0117 818181

கொடுப்பனவை மேற்கொள்வது

உங்கள் யூனியன் வங்கி கடன் அட்டைக்காக ஒதுக்கப்பட்டுள்ள ”கணக்கு இலக்கத்துக்கு” கொடுப்பனவை மேற்கொள்ளவும். இதை கடன் அட்டையின் கணக்கு பட்டியலிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

 

உங்களுக்கு கீழே தரப்பட்டுள்ள முறையினூடாகவும் கொடுப்பனவை மேற்கொள்ள முடியும்:

  • எந்தவொரு யூனியன் வங்கி கிளையின் கவுன்டரினூடாக பண வைப்பை மேற்கொள்ள முடியும்.
  • யூனியன் வங்கியின் மொபைல் app மற்றும் இணைய வங்கிச் சேவை ஆகியவற்றை பயன்படுத்தி பண மாற்றத்தை மேற்கொள்ளலாம் (யூனியன் வங்கி கணக்குதாரர்களுக்கு மாத்திரம்)
  • இணைய வங்கிச் சேவை அல்லது மொபைல் வங்கிச் சேவை ஊடாக வேறெந்தவொரு வங்கியிலிருந்தும் யூனியன் வங்கிக்கு பணத்தை அனுப்ப முடியும் (பணப் பரிமாற்ற சேவையை பயன்படுத்தவும். கடன் அட்டை கொடுப்பனவு சேவையை பயன்படுத்த வேண்டாம்) (பிற வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு மாத்திரம்)

 

கடனட்டைதாரரின் கடன் அட்டையின் கணக்குக்கு மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகளை மாத்திரமே யூனியன் வங்கியினால் ஏற்றுக் கொள்ளப்படும்.

 

கடன் அட்டை கணக்கு என்றால் என்ன?

  • உங்களுக்கு கடன் அட்டை வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் கடன் அட்டைக் கணக்கு ஆரம்பிக்கப்படும்.
  • கடன் அட்டை மீது மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகளை ஏற்றுக் கொள்வதற்காக மாத்திரம் அந்த கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
  • உங்கள் கடன் அட்டை கட்டணப்பட்டியலின் இடது மேல் மூலையில் கடன் அட்டை கணக்கு இலக்கம் குறிப்பிடப்பட்டிருக்கும்.
  • நீங்கள் யூனியன் வங்கியின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துபவராயின் கணக்கு இலக்கம் உங்கள் திரையில் காண்பிக்கப்படும்.

வட்டியில்லாமல் மீளச் செலுத்தும் காலம்

அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு கொடுக்கல் வாங்கலும், அதே அறிக்கை காலப்பகுதியினுள் வட்டி அறவீட்டுக்கு உட்படுத்தப்படாது. வட்டியில்லாமல் மீளச் செலுத்தக்கூடிய ஆகக்கூடிய நாட்கள் 51 ஆகும்.

ஆகக்குறைந்த நிலுவை/கொடுப்பனவு கணிப்பீடு

”ஆகக்குறைந்த செலுத்தப்பட வேண்டிய தொகை” கணிப்பிடப்படும் போது 100% அரச வரிகள்/கட்டணங்கள் மற்றும் இதர அனைத்து கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் கட்டணங்களின் 4% உள்ளடக்கப்படும். ஆகக்குறைந்த செலுத்தப்பட வேண்டிய தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆகக்குறைந்த எல்லைப் பெறுமதி ரூ. 500/- ஆகும். ”மொத்த நிலுவைத் தொகை” என்பது ஆகக்குறைந்த எல்லைப்பெறுமதியை விட குறைவாயின், மொத்த தொகை ஆகக்குறைந்த கொடுப்பனவு தொகையாக செலுத்தக் கோரப்படும்.

அட்டை உரிமையாளர் பழைய நிலுவைத் தொகைகள் ஏதேனும் கொண்டிருந்தால், அந்தத் தொகையும் தற்போதைய மொத்த ஆகக்குறைந்த நிலுவைத் தொகைக்கு சேர்க்கப்படும்.

கட்டணம் செலுத்தப்பட வேண்டிய இறுதித்திகதிக்கு முன்னதாக ஆகக்குறைந்த நிலுவைத் தொகை செலுத்தப்படாவிடின், உங்கள் கணக்கு குற்றமிழைக்கப்பட்டதாக நிரல்படுத்தப்படும். உங்கள் கடன் தரப்படுத்தலில் இது பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுடன் இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்துக்கும் (CRIB) உங்கள் தகவல்கள் அறிவிக்கப்படும்.

காலம் தாழ்த்திய கொடுப்பனவு கட்டணம்

கோல்ட் / பிளாட்டினம் கடன் அட்டைகள் – ரூ.1,500/-
சிக்னேச்சர் அட்டைகள் – இலவசம் (கட்டண விவரங்களை பார்க்கவும்)

கொடுப்பனவு இறுதி திகதியன்று அல்லது முன்னதாக ஆகக்குறைந்த செலுத்தப்பட வேண்டிய தொகை மேற்கொள்ளப்படாவிடின் காலம் தாழ்த்திய கொடுப்பனவுக்கான கட்டணம் அறவிடப்படும்.

வட்டி அறவீட்டுக்கு மேலதிகமாக காலம் தாழ்த்திய கொடுப்பனவு கட்டணம் அறவிடப்படுவதுடன், பின்வரும் சந்தர்ப்பங்களில் அது அறவிடப்படும்:

  • அறிக்கை தயாரிக்கப்பட்ட திகதி மற்றும் கொடுப்பனவுக்கான இறுதித் திகதிக்கு இடையே எவ்விதமான கொடுப்பனவுகளும் மேற்கொள்ளப்படாவிடின்,
  • ஆகக்குறைந்த செலுத்த வேண்டிய தொகைக்கு குறைவான தொகை கொடுப்பனவாக மேற்கொள்ளப்படல்

கடன் எல்லை மீறல் கட்டணம்

அனைத்து அட்டைகளின் மீதும் ரூ.1,500/- அறவிடப்படும். (கட்டண விவரங்களை பார்க்கவும்)

அனுமதிக்கப்பட்ட கடன்எல்லையை விட அட்டை உரிமையாளர் பயன்படுத்தியிருந்தால் கடன் எல்லை மீறலுக்கான கட்டணம் அறவிடப்படும்.

தொடர்புகளுக்கு

    எங்களுடன் தொடர்புகொள்ள

    0117 818181

    மின்னஞ்சல்

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC