0117 818181

யூனியன் வங்கி 2025 நிதியாண்டில் ரூ. 2.2 பில்லியனை வரிக்கு முந்திய இலாபமாக பதிவு செய்திருந்ததுடன் தேறிய இலாபம் இரண்டு மடங்கு அதிகரிப்பு

யூனியன் வங்கி 2025 நிதியாண்டில் ரூ. 2.2 பில்லியனை வரிக்கு முந்திய இலாபமாக பதிவு செய்திருந்ததுடன் தேறிய இலாபம் இரண்டு மடங்கு அதிகரிப்பு

2025 நிதியாண்டில் யூனியன் வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் வங்கிகளில் ஒன்றாக, குழுமத்தின் வரிக்கு முந்தைய இலாபம் ரூ. 2.2 பில்லியனை எய்தியிருந்ததுடன், வரிக்கு பிந்திய இலாபம் இரண்டு மடங்கு அதிகரித்து ரூ. 660 மில்லியனாக பதிவாகியிருந்தது. வங்கியினால் முன்னெடுக்கப்பட்டிருந்த மூலோபாய மாற்றியமைப்புத் திட்டங்களின் வெற்றிகரமான செயற்பாடுகளின் பிரதிபலிப்பாக இவை அமைந்திருந்தன.

வங்கியின் மொத்த வருமானம் ரூ. 18.2 பில்லியனாக உயர்ந்திருந்தது. இதில் தேறிய வட்டி வருமானம் (NII) ரூ. 5,638 மில்லியன் மற்றும் ரூ. 1,545 மில்லியன் தேறிய தரகு மற்றும் கூலி வருமானங்கள் பங்களிப்பு வழங்கி பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் மீட்சியுடனான வருமான இருப்பை பிரதிபலித்திருந்தன. இந்த விரிவாக்கமானது, வைப்புத் தளத்தின் வலுவான வளர்ச்சியினால் மேலும் வலுவூட்டப்பட்டுள்ளது. இது 15% வளர்ச்சியுடன் 118.8 பில்லியன் ரூபாயினை எட்டியுள்ளதுடன், வங்கியின் மீதான பொதுமக்களின் ஆழமான நம்பிக்கையையும் மற்றும் வங்கியின் சுறுசுறுப்பான விற்பனை அடிபப்டையில் வழிநடத்தப்படும் கலாசாரத்தின் வெற்றியையும் இது வெளிப்படுத்தியுள்ளது. எதிர்காலக் கடன் வழங்கல்களுக்கான நிலையான அடித்தளத்தை உறுதிப்படுத்தும் வகையில், வங்கியானது 13.2% என்ற சிறந்த மொத்த மூலதன விகிதத்தைப் பேணி வருவதுடன், இது ஒழுங்குமுறைத் தேவைகளை விடவும் கணிசமானளவு உயர்வான மட்டமாகும். குழுமத்தின் மொத்தச் சொத்துக்கள் 155.6 பில்லியன் ரூபாயிலிருந்து 184.8 பில்லியன் ரூபாயாக 19% வளர்ச்சியைக் கண்டுள்ளது. தேறிய கடன் பிரிவு 36% இனால் உயர்ந்து ரூ. 110.8 பில்லியனாக பதிவாகியிருந்தது. கடந்த ஆண்டில் வங்கி பதிவு செய்திருந்த முன்னேற்றகரமான போக்கை பேணியிருந்தது.

யூனியன் வங்கி குழுமமானது, UB பினான்ஸ் பிஎல்சி மற்றும் நஷனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளது.

படங்கள்;
தினேஷ் வீரக்கொடி, தவிசாளர், யூனியன் வங்கி
தில்ஷான் ரொட்ரிகோ, பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி, யூனியன் வங்கி

2025 முதல் 9 மாத காலப்பகுதியில் யூனியன் வங்கி ரூ. 1.2 பில். வரிக்கு முந்திய இலாபமாக பதிவு

2025 முதல் 9 மாத காலப்பகுதியில் யூனியன் வங்கி ரூ. 1.2 பில். வரிக்கு முந்திய இலாபமாக பதிவு

2025 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில், யூனியன் வங்கி சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளது. அதனூடாக, இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் தனியார் வணிக வங்கிகளில் ஒன்று எனும் தனது நிலையை மீள உறுதி செய்துள்ளது. வங்கியின வரிக்கு முந்திய இலாபம் ரூ. 1,178 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 52% உயர்வாகும். வரிக்கு பிந்திய இலாபம் 194% இனால் உயர்ந்து, ரூ. 343 மில்லியனாக பதிவாகியிருந்தது. அதனூடாக, வங்கியின் வெற்றிகரமான மூலோபாய நிறைவேற்றல் மற்றும் கடுமையான நிதிசார் முகாமைத்துவம் ஆகியன வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

வங்கியின் திரண்ட வருமானம் 7% இனால் உயர்ந்து ரூ. 13,199 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதனூடாக தொடர்ச்சியான வியாபார விரிவாக்கம் மற்றும் பிரதான மற்றும் பிரதானமற்ற செயற்பாடுகளினூடாக மேம்படுத்தப்பட்ட வருமதிகளும் பிரதிபலிக்கப்பட்டிருந்தன. தேறிய வட்டி வருமானம் (NII) 11% எனும் ஆரோக்கியமான வளர்ச்சியை எய்தி ரூ. 3,981 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில், உறுதியான கடன் வளர்ச்சி மற்றும் வினைத்திறனான எல்லை முகாமைத்துவம் போன்றன முக்கிய பங்காற்றியிருந்தன. இந்த பெறுபேறுகளுக்கு மேலும் வலுச் சேர்த்திடும் வகையில், தேறிய கட்டண மற்றும் தரகு வருமானமும் உயர்ந்த 39% வளர்ச்சியை பதிந்து, ரூ. 1,133 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில் உயர்ந்த பரிவர்த்தனை எண்ணிக்கைகள், டிஜிட்டல் நாளிகை பயன்பாடுகள் மற்றும் வர்த்தகத்துடன் தொடர்புடைய சேவைகள் போன்றன பங்களிப்பு வழங்கியிருந்தன. இதன் விளைவாக, தேறிய தொழிற்பாட்டு வருமானம் 19% இனால் உயர்ந்து ரூ. 5,705 மில்லியனாக பதிவாகியிருந்தது.

தொழிற்பாட்டு செயற்பாடுகளினூடாக யூனியன் வங்கியின் பெறுபேறுகள் பெருமளவு முன்னேற்றத்தை பதிவு செய்திருந்தது. டிஜிட்டல் உட்கட்டமைப்புகள் மற்றும் திறன் விருத்தி போன்றவற்றில் தொடர்ச்சியான முதலீடுகளின் பிரதிபலிப்புடன், தொழிற்பாட்டு செலவீனங்களில் 14% வளர்ச்சி காணப்பட்ட போதிலும், வருமதிகள் 41% இனால் உயர்ந்து ரூ. 1,106 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதனூடாக, மேம்படுத்தப்பட்ட தொழிற்பாட்டு வினைத்திறன் மற்றும் வருமதிகளின் தரம் போன்றன வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை, தொழிற்படா கடன் (NPL) விகிதம் உறுதியான நிலையில் பேணப்பட்டிருந்தது. அதனூடாக, வங்கியின் உறுதியான கடன் இடர் முகாமைத்துவ கட்டமைப்பு மற்றும் தயார்ப்படுத்தலுடனான பிரிவு மேற்பார்வை போன்றன பிரதிபலிக்கப்பட்டிருந்தன. சவால்கள் நிறைந்த தொழிற்பாட்டு சூழலிலும் உயர்ந்த சொத்துத் தரத்தை பேணுவதை உறுதி செய்திருந்தது. வங்கியின் மூலதன போதுமை விகிதங்கள் ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுக்கு உட்பட்டதாக அமைந்திருந்தன. அதனூடாக, வங்கியின் கடுமையான இடர் மற்றும் மூலதன முகாமைத்துவ செயன்முறைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. வங்கி Tier II Basel III இற்கமைவான கடன்பத்திரங்கள் வழங்கலினூடாக ரூ. 3 பில்லியனை திரட்டுவதற்கு வங்கி எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளது. அதனூடாக, வங்கி தனது மூலதன இருப்பையும், எதிர்கால வியாபார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளது.

2025 செப்டெம்பர் 30 ஆம் திகதியன்று, வங்கியின் மொத்த சொத்துகள் 17% இனால் அதிகரித்து ரூ. 171,864 மில்லியனாக பதிவாகியிருந்தது. அதனூடாக, உறுதியான ஐந்தொகை விரிவாக்கம் பிரதிபலிக்கப்பட்டிருந்தது. கடன்கள் மற்றும் முற்பணங்கள் 32% இனால் உயர்ந்து ரூ. 107,592 மில்லியனாக பதிவாகியிருந்தது. அதனூடாக, யூனியன் வங்கி தனது கடன் வழங்கல் பிரிவை உறுதி செய்திருந்ததுடன், வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிப்பதையும் உறுதி செய்துள்ளது. அதேவேளை, வாடிக்கையாளர் வைப்புகள் 8% இனால் உயர்ந்து ரூ. 111,895 மில்லியனாக உயர்ந்திருந்தது. அதனூடாக, வாடிக்கையாளர் நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டிருந்ததுடன், சந்தைப்பிரிவுகளில் ஆழமான உறவுகள் பேணப்படுவதும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. குழுமத்தின் மொத்த சொத்துகளின் பெறுமதி 18% இனால் உயர்ந்து ரூ. 182,946 மில்லியனாக பதிவாகியிருந்தது.

பிரதான தொழிற்பாட்டு சிறப்பம்சத்தில், வங்கியின் தயாரிப்பு பிரிவின் விரிவாக்கம் அடங்கியிருந்தது. குறிப்பாக சிறுவர்கள் பிரிவில் Junior Elite, பெண் தொழில்முயற்சியாளர்கள் பிரிவில் Power HER மற்றும் தங்க நகை அடைமான சேவைக்கு மேலதிகமாக, தங்கக் கடன் சேவை அறிமுகம் போன்றன இதில் அடங்கியுள்ளன. வங்கி தனது BizDirect பண முகாமைத்துவ தீர்வினூடாக சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை வியாபாரத்தை மேம்படுத்த பயன்படுத்தியிருந்ததுடன், கூட்டாண்மை வங்கியியல் பிரிவினால் வாடிக்கையாளர் இலாபகரத்தன்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. தனது டிஜிட்டல் நிகழ்ச்சிநிரலில் முன்னேற்றச் செயற்பாடாக, வங்கி தனது பிரதான வங்கியியல் உட்கட்டமைப்பையும் மொபைல் app ஐயும் மேம்படுத்தியிருந்ததுடன், PCI-DSS சான்றிதழை மீள உறுதி செய்திருந்தது. மேலும், டிஜிட்டல் கொடுப்பனவு தீர்வுகளை மேம்படுத்துவதற்காக Mastercard உடன் கைகோர்த்திருந்தது.

பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் ரொட்ரிகோ கருத்துத் தெரிவிக்கையில், “2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் யூனியன் வங்கியின் அதிசிறந்த பெறுபேறுகள் என்பது, வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தல் ஆகியவற்றில் எமது ஒப்பற்ற அர்ப்பணிப்புக்கான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. தொழில்னுட்பம், புத்தாக்கம் மற்றும் உறுதியான ஆளுகை ஆகியவற்றை பின்பற்றி, நிலைபேறான பெறுமதியை ஏற்படுத்திக் கொடுப்பதில் நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்துகிறோம். இலாபகரத்தன்மை மற்றும் ஐந்தொகை ஆகியவற்றில் பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதனூடாக, எமது ஒழுக்கமான மூலோபாயம், எமது அணியினரின் ஆற்றல் மற்றும் எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்கள் எம் மீது கொண்டுள்ள நம்பிக்கை போன்றன பிரதிபலிக்கப்பட்டுள்ளன.” என்றார்.

தவிசாளர் தினேஷ் வீரக்கொடி தெரிவிக்கையில், “யூனியன் வங்கியின் தொடர்ச்சியான மாற்றியமைப்பு பயணத்தின் முன்னேற்றத்தை இந்தப் பெறுபேறுகள் வெளிப்படுத்துவதுடன், மூலோபாய முன்னுரிமைகளை ஒழுக்கமான முறையில் நிறைவேற்றுவதையும் காண்பிக்கிறது. உற்பத்தித்திறன் வாய்ந்த, தொழில்னுட்ப ரீதியில் செயற்படுத்தப்பட்ட மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய நிறுவனத்தை கட்டியெழுப்பி, தொடர்ச்சியாக வாடிக்கையாளர்கள், பங்காளர்கள் மற்றும் பரந்த பொருளாதாரத்துக்கு பெறுமதியை ஏற்படுத்திக் கொடுப்பதில் நாம் பிரதானமாக கவனம் செலுத்துகிறோம். இலங்கையின் நிதித் துறையில் யூனியன் வங்கியின் நிலையை மேலும் வலிமைப்படுத்தும், நிலைபேறான வளர்ச்சியில் மற்றும் மூலோபாய பங்காண்மைகளில் நாம் கவனம் செலுத்துவோம்.” என்றார்.

யூனியன் வங்கி 2025 முதல் அரையாண்டில் வரிக்கு முந்திய இலாபமாக ரூ. 834 மில்லியனை பதிவு செய்துள்ளது

யூனியன் வங்கி 2025 முதல் அரையாண்டில் வரிக்கு முந்திய இலாபமாக ரூ. 834 மில்லியனை பதிவு செய்துள்ளது

2025 ஜுன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த, நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் யூனியன் வங்கி, வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 251 மில்லியனை பதிவு செய்துள்ளதாகவும், இது 2024ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 247% அதிகரிப்பாக அமைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. வங்கியின் ஐந்தொகையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கம் மற்றும் மூலோபாய ரீதியான செயற்பாட்டு மேம்படுத்தல்கள் போன்றவற்றினூடாக இந்த துரித வளர்ச்சியை எய்த முடிந்திருந்தது.

வரிக்கு முந்திய இலாபம் 58% இனால் அதிகரித்து ரூ. 834 மில்லியனாக பதிவாகியிருந்தது. பிரதான வங்கிச் செயற்பாடுகள் மற்றும் துணை நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட உயர்ந்த பங்களிப்புகள் போன்றவற்றை பிரதிபலிப்பதாக இது அமைந்திருந்தது.

லீசிங் மற்றும் அடகுச் சேவைகள் பிரிவுகளில் வளர்ச்சி மூலோபாயங்கள் பின்பற்றப்பட்டிருந்ததனூடாக, இக்காலப்பகுதியில் வங்கியின் தேறிய கடன்கள் மற்றும் முற்பணங்கள் ரூ. 100 பில்லியனை விட அதிகரித்திருந்தது. இதுவரையில் 24% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. விரிவாக்கம் வருமான வளர்ச்சியினூடாக நேரடியாக ஆதரவளிக்கப்பட்டிருந்ததுடன், உயர் கடன் அளவுகள் மற்றும் வர்த்தகச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் போன்றவற்றினூடாக ஆதரவளிக்கப்பட்டிருந்தது. அதனூடாக தேறிய கட்டண மற்றும் தரகு வருமானத்தில் 25% அதிகரிப்பையும் பதிவு செய்திருந்தது.

யூனியன் வங்கி தேறிய மதிப்பிறக்க மீளத்திருப்பல் பெறுமதியாக ரூ. 23 மில்லியனை பதிவு செய்திருந்தது. மேம்படுத்தப்பட்ட கடன் தரம் மற்றும் வசூலிப்பு முயற்சிகள் இதில் பங்களிப்புச் செய்திருந்தன. வியாபார வளர்ச்சியுடன் தொழிற்பாட்டு செலவுகள் அதிகரித்திருந்ததுடன், மூலோபாய செயற்பாடுகளில் தொடர்ச்சியான முதலீடுகளினால் மொத்த தொழிற்பாட்டு வருமானம் 8% இனால் அதிகரித்திருந்தது. இதில் வட்டி-சாரா வருமானம் மற்றும் செயற்பாட்டு வினைத்திறன் ஆகியன பங்களிப்புச் செய்திருந்தன. வாடிக்கையாளர் வைப்புகள் ரூ. 108 பில்லியனை எய்தியிருந்தன. அதில் உயர் CASA விகிதமான 28.3% பங்களிப்புச் செய்திருந்தன. அதனூடாக மேம்படுத்தப்பட்ட வைப்புக் கலவை பதிவாகியிருந்தது. வங்கி உறுதியான மூலதன போதுமை மட்டங்களை பேணியிருந்ததுடன், மொத்த மூலதன போதுமை விகிதமாக (CAR) 13.65% ஐயும் Tier I CAR ஆக 12.64% ஐயும் கொண்டிருந்தது. இது ஒழுங்குபடுத்தல் வரம்புகளை விட உயர்ந்த நிலைகளில் பேணப்பட்டிருந்தன.

குழுமத்தின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 171 பில்லியனாக உயர்வடைந்து, வங்கியின் உறுதியான நிதிசார் அடித்தளம் மற்றும் வளர்ச்சிப் பாதையை வெளிப்படுத்தியிருந்தது.

இக்காலப்பகுதியில் பிரதான செயற்பாட்டு விசேட அம்சங்களில், யூனியன் வங்கி Turbo Draft அறிமுகம் அமைந்திருந்தது. வாகன உரிமையாளர்களுக்கு துரிதமான மற்றும் சௌகரியமான தொழிற்படு மூலதன தீர்வை வழங்குவதாக இருந்ததுடன், கொஹுவல பகுதியில் புதிய லீசிங் மையமொன்றை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதனூடாக, லீசிங் வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான நிதிசார் தீர்வுகளை அணுகும் வாய்ப்பு மேம்படுத்தப்பட்டிருந்தது. வங்கியினால் அதன் தலைமையகத்தில் “Trade Connect” எனும் நிலையம், வர்த்தக சேவைகளுக்காக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கைகளினூடாக, தனிநபர் மற்றும் வியாபார வாடிக்கையாளர்களுக்கான வங்கியின் பெறுமதி மேம்படுத்தப்பட்டிருந்தது.

யூனியன் வங்கியின் தவிசாளர் தினேஷ் வீரக்கொடி குறிப்பிடுகையில், அண்மைக் காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாற்றியமைப்பு செயற்பாடுகளின் வினைத்திறன் மற்றும் வங்கியின் மீட்சித்தன்மை ஆகியவற்றை பிரதிபலிப்பதாக வங்கியின் நிதிப் பெறுபேறுகள் அமைந்துள்ளன. தமது வாடிக்கையாளர் இருப்பை விரிவாக்கம் செய்து நிலைபேறான வளர்ச்சியை நோக்கி பயணிப்பதற்கு வங்கி உறுதியாக கவனம் செலுத்துகிறது என்றார்.

“2025 முதல் அரையாண்டில் நாம் பதிவு செய்துள்ள நிதிப் பெறுபேறுகளினூடாக, எமது வியாபாரத்தின் நேர்த்தியான போக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு ஆதரவளிக்கும் வகையில் நிலைபேறான ஐந்தொகை வளர்ச்சி மற்றும் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் முகாமைத்துவத்தில் காண்பித்திருந்த ஒழுக்கமான வழிமுறைகள் அமைந்திருந்தன. டிஜிட்டல் வங்கியியலினூடாக பெறுமதியை ஏற்படுத்துவதிலும், வாடிக்கையாளர்களை மையப்படுத்திய தீர்வுகளில் எமது நோக்கிற்கு ஆதரவளிப்பதற்கான வியாபார செயன்முறை மீள-பொறியமைப்பு போன்றவற்றில் மூலதன செம்மையாக்கம் பிரதான பங்களிப்பை வழங்கியிருந்தது.” என யூனியன் வங்கியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் ரொட்ரிகோ தெரிவித்தார்.

2023 நிதியாண்டில் யூனியன் வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு

2023 நிதியாண்டில் யூனியன் வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு

2023 ஆம் ஆண்டு யூனியன் வங்கிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடமாக அமைந்திருந்ததுடன், வங்கியின் பெரும்பாண்மை பங்குகளை CG Capital Partners Pte. Ltd. தனது துணை நிறுவனமான Culture Financial Holdings Ltd. ஊடாக கையகப்படுத்தியிருந்தது. CG Corp Global (CG) எனும் சர்வதேச நிறுவனத்தின் அங்கமாக CG Capital Partners Pte. Ltd. திகழ்கின்றது.

2023 நிதியாண்டில் நிலவிய மேம்படுத்தப்பட்ட பெரும்பொருளாதார சூழல், வியாபித்திருந்த நிதிசார் கட்டமைப்பில் சிறப்பாக இயங்குவதற்கு யூனியன் வங்கிக்கு வழியமைத்திருந்தது. 2023 நிதியாண்டில் வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்ததுடன், நிகர வருமானத்தில் 18% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. ஆண்டின் நிகர வருமானம் ரூ. 22,410 மில்லியனாக பதிவாகியிருந்தது.

கடன்கள் மற்றும் திறைசேரி சொத்துக்களிலிருந்து கிடைத்த முன்னேற்றகரமான விளைவுகளின் பெறுபேறாக, வருமானத்தில் பிரதான பங்காக தேறிய வட்டி வருமானம் (NII), 8% இனால் அதிகரித்து ரூ. 6,290 மில்லியனாக பதிவாகியிருந்தது. சொத்துக்கள் புத்தக மீள் விலையிடல் மற்றும் வட்டி செலவுகளை கவனமாக நிர்வகித்திருந்தமை போன்றவற்றினூடாக, தேறிய வட்டி எல்லைப் பெறுமதி 4.7% ஆக பதிவாகியிருந்தது. தேறிய கட்டண மற்றும் தரகு வருமானம் 5% இனால் அதிகரித்து ரூ. 1,200 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில் வியாபார செயற்பாடுகள், கடன் அட்டைகள் மற்றும் பாங்கசூரன்ஸ் (Bancassurance) கட்டணங்கள் போன்றன பங்களிப்பு செய்திருந்தன. மதிப்பிறக்கத்துக்கு முன்னதான வங்கியின் தொழிற்பாட்டு வருமானம் ரூ. 8,098 மில்லியனாக காணப்பட்டது. இது 4% அதிகரிப்பாகும். இக்காலப்பகுதிக்கான மதிப்பிறக்க கட்டணம் ரூ. 1,643 மில்லியனாகும். கவனமான செலவு முகாமைத்துவ செயற்பாடுகளுக்கு மத்தியிலும், வங்கியின் மொத்த தொழிற்பாட்டு செலவீனங்கள் 20% இனால் அதிகரித்து ரூ. 5,120 மில்லியனாக பதிவாகியிருந்தது. பண வீக்கத்தினால், கட்டணப் பட்டியல் விலைகள் அதிகரிப்பு மற்றும் பொது செலவுகள் அதிகரிப்பு போன்றன இதில் தாக்கம் செலுத்தியிருந்தன.

2023 டிசம்பர் 31 ஆம் திகதியன்று, துணை நிறுவனங்களின் பங்குகள் அடங்கலாக, வங்கியின் வரிக்கு முன்னைய இலாபம் (PBT) 119% இனால் அதிகரித்து ரூ. 780 மில்லியனாக பதிவாகியிருந்தது. வரிக்கு பிந்திய இலாபம் (PAT) 21% இனால் அதிகரித்து ரூ. 379 மில்லியனாக காணப்பட்டது. வருடத்தில் வரிகள் மற்றும் கட்டணங்கள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருந்தன. குறிப்பாக நிதிச் சேவைகள் மீதான சமூக பாதுகாப்பு வரி (SSCL) மற்றும் பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் கூட்டாண்மை வரி வீதங்கள் போன்றன அதிகரித்திருந்தமை இதில் தாக்கம் செலுத்தியிருந்தன.

வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 139,087 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7% வளர்ச்சியாகும். மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வங்கி உறுதியான திரள்வு நிலையை பேணியிருந்ததுடன், திரள்வு சொத்து விகிதம் 37.93% ஆக காணப்பட்டதுடன், சகல நாணயங்களுக்குமான திரள்வு வலையமைப்பு விகிதம் 787.67% ஆக காணப்பட்டது. இது ஒழுங்குபடுத்தல் தேவைப்பாட்டை விட உயர்வானதாகும்.

வங்கியின் கடன்கள் மற்றும் முற்பணங்கள் ரூ. 62,208 மில்லியனாக காணப்பட்டதுடன், வாடிக்கையாளர் வைப்புகள் ரூ. 87,985 மில்லியனாக அமைந்திருந்தது. சகல வியாபார பிரிவுகளிலும் உறுதியான செயற்பாடுகளின் ஆதரவுடன், வங்கியின் CASA விகிதம் 27% ஆக பதிவாகியிருந்தது. வியாபார பிரிவுகளில் CASA நோக்குடனான செயற்பாடுகளினூடாக CASA பிரிவில் 8% அதிகரிப்பு பதிவாகியிருந்தது.

வங்கியின் நிலை 3 கடன்கள் விகிதம் என்பது 12.5% ஆக காணப்பட்டதுடன், சில பாரிய கடன்படுனர்கள் செயற்படா நிலைக்கு (நிலை 3) தள்ளப்பட்டதன் காரணமாக மேற்படி விகிதம் அதிகரித்தது. வங்கி உறுதியான மூலதன போதுமை நிலையை பேணியிருந்ததுடன், ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை விட உயர்வாக கொண்டிருந்தது. 2023 டிசம்பர் 31 ஆம் திகதியன்று வங்கியின் மொத்த மூலதன விகிதம் 18.2% ஆக காணப்பட்டது.

யூனியன் வங்கி குழுமத்தில் UB Finance PLC மற்றும் National Asset Management Ltd.ஆகியன அடங்கியுள்ளன. இவையும் முன்னேற்றகரமான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்தன. வரிக்கு முந்திய இலாபத்தில் 72% உயர்வை பதிவு செய்து, ரூ. 901 மில்லியனை எய்தியிருந்தது. அது போன்று வரிக்கு பிந்திய இலாபம் 10% உயர்ந்து ரூ. 464 மில்லியனாக பதிவாகியிருந்தது. குழுமத்தின் மொத்த சொத்துகளின் பெறுமதி ரூ. 147,332 மில்லியனாக காணப்பட்டது. இதில் வங்கியின் பங்கு 94% க்கு அதிகமாக அமைந்திருந்தது.

திரவத் தன்மையான தொழிற்பாட்டு சூழலில் கூட்டாண்மை வங்கியியல் பிரிவை பேணி, கூட்டாண்மை வங்கியியல் அதன் கடன் வழங்கல் மூலோபாயங்களை மீளமைத்திருந்தது. அதனூடாக கடன் தரத்தை பேண முடிந்திருந்தது. யூனியன் வங்கி BizDirect பண முகாமைத்துவ தீர்வைக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு உயர் தரமான உறவு பேண் முகாமைத்துவத்தை வழங்க முடிந்தது. திறைசேரி பிரிவினால், மீள்முதலீட்டு இடர்கள் முறையாக நிர்வகிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக ஆண்டின் இரண்டாம் பாதியில், வட்டி வீதங்களில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததுடன், அரசாங்க முறிகளின் மீது மற்றும் வங்கியின் வெளிநாட்டு நாணய திரள்வு நிலை மீதான வருமானங்களை அதிகரித்துக் கொள்ளும் வகையில் செயலாற்றியிருந்தது. இதனூடாக வங்கியின் தேறிய திறந்த நிலை (NOP) ஒழுங்குபடுத்தல் எல்லையினுள் காணப்பட்டது.

சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் வங்கி வாடிக்கையாளர் மறுசீரமைப்பில் கவனம் செலுத்தி, பொருளாதார மந்தத்தினால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. அத்துடன், தேயிலை சிறு தோட்டச் செய்கையாளர்கள், சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை வியாபாரங்கள் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்களில் கவனம் செலுத்தி SME line of Credit (SMELoC) ஊடாக நிதி வசதிகளையும், ஆலோசனை சேவைகளையும் வழங்கியிருந்தது. பெண்களில் கவனம் செலுத்தும் நிதிச் சேவைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், USAID அமைப்பின் CATALYZE தனியார் துறை அபிவிருத்தி செயற்பாட்டுடன் வங்கி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தது. பொருளாதார தாக்கங்களின் காரணமாக, நுகர்வோர் வங்கியியல் செயற்பாடுகள் தெரிவு செய்யப்பட்ட கடன் வழங்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன், சேமிப்பு ஊக்குவிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. CASA ஐ திரட்டும் வகையில் நிறுவனசார் நாளிகை மற்றும் முகவர் வங்கியியல் வலையமைப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

2023 ஆம் ஆண்டில் வங்கி தனது ஒட்டுமொத்த டிஜிட்டல் வங்கியியல் அனுபவம் மற்றும் IT உட்கட்டமைப்பை மேலும் வலிமைப்படுத்தியிருந்தது. பிந்திய cloud அடிப்படையிலான மென்பொருளை நிறுவி, புதிய மெய்நிகர் கட்டமைப்பை ஸ்தாபித்து, வங்கியின் டிஜிட்டல் விரிவாக்க செயற்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

தொடர்ச்சியாக 12 ஆவது வருடமாகவும், இலங்கையின் சிறந்த 100 வர்த்தக நாமங்கள் வரிசையில் யூனியன் வங்கி தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், LMD இன் நன் மதிப்பைப் பெற்ற நிறுவனங்கள் 2023 வரிசையிலும் உள்வாங்கப்பட்டிருந்தது. Satyn-CIMA பெண்களுக்கு நட்பான பணியிட விருதுகள் வழங்கலில் பெண்களுக்கு நட்பான பணியிடமாக யூனியன் வங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.

படங்கள்:
நிர்வாணா சௌத்ரி, தவிசாளர், யூனியன் வங்கி
இந்திரஜித் விக்ரமசிங்க, பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி, யூனியன் வங்கி

யூனியன் வங்கி நடப்பு ஆண்டின் முதல் 9 மாதங்களில் உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது

யூனியன் வங்கி நடப்பு ஆண்டின் முதல் 9 மாதங்களில் உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது

2023 செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த நடப்பு ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில், யூனியன் வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது. வங்கியின் பிரதான வங்கியியல் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றகரமான நிலை பதிவாகியிருந்ததுடன், ஒட்டுமொத்த வருமானம் ரூ. 17,314 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது ஒப்பீட்டளவில் 36% உயர்வாகும்.

வங்கியின் வருமானத்தில் தேறிய வட்டி வருமானம் (NII) பிரதான பங்களிப்பை வழங்கியிருந்ததுடன், இந்தப் பெறுமதி 19% இனால் அதிகரித்து ரூ. 4822 மில்லியனாக பதிவாகியிருந்தது. கடன் பிரிவுகள் மற்றும் திறைசேரி சொத்துகள் ஆகியவற்றினால் கிடைத்திருந்த விளைவுகளின் அடிப்படையில் இந்தப் பெறுமதி உயர்வடைந்திருந்தது. சர்வதேச இறையாண்மை கடனீட்டு (ISBs) பத்திரங்களை வங்கி கொண்டிருப்பதில்லை என்பதுடன், இலங்கை அபிவிருத்தி கடனீட்டு (SLDB’s) பத்திரங்கள் DDO இன் பங்கின் அடிப்படையில் திறைசேரி கடனீட்டு பத்திரங்களுக்காக இலங்கை ரூபாய்க்கு பரிமாற்றப்பட்டிருந்தது. தேறிய வட்டி எல்லைப் (NIM) பெறுமதி 72 bps ஆல் அதிகரித்திருந்தது. இதில் சொத்துக்கள் புத்தகத்தின் மீள்விலையிடல் மற்றும் வட்டி செலவீனங்களின் முறையான முகாமைத்துவம் ஆகியன பங்களிப்பு வழங்கியிருந்தன.

தேறிய கட்டண மற்றும் தரகு வருமானம் 9% இனால் அதிகரித்திருந்தது. இதில் கடன் அட்டைகள், வெளிநாட்டு பண அனுப்புகைகள் மற்றும் வியாபார வர்த்தகங்களில் அதிகரித்த செயற்பாடுகள் போன்றன பங்களிப்புச் செய்திருந்தன. மதிப்பிறக்கங்களுக்கு முன்னரான வங்கியின் மொத்த தொழிற்பாட்டு வருமானம் ரூ. 6,185 மில்லியனாக காணப்பட்டது. இது 11% அதிகரிப்பாகும். காலப்பகுதிக்கான வங்கியின் மதிப்பிறக்க கட்டணம் ரூ. 1,200 மில்லியனாக காணப்பட்டது. முறையான செலவு நிர்வாக செயற்பாடுகள் காணப்பட்ட போதிலும், வங்கியின் மொத்த தொழிற்பாட்டு செலவுகள் 22% இனால் அதிகரித்து ரூ. 3,838 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில், கட்டணப் பட்டியல் கட்டணங்கள், சம்பளங்கள் மற்றும் பரிமாற்றங்கள் தாக்கங்களின் அடிப்படையிலான பொது செலவுகள் போன்றன பங்களிப்புச் செய்திருந்தன.

அதனைத் தொடர்ந்து, 2023 செப்டெம்பர் 30 ஆம் திகதியன்று, துணை நிறுவனங்களின் மீது கொண்டுள்ள பங்குகள் உள்ளடங்கலாக, வங்கியின் வரிக்கு முன்னரான இலாபம் (PBT) 81% இனால் அதிகரித்து ரூ. 717 மில்லியனாக பதிவாகியிருந்தது. வங்கியின் வரிக்கு பிந்திய இலாபம் (PAT) 65% இனால் அதிகரித்து ரூ. 375 மில்லியனாக பதிவாகியிருந்தது. முதல் 9 மாதங்களில் வரிகள் மற்றும் கட்டணங்கள் போன்றன பெருமளவு அதிகரித்திருந்தன. இதில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) மற்றும் கூட்டாண்மை வரி வீதத்தில் அதிகரிப்பு போன்றன பங்களிப்பு வழங்கியிருந்தன.

2023 செப்டெம்பர் 30 ஆம் திகதியன்று, வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 130,319 மில்லியனாக பதிவாகியிருந்தது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வங்கி உறுதியான திரள்வு நிலையை பேணியிருந்ததுடன், திரள்வு சொத்து விகிதம் 39.16% ஆக பதிவாகியிருந்தது. திரள்வு காப்பீட்டு விகிதம் 878% ஆக காணப்பட்டது. இது ஒழுங்குபடுத்தல் தேவைப்பாட்டை விட உயர்வானதாக அமைந்துள்ளது. வங்கியின் கடன்கள் மற்றும் முற்பணங்கள் ஆகியன ரூ. 63,204 மில்லியனாக காணப்பட்டது. வாடிக்கையாளர் வைப்புகள் ரூ. 85,798 மில்லியனாக பதிவாகியிருந்தது. 2023 செப்டெம்பர் 30 ஆம் திகதி CASA விகிதம் 24.33% ஆக காணப்பட்டது. சகல பிரிவுகளிலும் உறுதியான பாரிய-பொருளாதார செயற்பாடுகளின் அங்கமாக அமைந்துள்ளது. வங்கியின் நிலை 3 கடன் விகிதம் 10.52% ஆக அதிகரித்திருந்தது.

வங்கி தொடர்ந்தும் ஆரோக்கியமான மூலதன போதுமை விகித நிலையை பேணியிருந்தது. இது ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை விட உயர்ந்த பெறுமதி என்பதுடன், வங்கியின் மொத்த மூலதன விகிதம் 2023 செப்டெம்பர் 30ஆம் திகதியன்று 18.54% ஆக காணப்பட்டது.

UB ஃபினான்ஸ் கம்பனி லிமிடெட் மற்றும் நஷனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிடெட் ஆகியவற்றைக் கொண்ட யூனியன் வங்கி குழுமம், ஒட்டுமொத்த சிறந்த வினைத்திறனை பதிவு செய்திருந்தது. வரிக்கு முந்திய இலாபம் 57% இனால் அதிகரித்து ரூ. 825 மில்லியனாக பதிவாகியிருந்தது. வரிக்கு பிந்திய இலாபம் 52% இனால் அதிகரித்து ரூ. 459 மில்லியனாக பதிவாகியிருந்தது. குழுமத்தின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 138,519 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில் வங்கியின் பங்கு 94% ஐ விட உயர்வாக பதிவாகியிருந்தது.

மீளாய்வுக்குட்படுத்திய காலப்பகுதியில், புதிய வியாபார அம்சங்களில் வங்கி கவனம் செலுத்தியிருந்ததுடன், சகல வியாபார பிரிவுகளிலும் பல்வேறு வாடிக்கையாளர் கையகப்படுத்தல் நிகழ்ச்சிகளை ஆரம்பித்திருந்தது. சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மைக்கான ஆதரவை வங்கி தொடர்ந்திருந்தது. SME line of Credit (SMELoC) மற்றும் தேயில சிறு தோட்டச் செய்கையாளர்களுக்கான, தெங்கு வளர்ப்பாளர்கள் மற்றும் பெண் தொழில்முயற்சியாளர்கள் போன்றவற்றுக்கான ஆலோசனை போன்றவற்றை இதில் கொண்டுள்ளது. யூனியன் வங்கி கடன் அட்டைகள் தொடர்ந்தும் கவர்ச்சிகரமான சேமிப்பை வழங்கியிருந்ததுடன், அட்டைதாரர்களுக்கு சிறந்த நிதி திட்டமிடலை வழங்குவதற்காக 0% கொடுப்பனவு திட்டங்களையும் வழங்கியிருந்தது. LMD இன் நன் மதிப்பை பெற்ற நிறுவனங்கள் 2023 வரிசையில் வங்கி மீண்டும் தரப்படுத்தப்பட்டிருந்தது. ஃபிட்ச் ஸ்ரீ லங்கா யூனியன் வங்கியின் தரப்படுத்தலை BBB-(lka) ஆக உறுதி செய்திருந்தது. வழங்கியிருந்த Rating Watch Negative என்பதை அகற்றியிருந்தது.

2023 ஒக்டோபர் 24ஆம் திகதியன்று, வங்கியின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களுக்கு TPG மற்றும் CG கெப்பிட்டல் பார்ட்னர்ஸ் குளோபல் Pte Ltd இடமிருந்து முறையான அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம், Culture Financial Holdings இல் கொண்டுள்ள உரிமையாண்மையினூடாக CG கெப்பிட்டல் பார்ட்னர்ஸ் தற்போது யூனியன் வங்கியின் பிரதான பங்காளராக திகழ்கின்றது. CG குழுமத்துடன் புதிய பங்காண்மையினூடாக வங்கியின் நிதிசார் ஸ்திரத்தன்மை மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மேம்படுத்தப்பட்ட வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்துக்கான கட்டமைப்பையும் வழங்கும்.

படங்கள்:
ட்ரெவின் பெர்னான்டோபுள்ளே, இடைக்கால தவிசாளர், யூனியன் வங்கி
இந்திரஜித் விக்ரமசிங்க, பணிப்பாளர் /பிரதம நிறைவேற்று அதிகாரி, யூனியன் வங்கி

2023 இன் முதல் அரையாண்டில் யூனியன் வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது

2023 இன் முதல் அரையாண்டில் யூனியன் வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது

ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பில் முன்னேற்றங்களை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக, பணவீக்க வளர்ச்சி படிப்படியாக குறைவடைந்ததையும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான அறிவித்தல் வெளியாகியிருந்தமை போன்றன இதில் தாக்கம் செலுத்தியிருந்தன.

நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில், யூனியன் வங்கி அதன் பிரதான வங்கி வினைத்திறனில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை பதிவு செய்திருந்ததுடன், ஒட்டுமொத்த வருமானமாக ரூ. 11,729 மில்லியனை பதிவு செய்திருந்தது. ஒப்பீட்டளவில் இந்தப் பெறுமதி 58% அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கியின் வருமானத்தில் அதிகரிப்பு பதிவாகியிருந்தமையில், தேறிய வட்டி வருமானம் (NII) அதிகரித்திருந்தமை பங்களிப்புச் செய்திருந்தது. இப்பெறுமதி 24% இனால் அதிகரித்து ரூ. 3,118 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில், கடன் பிரிவு மற்றும் திறைசேரி சொத்துக்களிலிருந்து கிடைத்திருந்த மேம்பட்ட வருமதிகள் பங்களிப்புச் செலுத்தியிருந்தன. திறைசேரியில் GSEC மூலதன வருமதிகள் மற்றும் அந்நியச் செலாவணி இலாபகரத்தன்மை ஆகியவற்றிடமிருந்து பெருமளவு பங்களிப்புகள் கிடைத்திருந்தன. வங்கி எவ்விதமான சர்வதேச இறையாண்மை முறிகளை (ISBs) கொண்டிருக்கவில்லை என்பதுடன், வங்கியிடம் காணப்பட்ட இலங்கை அபிவிருத்தி முறிகள் (SLDB’s) முதிர்வடைந்திருந்ததுடன், வருமதிக்காக காத்திருக்கின்றன. தேறிய வட்டி எல்லைப் பெறுமதி (NIM) 82 புள்ளிகளால் அதிகரித்திருந்தது, உரிய காலப்பகுதியில் சொத்துக்கள் மீள்விலையிடல் மற்றும் வட்டிசார் செலவுகள் முறையாக நிர்வகிக்கப்பட்டிருந்தமை இதில் பங்களிப்புச் செய்திருந்தன.

தேசிய கட்டணம் மற்றும் தரகு வருமானம் 18% இனால் அதிகரித்திருந்தது. இதில் கடன் அட்டைகள், வெளிநாட்டு பண அனுப்புகைகள் மற்றும் வர்த்தக வியாபாரங்களின் அதிகரித்த செயற்பாடுகள் போன்றன பெருமளவில் பங்களிப்புச் செய்திருந்தன. ஒதுக்கங்களுக்கு முன்னரான வங்கியின் மொத்த தொழிற்பாட்டு வருமானம் ரூ. 4,029 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது 13% அதிகரிப்பாகும். ஒப்பீட்டு காலப்பகுதியில், வங்கியின் மதிப்பிறக்க கட்டணம் ரூ. 726 மில்லியனாக குறைந்திருந்தது. கடுமையான மீட்பு அறவீட்டு ஏற்பாடுகளினால் இந்தப் பெறுமதி பதிவாகியிருந்தது. கடுமையான செலவு நிர்வாக ஏற்பாடுகள் காணப்பட்ட போதிலும், வங்கியின் மொத்த செயற்பாட்டு செலவுகள் 21% இனால் அதிகரித்து ரூ. 2,496 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில், சம்பள அதிகரிப்புகள், மின்சாரம் சார்ந்த அதிகரிப்புகள் மற்றும் அந்நிய செலாவணி நட்டம் போன்றன பங்களிப்பு செய்திருந்தன.

மேலும், 2023, ஜுன் 30 ஆம் திகதியன்று, துணை நிறுவனங்கள் அடங்கலாக வங்கியின் வரிக்கு முந்திய இலாபம் (PBT) 76% இனால் அதிகரித்து ரூ. 533 மில்லியனாக பதிவாகியிருந்தது. வங்கியின் வரிக்கு பிந்திய இலாபமும் (PAT) குறிப்பிடத்தக்க வகையில் 94% இனால் அதிகரித்து ரூ. 295 மில்லியனாக பதிவாகியிருந்தது.

2023 ஜுன் 30 ஆம் திகதியன்று, வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 128,904 மில்லியனாக பதிவாகியிருந்தது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வங்கி உறுதியான திரள்வு நிலையை பேணியிருந்தது. வங்கியின் கடன்கள் மற்றும் முற்பணங்கள் ரூ. 62,446 மில்லியனாக பதிவாகியிருந்ததுடன், வாடிக்கையாளர்கள் வைப்புகள் ரூ. 88,907 மில்லியனாக பதிவாகியிருந்தது. CASA விகிதம் 2023 ஜுன் 30 ஆம் திகதியன்று 25.19% ஆக உயர்ந்திருந்தது. இதில் பெரும்-பொருளாதார ஏற்பாடுகளுடன், சகல வியாபார பிரிவுகளிலும் உறுதியான கொள்முதல் செயற்பாடுகள் போன்றன பங்களிப்புச் செய்திருந்தன. வங்கியின் நிலை 3 கடன் விகிதம் 10.5% ஆக காணப்பட்டது.

வங்கி தொடர்ந்தும் ஆரோக்கியமான மூலதன போதுமை விகித நிலையை பேணியிருந்தது. ஒழுங்குபடுத்தல் தேவைப்பாட்டை விட உயர்வாக காணப்பட்ட வங்கியின் மொத்த மூலதன விகிதிம் 2023 ஜுன் 30 ஆம் திகதியன்று 19.01% ஆக காணப்பட்டது.

UB ஃபினான்ஸ் கம்பனி லிமிடெட் மற்றும் நஷனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிடெட் ஆகியவற்றைக் கொண்ட யூனியன் வங்கிக் குழுமம், சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்தது. 2023 ஜுன் 30 ஆம் திகதியன்று, குழுமத்தின் வரிக்கு முந்திய இலாபம் 56% இனால் அதிகரித்து ரூ. 618 மில்லியனாக பதிவாகியிருந்ததுடன், வரிக்கு பிந்திய இலாபம் 77% இனால் அதிகரித்து ரூ. 364 மில்லியனாகவும் பதிவாகியிருந்தது. குழுமத்தின் மொத்த சொத்துக்கள் பெறுமதி ரூ. 136,991 மில்லியனாக பதிவாகியிருந்தது.

மீளாய்வுகுட்படுத்தப்பட்ட காலப்பகுதியில், வியாபார விரிவாக்கத்தை கவனத்தில் கொண்டு பல்வேறு வாடிக்கையாளர் கையகப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டங்களை வங்கி முன்னெடுத்திருந்தது. வங்கியின் மீள்நிதியளிப்புத் திட்டங்களினூடாக, சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை வங்கிப் பிரிவுக்கு, பெண் தொழில் முயற்சியாளர்கள் அடங்கலாக, பரந்தளவு வாடிக்கையாளர் பிரிவை சென்றடைய முடிந்தது. யூனியன் வங்கி கடன் அட்டைகள் பிரிவினாலும், பல்வேறு சேமிப்பு மற்றும் இதர சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. இதற்காக பரந்தளவு விற்பனை நிலையங்களுடன் கைகோர்ப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதில் சுப்பர்மார்க்கெட்கள், உணவகங்கள் மற்றும் சொப்பிங் நிலையங்கள் அடங்கியிருந்தன. 0% வட்டியில்லாத, நீடிக்கப்பட்ட மீளச் செலுத்தல் திட்டங்கள் கையாளல் கட்டணங்கள் எதுவுமின்றி, சுகாதாரத்துறை, கல்வி, வாகன பராமரிப்பு, விருந்தோம்பல் மற்றும் பிரயாணத் துறைகளில் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. யூனியன் வங்கி வர்த்தக நாமம் அதன் உயர்ந்த ஸ்தானத்தை தொடர்ந்தும் பேணியிருந்தது. 2023 பிரான்ட் ஃபினான்ஸ் தரப்படுத்தலின் பிரகாரம் இலங்கையின் 100 சிறந்தர வர்த்தக நாமங்களில் யூனியன் வங்கியும் இடம்பிடித்திருந்தது. பெண் முகாமையாளர்களை கட்டியெழுப்பியிருந்தமைக்காக Satyn CIMA பெண்களுக்கு நட்பான பணியிட விருதுகள் 2023 இல் வங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.

படங்கள்:
அத்துல் மலிக், தவிசாளர், யூனியன் வங்கி
இந்திரஜித் விக்ரமசிங்க, பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி, யூனியன் வங்கி

2023 முதல் காலாண்டில் யூனியன் வங்கி உறுதியான வருமான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது

2023 முதல் காலாண்டில் யூனியன் வங்கி உறுதியான வருமான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது

2023 முதல் காலாண்டில், இலங்கையின் பொருளாதார செயற்பாடுகளில் மீட்சியை அவதானிக்க முடிந்திருந்தது. குறிப்பாக, சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி (EFF) இலங்கைக்கு கிடைத்திருந்ததைத் தொடர்ந்து இந்த மீட்சியான போக்கை அவதானிக்க முடிந்தது. நாணயமாற்று வீதங்களில் இலங்கை ரூபாயின் பெறுமதி உயர்வு, பணவீக்கத்தில் குறைவான வளர்ச்சி, திறைசேரி உண்டியல் கட்டணங்களில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி மற்றும் தெரிவு செய்யப்பட்ட பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளில் தளர்வுகள் போன்ற செயற்பாடுகளினூடாக, வங்கித் துறைக்கு தமது வியாபார நோக்கத்தை மீளமைத்துக் கொள்ளக்கூடியதாக இருந்தது. பெருமளவு மூலதனவாக்கத்தினூடாக வங்கியியல் துறையின் உறுதித் தன்மையின் முக்கியத்துவத்தை சர்வதேச நாணய நிதியம் மீள வலியுறுத்தியிருந்த காலப்பகுதியில், யூனியன் வங்கி உறுதியான மூலதன இருப்புடன், ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை விட உயர்ந்த ஸ்தானத்தில் திகழ்ந்திருந்தது.

2023 இன் முதல் காலாண்டு பகுதியில் யூனியன் வங்கி ஒட்டுமொத்த வருமான அதிகரிப்பாக ரூ. 2,064 மில்லியனை பதிவு செய்திருந்தது. இது முன்னைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 25 சதவீத அதிகரிப்பாகும். வங்கியினால் தனது வியாபாரச் செயற்பாடுகளை அவதானமாக நிர்வகித்திருந்தமையுடன், புதிய வியாபார வாய்ப்புகளை தெரிவு செய்கையில் அவதானமான செயற்பாடு போன்றவற்றினூடாக இந்த உயர்ந்த பிரதான வங்கியியல் வினைத்திறனை பதிவு செய்ய முடிந்திருந்தது.

கடன் பிரிவு மற்றும் திறைசேரி சொத்துக்களின் மீள்விலையிடலினூடாக பெறப்பட்ட மேம்படுத்தப்பட்ட பெறுபேறுகளால், வங்கியின் தேறிய வட்டி வருமானம் (NII) ரூ. 1,622 மில்லியன் எனும் பெறுமதிக்கு 49 சதவீத அதிகரிப்பை பதிவு செய்திருந்தமையின் காரணமாக, வங்கியின் வருமான அதிகரிப்பு பதிவாகியிருந்தது. திறைசேரியினால் அரசாங்க முறிகள் பிரிவு அவதானமான முறையில் நிர்வகிக்கப்பட்டிருந்ததுடன், வங்கிகளுக்கிடையிலான சந்தை வாய்ப்புகளின் அனுகூலங்களையும் எய்தியிருந்தது. உரிய காலத்தில் சொத்துகள் புத்தகத்தின் விலைமறுமதிப்பீட்டுடன், வட்டிச் செலவீனங்களை கவனமாக நிர்வகித்திருந்தமையினூடாக தேறிய வட்டி எல்லைப் பெறுமதி (NIM) 172bps இனால் அதிகரிப்பதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. தேறிய தரகு மற்றும் கூலி வருமானமும் 26 சதவீதத்தினால் அதிகரித்து ரூ. 321 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில், வைப்புகளுடன் தொடர்புடைய கட்டணங்கள் மற்றும் கடன்அட்டைக் கட்டணங்கள் போன்றன பங்களிப்புச் செலுத்தியிருந்தன.

ரூபாயின் மதிப்பிறக்கம் குறிப்பிடத்தக்களவில் பதிவாகியிருந்த நிலையில், அந்நியச் செலாவணி வீதங்களில் அதிகரிப்பு பதிவாகியிருந்த முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலாண்டில், ரூபாயின் மதிப்பு அதிகரிப்பில், வங்கியின் இதர தொழிற்பாட்டு வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பெறுமதி 97 சதவீதத்தினால் குறைந்து ரூ. 9.2 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதனால் வங்கியின் இலாபகரத்தன்மையிலும் பெருமளவு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

மீட்சி மற்றும் திரண்ட செயற்பாடுகள் போன்றவற்றில் காணப்பட்ட தொடர்ச்சியாக சவால்கள் காரணமாக, வங்கி தொடர்ந்தும் உயர்ந்த மதிப்பிறக்கப் பெறுமதிகளை பேண நிர்ப்பந்தித்திருந்தது. இதுவும், வங்கியின் இலாபகரத்தன்மையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதன் பெறுபேறாக, இக்காலப் பகுதிக்கான மதிப்பிறக்கக் கட்டணம் ரூ. 450 மில்லியனாக காணப்பட்டது. இது முன்னைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 56 சதவீத அதிகரிப்பாகும்.

கடுமையான செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பணவீக்கத்தில் அதிகரிப்பு காணப்பட்டமையால், மொத்த தொழிற்பாட்டு செலவுகள் 23 சதவீதத்தால் அதிகரித்து ரூ. 1,213 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து, தொழிற்பாட்டு செயற்பாடுகளின் பெறுபெறுகள் ரூ. 401 மில்லியனாக காணப்பட்டது.

துணை நிறுவனங்களின் பங்கு ஒதுக்கீடுகள் அடங்கலாக, வங்கியின் வட்டிக்கு முந்திய இலாபம் ரூ. 422 மில்லியனாக காணப்பட்டது. மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலாண்டில், வங்கியின் வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 145 மில்லியனாக பதிவாகியிருந்தது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், கூட்டாண்மை வரி, VAT மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி போன்றவற்றின் அதிகரிப்பினால், நடப்பு ஆண்டின் இலாபத்தில் பெருமளவு தாக்கம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

மார்ச் 31 ஆம் திகதியன்று வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 118,800 மில்லியனாக காணப்பட்டது. சந்தையில் காணப்படும் குறைந்தளவு வாய்ப்புகள் மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வைத் தொடர்ந்து, வெளிநாட்டு நாணய கடன்களின் மீள மதிப்பீடு போன்றவற்றினூடாக, வங்கியின் கடன்கள் மற்றும் முற்பணங்கள் ரூ. 62,978 மில்லியன் எனும் பெறுமதிக்கு வீழ்ச்சியடைந்திருந்தது. வெளிநாட்டு நாணய வைப்புகளின் விலைக்குறைப்பு மறுவிலையிடலும், வங்கியின் பொறுப்பு பக்கத்தில் சரிவை ஏற்படுத்தியிருந்தது. காலாண்டில் வங்கி இலங்கை ரூபாய் மற்றும் வெளிநாட்டு நாணயம் போன்றவற்றின் ஆரோக்கியமான திரள்வு நிலையை பேணியிருந்தது. காலாண்டின் இறுதியின் வங்கியின் வைப்புகள் ரூ. 90,250 மில்லியனாக அமைந்திருந்தது. இதில், திட்டமிடப்பட்ட வைப்பு பரம்பல் செயற்பாடுகள் மற்றும் தந்திரோபாய ரீதியில் நிர்வகிக்கப்பட்ட எல்லைப் பெறுமதிகள் போன்றன பங்களிப்பு செய்திருந்தன. CASA விகிதம் 25.5% ஆக உயர்ந்திருந்தது. 2023 மார்ச் 31 ஆம் திகதியன்று, வங்கியின் மொத்த மூலதன விகிதம் ஒழுங்குபடுத்தல் தேவைப்பாட்டை விட உயர்ந்த நிலையில், 18.55% ஆக காணப்பட்டது.

யூனியன் பாங்க் ஒஃவ் கொழும்பு பிஎல்சி, UB ஃபினான்ஸ் கம்பனி லிமிடெட் மற்றும் நஷனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிடெட் ஆகியவற்றைக் கொண்ட யூனியன் வங்கிக் குழுமம், 2023 மார்ச் 31 ஆம் திகதியன்று, வரிகளுக்கும் முன்னரான இலாபமாக ரூ. 496 மில்லியனையும், வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 174 மில்லியனையும் பதிவு செய்திருந்தது. குழுமத்தின் மொத்த சொத்துகளின் பெறுமதி ரூ. 125,803 மில்லியனாகும். வங்கியின் பங்குப் பெறுமதி 94% ஐ விட உயர்வானதாக அமைந்திருந்தது.

மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில், கூட்டாண்மை அறிக்கையிடலில் வெளிப்படைத் தன்மைக்காக ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நஷனல் ஸ்ரீ லங்காவினால் (TISL) சிறந்த 100 பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்தது. 2022 ஆம் ஆண்டில் 100 ஸ்தானங்களில் 14 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், மோசடி தவிர்ப்பு மற்றும் உள்ளக நிதி அறிக்கையிடல் போன்றவற்றில் பெருமளவு வெளிப்படைத்தன்மைக்காக முழுமையான நிறுவனசார் வெளிப்படுத்தல் தரப்படுத்தலையும் பெற்றிருந்தது.

யூனியன் வங்கி சவால்களுக்கு மத்தியிலும் 2022 நிதியாண்டில் வலுவான வருமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது

யூனியன் வங்கி சவால்களுக்கு மத்தியிலும் 2022 நிதியாண்டில் வலுவான வருமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது

வங்கி

  • தேறிய வருமானம் 73% இனால் அதிகரித்து ரூ. 18,966 ஆக பதிவு.
  • தேறிய வட்டி வருமானம் 36.6% இனால் உயர்ந்து ரூ. 5,814 ஆக பதிவு
  • தேறிய கட்டண மற்றும் தரகு வருமானம் 32.8% இனால் உயர்ந்து ரூ. 1,143 ஆக பதிவு
  • தேறிய வட்டி எல்லைப் பெறுமதி 116bps இனால் உயர்வு
  • வரிக்கு முந்திய மொத்த தொழிற்பாட்டு இலாபம் ரூ. 925 மில்.
  • வரிக்குப் பிந்திய இலாபம் ரூ. 314 மில்.
  • மொத்த சொத்துக்கள் ரூ. 129,483 மில்.
  • மொத்த மூலதன போதுமை விகிதம் 18.26%

குழுமம்

  • வரிக்கு முந்திய இலாபம் ரூ. 991 மில்.

2022 ஆம் ஆண்டில் யூனியன் வங்கி தொடர்ச்சியாக மீட்சியாக திகழ்ந்ததுடன், உறுதியான மூலதன நிலையைக் கொண்டிருந்ததுடன், அதிகரித்த ஒட்டுமொத்த வருமானத்தைப் பதிவு செய்து, மேம்படுத்தப்பட்ட பிரதான வங்கியியல் வினைத்திறனை பதிவு செய்திருந்தது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட ஆண்டில், வங்கியின் மொத்த வருமானம் 73% இனால் அதிகரித்து ரூ. 18,966 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. கடுமையான இடர் மற்றும் மீட்சிக் கட்டமைப்பினூடாக தனது வியாபாரங்களை வங்கி நிர்வகித்திருந்தமையினூடாகவும், கவனமான முறையில் புதிய வியாபார வாய்ப்புகளைத் தெரிவு செய்திருந்தமையினூடாகவும், இந்த வளர்ச்சியைப் பதிவு செய்ய முடிந்திருந்தது.

தேறிய வட்டி வருமானம் (NII) 36.6% இனால் உயர்வடைந்து ரூ. 5,814 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. கடன் இலாகா மற்றும் திறைசேரி சொத்துக்களின் மீள்விலையிடலினூடாக கிடைத்திருந்த உயர்ந்த வருமதிகள் இதில் பங்களிப்புச் செய்திருந்தது. வட்டிசார் செலவீனங்களை முறையாக நிர்வகித்திருந்தமையினூடாக, தேறிய வட்டி எல்லைப் பெறுமதியை (NIM) 116 bps இனால் அதிகரித்துக் கொள்ள முடிந்தது. தேறிய கட்டண மற்றும் தரகு வருமானம் 32.8% இனால் அதிகரித்து ரூ 1,143 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில், வியாபார வர்த்தகங்கள், வெளிநாட்டு பண அனுப்புகைகள், கடன் மற்றும் பற்று அட்டைகள் போன்றவற்றில் அதிகரித்த செயற்பாடுகள் பதிவாகியிருந்தன. அந்நியச் செலாவணி வருமானம் மற்றும் ஆதாயத்தினூடாக இதர தொழிற்பாட்டு வருமானமும் 121% இனால் அதிகரித்திருந்தது.

பொருளாதாரச் சூழலினால் எழுந்திருந்த அழுத்தங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட கடன் பெறுநர்கள் தொடர்ச்சியான எதிர்நோக்கியிருந்த அழுத்தங்களால் கடன்களை மீளச் செலுத்துவதில் எதிர்நோக்கியிருந்த சவால்கள் காரணமாக, வங்கி அதிகரித்த மதிப்பிறக்கங்களை ஒதுக்கீடு செய்ய நேரிட்டது. இதனால் வங்கியின் இலாபகரத்தன்மையிலும் தாக்கம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்டிருந்த ஆண்டுக்கான மதிப்பிறக்கக் கட்டணம் ரூ. 2,556 மில்லியனாக காணப்பட்டது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 174% அதிகரிப்பாகும்.

கடுமையான செலவு முகாமைத்துவ செயற்பாடுகளுக்கு மத்தியிலும், வங்கியின் மொத்த தொழிற்பாட்டு செலவுகள் ரூ. 588 மில்லியனாக அதிகரித்திருந்தது. இது ஒப்பீட்டளவில் 16% அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. ரூபாய் விலை மதிப்பிறக்கம் மற்றும் அதிகரித்த கட்டணப் பட்டியல் விலைகள் போன்றவற்றினால் இந்த தாக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன் பிரகாரம், வங்கியின் செயற்பாடுகளினூடான பெறுமதி ரூ. 925 மில்லியனாகவும், துணை நிறுவனங்களுக்கான பங்கிலாபம் அடங்கலாக, வங்கியின் வரிக்கு முந்திய இலாபம் ரூ. 788 மில்லியனாகவும் பதிவாகியிருந்தது. 2022 டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஆண்டில், வங்கியின் வரிக்குப் பிந்திய இலாபம் (PAT) ரூ. 314 மில்லியனாக காணப்பட்டது.

2022 டிசம்பர் 31ஆம் திகதியன்று, வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி 9.4% இனால் அதிகரித்து ரூ. 129,483 மில்லியனாக பதிவாகியிருந்தது. தனியார் துறை கடன் மற்றும் நிதி வழங்கல் வாய்ப்புகள் வீழ்ச்சியடைந்திருந்ததால், வங்கியின் கடன்கள் மற்றும் முற்பணங்கள் வருட நிறைவில் ரூ. 67,727 மில்லியனாகக் காணப்பட்டது. ஏற்கனவே காணப்படும் வாடிக்கையாளர்களுக்கான கடன் வழங்கல்களை விரிவாக்கம் செய்வது மற்றும் கடன் தரத்தை பேணுவதுடன், தெரிவுக்குரிய நிதி வழங்கல் வாய்ப்புகளை முன்னெடுத்தலில் சகல வியாபாரப் பிரிவுகளும் கவனம் செலுத்தியிருந்தன. ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து நிதி வழங்கலை வங்கி பெற்றுக் கொண்டது. சிறிய நடுத்தரளவு வியாபாரங்களுக்கு நிதியளிக்கும் வகையிலும், வியாபாரங்களை மீட்டெடுப்பதற்கு உதவும் வகையிலும் இந்த உதவி வழங்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க கொடுப்பனவுத் திட்டங்களுடன் ஆதரவளித்திருந்ததுடன், இலங்கை மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்டிருந்த நிவாரணத் திட்டங்களையும் செயற்படுத்தியிருந்தது.

வருடம் முழுவதிலும் இலங்கை ரூபாய் மற்றும் அந்நிய நாணயங்களில் வங்கி துரித திரள்வு நிலையை பேணியிருந்தது. வாடிக்கையாளர்களின் வைப்புகள் நிலையானதாக காணப்பட்டதுடன், 11% இனால் அதிகரித்து ரூ. 92,592 மில்லியனாக காணப்பட்டது. இதில் வட்டி வீதங்களில் மாற்றங்களுடன் கடுமையான வைப்பு பரம்பல்கள் காணப்பட்டமை தாக்கம் செலுத்தியிருந்தது. வங்கியின் சராசரி CASA ஆரோக்கியமான நிலையில் காணப்பட்டது. 2022 டிசம்பர் 31ஆம் திகதியன்று CASA விகிதம் 23% ஆக காணப்பட்டது. வங்கியின் நிலை 3 கடன் விகிதம் 8.19% ஆக காணப்பட்டது.

வங்கி துரித மூலதன போதுமை நிலையை ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை விட உயர்ந்த நிலையில் தொடர்ந்தும் பேணியிருந்தது. வங்கியின் மொத்த மூலதன விகிதம் 2022 டிசம்பர் 31ஆம் திகதியன்று 18.26% ஆக காணப்பட்டது. ஆண்டில், வங்கியின் தரப்படுத்தல் BBB-(lka) ஆக மீள உறுதி செய்யப்பட்டிருந்தது. தொழிற்பாட்டு சூழலில் காணப்பட்ட அழுத்தங்களின் காரணமாக ஃபிட்ச் தரப்படுத்தலினால் எதிர்மறையான தரப்படுத்தல் கண்காணிப்பும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

யூனியன் வங்கி, UB ஃபினான்ஸ் கம்பனி லிமிடெட் மற்றும் National Asset Management Ltd. ஆகியவற்றைக் கொண்ட யூனியன் வங்கி குழுமம், 2022 டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஆண்டில், வரிக்கு முந்திய இலாபமாக ரூ. 991 மில்லியனையும், வரிக்குப் பிந்திய இலாபமாக ரூ. 423 மில்லியனையும் பதிவு செய்திருந்தது. குரூப்பின் மொத்த சொத்துக்கள் பெறுமதி ரூ. 136,679 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது 10% அதிகரிப்பாகும். வங்கியின் பங்குகள் 95% ஐ விட உயர்வாக காணப்பட்டதுடன், குழுமத்தின் வினைத்திறனில் தீர்மானத்தைக் கொண்ட அங்கமாக வங்கி திகழ்ந்தது.

சவால்கள் நிறைந்த ஆண்டில் அதிகரித்துச் சென்ற வாடிக்கையாளர்களின் தேவைகள் தொடர்பில் கரிசனையுடனும், புரிந்துணர்வுடனும் வங்கி செயலாற்றியிருந்தது. டிஜிட்டல் கட்டமைப்புகளில் உயர்ந்தளவு கவனம் செலுத்தி, தடங்கலில்லாத சேவைகளை வழங்கியிருந்தமையில் தன்னை அர்ப்பணித்திருந்தது. ஆண்டில், வங்கியினால் பல்வேறு பிரதான டிஜிட்டல் மாற்றியமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் தங்கியிருக்கும் தன்மையை உறுதி செய்யும் வகையில், தனது தரவு நிலையம் ஒன்றையும் ATM Switch ஐயும் மெருகேற்றியிருந்தது. உள்நாட்டு இறைவரித்திணைக்களம், சுங்கம் மற்றும் துறைமுகங்கள் அதிகார சபை போன்றவற்றுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் வகையில் LankaPay ஒன்லைன் கொடுப்பனவு கட்டமைப்புடன் வங்கி இணைக்கப்பட்டதுடன், Cargills FoodCity வலையமைப்பை வைப்புகளை மேற்கொள்வதற்கான அறிமுகம் செய்திருந்தது. தனது முகவர் வங்கிச் சேவையினூடாக கடனட்டைக் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் வசதியையும் மேம்படுத்தியிருந்தது. இவற்றினூடாக வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சௌகரியம் உறுதி செய்யப்பட்டிருந்தது. வங்கியின் பண முகாமைத்துவ தீர்வான யூனியன் வங்கி BizDirect இனூடாக வாடிக்கையாளர் பகுதியில் காசோலை அச்சிடல் வசதி போன்ற சேவை மேம்படுத்தல்களை ஏற்படுத்தியிருந்ததுடன், கூட்டாண்மை மற்றும் சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை வாடிக்கையாளர்களின் சௌகரியத்தை மேம்படுத்தியிருந்தது. ஆண்டில் LMD இன் இலங்கையின் பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்கள் வரிசையில் தனது நிலையை உறுதி தொடர்ந்தும் உறுதி செய்திருந்ததுடன், LMD இன் நன்மதிப்பு மிக்க நிறுவனங்கள் வரிசையிலும் தரப்படுத்தப்பட்டிருந்தது.

இணைக்கப்பட்டுள்ள படங்கள்:
அதுல் மாலிக், தவிசாளர், யூனியன் வங்கி
இந்திரஜித் விக்ரமசிங்க, பணிப்பாளர் /பிரதம நிறைவேற்று அதிகாரி, யூனியன் வங்கி

சவால்களுக்கு மத்தியிலும் 2022 மூன்றாம் காலாண்டில் யூனியன் வங்கியின் செயற்பாடுகள் முன்னேற்றம்

சவால்களுக்கு மத்தியிலும் 2022 மூன்றாம் காலாண்டில் யூனியன் வங்கியின் செயற்பாடுகள் முன்னேற்றம்

சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டிருந்த போதிலும், நடப்பு ஆண்டின் மூன்றாம் காலாண்டு பகுதியில் தொடர்ந்தும் நெருக்கடியான சூழ்நிலை காணப்பட்டதுடன், வங்கியியல் துறையிலும் மந்தமான நிலையை அவதானிக்க முடிந்தது. எரிபொருள் அடங்கலாக அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் உடனடி ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக பொருளாதாரம் வங்கியியல் துறையில் தொடர்ந்தும் தங்கியிருந்தது. வலுவிழந்த ரூபாய், அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவு, வட்டி வீதங்கள் அதிகரிப்பு மற்றும் தற்காலிக தடைகள் காரணமாக இறக்குமதிக் கட்டுப்பாடுகள் போன்றவற்றினால் வங்கிகளின் முன்னேற்றம் மற்றும் கடன் வழங்கல்கள் போன்றன தொடர்ந்தும் பாதிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறான சூழ்நிலையிலும், வங்கி தொடர்ந்தும் உறுதியான வங்கியியல் நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்ததுடன், வியாபார வாய்ப்புகளை தெரிவு அடிப்படையில் மேற்கொண்டிருந்ததுடன், இடர்நிலைகளை சீராக கையாண்டிருந்ததுடன், இலாகா மற்றும் வசூலிப்புகளை மேற்கொண்டிருந்தது. சவால்கள் நிறைந்த சூழநிலையிலிருந்து மீள்வதற்கு வியாபாரங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளித்திருந்தது.

பிரதான வங்கியியல் செயற்பாடு மற்றும் இலாபகரத்தன்மை

சவால்கள் நிறைந்த தொழிற்பாட்டு சூழலிலும், வங்கி மீட்சியுடன் திகழ்ந்ததுடன், மூன்றாம் காலாண்டில் வங்கி ரூ. 5,343 மில்லியனை ஒட்டு மொத்த வருமானமாக பதிவு செய்திருந்தது. இது ஒப்பீட்டளவில் 109% அதிகரிப்பாகும். 2022 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த 9 மாத காலப்பகுதியில், வங்கியின் ஒட்டு மொத்த வருமானம் 55% இனால் அதிகரித்து ரூ. 12,769 மில்லியனாக பதிவாகியிருந்தது.

கடன் பிரிவு மற்றும் திறைசேரி சொத்துகளை மீள்-விலையிட்டிருந்ததன் மூலம் பெறப்பட்ட வருமதிகளினூடாக தேறிய வட்டி வருமானம் (NII) 58% இனால் அதிகரித்திருந்தது. வட்டி செலவீனங்களை முறையாக நிர்வகித்திருந்தமையினூடாக, தேறிய வட்டி எல்லைப் பெறுமதி (NIM) 83 bps இனால் அதிகரித்திருந்தது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச நிதிப் பரிமாற்றங்கள், ATM கொடுக்கல் வாங்கல்கள், கடன் மற்றும் பற்று அட்டைகள், பண அனுப்புகைகள் மற்றும் வர்த்தக வியாபாரச் செயற்பாடுகளில் அதிகரிப்பு போன்றவற்றினால் தேறிய தரகு மற்றும் கூலி வருமானம் 53% அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தது. அந்நியச் செலாவணி வருமானத்தினால் ஏனைய தொழிற்பாட்டு வருமானமும் 23% இனால் அதிகரித்திருந்தது.

மூன்றாம் காலாண்டில், மதிப்பிறக்கங்களுக்கு முன்னரான தொழிற்பாட்டு வருமானம் ரூ. 1977 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது 45% அதிகரிப்பாகும்.

பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களிடமிருந்து கடனை அறவிடுவதில் மேலும் சவால்களை வங்கி எதிர்கொண்டிருந்தமையால், அதிகளவு மதிப்பிறக்கப் பெறுமதியையும், நிர்வாக ஒதுக்கீடுகளையும் பதிவு செய்திருந்தது. மூன்றாம் காலாண்டுக்கான மதிப்பிறக்க கட்டணம் ரூ. 591 மில்லியனாக காணப்பட்டது. இது ஒப்பீட்டளவில் 324% அதிகரிப்பாகும்.

முறையான செலவு முகாமைத்துவ செயற்பாடுகளைக் கொண்டிருந்த போதிலும், வங்கியின் ஒட்டுமொத்த தொழிற்பாட்டு செலவீனம் ரூ. 1,088 மில்லியனாக அதிகரித்திருந்தது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 18% அதிகரிப்பாகும். ரூபாய் மதிப்பிறக்கம் மற்றும் கட்டணப் பட்டியல் விலை உயர்வு போன்றன இதில் தாக்கம் செலுத்தியிருந்தன.

இவற்றின் பிரகாரம், காலாண்டு பகுதியில் தொழிற்பாட்டு செயற்பாடுகளின் பெறுபேறுகள் ரூ. 298 மில்லியனாக பதிவாகியிருந்தது. துணை நிறுவனங்களில் கொண்டுள்ள பங்குகள் அடங்கலாக வங்கியின் வரிக்கு முந்திய இலாபம் ரூ. 93 மில்லியனாக பதிவாகியிருந்ததுடன், வரிக்குப் பிந்திய இலாபம் ரூ. 74 மில்லியனாக பதிவாகியிருந்தது. 2022 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த 9 மாத காலப்பகுதியில், தொழிற்பாட்டு செயற்பாடுகளினூடாக பெறப்பட்டிருந்த பெறுபேறுகள் ரூ. 852 மில்லியனாக அமைந்திருந்தது. வரிக்கு முந்திய இலாபம் ரூ. 397 மில்லியனாகவும், வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 227 மில்லியனாகவும் காணப்பட்டது.

வங்கியின் மொத்த சொத்துகளின் பெறுமதி 2022 செப்டெம்பர் 30 ஆம் திகதியன்று ரூ. 136,715 மில்லியனாக காணப்பட்டது. இது 15% அதிகரிப்பாகும். கடன்கள் மற்றும் முற்பணங்கள் பிரிவு 11% இனால் அதிகரித்து ரூ. 75,148 மில்லியனாக பதிவாகியிருந்தது. வாடிக்கையாளர் வைப்புகள் 13% இனால் அதிகரித்து ரூ. 93,876 மில்லியனாக காணப்பட்டது. சகல பிரிவுகளிலிருந்தும் CASA மற்றும் தவணை வைப்புகளை பெற்றுக் கொள்வதில் கவனம் செலுத்தியிருந்தமை இவற்றில் பங்களிப்பைச் செலுத்தியிருந்தது. 2022 செப்டெம்பர் 30 ஆம் திகதியன்று CASA விகிதம் 23.7% ஆக காணப்பட்டது. வங்கியின் நிலை 3 கடன் விகிதம் 7.29% ஆக காணப்பட்டது.

ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை விட உயர்வாக, வங்கி உறுதியான மூலதன் போதுமை நிலையை பேணியிருந்தது. வங்கியின் மொத்த மூலதன விகிதம் 2022 செப்டெம்பர் 30 ஆம் திகதியன்று 17.02% ஆக பதிவாகியிருந்தது. வங்கியின் தரயப்படுத்தல் BBB-(lka) ஆக 2022 செப்டெம்பர் மாதத்தில் மீள உறுதி செய்யப்பட்டிருந்தது. தொழிற்படும் சூழலில் காணப்படும் அழுத்தங்கள் காரணமாக ஃபிட்ச் தரப்படுத்தலினால் எதிர்மறை தரப்படுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

UB ஃபினான்ஸ் கம்பனி லிமிடெட் மற்றும் நஷனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிடெட் ஆகியவற்றைக் கொண்ட யூனியன் வங்கிக் குழுமம், ரூ. 130 மில்லியன் பெறுமதியான வரிக்கு முந்திய இலாபத்தை காலாண்டிலும், முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் ரூ. 525 மில்லியனையும் பதிவு செய்திருந்தது. குழுமத்தின் மொத்த சொத்துகள் ரூ. 143,910 மில்லியனாக காணப்பட்டது. இதில் வங்கியின் பங்கு 95% ஐ உயர்வாக அமைந்திருந்தது.

தொழிற்பாட்டு வினைத்திறன்

கூட்டாண்மை வங்கியியல் பிரிவு மாற்றியமைக்கப்பட்ட நிதித் தீர்வுகளை வழங்குவதில் கவனம் செலுத்தியிருந்ததுடன், நெருக்கடியான பொருளாதாரச் சூழலிலும், தெரிவு செய்யப்பட்ட பிரிவுகளில் எழுந்திருந்த புதிய வியாபார வாய்ப்புகளின் அனுகூலத்தைப் பெற்று, ஏற்கனவே காணப்பட்ட வாடிக்கையாளர் உறவுகளை வலிமைப்படுத்தும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்ததுடன், கடன் பிரிவையும், கடன் தரத்தையும் முறையாக நிர்வகித்திருந்தது. கூட்டாண்மை வங்கிக் கடன்கள் மற்றும் முற்பணங்கள் 32% இனாலும், வைப்புகள் 29% இனாலும் இக்காலாண்டு பகுதியில் அதிகரித்திருந்தன.

சந்தையில் நேர்த்தியான சூழ்நிலைக்கான சமிக்ஞை எதிர்பார்க்கப்படும் நிலையில், வங்கியின் ரூபாய் மற்றும் அந்நியச் செலாவணி/அமெரிக்க டொலர்கள் திரள்வு தேவைகளை முறையாக நிர்வகிக்கும் திறைசேரியினால், ஒட்டு மொத்த வங்கியின் செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. செப்டெம்பர் மாதத்தில் தாயகத்துக்கு பெருமளவு பணம் நாணயம் கிடைக்கப்பெற்றிருந்ததாக வங்கியின் நாணயப் பிரிவு அறிவித்திருந்தது. குறிப்பாக அம்மாதத்தில் சாதனை மிகுந்த சரக்கேற்றல் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. உரிய காலப்பகுதியில் அரச முறிகளிலிருந்து கிடைத்திருந்த வருமானத்தினால் வங்கியின் தேறிய வட்டி வருமான நிலை வலிமைப்படுத்தப்பட்டிருந்தது. உள்நாட்டு வங்கிகளில் அமெரிக்க டொலர்கள் திரள்வு நிலை எல்லைப் பெறுமதி ஓரளவு சீரடைந்து வரும் நிலையில், வங்கி தனது அந்நியச் செலாவணி நாணயப் பாய்ச்சல்களை வினைத்திறனான வகையில் நிர்வகித்திருந்தது. தற்போதைய நெருக்கடியான பொருளாதார சூழலில், வங்கியின் இடர்நிலையை கவனத்தில் கொண்டு, சர்வதேச இறையாண்மை முறிகளை வங்கி கொண்டிருப்பதில்லை என்பதுடன், வங்கி கொண்டுள்ள இலங்கை அபிவிருத்தி முறிகளும், குறுங்கால முதிர்வைக் கொண்டதாக அமைந்திருப்பதுடன், திரளவுத் தன்மைக்காக இலங்கை ரூபாய் நெகிழ்ச்சித் தன்மையையும் கொண்டுள்ளது.

சந்தையில் நிலவும் உயர் வட்டி வீதங்களை கவனத்தில் கொண்டு, உரிய நேர வைப்புகள் மற்றும் CASA ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு புதிய வாடிக்கையாளர் உறவுகள் தொடர்பில் நுகர்வோர் வங்கியியல் பிரிவு தனது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. அதன் பலனாக 8% வைப்புகள் வளர்ச்சியையும், 26% CASA விகிதத்தையும் பதிவு செய்திருந்தது. கடனட்டைதாரர்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக் கொடுப்பதில் யூனியன் வங்கி கடனட்டைகள் கவனம் செலுத்தியிருந்ததுடன், மீதி மாற்றங்கள், 0% தவணைக் கொடுப்பனவுகள் மற்றும் கடனட்டை மீதான கடன்கள் மற்றும் e-வணிக கட்டமைப்புகளில் சலுகைகள் போன்றவற்றை சௌகரியத்துக்காக வழங்கியிருந்தது. அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் மற்றும் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள் போன்றவற்றின் மீது விலைக்கழிவுகள் மற்றும் சேமிப்புகள் போன்ற சலுகைகளையும் வழங்கியிருந்ததுடன், கொடுப்பனவுகள் மற்றும் வசூலிப்புகளையும் முறையாக நிர்வகித்திருந்தது. வங்கியின் டிஜிட்டல் கட்டமைப்புகள் தொடர்ச்சியாக சிறந்த சௌகரியத்தை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்திருந்தன.

தனியார் துறையில் நிலவிய நெருக்கடியான சூழ்நிலை காரணமாக கடன் வளர்ச்சி மற்றும் கடன் வழங்கலுக்கான வாய்ப்புகள் போன்றன குறைந்திருந்தன. வங்கியின் சிறிய நடுத்தரளவு வங்கியியல் பிரிவினால், கடன் பிரிவை கவனமாக நிர்வகிப்பது தொடர்பிலும், வசூலிப்புகளிலும் கவனம் செலுத்தியிருந்தது. அத்துடன் ஏற்கனவே காணப்படும் வாடிக்கையாளர்களுக்கு தமது வியாபார செயற்பாடுகளை தக்க வைத்துக் கொள்வதற்கு உதவிகளை வழங்குவதிலும் கவனம் செலுத்தியிருந்தது. 2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பெறப்பட்ட ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியளிப்பு தொடர்ந்தும், வங்கியின் கடன் வழங்கல் செயற்பாடுகளுக்கு உதவியிருந்தது. சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர் வங்கி வைப்பு இருப்பு 10% இனால் அதிகரித்திருந்தது. வங்கியின் விருதை வென்ற பண முகாமைத்துவ தீர்வான யூனியன் வங்கி BizDirect தொடர்ந்தும் CASA ஐ எய்துவதில் பங்களிப்பு வழங்கியிருந்ததுடன், புதிய வாடிக்கையாளர்களை கையகப்படுத்துவதிலும் பங்களிப்புச் செய்திருந்தது.

வங்கியின் கூட்டாண்மைப் பெறுமதிகளை மீண்டும் உறுதி செய்யும் வகையில், LMD மற்றும் Nielsen IQ இணைந்து முன்னெடுத்திருந்த வருடாந்த தரப்படுத்தலின் போது இலங்கையின் நன்மதிப்பை வென்ற நிறுவனங்கள் 2022 இல் யூனியன் வங்கியும் தரப்படுத்தப்பட்டிருந்தது. ஊழியர்கள் மத்தியில் தனது நேர்த்தியான நிலையை வங்கி தொடர்ந்தும் பேணியிருந்தது. ஊழியர் நலன் மற்றும் ஈடுபாடு தொடர்பில் தனது செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்திருந்ததுடன், டிஜிட்டல் வழிநடத்தலில் நடை மற்றும் உடற் தகைமை சவாலுக்கு முகங்கொடுத்து பரிசுகளை வெல்லும் வாய்ப்பு போன்றவற்றுக்கு வங்கியின் கிளை வலையமைப்பைச் சேர்ந்த ஊழியர்களிடமிருந்து பெருமளவு கிடைத்திருந்தது.

யூனியன் வங்கி சவால்களுக்கு மத்தியிலும் 2022 முதல் அரையாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது

யூனியன் வங்கி சவால்களுக்கு மத்தியிலும் 2022 முதல் அரையாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது

2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு பாரிய பொாருளாதார சவல்களுக்கு முகங்கொடுத்திருந்தது. ரூபாய் மதிப்பிறக்கம், அதிகரித்துச் செல்லும் வட்டி வீதங்கள், வரிகள் அதிகரிப்பு, உயர் மதிப்பிறக்கங்கள், விநியோக கட்டுப்பாாடுகள் மற்றும் இறக்குமதிகளை கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருந்த தீர்மானங்கள் போன்றவற்றினால் வங்கியியல் துறையானது பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தது.

இந்தப் பின்னணியில், யூனியன் வங்கி தனது பிரிவுகள் மற்றும் வாடிக்கையாளர் பகுதிகளை கவனமான முறையில் நிர்வகித்திருந்ததுடன், கடுமையான மீட்சி செயன்முறைகளைப் பின்பற்றியிருந்தது. இதனூடாக, வாடிக்கையாளர்களுக்கு தடங்கலில்லாத வங்கிச் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்திருந்தது.

பிரதான வங்கியியல் வினைத்திறன் மற்றும் இலாபகரத்தன்மை

கடுமையான தொழிற்பாட்டு சூழலில் நிலவிய சவால்களுக்கு மத்தியில் மேம்படுத்திய பிரதான வங்கியியல் வினைத்திறனை வங்கி பதிவு செய்திருந்தது. அதனூடாக முதல் அரையாண்டு காலப்பகுதியில், ரூ. 7,426 மில்லியனை ஒட்டுமொத்த வருமானமாக பதிவு செய்திருந்தது. முன்னைய ஒப்பீட்டு காலப்பகுதியுடன் கருதுகையில் இது 31% அதிகரிப்பாகும்.

சொத்துகள் இலாகாவின் மீள விலையிடல் மற்றும் வட்டி செலவுகளின் கடுமையான நிர்வாகம் போன்றவற்றினூடாக தேறிய வட்டி வருமானம் (NII) 19% அதிகரித்திருந்ததுடன், தேறிய வட்டி எல்லைப் பெறுமதி (NIM) 57 bps இனால் அதிகரித்திருந்தது.

தேறிய கூலி மற்றும் தரகு வருமானம் 24% இனால் அதிகரித்திருந்ததுடன், இதில் உள்ளக மற்றும் சர்வதேச நிதி மாற்றங்கள், ATM கொடுக்கல் வாங்கல்கள், கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகள், பண அனுப்புகைகள் மற்றும் வர்த்தக வியாபாரத்தின் அதிகரித்த செயற்பாடுகள் போன்றன பங்களிப்பு செலுத்தியிருந்தன. இதர தொழிற்படு வருமானமும் அந்நியச் செலாவணி வருமானம் மற்றும் தேர்வுகளினூடாக 141% இனால் அதிகரித்திருந்தது.

மதிப்பிறக்கங்களுக்கு முன்னதான தொழிற்படு வருமானம் ரூ. 3,575 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது 2022 ஜுன் 30 ஆம் திகதியன்று 18% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. நெருக்கடியான பாரிய பொருளாதார நிலைகளினால் கடன் செலுத்துகைகள் தாமதமடைந்திருந்தன. வங்கியினால் முன்னாயத்த நடவடிக்கையாக அதிகரித்த மதிப்பிறக்கங்கள் மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் போன்றன மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்தக் காலப்பகுதிக்கான மதிப்பிறக்க கட்டணம் ரூ. 961 மில்லியனாகும். இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 120% அதிகரிப்பாகும்.

கடுமையான செலவு நிர்வகிப்பு செயற்பாடுகள் காணப்பட்ட போதிலும், வங்கியின் மொத்த தொழிற்பாட்டு செலவீனம் ரூ. 2,059 மில்லியனாக அதிகரித்திருந்தது. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவாகியிருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 14% அதிகரிப்பாகும். இலங்கை ரூபாயின் மதிப்பிறக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து எழுந்த எரிபொருள் செலவுகள் போன்றன இதில் பிரதானமாக பங்களிப்பு செய்திருந்தன.

வங்கியின் பங்கு மற்றும் அதன் துணை நிறுவனங்களின் பங்குகள் அடங்கலாக அதன் வரிக்கு முந்திய இலாபம் (PBT) 2022 ஜுன் 30 இல் ரூ. 304 மில்லியனாக பதிவாகியிருந்தது. வங்கியின் வரிக்கு பிந்திய இலாபம் (PAT) ரூ. 152 மில்லியனாகும்.

2022 ஜுன் 30 ஆம் திகதியன்று வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி 11% இனால் அதிகரித்து ரூ. 131,744 மில்லியனாக பதிவாகியிருந்தது. கடன்கள் மற்றும் முற்பணங்கள் ஆகியன 10% இனால் அதிகரித்து ரூ. 74,796 மில்லியனாக பதிவாகியிருந்தது. வாடிக்கையாளர்களின் வைப்புகள் 16% இனால் அதிகரித்து ரூ. 96,779 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில் சகல பிரிவுகளிலும் CASA மற்றும் தவணை வைப்புகள் மீது கவனம் செலுத்தியிருந்தமை அதிகளவு பங்களிப்பு வழங்கியிருந்தது. CASA விகிதம் 2022 ஜுன் 30 ஆம் திகதியன்று 27.5% ஆக காணப்பட்டது. வங்கியின் நிலை 3 கடன் விகிதம் 6.89% ஆக பதிவாகியிருந்தது.

ஒழுங்குபடுத்தல் தேவையை விட அதிகம் உயர்வாக, வங்கி தொடர்ச்சியாக ஆரோக்கியமாான மூலதன போதுமை நிலையை பேணியிருந்தது. வங்கியின் மொத்த மூலதன விகிதம் 2022 ஜுன் 30 ஆம் திகதியன்று 16.34% ஆக காணப்பட்டது.

UB ஃபினான்ஸ் கம்பனி லிமிடெட் மற்றும் நஷனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிடெட் ஆகியவற்றைக் கொண்ட யூனியன் வங்கி குழுமம் 2022 ஜுன் 30 ஆம் திகதியன்று, வரிக்கு முந்திய இலாபமாக ரூ. 395 மில்லியனை பதிவு செய்திருந்தது. குழுமத்தின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 139,428 மில்லியனாகும். இது 12% அதிகரிப்பு என்பதுடன், வங்கியின் பங்கு 94% ஐ விட அதிகமாக காணப்பட்டது.

தொழிற்பாட்டு வினைத்திறன்

சவால்களுக்கு மத்தியில், கூட்டாண்மை வங்கியியல் பிரிவு தனது கடன் இலாகாவை முறையாக நிர்வகித்திருந்ததுடன், கடன் தரத்தை சீராக பேணியிருந்தது. கடன்கள் மற்றும் முற்பணங்கள் பிரிவில் 29% வளர்ச்சியையும், வைப்புகள் பிரிவில் 39% வளர்ச்சியையும் பதிவு செய்திருந்தது.

நோக்குடனான முதலீட்டு தந்திரோபாயங்கள் மற்றும் குறுங்கால திறைசேரி பட்டியல்கள் மீதான ஏலவிற்பனை விலைகோரல்கள் போன்றவற்றினூடாக பாதிக்கப்பட்டிருந்த அரச பிணைகள் பிரிவை வேகமாக மீளமைக்கும் நடவடிக்கைகளை வங்கியின் திறைசேரி பிரிவு மேற்கொண்டிருந்தது. மேலும், அமெரிக்க டொலர் மீது கவனம் செலுத்தி இறக்குமதியாளர்களால் அந்நியச் செலாவணி இருப்புக்கு பங்களிப்பு வழங்கியிருந்தவர்களுக்கு இது முக்கியமானதாக அமைந்திருந்ததுடன், உணவு, மருந்துப் பொருட்கள், உரம், எரிபொருள் மற்றும் மாணவர் கொடுப்பனவுகள் போன்ற அத்தியாவசிய கொடுப்பனவுகளுக்கு முன்னுரிமையளிப்பதிலும் முக்கிய பங்காற்றியிருந்தது.

வட்டி வீதங்கள் மீளாய்வுக்கமைய, கால வைப்புகள் ஊடாக தனது வைப்புகள் இருப்பை விரிவாக்கம் செய்து, புதிய வாடிக்கையாளர் உறவை பேணுவதில் நுகர்வோர் வங்கியியல் துறை கவனம் செலுத்தியிருந்தது. இந்தப் பிரிவு 14% வளர்ச்சியை பதிவு செய்திருந்ததுடன், CASA விகிதம் 27.5% ஐயும் இரண்டாம் காலாண்டில் பதிவு செய்திருந்தது. மேலும், வாடிக்கையாளர் சௌகரியம் மேலும் மேம்படுத்தப்பட்டிருந்ததுடன், வங்கியின் மொபைல் சேவை app ஆன UBGO மற்றும் அதன் முகவர் வங்கியியல் கட்டமைப்பினூடாக வைப்புகளை மேற்கொள்வது, கடன் மீளச் செலுத்தல்கள் மற்றும் கடனட்டை கொடுப்பனவுகள் போன்றவற்றை தெரிவு செய்யப்பட்ட SLT Mobitel மற்றும் காகில்ஸ் ஃபுட்சிட்டி விற்பனைப் பகுதிகள் போன்றவற்றில் மேற்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

2022 இன் முதல் காலாண்டில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதியைப் பெற்றுக் கொள்வதில் சிறிய, நடுத்தரளவு வங்கித் துறை பெரிதும் வெற்றியடைந்திருந்தது. அதன் கடன் வசதியினூடாக, பெண் தொழில் முயற்சியாாளர்கள் மற்றும் தேயிலை சிறுதோட்டச் செய்கையாளர்களுக்கு புதிய கடன் வசதிகளை வழங்குவதில் கவனம் செலுத்தியிருந்தது. மேலும், அதிகளவு பாதிக்கப்பட்ட சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களின் வசதிகளை மீளமைப்பது மற்றும் கொடுப்பனவு திட்டங்களை மாற்றியமைப்பது தொடர்பான கட்டமைக்கப்பட்ட திட்டங்களினூடாக அதிகளவு கவனம் செலுத்தப்பட்டிருந்தது. மேலும் வங்கியின் நிதி முகாமைத்துவ தீர்வான Union Bank Biz-Direct ஊடாக புதிய வாடிக்கையாளர்களுக்கு CASA கணக்குகளை வழங்குவதிலும் தொடர்ச்சியாக வங்கி கவனம் செலுத்தியிருந்தது.

சவால்கள் நிறைந்த 2021 மூன்றாம் காலாண்டில் யூனியன் வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு

சவால்கள் நிறைந்த 2021 மூன்றாம் காலாண்டில் யூனியன் வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு

கொவிட்-19 தொற்றுப் பரவலின் மூன்றாம் அலைத் தாக்கம் ஆகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் பிரகடனப்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக வங்கிக் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுவதில் தாக்கங்களை ஏற்படுத்தியிருந்ததுடன், பொருளாதார சவால்கள் மற்றும் அந்நியச் செலாவணி இருப்புகள் போன்றவற்றில் ஏற்பட்ட தாக்கங்கள் காரணமாக ஒட்டுமொத்த வியாபார கட்டமைப்பும் தொடர்ந்தும் வரையறைகளுடன் இயங்கியிருந்தது. கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட கடன் பெறுநர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட கடன் மீளச் செலுத்தும் சலுகைக் காலம் 2021 செப்டெம்பர் மாதத்தில் மேலும் நீடிக்கப்பட்டது.

இவ்வாறான பெரும் சவால்கள் நிறைந்த சூழலிலும், யூனியன் வங்கி உறுதியான திரள்வு நிலையை பேணியிருந்தது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில், வங்கியின் சராசரி நிலையான வைப்புகள் உறுதியாக காணப்பட்டதுடன், சராசரி CASA பெறுமதி முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9% இனால் அதிகரித்து ரூ. 23,854 மில்லியனாக பதிவாகியிருந்தது.

2021 செப்டெம்பர் மாதத்தில் ஃபிட்ச் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட பிந்திய மீளாய்வின் போது, வங்கியின் தரப்படுத்தல் BBB(-) என்பதாக மீள உறுதி செய்யப்பட்டிருந்தது. இதில் உயர் திரள்வுத் தன்மை, பெருமளவு உயர்ந்த மூலதனவாக்கம் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழிற்படு சூழலில் வளர்ச்சிக்கான வாய்ப்பு போன்றன பங்களிப்பு வழங்கியிருந்தன.

3ஆம் காலாண்டுக்கான தேறிய வட்டி வருமானம் (NII) வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது. இதில், பாரிய பொருளாதார சூழலில் காணப்பட்ட தாக்கம், தொற்றுப் பரவலால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கடன் மீளச் செலுத்தல் சலுகைக் காலத்தை நீடித்திருந்தமை மற்றும் 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் AWPLR இன் பெறுமதிகள் 280 அடிப்படைப் புள்ளிகளால் வீழ்ச்சியடைந்திருந்தமை போன்றன பங்களிப்பு வழங்கியிருந்தன. இதன் பெறுபேறாக, ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் தேறிய வட்டி வருமானம் (NII) என்பது ரூ. 3,078 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் எல்லையளவு அதிகரிப்பாகும்.

உரிய காலப்பகுதியில் தந்திரோபாய பின்பற்றல்களினூடாக கட்டண வருமானம் என்பது முறையாக நிர்வகிக்கப்பட்டிருந்தது. இதனூடாக, அறிக்கையிடப்பட்ட காலப்பகுதியில் முன்னைய வருடத்துடன் ஒப்பிடுகையில் 31 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து, ரூ. 612 மில்லியனாக பதிவாகியிருந்தது.

சவால்கள் நிறைந்த பொருளாதார சூழலில், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து, விநியோக/கேள்வி கட்டமைப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. நாணயப் பரிமாற்று தளம்பல் காரணமாக திறைசேரி வினைத்திறனும் பாதிக்கப்பட்டிருந்ததுடன், திறைசேரி மற்றும் நிதிச் சந்தைகளின் வருமானமீட்டும் வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. 2020 ஆம் ஆண்டில் இந்தப் பெறுமதி அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக 2ஆம் மற்றும் 3ஆம் காலாண்டுகளில் இந்தப் பெறுமதி உயர்ந்திருந்தது. இதன் விளைவாக வங்கியின் வர்த்தக மற்றும் இதர வருமானங்கள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 37 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தன. 

செப்டெம்பர் மாத நிறைவில் வங்கியின் தொழிற்பாட்டு வருமானம் ரூ. 4,397 மில்லியனாக பதிவாகியிருந்தது. மொத்த தொழிற்பாட்டு செலவீனங்கள் வங்கியினால் முறையாக நிர்வகிக்கப்பட்டிருந்ததுடன், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து ரூ. 2,730 மில்லியனாக பதிவாகியிருந்தது. வங்கியின் மதிப்பிறக்கத்துக்கு முன்னரான இலாபங்கள் ரூ. 1,667 மில்லியனாகும்.

சவால்கள் நிறைந்த பொருளாதார சூழல் காரணமாக, வங்கி தொடர்ந்தும் தனது மதிப்பிறக்க மாதிரிகளை 2020 டிசம்பர் மாதத்தில் பின்பற்றியிருந்த அதே எதிர்பார்ப்புகளுடன் பேணியிருந்ததுடன், இடர்கள் நிறைந்த தொழிற்துறைகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களை மதிப்பிறக்க கணிப்பீடுகளில் உள்வாங்கியிருந்தது. எனவே, வங்கியின் அசல் கடன் இழப்புகள் குறைவாக காணப்பட்டாலும், நிர்வாக மேற்பார்வை பணிகளினூடாக, பெருமளவு ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 

தொடர்ச்சியான சவால்கள் நிறைந்த பாரிய பொருளாதார சூழலில், வங்கி தனது துணை நிறுவனங்களின் மீதான உரிமையாண்மை ஈடுபாட்டுடன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் வரிக்கு முந்திய இலாபமாக ரூ. 1,102 மில்லியனை பதிவு செய்திருந்தது. வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 614 மில்லியனை பதிவு செய்திருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12 சதவீத வளர்ச்சியாகும்.

வங்கியின் நிகர தொழிற்படாக் கடன் விகிதம் 5.79சதவீதமாக வளர்ச்சியடைந்தது. 2020 ஆம் ஆண்டில் இந்தப் பெறுமதி 6.05 சதவீதமாகக் காணப்பட்டது. வலுவிழந்த பொருளாதார சூழலில், தொழிற்படா கடன்களைக் கட்டுப்படுத்தி வங்கி தனது இலாகா தரத்தை பேணுவது தொடர்பான செயற்பாடுகளில் தொடர்ந்தும் கவனம் செலுத்தியிருந்தது. 

செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 118,682 மில்லியனாக பதிவாகியிருந்தது. கடன்களும் வருமதிகளும் ரூ. 69,708 மில்லியனாக காணப்பட்டதுடன், வைப்பு இருப்பு என்பது ரூ. 85,259 மில்லியனாக காணப்பட்டது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் 3 சதவீதத்தால் விரிவடைந்திருந்தது.

வங்கி தொடர்ந்தும் தனது மூலதன போதுமை விகிதங்களை ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுடன் ஒப்பிடுகையில் உயர்ந்த நிலையில் பேணியிருந்ததுடன், அறிக்கையிடல் திகதியன்று துரித மொத்த மூலதன போதுமை விகிதமாக 15.20 சதவீதத்தை அறிக்கையிட்டிருந்தது.

வங்கி மற்றும் இரு துணை நிறுவனங்களான UB ஃபினான்ஸ் கம்பனி லிமிடெட் மற்றும் நஷனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிடெட் போன்றன வரிக்கு முந்திய இலாபமாக ரூ. 1,325 மில்லியனை பதிவு செய்திருந்தன. குழுமத்தின் வரிக்குப் பிந்திய இலாபம் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 17சதவீத அதிகரிப்பை பதிவு செய்திருந்தன. குழுமத்தின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 125,163 மில்லியனாக காணப்பட்டதுடன், இதில் 95சதவீதத்தை வங்கி தன்வசம் கொண்டிருந்தது. குழுமம் 15.67 சதவீதம் எனும் ஆரோக்கியமான பிரதான மூலதன விகிதத்தை பேணியிருந்தது.

வங்கியின் கூட்டாண்மை, சிறிய நடுத்தரளவு வங்கியியல் மற்றும் நுகர்வோர் வங்கிச் சேவைப் பிரிவுகள் போன்றன தொடர்ந்தும் வளர்ச்சியைப் பதிவு செய்திருந்ததுடன், வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் பொருத்தமான நிதித் தீர்வுகளை வழங்கியிருந்தன. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில், வங்கி தனது டிஜிட்டல் செயற்பாடுகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியிருந்ததுடன், ‘UBgo’ எனும் நாமத்தில் மேம்படுத்தப்பட்ட தனது mobile app ஐ அறிமுகம் செய்திருந்தது. QR கொடுப்பனவுகளுடன் இது வலுவூட்டப்பட்டுள்ளதுடன், JustPay இனால் உடனடி கொடுப்பனவுகளை மேற்கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது. இதனூடாக வங்கிச் செயற்பாடுகளை மேற்கொள்வது மேலும் இலகுபடுத்தப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மூன்றாம் காலாண்டு நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “நிலவும் சவால்கள் நிறைந்த சூழலை நாம் கடந்து வரும் நிலையில், நாடு படிப்படியாக மீளத் திறக்கப்படுவதுடன் எழும் வாய்ப்புகளை உயர்ந்தளவில் பயன்படுத்திக் கொள்ள எதிர்பார்க்கின்றோம். அதனூடாக, வங்கியின் தந்திரோபாய இலக்குகளை எய்தக்கூடியதாக இருக்குமென கருதுகின்றோம். கட்டமைக்கப்பட்ட நிதித் தீர்வுகளை வழங்குவதற்காகவும், எமது ஊழியர்களின் மற்றும் வாடிக்கையாளர்களின் நலன்களையும் உறுதி செய்வதற்காகவும் நாம் முக்கியத்துவம் வழங்கி செயலாற்றுகின்றோம். இலாபத்தை எய்துவது மற்றும் இலாகாக்களை நிர்வகித்து, ஆரோக்கியமான திரள்வு நிலையை பேணுவது என்பது வங்கியின் பிரதான கவனம் செலுத்தும் பகுதிகளாக அமைந்துள்ளன.” என்றார்.

நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டில் யூனியன் வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு

நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டில் யூனியன் வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு

2020 ஆம் ஆண்டின் தொற்றுப் பரவலின் தாக்கங்கள் பொருளாதாரத்தில் தொடர்ந்தும் காணப்பட்ட போதிலும், தனது தந்திரோபாயங்களை மீளமைத்து, மீட்சி மற்றும் வளர்ச்சியை நோக்கிய பயணத்தை யூனியன் வங்கி தொடர்ந்திருந்தது. இதனூடாக, நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளை வங்கி பதிவு செய்திருந்தது. எவ்வாறாயினும், 2021 ஏப்ரல் மாதத்தில் மூன்றாம் அலைத் தாக்கம் ஆரம்பத்துடன், சவால்கள் தொடர்ந்தும் நிலவியதுடன், வியாபார வளர்ச்சியில் கட்டுப்பாடுகள் ஏற்பட்ட போதிலும், சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளமை விசேட அம்சமாகும்.

பிரயாணக் கட்டுப்பாடுகள் போன்றவற்றின் காரணமாக இரண்டாம் காலாண்டில் வங்கியியல் துறையின் செயற்பாடுகள் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்திருந்த போதிலும், யூனியன் வங்கியின் நோக்கத்துக்கமைவான செயற்பாடுகளினூடாக இரண்டாம் காலாண்டில் சிறந்த பெறுபேறுகள் பதிவு செய்யப்படுவதில் பங்களிப்பு வழங்கியிருந்தன. மூன்றாம் அலைத் தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட நிவாரணத் திட்டங்களின் காரணமாக நிலவிய குறைந்த AWPLR விகிதங்கள் காரணமாக வருமானங்கள் பாதிக்கப்பட்டது. 2021 மே மாதம் முதல் இந்த நிவாரணத் திட்டம் செயலுக்கு வந்ததுடன், வங்கியினால் உடனடியாக அமுல்ப்படுத்தப்பட்டது. இதனூடாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 2021 ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை முதல் மற்றும்/அல்லது வட்டி கொடுப்பனவுகள் மீதான சலுகைக் காலம் வழங்கப்பட்டிருந்தது. சில்லறை, சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்கள் மற்றும் கூட்டாண்மை பிரிவுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த நிவாரண உதவித் திட்டம் வழங்கப்பட்டதுடன், கடனட்டைதாரர்களுக்கு காலம் தாழ்த்திய கொடுப்பனவு கட்டண விலக்கழிப்புகள், நிலுவைத் திகதி நீடிப்புகள் மற்றும் கொடுப்பனவு நெகிழ்ச்சித்தன்மைகள் போன்றனவும் வழங்கப்பட்டிருந்தன.

மேற்படி சவால்களுக்கு மத்தியிலும், முதல் அரையாண்டில் வங்கியின் தேறிய வட்டி வருமானம் (NII) என்பது ரூ. 2,103 மில்லியனாகவும், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4% அதிகரிப்பையும் பதிவு செய்திருந்தது. 2021 ஜுன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதிக்கான தேறிய வட்டி எல்லைப் பெறுமதி 3.44% ஆக வளர்ச்சியடைந்ததுடன், முன்னைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 3.23% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது.

இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்களின் பிரகாரம், காலம் தாழ்த்திய கொடுப்பனவு மற்றும் இதர கட்டணங்கள் போன்றன பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 2021 ஆகஸ்ட் மாதம் வரையில் விலக்கழிக்கப்பட்டுள்ளன. பொருளாதார செயற்பாடுகளில் வீழ்ச்சி மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் போன்றன கட்டண வருமானத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. எவ்வாறாயினும், தேறிய தரகு மற்றும் கட்டண வருமானம் முதல் அரையாண்டில் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 42% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. கட்டண வருமானத்தில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு பதிவாகியிருந்ததனூடாக, 2020 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட கொவிட்-19 நிவாரண திட்டங்கள் மீதான தாக்கத்தை பிரதிபலிப்பதாக அமைந்திருப்பதுடன், முன்னைய ஆண்டின் வருமானத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

முதல் அரையாண்டில் வங்கியின் மொத்த இதர வருமானம் 18% இனால் வீழ்ச்சியடைந்து ரூ. 527 மில்லியனாக பதிவாகியிருந்தது. முதலீட்டு அலகு வருமானத்தின் வீழ்ச்சி 43% ஆக பதிவாகி ரூ. 310 மில்லியனாக பதிவாகியிருந்தமை காரணமாக இதில் அதிகளவு பங்களிப்பு வழங்கியிருந்தது. எவ்வாறாயினும், நாணயமாற்று வருமதிகள் 117% அதிகரிப்பை பதிவு செய்திருந்ததுடன், குறித்த காலப்பகுதியில் நாணயமாற்று மாற்றம் 8% ஆக பதிவாகியிருந்தது.

வெளியக சவால்களுக்கு மத்தியிலும், 2021 ஜுன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் வங்கியின் தொழிற்படு வருமானம் என்பது ரூ. 3036 மில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. வங்கியில் கடுமையான செலவு முகாமைத்துவ நடவடிக்கைகள் காரணமாக தொழிற்படு செலவுகள் 6% இனால் குறைந்து ரூ. 1,809 மில்லியனாக பதிவாகியிருந்தன. 2021 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதிக்கான மதிப்பிறக்க இலாபம் என்பது ரூ. 1,227 மில்லியனாக காணப்பட்டது. இது 18% வளர்ச்சியைக் காண்பித்திருந்தது.

சவால்கள் நிறைந்த பொருளாதார சூழலில், 2020 டிசம்பர் மாதத்தில் பிரயோகித்திருந்த கருதுகோள்களின் பிரகாரம், வங்கி தொடர்ந்தும் தனது மதிப்பிறக்க மாதிரிகளை பின்தொடர்ந்திருந்தது. அதன் பிரகாரம், வங்கி இடர்கள் நிறைந்த துறைகளில் இயங்கும் வாடிக்கையாளர்களை (அதிகளவு கடன் இடர்கள் நிறைந்த தொழிற்துறைகள்) மதிப்பிறக்க கணிப்பீடுகளில் உள்வாங்கியிருந்தது. மேலும், எதிர்பார்க்கப்படும் கடன் இழப்பு கணிப்பீடுகளில் பாரிய-பொருளாதார நிலைவரம் தொடர்பில் அதிகளவு கரிசனை செலுத்தியிருந்தது. எனவே, வங்கியின் அசல் கடன் இழப்புகள் குறைவாக இருந்த போதிலும், இந்தக் காலப்பகுதியில் வங்கி குறிப்பிடத்தக்களவு ஒதுக்கீடுகளை பேணியிருந்ததுடன், முன்னைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் மதிப்பிறக்க கட்டணங்களில் 55% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது.
வெளியக சூழலில் காணப்பட்ட சவால்களுக்கு முகங்கொடுத்து, வங்கியினால் ஆரோக்கியமான நிதிப் பெறுபேறுகள் பதிவாகியிருந்தன. வரிக்கு முன்னைய இலாபம் மற்றும் துணை நிறுவனங்களின் இலாபம் போன்றன ரூ. 791 மில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 5% அதிகரிப்பாகும். வங்கியின் வரிக்கு பிந்திய இலாபம் 44% இனால் அதிகரித்து ரூ. 455 மில்லியனாக பதிவாகியிருந்தது. 2021 முதல் அரையாண்டில் உறுதியான முன்னேற்றத்தை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வங்கியின் தேறிய NPL விகிதம் 5.83% ஆக குறைந்திருந்தது. 2020 டிசம்பர் மாதத்தில் இந்தப் பெறுமதி 6.05% ஆக காணப்பட்டது.
ஜுன் 30 ஆம் திகதியன்று வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 121,244 மில்லியனாக காணப்பட்டது. வங்கியின் கடன்கள் மற்றும் கிடைப்பனவுகள் போன்றன ரூ. 70,656 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5% அதிகரிப்பாகும். வங்கியின் வைப்புகள் இருப்பு என்பது ரூ. 85,132 மில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3% அதிகரிப்பாகும். 2021 ஜனவரி முதல் ஜுன் வரையான காலப்பகுதியில், சராசரி CASA பெறுமதி 11% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. ஆரோக்கியமான CASA உட்பாய்ச்சலை பேணுவதற்கான முயற்சிகளில், வங்கியினால் பின்பற்றப்பட்டிருந்த கையகப்படுத்தப்பட்ட தந்திரோபாயங்கள் முக்கிய பங்காற்றியிருந்தன. அறிக்கையிடல் காலப்பகுதியில் வங்கியின் CASA விகிதம் 28.5% ஆக காணப்பட்டது.

வங்கி துரிதமான மூலதன போதுமை விகிதத்தை பேணியிருந்ததுடன், அறிக்கையிடல் காலப்பகுதியில் மொத்த மூலதன போதுமை விகிதமாக 15.88%ஐ பதிவு செய்திருந்தது.
வங்கியின் துணை நிறுவனங்களான UB ஃபினான்ஸ் மற்றும் NAMAL ஆகியனவும் வெளியக அழுத்தங்களுக்கு முகங்கொடுத்திருந்தன. வங்கி மற்றும் துணை நிறுவனங்களைக் கொண்ட குழுமம், 2021 முதல் அரையாண்டு காலப்பகுதியில் ரூ. 938 மில்லியனை வரிக்கு முந்திய இலாபமாக பதிவு செய்திருந்தது. குழுமத்தின் வரிக்கு பிந்திய இலாபம் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 43% இனால் அதிகரித்திருந்தது. குழுமத்தின் மொத்த சொத்துக்கள் ரூ. 127,361 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில் 95%ஐ வங்கி தன்வசம் கொண்டிருந்தது. குழுமத்தினால் ஆரோக்கியமான மூலதன போதுமை விகிதம் 16.49% ஆக காணப்பட்டது.

ஆரோக்கியமான திரள்வு நிலைகளை பேணியிருந்ததுடன், சவால்களுக்கு மத்தியில் தடங்கலில்லாத செயற்பாடுகளை பேணியிருந்ததுடன், ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இயங்கும் போது ஊழியர் மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. விற்பனை, சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை மற்றும் கூட்டாண்மை வாடிக்கையாளர்களுடன் நெருக்கமான ஈடுபாடுகளைப் பேணியிருந்ததுடன், கிளைகள் மற்றும் உறவுமுறை முகாமையாளர்கள் தமக்கு காணப்பட்ட பிரத்தியேகமான சவால்களை இனங்கண்டு, அவசியமான வங்கியியல் உதவிகளை வழங்கியிருந்தனர். இதில், இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட நிவாரணத் திட்டத்தை முன்னெடுப்பதும் அடங்கியிருந்தது.

டிஜிட்டல் வங்கியியல் தொடர்பான தந்திரோபாய திட்டத்துக்கமைய, மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் தனது டிஜிட்டல் ஆற்றலை மேம்படுத்தியிருந்ததுடன், யூனியன் வங்கியின் மொபைல் வங்கிச் சேவை app மேம்படுத்தப்பட்டு ‘UBgo’ எனும் நாமத்தில் மீளறிமுகம் செய்யப்பட்டிருந்தது. Lanka QR நியமத்துக்கமைய தொடர்புபடுத்தப்பட்டு, அதன் பாவனையாளர்களுக்கு ஒப்பற்ற கொடுப்பனவு அனுபவத்தை வழங்குவதாக அமைந்துள்ளது. யூனியன் வங்கி மொபைல் App உடன் Lanka QR ஒன்றிணைப்பு செய்யப்பட்டு, வேகமான மற்றும் பாதுகாப்பான, பணமில்லாத கொடுப்பனவுகளை யூனியன் வங்கிக் கணக்குகளினூடாக நேரடியாக மேற்கொள்ளக்கூடிய வசதிகள் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் வங்கியியல் அனுபவத்தை புரட்சிகரமான வகையில் மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன. எதிர்காலத்தில் பிரதான வங்கி நாளிகையாக மொபைல் வங்கிச் சேவை app ஐ மேம்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியான முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது. தொழில்நுட்ப ரீதியில் செயற்படுத்தப்பட்ட வங்கியியல் சௌகரியங்களை வழங்குவதற்காக யூனியன் வங்கியினால் Missed Call வங்கிச் சேவையும் ஜுன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. எந்தவொரு மொபைல் தொலைபேசியிலும் அணுகக்கூடிய வகையில் இந்த தீர்வு அமைந்துள்ளது. SMS அடிப்படையிலான அறிவித்தல் சேவையாக அமைந்திருப்பதுடன், கணக்குதாரர்களுக்கு உடனடியாக தமது கணக்கு மீதிகளை தம் மொபைல் தொலைபேசிகளில் பெற்றுக் கொள்ளும் வசதியை வழங்குவதாக அமைந்துள்ளது.
மூன்றாம் அலைத் தொற்றுப் பரவல் மத்தியிலும் அத்தியாவசிய சேவையாக இயங்கியிருந்ததுடன், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பரிபூரண நடவடிக்கைகளை வங்கி உறுதி செய்திருந்தது. கிளை வலையமைப்பிலும், தலைமையகத்திலும் கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வங்கி ஏற்படுத்தியிருந்ததுடன், வீடுகளிலிருந்து பணியாற்றும் வசதிகளையும் தெரிவு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கியிருந்தது. வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் ATM வலையமைப்பு, ஒன்லைன்/மொபைல் வங்கிச் சேவை கட்டமைப்பு மற்றும் 24 மணி நேர அழைப்பு நிலையம் ஆகியவற்றுடன் தொடர்பை ஏற்படுத்தும் வசதி போன்றவற்றினூடாக பாதுகாப்பான வங்கிச் சேவை அனுபவத்தை வழங்குவதை வங்கி உறுதி செய்திருந்தது. பயணக் கட்டுப்பாடுகள் நிலவிய காலப்பகுதியிலும் அத்தியாவசிய வங்கியியல் சேவைகளை மேற்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட கிளைகள் இயக்கத்தில் இருந்தன.

வங்கியின் முதல் அரையாண்டு காலப்பகுதியின் நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் யூனியன் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “2021 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு பகுதியில் வங்கியின் வளர்ச்சியில், மூன்றாம் அலைத் தாக்கம் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. மூன்றாம் அலைத் தாக்கத்துடன், இலங்கை மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்பட்ட நிவாரண வசதிகளை பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் நாம் கவனம் செலுத்தியிருந்தோம். இந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதியில், வங்கியின் வருமானத்தை நிர்வகித்திருந்ததுடன், ஆரோக்கியமான திரள்வு நிலை, உறுதியான மூலதன போதுமை விகிதம் போன்றவற்றை பேணுவதில் வங்கி கவனம் செலுத்தியிருந்தது. வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் வங்கி கவனம் செலுத்தியிருந்தது. எஞ்சியிருக்கும் காலப்பகுதியில் சகல பிரிவுகளையும் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு அவசியமான நிதிச் சேவைகளை பெற்றுக் கொடுத்து, வளர்ச்சியை நோக்கிய நகர்வுகளை நாம் மேற்கொள்வதுடன், எமது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சகல முற்காப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.” என்றார்.

சிறந்த முதல் காலாண்டு நிதிப் பெறுபேறுகளுடன், யூனியன் வங்கி உறுதியான வளர்ச்சியைப் பதிவு

சிறந்த முதல் காலாண்டு நிதிப் பெறுபேறுகளுடன், யூனியன் வங்கி உறுதியான வளர்ச்சியைப் பதிவு

பிரதான வங்கியியல் வளர்ச்சி மற்றும் இலாபகரத்தன்மை

யூனியன் வங்கி, 2021 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாத காலப்பகுதியை உறுதியான நிதிப் பெறுபேறுகளுடன் நிறைவு செய்துள்ளது. இதனூடாக பெருமளவு எதிர்பாரப்புகளுடன் உறுதியான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

யூனியன் வங்கியின் பிரதான வங்கியியல் பெறுபேறுகள் என்பது தந்திரோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைப் பிரிவுகளின் முயற்சிகளினூடாக வலுவூட்டப்பட்டிருந்தது.  மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் நிலவிய சவால்கள் நிறைந்த சூழலிலும், வங்கி தனது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மீள வடிவமைத்து, வக்சீன் வழங்கல் ஆரம்பிக்கப்பட்டதுடன் எழுந்த நேர்த்தியான பொருளாதார சூழ்நிலையை கவனத்தில் கொண்டு தனது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்ததனூடாக 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சியை பதிவு செய்யக்கூடியதாக இருந்தது.

முதல் காலாண்டுக்கான வங்கியின் ஒட்டுமொத்த வருமானம் என்பது ரூ. 1521 மில்லியனாக பதிவாகியிருந்தது. சவால்கள் நிறைந்த தொழிற்பாட்டு சூழலில் ஒட்டுமொத்த வருமானம் முன்னைய ஒப்பீட்டு காலாண்டுடன் ஒப்பிடுகையில் 1% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.

வங்கியின் தேறிய வட்டி வருமானம் (NII) 985 மில்லியன் ரூபாயாக காணப்பட்டது. இது 2020 மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒப்பீட்டு காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 4% வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் நிலவிய குறைந்த AWPLR பெறுமதிகள் இதில் பங்களிப்பு வழங்கியிருந்தன. கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த வட்டி வீதங்கள் குறைப்புடன் சகாயமான கடன் வழங்கல் திட்டங்கள் போன்றன இந்த வீழ்ச்சியில் பங்களிப்பு செலுத்தியிருந்தன. குறைந்த வட்டி வீதங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்ட போதிலும் கடனுக்கான கேள்வி எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று அதிகரிக்கவில்லை. பொருளாதார செயற்பாடுகளில் ஏற்பட்ட வளர்ச்சி ஒட்டுமொத்த கடன் வளர்ச்சியில் பங்களிப்பு வழங்கியிருந்தன. இந்த சவால்கள் மத்தியிலும், தேறிய வட்டி வருமானத்தை நிர்வகிப்பதில் வினைத்திறன் வாய்ந்த இலாகா நிர்வாக தந்திரோபாயங்கள் பங்களிப்பு வழங்கியிருந்தன.

மேம்படுத்தப்பட்ட தரகு வருமானம், நிகரக் கட்டணம் மற்றும் இதர தொழிற்படு வருமானம் ஆகியவற்றினூடாக இலாபகரத் தன்மை வலிமைப்படுத்தப்பட்டிருந்ததுடன், வங்கியின் தேறிய தரகு மற்றும் கட்டண வருமானம் என்பது 2021 முதல் காலாண்டு நிறைவில் 216 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. இது ஒப்பீட்டுக் காலப்பகுதியுடன் கருதுகையில் 7% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. இதில் வியாபார கடன்கள், கடன் அட்டைகள் மற்றும் வியாபாரங்களுடன் தொடர்புடைய கொடுக்கல் வாங்கல்கள் போன்றன பிரதான பங்களிப்பை வழங்கியிருந்தன.

வங்கியின் திறைசேரி பிரிவு முதல் காலாண்டில் சிறப்பாக செயலாற்றியிருந்தது. வங்கியின் வருமானத்தில் முக்கிய பங்களிப்பை இந்தப் பிரிவு மூலதன மற்றும் பரிமாற்ற வருமதிகளின் அடிப்படையில் வழங்கியிருந்தது. வங்கியின் இதர தொழிற்பாட்டு வருமானம் என்பது 73% இனால் அதிகரித்திருந்தது. இதில் நாணயப் பரிமாற்று வீதங்களில் நிலவிய ஏற்றத் தாழ்வுகள் பங்களிப்பு வழங்கியிருந்தன.

மேம்படுத்தப்பட்ட தொழிற்பாட்டு வினைத்திறனுக்கான தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் செலவு நிர்வாக முயற்சிகளினூடாக, வங்கியின் தொழிற்பாட்டு செலவீனம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9% இனால் குறைவடைந்து 907 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது.

மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதிக்கான மதிப்பிறக்கத்திற்கு முன்னரான இலாபம் ரூ. 614 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 23% அதிகரிப்பாகும்.

பாரிய பொருளாதார சூழலில் நிலவிய அழுத்தங்கள் மற்றும் மேலதிக முடக்கநிலைகளின் போதும் வங்கி மதிப்பிறக்க கட்டணங்களை செலுத்தியதுடன், அதன் பிரகாரம் காலாண்டுக்கான மதிப்பிறக்க கட்டணம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 111% இனால் அதிகரித்து ரூ. 196 மில்லியனாக பதிவாகியிருந்தது. நோக்குடனான மீட்சி முயற்சிகளுடன், மீளச் செலுத்தல்கள் மற்றும் கடன் வளர்ச்சி, நிகர தொழிற்படா கடன்கள் (NPL) விகிதம் ஒட்டு மொத்த மேம்படுத்தல் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் காணப்பட்ட 6.05% உடன் ஒப்பிடுகையில் மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலாண்டில் 5.85% ஆக முன்னேறியிருந்தது.

காலாண்டுக்கான தொழிற்பாட்டு செயற்பாடுகளினூடான பெறுபேறுகள் ரூ. 418 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3% அதிகரிப்பாகும்.

துணை நிறுவனங்களின் உரிமையாண்மை பங்குகள் அடங்கலாக வங்கியின் வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 282 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 57% அதிகரிப்பாகும். வங்கியின் சார்பாக நேர்த்தியான தாக்கத்தையும், UB ஃபினான்ஸ் கம்பனியிலிருந்து வெளிப்பட்டிருந்த ஒத்திவைக்கப்பட்ட வரி சொத்து பதிவினால் எழுந்த மறைத் தாக்கத்தையும் இது பிரதிபலித்திருந்தது.

வங்கியின் மொத்த பரிபூரண வருமானம் ரூ. 137 மில்லியனாகும்.

வங்கியின் மொத்த சொத்துக்கள் 2021 மார்ச் 31 ஆம் திகதியன்று ரூ. 124,796 மில்லியனாக அதிகரித்திருந்தது. கடன்கள் மற்றும் முற்பணங்கள் 6% இனால் அதிகரித்து ரூ. 71,609 மில்லியனாக பதிவாகியிருந்தது. வாடிக்கையாளர்கள் வைப்புகள் 2% வளர்ச்சியை பதிவு செய்து ரூ. 83,829 மில்லியனாக பதிவாகியிருந்தது. ஆரோக்கியமான CASA உட்பாய்ச்சலை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதுடன், நோக்குடனான கையகப்படுத்தல் தந்திரோபாயங்களுடன் விற்பனை, கூட்டாண்மை மற்றும் SME வங்கியியல் பிரிவுகள் பங்களிப்பை வழங்கியிருந்தன. இதன் பெறுபேறாக ஒட்டுமொத்த CASA மீதி 4.2% இனால் அதிகரித்ததுடன், CASA விகிதம் 30.5% ஆக காணப்பட்டது.

உறுதியான மூலதன விகிதங்களை பேணுவது நிர்வாகத்தின் முன்னுரிமையாக அமைந்திருந்தது. யூனியன் வங்கியின் மொத்த மூலதன போதுமை விகிதம் 2021 மார்ச் 31ஆம் திகதி 15.88% ஆக காணப்பட்டது. இது ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை விட மிகவும் உயர்வானதாகும்.

வங்கி மற்றும் இரு துணை நிறுவனங்களான நஷனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிடெட் மற்றும் UB ஃபினான்ஸ் கம்பனி லிமிடெட் ஆகிய இரு துணை நிறுவனங்களைக் கொண்ட குழுமம் வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 301 மில்லியனை பதிவு செய்திருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 54% அதிகரிப்பாகும்.

குழுமத்தின் மொத்த சொத்துக்கள் பெறுமதி ரூ. 131,305 மில்லியனாகும். இதில் 95% ஐ வங்கி கொண்டிருந்தது. குழுமம் ஆரோக்கியமான மொத்த மூலதன விகிதமான 15.97% ஐ காலாண்டின் இறுதியில் கொண்டிருந்தது.

 

செயற்பாட்டு பெறுபேறுகள்

வருடத்தின் ஆரம்பத்தில் சிறந்த அறிவிப்பாக, பெருமைக்குரிய ஏசியன் பாங்கர் கொடுக்கல் வாங்கல் நிதியியல் விருதுகள் 2020 இல் “இலங்கையின் சிறந்த நிதி முகாமைத்துவ வங்கி” எனும் விருதை வங்கி சுவீகரித்திருந்தது. யூனியன் வங்கி BizDirect எனும் நவீன நிதி முகாமைத்துவ தீர்வின் வெற்றிகரமான செயற்பாட்டை உறுதி செய்து இந்த விருது வழங்கப்பட்டிருந்தது. கூட்டாண்மை மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை பிரிவுகளின் டிஜிட்டல் நிதி முகாமைத்துவ தேவைகளை பெருமளவு நிவர்த்தி செய்திருந்த யூனியன் வங்கி BizDirect இனால் வங்கியின் CASA மற்றும் கட்டண வருமான வளர்ச்சிக்கு 2021 இன் முதல் காலாண்டில் பெருமளவு பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது.

வங்கியின் கூட்டாண்மை வங்கியியல் பிரிவு மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. கூட்டாண்மை கடன்கள் பிரிவு 13% இனால் விரிவாக்கம் செய்யப்பட்டதுடன், கூட்டாண்மை வங்கியியல் பிரிவின் வைப்புகள் பிரிவு 6% இனால் அதிகரித்திருந்தது. 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வங்கியின் சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைப் பிரிவு நேர்த்தியான வளர்ச்சியைக் கொண்டிருந்தது. தந்திரோபாயமான கடன் வழங்கல் வழிமுறையினூடாக கடன் வளர்ச்சி 3% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. சொத்துக்கள் வளர்ச்சியில் சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைப் பிரிவு உறுதியான பங்களிப்பை ஏற்படுத்தியதுடன், SME CASA இருப்பு அடங்கலாக சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை வியாபாரத்தின் வளர்ச்சிக்கு கிளைமட்டத்திலிருந்தான கவனம் செலுத்துகை அதிகரித்திருந்தது.

சவால்கள் நிறைந்த சந்தை சூழ்நிலைகள் நிலவிய போதிலும், வங்கியின் வாடிக்கையாளர் பிரிவு என்பது வைப்புகள் வளர்ச்சியை பதிவு செய்ததுடன், உறுதியான CASA இலாகா விரிவாக்கமான 10% ஐயும் பதிவு செய்திருந்தது. குறைந்த வட்டிவீதச் சூழலின் போதும், வங்கியின் முன்னுரிமையளிக்கப்பட்ட புதிய கையகப்படுத்தல்கள் இந்த வளர்ச்சிக்கு வித்திட்டிருந்தன. வாடிக்கையாளர் சொத்துக்கள் பிரிவு, தொடர்ந்தும் விரிவாக்கமடைந்ததுடன், கடன் அட்டைகள் பிரிவின் வளர்ச்சி அடங்கலாக வங்கியின் நோக்குடனான முயற்சிகள் இதில் பங்களிப்பு வழங்கியிருந்தன. இலகு மீளச் செலுத்தலுக்காக நெகிழ்ச்சியான 0% தவணைமுறை திட்டங்களை கடன் அட்டை வழங்குவதுடன், மீதி மாற்றத் தெரிவுகள் மற்றும் விசேட புத்தாண்டு விலைக்கழிவுகள் 100 க்கும் அதிகமான விற்பனையாளர் பங்காளர் பகுதிகளில் வழங்கப்பட்டிருந்தன. புதிய வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் நோக்கிலும், ஏற்கனவே காணப்படும் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. வெளிநாட்டு ஊழியர் பண அனுப்புகைகளை முன்னெடுக்கும் முயற்சியில் இணைந்து, வெஸ்டர்ன் யூனியன் பண அனுப்புகைகளுக்கு ஊக்குவிப்பு அன்பளிப்புச் சலுகை வங்கியினால் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

வியாபார வளர்ச்சிக்கு உதவும் வகையில் மனித வளங்கள் மற்றும் செயற்பாடுகள் அமைந்திருந்தன. சந்தைப் போக்குகளுக்கு பொருந்தும் வகையில் செயன்முறைகள் மற்றும் வளங்கள் மீளமைப்புகளினூடாக செலவு முகாமைத்துவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தொடர்ச்சியான ஊழியர் ஈடுபாட்டு நடவடிக்கைகளின் அங்கமாக, வங்கியினால் புதிய டிஜிட்டல் ஈடுபாட்டு மற்றும் ஒன்றிணைவு போர்டல் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதனூடாக ஊழியர்களுக்கு அவர்களின் இருப்பிடங்களிலிருந்தவாறே தம்மத்தியில் தொடர்பாடல்களை மேம்படுத்த முடிந்தது. 2020 ஆம் ஆண்டில் தனது 25 வருட பூர்த்தியை எய்திய யூனியன் வங்கி, 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வங்கியில் நீண்ட காலமாக பணியாற்றிய ஊழியர்களை கௌரவிக்கும் விசேட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

யூனியன் வங்கியின் வருடாந்த நிதி அறிக்கை 2020 “மீளநோக்கு, மீளமைப்பு, மீளுறுதி” எனும் தொனிப்பொருளில் 2021 பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்டிருந்தது. சவால்கள் மத்தியில் முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு வங்கியின் அர்ப்பணிப்பை குறிப்பதாக இது அமைந்துள்ளது. வங்கியின் வருடாந்த பொது ஒன்று கூடல் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. மெய்நிகர் அமர்வாக சகல சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றி இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வங்கியின் பெறுபேறுகள் தொடர்பில் யூனியன் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “2021 ஆம் ஆண்டை நாம் நேர்த்தியாக ஆரம்பித்துள்ளோம். ஆண்டுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளை எய்துவதற்கு வங்கி கொண்டுள்ள திறனை வெளிப்படுத்துவதாக 1ஆம் காலாண்டு நிதிப் பெறுபேறுகள் அமைந்துள்ளன. கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் தொடர்ந்தும் உதவிகளை வழங்குகின்றோம். நுகர்வோர், சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை மற்றும் கூட்டாண்மை வங்கியியல் பிரிவுகளில் எதிர்பார்க்கப்படும் தந்திரோபாய வளர்ச்சியை எய்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும். உறுதியான நிதிப் பின்புலத்துடன், நோக்குடைய தந்திரோபாயமான வியாபாரத் திட்டத்தைக் கொண்டு யூனியன் வங்கி தொடர்ந்தும் சந்தையில் காணப்படும் சவால்களுக்கு மத்தியில் வாய்ப்புகளை எதிர்கொண்டு முன்னேறுவதற்கு திட்டமிட்டுள்ளது.” என்றார்.

யூனியன் வங்கி சவால்கள் நிறைந்த சூழலிலும் மீண்டெழும் நிலையை பேணியிருந்தது

யூனியன் வங்கி சவால்கள் நிறைந்த சூழலிலும் மீண்டெழும் நிலையை பேணியிருந்தது

நிதிச் செயற்பாடுகள் மேலோட்டம்

2020 ஆம் ஆண்டில் தேசத்துக்கு சேவைகளை வழங்குவதில் 25 வருட பூர்த்தி எனும் மைல்கல்லை யூனியன் வங்கி கடந்திருந்தது. கடந்த ஆண்டில் வங்கியின் செயற்பாடுகள் மற்றும் அத்திவாரம் ஆகியவற்றுக்கு பெரும் சவால்கள் நிலவியிருந்ததுடன், அச்சவால்களுக்கு உறுதியாக முகங்கொடுத்து வங்கி மீண்டிருந்தது. பொருளாதாரச் செயற்பாடுகள் மந்த கதியை அடைந்திருந்தமை காரணமாக தொழிற்படு வினைத்திறன் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், நெருக்கடியான சூழல்களை எதிர்கொள்வதற்காக செலவு செம்மையாக்கங்கள், வளங்கள் மற்றும் உற்பத்தித்திறன் வினைத்திறனான முறையில் நிர்வகித்திருந்தமை மற்றும் கடுமையான இலாகா நிர்வாகம் போன்றவற்றில் வங்கி தொடர்ச்சியாக கவனம் செலுத்தியிருந்தது.

சவால்கள் நிறைந்த சூழலிலும், தனது திரள்வு இருப்புகளை துரிதமாக யூனியன் வங்கி அதிகரித்திருந்ததுடன், உறுதியான மேலதிக திரள்வு நிலையை பேணியிருந்தது. ஃபிட்ச் ரேட்டிங்ஸ் 2020 ஆம் ஆண்டுக்கான தனது தரப்படுத்தல்களின் போது, யூனியன் வங்கியின் தற்போதைய தரப்படுத்தலை மீள உறுதி செய்திருந்தது. இதற்கு உறுதியான திரள்வு நிலை மற்றும் மூலதனம் ஆகியன பக்கபலமாக அமைந்திருந்தன. தொற்றுப் பரவலுடனான பொருளாதார தாக்கங்களின் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு உதவ, குறிப்பிடத்தக்களவு நிதியியல் நெகிழ்ச்சித் தன்மையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு யூனியன் வங்கி நம்பிக்கையுடனும், துறையின் முன்னோடியான மூலதன நிலையையும் பேணியிருந்தது. வருடம் முழுவதிலும் வங்கி துரிதமான மூலதன போதுமை விகிதத்தை பேணியிருந்ததுடன், வருட இறுதியில் 16.95% மொத்த மூலதன விகிதத்தை பதிவு செய்திருந்தது. இது ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை விட உயர்வாக அமைந்திருந்தது.
வங்கி துரிதமாக தனது செயற்பாடுகளை மீள ஒழுங்குபடுத்தியிருந்ததுடன், தொற்றுப் பரவல் காரணமாக புதிய சந்தை போக்குகள் மற்றும் வாடிக்கையாளர் சாய்வில் அதிகளவு முன்னுரிமையளித்து கவனம் செலுத்தியிருந்தது. உள்ளார்ந்த வியாபார தந்திரோபாயத்தை வங்கி நிறைவேற்றியிருந்ததுடன், அதன் சேவைகள் மிருதுவாக தொடர்ந்தும் இடம்பெறுவதை உறுதி செய்திருந்தது. அத்துடன் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முன்னுரிமையளித்திருந்தது. ஊழியர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதில் மாற்று பணித் தீர்வுகளை வழங்கியிருந்ததுடன், வீட்டிலிருந்து பணியாற்றும் வசதிகள், தொடர்ச்சியாக பணிகள் இடம்பெறுவதை உறுதி செய்வதற்கு மேலதிக உட்கட்டமைப்பு வசதிகள் போன்றன நாட்டில் முடக்க நிலை அமுலில் இருந்த காலப்பகுதியில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தன.
வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும் அவர்களின் வழமையான வாழ்க்கைக்கு மீளத்திரும்புவதற்கு அவசியமான பிரத்தியேகமான திட்டங்களை முன்னெடுப்பதில் இலங்கை மத்திய வங்கி கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்காக பரிந்துரைத்திருந்த நிவாரணத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருந்தது. இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலமைந்த ஒழுங்குபடுத்தல் மற்றும் நாணயக் கொள்கை குறைப்புகள் போன்றவற்றை யூனியன் வங்கி அமுலாக்கியிருந்ததுடன், கடன் அட்டைகள் அடங்கலாக தனது கடன் திட்டங்களின் மீது வட்டி வீதங்களையும் குறைத்திருந்தது. இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் நிவாரணத் திட்டத்தின் பிரகாரம் கடன் பெறுநர்களுக்கு வழங்கப்பட்ட முதல் தொகை மற்றும் வட்டியின் மீதான மீளச் செலுத்தல் சகாய முறைமையை யூனியன் வங்கி வழங்கியிருந்ததுடன், வங்கியின் உள்ளக கடன் கொகை வழிகாட்டல்களின் பிரகாரம், இலங்கை மத்திய வங்கியின் விதிமுறைகளுக்கு அப்பாலும் வாடிக்கையாளர்களுககு கடன் நிவாரணங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த சகாயத்திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்ட தீர்வுகளில் கடன்கள், லீசிங்கள், மேலதிகப் பற்றுகள், அடைமானங்கள் மற்றும் வர்த்தக நிதியளிப்பு வசதிகள் போன்றன அடங்கியிருந்தன. தொழிற்பட கடன் பெறுநர்களும் இந்த கடன் சகாயத் திட்டத்துக்கு தகைமை பெற்றதுடன், அவர்களுக்கு பொருத்தமான மீளமைக்கப்பட்ட மீளச் செலுத்தும் முறைமைகள் வழங்கப்பட்டிருந்ததுடன், மேலதிக வசூலிப்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

வங்கியின் கடன்கள் மற்றும் முற்பணங்கள் பிரிவு ரூ. 67,518 மில்லியனாக பதிவாகியிருந்தது. வருட நிறைவில் வங்கியின் வைப்பு இருப்பு ரூ. 82,384 மில்லியனாக பதிவாகியிருந்தது. குறைந்த வட்டிச் சூழலிலும் 7.6% வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. குறைந்த செலவு வைப்புகளின் மீதான தந்திரோபாய நோக்கு தொடர்ந்தும் சிறந்த பெறுபேறுகளை ஏற்படுத்தியிருந்தது. வியாபார அலகுகளினால் CASA மீதான வளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகளினூடாக இதை எய்த முடிந்தது. வங்கியின் CASA இலாகா சிறந்த வளர்ச்சியைப் பதிவு செய்திருந்ததுடன், 2020 டிசம்பர் மாதத்தில் 26.8% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. 2019 ஆம் ஆண்டில் பதிவாகியிருந்த 25% என்பதை விட 2020 ஆம் ஆண்டில் 30% ஆக திரண்ட CASA பெறுமதி பதிவாகியிருந்தது.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நிவாரணத் திட்டங்கள் வழங்கப்பட்டமை மற்றும் குறைந்த வட்டி சதவீதச் சூழல் போன்றவற்றினூடாக வங்கியின் தேறிய வட்டி எல்லை (NIM) 3.2 % ஆக பதிவாகியிருந்தது. 2019 ஆம் ஆண்டில் இது 3.6 % ஆக காணப்பட்டது. 2020 நவம்பர் மாதம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டிருந்த வழிகாட்டுதல்களுக்கமைய வங்கியின் தேறிய வட்டி வருமானம் (NII) பெறுமதி மேலும் பாதிக்கப்பட்டிருந்தது. 2020 மார்ச் மாதத்தில் வழங்கப்பட்டிருந்த கடன் மீளச் செலுத்தும் சகாய கால நிவாரணத்தை மேலும் 60 நாட்களுக்கு நீடிப்பது தொடர்பில் இது அமைந்திருந்ததுடன், ஆகக்கூடிய நிவாரண வட்டி வீதமாக 7% ஐ அறிவித்திருந்தமை போன்றவற்றினூடாக சம அளவுகளில் மாதாந்தம் மீளச் செலுத்தப்படும் வகையில் வழங்கப்பட்டிருந்த கடன் வசதிகளில் வட்டி வருமானத்தில் வீழ்ச்சி பதிவாகியிருந்தது.
மோசமான சந்தை சூழல்களின் காரணமாக கட்டண வருமானம் பாதிப்படைந்து முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18.4% சரிவை பதிவு செய்திருந்தது. கொவிட்-19 நிவாரணத்தினூடாக வழங்கப்பட்ட கட்டண விலக்கழிப்புகள், இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக வர்த்தக வருமானங்களில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் வருடம் முழுவதிலும் காணப்பட்ட குறைந்த கடன் வளர்ச்சி காரணமாக காணப்பட்ட கடன்களுடன் தொடர்புடைய கட்டணங்களில் ஏற்பட்ட வீழ்ச்சி போன்றன அடங்கலாக வழங்கப்பட்ட கட்டண விலக்கழிப்புகள் இதில் தாக்கம் செலுத்தியிருந்தன.
திறைசேரி சிறப்பாக செயலாற்றியிருந்ததுடன், உறுதியான மூலதன வருமதிகளைப் பதிவு செய்திருந்தது, முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 84.2% அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. வங்கியின் இதர தொழிற்படு வருமானம் ரூ. 162 மில்லியனால் அதிகரித்திருந்தது. இதில் வெளிநாட்டு நாணயப் பரிமாற்று வருமானம் மற்றும் வாடிக்கையாளர் கொடுக்கல் வாங்கல்களில் ஏற்பட்ட வளர்ச்சி, நாணயப் பெறுமதியின் வீழ்ச்சி மற்றும் 2020 ஆம் ஆண்டில் மாற்றுக் கொடுக்கல் வாங்கல்களில் ஏற்பட்ட வீழ்ச்சி போன்றன பங்களிப்பு வழங்கியிருந்தன.
வங்கி எவ்விதமான வர்த்தக பங்குகளைக் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அறிக்கையிடப்பட்ட திகதியில் எந்தவொரு பங்கிலும் முதலீடுகளை மேற்கொண்டிருக்கவில்லை.
ஆண்டின் மொத்த தொழிற்பாட்டு வருமானம் ரூ. 5,890 மில்லியனாக பதிவாகியிருந்தது. சவால்கள் நிறைந்த சந்தைச் சூழல்களில் எல்லையளவு வீழ்ச்சியை பதிவு செய்திருந்தன.
நிகர NPL விகிதம் வருட நிறைவில் 6.05% ஆக காணப்பட்டது. ஒட்டுமொத்த NPL அதிகரிப்பு ரூ. 230 மில்லியனாக மாத்திரம் பதிவாகியிருந்தது. கடன் இலாகாவின் ஒட்டுமொத்த குறைப்பு என்பது இந்த விகிதத்தில் அதிகரிப்பை பிரதிபலித்திருந்தது. இலாகாவின் தரத்தை பேணுவதில் வங்கியினால் பேணப்பட்ட கடுமையான வழிமுறைகளினூடாக, சந்தையில் காணப்பட்ட தளம்பல்களின் போது தொழிற்படாக் கடன்களை (NPL) கட்டுப்படுத்த முடிந்தது.
மதிப்பிறக்க கட்டணம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 88.5% அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தது. அதன் கடன் இழப்புகள் குறைவாக காணப்பட்டதுடன், மதிப்பிறக்கமான சூழலில் நிர்வாக மேற்கட்டமைப்புகளினூடாக குறிப்பிடத்தக்களவு ஒதுக்கங்களை வங்கி பதிவு செய்திருந்தது. இடர் உயர்ந்து காணப்படும் துறைகளாக மூன்று துறைகள் இனங்காணப்பட்டதுடன், நிலை மாற்றங்களை ஏற்படுத்தியிருந்ததனூடாக இவற்றின் மீது மேலதிக ஒதுக்கங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பொருளாதாரக் காரணிய சீராக்கங்களின் (EFA)தொடர்பில், 2020 டிசம்பர் 31ஆம் திகதி சிறந்த நிலையிலிருந்து மோசமான நிலைக்கு ஒதுக்கீடுகள் அதிகரித்து, வலுவிழந்து செல்லும் சூழலுக்கு பொறுப்புக்கூறும் வகையில் அமைந்திருந்தன. மதிப்பிறக்கங்களின் மீது இது அதிகரித்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. நாட்ன் இடர் தரப்படுத்தல் குறைப்புடன், திறைசேரியின் மதிப்பிறக்க பெறுமதிகளும் வெளிநாட்டு நாணயங்களின் மதிப்பிறக்கம் காரணமாக வீழ்ச்சியடைந்திருந்தன. கொவிட்-19 நிவாரணத் திட்டம் காரணமாக எழுந்த முழுயைமான மாற்றியமைப்பு இழப்பு இந்த மதிப்பிறக்க கட்டணத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதுடன், இது இலங்கை கணக்காய்வு நியம-9 (SLFRS 9) முறைமையின் பிரகாரம் அமைந்திருந்தது.
வங்கியின் பரந்தளவு செலவு முகாமைத்துவ செயற்பாடுகளினூடாக மொத்த தொழிற்படு செலவீனங்கள் நிர்வகிக்கப்பட்டிருந்ததுடன், ரூ. 3,772 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.5% வீழ்ச்சியாகும்.
தொழிற்படு எல்லைப் பெறுமதி என்பது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.3% இனால் குறைந்து ரூ. 2,118 மில்லியனாக பதிவாகியிருந்தது. செலவுகளில் 1.5% வீழ்ச்சிக்கு நிகராக வருமானத்தில் 2.2% வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது. வட்டி வருமானத்தை 7% ஆக குறைத்திருந்த 60 நாள் கடன் நிவாரணத் தாக்கத்தை தவிர்த்து நோக்கும் போது, தொழிற்படு எல்லைப் பெறுமதி 3.4% இனால் அதிகரித்திருக்கும்.
2020 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில் பங்கின் மீதான இழப்பு ரூ. 29 மில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டில் UB ஃபினான்ஸிலிருந்து வரித் திருப்பங்களின் காரணமாக ஒரு முறைக்கான வருமதி ரூ. 127 மில்லியனாக பதிவாகியிருந்தது. துணை நிறுவனங்களின் இலாபங்களும் பொருளாதாரச் சவால்கள் நிறைந்த சூழல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தன. ஆண்டுக்கான மொத்த வரி ரூ. 777 மில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது ரூ. 417 மில்லியன் குறைவாகும்.
வங்கியின் மாத்திரமான வருமானம் 2020 ஆம் ஆண்டில் ரூ. 605 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுப் பெறுமதிக்கு நிகரானதாக இருந்தது. துணை நிறுவனங்களின் மீதான பங்கு உரிமையாண்மை அடங்கலாக வங்கியின் இலாபம் என்பது ரூ. 577 மில்லியனாகும். முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18.8% வீழ்ச்சியாகும். 2019 ஆம் ஆண்டில் UB ஃபினான்ஸ் மீது பதிவாகியிருந்த ஒரு தடவை வருமானம் இதில் பிரதான தாக்கத்தை செலுத்தியிருந்தது. ஆண்டுக்கான இதர பரிபூரண வருமானம் ரூ. 183 மில்லியனாக பதிவாகியிருந்தது. மொத்த பரிபூரண வருமானம் ரூ. 759 மில்லியனாகும்.
வங்கி மற்றும் இரு துணை நிறுவனங்களான UB ஃபினான்ஸ் கம்பனி லிமிடெட் மற்றும் நஷனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிடெட் ஆகியன ரூ. 623 மில்லியனை வரிக்கு பிந்திய இலாபமாக பதிவு செய்திருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22.6% வீழ்ச்சியாகும். குழுமத்தின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 129.6 மில்லியனாக பதிவாகியிருந்தது. குழுமத்தின் மொத்த சொத்துக்களில் 95%ஐ வங்கி தன்வசம் கொண்டிருந்தது. எனவே, குழுமத்தின் பெறுபேறுகள் பெருமளவில் வங்கியின் செயற்பாடுகளில் தங்கியிருந்தது.

சவால்கள் மத்தியிலும் செயற்பாடுகள் மற்றும் வியாபாரத் தொடர்ச்சி நிலை

வாடிக்கையாளர் இருப்பில் தொற்றுப் பரவல் ஏற்படுத்திய தாக்கத்தை கவனத்தில் கொண்டு, வங்கியின் கூட்டாண்மை, சிறிய, நடுத்தர தொழிற்முயற்சியாண்மை மற்றும் சில்லறை வங்கியியல் பிரிவுகளுக்கு கொவிட்-19 தொற்றுப் பரவல் தொடர்பான நிதி நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் 2020 மார்ச் மாதம் முதல் கவனம் செலுத்தியிருந்தது. வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பொருத்தமான நிதித் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதில் எவ்விதமான உறுதி மொழியை தொடர்ந்து பேணியிருந்தது.
இலங்கை மத்திய வங்கியின் பரிந்துரைக்கப்பட்ட திட்டத்தின் கீழ், யூனியன் வங்கியின் வாடிக்கையாளர்களான சுய தொழிலில் ஈடுபடும் நபர்கள், வெளிநாட்டு நாணய வருமானமீட்டுவோர், சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்கள் போன்றன கடன் மீளச் செலுத்தலுக்காக இனங்காணப்பட்டனர். சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு பெருமளவு நிவாரணத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் காசோலை திரும்பல் கட்டண விலக்கழிப்புகள் மற்றும் கொடுப்பனவு நிறுத்தல் கட்டணங்கள் போன்றன அடங்கியிருந்தன. நிவாரணத் திட்டங்களின் அங்கமாக, வங்கியின் சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களில் 58 சதவீதமானவர்களுக்கு கடன் நிவாரணத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டனர். இலங்கை மத்திய வங்கியின் சௌபாக்கியா கொவிட்-19 நிவாரண கடன் திட்டத்தின் கீழ் சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு 1.3 பில்லியன் ரூபாய் பெறுமதியான தொழிற்படு மூலதன கடன்களை வழங்கியிருந்தது. பாதிக்கப்பட்ட தனிநபர் வாடிக்கையாளர்களுக்கு, வங்கி உடனடியாக கடன் அட்டை நிலுவைத் தொகைகள் நீடிப்புகள் மற்றும் சகல கடன்கள் மற்றும் குத்தகைகள் போன்றவற்றுக்கு இரு மாத கால மீளச் செலுத்தல் நீடிப்புகள் வழங்கப்பட்டன. தனிநபர் வங்கியியல் நிவாரணத் திட்டத்தில் சகல கடன்களுக்குமான தகைமையின் பிரகாரம் கடன் மீளச் செலுத்தல் சலுகைக் காலம் மற்றும் ஆகக்குறைந்த கட்டண செலுத்தும் நிவாரணம் மற்றும் கட்டண விலக்கழிப்புகள் அடங்கலாக கடன் அட்டைகளுக்கான நிவாரணம் போன்றன வழங்கப்பட்டிருந்தன. 2020 ஒக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட இரண்டாவது தொற்றுப் பரவலைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கான கடன் நிவாரணம் சகல பிரிவுகளிலும் நீடிக்கப்பட்டதுடன், இனங்காணப்பட்ட துறைகளில் வியாபார செயற்பாடுகள் தொடர்ச்சியான மீண்டெழுவதற்கு பங்களிப்பு வழங்கியிருந்தது.
யூனியன் வங்கியின் டிஜிட்டல் பண முகாமைத்துவ தீர்வான BizDirect தொடர்ச்சியாக அதன் கூட்டாண்மை மற்றும் சிறிய நடுத்தரளவு வாடிக்கையாளர்களுக்கு மிகவும் அவசியமான திரள்வு முகாமைத்துவ வினைத்திறனை உறுதி செய்திருந்ததுடன், வங்கிக்கு CASA மற்றும் கட்டண அடிப்படையிலான வருமானத்தையும் உறுதி செய்திருந்தது. டிஜிட்டல் தீர்வுகளுக்கான அதிகரித்துச் சென்ற கேள்வியின் காரணமாக, பல புதிய கூட்டாண்மை மற்றும் சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை வங்கியியல் வாடிக்கையாளர்கள் 2020 இல் இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டனர். யூனியன் வங்கி BizDirect வங்கியில் கொடுக்கல் வாங்கல் சிறப்புக்காக, ஏசியன் பாங்கர் கொடுக்கல் வாங்கல் நிதியியல் விருதுகள் 2020 இல், “இலங்கையின் சிறந்த பண முகாமைத்துவ வங்கி” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. சிறியளவு வங்கியியல் வியாபாரம் என்பது CASA கையகப்படுத்தல், வைப்பு பகிர்வு மற்றும் கடன் அட்டை இலாகா வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் மேம்பட்டிருந்தது. சொப்பிங் மீது விலைக்கழிவுகள், உணவகங்கள் மற்றும் e-வணிக கட்டமைப்புகள் போன்றவற்றில் 0% வட்டியில்லா தவணை முறை கொடுப்பனவுத் திட்டங்களுடன் நோக்குடைய வாழ்க்கை முறை சேமிப்புகள் அட்டைதாரர்களுக்கு வங்கி தொடர்ச்சியாக பெறுமதியை வழங்கியிருந்தது.
தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு, முடக்கநிலைகள், ஊரடங்கு நிலைகள் மற்றும் பிராந்திய தனிமைப்படுத்தல்கள் போன்றன அமுல்ப்படுத்தப்பட்ட போதிலும், வங்கி தொடர்ந்தும் தனது தந்திரோபாய வியாபாரத் தொடர்ச்சித் திட்டத்தைப் பின்பற்றி தடங்கலில்லாத வங்கிச் சேவைகளை தனது கிளைகள், ATM இயந்திரங்கள் மற்றும் இதர வசதிகளினூடாக வழங்கியிருந்தது. வங்கியின் ஒன்லைன் பாங்கிங் போர்டல் மற்றும் மொபைல் வங்கிச் சேவை app ஆகியன 2020 ஆம் ஆண்டில் மேலும் மேம்படுத்தப்பட்டிருந்தன. இதனூடாக பரந்தளவு வாடிக்கையாளர்களுக்கு தமது வீடுகளில் பாதுகாப்பாக இருந்தவாறே கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.
2020 நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் யூனியன் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “எமது தாங்குதிறன் மற்றும் தொடர்ச்சியான வியாபார முன்னெடுப்பு போன்றவற்றினூடாக யூனியன் வங்கியை சிறந்த நிலையில் பேண முடிந்தது. சவால்கள் நிறைந்த சூழலில் பங்காளர்களின் ஈடுபாடுகளை பாதுகாத்திருந்தது. ஆரோக்கியமான திரள்வு நிலைகளைப் பேணி உறுதியான மூலதனச் சந்தையையும் கொண்டிருந்தது. இதனூடாக, பாரதூரமான சந்தைச் சூழல்களுக்கு நிலையாக முகங்கொடுத்திருந்தது. செம்மையாக்கங்கள் வழிமுறையை நாம் தொடர்ந்து பின்பற்றுவதுடன், 2021 ஆம் ஆண்டில் தொழிற்பாட்டு வினைத்திறனை மேம்படுத்துவோம். இதை நாம் மீளமைத்துள்ளதுடன், உறுதியான வளர்ச்சியை தொடர்ந்தும் எய்தி, எமது பிரதான வலிமைகளை இதற்கு பங்களிப்புச் செய்யக்கூடியதாக இருக்கும். புதிய வழமையில் எமது வாடிக்கையாளர்களின் மற்றும் ஊழியர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமையளித்து செயலாற்றுவது என்பதற்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.” என்றார்.

சவால்கள் நிறைந்த சூழலிலும் 3ஆம் காலாண்டில் யூனியன் வங்கி சிறந்த நிதிப் பெறுபேறுகளைப் பதிவு

சவால்கள் நிறைந்த சூழலிலும் 3ஆம் காலாண்டில் யூனியன் வங்கி சிறந்த நிதிப் பெறுபேறுகளைப் பதிவு

முறையான செலவு மற்றும் இலாகா முகாமைத்துவ மூலோபாயத் திட்டங்களில் யூனியன் வங்கி தொடர்ச்சியாக கவனம் செலுத்தி, நடப்பு ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்தது.

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, நாட்டின் பொருளாதார சூழல் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்ததுடன், வியாபார செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டன. இவ்வாறான சவால்கள் நிறைந்த பொருளாதாரச் சூழலில், சராசரி பிரதான கடன் வழங்கல் வீதம் (AWPLR) வருடாந்த அடிப்படையில் 400bps களினால் வீழ்ச்சியடைந்ததுடன், திறைசேரி பத்திரங்களின் பெறுமதிகளும் மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வீழ்ச்சியை பதிவு செய்திருந்தன. இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்களின் பிரகாரம், யூனியன் வங்கியினால் அதன் கடன் அட்டைகள் அடங்கலாக பல்வேறு நிதி வழங்கல் தீர்வுகளின் மீதான வட்டி வீதங்களில் குறைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் தொழிற்படு மூலதன தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக சகாயப் பெறுமதிகளில் கடன்களை வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டிருந்ததுடன், இலங்கை மத்திய வங்கியின் கடன் திட்டங்களான சௌபாக்கியா கொவிட்-19 உதவி வசதியிலும் பங்கேற்றிருந்தது.

பொருளாதாரம், வியாபாரங்கள் மற்றும் நுகர்வோர் மீது கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக எதிர்மறைத் தாக்கங்கள் பதிவாகியிருந்த நிலையில், வங்கியியல் துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், வங்கி தொடர்ச்சியாக கொவிட்-19 தொடர்பான அனுகூலத் திட்டங்களில் கவனம் செலுத்தி, நுகர்வோரின் நிதியியல் மீட்சிக்கு உதவும் வகையிலான திட்டங்களை வழங்கியிருந்தது. இதனூடாக வியாபாரச் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து, நிதிசார் மீட்சியை எய்தவும், வியாபார செயற்பாடுகளை சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளின் பிரகாரம் முன்னெடுத்து, ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் இதர பங்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் முடிந்திருந்தது.

சவால்கள் நிறைந்த சூழல் அதிகரித்திருந்த நிலையில், யூனியன் வங்கியினால் திரள்வு இடைத்தடுப்புகள் அதிகரிக்கப்பட்டிருந்ததுடன், உறுதியான மேலதிக திரள்வு நிலையை பேண முடிந்திருந்தது.  மீளாய்வுக்குட்படுத்திய இக்காலப்பகுதியில், சராசரி நிலையான வைப்புகள் உறுதியாகவும், சராசரி CASA பெறுமதி ரூ. 23,805 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது ஒப்பீட்டளவில் 18சதவீத அதிகரிப்பாகும்.

இந்த நெருக்கடி நிறைந்த சூழலும் நுகர்வோருக்கு உதவும் வகையில் செயலாற்றியிருந்தமை மற்றும் வட்டி வீதங்களில் சரிவு பதிவாகியிருந்தமை காரணமாக தேறிய வட்டி எல்லைப் பெறுமதி 3.8% இலிருந்து 3.3% ஆக குறைந்திருந்தது.

தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவும் நோக்கில், இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்களின் பிரகாரம், காலம் கடந்த கொடுப்பனவு கட்டணம் மற்றும் இதர கட்டண விலக்கழிப்புகள் மற்றும் பொருளாதார செயற்பாடுகளில் சரிவு ஏற்பட்டிருந்தமை போன்ற காரணிகளால் இக்காலப்பகுதியில் ஒட்டுமொத்த கட்டண வருமானம் 25% இனால் வீழ்ச்சியடைந்திருந்தது.

மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் திறைசேரி பிரிவு குறிப்பிடத்தக்களவு பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்ததுடன், வியாபார இலாபம்/மூலதன வருமதிகளை பதிவு செய்து வருடாந்த அடிப்படையில் 108% அதிகரிப்பை எய்தியிருந்தது. குறித்த காலப்பகுதியில் நாணப் பரிமாற்ற வீதம் வீழ்ச்சியடைந்தமை காரணமாக வங்கியின் இதர தொழிற்படு வருமானம் அதிகரிப்பை பதிவு செய்திருந்தது.

சவால்கள் நிறைந்த சூழலில், காலாண்டுக்கான வங்கியின் தொழிற்படு வருமானம் ரூ. 1,692 மில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 3% வீழ்ச்சியடைந்திருந்தது. வங்கியின் பரந்தளவு செலவு முகாமைத்துவ செயற்பாடுகளினூடாக மொத்த தொழிற்படு செலவுகள் குறைக்கப்பட்டிருந்ததுடன், முன்னைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 5% இனால் குறைந்து ரூ. 941 மில்லியனாக பதிவாகியிருந்தது. அதுபோன்று, காலாண்டில் வங்கியின் வலுக்குறைப்பு இலாபம் ரூ. 751 மில்லியனாக பதிவாகியிருந்தது. ஒப்பீட்டு காலாண்டுப் பெறுமதிக்கு நிகரானதாக அமைந்திருந்தது.  வங்கியின் கடன் இழப்புகள் குறைவாக பதிவாகியிருந்ததுடன், வலுக்குறைப்பு பெறுமதி முன்னைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 31% அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தது. கொவிட்-19 கடன் சலுகைக் காலம் காரணமாக எழுந்த இழப்புகள், வலுக்குறைப்பு கட்டணத்தில் பதிவாகியிருந்ததுடன், இது Sri Lanka Accounting Standard – 9 (SLFRS 9) முறையின் பிரகாரம் பின்பற்றப்பட்டிருந்தது.

சவால்கள் நிறைந்த பாரிய-பொருளாதார பின்புலச்சூழலில், வங்கியின் செயற்பாடுகளினூடாக குறைந்தளவு பெறுபேறுகள் பதிவாகியிருந்தன. முன்னைய ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 12% இனால் வீழ்ச்சியடைந்து ரூ. 470 மில்லியனாக பதிவாகியிருந்தது. வங்கியின் துணை நிறுவனங்களான UB ஃபினான்ஸ் மற்றும் NAMAL ஆகியவற்றின் தொழிற்படு சூழலும் சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தது. வரி வீதங்களில் வீழ்ச்சி மற்றும் ஒதுக்கங்கள் தொடர்பான கவனமான நிர்வாகம் போன்றவற்றினால், வங்கியின் துணை நிறுவனங்களில் மீது கொண்டு பங்கு உரிமையாண்மைகளினூடாக வரிக்கு பிந்திய இலாபத்தை முன்னைய ஆண்டின் காலாண்டுப் பகுதியுடன் ஒப்பிடுகையில் அதே மட்டத்தில் பேண முடிந்தது.

வங்கியின் இதுவரையான தொழிற்படு வருமானம் ரூ. 4,643 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் மாற்றமின்றி அமைந்திருந்தது. வங்கியின் கடுமையான செலவு நிர்வாக செயற்பாடுகளினூடாக மொத்த தொழிற்படு செலவீனங்கள் பேணப்பட்டிருந்ததுடன், முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 4% இனால் குறைந்து ரூ. 2,855 மில்லியனாக பதிவாகியிருந்தது. அதுபோன்று, வங்கியின் வலுக்குறைப்புக்கு முன்னதான இலாபங்கள் ரூ. 1,787 மில்லியனாக பதிவாகியிருந்தது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 7% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. வங்கியின் கடன் இழப்புகள் குறைந்த மட்டத்தில் காணப்பட்டதுடன், நிர்வாக நடவடிக்கைகளினூடாக, குறிப்பிடத்தக்களவு ஒதுக்கங்களை பேணியிருந்ததனூடாக, ஒப்பீட்டுக் காலப்பகுதியுடன் கருதும் போது வலுக்குறைப்பு கட்டணங்களில் 59% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது.  கொவிட்-19 கடன் சலுகைக் காலம் காரணமாக எழுந்த இழப்புகள், வலுக்குறைப்பு கட்டணத்தில் பதிவாகியிருந்ததுடன், இது Sri Lanka Accounting Standard – 9 (SLFRS 9) முறையின் பிரகாரம் பின்பற்றப்பட்டிருந்தது.

தொடர்ச்சியாக சவால்கள் நிறைந்த பொருளாதார பின்புலத்தில், வங்கி தனது செயற்பாட்டு நடவடிக்கைகளினூடாக மந்தமான பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது. இதுவரையில் வங்கியின் செயற்பாட்டு நடவடிக்கைகளினூடாக வருமதி ரூ. 1,226 மில்லியனாக பதிவாகியிருந்தது. ஓப்பீட்டளவில் 7% வீழ்ச்சியாகும். வங்கியின் துணைநிறுவனங்களின் தொழிற்பாட்டு சூழலும், சவால்கள் நிறைந்ததாக அமைந்திருந்தது. துணைநிறுவனங்களில் வங்கி கொண்டிருந்த உரிமையாண்மை அடங்கலாக, வரி வீதங்களில் வீழ்ச்சி பதிவாகியிருந்தமை, ஒதுக்கங்களை கடுமையாக நிர்வகித்திருந்தமை போன்ற காரணிகளினூடாக முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வரிக்கு பிந்திய இலாபம் 3% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. வங்கியின் மொத்த பரிபூரண வருமானம் ரூ. 812 மில்லியனாக பதிவாகியிருந்தது.

வெளியக அழுத்தங்கள் மற்றும் மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக பின்னடைவை எதிர்நோக்கியி பொருளாதாரச் சூழல் காரணமாக, நிகர NPL விகிதம்  5.48% ஆக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டில் இதே காலப்பகுதியில் இப்பெறுமதி 5.03% ஆக பதிவாகியிருந்தது. வலுவிழந்த பொருளாதாரச் சூழலிலும், இலாகாக்களின் தரத்தை நிர்வகிப்பது தொடர்பான வங்கியின் கடுமையான வழிமுறைகளினூடாக NPL களை பேணுவதற்கு முடிந்திருந்தது.

வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி செப்டெம்பர் 30 ஆம் திகதியன்று ரூ. 122,291 மில்லியனாக பதிவாகியிருந்தது. வங்கியின் கடன்கள் மற்றும் கிடைப்பனவுகள் ஆகியன இதுவரையில் ரூ. 71,333 மில்லியனாக பதிவாகியிருந்தது. வைப்புகளின் இருப்பு ரூ. 81,958 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது இக்காலப்பகுதியில் 7% அதிகரித்திருந்தது.

ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை விட வங்கி தனது மூலதன போதுமை விகிதங்களை உயர்வாக பேணியிருந்ததுடன், துரித மூலதன போதுமை பெறுமதியை பதிவு செய்திருந்தது. அறிக்கை தயாரிப்பு திகதியன்று மொத்த மூலதன போதுமை விகிதம் 16.26% ஆக பதிவாகியிருந்தது.

யூனியன் வங்கியின் துரித திரள்வு நிலை மற்றும் உறுதித் தன்மை ஆகியன ஃபிட்ச் ரேட்டிங்ஸ் இனால் மேலும் உறுதி செய்யப்பட்டிருந்தது. 2020 இல் வெளியிடப்பட்டிருந்த பிந்திய தரப்படுத்தல்களில், வங்கியின் தற்போதைய தரப்படுத்தல் உறுதி செய்யப்பட்டிருந்தது.

வங்கி மற்றும் அதன் இரு துணை நிறுவனங்களைக் கொண்ட குழுமம், வரிக்கு முந்திய இலாபமாக ரூ. 1,306 மில்லியனை பதிவு செய்திருந்தன.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், வரிக்கு பிந்திய இலாபம் 5% இனால் குறைந்திருந்தது. குழுமத்தின் மொத்த சொத்துக்கள் பெறுமதி ரூ. 129,008 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில் 95% ஐ வங்கி பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தது. அறிக்கையிடல் திகதியன்று குழுமம் 16.41% எனும் ஆரோக்கியமான பிரதான மூலதன போதுமை விகிதத்தை பேணியிருந்தது.

2020 ஏப்ரல் முதல் செப்டெம்பர் 30 வரையான காலப்பகுதியில், இலங்கை மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்பட்டிருந்த கடன் முதல் மற்றும் வட்டித் தொகையை மீளச் செலுத்துவதற்கான சலுகைக் காலத்தை வழங்கியிருந்தது. இந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதியை கடந்து செல்லும் நோக்கில், வாடிக்கையாளர்களுக்கு மீளச் செலுத்துவதற்கு சகாய காலப்பகுதியை வழங்கி, கடன் வசதிகள் வழங்கப்பட்டிருந்தன. கடன் மீளச் செலுத்தல் சலுகைக்காலத்தில் கவனம் செலுத்தப்பட்ட தீர்வுகளில் கடன்கள் மற்றும் குத்தகைகள், மேலதிகப் பற்றுகள், நகை அடகு மற்றும் வியாபார நிதி வசதிகள் போன்றன அடங்கியிருந்தன.

யூனியன் வங்கியின் கூட்டாண்மை வங்கியியல் பிரிவின் வாடிக்கையாளர்களை வங்கி அணுகி, அவர்களுக்கு பொருத்தமான நிதித் தீர்வுகளை வழங்கி, அவர்களின் மூலோபாய செயற்பாடுகளுக்கு வங்கி பங்களிப்பு வழங்கியிருந்தது. வங்கியின் சிறிய, நடுத்தரளவு வங்கியியல் பிரிவினூடாக, தொற்றுப் பரவல் முடக்க நிலையால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டிருந்தன. பொருளாதார மீட்சியை உறுதி செய்வதற்கு, தேசிய ரீதியில் இலங்கை மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிதி வழங்கும் திட்டங்களினூடாக, சிறிய, நடுத்தரளவு வியாபாரங்களுக்கும் வாழ்வாதாரங்களுக்கும் பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தன. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில், வங்கியினால் 1.3 பில்லியன் ரூபாய் தொழிற்படு கடன்கள் மத்திய வங்கியின் சௌபாக்கியா கடன் திட்டத்தினூடாக பாதிக்கப்பட்ட வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கான நிவாரணத் திட்டங்களின் அங்கமாக, சுமார் 58% சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாளர் இலாகா பெறுமதி வெவ்வேறு சகாய திட்டங்களில் உள்வாங்கப்பட்டிருந்தன. பாதிக்கப்பட்ட தொழில்முயற்சியாளர்களுக்கு இந்தத் திட்டங்கள் குறிப்பிடத்தக்களவு உதவிகளை வழங்கியிருந்ததுடன், மந்தமாக நிலவும் பொருளாதாரச் சூழலிலும் தமது வியாபார செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு உதவியாக அமைந்திருந்தது.

யூனியன் வங்கியின் BizDirect இனூடாக வங்கியின் கூட்டாண்மை மற்றும் சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சி வாடிக்கையாளர்களுக்கு அவசியமாக அமைந்திருந்த திரள்வு முகாமைத்துவ வினைத்திறன் வழங்கப்பட்டிருந்தது. இதனூடாக தமது நிறுவனங்களின் திரள்வு நிலைகளை மேம்படுத்தி, சௌகரியமான பண முகாமைத்துவ நிபுணத்துவ நடவடிக்கைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டிருந்தன. பாரம்பரிய வங்கியியல் முறைகளுக்கு பதிலாக, டிஜிட்டல் தீர்வுகளுக்கான கேள்வி அதிகரித்த நிலையில், யூனியன் வங்கி BizDirect இல் பல புதிய கூட்டாண்மை மற்றும் சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சி வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்டனர்.

CASA ஆரம்பிப்புகள், வைப்பு பரவலாக்கம் மற்றும் கடன் அட்டை இலாகா விஸ்தரிப்பு ஆகியவற்றினூடாக நுகர்வோர் வங்கியியல் பிரிவு வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. பொருத்தமான வாழ்க்கைமுறை சலுகைகளினூடாக அட்டைதாரர்களுக்கு உயர் பெறுமதியை வங்கி வழங்கியிருந்ததுடன், ஹோட்டல் தங்கியிருத்தல்கள், உணவருந்தல் மற்றும் சொப்பிங் ஆகியவற்றில் விலைக்கழிவுகளை வழங்கியிருந்ததுடன், 0% வட்டியில்லாத தவணை முறை கொடுப்பனவு திட்டங்களையும் வழங்கியிருந்தது. யூனியன் வங்கியின் டிஜிட்டல் வங்கியியல் நாளிகைகளினூடாக வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக தொடுகை இல்லாத பாதுகாப்பான வங்கியியல் அனுபவம் வழங்கப்பட்டிருந்தது.

சுகாதார அதிகார அமைப்புகளின் வழிகாட்டல்களின் பிரகாரம், வங்கியின் செயற்பாடுகளில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை முன்னுரிமை அடிப்படையில் பாதுகாக்கும் திட்டங்கள் அமுல்ப்படுத்தப்பட்டிருந்தன. இதனூடாக கிளை வலையமைப்பிலும் தலைமை அலுவலக வளாகத்திலும் கடுமையான தூய்மை மற்றும் பாதுகாப்பு செயன்முறைகள் பின்பற்றப்பட்டிருந்தன. வங்கியின் ATM வலையமைப்பு, ஒன்லைன்/மொபைல் வங்கியியல் கட்டமைப்புகளை அணுகுவது மற்றும் 24 மணி நேர தொடர்பாடல் நிலையம் ஆகியவற்றை சௌகரியமாக அணுகும் வாய்ப்பும் வழங்கப்பட்டிருந்தது.

நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் யூனியன் வங்கியின் பணிப்பாளரும்/பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “இந்த சிக்கல்கள் நிறைந் காலப்பகுதியை கடந்து செல்வதற்காக நாம் ஆரோக்கியமான திரள்வு நிலையை பேணியுள்ளதுடன், எமது வாடிக்கையாளர்களுடன் தொடர்பை பேணி, அவர்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குகின்றோம். சவால்கள் நிறைந்த சூழலிலிருந்து வங்கி மீண்டெழுவதை உணர்த்துவதாக 3ஆம் காலாண்டு நிதிப் பெறுபேறுகள் அமைந்துள்ளன. சமகாலத்தில் புதிய வழமையாக அமைந்துள்ள பாரிய நெருக்கடி நிறைந்த சூழலுக்கேற்ற வகையில், எமது செயற்பாடுகளை நாம் மாற்றியமைத்து இயங்கி வருவதுடன், வாடிக்கையாளர்களுடனான ஈடுபாட்டை தொடர்ச்சியாக பேணவும், அவர்களின் பிரத்தியேகமான நிதித் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய நிதித் தீர்வுகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். எமது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கைகளை எப்போதும் முன்னெடுக்கின்றோம். ஆரோக்கியமான திரளவு நிலையை பேணுவதுடன், இலாபகரத்தன்மையை முன்னெடுத்து, இலாகா வளர்ச்சியை பதிவு செய்வதில் ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் அதிகளவு கவனம் செலுத்தப்படும்.” என்றார்.

சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் யூனியன் வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு

சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் யூனியன் வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு

2020 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் யூனியன் வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது. நாட்டில் கொவிட்-19 தொற்றுப் பரவல் மார்ச் மாதம் முதல் தாக்கத்தை ஏற்படுத்தி சவால்கள் நிறைந்த சூழலை ஏற்படுத்தியிருந்த போதிலும், யூனியன் வங்கி சிறந்த நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்தமை விசேட அம்சமாகும்.

2020 ஏப்ரல் மாதம் முதல், இலங்கை மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்பட்ட வாடிக்கையாளர் நிதி நிவாரணத் திட்டங்களை வங்கி வழங்கியிருந்தது. குறிப்பாக பாதிப்புகளுக்கு முகங்கொடுத்திருந்த கூட்டாண்மை, சிறிய, நடுத்தரளவு வியாபாரங்கள் மற்றும் சிறியளவிலான வங்கியியல் பிரிவுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட சலுகைகளை வழங்கியிருந்தது.

மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியினுள், வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொண்ட கடன்களின் மீதான மூலதனம் மற்றும் வட்டியை மீளச் செலுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்பட்டிருந்த கடன் மீளச் செலுத்தல் சலுகையில் ரூ. 22.2 பில்லியன் பெறுமதியான தொகையை வங்கி அனுமதித்திருந்தது. இரு மாதங்கள் வரை ரூ. 40 பில்லியன் வரையான கொடுப்பனவு நீடிப்புகளுடனான கடன்வசதிகள் வழங்கப்பட்டிருந்தன. மேலும், இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்களுக்கு அப்பாலான, வங்கியின் உள்ளக கடன் கொள்கை வழிமுறைகளின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பெருமளவான வாடிக்கையாளர்களுக்கு கடன் மீளச் செலுத்தல் சலுகைக் காலம் வழங்கப்பட்டிருந்தது. சலுகைக் காலப்பகுதியில் கடன்கள் மற்றும் குத்தகைகள், மேலதிகப் பற்று, அடகு மற்றும் டிரேட் ஃபினான்ஸ் வசதிகள் போன்றன அடங்கியுள்ளன. மேலும், ஈடுபாடற்ற கடன்பெறுநர்களின் கோரிக்கைகளின் பிரகாரம், நிவாரணத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய மீளமைப்புத் திட்டங்கள், திரண்ட வட்டியின் மீதான விலக்கழிப்புகள் மற்றும் மீளத்திரும்பல்கள் மீது தக்கவைப்புகள் போன்றன அடங்கியிருந்தன.

இரண்டாம் காலாண்டில் ஏப்ரல் முதல் மே மாதம் நடுப்பகுதி வரை நிலவிய முடக்க நிலை காரணமாக யூனியன் வங்கியின் பிரதான வங்கியியல் செயற்பாடுகள் சுருக்கமடைந்திருந்தன.

சவால்கள் நிறைந்த பொருளாதாரச் சூழலில், சராசரி நிதி வழங்கல் விகிதம் (AWPLR)என்பது சுமார் 250 புள்ளிகளால் வீழ்ச்சியடைந்திருந்தது. திறைசேரி பத்திரங்களும் வீழ்ச்சியான போக்கைப் பதிவு செய்திருந்தன. கடன் அட்டைகள் அடங்கலாக, பல்வேறு கடன் திட்டங்களுக்கான வட்டி வீதங்களை இலங்கை மத்திய வங்கியின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் வங்கி பெருமளவு குறைத்திருந்தது. சௌபாக்கியா கொவிட்-19 கடன் வசதித் திட்டம் அடங்கலாக, சிறிய, நடுத்தரளவு வியாபாரங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு தொழிற்படு மூலதனத் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக சகாய விலையில் கடன் வசதிகளை யூனியன் வங்கி வழங்கியிருந்தது.

வங்கியில் ஆரோக்கியமான திரள்வு நிலையை பேணும் வகையில், ஊழியர் மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்பு போன்றன முக்கியத்துவம் பெற்றிருந்தன. வங்கியின் பரந்தளவு வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு ஏற்பட்டிருந்த கொவிட்-19 தாக்கத்தைக் குறைத்துக் கொள்வதற்காக நிவாரணத் திட்டங்களை பெற்றுக் கொடுப்பதிலும் வங்கியின் நிர்வாகம் கவனம் செலுத்தியிருந்தது. 2020 ஜனவரி முதல் ஜுன் வரையான காலப்பகுதியில், சராசரி நிலையான வைப்புகள் என்பது நிலையானதாக காணப்பட்டதுடன், சராசரி பெறுமதி CASA என்பது ரூ. 21,444 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 13% அதிகரிப்பாகும். ஆரோக்கியமான CASA உட்பாய்ச்சலை பேணுவது என்பதில் சிறியளவு, கூட்டாண்மை மற்றும் சிறிய, நடுத்தரளவு வங்கியியல் பிரிவுகளினால் முன்னெடுக்கப்பட்டிருந்த கையகப்படுத்தல் மூலோபாயங்கள் பங்களிப்பு வழங்கியிருந்தன. அறிக்கையிடல் காலப்பகுதியின் நிறைவில், வங்கியின் CASA விகிதம் என்பது 25.8% ஆக காணப்பட்டது.

அதன் பிரகாரம், வங்கியின் நிகர வட்டி எல்லைப் பெறுமதி என்பது மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் 3.4% இலிருந்து 3.2% ஆகக் குறைந்தது. இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்களின் பிரகாரம் கடன் அட்டை காலம் தாழ்த்திய கொடுப்பனவுகளுக்கான கட்டணம் விலக்கழிப்பு மற்றும் இதர கட்டண விலக்கழிப்பு போன்றன செப்டெம்பர் மாத இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தொற்றுப் பரவல் மற்றும் வியாபார செயற்பாடுகள் மந்த கதியை எய்தியிருந்தமை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வகையில் இந்தத் திட்டங்கள் அமைந்துள்ளதுடன், வங்கியின் ஒட்டுமொத்த கட்டண வருமானத்தில் 26% சரிவை ஏற்படுத்தியிருந்தது.

வங்கியின் திறைசேரி குறிப்பிடத்தக்களவு மூலதன வருமதிகள் பிரிவில் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 68% அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தது. வங்கியின் ஏனைய தொழிற்படு வருமானப் பிரிவு என்பது வெளிநாட்டு நாணயப் பரிமாற்ற வீக்கம் காணப்பட்ட போதிலும் 6% இனால் அதிகரித்திருந்தது.

சவால்கள் நிறைந்த காலப்பகுதியிலும் வங்கியின் தொழிற்படு மூலதனம் ரூ. 2951 மில்லியனாக பதிவாகியிருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 2% அதிகரிப்பாகும். வங்கியினால் முன்னெடுக்கப்பட்டிருந்த பரந்தளவு செலவுக் கட்டுப்பாட்டுச் செயன்முறைகளினூடாக, மொத்த தொழிற்படு செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இக்காலப்பகுதிக்கான மொத்த தொழிற்படு செலவுகள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3% இனால் குறைந்து ரூ. 1914 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. அதுபோன்று, வங்கியின் இலாபத்துக்கு முன்னரான ஒதுக்கங்கள் ரூ. 1036 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 12% அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தது. வங்கியின் கடன் இழப்புகள் குறைவாகக் காணப்பட்டதுடன், இக்காலப்பகுதியில் வங்கி குறிப்பிடத்தக்களவு ஒதுக்கங்களைப் பேணியிருந்ததுடன், மதிப்பிறக்க கட்டணங்களில் 102% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது.

சவால்கள் நிறைந்த பாரிய-பொருளாதாரப் பின்புலத்தில், தொழிற்பாட்டு செயற்பாடுகளில் வங்கி குறைந்தளவு பெறுபேறுகளைப் பதிவு செய்து, ரூ. 755.2 மில்லியனைப் பதிவு செய்திருந்தது. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 4% சரிவாகும். வங்கியின் துணை நிறுவனங்களுக்கான தொழிற்படு சூழலில், UB பினான்ஸ் மற்றும் NAMAL ஆகியன சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தன. வரி வீதங்களில் குறைப்பு மற்றும் ஒதுக்கங்களை கவனமாகக் கையாண்டிருந்தமை போன்றவற்றினூடாகவும், துணை நிறுவனங்களின் மீது வங்கி கொண்டிருந்த உரிமையாண்மைகளின் பங்கினூடாகவும் வரிக்கு பிந்திய இலாபத்தை 6% இனால் அதிகரித்துக் கொள்ள முடிந்தது.

ஆண்டின் மார்ச் மாதம் முதல் பாரியளவு பொருளாதாரச் சூழலில் நிலவிய வெளியக அழுத்தங்கள் மற்றும் தொடர்ச்சியான மதிப்பிறக்கம் காரணமாக, தேறிய NPL விகிதம் 5.3% ஆக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தப் பெறுமதி 5.03% ஆக காணப்பட்டது.

வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ஜுன் 30 ஆம் திகதியன்று ரூ. 128,643 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. வங்கியின் கடன்கள் மற்றும் கிடைப்பனவுகள் போன்றன ரூ. 75,997 மில்லியனாகப் பதிவாகியிருந்ததுடன், வைப்புகள் இருப்பு ரூ. 79,779 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. இது 4% அதிகரிப்பாகும்.

வங்கி தொடர்ச்சியாக தனது மூலதனப் போதுமை விகிதத்தைப் பேணியிருந்ததுடன், மொத்த மூலதன விகிதமாக 16.06% ஐ பதிவு செய்திருந்தது.

இரு துணை நிறுவனங்களான பினான்ஸ் கம்பனி லிமிடெட் மற்றும் NAMAL ஆகியவற்றைக் கொண்ட வங்கியின் குழுமம், வரிக்கு முந்திய இலாபமாக ரூ. 796 மில்லியனைப் பதிவு செய்திருந்தது. குழுமத்தின் வரிக்குப் பிந்திய இலாபம் என்பது, முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 3% இனால் குறைந்திருந்தது.  குழுமத்தின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 135,724 மில்லியனாகக் காணப்பட்டது. இதில் 95%ஐ வங்கி கொண்டிருந்தது. வங்கி ஆரோக்கியமான பிரதான மூலதன விகிதமான 16.30% ஐ பேணியிருந்தது.

இந்த உறுதியற்ற காலப்பகுதிகளில் தனது சிறியளவிலான, சிறிய, நடுத்தரளவு வியாபாரங்கள் மற்றும் கூட்டாண்மை வியாபாரங்களுடன் தொடர்பாடல்களைப் பேணி, அவை எதிர்நோக்கியிருந்த பிரத்தியேகமான வங்கியியல் தேவைகளின் பிரகாரம் தனது தீர்வுகளை மாற்றியமைத்து வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. யூனியன் வங்கி BizDirect கொடுக்கல் வாங்கல் தீர்வு என்பது, கூட்டாண்மை மற்றும் சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மை வாடிக்கையாளர்களுக்கு அவசியமான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்காற்றியிருந்தது.  அதுபோன்று வங்கியின் ஒன்லைன் வங்கிச் சேவை மற்றும் மொபைல் வங்கிச் சேவை போன்றனவும் வாடிக்கையாளர்களின் கணக்குகள் மற்றும் கடன் அட்டைகளை பாதுகாப்பான முறையில் அணுகுவதற்கான வாய்ப்பை வழங்கியிருந்தன. தொற்றுப் பரவல் காணப்பட்ட காலப்பகுதியில் ஒன்லைன் வங்கிச் சேவைக்கு பதிவு செய்யும் செயன்முறை மேலும் இலகுபடுத்தப்பட்டிருந்தது. இதனூடாக, இந்த வங்கி முறைகளினூடாக வாடிக்கையாளர்களுக்கு இலகுவாக தமது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கான வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது.

யூனியன் வங்கி கடன் அட்டைகள் தொடர்ந்தும் அத்தியாவசியப் பொருட்கள் மீதும் ஒன்லைன் கொள்வனவுகளின் மீது சேமிப்புகளை வழங்கியிருந்தது. நெருக்கடியான காலப்பகுதியில் அட்டைதாரர்களுக்கு பெறுமதி சேர்க்கும் வகையில் இது அமைந்திருந்தது.

சுகாதார அதிகார அமைப்புகளின் வழிகாட்டல்களின் பிரகாரம், வங்கி தனது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கிளை வலையமைப்பிலும் தலைமையகத்திலும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஏற்படுத்தியிருந்தது. வங்கியின் ATM வலையமைப்பு, ஒன்லைன்/மொபைல் வங்கியியல் கட்டமைப்புகள் மற்றும் 24 மணி நேர அழைப்பு நிலையம் போன்றவற்றினூடாக பாதுகாப்பான வகையில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கான வசதி வழங்கப்பட்டிருந்தது.

முதல் அரையாண்டு நிதிப் பெறுபேறுகள் தொடர்பாக யூனியன் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ”ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நாம் கொவிட்-19 தொற்றுப் பரவல் காணமாக பாதிக்கப்பட்டிருந்த எமது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணத் திட்டங்களை வினைத்திறன்  வாய்ந்த முறையில் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்தியிருந்தோம். இதற்காக கிளை/பிராந்திய மட்டத்தில் இனங்காணல் செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தோம். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதிலும் நாம் கவனம் செலுத்தியிருந்தோம். வங்கியின் முதல் அரையாண்டு பெறுபேறுகளினூடாக, சவால்கள் நிறைந்த சூழலில் நாம் செயலாற்றியிருந்தமை பிரதிபலிக்கப்பட்டுள்ளது. வெளியக அழுத்தங்கள் காணப்பட்ட போதிலும், வங்கி கொண்டிருந்த உறுதியான திரள்வு மற்றும் மூலதன நிலை போன்றன உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை அறியத்தருவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். எமது வாடிக்கையாளர்களுக்கு சிறியளவு, கூட்டாண்மை மற்றும் சிறிய, நடுத்தரளவு வியாபார பிரிவுகளில் அவசியமான நிதி நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதுடன், எமது வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருகின்றோம்.” என்றார்.

2019 ஆம் ஆண்டில் யூனியன் வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு

2019 ஆம் ஆண்டில் யூனியன் வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு

வங்கி

  • வரிக்கு பிந்திய இலாபம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3% இனால் அதிகரித்து ரூ. 710 மில். ஆக பதிவு
  • தேறிய வட்டி வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6% இனால் அதிகரித்து ரூ. 4,479 மில். ஆக பதிவு
  • மொத்த தொழிற்படு வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9% இனால் அதிகரித்து ரூ. 6,021 மில். ஆக பதிவு
  • உறுதியான ஐந்தோகை மற்றும் மொத்த மூலதன போதுமை விகிதம் 75% ஆக பதிவு

குழுமம்

  • வரிக்கு பிந்திய இலாபம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4% இனால் அதிகரித்து ரூ. 804 மில். ஆக பதிவு
  • தேறிய வட்டி வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில்2% இனால் அதிகரித்து ரூ. 5,234 மில். ஆக பதிவு
  • மொத்த தொழிற்படு வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில்5% இனால் அதிகரித்து ரூ. 6,916 மில். ஆக பதிவு
  • மொத்த மூலதன போதுமை விகிதம்36% ஆக பதிவு

2019 ஆம் ஆண்டில் சவால்கள் நிறைந்த பொருளாதார சூழல்கள் நிலவிய போதிலும், யூனியன் வங்கி வரிக்கு பிந்திய இலாப பெறுமதியை 50% இனால் அதிகரித்திருந்தது. தொடர்ச்சியாக துறைசார் ரீதியில் நிலவிய சவால்கள் நிறைந்த சூழலும், தனது இலாகா மீளமைப்பு மற்றும் முறையான செலவு முகாமைத்துவ செயற்பாடுகளினூடாக இந்த வளர்ச்சியை யூனியன் வங்கி பதிவு செய்திருந்தது. வருடத்தில், தனது இலாபத்தில் 66% பகுதியை வரியாக செலுத்தியிருந்தது. இது 1 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையாகும்.

பிரதான வங்கியியல் வளர்ச்சி மற்றும் இலாபகரத்தன்மை

சந்தை சவால்கள் காணப்பட்ட போதிலும், வங்கியின் பிரதான வங்கியியல் செயற்பாடுகள் தொடர்ந்தும் சிறப்பான பெறுபேறுகளை பதிவு செய்திருந்ததுடன், இதில் கூட்டாண்மை, சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகள் மற்றும் சில்லறை வங்கியியல் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டிருந்த மூலோபாய நடவடிக்கைகள், சிறந்த திறைசேறி பெறுபேறுகள் போன்றன பங்களிப்பு வழங்கியிருந்தன. பிரதான வங்கியியல் செயற்பாடுகளை முறையாக திட்டமிட்டு நிறைவேற்றியிருந்தமை காரணமாக, வங்கியின் தேறிய வட்டி வருமானம் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியடைந்து ரூ. 4,479 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22.6% வளர்ச்சியாகும்.

ஆண்டின் தேறிய வட்டி எல்லைப் பெறுமதி (NIM) 3.6% ஆக பதிவாகியிருந்தது. அலகுகள் மீதான முதலீடுகளிலிருந்து பெறப்பட்ட வருமதிகள் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தால் இந்த காலப்பகுதிக்கான NIM பெறுமதி 3.8% அதிகரிப்பை பதிவு செயதிருக்கும். அலகுகள் மீதான முதலீடுகளிலிருந்து வருமானம் ரூ. 227 மில்லியனாகும். இது ”தேறிய நேர்மை பெறுமதி வருமதிகள்/(இழப்புகள்)” என்பதில் மூலதன ஆதாயமாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

நாணய கொள்கைகள் மீளாய்வுக்குட்படுத்தப்பட்டிருந்த போதிலும், தனியார் துறைக்கான கடன் அதிகரிப்பு மந்த கதியில் காணப்பட்டதுடன், ஐந்தொகை வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. வங்கியின் கடன்கள் மற்றும் முற்பணங்கள் பிரிவு ரூ. 77,358 மில்லியனாக பதிவாகியிருந்ததுடன், ரூ. 3,609 மில்லியனாக உயர்ந்திருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 4.9% அதிகரிப்பாகும். சில்லறை பிரிவில் கடன்கள் மூலமாக பெறப்பட்ட பங்களிப்புகளினூடாக இந்த அதிகரிப்பை அவதானிக்க முடிந்தது. இதில் கடன் அட்டைகள் பிரிவு மற்றும் கூட்டாண்மை கடன்கள் பிரிவு அதிகரிப்பு போன்றன பங்களிப்பு வழங்கியிருந்தன.

வங்கியின் வைப்பு இருப்பு வருடத்தின் இறுதியில் ரூ. 76,532 மில்லியனாக பதிவாகியிருந்தது. குறைந்த செலவு வைப்புகளை கையகப்படுத்துவதில் வங்கியின் மூலோபாய கவனம் காணப்பட்டதுடன், வைப்பு இருப்பின் மீளமைவுக்கு இது காரணமாக அமைந்தது. CASA (நடைமுறை மற்றும் சேமிப்பு கணக்குகள்) வளர்ச்சி வருடம் முழுவதிலும் தொடர்ந்திருந்தது. இதன் பெறுபேறாக, வருட இறுதியில் CASA இருப்பு ரூ. 19,332 மில்லியனாக உயர்ந்தது. சராசரி இலாகா வளர்ச்சி முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16% வளர்ச்சி என்பதுடன் வங்கியின் CASA Mix 25% ஆக உயர்வடைந்தது.

வருடம் முழுவதிலும் கட்டண வருமானம் தொடர்பில் வங்கியினால் முறையாக திட்டமிடப்பட்ட செயற்பாடுகளினூடாக, தரகு மற்றும் கட்டண வருமானம் ரூ. 101 மில்லியனால் அதிகரித்திருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10.5% வளர்ச்சியாகும். பாங்கசூரன்ஸ் கட்டணங்கள் மற்றும் உத்தரவாதங்கள் வருமானத்தினூடாக வலுவூட்டப்பட்ட செயற்பாடுகள் மற்றும் கடன் அட்டைகள் மீதான கையகப்படுத்தல் முயற்சிகள் போன்றவற்றினால் இந்த பிரிவுக்கு பெருமளவு பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது. 2019 ஆம் ஆண்டு முழுவதிலும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வியாபாரங்களில் ஏற்பட்ட சரிவு காரணமாக, வியாபார வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியினால், கட்டண வருமானம் என்பது பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தது.

தேறிய வர்த்தக மற்றும் இதர வருமானம் ரூ. 686 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.2% வீழ்ச்சியாகும். பரிமாற்ற வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி இதில் பங்களிப்பு செலுத்தியிருந்தது. வங்கியின் திறைசேரி பிரிவு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்ததுடன், 89.4% மூலதன அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. இது ரூ. 446 மில்லியனாக பதிவாகியிருந்தது. அலகுகளின் மீதான முதலீடுகளிலிருந்தான வருமானம் மாற்றமின்றி ரூ. 227 மில்லியனாக காணப்பட்டது. இதர தொழிற்படு வருமானம் ரூபாய் மதிப்பிறக்கம் மற்றும் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நிதியிடல் மாற்றீடுகள் காரணமாக 96.2% இனால் சரிவடைந்திருந்தது. பாரிய பொருளாதார சூழ்நிலைகள் காரணமாக வர்த்தக அளவுகளில் வீழ்ச்சி பதிவாகியிருந்ததுடன், ஒட்டுமொத்த வர்த்தக வருமானத்தில் வீழ்ச்சியை பதிவு செய்ய பங்களிப்பு வழங்கியிருந்தது. ஐந்தொகை தினத்தன்று வங்கி வியாபார பங்குகள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், பங்கு நிதியங்கள் எதிலும் முதலீடு செய்திருக்கவில்லை. பிரதான வங்கியியல் செயற்பாடுகளில் வளர்ச்சி மற்றும் தொடர்ச்சியான நிதி பெறுபேறுகள் போன்றன தேறிய வட்டி வருமானம் அதிகரிப்பு ஏற்படுவதில் பங்களிப்பு வழங்கியிருந்தன. மொத்த தொழிற்படு வருமானம் 13.9%  வளர்ச்சியை பதிவு செய்து, ரூ. 6,021 மில்லியனாக பதிவாகியிருந்தது. 2019 ஆம் ஆண்டில் மொத்த தொழிற்படு வருமானத்தில் 51% ஐ சில்லறை மற்றும் சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை பிரிவுகள் வழங்கியிருந்தன.

பாரிய பொருளாதார சவால்களை பிரதிபலிக்கும் வகையில், வங்கியின் தொழிற்படா கடன்கள் (NPL) விகிதம் 2019 ஆம் ஆண்டில் 5.03% ஆக அதிகரித்திருந்தது. வருடத்தில் தொழிற்படா கடன்கள் விகிதத்தில் அதிகளவு உயர்வை சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாளர் பிரிவு பதிவு செய்திருந்தது. ஆண்டுக்கான வலுக்குறைப்பு கட்டணம் ரூ. 390 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.0% அதிகரிப்பாகும்.

வங்கியின் தொழிற்படு செலவீனங்கள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.7% அதிகரித்து ரூ. 3,830 மில்லியனாக பதிவாகியிருந்தது. மதிப்பிறக்கம் மற்றும் கடன் தீர நிதி சேர்த்தல் மற்றும் சொத்துக்கள் பாவனைக்கான உரிமை ஆகியவற்றுடன் இதர செலவீனங்கள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2% அதிகரித்து ரூ. 1,947 மில்லியனாக பதிவாகியிருந்தது. வங்கி SLFRS 16 ”லீஸ்கள்” ஐ 2019 ஜனவரி 1ஆம் திகதி முதல் பின்பற்றியிருந்தது. முன்னைய கணக்கீட்டு நியமமான LKAS 17 இன் பிரகாரம் ஒப்பீட்டு பெறுமதிகள் கணிப்பீடு செய்யப்பட்டிருந்தன. அதற்கமைய, சொத்துக்களை பயன்படுத்தும் உரிமை ஐந்தொகையில் உள்ளடக்கப்பட்டதுடன், மதிப்பிறக்கங்களில் தொடர்புடைய கடன் தீர நிதி சேர்ப்புகள் உள்வாங்கப்பட்டதுடன், வாடகை செலவுகளுக்கு பதிலாக மதிப்பிறக்கம் 2018 இல் ஏனைய செலவுகளில் உள்ளடக்கப்பட்டிருந்தன. குத்தகை கடப்பாட்டுக்கான நிதி செலவாக வட்டி செலவீனம் ஒரு பகுதியாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

வங்கியின் வருமானத்துக்கான செலவு விகிதம் 2018 இல் பதிவாகியிருந்த 71% இலிருந்து 64% ஆக பதிவாகியிருந்தது. 2019 இல் வங்கியின் பிரதான மைல்கல் சாதனையாக இது அமைந்திருந்தது. தொழிற்படு எல்லை பெறுமதி ரூ. 2,191 மில்லியனாக அதிகரித்திருந்ததுடன், இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 41% அதிகரிப்பாகும். வருமானம் வேகமாக 13.9% அதிகரிப்பையும் செலவுகள் 2.7% அதிகரிப்பையும் பதிவு செய்திருந்தமை இதற்கு காரணியாக அமைந்திருந்தது. இதனூடாக சிறந்த வருமானம் மற்றும் செலவு முகாமைத்துவம் பதிவு செய்யப்பட்டிருந்ததுடன், வங்கியின் உற்பத்தித்திறன் மற்றும் தொழிற்பாட்டு வினைத்திறன் ஆகியவற்றில் மேம்பாட்டையும் பதிவு செய்திருந்தது.

முதலீட்டாளர்களுக்கான பங்கின் மீது பகிரப்பட்ட இலாபம் ரூ. 104 மில்லியனாக பதிவாகியிருந்தது, இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ. 69.2 மில்லியன் அதிகரிப்பாகும். வங்கியின் துணை நிறுவனங்களான UB ஃபினான்ஸ் இந்த அதிகரிப்பில் பெருமளவு பங்களிப்பை வழங்கியிருந்தது.

ஆண்டுக்கான இலாபம் ரூ. 710 மில்லியனாகும், 2018 இல் இந்த பெறுமதி ரூ. 473 மில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 50.3% அதிகரிப்பாகும். ஆண்டுக்கான ஏனைய பரிபூரண வருமானம் ரூ. 346 மில்லியனாகும், அரசாங்க முறிகளில் ஏற்பட்ட மதிப்பீட்டு தாக்கம் நிதி முதலீடுகளில் நேர்த்தியான பெறுமதிகளில் பட்டியலிடப்பட்டிருந்தமை காரணமாக இந்த பெறுமதி பதிவாகியிருந்தது. ஆண்டில் நிலவிய சாதகமான சந்தை பெறுமதி நகர்வுகள் இதற்கு காரணமாக அமைந்திருந்தது.

குறித்த ஆண்டில் வங்கி துரித மூலதன போதுமை விகிதத்தை கொண்டிருந்ததுடன், 16.75% ஐ பிரதான மூலதன விகிதமாக வருட நிறைவில் பதிவு செய்திருந்தது.

வங்கி மற்றும் இரு துணை நிறுவனங்கான UB ஃபினான்ஸ் கம்பனி லிமிடெட் மற்றும் நாமல் அசெட் மனேஜ்மன்ட் லிமிடெட் ஆகியவற்றைக் கொண்ட குழுமம், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50.4% வளர்ச்சியை பதிவு செய்து ரூ. 804 மில்லியன் ரூபாயை இலாபமாக பதிவு செய்திருந்தது. குழுமத்தின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 129,840 மில்லியனாகும். குழுமத்தின் ஐந்தொகையில் 93.8% ஐ வங்கி கொண்டிருந்தமையின் காரணமாக, குழுமத்தின் மொத்த நிதிப் பெறுபேறுகளில் வங்கியின் பெறுபேறுகள் ஆதிக்கம் செலுத்தியிருந்தது.

சவால்களிலும் நிலையான வியாபார வளர்ச்சியை தக்க வைத்திருந்தமை

2019 ஆம் ஆண்டில் பாரிய பொருளாதார சவால்கள் நிலவிய போதிலும், வங்கியின் பிரதான வியாபார செயற்பாடுகள் தொடர்ந்தும் வளர்ச்சியை பதிவு செய்திருந்தன.

கூட்டாண்மை, சிறிய, நடுத்தரளவு வியாபார முயற்சிகள் மற்றும் சில்லறை வங்கியியல் பிரிவுகள் போன்றன வங்கியின் விரிவாக்கல் செயற்பாடுகளில் முக்கிய பங்கை வகித்திருந்ததுடன், தெரிவு செய்யப்பட்ட கையகப்படுத்தல் மூலோபாயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. பாரிய பொருளாதாரத்தில் சவால்கள் காணப்பட்ட போதிலும், 2019 ஆம் ஆண்டில் திறைசேரி பிரிவு சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது. குறிப்பிடத்தக்களவு மூலதன வருமதிகள் மற்றும் கட்டணம் மற்றும் தரகு வருமானத்தினூடாக வங்கியின் வருமானத்தில் பங்களிப்பு செலுத்தியிருந்தது. சாதகமற்ற சந்தை சூழ்நிலைகள் சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மை துறையில் பாரியளவு தாக்கத்தை பதிவு செய்திருந்தன. இந்த துறைக்கு யூனியன் வங்கி தனது உதவியை வழங்கியிருந்ததுடன், நீண்ட கால அடிப்படையிலான நிதி முதலீட்டு தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து கூட்டாண்மை மற்றும் சிறிய, நடுத்தரளவு தொழிற்துறைகள் எதிர்கொண்டிருந்த சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில், வங்கியினால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தமது செயற்பாடுகளை மீளக் கட்டியெழுப்பிக் கொள்வதற்கான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டிருந்தன. முறையான இலாகா விளைவுகள் நிர்வாகத்தினூடாக கூட்டாண்மை வங்கியியல் சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது. புதிய கையகப்படுத்தல்கள் மற்றும் இனங்காணப்பட்ட பிரிவுகளில் அதிகளவு பகிர்வுகள் போன்றவற்றினால் வலுவூட்டப்பட்டிருந்தது. வங்கியின் கூட்டாண்மை மற்றும் சிறிய, நடுத்தரளவு வாடிக்கையாளர்களுக்கு வலுவூட்டும் நடவடிக்கைகளை Union Bank BizDirect முன்னெடுத்திருந்தது. பிரிவின் சிறந்த நிதி முகாமைத்துவ சௌகரியங்களுக்கு உதவியிருந்தது. நிதி முகாமைத்துவ சிறப்பை வழங்குகின்றமைக்காக கௌரவிக்கும் வகையில், யூனியன் வங்கிக்கு ”இலங்கையின் சிறந்த நிதி முகாமைத்துவ வங்கி” எனும் விருது குளோபல் பிஸ்னஸ் அவுட்லுக் விருதுகள் 2019 இல் வழங்கப்பட்டிருந்தது,

வங்கியின் கடன் வளர்ச்சியில் சில்லறை வங்கியியல் பிரிவு தொடர்ச்சியாக பங்களிப்பை வழங்கியிருந்தது. அடைமானத்தின் பின்புலத்திலமைந்த கடன்கள் மற்றும் கடன் அட்டை விநியோகம் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டமை போன்றனவும் பங்களிப்பு வழங்கியிருந்தன. வங்கியின் கிளைகளில் மற்றும் தெரிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர் பிரிவுகளில் இலக்கு வைக்கப்பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வங்கியின் நடைமுறை மற்றும் சேமிப்பு கணக்குகள் மற்றும் வைப்புகள் வளர்ச்சியில் பங்களிப்பு வழங்கியிருந்தன. தொழில்நுட்ப மேம்படுத்தல்களினூடாக வாடிக்கையாளர் சௌகரியங்களை மேம்படுத்துவது என்பதில் யூனியன் வங்கியின் கவனம் செலுத்தியிருந்தமை 2019 இல் மேலும் முன்னேற்றம் கண்டிருந்தது. மாற்று நாளிகைகளினூடாக சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், இதில் ATM வலையமைப்பு மற்றும் டிஜிட்டல் வங்கியியல் கட்டமைப்புகள் போன்றன அடங்கியிருந்தன. வங்கியின் மொபைல் வங்கியியல் அப்ளிகேஷன் மேலும் மேம்படுத்தப்பட்டிருந்ததுடன், புதிய உள்ளம்சங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தது. கடன் அட்டைகளுக்கான சுய பராமரிப்பு சேவைகள் பாவனையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளன.  2019 ஆம் ஆண்டில் யூனியன் வங்கி தனது புதிய கூட்டாண்மை இணையத்தளத்தை அறிமுகம் செய்திருந்தது. புதிய தோற்றத்தில் மேம்படுத்தப்பட்ட உள்ளம்சங்களுடன் இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வங்கியின் டிஜிட்டல் பிரசன்னத்தை மேம்படுத்தும் வகையில் இந்த தளம் அமைந்துள்ளது. புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட யூனியன் வங்கியின் இணையத்தளத்துக்கு அமெரிக்காவில் இடம்பெற்ற 2019 dotCoMM விருதுகள் வழங்கலில் நிதியியல் பிரிவின் கீழ் தங்க விருதை பெற்றுக் கொண்டது.

ஆண்டில் வாடிக்கையாளர்களை ஈடுபடுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதனூடாக வாடிக்கையாளர்கள் உறவுகள் பேணப்பட்டிருந்தன. இதில், பிரதம நிறைவேற்று அதிகாரியின் காலை ஆகார அமர்வு (CEO Breakfast Forum) முக்கியமானதாக அமைந்திருந்தது.  வெவ்வேறு வாடிக்கையாளர் பிரிவுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் இதில் பங்கேற்று பெருமளவு உள்ளம்சங்களை பெற்றுக் கொண்டனர். மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட வருடத்தில் வங்கி மேலும் பல நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறுவர்கள் மற்றும் கல்வி தொடர்பில் கவனம் செலுத்தி, கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் தெரிவு செய்யப்பட்ட வங்கிக் கிளைகள் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. வசதி வாய்ப்புகள் குறைந்த பாடசாலைகளை மேம்படுத்துதல் மற்றும் இந்த பாடசாலைகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்விச் செயற்பாடுகளை தொடர சிறந்த சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றன இந்த நடவடிக்கைகளில் அடங்கியிருந்தன.

2019 ஆம் ஆண்டில் யூனியன் வங்கியின் நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ”சவால்கள் நிறைந்த வருடத்தில் யூனியன் வங்கியின் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்ய முடிந்தமையையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். பாரிய நிதிச் சவால்கள் நிறைந்த காலப்பகுதியில், வங்கி தனது பிரதான வங்கியியல் வளர்ச்சியை பதிவு செய்திருந்ததுடன், வட்டி வருமானம், இலாகா மீளமைப்பு மற்றும் முறையான செலவு முகாமைத்துவம் போன்றவற்றில் அதிகளவு கவனம் செலுத்தியிருந்தது, யூனியன் வங்கி 2020 இல் தனது 25 வருட பூர்த்தியை கொண்டாடுகின்றது. கடந்த காலங்களில் நாம் வெற்றிகரமாக செயலாற்றி கடந்து வந்த பயணத்தின் முக்கியமான ஆண்டில் தற்போது உள்ளோம். 2020 ஆம் ஆண்டில், வங்கியின் மத்திய தவணை வளர்ச்சி மூலோபாயம் என்பது இலக்கு வைக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும். 2020 ஆம் ஆண்டில் வியாபாரச் சூழல் மேம்படும் என எதிர்பார்ப்பதுடன், வங்கி தனது சில்லறை, கூட்டாண்மை மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மை மற்றும் திறைசேரி வியாபாரங்கள் அதன் தெளிவான போட்டிகர வாய்ப்புகளை பயன்படுத்தி, நிலைபேறான வருமானங்களை உருவாக்கும். மூலோபாய வளர்ச்சி பிரிவுகளில் கவனம், கடுமையான மூலோபாய விரிவாக்கங்கள் மற்றும் உள்ளார்ந்த வங்கியியல் வழிமுறைகள் ஆகியன 2020 ஆம் ஆண்டில் யூனியன் வங்கியின் வளர்ச்சிக்கு வழிகோலுவதாக அமைந்திருக்கும்.” என்றார்.

சவால்கள் நிறைந்த சூழலில் நிலையான வளர்ச்சியை எய்துவதற்காக செலவுகளை சீரமைப்பதில் யூனியன் வங்கி கவனம் செலுத்துகின்றது

சவால்கள் நிறைந்த சூழலில் நிலையான வளர்ச்சியை எய்துவதற்காக செலவுகளை சீரமைப்பதில் யூனியன் வங்கி கவனம் செலுத்துகின்றது

வங்கி

  • வரிக்கு முந்திய சகல வரிகளும் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 54% அதிகரித்து ரூ. 1,422 மில். ஆக பதிவு
  • தேறிய வட்டி வருமானம் ரூ. 3,466 மில். ஆக அதிகரிப்பு
  • தரகு மற்றும் கூலி வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12% அதிகரித்து ரூ.784 மில். ஆக பதிவு
  • மொத்த மூலதன போதுமை விகிதம் 16.5% ஆக பதிவு

குழுமம்

  • வரிக்கு பிந்திய இலாபம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 36% அதிகரித்து ரூ. 606 மில. ஆக பதிவு
  • தேறிய வட்டி வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21% அதிகரித்து ரூ. 4,033 மில. ஆக பதிவு
  • மொத்த மூலதன போதுமை விகிதம் 16.3% ஆக பதிவு

2019 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வங்கியியல் துறையில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்திய பாரியளவு பொருளாதார சூழலிலும் முறையான செலவு நிர்வகிப்பு நடவடிக்கைகள் மற்றும் இலாகா இசைவுபடுத்தல் செயற்பாடுகளில் யூனியன் வங்கி தொடர்ச்சியாக கவனம் செலுத்தியிருந்தது.

தொழிற்பாட்டு வினைத்திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தியிருந்ததன் பெறுபேறாக, மீளாய்வு செய்யப்பட்ட காலப்பகுதியில் வங்கியின் தொழிற்பாட்டு செலவீனங்கள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5% இனால் மாத்திரம் அதிகரித்து ரூ. 2960 மில்லியனாக பதிவாகியிருந்தது.

தொடர்ந்து நிலவிய பாரிய பொருளாதார தாக்கங்கள், 2019 ஆம் ஆண்டின் 3ஆம் காலாண்டு பகுதியில் வங்கியியல் துறையின் செயற்பாடுகளில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. வட்டிவீதக் கொள்கை மீளாய்வுக்குட்படுத்தப்பட்டிருந்த போதிலும், தனியார் கடனுக்கான கேள்வி தொடர்ந்தும் குறைவாகவே காணப்பட்டது. இது மூன்றாம் காலாண்டில் வங்கியின் ஐந்தொகை வளர்ச்சில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அவ்வாறான சவால்கள் நிறைந்த வியாபார சூழலில், இலாகா மீளமைப்பினூடாகவும், மேம்படுத்தப்பட்ட தரகு மற்றும் கூலி வருமான உருவாக்கம் போன்றவற்றினூடாக வருமான சீராக்கத்தை யூனியன் வங்கி எதிர்பார்த்தது.

வங்கியின் மொத்த தொழிற்படு வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19% அதிகரித்து ரூ. 4637 மில்லியனாக பதிவாகியிருந்தது.
செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில், தேறிய வட்டி வருமானம் (NII) ரூ. 3,466 மில்லியனாக பதிவாகியிருந்தது. கூலி வருமான வளர்ச்சியை மேம்படுத்துவது தொடர்பில் வங்கியினால் முன்னெடுக்கப்பட்டிருந்த திட்டமிட்ட செயற்பாடுகளினூடாக, குறித்த காலப்பகுதியில் வங்கியின் தரகு மற்றும் கூலி வருமானம் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 12% அதிகரிப்பை பதிவு செய்து ரூ. 784 மில்லியனாக பதிவாகியிருந்தது. இந்த வளர்ச்சியில் கடன் அட்டைகளின் மீது அறவிடப்பட்ட கையாளல் கட்டணங்களில் பதிவாகியிருந்த அதிகரிப்பு மற்றும் கூட்டாண்மை மற்றும் சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்காக வழங்கப்பட்ட வங்கியியல் சேவைகளுக்கான கட்டண வருமானத்தில் அதிகரிப்பு போன்றன இதில் பங்களிப்பு வழங்கியிருந்தன.
வங்கியின் திறைசேரி செயற்பாடுகள் குறித்த காலப்பகுதியில் ரூ. 380 மில்லியனை மூலதன வருமதியாக பதிவு செய்திருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 83% அதிகரிப்பாகும். நாணயமாற்று வீத இழப்பு மற்றும் மீளாய்வு செய்யப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற பெருமளவான நிதியியல் மாற்றங்கள் காரணமாக வங்கியின் இதர வருமானம் வீழ்ச்சியடைந்திருந்தது. மோசமான பாரியளவு பொருளாதார சூழல்கள் காரணமாக வியாபார பெறுமதிகளில் ஏற்பட்ட வீழ்ச்சியும் மேற்படி குறிகாட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
வங்கியின் வலுக்குறைப்புக்கு முன்பான இலாபம் குறித்த மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 54% அதிகரிப்பை பதிவு செய்து ரூ. 1677 மில்லியனாக பதிவாகியிருந்தது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வங்கியின் வலுக்குறைப்பு கட்டணம் ரூ. 354 மில்லியனாக பதிவாகியிருந்தது. 2019 செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதிக்கான திரட்டிய வலுக்குறைப்பு கட்டணத் தயாரிப்பின் போது Sri Lanka Accounting Standard – SLFRS 9 (Financial Instruments) இனால் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறை பின்பற்றப்பட்டிருந்தது. முன்னைய காலப்பகுதிக்கான கட்டண தயாரிப்பு LKAS 39 (Financial Instruments)விதிமுறையின் பிரகாரம் அமைந்திருந்தது. பாரியளவிலான பொருளாதார சவால்களில் பிரதிபலிப்பை ஏற்படுத்தும் வகையில், வங்கியின் நிகர NPL விகிதம் என்பது ஆக காணப்பட்டதுடன், தேறிய NPL விகிதம் 3.9% ஆக காணப்பட்டது.

தொழிற்படு சூழலில் காணப்பட்ட சவால்களுக்கு மத்தியில், யூனியன் வங்கி சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்திருந்ததுடன், ரூ. 1422 மில்லியனை வரிக்கு முந்திய இலாபமாக பதிவு செய்திருந்தது. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 54% வளர்ச்சியாகும். இதனூடாக, வருடத்தின் மூலோபாய வளர்ச்சி இலக்குகளை எய்துவதை நோக்கி வங்கி பயணிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
துணை நிறுவனங்களிடமிருந்தான இலாப பகிர்வு ரூ. 98 மில்லியனாக பதிவாகியிருந்ததுடன், முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது ரூ. 51 மில்லியன் அதிகரிப்பாகும். இந்த அதிகரிப்பில் UB ஃபினான்ஸ் லிமிடெட் பாரியளவு பங்களிப்பை வழங்கியிருந்தது.

வருமானம், VAT, NBT மற்றும் நிதிச் சேவைகள் மீதான DRL போன்ற வரிகள் ரூ. 889 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 67% அதிகரிப்பாகும். வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 533 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 37% அதிகரிப்பாகும்.

வங்கியின் மொத்த பரிபூரண வருமானம் ரூ. 867 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 469% அதிகரிப்பாகும். கடன் சாதனங்களின் விலை மதிப்பீடு நேர்த்தியான பெறுமதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தமையினூடாக பெறப்பட்ட பரிபூரண வருமானத்தினால் இந்தப் பெறுமதிக்கு பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது.

செப்டெம்பர் 30ஆம் திகதியன்று, வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 115,574 மில்லியனாக பதிவாகியிருந்தது. வங்கியின் கடன்கள் மற்றும் கிடைக்கப்பெறவேண்டியவைகள் ரூ. 74,998 மில்லியனாக பதிவாகியிருந்தது. வைப்புகளின் இருப்பு என்பது ரூ. 74,707 மில்லியனாக பதிவாகியிருந்தது. மொத்த சராசரி CASA பெறுமதி ரூ. 18,923 மில்லியனாக வளர்ச்சியடைந்திருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22% அதிகரிப்பாகும். ஆரோக்கியமான CASA பாய்ச்சல்களை எய்துவதற்கான முயற்சிகளில், நுகர்வோர், கூட்டாண்மை மற்றும் சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாளர் வங்கியில் பிரிவுகளின் கவனம் செலுத்தப்பட்ட கையகப்படுத்தல் மூலோபாயங்கள் பங்களிப்பு வழங்கியிருந்தன.

உறுதியான மூலதன விகிதங்களை பேணுவதில் நிர்வாகம் முக்கியத்துவமளித்திருந்தது. யூனியன் வங்கியின் மொத்த மூலதன போதுமை விகிதம் 2019 செப்டெம்பர் 30 ஆம் திகதியன்று 16.5% ஆக பதிவாகியிருந்தது. இது ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை உயர்ந்தமட்டத்தில் அமைந்திருந்தது.

வங்கி மற்றும் இரு துணை நிறுவனங்களான நஷனல் அஸெட் மனேஜ்மன்ட் லிமிடெட் மற்றும் UB ஃபினான்ஸ் கம்பனி லிமிடெட் ஆகியவற்றைக் கொண்ட குழுமத்தின் வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 606 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 36% வளர்ச்சியாகும். குழுமத்தின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 124,061 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில் 93%ஐ வங்கியின் வசம் காணப்பட்டது. குழுமம் ஐந்தொகை திகதியன்று தன்வசம் ஆரோக்கியமான மூலதன விகிதமான 16.3% ஐ கொண்டிருந்தது.

 

தொழிற்படு வினைத்திறன்

3ஆம் காலாண்டு பகுதியில் காணப்பட்ட சவால்கள் நிறைந்த சந்தை சூழலிலும், யூனியன் வங்கி சிறந்த வியாபார வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.
போட்டிகரமான சந்தைச் சூழலில் வங்கியின் கூட்டாண்மை வங்கியியல் அலகு தொடர்ந்தும் முன்னேற்றத்தை பதிவு செய்திருந்தது. குறிப்பாக, மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் தனது பிரதான இலக்குகளான வருமானம் மற்றும் சொத்துக்கள் வளர்ச்சி ஆகியவற்றை எய்தியிருந்தது.

நாட்டில் நிலவும் பொருளாதார சூழலால் சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்கள் (SMEs) பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. சந்தையில் காணப்படும் சிறியளவிலான நிறுவனங்களின் பின்பற்றல் நிலையை தொடர்ந்தும் பரிசோதிப்பதாக இந்த சூழல் காணப்படுகின்றது. சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு மத்தியில், யூனியன் வங்கியினால் தொடர்ந்தும் மூலோபாய முக்கியத்துவங்கள் இனங்காணப்பட்டு அவற்றின் வளர்ச்சிக்கும், நிலைத்திருப்புக்குமான தொடர்ச்சியாக தீர்வுகள் மற்றும் ஆலோசனை சேவைகள் போன்றன வழங்கப்படுகின்றன.
வங்கியின் முன்னணி கொடுக்கல் வாங்கல் தீர்வான, யூனியன் வங்கி Biz Direct தொடர்ந்தும், கூட்டாண்மை மற்றும் சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு பெறுமதி சேர்த்திருந்தது. இந்த வங்கியியல் கொடுக்கல் வாங்கல் தீர்வில் தற்போது மாற்றங்களை ஏற்படுத்திய வண்ணமுள்ளதுடன், இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு மேலும் சௌகரியத்தை பெற்றுக் கொடுக்கும் வகையிலான உள்ளம்சங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

நுகர்வோர் கடன்கள் மற்றும் முற்பணங்கள் பிரிவு மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் ஓரளவு வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. வங்கியின் கடன் அட்டை பிரிவு, மேலும் விஸ்தரிக்கப்பட்டிருந்ததுடன், விடுமுறை, உணவகம், சொப்பிங் போன்ற கவர்ச்சிகரமான வாழ்க்கைமுறை சலுகைகளை வழங்கும் திட்டங்களையும் முன்னெடுத்திருந்தது.

யூனியன் வங்கியின் நடைமுறை மற்றும் சேமிப்பு (CASA) மீதிகளை கட்டியெழுப்பும் நோக்கில், சிறுவர் சேமிப்பு, முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் நிறுவனசார் CASA போன்றவற்றில் தொடர்ச்சியான இலாகா கட்டியெழுப்பலை மேற்கொண்டிருந்தது. இந்த செயற்பாடுகளை கிளைகள், உறவு முகாமையாளர்கள் மற்றும் அர்ப்பணிப்பான விற்பனை செயலணிகள் போன்றவற்றினூடாக முன்னெடுத்து, புதிய கையகப்படுத்தல்களை மேற்கொண்டிருந்தது. இதன் பெறுபேறாக, வங்கியின் CASA இருப்பு 2019 செப்டெம்பர் மாதத்தில் நடப்பு ஆண்டில் 26.4% இனால் அதிகரிப்பை பதிவு செய்திருந்தது.
செயன்முறைகளை சீரமைப்பதனூடாக தொழிற்பாட்டு வினைத்திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட உற்பத்தித் திறன் போன்றவற்றில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தியிருந்ததன் காரணமாக, மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் செலவு முகாமைத்துவத்தை மேம்படுத்திக் கொள்ள முடிந்தது.

வங்கி தனது ஒன்லைன் மற்றும் மொபைல் வங்கியியல் சேவைகளினூடாக மேம்படுத்தப்பட்ட வங்கியியல் சௌகரியங்களை வழங்கியிருந்ததுடன், கடன் அட்டைகளுக்காக இந்த கட்டமைப்புகளினூடாக மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கான வசதிகளுடன், சுய சேவைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகளை ஏற்படுத்தும் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளது.

2019 ஆகஸ்ட் மாதத்தில், யூனியன் வங்கியின் கூட்டாண்மை இணையத்தளமான www.unionb.com க்கு அமெரிக்காவை தளமாகக் கொண்டு வழங்கப்படும் dotCoMM விருதுகள் 2019 இல் நிதியியல் பிரிவில் தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. வங்கியின் வெற்றிகரமான செயற்பாடுகளை இது மேலும் உறுதி செய்வதாக அமைந்துள்ளதுடன், அதன் நவீன டிஜிட்டல் உள்ளம்சங்களைக் கொண்ட செயற்பாடுகளின் பாதுகாப்பையும், பிரசன்னத்தையும் மேம்படுத்தி, பாவனையாளர்களுக்கு சௌகரியத்தை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
மூன்றாம் காலாண்டு நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் யூனியன் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ”சவால்கள் நிறைந்த பொருளாதார பின்புலத்திலும், உயர் வரி அறவீடுகள் காணப்படும் ஒரு காலகட்டத்தில் யூனியன் வங்கியின் முதல் ஒன்பது மாத காலப்பகுதிக்கான சிறந்த நிதிப் பெறுபேறுகளை பகிர்ந்து கொள்வதையிட்டு நான் மிகவும் பெருமை கொள்கின்றேன். கடுமையான சூழல்களில் வங்கி மூலோபாய அடிப்படையில் பயணிப்பதை தெளிவாக உறுதி செய்துள்ளது. செயற்பாட்டு வினைத்திறன், டிஜிட்டல் வங்கியியல் தரவுகள் மற்றும் உள்ளடக்கமான இலாகா விரிவாக்கங்கள் போன்றன ஆண்டின் நான்காம் காலாண்டிலும் சிறந்த பங்களிப்பை வழங்கும் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். இக்காலப்பகுதியில் எமது 2019 ஆம் ஆண்டின் இலக்குகளை வெற்றிகரமாக எய்துவது தொடர்பில் கவனம் செலுத்தி வியாபார நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.” என்றார்.

2019 முதல் அரையாண்டில் யூனியன் வங்கி வரிக்கு முந்திய இலாபம் 52% வளர்ச்சி

2019 முதல் அரையாண்டில் யூனியன் வங்கி வரிக்கு முந்திய இலாபம் 52% வளர்ச்சி

வங்கியின் பெறுபேறுகள்

  • வரிக்கு முன்னைய இலாபம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 52% வளர்ச்சியை பதிவு செய்து ரூ. 849 மில். ஆக பதிவு.
  • தேறிய வட்டி வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19% வளர்ச்சியை பதிவு செய்து ரூ. 2,131 மில். ஆக பதிவு.
  • கட்டணம் மற்றும் தரகு வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17% ஆல் அதிகரித்து ரூ. 524 மில். ஆக பதிவு.
  • மொத்த மூலதன போதுமை விகிதம் 17.23% ஆக பதிவு.

குழுமத்தின் பெறுபேறுகள்

  • வரிக்கு முந்திய இலாபம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19% ஆல் அதிகரித்து ரூ. 799 மில். ஆக பதிவு.
  • தேறிய வட்டி வருமானம் 15% ஆல் அதிகரித்து ரூ. 2,516 மில். ஆக பதிவு.
  • கட்டணம் மற்றும் தரகு வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9% ஆல் அதிகரித்து ரூ. 579 மில். ஆக பதிவு

சகல துறைகளை சேர்ந்த வியாபாரங்களும் சவால்கள் நிறைந்த சந்தை சூழல்களுக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், யூனியன் வங்கி உறுதியான முதல் அரையாண்டு நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது. பிரதான வங்கியியல் வருமானத்தில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி பதிவாகியிருந்ததுடன், வரிக்கு முந்திய இலாபம் ரூ. 849 மில்லியனாக பதிவாகியிருந்தது.

பிரதான வங்கியியல் வளர்ச்சி மற்றும் நிதியியல் பெறுபேறுகள்

2019 ஏப்ரல் மாதம் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்களை தொடர்ந்து நாட்டில் எழுந்த சவால்கள் நிறைந்த பொருளாதார சூழலில், இரண்டாம் காலாண்டில் வங்கியியல் துறையும் பெருமளவு எதிர்பாராத சவால்களை எதிர்நோக்கியிருந்தது.

சவால்கள் நிறைந்த பொருளாதார சூழலிலும், யூனியன் வங்கி ஆரோக்கியமான வங்கியியல் வளர்ச்சியை பதிவு செய்திருந்ததுடன், தேறிய வட்டி வருமானம் (NII) முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 19% ஆல் அதிகரித்து ரூ. 2131 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய வட்டி எல்லைபெறுமதி முன்னைய ஆண்டின் இதே காலாண்டில் பதிவாகியிருந்த 3.1% வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 3.4%  வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. இதில் CASA சராசரி மீதிகளின் வளர்ச்சி பெருமளவு பங்களிப்பை வழங்கியிருந்தது. NII வளர்ச்சி என்பது, வங்கியினால் தனது இலாகா மீளமைப்பு செயற்பாடுகளின் மீதான கவனத்தில் பிரதிபலிப்பை ஏற்படுத்தியிருந்தது.

கட்டணம் மற்றும் தரகு வருமானம் என்பது தொடர்ந்தும் வளர்ச்சியடைந்தது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் 17% வளர்ச்சியை பதிவு செய்து ரூ. 524 மில்லியனாக பதிவாகியிருந்தது. இந்த வளர்ச்சியில் கையாளல் கட்டணங்கள் மற்றும் விரிவடைந்த கடன் புத்தகம், புதிய கடன் அட்டை வழங்கல்கள், தரகு மற்றும் நடைமுறை மற்றும் சேமிப்பு கணக்குகள் (CASA) தொடர்புடைய கட்டணங்கள் போன்றன பங்களிப்பு வழங்கியிருந்தன.

இக்காலப்பகுதிக்கான மூலதன வருமதிகள் ரூ. 253 மில்லியனாக பதிவாகியிருந்தது. அலகுகள் மீதான முதலீட்டு வருமதி என்பது முன்னைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20% குறைந்து ரூ. 123 மில்லியனாக பதிவாகியிருந்தது. இக்காலப் பகுதியில் நம்பிக்கை அலகுகள் மீதான முதலீடுகளில் வீழ்ச்சி ஏற்பட்டமை இதற்கு காரணமாக அமைந்திருந்தது.

இதர தொழிற்படு வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட, வெளிநாட்டு நாணயமாற்று வியாபார வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி பங்களிப்பு செலுத்தியிருந்தது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவாகியிருந்த பெறுமதியில் 50% பெறுமதியை மாத்திரமே பதிவு செய்திருந்தது. காலாண்டு பகுதியில் நிலவிய சவால் நிறைந்த பொருளாதார சூழல் காரணமாக இந்த குறைவு ஏற்பட்டிருந்தது.

மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்ட காலாண்டில், வங்கியின் மொத்த தொழிற்படு வருமானம் ரூ. 2899 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13% வளர்ச்சியாகும். மொத்த தொழிற்படு செலவீனங்கள் கவனமாக நிர்வகிக்கப்பட்டிருந்ததுடன், முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 4% அதிகரித்து ரூ. 1,973 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதன் பெறுபேறாக, வங்கியின் மதிப்பிறக்க இலாபம் ரூ. 926 ஆக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 37% அதிகரிப்பாகும்.

வங்கியின் மதிப்பிறக்க கட்டணம் ரூ. 139 மில்லியனாக காணப்பட்டது. 2019 ஜுன் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த திரட்டப்பட்ட மதிப்பிறக்க கட்டணம், இலங்கை கணக்கீட்டு நியமமான – SLFRS 9 (நிதியியல் சாதனங்கள்) பிரகாரம் தயாரிக்கப்பட்டிருந்தது. இதேவேளை, முன்னைய காலப்பகுதிக்கான கட்டணம் LKAS 39 (நிதியியல் சாதனங்கள்) இன் பிரகாரம் தயாரிக்கப்பட்டிருந்தது.

துணை நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இலாப பகிர்வு ரூ. 62 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ரூ. 22 மில்லியன் அதிகரிப்பாகும்.

இக்காலப்பகுதிக்கான வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 297 மில்லியனாகும், இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 18% அதிகரிப்பாகும். அதிகரித்த வரி வீதங்கள் காரணமாக, வங்கியின் வரிக்கு பிந்திய இலாபம் பாதிக்கப்பட்டிருந்தது. செயற்படு வரி வீதம் (சகல வரிகளும்) முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 70% ஆக அதிகரித்திருந்தது.

வங்கியின் மொத்த பரிபூரண வருமானம் ரூ. 685 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 490% அதிகரிப்பாகும்.

ஜுன் 30 ஆம் திகதியன்று வங்கியின் மொத்த சொத்துக்கள் ரூ. 121,747 மில்லியனாக பதிவாகியிருந்தது. வங்கியின் கடன்கள் மற்றும் கிடைப்பனவுகள் ரூ. 74,222 மில்லியனாக காணப்பட்டது. ஐந்தொகை திகதியன்று, வைப்பு இருப்பு ரூ. 74,609 மில்லியனாகும். கவனமான இடர் முகாமைத்துவ செயற்பாடுகள் ஊடாக சொத்துக்கள் தரம் தொடர்பாக வங்கி தொடர்ச்சியாக கவனம் செலுத்தியிருந்தது. தேறிய NPL விகிதம் அறிக்கை இடப்பட்ட காலப்பகுதியின் இறுதியில் 3.9% ஆக பதிவாகியிருந்தது.

மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் மொத்த சராசரி CASA பெறுமதி ரூ. 3,545 மில்லியாக அதிகரித்திருந்தது. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 23% அதிகரிப்பாகும். ஆரோக்கியமான CASA உட்பாய்ச்சல்களை பேணுவதற்கு, நோக்குடைய கையகப்படுத்தல் மூலோபாயங்கள் பங்களிப்பு செலுத்தியிருந்தன.

வங்கி தொடர்ச்சியாக தனது துரித மூலதன போதுமையை பேணியிருந்ததுடன், மொத்த மூலதன விகிதம் ஐந்தொகை திகதியன்று 17.23% ஆக பதிவாகியிருந்தது.

குழுமத்தில் வங்கி மற்றும் அதன் இரு துணை நிறுவனங்களான UB ஃபினான்ஸ் கம்பனி மற்றும் நஷனல் அஸெட் மனேஜ்மன்ட் லிமிடெட் ஆகியன வரிக்கு முந்திய இலாபமாக ரூ. 799 மில்லியனை பதிவு செய்திருந்தன. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 19% அதிகரிப்பாகும். குழுமத்தின் மொத்த சொத்துக்கள் பெறுமதி ரூ. 130,369 மில்லியனாகும், இது வங்கியினால் 93.4% ஆக பிரதிபலிக்கப்பட்டிருந்தது. ஐந்தொகை திகதியன்று குழுமம் ஆரோக்கியமான பிரதான மூலதன விகிதமாக 15.48% ஐ பேணியிருந்தது.

 

வியாபார பெறுபேறுகள் மற்றும் மூலோபாய செயற்படுத்துநர்கள்

வங்கியின் கூட்டாண்மை வங்கியியல் வியாபாரம் தொடர்ந்து தனது இலாகாவை உறுதி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தியிருந்ததுடன், விளைவுகள் மற்றும் தொழிற்படா கடன்களை (NPL) நிர்வகிப்பதிலும் கவனம் செலுத்தியிருந்தது. பொருளாதாரத்தில் சவால்கள் காணப்பட்ட நிலையில், கூட்டாண்மை வங்கியியல் வியாபாரம் என்பது தனது நோக்கத்தை மீளமைத்திருந்ததுடன், சந்தை அபிவிருத்தி செயற்பாடுகளை தனது இலாகா அபிவிருத்தியில் ஆரம்பித்திருந்தது. வங்கியின் நவீன வசதி படைத்த வங்கியியல் கொடுக்கல் வாங்கல் தீர்வான யூனியன் வங்கி Biz Direct ஊடாக, நிறுவனங்களுக்கும், கூட்டாண்மைகளுக்கும் மற்றும் சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சிகளுக்கும் பெறுமதி சேர்க்கப்பட்ட தீர்வை வழங்கியிருந்தது. வங்கியின் நடைமுறை மற்றும் சேமிப்பு (CASA) வளர்ச்சியில் பங்களிப்பு செலுத்தியிருந்தது.

சிறிய, நடுத்தரளவு வங்கியியல் வியாபாரம் தொடர்ச்சியாக நாட்டின் வளர்ந்து வரும் வியாபாரங்களுக்கு தனது உதவிகளை வழங்கியிருந்தது. கடுமையான இடர் முகாமைத்துவ மற்றும் கடுமையான கடன் கொள்கைகள் போன்றவற்றினூடாக, வங்கியின் NPL களை நிர்வகிக்கக்கூடிய மட்டத்தில் பேண உதவியிருந்தது. இக்காலப் பகுதியில் 10 வருட காலத்துக்கான கடன் திட்டமொன்றும் (BML) துறைக்காக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. CASA கையகப்படுத்தல்களை ஊக்குவிக்கும் வகையில் மூலோபாய ஊழியர் போட்டிகள் மூன்று வலயங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. நிதி முகாமைத்துவத்துக்காக சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாளர் வாடிக்கையாளர்களை ஒன்றிணைப்பதனூடாக, CASA வளர்ச்சிக்கு உதவி வழங்கப்பட்டிருந்தது.

நுகர்வோர் வங்கியியல் வியாபாரம், கடன் அட்டைகள், அடைமானம் போன்ற பின்புலத்தை கொண்ட கடன்களில் மற்றும் சேமிப்புகள் மற்றும் முதலீட்டு தீர்வுகள் போன்றவற்றில் வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. சில புதிய நுகர்வோர் வங்கியியல் உள்ளம்சங்கள் மற்றும் பெறுமதி சேர்ப்புகள் போன்றன இந்த மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. அடைமான கடன்கள் மற்றும் கடன் அட்டை மீதான கடன்கள் போன்றன பிரதான புதிய செயற்பாடுகளாகும். கிளைகள் மற்றும் விற்பனை அணியினரூடாக வகைப்படுத்தப்பட்ட இலாபமீட்டும் கையகப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

திறைசேரி பிரிவு, 2ஆம் காலாண்டில் சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது. வெளிநாட்டு நாணய பரிமாற்ற வருமானம் அழுத்தத்துக்கு முகங்கொடுத்திருந்தது, சவால்கள் நிறைந்த பொருளாதார சூழ்நிலைகள் காரணமாக வர்த்தக நிதியியல் வியாபாரங்களில் குறைந்தளவு ஈடுபாடுகள் பதிவாகியிருந்தது.

2019 மே மாதத்தில், யூனியன் வங்கியின் Biz Direct தீர்வுக்காக நவீன நிதி முகாமைத்துவ தீர்வான சர்வதேச வியாபார நோக்க விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. இந்த விருதினூடாக யூனியன் வங்கி Biz Direct இன் தொடர்ச்சியான வெற்றிகர செயற்பாடு உறுதி செய்யப்பட்டிருந்தது.

மே 2019 இல், ஃபிட்ச் ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் யூனியன் வங்கியின் தேசிய நீண்ட கால தரப்படுத்தலை ‘BB+(lka)’  இலிருந்து ‘BBB-(lka)’ஆக உயர்த்தியிருந்தது. இந்த தரப்படுத்தல் மெருகேற்றம், வங்கியின் சிறந்த இடர் நிலையில் பிரதிபலிக்கப்பட்டிருந்ததுடன், பன்முகப்படுத்தப்பட்ட கடன் புத்தகம், அதிகரித்த இலாபகரத்தன்மை மற்றும் சராசரியை விட உயர்ந்த மூலதன இருப்பு ஆகியவற்றையும் கொண்டிருந்தது. வங்கியின் வளர்ந்து செல்லும் வலையமைப்பு மற்றும் தொடர்ச்சியாக அதிகரிக்கும் இலாபகரத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்திருந்தது.

2019 ஜுன் மாதத்தில், பங்கு மீள் கொள்வனவு பற்றி யூனியன் வங்கி அறிவித்திருந்தது. வங்கியின் பிரதான பங்குதாரரான TPG இதற்கு பதிலளிக்காமை காரணமாக, வங்கியின் மீது தனது நீண்ட கால அர்ப்பணிப்பை உறுதி செய்திருந்தது. ஆகக்கூடியது 7,851,844 சாதாரண பங்குகளை கொண்டிருக்கும் ஒவ்வொரு 139 பங்குகளுக்கும் 1 பங்கு வீதம், பங்கொன்றுக்கு ரூ. 15 வீதம் மீள கொள்வனவு செய்யும் சலுகையை வங்கி அறிவித்திருந்தது. 2019 ஜுன் 11 ஆம் திகதி இடம்பெற்ற அசாதாரண பொது சந்திப்பின் போது, பங்கு மீள் கொள்வனவினூடாக ரூ. 117,777,660 ஐ திரட்டுவதற்கான அனுமதியை பங்குதாரர்கள் வழங்கியிருந்தனர். சலுகை காலம் 2019 ஜுன் 27 ஆம் திகதி ஆரம்பித்து, 2019 ஜுலை 11 ஆம் திகதி நிறைவடைந்தது. தகைமை வாய்ந்தவர்கள் அடிப்படையில் 585,485 பங்குகளை மீள வழங்குவதற்கான விண்ணப்பங்களை பங்குதாரர்கள் சமர்ப்பித்திருந்தனர். மேலதிக பங்குகளாக 48,004,755 பங்குகளை கொள்வனவு செய்வதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

2019 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு நிதிப் பெறுபேறுகள் தொடர்பாக யூனியன் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், பணிப்பாளருமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ”2019 ஆம் ஆண்டின் இதுவரை காலமும் பல சவால்கள் மத்தியிலும் மிகவும் நேர்த்தியானதாக அமைந்துள்ளது. பெறுபேறுகள் வரவேற்கத்தக்கது என்பதுடன், வியாபார மூலோபாயத்தை ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளது. இதே போன்று நாம் தொடர்ச்சியாக வளர்ச்சியடைவதுடன், பொருளாதார மீட்சி சூழலுடன், 2019 இன் பிற்பகுதியில் மேலும் சிறந்த பிரதான வங்கியியல் மற்றும் வினைத்திறனை பதிவு செய்ய எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வரிக்கு முந்திய இலாப வளர்ச்சியாக 49% ஐ பதிவு

யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வரிக்கு முந்திய இலாப வளர்ச்சியாக 49% ஐ பதிவு

வங்கியின் பெறுபேறுகள்

  • செயற்பாட்டு நடவடிக்கைகள் பெறுபேறுகள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 62% வளர்ச்சியை பதிவு செய்து ரூ. 362 மில். ஆக பதிவு
  • வரிக்கு முன்னைய இலாபம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 49% வளர்ச்சியை பதிவு செய்து ரூ. 366 மில். ஆக பதிவு.
  • தேறிய வட்டி வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19% வளர்ச்சியை பதிவு செய்து ரூ. 1,013 மில். ஆக பதிவு.
  • கட்டணம் மற்றும் தரகு வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19% ஆல் அதிகரித்து ரூ. 266 மில். ஆக பதிவு.
  • மொத்த மூலதன போதுமை விகிதம் 16.9% ஆக பதிவு

குழுமத்தின் பெறுபேறுகள்

  • வரிக்கு முந்திய இலாபம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 31% ஆல் அதிகரித்து ரூ. 401 மில். ஆக பதிவு.
  • தேறிய வட்டி வருமானம் 17% ஆல் அதிகரித்து ரூ. 1,219 மில். ஆக பதிவு.

 

பிரதான வங்கியியல் வளர்ச்சி மற்றும் இலாபகரத் தன்மை

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிர்ணயித்திருந்த மூன்றாண்டு கால வளர்ச்சி மூலோபாயத்தின் பிரகாரம், தொடர்ந்தும் உறுதியான வளர்ச்சியை பதிவு செய்து நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் யூனியன் வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளது. பிரதான வங்கியியல் செயற்பாடுகள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 62% வளர்ச்சியை பதிவு செய்திருந்ததுடன், பிரதான வங்கியியல் செயற்பாடுகளினூடான இலாபம் ரூ. 362 மில்லியன் வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. கடந்த சில காலாண்டுகளாக வங்கித் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த சவால்கள் நிறைந்த பேரளவுபொருளாதார பின்புலத்திலும் இந்த தொடர்ச்சியான வளர்ச்சி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2019 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலப்பகுதியில், யூனியன் வங்கி வரிக்கு முந்திய இலாபமாக முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 49% வளர்ச்சியை பதிவு செய்து ரூ.366 மில். ஆக பதிவாகியிருந்தது. இதனூடாக ஆண்டுக்கான மூலோபாய வளர்ச்சி இலக்குகளை எய்துவதற்கான வங்கியின் தொடர்ச்சியான பெறுபேறுகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
வியாபாரத்தினுள்ளேயும், வியாபார அலகுகளினிடையேயையும் மேற்கொள்ளப்பட்ட இலாகா மீளமைவு நடவடிக்கைகள் ஊடாக வருமான சீராக்கத்தினூடாக தேறிய வட்டி வருமானம் (NII) முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19% வளர்ச்சியடைந்து ரூ. 1,013 மில்லியனாக பதிவாகியிருந்தது. வைப்புகள் மீதான செலவீனங்கள் அதிகரித்திருந்த போதிலும் இந்த பெறுபேறு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில், கட்டணம் மற்றும் தரகு வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19% ஆல் அதிகரித்து ரூ. 266 மில்லியனாக பதிவாகியிருந்தது. கட்டண வருமான வளர்ச்சியில் புதிய அறிமுகமான கடன் அட்டைகள் மீது சேகரிக்கப்பட்ட கட்டணங்கள் போன்றனவும் அடங்கியுள்ளன. வியாபார மற்றும் பண அனுப்பல்கள் தொடர்பான கட்டணங்கள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஓரளவு வீழ்ச்சியை பதிவு செய்திருந்தன.

அரசாங்க முறிகள் மீதான மூலதன வருமானம் ரூ. 71 மில்லியனாகும். இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 23% அதிகரிப்பாகும். குறித்த காலப்பகுதிக்கான அலகுகள் மீதான முதலீடுகளின் மூலமான வருமானம் ரூ. 70 மில். ஆகும். இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 33% வீழ்ச்சியாகும். கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் அமுலுக்கு வந்த வரி விதிமுறைகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் காரணமாக, அலகுகள் மீதான முதலீடுகள் குறைக்கப்பட்டதுடன், இது இந்த மறை வளர்ச்சியில் பங்களிப்பை செலுத்தியிருந்தது. அதேவேளை, வெளிநாட்டு நாணய பரிமாற்று வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 71% வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது. இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வடைந்ததன் காரணமாக மீள்மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டமை இதற்கு காரணமாக அமைந்திருந்தது.

மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில், வங்கியின் மொத்த செயற்பாட்டு வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8% அதிகரிப்பை பதிவு செய்து ரூ. 1,368 மில்லியனாக பதிவாகியிருந்தது. மொத்த செயற்பாட்டு செலவீனங்கள் முறையான வகையில் நிர்வகிக்கப்பட்டதுடன், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2% வளர்ச்சியை மாத்திரம் பதிவு செய்து ரூ. 955 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதன் பெறுபேறாக தொழிற்பாட்டு எல்லைப் பெறுமதி முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 24% ஆல் உயர்ந்து ரூ. 413 மில்லியனாக பதிவாகியிருந்தது.

குறித்த காலப்பகுதிக்கான வலுக்குறைப்புக் கட்டணம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 53% ஆல் குறைந்து ரூ. 51 மில். ஆக பதிவாகியிருந்தது. இந்தப் பெறுமதியில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியை அவதானிக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

துணை நிறுவனங்களினால் பகிரப்பட்ட இலாபம் ரூ. 4 மில். ஆகும், மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் நிலவிய மோசமான சந்தை சூழ்நிலைகள் காரணமாக வங்கியின் இரு துணை நிறுவனங்களும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தமை காரணமாக ரூ. 19 மில். குறைவு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த காலப்பகுதிக்கான நடைமுறைக்கு வந்த வரி வீத அதிரிப்பு காரணமாக இக்காலப்பகுதிக்கான வரிக்கு பிந்திய இலாபம் பாதிக்கப்பட்டிருந்தது. காலாண்டுக்கான வரி வீதம் 72% முன்னைய காலப்பகுதியில் இந்தப் பெறுமதி 52% ஆகும். இலங்கை அபிவிருத்தி முறிகள், நம்பிக்கை அலகுகள் மீதான முதலீடுகள், கடன் பத்திரங்கள் மீதான முதலீடகள் மற்றும் கடன் மீளச் செலுத்தல் கட்டணம் அறிமுகம் ஆகியவற்றினூடாக ஈட்டப்பட்ட இலாபங்கள் மீது வரி விலக்கழிப்புகள் மீளப் பெறப்பட்டமை காரணமாக இந்த வரி வீதத்தில் அதிகரிப்பு பதிவாகியிருந்தது. குறிப்பீட்டு வரி சேர்மானம் மீளப் பெறப்பட்டமைக்கு மேலாக, பிரயோக வரி வீதத்தில் தாக்கம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதன் பெறுபேறாக, இக்காலப்பகுதிக்கான வரிக்குப் பிந்திய இலாபம் ரூ. 105 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19% வீழ்ச்சியாகும்.
வங்கியின் மொத்த பரிபூரண வருமானம் ரூ. 295 மில்லியனாகும். இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ. 246 மில்லியன் அதிகரிப்பாகும். கடன் சாதனங்களின் மீது பதிவாகியிருந்த நேர்த்தியான பெறுமதி இதில் தாக்கம் செலுத்தியிருந்தது.

2019 மார்ச் 31 ஆம் திகதியன்று, வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 124,624 மில்லியனாக பதிவாகியிருந்தது. வங்கியின் கடன்கள் மற்றும் வருமதிகள் போன்றன ரூ. 76,279 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டிலிருந்து இத்திகதி வரை ஒப்பிடுகையில் 3% வளர்ச்சியாகும். ஐந்தொகையில், வைப்புகளின் இருப்பு என்பது ரூ. 77,897 மில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், வைப்புகளுக்கு நிகரான கடன் விகிதம் 99% இலிருந்து 105% ஆக அதிகரித்திருந்தது. வங்கி தொடர்ச்சியாக சொத்துக்களின் தரம் மீது கவனம் செலுத்தியிருந்தது. இதற்காக கடுமையான இடர் முகாமைத்துவ செயன்முறைகளை பின்பற்றியிருந்தது. தேறிய NPL விகிதம் என்பது 3.1% ஆக காணப்பட்டது.
அத்துடன் மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில், மொத்த CASA பெறுமதி ரூ. 20,077 மில்லியனாக அதிகரித்திருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22% வளர்ச்சியாகும். ஆரோக்கியமான CASA உட்பிரவேசத்தை பேணியிருந்ததுடன், வாடிக்கையாளர், கூட்டாண்மை மற்றும் சிறிய, நடுத்தரளவு வங்கியியல் பிரிவுகளின் மூலோபாய கையகப்படுத்தல்களினூடாக உந்துதலளிக்கப்பட்டிருந்தது.

வங்கி தொடர்ச்சியான உறுதியான மூலதன போதுமையை பேணியிருந்தது. மொத்த மூலதன விகிதம் ஐந்தொகையில் 16.9% ஆக பதிவாகியிருந்தது.
வங்கியின் குழுமத்தில் இரு துணை நிறுவனங்கள் காணப்படுகின்றன. UB ஃபினான்ஸ் கம்பனி லிமிடெட் மற்றும் தேசிய சொத்துக்கள் முகாமைத்துவ நிறுவனம் (National Asset Management Limited) ஆகியன இக்காலப்பகுதியில் வரிக்கு முந்திய இலாபமாக 401 மில்லியன் ரூபாயை பதிவு செய்திருந்தன. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 31% வளர்ச்சியாகும். குழுமத்தின் மொத்த சொத்துக்கள் பெறுமதி ரூ. 134,065 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில் 93% ஐ வங்கி பிரதிபலித்திருந்தது. ஐந்தொகை திகதியில் குழுமம் 16% எனும் ஆரோக்கியமான பிரதான மூலதன விகிதத்தை பேணியிருந்தது.

 

வியாபார பெறுபேறுகள் மற்றும் மூலோபாய செயற்படுத்துநர்கள்

3 ஆண்டு வளர்ச்சி மூலோபாயத்தில் 2ஆம் ஆண்டில் வளர்ச்சியை பதிவு செய்யும் வகையில், யூனியன் வங்கியின் கூட்டாண்மை வங்கியியல் இலாகா மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது. சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளில் உறுதியான வளர்ச்சியை பதிவு செய்திருந்ததுடன், கூட்டாண்மை கடன்கள் இலாகா என்பது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. கூட்டாண்மை வங்கியியல் பிரிவின் வைப்புகள் இருப்பு என்பது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 45% ஆல் அதிகரித்திருந்தது. பண முகாமைத்துவ பிரிவான யூனியன் வங்கி Biz Direct இனால் வங்கியின் CASA வளர்ச்சியில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது.

சிறிய நடுத்தரளவு வங்கியியல் இலாகா என்பது 2019 ஆம் ஆண்டின் 1ல் காலாண்டில் தொடர்ச்சியான வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. இதில் மூலோபாய நிதி வழங்கல் வழிமுறை பங்களிப்பு வழங்கியிருந்ததுடன், தெரிவு செய்யப்பட்ட துறைகளில் பெருமளவு விநியோகங்களை மேற்கொண்டிருந்தது. வங்கியின் சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மை வியாபாரம் என்பது நேர்த்தியான ஆரம்பத்தை ஆண்டில் வெளிப்படுத்தியிருந்ததுடன், சொத்துக்கள் வளர்ச்சியில் உறுதியான பங்களிப்பை செலுத்தியிருந்தது.
வங்கியின் வாடிக்கையாளர் வங்கியியல் பிரிவு வைப்புகள் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கியிருந்தது. CASA இலாகா விரிவாக்கம் என்பது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. யூனியன் வங்கி கோல்ட் சேர்கிள் அறிமுகம் என்பது மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட ஆண்டில் அதிகளவு முக்கியத்துவம் பெற்றிருந்தது. எதிர்பார்ப்புகளை கொண்ட தனிநபர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கு வலுச் சேர்க்கும் வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட நிதியியல் அங்கமாக யூனியன் வங்கி கோல்ட் சேர்கிள் திகழ்கிறது. வங்கியியல் சேவை சேமிப்பு மற்றும் கடன் பெறல் போன்ற தெரிவுகள் அடங்கிய பல்வேறு அனுகூலங்களை தன்வசம் கொண்டுள்ளதுடன், இளம் நிபுணர்கள் மற்றும் வியாபார உரிமையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப நெகிழ்ச்சியான மற்றும் சௌகரியமான நியதிகளையும் வழங்குவதாக அமைந்துள்ளது. அர்ப்பணிப்பான உறவு முகாமையாளர்களினூடாக பிரத்தியேகமான சேவைகளை பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையில் யூனியன் வங்கி கோல்ட் சேர்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது. சந்தையில் அதிகரித்துச் செல்லும் வங்கியியல் தேவைகளுக்கு பொருத்தமான வாடிக்கையாளர் வங்கிச் சேவையை தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்கான வங்கியின் உறுதியான அர்ப்பணிப்பான அமைந்துள்ளது.
மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வங்கியின் வாடிக்கையாளர் சொத்துக்கள் இலாகா என்பது தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டிருந்ததுடன், அதன் அடைமான அடிப்படையிலான கடன்கள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 196% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் கடன் அட்டை பிரிவை அறிமுகம் செய்திருந்ததுடன், வங்கியின் வாடிக்கையாளர் வங்கியியல் செயற்பாடுகள் தொடர்ச்சியான விரிவாக்கல் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தது. கடன் அட்டைகள் மீதான விசேட கொடுப்பனவுகள் இதில் அடங்கியிருந்தன.

மதிப்பீட்டுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வங்கியின் திறைசேரி பிரிவு எதிர்பார்த்ததை விட உயர்ந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்தது. இதனூடாக வங்கியின் இலாபத்துக்கும் பங்களிப்பு சேர்க்கப்பட்டிருந்தது.

வங்கியின் மனித வளங்கள் மற்றும் செயற்பாடுகள் பிரிவும் வியாபார வளர்ச்சியில் தொடர்ச்சியாக பங்களிப்பு வழங்கியிருந்தன. வளங்கள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றின் மீளமைவு போன்றவற்றினூடாக சந்தை போக்குகளுக்கு ஏற்ப செயற்பாடுகள் மீளமைக்கப்பட்டிருந்தன. செலவு கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளினூடாக, வருமானத்தின் மீதான செலவீன விகிதமும் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டிருந்தது.

யூனியன் வங்கியின் சிறிய, நடுத்தரளவு வியாபார பிரிவின் சிறந்த செயற்பாட்டாளர்களை கௌரவிக்கும் வகையில் மார்ச் 30 ஆம் திகதி மரினோ பீச் ஹோட்டலில் யூனியன் வங்கியின் வாடிக்கையாளர் மற்றும் SME வங்கியியல் விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘வெற்றிக்கான ஓட்டம்’ என்பது இதன் தொனிப் பொருளாக அமைந்திருந்தது. 2018 ஆம் ஆண்டில் வங்கியின் சிறந்த கிளை மற்றும் விற்பனை ஊழியர்கள் இதன் போது கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
யூனியன் வங்கியின் வருடாந்த நிதிஅறிக்கை 2018, 2019 பெப்ரவரி மாதம் ‘உறுதியான பிணைப்புகளை கட்டியெழுப்பல்’ எனும் தொனிப்பொருளில் வெளியிடப்பட்டிருந்தது. இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் வணிக வங்கிகளில் ஒன்றாக திகழ்வதற்கான தனது அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், உறுதியான மூலதன இருப்பு, பரிபூரண தயாரிப்பு இலாகா, வலுவூட்டப்பட்ட அணி, தொழில்நுட்ப செம்மை மற்றும் செயற்பாட்டு வினைத்திறன் போன்றவற்றினூடாக, நிலைபேறான வளர்ச்சி வாய்ப்புகளை சகல பங்காளர்களுக்கும் உருவாக்கிக் கொடுக்கும்.

மேலும், 2019, மார்ச் 27 ஆம் திகதி அன்று, வங்கி தனது பணிப்பாளர் சபையினால் 7,875,798 சாதாரண பங்குகள் வரை பங்கொன்று ரூ. 15 க்கு மீளக் கொள்வனவு செய்வது குறித்த தீர்மானத்தை பொருத்தமான விதிமுறைகளின் பிரகாரம் மேற்கொண்டிருந்தது.
1ஆம் காலாண்டில் வங்கியின் பெறுபேறுகள் தொடர்பாக யூனியன் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ‘2019 ஆம் ஆண்டை நாம் நேர்த்தியாக ஆரம்பித்துள்ளோம். பிரதான வங்கியியல் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி பதிவாகியிருந்தது. எவ்வாறாயினும், பேரளவான சூழல் நிலைகள் மிகவும் சவால்கள் நிறைந்தனவாக அமைந்துள்ளன. இந்த உறுதியான பெறுபேறுகளை தொடர்ச்சியாக பேண எதிர்பார்ப்பதுடன், எமது வியாபார வளர்ச்சியை விஸ்தரிப்பதுடன், மூலோபாய வியாபார தூண்களின் அடிப்படையில் விரிவாக்க எண்ணியுள்ளோம். இலாகா கையகப்படுத்தல் அடங்கலாக அசேதன வளர்ச்சி மூலோபாயங்களின் அடிப்படையில் மூலதன பயன்பாட்டுடன் பங்காளர் வருமதிகளை மேம்படுத்த எண்ணியுள்ளோம்.’ என்றார்.

18 நிதியாண்டில் யூனியன் வங்கியின் வரிக்கு முந்திய இலாபம் 49% வளர்ச்சி

18 நிதியாண்டில் யூனியன் வங்கியின் வரிக்கு முந்திய இலாபம் 49% வளர்ச்சி

வங்கியின் பெறுபேறுகள்

  • தேறிய வட்டி வருமானம்9% அதிகரித்து ரூ. 3,652 மில். ஆக பதிவு
  • தேறிய தரகு மற்றும் கட்டண வருமானம்7% அதிகரித்து ரூ. 833 மில். ஆக பதிவு
  • மொத்த தொழிற்படும் வருமானம்8% அதிகரித்து ரூ. 5,285 மில். ஆக பதிவு
  • வரிக்கு முந்திய இலாபம்0% அதிகரித்து ரூ. 1,248 மில். ஆக பதிவு
  • மொத்த சொத்துக்கள்8% அதிகரித்து ரூ. 125,920 மில். ஆக பதிவு
  • உறுதியான ஐந்தொகையுடன் மொத்த மூலதன போதுமை விகிதம்4% ஆக பதிவு

குழுமத்தின் பெறுபேறுகள்

  • தேறிய வட்டி வருமானம்6% அதிகரித்து ரூ. 4,466 மில். ஆக பதிவு
  • தேறிய தரகு மற்றும் கட்டண வருமானம்8% அதிகரித்து ரூ. 958 மில். ஆக பதிவு
  • மொத்த தொழிற்படும் வருமானம்9% அதிகரித்து ரூ. 6,258 மில். ஆக பதிவு
  • வரிக்கு முந்திய இலாபம்0% அதிகரித்து ரூ. 1,415 மில். ஆக பதிவு
  • மொத்த சொத்துக்கள்8% அதிகரித்து ரூ. 135,032 மில். ஆக பதிவு

யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது. தனது உறுதியான மூலோபாயத் திட்டத்தினூடாக, சவால்கள் நிறைந்த பாரிய பொருளாதார கட்டமைப்பிலும் பிரதான வங்கியியல் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுத்திருந்தது.

2018 நிதியாண்டை வங்கி வரிக்கு முந்திய இலாபமாக 1,248 மில்லியன் ரூபாயை பதிவு செய்து பூர்த்தி செய்திருந்தது. முக்கியமாக, மூலதன வருமானங்கள் மற்றும் புதிதாக மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளான கடன் அட்டைகள் போன்றவற்றின் மீதான எதிர்மறை தாக்கங்கள் தவிர்ந்த வங்கியின் பிரதான வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 124% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. அரசாங்க முறிகளில் பதிவாகியிருந்த வட்டி வருமானத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த கருத்தியலான வரி அறவீடு மீளப் பெறப்பட்டிருந்த நிலையில் இந்த வளர்ச்சி பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும், புதிய இறைவரித் திணைக்களத்தினால் அறிமுகம் செய்யப்பட்டிருந்த வரி ஒழுங்கு முறைகளின் காரணமாக, வரிக்குப் பிந்திய இலாபம் தாக்கத்தை எதிர்நோக்கியிருந்தது. இலங்கை அபிவிருத்தி முறிகள், கடன் பத்திரங்கள் மற்றும் நம்பிக்கை அலகுகளில் பெருமளவு முதலீடுகளை வங்கி கொண்டிருந்ததுடன், இந்த மூலங்களிலிருந்து பெறப்படும் இலாபத்தின் மீது வழங்கப்பட்டிருந்த வரி விலக்கழிப்பு நீக்கப்பட்டதன் காரணமாக, இந்த தாக்கம் ஏற்பட்டிருந்தது.

மதிப்பீடு செய்யப்பட்ட ஆண்டின் இறுதி காலாண்டில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த பற்று மீளச் செலுத்தல் கட்டணம் (DRL) காரணமாகவும், வரி வீதங்களின் தாக்கம் மேலும் அதிகரிப்பதில் பங்களிப்பை செலுத்தியிருந்தது.

வங்கியின் வரிக்கு பிந்திய இலாபம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.6 சதவீத வளர்ச்சியை மாத்திரம் பதிவு செய்து, 473 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி 5.8% அதிகரிப்பை பதிவு செய்து 125,920 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது.

SLFRS 9 ஐ பின்பற்றியதை தொடர்ந்தும், வங்கி தொடர்ச்சியாக தனது உறுதியான மூலதன போதுமை விகிதத்தை எல்லைப் பெறுமதிகளுக்கு மேலாக பேணியிருந்தது.

நிதியியல் செயற்திறன் ஆய்வு

2018 இல் வங்கியின் தேறிய வட்டி வருமானம் ரூ. 3,652 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19.9% வளர்ச்சி என்பதுடன், ரூ. 606 மில்லியன் அதிகரிப்பாகும். 2017 இல் பதிவாகியிருந்த 2.9% தேறிய வட்டி எல்லை பெறுமதி அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், 2018 இல் 3.0% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. அலகுகளின் மீதான வருமானம் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தால், இந்த காலப்பகுதிக்கான தேறிய வட்டி எல்லை பெறுமதி 3.2% ஆக பதிவாகியிருக்கும். அலகுகளின் மீதான முதலீடுகள் தொடர்பில் ஏற்படும் செலவீனங்கள் வங்கியின் வட்டி செலவீனங்களின் கீழ் நிரல்படுத்தப்பட்டுள்ளது. அலகுகளின் மீதான முதலீடுகளின் வருமானம் ரூ. 246 மில்லியனாகும். இது மூலதன வருமதியின் கீழ் நிரல்படுத்தப்பட்டிருந்தது. அரசாங்க முறிகளில் பதிவாகியிருந்த வட்டி வருமானத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த கருத்தியலான வரி அறவீடு மீளப் பெறப்பட்டிருந்தமை நடப்பு ஆண்டின் தேறிய வட்டி வருமானத்தில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை பதிவு செய்திருந்தது.

வியாபார மூலோபாயத்தினால் வங்கியின் கட்டணம் மற்றும் தரகு வருமானம் தொடர்ச்சியாக உயர் பெறுமதியை பதிவு செய்திருந்தது. கட்டணம் மற்றும் தரகு வருமானத்தில் பிரதானமாக வைப்புகளுடன் தொடர்புடைய கட்டணங்கள், வியாபார மற்றும் வெளிநாடுகளிலிருந்து பண அனுப்புகைகள், கடன்கள், அட்டைகள் மற்றும் இதர கட்டணங்கள் போன்றன அடங்கியிருந்ததுடன், இந்தக் கட்டணம் ரூ. 968 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 23.6% வளர்ச்சி என்பதுடன், ரூ. 185 மில்லியன் அதிகரிப்பாகும்.

வங்கி தேறிய வியாபார மற்றும் இதர வருமானமாக ரூ. 800 மில்லியனை பதிவு செய்திருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21.9% வளர்ச்சியாகும். இதில் அரசாங்க முறிகள் மற்றும் நம்பிக்கை அலகுகள் மீதான முதலீடு மற்றும் நாணயமாற்று வருமதிகள் போன்றன அடங்கியிருந்தன.

வருடத்தின் நிறைவுப் பகுதியில் நாணயப் பெறுமதி வீக்கமடைந்திருந்த போதிலும், வங்கியின் நாணயமாற்று வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 73.6% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. நம்பிக்கை அலகுகள் மீதான முதலீடுகளிலிருந்து வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 23.5% சரிவடைந்திருந்தது. இந்த ஆண்டில் அலகுகள் மீதான முதலீடுகளில் வீழ்ச்சி ஏற்பட்டமை இதில் பங்களிப்பு செலுத்தியிருந்தது.

வங்கியின் பிரதான செயற்பாடுகள், அரசாங்க முறிகளின் மீதான முதலீடுகளில் மூலதன வருமதி போன்றவற்றின் காரணமாக வங்கியின் வரிக்கு முந்திய இலாபம் முன்னையை ஆண்டில் பதிவாகியிருந்த 29.6% உடன் ஒப்பிடுகையில் சற்று சரிவடைந்து 18.9% ஆக பதிவாகியிருந்தது. இது இலாபகரத்தன்மையை வழங்கும் ஒரு மூலத்தில் பெருமளவு தங்கியிருந்தமை காரணமாக ஏற்பட்ட அதிகளவு வீழ்ச்சியை குறிக்கின்றனது. மொத்த மூலதன வருமதிகள் ரூ. 236 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் எல்லையளவில் 4.9% குறைவாகும்.

ஐந்தொகை திகதியன்று வங்கி தன்வசம் எவ்விதமான வியாபார பங்குகளை கொண்டிருக்கவில்லை என்பதுடன், எந்தவொரு பங்குநிதியங்களிலும் முதலீடுகளை மேற்கொண்டிருக்கவில்லை. பிரதான வங்கியியல் செயற்பாடுகள் வளர்ச்சி மற்றும் சகல பிரிவுகளிலும் தொடர்ச்சியான செயற்திறன் போன்றவற்றின் காரணமாக மொத்த செயற்பாட்டு வருமானம் 20.8% வளர்ச்சியை பதிவு செய்து, ரூ. 5,285 மில்லியனாக பதிவாகியிருந்தது.

2018 ஜனவரி 1ஆம் திகதி முதல் வங்கி SLFRS 9 பின்பற்ற ஆரம்பித்தது. முன்னர் காணப்பட்ட நியமமான LKAS 39 ஐ அடிப்படையாகக் கொண்டு ஒப்பீட்டு மதிப்பிறக்க பெறுமதிகள் கணிப்பீடு செய்யப்பட்டிருந்தன. நடப்பு ஆண்டுக்காக மதிப்பிறக்க கட்டணம் ரூ. 342 மில்லியனாகும். இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 37.5% அதிகரிப்பாகும். கடன்கள் மற்றும் வருமதிகள் மீதான ஒதுக்கங்களுக்கு மேலாக, மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட ஆண்டுக்கான மொத்த மதிப்பிறக்கத்தில், திறைசேரி பத்திரங்கள் மீதான மதிப்பிறக்கங்களும் அடங்கியிருந்தன.

வங்கியின் தொழிற்படும் செலவீனங்கள் கட்டுப்படுத்தப்பட்டு, முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் மாத்திரம் அதிகரித்து ரூ. 3,729 ஆக பதிவாகியிருந்தது. நடப்பு காலப்பகுதிக்கான செலவீனத்தில் மனித வளங்கள் செயற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டிருந்த முதலீடுகள், கடன் அட்டைகள் வியாபாரத்தில் ஏற்பட்ட செலவீனங்கள் போன்றன அடங்கியிருந்தன. வருட முழுவதிலும் பின்பற்றப்பட்டிருந்த உறுதியான செலவு முகாமைத்துவ செயற்பாடுகளினூடாக, வருமானத்துக்கான செலவு விகிதம் 2017 இல் பதிவாகியிருந்த 76% உடன் ஒப்பிடுகையில் 71% ஆக பதிவாகியிருந்தது.

மீளாய்வு செய்யப்பட்ட ஆண்டில் வங்கி ரூ. 776 மில்லியனை, நிதிச் சேவைகளுக்கான VAT, NBT, நிதிச் சேவைகளின் மீதான DRL மற்றும் கூட்டாண்மை வரியாக செலுத்தியிருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது சுமார் 105.7% அதிகரிப்பாகும். 2018 இல் அமுலாக்கப்பட்ட வரி வீதம் (சகல வரிகள் மற்றும் தொழிற்படு இலாபத்தில் சதவீதமாக னுசுடு அடங்கலாக) 62% ஆக அதிகரித்திருந்தது. இந்தப் பெறுமதி 2017 இல் 45% ஆக காணப்பட்டது. வருடம் முழுவதிலும் வரிக்கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், முழு ஆண்டுக்கான வரி மாற்றம் தாக்கம் இலாப நட்டத்தில் பிரதிபலிக்கப்படவில்லை. நடைமுறைப்படுத்தப்பட்ட வரி வீதத்தில் அதிகரிப்பில், அலகுகளில், ளுடுனுடீ மற்றும் கூட்டாண்மை கடன் பத்திரங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளின் மூலம் கிடைத்த இலாபத்தின் மீதான வரி விலக்களிப்பு நீக்கம் மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கடன் மீளச் செலுத்தும் கட்டணம் (DRL) போன்றன பங்களிப்பு செலுத்தியிருந்தன.

வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 473 மில்லியனாகும், இது 2017 இல் பதிவாகியிருந்த ரூ. 461 மில்லியனுடன் ஒப்பிடுகையில் சிறிய அதிரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

குழுமத்தின் இரு துணை நிறுவனங்களான UB ஃபினான்ஸ் கம்பனி லிமிட்டெட் மற்றும் நஷனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிட்டெட் ஆகியன வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 535 மில்லியனை பதிவு செய்திருந்தன. செயற்பாட்டு நடவடிக்கைகளினூடாக 38.0% வளர்ச்சியை பதிவு செய்திருந்தன. குழுமத்தின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 135,032 மில்லியனாக பதிவாகியிருந்தது.

வங்கியின் கடன்கள் மற்றும் கிடைக்கவேண்டிய வருமதிகள் பெறுமதி ரூ. 73,749 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.5% அதிகரிப்பு என்பதுடன், ரூ. 3,171 மில்லியன் அதிகரிப்பாகும். மீளாய்வு செய்யப்பட்ட நிதியாண்டில், வளர்ச்சிக்கு மாறாக, இலாகா சீராக்கங்களின் மீது அதிகளவு கவனம் செலுத்தப்பட்டிருந்தது. தெரிவு செய்யப்பட்ட பிரிவுகளிலிருந்து விலகுவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்க்கமான தீர்மானங்களின் காரணமாக இலாகாவின் வளர்ச்சி சற்று மந்தமடைந்திருந்தது. வங்கியின் கடன்கள் மற்றும் வைப்பு விகிதம் 2017 இல் காணப்பட்ட 100% இலிருந்து 93% ஆக உயர்ந்திருந்தது.

வங்கியின் வைப்பு இருப்பு வருட இறுதியில் ரூ. 79,251 மில்லியனாக பதிவாகியிருந்தது. 2017 உடன் ஒப்பிடுகையில் இது 12.7% வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வளர்ச்சியில் வாடிக்கையாளர் வங்கியியல் பிரிவு முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தது. CASA பெறுமதி (நடைமுறை மற்றும் சேமிப்பு கணக்குகள்) முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.8% அதிகரிப்பை பதிவு செய்து ரூ. 2,410 மில்லியனாக பதிவாகியிருந்தது.

வங்கியின் நிகர NPL விகிதம் 3.7% ஆகவும் தேறிய NPL விகிதம் 2.5% ஆகவும் பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டில் இந்தப் பெறுமதிகள் முறையே 2.7% மற்றும் 1.8% ஆக அமைந்திருந்தன. கடன் மதிப்பீடு, இலாகாக்களின் முன்னாயத்தமான மற்றும் நோக்கான கண்காணிப்பு மற்றும் பிராந்திய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த சீரமைப்பு மூலோபாயங்கள் போன்றவற்றில் வங்கியின் கடுமையான இடர் முகாமைத்துவ நடவடிக்கைகள் காரணமாக, சொத்துக்களின் தரத்தை பேண முடிந்ததுடன், ஏற்படக்கூடிய கடன் இழப்புகளை தவிர்த்துக் கொள்ளவும் முடிந்தது.

ஆற்றல் மற்றும் வளர்ச்சி நிறைந்த ஆண்டு

2018 இல் பதிவாகியிருந்த பேரளவான பொருளாதார தாக்கங்களின் போதும் யூனியன் வளர்ச்சி ஆற்றல் நிறைந்ததாக செயலாற்றியிருந்தது. இதனூடாக, வியாபாரத்தின் சகல பிரிவுகளிலும் வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.

வங்கியின் கூட்டாண்மை வங்கியியல் வியாபாரம் உறுதியான கூட்டாண்மை உறவுகளினூடாகவும், மேம்படுத்தப்பட்ட யூனியன் வங்கி டீணை னுசைநஉவ நவீன கொடுக்கல் வாங்கல் ஊடாகவும் வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. SME வங்கியியல் பிரிவுக்கு வங்கி தொடர்ந்தும் உதவிகளை வழங்கியிருந்ததுடன், பிராந்திய மூலோபாயத்துக்கமைய வங்கியியல் சேவைகள் மற்றும் ஆலோசனை சேவைகளையும் வழங்கியிருந்தது.

வங்கியின் திறைசேரி அலகு தொடர்ச்சியாக சீராக இயங்கி, வங்கியின் வருமானத்தில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை மேற்கொண்டிருந்தது.

வங்கியின் வாடிக்கையாளர் வங்கியியல் வியாபாரம் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. குறிப்பாக வாடிக்கையாளர் வைப்புகள் மற்றும் CASA போன்றன வருடத்தில் அதிகரித்திருந்தன. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட ஆண்டில் வங்கி தனது நோக்கத்தை, வீட்டு கடன் சந்தையில் திருப்பியிருந்தது. இதன் காரணமாக வீட்டுக் கடன்கள் மற்றும் சொத்துக்கள் மீதான கடன்கள் போன்றன அதிகரிப்பை பதிவு செய்திருந்தன. வருடத்தின் முக்கிய நிகழ்வாக கடன் அட்டைகள் அறிமுகம் அமைந்திருந்தது. இதன் காரணமாக, வருமான வளர்ச்சி பதிவாகியிருந்ததுடன், வங்கியினால் வழங்கப்படும் தீர்வுகளில் மேலதிக உள்ளடக்கத்தை வழங்குவதாகவும் அமைந்திருந்தது.

டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகள் அடங்கலாக தனது பரந்தளவு சேவை வழங்கல் பிரிவுகளினூடாக வங்கி மேம்படுத்தப்பட்ட பெறுமதி மற்றும் சௌகரியம் ஆகியவற்றை வழங்கியிருந்தது. இதன் காரணமாக மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட ஆண்டில், பெருமளவு பாவனையை அவதானிக்க முடிந்தது. யூனியன் வங்கியின் பரிபூரண சேவை வழங்கல் மூலோபாயத்தினூடாக மேம்படுத்தப்பட்ட அளவு சேவைகளை பெற்றுக் கொடுக்க ஏதுவாக அமைந்திருந்ததுடன், 2018 Lanka Pay Technovation விருதுகள் வழங்கும் நிகழ்வில் ‘Best Bank for Seamless Backend Operations’ எனும் விருதை பெற்றுக் கொள்வதற்கும் ஏதுவாக அமைந்திருந்தது.

யூனியன் வங்கியின் நிதிப் பெறுபேறுகள் தொடர்பாக பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ‘வங்கியியல் துறையில் பெருமளவு சவால்களை ஏற்படுத்திய ஆண்டாக 2018 அமைந்திருந்தது. குறிப்பாக பொருளாதார மற்றும் அரசியல் தளம்பல்கள் காரணமாக பாரிய சவால்களை இந்தத் துறை எதிர்நோக்கியிருந்தது. மூலோபாய மீளமைவுகளுடன், யூனியன் வங்கி சிறந்த வகையில் தனது பிரதான வங்கியியல் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. இலங்கையில் வேகமாக வளர்ச்சியடையும் வங்கி எனும் எமது நிலையை மேலும் உறுதி செய்வது எமது நோக்கமாகும். அத்துடன், அதிகளவானோர் நாடும் வாடிக்கையாளர்/ SME வங்கியாக 2021 ஆம் ஆண்டில் திகழும் இலக்குடன் செயலாற்றுகிறோம். நம்பிக்கை மற்றும் பங்காண்மைகளினூடாக இதை கட்டியெழுப்ப எதிர்பார்க்கிறோம். 2019 இலும் இதே வேகத்துடன் நாம் வளர்ச்சியை பதிவு செய்து, எமது மூன்றாண்டு திட்டத்தின் இரண்டாவது வருடத்தில் எமது மூலோபாய இலக்குகளை எய்துவோம் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன்.’ என்றார்.

யூனியன் வங்கி 42% வரிக்கு முந்திய இலாப வளர்ச்சியை பதிவு

யூனியன் வங்கி 42% வரிக்கு முந்திய இலாப வளர்ச்சியை பதிவு

பதிவிறக்க

யூனியன் வங்கியின் வரிக்கு முந்திய வருமானம் 37% அதிகரிப்பு

யூனியன் வங்கியின் வரிக்கு முந்திய வருமானம் 37% அதிகரிப்பு

பதிவிறக்க

வங்கிகள்

  • Amana Bank PLC
  • Bank of Ceylon
  • Cargills Bank Ltd
  • Citibank
  • Commercial Bank of Ceylon PLC
  • DFCC Bank
  • Hatton National Bank PLC
  • HDFC Bank
  • HSBC Ltd
  • National Development Bank PLC
  • Nations Trust Bank
  • Pan Asia Banking Corporation
  • People’s Bank
  • Public Bank Berhard
  • Sampath Bank PLC
  • Seylan Bank PLC
  • Standard Chartered Bank

நிறுவனங்கள்

  • Merchant Bank of Sri Lanka Finance
  • Central Finance PLC
  • Commercial Leasing and Finance PLC
  • HNB Finance
  • LB Finance PLC
  • People’s Leasing and Finance PLC
  • Softlogic Finance Plc
  • Singer Finance (Lanka) PLC