வட்டியில்லாமல் மீளச் செலுத்தும் காலம்
அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு கொடுக்கல் வாங்கலும், அதே அறிக்கை காலப்பகுதியினுள் வட்டி அறவீட்டுக்கு உட்படுத்தப்படாது. வட்டியில்லாமல் மீளச் செலுத்தக்கூடிய ஆகக்கூடிய நாட்கள் 51 ஆகும்.
ஆகக்குறைந்த நிலுவை/கொடுப்பனவு கணிப்பீடு
”ஆகக்குறைந்த செலுத்தப்பட வேண்டிய தொகை” கணிப்பிடப்படும் போது 100% அரச வரிகள்/கட்டணங்கள் மற்றும் இதர அனைத்து கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் கட்டணங்களின் 4% உள்ளடக்கப்படும். ஆகக்குறைந்த செலுத்தப்பட வேண்டிய தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆகக்குறைந்த எல்லைப் பெறுமதி ரூ. 500/- ஆகும். ”மொத்த நிலுவைத் தொகை” என்பது ஆகக்குறைந்த எல்லைப்பெறுமதியை விட குறைவாயின், மொத்த தொகை ஆகக்குறைந்த கொடுப்பனவு தொகையாக செலுத்தக் கோரப்படும்.
அட்டை உரிமையாளர் பழைய நிலுவைத் தொகைகள் ஏதேனும் கொண்டிருந்தால், அந்தத் தொகையும் தற்போதைய மொத்த ஆகக்குறைந்த நிலுவைத் தொகைக்கு சேர்க்கப்படும்.
கட்டணம் செலுத்தப்பட வேண்டிய இறுதித்திகதிக்கு முன்னதாக ஆகக்குறைந்த நிலுவைத் தொகை செலுத்தப்படாவிடின், உங்கள் கணக்கு குற்றமிழைக்கப்பட்டதாக நிரல்படுத்தப்படும். உங்கள் கடன் தரப்படுத்தலில் இது பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுடன் இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்துக்கும் (CRIB) உங்கள் தகவல்கள் அறிவிக்கப்படும்.
காலம் தாழ்த்திய கொடுப்பனவு கட்டணம்
கோல்ட் / பிளாட்டினம் கடன் அட்டைகள் – ரூ.750/-
சிக்னேச்சர் அட்டைகள் – இலவசம் (கட்டண விவரங்களை பார்க்கவும்)
கொடுப்பனவு இறுதி திகதியன்று அல்லது முன்னதாக ஆகக்குறைந்த செலுத்தப்பட வேண்டிய தொகை மேற்கொள்ளப்படாவிடின் காலம் தாழ்த்திய கொடுப்பனவுக்கான கட்டணம் அறவிடப்படும்.
வட்டி அறவீட்டுக்கு மேலதிகமாக காலம் தாழ்த்திய கொடுப்பனவு கட்டணம் அறவிடப்படுவதுடன், பின்வரும் சந்தர்ப்பங்களில் அது அறவிடப்படும்:
- அறிக்கை தயாரிக்கப்பட்ட திகதி மற்றும் கொடுப்பனவுக்கான இறுதித் திகதிக்கு இடையே எவ்விதமான கொடுப்பனவுகளும் மேற்கொள்ளப்படாவிடின்,
- ஆகக்குறைந்த செலுத்த வேண்டிய தொகைக்கு குறைவான தொகை கொடுப்பனவாக மேற்கொள்ளப்படல் (மொத்த நிலுவைத் தொகையின் 5%)
கடன் எல்லை மீறல் கட்டணம்
அனைத்து அட்டைகளின் மீதும் ரூ.750/- அறவிடப்படும். (கட்டண விவரங்களை பார்க்கவும்)
அனுமதிக்கப்பட்ட கடன்எல்லையை விட அட்டை உரிமையாளர் பயன்படுத்தியிருந்தால் கடன் எல்லை மீறலுக்கான கட்டணம் அறவிடப்படும்.
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





