0117 818181

பாதுகாப்பு விழிப்புணர்வு

ஒன்லைன் மோசடி என்றால் என்ன?

பிரத்தியேக தரவுகளை பெற்றுக்கொள்ள எவரேனும் நிறுவனமொன்றை பயன்படுத்துவது மற்றும் உங்கள் கணக்குகளில் போலியான முறையில் கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுப்பது ஒன்லைன் மோசடி எனப்படும். இது பொதுவாக phishing அல்லது pharming என அழைக்கப்படும். பொதுவாக ஒன்லைனில் மோசடிகள் நடைபெறுவதில் போலியான மின்னஞ்சல்கள், இணையத்தளங்கள் மற்றும் pop-up windows அல்லது இவை இணைந்து பங்களிப்பு வழங்குகின்றன.

ஏற்றுக்கொள்ளப்பட்ட எந்தவொரு வியாபாரமும் உங்கள் பிரத்தியேக விவரங்கள், கணக்கு அல்லது கடன் அட்டை இலக்கங்கள், கடவுச்சொற்கள் அல்லது வாடிக்கையாளர் இனங்காணல் இலக்கங்கள் ஆகியவற்றை link ஒன்றினூடாக மெருகேற்றம் செய்யுமாறு கோரி மின்னஞ்சல்களை அனுப்புவதில்லை.

Phishing என்றால் என்ன?

ஒன்லைனில் பாவனையாளர்களிடமிருந்து பிரத்தியேக விவரங்களை இணைய மோசடியிலீடுபவோர் கோரும் மோசடியாக Phishing அமைந்துள்ளது. நீங்கள் வியாபாரம் மேற்கொள்ளும் அல்லது மேற்கொள்ளாத ஒரு நிறுவனத்தின் பெயரில் மின்னஞ்சல் ஒன்றினூடாக இந்த கோரிக்கைகள் உங்களுக்கு அனுப்பப்படும். பல சந்தர்ப்பங்களில், ஏற்றுக்கொள்ளப்பட்ட வியாபார நிறுவனமொன்றினால் அனுப்பப்படும் மின்னஞ்சலை போன்றதாக நிறுவன இலச்சினைகள் மற்றும் இதர விவரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும். இந்த மின்னஞ்சல்களில் பெருமளவான சந்தர்ப்பங்களில் உங்கள் பிரத்தியேக விவரங்களை மெருகேற்றம் செய்யுமாறு அறிவிக்கப்படும் அல்லது உங்கள் கணக்கு செயலிழக்கும் நிலையை எய்தவுள்ளதாகவும் தெரிவித்து அவர்கள் வழங்கும் Linkஐ அழுத்தி அசல் போன்று காட்சியளிக்கும் இணையப்பக்கத்திற்கு அழைத்துச்செல்லும். இவ்வாறு குறித்த Linkஐ அழுத்தி அந்த இணையப்பக்கத்துக்கு சென்று உங்கள் தரவுகளை பதிவு செய்து தரவேற்றம் செய்தால், நீங்களும் phishing தாக்கத்துக்கு ஆளாவீர்கள். உங்கள் கணக்குகளை ஒன்லைனில் அணுகுவதற்கு அவசியமான சகல தரவுகளையும் மோசடியாளர்கள் பெற்றுள்ளனர்.

Pharming என்றால் என்ன?

ஏற்றுக்கொள்ளப்பட்ட இணையத்தளங்களிலிருந்து போலியான இணையத்தளங்களுக்கு பாவனையாளர்களை திசை திருப்ப மோசடியாளர்கள் பயன்படுத்தப்படும் முறையாக Pharming அமைந்துள்ளது. இதன் போது கணக்கு இலக்கங்கள் மற்றும் கடன் அட்டை இலக்கங்கள் போன்றன கோரப்படும்.

Pretexting என்றால் என்ன?

உங்கள் நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனத்திலிருந்து அழைப்பவரை போன்று உங்களுக்கு தொலைபேசி அழைப்பொன்று மேற்கொள்ளப்படும். அவர்கள் உங்கள் கணக்குகள் மற்றும் பிரத்தியேக விவரங்கள் பற்றி உரையாடுவதுடன், தம்மை உண்மையானவர்கள் போல சித்திரித்துக்கொள்வார்கள். ஆனாலும், இந்நபர் ஒரு திருடர் என்பதுடன், உங்களிடமிருந்து விவரங்களை பெற்றுள்ளதுடன், மேலும் விவரங்களை பெற எதிர்பார்ப்பார்.

Browser பாதுகாப்பு

Auto-Complete ஐ செயல் நிறுத்தம் செய்வது
உங்கள் browser ஐ கடவுச் சொற்களை நினைவில் வைத்திருக்காத வகையில் முறையாக செயற்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்யவும். அதை நீங்கள் settingsல் செயற்படுத்திக் கொள்ளலாம். வெவ்வேறு browser களுக்கு இந்த settings மாறுபடும்.

உங்கள் வங்கியின் இணையதள முகவரியை நேரடியாக டைப் செய்யவும்
Linkகளிலிருந்து உங்கள் வங்கியின் இணையத்தளத்துக்கு விஜயம் செய்ய வேண்டாம். browser ன் முகவரியில் இணைய தள முகவரியை எப்போதும் டைப் செய்யவும். இது phishing மோசடிகள் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்பதுடன், அசல் போன்று காட்சியளிக்கும் போலியான இணையத்தளங்களுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளலாம். உங்கள் வங்கியின் இணையதள முகவரியை Bookmark செய்து வைத்து, அதனை பயன்படுத்தவும்.

உங்கள் வங்கியியல் நிரலை முறையாக நிறைவு செய்வது
நீங்கள் இணைய வங்கிச் சேவையை பயன்படுத்திய பின்னர் எப்போதும் log off செய்யவும். அத்துடன், browser ஐ மூடவும் தவற வேண்டாம்.

பாதுகாப்பு அடையாளங்களை கவனிக்கவும்
இணையத்தளத்தில் பிரத்தியேக தகவல்களை பகிரும் போது, browser status bar ல் எப்போதும் பூட்டு அடையாளம் இருப்பதை கவனிக்கவும். இது காணப்படாவிடின், குறைந்தளவு பாதுகாப்பான இணைப்பில் தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது என பொருள்படும்.

இணையத்தள URL ஐ பரிசோதிக்கவும்
சாதாரணமாக ஒன்று “http” எனும் எழுத்துக்களுடன் ஆரம்பமாகும். ஆனாலும், பாதுகாப்பான இணைப்பில் இந்த முகவரி “https” எனும் எழுத்துக்களுடன் ஆரம்பிக்கும்.

மின்னஞ்சல் பாதுகாப்பு
அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் உங்கள் கணக்கு விவரங்களை கோரும் அல்லது மற்றும் கடவுச்சொல் அல்லது மின்னஞ்சல் முகவரியை கோரும் சந்தேகத்துக்கிடமான மின்னஞ்சல்களை திறப்பதை தவிர்த்துக்கொள்ளவும். தற்செயலாக நீங்கள் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல் ஒன்றை திறந்திருந்தால், எந்தவொரு இணைப்பையும் அல்லது அதிலுள்ள link ஐ திறக்க வேண்டாம் அழித்துவிடவும்.

பொது
ஒன்லைன் வங்கியியலில் வெற்றிகரமாக Log-on செய்த பின்னர், முன்னைய வெற்றிகரமான பிரவேசத்தை காண்பிக்கும் நேரம் மற்றும் திகதியை கட்டாயம் பரிசோதித்துக்கொள்ளவும். உங்கள் கணினியை Firewall கொண்டு பாதுகாத்துக்கொள்ளவும். ஊடுருவல்கள் ஏற்படுவதிலிருந்து உங்கள் கணினியை இது பாதுகாக்கும். அன்ரி வைரஸ் மற்றும் அட்வெயார்/ஸ்பைவெயார் மென்பொருட்களை பதிவு செய்து auto update அம்சத்தை செயற்படுத்திக்கொள்ளவும். அடிக்கடி உங்கள் கணக்குகளின் கொடுக்கல் வாங்கல்களை மீளப்பரிசோதித்துக்கொள்ளவும்.

பாதுகாப்பு குறிப்புகள்

உங்கள் கடன் /பற்று அட்டைகளை பாதுகாத்துக்கொள்வது

  • வேறெவருக்கும் உங்கள் கடன் அட்டை / பற்று அட்டைகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்.
  • புதிய அட்டை உங்களுக்கு கிடைத்தவுடன் அதன் பின்புறத்தில் உங்கள் கையொப்பத்தை பதியவும்.
  • உங்கள் பழைய, காலாவதியான அட்டைகளை வெட்டி அழித்துவிடவும்.
  • உங்கள் அட்டைகளை பாதுகாப்பான இடத்தில் வைப்பதுடன், பணத்தை போன்று பாதுகாப்பாக பயன்படுத்தவும்.
  • ATMகள் மற்றும் அட்டை கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய பற்றுச்சீட்டுக்களை உங்கள் கணக்கு அறிக்கையுடன் பரிசோதித்த பின்னர் பாதுகாப்பான முறையில் அழித்துவிடவும். உங்களிடமிருந்தும் உங்கள் அட்டைகள் பற்றிய விவரங்களை பெற்றுக்கொள்வதை இந்த நடவடிக்கை தவிர்க்கும்.
  • நீங்கள் பயன்படுத்திய பின்னர் உங்கள் அட்டை மீளப்பெறுவதை உறுதி செய்யவும்.
  • மின்னஞ்சல் ஊடாக உங்கள் கடன் அட்டை இலக்கத்தை ஒருபோதும் அனுப்ப வேண்டாம்.
  • தொலைபேசி இலக்கம் போன்ற உங்கள் பிரத்தியேக விவரங்களை மெருகேற்றம் செய்து வைத்திருக்கவும், இதன் மூலம் வழமைக்கு மாறான கொடுக்கல் வாங்கல்கள் இனங்காணப்பட்டால் எம்மால் உங்களை தொடர்பு கொள்ள முடியும்.
  • SMS அலேர்ட் வசதியை பெற்றுக்கொள்ளவும், இதனூடாக உங்கள் அட்டையின் சகல கொடுக்கல் வாங்கல்கள் பற்றி உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.
  • உங்கள் கணக்கு அறிக்கைகளை அடிக்கடி பரிசோதித்துக்கொள்ளவும், ஒன்லைன் சேவையில் இதனை இலகுவாக மேற்கொள்ளலாம்.
  • உங்கள் அட்டை காணாமல் போனால் அல்லது திருடப்பட்டுள்ளது என எண்ணினால் +94 11 5 800 800 ஊடாக எம்மை தொடர்பு கொண்டு அறிவிக்கவும். நாம் உடனடியாக உங்கள் அட்டையை இரத்துச் செய்து, மோசடியான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுவதை தவிர்ப்போம்.

உங்கள் அட்டை PIN / கடவுச்சொல்லை பாதுகாப்பது

  • உங்கள் PIN இலக்கத்தை பணப்பை டயரி அல்லது ஏனையவர்களுக்கு தெரியக்கூடிய வகையில் வைக்க வேண்டாம்.
  • ஏனைய எவருக்கும் உங்கள் PIN, கடவுச்சொல் அல்லது பாதுகாப்பு தகவல்களை தெரிவிக்க வேண்டாம்.
  • ATM ல் உங்கள் PIN ஐ பதியும் போது எப்போதும் கைகளால் மறைத்துக் கொள்ளவும், ஏனையவர்கள் உங்கள் PIN இலக்கத்தை அறிந்து கொள்வதை தவிருங்கள்.
  • உங்கள் பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம் அல்லது அட்டை இலக்கத்தின் ஒரு பகுதி போன்ற இலகுவாக அனுமானிக்கக்கூடிய PIN இலக்கத்தை தெரிவு செய்ய வேண்டாம்.
  • உங்கள் தொலைந்து, திருடப்பட்டு அல்லது ஏனையவர்கள் அறிந்துள்ளார்கள் என நீங்கள் சந்தேகித்தால் அது பற்றி உடனடியாக +94 11 5 800 800 ஊடாக எமக்கு அறியத்தர வேண்டும்.

கடவுச்சொல் பாதுகாப்பு தொடர்பான குறிப்புகள்

  • கடினமான கடவுச்சொல்லை உருவாக்கிக்கொள்ளவும்
  • டிக்சனரி ஒன்றில் காணப்படக்கூடிய சொற்களை பயன்படுத்த வேண்டாம்.
  • ஒவ்வொரு இணையத்தளத்துக்கும் ஒரே கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்டாம்.
  • பெரிய மற்றும் சிறிய எழுத்துக்கள், இலக்கங்கள் மற்றும் ஆகக்குறைந்தது ஒரு குறியீட்டை பயன்படுத்தவும்.
  • வெவ்வேறு கடவுச்சொற்களை பயன்படுத்தவும்
  • கடவுச்சொற்களை எழுதி வைக்க வேண்டாம்.
  • சேகரிப்பான்களில் கடவுச்சொற்களை பதிந்து வைக்க வேண்டாம்.
  • மின்னஞ்சல் ஊடாக கடவுச்சொற்களை அனுப்ப வேண்டாம்.

ஒன்லைனில் மதிநுட்பமாக சொப்பிங் செய்ய அறிவுரைகள்

எளிமையான விதிமுறையை பின்பற்றுவதனூடாக ஒன்லைனில் உங்கள் அட்டையை பயன்படுத்துவது பாதுகாப்பானது மற்றும் சௌகரியமானது. ஒன்லைனில் சொப்பிங் செய்யும் போது, எப்போதும் “secure” இணையப்பக்கங்களில் மாத்திரம் உங்கள் அட்டை விவரங்களை பதிவு செய்யவும். இணையப்பக்கமொன்றில் பூட்டு அடையாளம் தென்படுமாயின் அல்லது ‘https’ என இணையத்தள முகவரி ஆரம்பித்தால் அது பாதுகாப்பான இணையத்தளம் என பொருள்படும். அத்துடன், பாதுகாப்பான கணினியியலை பின்பற்றுவது உங்களின் பொறுப்பாகும். (உதாரணமாக – encryption, virus scanning software, firewall, anti-spyware software மற்றும் இதர பாதுகாப்பு முறைகள்)

  • ஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்ய முனையும் போது, புகழ்பெற்ற இணையப்பக்கங்களை நாடுங்கள்.
  • குறித்த விற்பனைத்தளம் மீளளிக்கும் அல்லது பணத்தை மீளச்செலுத்தும் கொள்கையை கொண்டுள்ளதா என்பதை கவனிக்கவும்.
  • சேவை ஒன்றை பெற கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்டுமாயின், அது இலகுவில் இனங்காணப்பட முடியாத வகையில் இருப்பதை உறுதி செய்வதுடன், எவருக்கும் தெரியப்படுத்த வேண்டாம்.
  • ஒன்லைன் கொள்வனவு ஒன்றை மேற்கொண்டால், கொடுக்கல் வாங்கல் தொடர்பான பற்றுச்சீட்டை பிரதியெடுத்து உங்கள் பதிவுகளுக்காக பேணவும். உங்கள் கடன் அட்டை அறிக்கைக்கெதிராக பரிசோதித்துக்கொள்ள உதவியாக அமைந்திருக்கும்.
  • உங்கள் அறிக்கையில் கண்டறிய முடியாத அல்லது உங்களால் இனங்காண முடியாத கட்டணங்கள் காணப்பட்டால் யூனியன் வங்கியின் அழைப்பு நிலையத்துடன் +94 11 5 800 800 உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

ஒன்லைன் வங்கியியலை பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்கள்

  • பிரத்தியேக விவரங்கள் அல்லது கடன் அட்டை கணக்கு விவரங்களை மின்னஞ்சல் / தொலைபேசி ஊடாக வழங்குமாறு யூனியன் வங்கி ஒருபோதும் கோராது.
  • பணம் வரும் அல்லது செல்லும் மூலத்தை நீங்கள் அறிந்திராவிடின் அதனை அனுமதிக்க வேண்டாம்
  • தம் சார்பில் பணத்தை பெற்று, வேறொரு தரப்புக்கு மாற்றம் செய்யும் நபர்கள்/நிறுவனங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படவும்.
  • உங்கள் கையடக்க தொலைபேசியிலிருந்து உங்கள் பிரத்தியேக விவரங்களை திருடக்கூடிய கையடக்க தொலைபேசி அப்ளிகேஷன்கள் தொடர்பில் அவதானமாக செயற்படவும்
  • அங்கீகரிக்கப்படாத இணையத்தளங்களிலிருந்து உங்கள் கையடக்க தொலைபேசிக்கு அப்ளிகேஷன்கள் தரவிறக்கம் செய்யப்படுவது அல்லது இன்ஸ்டோல் செய்யப்படுவதை அனுமதிக்க வேண்டாம் எப்போதும் குறித்த play store இலிருந்து தகவல்களை தரவிறக்கம் செய்யவும். வெளியிடுபவரின் பெயர் விவரங்களை அவதானிக்கவும்.
  • உங்கள் தொலைபேசி மற்றும் கணினியில் எப்போதும் antivirus ஐ பேணவும், அதனூடாக தகவல்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.

ATMகளை பயன்படுத்துவதற்கான அறிவுரை

  • ATM ஒன்றை பயன்படுத்தும் முன்னர் உங்கள் சுற்றுச்சூழலை கண்காணிக்கவும்.
  • நண்பர் ஒருவரை அழைத்துச் செல்லவும் – விசேடமாக இரவு வேளைகளில்t
  • ATM ஐ பயன்படுத்தும் போது அறிமுகமாகாத ஒருவரை உதவிக்கு நாட வேண்டாம்
  • உங்கள் அட்டையை வெளியில் எடுத்து பயன்படுத்த தயாராக இருக்கவும்e
  • தட்டச்சு மற்றும் திரை ஆகியவற்றை இயலுமானவரை மறைத்துக்கொள்ளவும், எனவே பின்னால் காத்திருக்கும் எவரும் உங்கள் PIN இலக்கத்தை அல்லது கொடுக்கல் வாங்கல் பெறுமதியை காண முடியாது.
  • உங்கள் பணம், அட்டை மற்றும் பற்றுச்சீட்டு ஆகியவற்றை உடனடியாக எடுக்கவும். பின்னர் பணத்தை எண்ணிக்கொள்ளவும், பற்றுச்சீட்டை கையில் வைத்திருக்கவும்
  • சந்தேகத்திற்கிடமான எதையும் நீங்கள் அவதானித்தால், உங்கள் மீளப்பெறலை இரத்துச் செய்து உடனடியாக வெளியேறவும்
  • பணம் மீளப்பெற்ற பின்னர் உங்களை எவரும் பின்தொடர்ந்தால், அதிகளவு சன நடமாட்டம் காணப்படும் வெளிச்சமான பகுதிக்கு சென்று காவல் துறையை அழைக்கவும்
  • drive-up ATM ஒன்றை பயன்படுத்தும் போது காரின் சகல கதவுகளும், ஜன்னல்களும் மூடப்பட்டுள்ளதை உறுதி செய்யவும்
  • ATM ஒன்றை பயன்படுத்த வாகனத்திலிருந்து வெளியேறும் போது வாகனத்தை நிறுத்தாமல் அல்லது மூடாமல் செல்ல வேண்டாம்.
  • 24 மணிநேரமும் ATM கள் சேவையிலிருந்தாலும், சில வியாபார நேரங்களில் மட்டுமே இயங்கும். அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ள மீளப்பெறுகைகளை முன்கூட்டியே திட்டமிடவும்.
  • பரீட்சியமற்ற வகையில் ATMகளில் ஏதேனும் காணப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கவும். இவை சாதாரண ATMகளில் ஒரு அங்கமாக அமைந்திருக்காததுடன், சில சமயங்களில் அட்டையை உட்செலுத்தும் பகுதியில் இணைக்கப்பட்டிருக்கலாம். சந்தேகத்துக்கிடமான ஏதேனும் ஒன்றை நீங்கள் அவதானித்தால், குறித்த இயந்திரத்தை பயன்படுத்த வேண்டாம், வங்கிக்கு உடனடியாக அறிவிக்கவும்.

