0117 818181

இலங்கையில் வேகமாக

வளர்ந்து வரும் வங்கிகளில் யூனியன் வங்கியும் அடங்கியுள்ளது

நிர்வாக சபை அங்கத்தவர்கள்

1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட யூனியன் வங்கி, இலங்கையின் வங்கியியல் துறையில் 30 வருடங்களுக்கு மேலாக இயங்கி, தேசத்துக்கு சேவையாற்றுவதில் உறுதியான ஸ்தானத்தைக் கொண்டுள்ளது. உறுதியான மூலதன இருப்பைக் கொண்டுள்ளதுடன், ஸ்தீரமான நிதியியல் நிலைப்பாட்டுடன் யூனியன் வங்கி பொதுப் பட்டியலிடப்பட்ட தனியார் வர்த்தக வங்கியாக இயங்குவதுடன், நுகர்வோர், சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்கள் மற்றும் கூட்டாண்மை வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு நிதிச் சேவைகளை வழங்குகின்றது.

நிறுவன மேலாண்மை குழு

முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்பு ஆகியவற்றுக்காக யூனியன் வங்கி நன்கு அறியப்படுவதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை கவர்ந்த நிறுவனமாக திகழ்கின்றது.

இலங்கையின் நிதிச்சேவைகள் துறையில் 2014 ஆம் ஆண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக அமைந்திருந்தது, சர்வதேச முதலீட்டு நிறுவனமான TPG, யூனியன் வங்கியில் 117 மில். அமெரிக்க டொலர்களை முதலீடு செய்திருந்தது. இது இலங்கையின் மாபெரும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் ஒன்றாக திகழ்ந்தது.

விரிவாக்கம் மற்றும் முன்னேற்றத்துக்கமைய, CG Corp Global இன் துணை நிறுவனமான CG கெப்பிட்டல் பார்ட்னர்ஸ் பிரிஈ லிமிடெட்டின் கவனத்தை வங்கி ஈர்த்திருந்ததுடன், இந்நிறுவனம் யூனியன் வங்கியின் பெரும்பாண்மை பங்காண்மையை 2023 ஒக்டோபர் மாதம் முதல் மறைமுகமாக கையகப்படுத்தியிருந்தது. ஆசியாவில் Global Growth நிறுவனம் என பல்-தேசிய வியாபாரமாக CG Corp Global திகழ்வதுடன், நேபாளத்தின் மாபெரும் தனியார் வங்கியான நபில் வங்கியின் மாபெரும் பங்குதாரராகவும் திகழ்கின்றது. www.cgcorpglobal.com

தமது தீர்வுகள் வழங்கலில் பெருமளவு புத்தாக்கங்களை உள்வாங்கி, தொழில்நுட்ப மற்றும் சேவை வழங்கல் கட்டமைப்புகளில் உயர்தர வங்கியியல் அனுபவத்தை அதன் வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதனூடாக துரித வளர்ச்சியை எய்த பரிபூரண திட்டத்தை வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளது. அதனூடாக வாடிக்கையாளர்களுக்கு உயர் தரமான வங்கியியல் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்க எதிர்பார்த்துள்ளது.

நாடு முழுவதிலும் 63 கிளைகளை கொண்டுள்ளதுடன், மாற்று நாளிகைகளில் துடிதாட்டமான விற்பனை செயலணி, 24 மணி நேர அழைப்பு நிலையம், டிஜிட்டல் வங்கியியல் கட்டமைப்புகள் மற்றும் நாடளாவிய ரீதியில் ATM வலையமைப்பு போன்றவற்றுடன் நிதிச்சேவைகளை சௌகரியமாக பெற்றுக் கொள்வதற்கான அணுகலை வங்கி வழங்குகின்றது.

யூனியன் வங்கியின் துணை நிறுவனங்களில் இலங்கையின் முன்னணி சொத்துக்கள் முகாமைத்துவ நிறுவனமான நஷனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிடெட் (National Asset Management Limited) மற்றும் UB ஃபினான்ஸ் கம்பனி லிமிடெட் (UB Finance Company Limited) ஆகியன அடங்கியுள்ளன.

56
கிளைகள்

105
ATM’s/CRM’s

இலங்கையின் நிதிச் சேவைகள் துறையைச் சேர்ந்த நிறுவனமொன்றுக்கு கிடைத்த மாபெரும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அமைந்துள்ளது

2014 இல், அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் முதலீட்டு நிறுவனமான TPG 100 பில்லியன் அமெரிக்க டொலர்களை யூனியன் வங்கியில் முதலீடு செய்து 70 சதவீதமான பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. இந்த முதலீடு இலங்கையின் நிதிச் சேவைகள் துறையில் மிகவும் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. இலங்கையின் நிதிச் சேவைகள் துறையைச் சேர்ந்த நிறுவனமொன்றுக்கு கிடைத்த மாபெரும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அமைந்துள்ளது.

நோக்கு

நிதிச் சேவைகள் துறையில் முன்னணி செயலாற்றுனராக திகழ யூனியன் வங்கி முயற்சிப்பதுடன், 2029 ஆம் ஆண்டளவில் சிறந்த ஐந்து வங்கிகளில் ஒன்றாக திகழ்வதை இலக்காகக் கொண்டுள்ளது.

தன்னேற்புத்திட்ட அறிக்கை

செல்வம், வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை புத்தாக்கமான தீர்வுகள் மற்றும் டிஜிட்டல் வசதிகளினூடாக நிதித் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு யூனியன் வங்கியைச் சேர்ந்த, நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். வெளிப்படைத்தன்மை, ஒழுக்கம் மற்றும் வாடிக்கையாளருக்கு முன்னுரிமை சேவை வழிமுறை போன்றவற்றில் கவனம் செலுத்தி, வணிக வங்கியியல், நுகர்வோர் வங்கியியல், முதலீட்டு மற்றும் செல்வங்கள் நிர்வகிப்பு மற்றும் இதர பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளைக் கொண்டு வாழ்வுகளையும் வியாபாரங்களையும் மாற்றியமைப்பதில் கவனம் செலுத்துகிறோம்.

விழுமியங்கள்

  • வாடிக்கையாளர்களை மையப்படுத்தி, எப்போது எமது வாடிக்கையாளருக்கு முன்னுரிமையளிக்கின்ற வங்கி.
  • சேவை சிறப்புக்கு எம்மை அர்ப்பணித்துள்ளதுடன், எப்போதும் உயர் மட்ட சேவையை வழங்குகிறோம்.
  • கைகோர்ப்பு, வெற்றியை நோக்கிச் செல்ல ஒன்றிணைந்து செயலாற்றுவது போன்றவற்றில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
  • தொழில்முயற்சியாண்மை மனநிலையை நாம் பின்பற்றுவதுடன், தொடர்ச்சியாக புத்தாக்கங்களை உட்புகுத்தி, புதிய வாய்ப்புகளை கையகப்படுத்துகிறோம்.
  • நிறைவேற்றுவதில் நாம் கவனம் செலுத்துவதுடன், திட்டங்களை கவனமாக மற்றும் வினைத்திறனாக செயற்படுத்துவதில் அக்கறை கொண்டுள்ளோம்.
  • டிஜிட்டலுக்கு நாம் முன்னுரிமை வழங்குவதுடன், நவீன டிஜிட்டல் புத்தாக்கத்தை பின்பற்றுகிறோம்.

தொடர்புகளுக்கு

    எங்களுடன் தொடர்புகொள்ள

    0117 818181

    மின்னஞ்சல்

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC