011 5 800 800

011 5 800 800

யூனியன் வங்கியின் நோக்கம் என்பது, வியாபார ஸ்தாபனங்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செயற்பாடுகளின் ஊக்குவிப்பு, நிறுவுகை, விரிவுபடுத்தல் மற்றும் நவீனமயமாக்கல் செயற்பாடுகளுக்கு தொழிற்துறை, விவசாயத்துறை மற்றும் வியாபார ஒன்றிணைவு ஆகியவற்றில் தனியார் மூலதனத்தை ஈடுபடுத்துவதாக அமைந்துள்ளது.

எமது நிபுணத்துவம்

யூனியன் வங்கி சுமார் இரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக சிறிய, மத்தியளவு தொழில் முயற்சியாளர் துறையை அபிவிருத்தி செய்து வருவதுடன், இந்த துறை பற்றிய ஒப்பற்ற அறிவையும் நிதிசார் நிபுணத்துவத்தையும் பல இலங்கை கூட்டாண்மை நிறுவனங்களுடன் செயலாற்றியும் வருகிறது.

  • பின்வரும் துறைகள் உள்ளடங்கலாக பல துறைகளுக்கு யூனியன் வங்கி நிதி உதவிகளை வழங்கியுள்ளது:
  • விவசாயம்.
  • ஆடைத்தொழிற்துறை.
  • உணவு மற்றும் பானவகை.
  • ஹோட்டல் மற்றும் சுற்றுலா.
  • உட்கட்டமைப்பு.
  • உற்பத்தி.
  • சொத்து அபிவிருத்தி.

திட்டங்களுக்கான நிதி வழங்கல் என்பது ஒரு விசேடத்துவம் நிறைந்த ஆளுமையாகும். இதற்கு துறைசார் அறிவும் நிதி நிபுணத்துவமும் காணப்பட வேண்டும். இதன் மூலமாக செயற்திட்டத்தை மதிப்பிடுவது மற்றும் நிதி பொதியை நிறுவனத்துக்கேற்ப கட்டமைப்பு செய்வது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

திட்டத்தின் பணப்பாய்ச்சல் என்பது பிரதான கரிசனை காண்பிக்கும் விடயமாக அமைந்துள்ள நிலையில், மதிப்பீட்டு செயற்பாட்டில் அனுசரணை வழங்குபவரின் பதிவு, சந்தை, தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி, நிர்வாகம் மற்றும் மனித வளங்கள் பிரிவு, சூழல், ஒழுங்குபடுத்தல்கள் மற்றும் சட்டரீதியான அனுமதிகள் போன்ற செயற்திட்டத்தின் செயலாக்கம் பற்றி ஆராயும்.

பங்கு பங்களிப்பு மற்றும் செயற்படுத்தும் மட்டம், கடன் மட்டம் மற்றும் மீளச் செலுத்தும் திட்டம் மற்றும் கடன் நீடிப்பு போன்றன தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு நிதி தீர்மானிக்கப்படும்.

ஆரம்ப நிலையிலிருக்கும் செயற்திட்டங்களுக்கும், நடைமுறையிலுள்ள திட்டங்கள், விரிவாக்கங்கள், பன்முகப்படுத்தல்கள் போன்ற செயற்பாடுகளுக்கும் நாம் நிதி வழங்குவோம்.

நிதி ஏற்பாடு செய்யப்பட வேண்டிய செயற்திட்டம் ஒன்று இருக்குமாயின், வங்கியின் சிறிய, மத்தியளவு வியாபார சொத்துக்கள் நிலையத்துடன் 0115 800 800 தொடர்பு கொள்ளவும்.

உங்கள் வியாபாரத்தை
அடுத்த நிலைக்கு

கொண்டு செல்லல்

நிறுவனசார் / எஸ்எம்ஈ சேவைகள்

தொடர்புகளுக்கு

எங்களுடன் தொடர்புகொள்ள

011 5 800 800

மின்னஞ்சல்

info@unionb.com

Quick Links
Contact Us
Branch / ATM Locator
Facebook