0117 818181

கொடு கடன் தகவல் பணியகம் (CRIB) என்றால் என்ன?

இலங்கையில் கடன் பெற்றுக் கொண்டவர்களின் வரலாறு மற்றும் தகவல்களை தன்னகத்தே கொண்டிருக்கும் சுயாதீன அமைப்பாக இலங்கை கொடு கடன் தகவல் பணியகம் (CRIB) அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன்கள் தொடர்பான சகல தகவல்களையும், அவற்றை வாடிக்கையாளர்கள் மீளச் செலுத்துவது தொடர்பான தகவல்களையும் சகல நிதிசார் சேவைகளையும் பெற்றுக் கொடுக்கும் நிறுவனங்களுக்கும் இந்த பணியகத்துக்கு வழங்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளன. இவ்வாறு சகல நிறுவனங்களிடமிருந்தும் திரட்டப்படும் சகல தகவல்களையும் தனது தரவுக் கட்டமைப்பில் இலங்கை கொடு கடன் தகவல் பணியகம் சேகரித்து வைக்கிறது.

தனது கடன் பெறுநர்களின் கடன் தகவல்கள் மற்றும் கடல் வரலாற்றுத் தகவல்களை இலங்கை கொடு கடன் தகவல் பணியகத்துக்கு வழங்க யூனியன் பாங்க் ஒஃவ் கொழும்பு பிஎல்சி உடன்பட்டுள்ளது. இலங்கை கொடு கடன் தகவல் பணியகத்துக்கு கடன் அட்டைகள் பற்றிய தகவல்களை வழங்கும் விதிமுறை பின்வருமாறு அமைந்திருக்கும்,

  • அட்டைதாரருக்கு கடன் அட்டை புதிதாக வழங்கப்படும் போது அதில் கடன் எல்லைப் பெறுமதி, வழங்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் மேலதிக அட்டைதாரரின் தகவல்கள் போன்றன இலங்கை கொடு கடன் தகவல் பணியகத்துக்கு மாதத்தின் இறுதியில் அட்டைதாரரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் / கடவுச்சீட்டு இலக்கத்தின் கீழ் அறிவிக்கப்படும்.
  • வங்கியுடன் கடன் அட்டையை அட்டைதாரர் தொடர்ச்சியாக பேணும் காலப்பகுதி வரையில், கடன் அட்டையில் நிலுவையிலுள்ள மீதித் தொகை, கடன் அட்டையில் செலுத்தப்பட வேண்டிய நிலுவை காலம் கடந்து காணப்படும் நாட்டிகளின் எண்ணிக்கை போன்றன ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் இலங்கை கொடு கடன் தகவல் பணியகத்துக்கு வங்கியினால் அறிவிக்கப்படும்.

கடன் பெறுநர்களுக்கு இலங்கை கொடு கடன் தகவல் பணியகத்தில் அறிக்கையிடலினால் கிடைக்கும் அனுகூலங்கள்,

  • கடன் பெறுநர் ஒருவர் கடனை / கடன் அட்டை மீதான கொடுப்பனவை உரிய காலத்தில் மீளச் செலுத்தி, சிறந்த பதிவை பேணிவந்தால், எதிர்காலத்தில் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் / வங்கிகளிடமிருந்து இலகுவாக கடன் வசதிகளை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
  • கடன்பெறுநர் சிறந்த கடன் மீளச் செலுத்தல் வரலாற்றைக் கொண்டிருந்தால், வங்கிகள் மற்றும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களிடம் சிறந்த நியதி நிபந்தனைகளுக்கு பேரம் பேசக்கூடியதாக இருக்கும்.

பெற்றுக் கொண்ட கடன்களை மீளச் செலுத்தத் தவறியிருந்தால், கடன் பெறுநர்களுக்கு இலங்கை கொடு கடன் தகவல் பணியகத்தினால் கிடைக்கும் பிரதிகூலங்கள்,

  • கடன் வசதிகளை வழங்கும் போது நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் / வங்கிகள் கட்டாயமாக இலங்கை கொடு கடன் தகவல் திணைக்களத்தின் அனுமதியை பெற வேண்டியிருப்பதால், கடன் பெறுநருக்கு கடன் வசதிகளை துரிதமாக பெற்றுக் கொள்ள முடியாதிருக்கும்.
  • நிதிச் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நிறுவனங்களால் வழங்கப்படும் மேலதிக நியதி நிபந்தனைகளுக்கு கடன் பெறுநர் உடன்பட வேண்டியிருக்கும்.

இலங்கை கொடு கடன் தகவல் பணியகத்தில் சிறந்த கடன் மீளச் செலுத்தல் பதிவை பேணுவதற்கு,

  • கடன் வசதிக்கு விண்ணப்பிக்கும் முன்னதாக உங்கள் வருமானம் மற்றும் கடனை மீளச் செலுத்துவதற்கு உங்களுக்கு காணப்படும் திறன் பற்றி முறையாக ஆய்வு செய்து கொள்ளவும்.
  • நீங்கள் பெற்றுக் கொண்ட கடன் வசதிகள் மீதான மாதாந்த மீளச் செலுத்த வேண்டிய தொகையை குறித்த நிலுவை இறுதித் திகதிக்கு முன்னதாக செலுத்தவும். (கடன் அட்டைகளை பொறுத்தமட்டில், உங்கள் கடன் அட்டை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நீங்கள் செலுத்த வேண்டிய ஆகக்குறைந்த தொகை அல்லது மொத்த நிலுவைத் தொகையை கட்டணம் செலுத்த வேண்டிய நிலுவை இறுதித் திகதிக்கு முன்னதாக செலுத்தவும்).
  • எதிர்பாராத நிலையை நீங்கள் எதிர்கொண்டிருந்தால், கடன் மீளச் செலுத்தும் திறனை அந்த நிலை பாதிக்குமாயின், அது தொடர்பில் உங்கள் வங்கி / நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனத்துக்கு அறிவித்து எதிர்காலத்தில் எவ்வாறு செயலாற்றுவது பற்றி உரையாடவும்.
  • உங்கள் கடன் வரலாற்று பதிவை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
  • கடன் அறிக்கையில் ஏதேனும் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் உடனடியாக உங்கள் வங்கிக்கு / நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனத்துக்கு அல்லது இலங்கை கொடு கடன் தகவல் பணியகத்துக்கு அறிவித்து சீர் செய்து கொள்ளவும்.

தொடர்புகளுக்கு

    எங்களுடன் தொடர்புகொள்ள

    0117 818181

    மின்னஞ்சல்

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC