0117 818181

முறைப்பாடு கையாளல் செயன்முறை

உங்கள் கருத்துகளை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

எப்போதும் உங்களை திருப்திப்படுத்தும் வகையில் எமது சேவைகளை வழங்க எம்மை அர்ப்பணித்துள்ளோம்.

உங்களின் எதிர்பார்ப்புகளை நாம் எந்தளவுக்கு நிவர்த்தி செய்துள்ளோம் என்பதையும், எந்தப் பிரிவுகளில் எமது சேவைகளை நாம் மேம்படுத்த வேண்டியுள்ளது என்பதை பற்றி அறிந்து கொள்ளவும் உங்களின் கருத்துகள் எமக்கு உதவியாக அமையும்.

உங்கள் கருத்துகள் மற்றும் முறைப்பாடுகளை எவ்வாறு பகிர்ந்து கொள்வது:

  • உங்களின் கிளை முகாமையாளர் அல்லது உறவு பேண் முகாமையாளருடன் அவர்களின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கம் அல்லது மொபைல் இலக்கங்களினூடாக தொடர்பு கொள்ளலாம்.
  • கிளைகளில் காணப்படும் கருத்தளிப்பு படிவங்களை பூர்த்தி செய்யவும்
  • எமது 24 மணி நேர தொடர்பு நிலையத்துடன் +94 (0) 11 7818181 தொடர்பு கொள்ளவும்
  • மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ள: servicequality@unionb.com
  • தபால் மூலம் தொடர்பு கொள்ளவும்: சிரேஷ்ட முகாமையாளர் வாடிக்கையாளர் அனுபவங்கள், யூனியன் பாங்க் ஒஃவ் கொழும்பு பிஎல்சி, இல. 64 காலி வீதி, கொழும்பு 3.
  • UBgo Mobile App இல் “வங்கிக்கு அறியத் தருவது” ஊடாக “வாடிக்கையாளர் அனுபவ முகாமையாளர்” என்பதனூடாக உங்கள் கருத்துகளை அனுப்ப முடியும்.
  • உங்கள் கருத்துகள் அல்லது முறைப்பாடுகளை ஒப்படைப்பதற்கு தயவுசெய்து இங்கு click செய்யவும்.

நாம் எவ்வாறு பதிலளிப்போம்:

உங்களின் முறைப்பாடு கிடைத்ததன் பின்னர், வங்கியின் முறைப்பாடு கண்காணிப்பு கட்டமைப்பில் நாம் அதை பதிவு செய்து, உங்களின் கரிசனைகளை உடனடியாக தீர்ப்பதற்கு முயற்சி செய்வோம். எம்மால் தீர்வை எய்த முடியாத சந்தர்ப்பத்தில், உங்கள் முறைப்பாடு கிடைத்து 5-7 வேலை நாட்களுக்குள் தீர்வொன்றை பெற்றுக் கொடுப்போம். எவ்வாறாயினும், சில பிரச்சனைகள் சிக்கல்கள் மிகுந்தவையாக இருக்கும் என்பதால், தீர்வை எய்துவதற்கு சற்று அதிக காலம் வரை செல்லலாம். அவ்வாறான சந்தர்ப்பத்தில், மதிப்பிடப்பட்ட பதிலளிப்பு நேரத்தை நாம் அறியத்தருவோம்.

எவ்வாறாயினும், எமது பதிலளிப்பு தொடர்பில் நீங்கள் திருப்தி கொள்ளாவிடின், கீழே தரப்பட்டுள்ள ஒழுங்குபடுத்தல் அதிகார அமைப்புகளுடன், அவற்றினால் பரிந்துரைக்கப்பட்ட முறைகளினூடாக மாற்றுத் தீர்வை காணும் முறையை நீங்கள் தெரிவு செய்யலாம்.

இலங்கை நிதிசார் குறைகேள் அதிகாரி அலுவலகம்

நிதிசார் குறைகேள் அதிகாரி அலுவலகம்
143A, வஜிர வீதி
கொழும்பு 05
தொலைபேசி: +94 11 259 5624
ஃபக்ஸ்: +94 11 2595625
மின்னஞ்சல்: fosril@sltnet.lk
இணையத்தளம்: www.financialombudsman.lk

இலங்கை மத்திய வங்கியின் நிதிசார் நுகர்வோர் உறவுகள் பிரிவு (FCRD)

நிதிசார் நுகர்வோர் உறவுகள் பிரிவு,
இல. 30, ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01.
தகவல்களுக்கான ஹொட்லைன் : 1935
தொலைபேசி : +94 112477966
ஃபக்ஸ் : +94 112477444
மின்னஞ்சல் : fcrd@cbsl.lk

தொடர்புகளுக்கு

    எங்களுடன் தொடர்புகொள்ள

    0117 818181

    மின்னஞ்சல்

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC