களவாடப்பட்ட வவுச்சர்களுக்கு வங்கி பொறுப்பாளியாகாது.
- கூரியர் சேவை ஊடாக அன்பளிப்பு வவுச்சர்கள் விநியோகிப்பதற்கான பொறுப்பை வங்கி ஏற்காது.
- மட்டுப்படுத்தப்பட்ட செல்லுபடியாகும் காலத்தைக் கொண்ட புள்ளிகளுக்காக அன்பளிப்பு வவுச்சர்களை விநியோகிக்க வங்கி அதிகாரத்தை கொண்டுள்ளது. குறிக்கப்பட்ட காலப்பகுதியினுள் பங்காளர் நிறுவனத்துக்கு வவுச்சர் வழங்கப்படாத நிலையில், வங்கியினால் மாற்று வவுச்சர்கள் எதுவும் வழங்கப்படாது என்பதுடன், கால நீடிப்புகளும் வழங்கப்படமாட்டாது.
- எந்தவொரு வெகுமதித் திட்டங்களுடன் தொடர்புடைய மேலதிக உணவுகள், போக்குவரத்து அல்லது தங்கியிருத்தல் ஏற்பாடுகள் போன்றன வாடிக்கையாளரின் சுய பொறுப்பாக அமைந்திருக்கும்.
- பயன்படுத்தல் தெரிவுக்காக வழங்கப்படும் பொருட்கள் / சேவைகள் போன்றவற்றில் முன்னறிவித்தலின்றி மாற்றம் செய்ய அல்லது அகற்ற வங்கி அதிகாரம் கொண்டுள்ளது.
- திரட்டப்படும் புள்ளிகள் 24 மாதங்களுக்கு மட்டும் செல்லுபடியாகும்.
- விற்பனை நிலையங்களில் பயன்படுத்தப்படும் புள்ளிகளை கொண்டு கொள்வனவு செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வங்கி எவ்விதத்திலும் பொறுப்பாளியாகாது. எனவே, அவ்வாறான பொருட்கள் மற்றும் சேவைகள் தரம் மீது எவ்விதமான பொறுப்பையும் வங்கி ஏற்காது.
- பயன்படுத்தலுக்கு திரட்டப்பட வேண்டிய புள்ளிகளின் எண்ணிக்கை முன்னறிவித்தலின்றி மாறுபடக்கூடும்.
- புள்ளிகள் கோரிக்கைகளில் ஏற்படுத்தும் மாற்றம் மற்றும் கையாளல் போன்றன ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
- புள்ளிகள் பயன்படுத்தும் போது ஏற்படக்கூடிய எந்தவிதமான இழப்புகளுக்கும் வங்கி எந்தவிதத்திலும் பொறுப்பாகாது.
- ஏனைய எந்தவொரு லோயல்டி / ரிவோர்ட் / மைலேஜ் திட்டத்துடன் கைகோர்ப்பதற்கான அதிகாரத்தை வங்கி கொண்டுள்ளது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் மாற்றல் வீதம் வங்கியினால் தீர்மானிக்கப்படும்.
- புள்ளிகள் பயன்படுத்தல் அல்லது சேகரித்தல் தொடர்பான மோசடி அல்லது அவ்வாறான ஏதேனும் செயற்பாடுகள் அனைத்து புள்ளிகளும் இரத்தாவதற்கு ஏதுவாக அமையும் என்பதுடன், அட்டையும் இரத்து/தக்க வைக்கப்படும்.
- தேவையெனில் எந்தவொரு நேரத்திலும் ரிவோட்ஸ் திட்டத்தை வங்கி இடைநிறுத்தும். அவ்வாறான தீர்மானத்தை மேற்கொண்டால், அது தொடர்பில் அட்டை உரிமையாளர்களுக்கு முன்கூட்டிய அறிவிக்கும்.
- எந்தவொரு நேரத்திலும் திட்டத்தின் நியதிகள் மற்றும் நிபந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அதிகாரத்தை வங்கி கொண்டுள்ளது.
- வாடிக்கையாளர் தமது கடன் அட்டையை இரத்துச் செய்ய தீர்மானித்தால், அவர் திரட்டிய அனைத்து புள்ளிகளும் இரத்தாகும். இவ்வாறு இரத்தான அல்லது காலாவதியான புள்ளிகளை மீளமைக்க முடியாது.
- இந்த திட்டத்தினூடாக எழும் ஏதேனும் முறைப்பாடுகள் தொடர்பில் வங்கியினால் மேற்கொள்ளப்படும் தீர்மானம் இறுதியானதாகும்.
- வங்கியினால் குறித்த நியதி அல்லது நிபந்தனை விதிப்பதற்கு தவறியிருந்தால், அந்த நியதி மற்றும் நிபந்தனையை விலக்கழிப்பதற்கு வங்கி பொறுப்பேற்காது.
- இந்த நியதிகள் மற்றும் நிபந்தனைகள் இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்டவிதிமுறைகளுக்கமைய அமுலில் இருக்கும்.
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