வெளிநாடுகளில் அட்டைகளை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை

  • விடுமுறையை நீங்கள் திட்டமிடும் போது, உங்கள் பயண திட்டம் தொடர்பில் உங்கள் வங்கிக்கு நீங்கள் அறிவிக்க வேண்டும், தொடர்பு கொள்ளக்கூடிய விவரங்களையும் வழங்கவும்.
  • உங்கள் அட்டையில் மேற்கொள்ளப்படும் சகல கொடுக்கல் வாங்கல்கள் பற்றி அறிந்து கொள்ள SMS அலேர்ட் வசதியை பெற்றுக்கொள்ளவும்.
  • வெளிநாடுகளில் வசிக்கும் போது நீங்கள் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல்கள் அனைத்திற்குமான சீட்டுக்களை பேணவும், எனவே அறிக்கை கிடைத்தவுடன் அவற்றை மீள உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
  • அட்டையையும் pin இலக்கத்தையும் ஒன்றாக வைத்திருக்க வேண்டாம்.
  • எப்போதும் மேலதிகமாக பணத்தை கொண்டு செல்லவும், அவசர நிலைகளில் உதவும்.
  • உங்கள் அட்டைகளுக்கான 24 மணி நேர தொலைபேசி இலக்கங்களை அறிந்து வைத்திருக்கவும், எனவே அட்டை காணாமல் போனால் அல்லது திருடப்பட்டால் உடனடியாக அறிவிக்கலாம்.

உங்கள் பற்று அட்டையில் கொடுக்கல் வாங்கல் ஒன்றை நிராகரிப்பது எப்படி?

  • உங்கள் பற்று அட்டையில், இனங்காணப்படாத அல்லது அங்கீகரிக்கப்படாத கொடுக்கல் வாங்கல் ஒன்றை நீங்கள் அவதானித்தால், வங்கியின் வாடிக்கையாளர் சேவை ஹொட்லைன் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களை கோரலாம். நீங்கள் திருப்தியடையாவிடின், உங்கள் கொடுக்கல் வாங்கலை நீங்கள் நிராகரிக்குமாறு கோரலாம்.
  • கணக்கு அறிக்கை தயாரிக்கப்பட்டு 20 தினங்களுக்குள் நீங்கள் உடன்படாத கொடுக்கல் வாங்கல் பற்றி வங்கிக்கு அறிவிக்கப்பட வேண்டும். SMS அலேர்ட் ஊடாக உங்களுக்கு அறிவிக்கப்படும் எந்தவொரு கொடுக்கல் வாங்கலும் உங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கவனத்தில் கொள்ளப்படும்.
  • உங்கள் நிராகரிப்பின் பிரகாரம், குறித்த விற்பனை நிலையத்திடம் கட்டண அறவீடொன்று மேற்கொள்ளப்படும், குறித்த அறவீடுகள் VISA வலையமைப்பு நிறுவனத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் கால வரையறைகளுக்கமைய அமைந்திருக்கும்.
  • குறித்த கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றதை நீங்கள் ஏற்றுக்கொண்ட போதிலும், அதை இரத்துச் செய்ய கோரினால், அல்லது அந்த தொகை விற்பனையாளரிடமிருந்து உங்களுக்கு கிடைக்க வேண்டியிருந்தால், அதனை உறுதி செய்யும் சகல ஆவணங்களையும் பெற்றுக்கொள்ளவும். எப்போதும் கொடுக்கல் வாங்கல் பிணக்கை விற்பனையாளருடன் நேரடியாக தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யவும்.

விசேட அறிவித்தல்கள் – இலங்கை மத்திய வங்கியிடமிருந்து

தொடர்புகளுக்கு

    எங்களுடன் தொடர்புகொள்ள

    0117 818181

    மின்னஞ்சல்

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC