0117 818181

யூனியன் வாங்கி அட்டை மீதான கடன் வசதியுடன் பணத்திற்கு எளிய முறையில் அணுகிக் கொள்ளுங்கள்.
மிக இலகுவான தவணை முறைக்கட்டணத் திட்டங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள். இவ் வசதியானது கடன் எல்லையின் அதிகபட்சம் 17% வரை பெற்றுக்கொள்ளப்பட முடியும்

கையாளும் கட்டணங்கள் அட்டை உரிமையாளரினால் முற்பணமாகவோ அல்லது தவணை முறைக்கட்டணமாகவோ தேர்ந்தெடுக்கப்பட முடியும்.

கோல்ட், பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர் அட்டை

காலம் கட்டணம் (01/10/2022 முதல்)
3 மாதங்கள் 5%
6 மாதங்கள் 8%
12 மாதங்கள் 14%
24 மாதங்கள் 26%
36 மாதங்கள் 38%

குறைந்தபட்ச கடன் தொகை – ரூ 25,000
அதிகபட்ச கடன் தொகை – கடன் தொகையின் 75% அல்லது ரூ 500,000 இற்கு குறைந்த தொகை. கடன் தொகை கட்டணங்கள் உட்பட பெறக்கூடிய கடன் தொகைக்கு அமைவானது.

விளக்கப்படம்

ரூ 100,000 பிளாட்டினம் அட்டை ஒன்றுக்கான அட்டை மீதான கடன் திட்டமொன்றிற்கு

காலம் அட்டை மீதான திட்டமொன்றிற்கான கட்டணம் (01/10/2022 முதல்) கட்டணத்தொகை (முற்பணமாக செலுத்த வேண்டிய அல்லது தவணை முறையாக செலுத்த வேண்டிய) மாத தவணை உடனான கட்டணம் மாத தவணை முற்பணமாக செலுத்தப்பட்டால்
3 months 5% Rs.5,000 Rs.35,000.34 Rs.33,333.33
6 months 8% Rs.8,000 Rs.18,000.33 Rs.16,666.67
12 months 14% Rs.14,000 Rs.9,500 Rs.8,333.33
24 months 26% Rs.26,000 Rs.5,250 Rs.4,166.66
36 months 38% Rs.38,000 Rs.3,833.33 Rs.2,777.78

அவசிய ஆவணங்கள்

முறையாக நிரப்பப்பட்ட அட்டை மீதான கடனுக்கான விண்ணப்பத் தாள் (பதிவிறக்க)

நியதிகள் மற்றும் நிபந்தனைகள்

யூனியன் வங்கி – கடன் அட்டை மீதான கடன் திட்டம்

  1. கடன் அட்டை மீதாக கடன் பெறக்கூடிய ஆகக்குறைந்த தொகை ரூ. 25,000 ஆகும். கடன் எல்லைப் பெறுமதியின் 75% வரை ஆகக்கூடிய தொகையை கடன் தொகையாக பெற முடியும். இது கடன் அட்டைதாரர் கொண்டிருக்கும் கடன் எல்லைப் பெறுமதியில் தங்கியிருக்கும். கடன் அட்டை மீதான கடன் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர் அது தொடர்பான விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து வங்கிக்கு மீள அனுப்பி வைக்க வேண்டும்.
  2. பணத்தை வைப்புச் செய்வதற்கு அட்டைதாரர் தமது பெயரிலுள்ள யூனியன் வங்கி நடைமுறை அல்லது சேமிப்பு கணக்கு விவரங்களை வங்கிக்கு வழங்க வேண்டும்.
  3. விண்ணபிக்கும் போதும் அதற்கான அனுமதியை வங்கி வழங்கும் போதும் அட்டை உரிய வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எனும் நிபந்தனையின் அடிப்படையில் அட்டைதாரரின் கோரிக்கை/விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும். எவ்வித காரணங்களையும் குறிப்பிடாமல் அட்டைதாரரின் கோரிக்கை/விண்ணப்பத்தை நிராகரிக்கும் அதிகாரத்தை வங்கி கொண்டுள்ளது.
  4. அட்டை மீதுான கடன் கொடுக்கல் வாங்கல் தொகை மீது எவ்விதமான ரிவோர்ட்ஸ் புள்ளிகளையும் அட்டைதாரர் பெறமாட்டார்.
  5. யூனியன் வங்கியினால் காலாகாலத்தில் நிர்ணயிக்கப்படும் கையாளல் கட்டணத்தின் பிரகாரம் அட்டை மீதான கடன் வசதிக்கு கட்டணம் அறவிடப்படும்.
  6. அட்டை மீதான கடன் வசதியை முன்கூட்டியே முடிவுறுத்தல் அல்லது செலுத்தித் தீர்த்தல் மூலம் வங்கி கட்டணங்களை மீளக் கோர முடியாது.
  7. இந்த சேவைக்கு அட்டைதாரரை கணிப்பிடும் போது அட்டை பயன்படுத்தப்பட்ட மாதங்களின் எண்ணிக்கை மற்றும் பயன்படுத்திய முறை போன்ற விடயங்களை கவனத்தில் கொண்டு தீர்மானத்தை மேற்கொள்ளும்.
  8. 12 மாத காலப்பகுதியினுள் இ்நத வசதியை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பெற்றுக் கொள்ள முடியாது.
  9. கடன் மீதான கடன் என்பது அட்டைதாரருக்கு வழங்கப்படும் ஒரு வசதி என்பதை அட்டைதாரர் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த வசதியினூடாக அட்டைதாரர் கொள்வனவு செய்யும் பொருட்கள் அல்லது சேவைகள் அல்லது பயன்படுத்திய இதர தேவைகள் தொடர்பில் யூனியன் வங்கி எவ்விதமான பொறுப்புகளையும் கொண்டிருக்காது. அட்டைதாரரின் சொந்த இடர் அடிப்படையில் இது அமைந்திருக்கும். மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பான எந்தவொரு முரண்பாடும் அட்டைதாரர் குறித்த விநியோகத்தர்/விற்பனையாளர்/மூன்றாம் தரப்புடன் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கை யூனியன் வங்கி கடன் அட்டை மீது பெற்றுக் கொண்ட கடன் தொகையை மீளச் செலுத்தும் உடன்பாட்டில் எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடாது.
  10. கடன் அட்டை மீதான கடன் வசதியுடன் தொடர்புடைய உள்ளம்சங்கள் மற்றும் சேவைகள் பற்றிய தீர்மானத்தை யூனியன் வங்கி மேற்கொள்ளும் என்பதுடன், அவற்றுக்கு பொருத்தமானதாக கருதும் சந்தர்ப்பங்களில் உரிய முன்னறிவித்தல்களுடன் மாற்றங்களை ஏற்படுத்தல், மீளப்பெறல், உள்ளம்சங்களில் மாற்றங்களை மேற்கொள்ளல், சேவைகள் அல்லது தொடர்புடைய நிபந்தனைகளில் மாற்றம் செய்யும் அதிகாரத்தையும் யூனியன் வங்கி கொண்டிருக்கும்.
  11. விசேடமாக குறிப்பிட்டாலன்றி, யூனியன் வங்கி கடன் அட்டைகள் மீது அமுலிலுள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைக் போன்றன கடன் அட்டை மீதான கடன் திட்டத்துக்கும் செல்லுபடியாகும் என்பதுடன், கடன் அட்டை மீதான கடன் தவணைக்கட்டணங்கள் கடன் மீது அறவிடப்படும் சாதாரண கொடுக்கல் வாங்கலாக கருதப்படும்.
  12. கையாளல் கட்டணத்துடன் கடன் அட்டை மீதான கடன் தொகை சமமாக பிரிக்கப்பட்ட மாதாந்த தவணைக்கட்டணங்களாக மீளச் செலுத்தப்படலாம். கடன் அட்டை மீதான கடன் தவணைக்கட்டணம், குறித்த பெற்றுக் கொண்ட கடன் தொகை மற்றும் அதற்கான கையாளல் கட்டணம் போன்றன இணைத்து, அதனை அட்டைதாரர் மீளச் செலுத்துவதற்கு உடன்பட்ட காலப்பகுதியால் பிரிக்க வரும் தொகையாக அமைந்திருக்கும்.
  13. அட்டை மீதான கடன் மொத்தத் தொகை மற்றும் அதன் கையாளல் கட்டணம் போன்றன கடன் அட்டை எல்லைப் பெறுமதியில் ஒதுக்கப்படும் என்பதுடன், அட்டைதாரரின் கடன் அட்டை அறிக்கையில் மாதாந்தம் தவணைக்கட்டணம் உள்ளடக்கப்படும். ஒவ்வொரு தவணைக்கட்டணத்துக்கான கொடுப்பனவு செலுத்தப்பட்டதும், ஒதுக்கப்பட்டுள்ள தொகை படிப்படியாக குறைக்கப்படும்.
  14. தமது கடன் அட்டை மீது தம்மால் மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகள் யூனியன் வங்கி கடன் அட்டைகள் உயர் நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்படும் கொடுப்பனவு ஒதுக்கீடுகளின் அடிப்படையில் வைப்புச் செய்யப்படும் என்பதற்கு அட்டைதாரர் உடன்படுகிறார்.
  15. குறித்த மாதமொன்றில் யூனியன் வங்கியின் கடன் அட்டைக்குரிய கட்டணம் செலுத்த வேண்டிய இறுதித் திகதிக்கு முன்னதாக அட்டை மீதான கடன் அடங்கலாக மொத்த நிலுவைத் தொகை செலுத்தப்படாவிடின், யூனியன் வங்கி கடன் அட்டை மீது அமுலிலுள்ள வட்டி வீதங்களின் பிரகாரம் குறித்த செலுத்தப்பட வேண்டிய கடன் தவணைக்கட்டணத்தின் மீது வட்டி அறவிடப்படும்.
  16. வாடிக்கையாளரின் கடன் அட்டை நிறுத்தப்பட்டால், தடைசெய்யப்பட்டால், புதுப்பிக்கப்படாவிட்டால் அல்லது எந்தவொரு காரணத்துக்காகவும் இடைநிறுத்தப்பட்டால் அல்லது இந்த நியதி நிபந்தனைகளின் பிரகாரம் அட்டை மீதான கடன் தொகை நிலுவையை மீளச் செலுத்தாமை அல்லது யூனியன் வங்கி கடன் அட்டைகள் மீதான பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகளை மீறியிருந்தால், அட்டை மீதான கடன் நிலுவை தவணைக்கட்டணங்கள் மற்றும் அவற்றுக்கான கையாளல் கட்டணங்கள் போன்றன வங்கிக்கு உடனடியாக மீளச் செலுத்தும் வகையில் நிலுவைக்கு வரும்.
  17. தவணைக்கட்டணங்கள் மீதான கொடுப்பனவை அட்டைதாரர் செலுத்தத் தவறினால், நிலுவையிலுள்ள அட்டை மீதான கடன் வசதியை முன்கூட்டியே நிறுத்தி மொத்த நிலுவைத் தொகையை திரட்டிய தொகையாக அறவிடுவதற்கான அதிகாரத்தை யூனியன் வங்கி கொண்டுள்ளது.

தொடர்புகளுக்கு

    எங்களுடன் தொடர்புகொள்ள

    0117 818181

    மின்னஞ்சல்

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC