வங்கியின் பெறுபேறுகள்
- வரிக்கு முன்னைய இலாபம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 52% வளர்ச்சியை பதிவு செய்து ரூ. 849 மில். ஆக பதிவு.
- தேறிய வட்டி வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19% வளர்ச்சியை பதிவு செய்து ரூ. 2,131 மில். ஆக பதிவு.
- கட்டணம் மற்றும் தரகு வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17% ஆல் அதிகரித்து ரூ. 524 மில். ஆக பதிவு.
- மொத்த மூலதன போதுமை விகிதம் 17.23% ஆக பதிவு.
குழுமத்தின் பெறுபேறுகள்
- வரிக்கு முந்திய இலாபம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19% ஆல் அதிகரித்து ரூ. 799 மில். ஆக பதிவு.
- தேறிய வட்டி வருமானம் 15% ஆல் அதிகரித்து ரூ. 2,516 மில். ஆக பதிவு.
- கட்டணம் மற்றும் தரகு வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9% ஆல் அதிகரித்து ரூ. 579 மில். ஆக பதிவு
சகல துறைகளை சேர்ந்த வியாபாரங்களும் சவால்கள் நிறைந்த சந்தை சூழல்களுக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், யூனியன் வங்கி உறுதியான முதல் அரையாண்டு நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது. பிரதான வங்கியியல் வருமானத்தில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி பதிவாகியிருந்ததுடன், வரிக்கு முந்திய இலாபம் ரூ. 849 மில்லியனாக பதிவாகியிருந்தது.
பிரதான வங்கியியல் வளர்ச்சி மற்றும் நிதியியல் பெறுபேறுகள்
2019 ஏப்ரல் மாதம் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்களை தொடர்ந்து நாட்டில் எழுந்த சவால்கள் நிறைந்த பொருளாதார சூழலில், இரண்டாம் காலாண்டில் வங்கியியல் துறையும் பெருமளவு எதிர்பாராத சவால்களை எதிர்நோக்கியிருந்தது.
சவால்கள் நிறைந்த பொருளாதார சூழலிலும், யூனியன் வங்கி ஆரோக்கியமான வங்கியியல் வளர்ச்சியை பதிவு செய்திருந்ததுடன், தேறிய வட்டி வருமானம் (NII) முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 19% ஆல் அதிகரித்து ரூ. 2131 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய வட்டி எல்லைபெறுமதி முன்னைய ஆண்டின் இதே காலாண்டில் பதிவாகியிருந்த 3.1% வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 3.4% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. இதில் CASA சராசரி மீதிகளின் வளர்ச்சி பெருமளவு பங்களிப்பை வழங்கியிருந்தது. NII வளர்ச்சி என்பது, வங்கியினால் தனது இலாகா மீளமைப்பு செயற்பாடுகளின் மீதான கவனத்தில் பிரதிபலிப்பை ஏற்படுத்தியிருந்தது.
கட்டணம் மற்றும் தரகு வருமானம் என்பது தொடர்ந்தும் வளர்ச்சியடைந்தது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் 17% வளர்ச்சியை பதிவு செய்து ரூ. 524 மில்லியனாக பதிவாகியிருந்தது. இந்த வளர்ச்சியில் கையாளல் கட்டணங்கள் மற்றும் விரிவடைந்த கடன் புத்தகம், புதிய கடன் அட்டை வழங்கல்கள், தரகு மற்றும் நடைமுறை மற்றும் சேமிப்பு கணக்குகள் (CASA) தொடர்புடைய கட்டணங்கள் போன்றன பங்களிப்பு வழங்கியிருந்தன.
இக்காலப்பகுதிக்கான மூலதன வருமதிகள் ரூ. 253 மில்லியனாக பதிவாகியிருந்தது. அலகுகள் மீதான முதலீட்டு வருமதி என்பது முன்னைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20% குறைந்து ரூ. 123 மில்லியனாக பதிவாகியிருந்தது. இக்காலப் பகுதியில் நம்பிக்கை அலகுகள் மீதான முதலீடுகளில் வீழ்ச்சி ஏற்பட்டமை இதற்கு காரணமாக அமைந்திருந்தது.
இதர தொழிற்படு வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட, வெளிநாட்டு நாணயமாற்று வியாபார வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி பங்களிப்பு செலுத்தியிருந்தது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவாகியிருந்த பெறுமதியில் 50% பெறுமதியை மாத்திரமே பதிவு செய்திருந்தது. காலாண்டு பகுதியில் நிலவிய சவால் நிறைந்த பொருளாதார சூழல் காரணமாக இந்த குறைவு ஏற்பட்டிருந்தது.
மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்ட காலாண்டில், வங்கியின் மொத்த தொழிற்படு வருமானம் ரூ. 2899 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13% வளர்ச்சியாகும். மொத்த தொழிற்படு செலவீனங்கள் கவனமாக நிர்வகிக்கப்பட்டிருந்ததுடன், முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 4% அதிகரித்து ரூ. 1,973 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதன் பெறுபேறாக, வங்கியின் மதிப்பிறக்க இலாபம் ரூ. 926 ஆக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 37% அதிகரிப்பாகும்.
வங்கியின் மதிப்பிறக்க கட்டணம் ரூ. 139 மில்லியனாக காணப்பட்டது. 2019 ஜுன் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த திரட்டப்பட்ட மதிப்பிறக்க கட்டணம், இலங்கை கணக்கீட்டு நியமமான – SLFRS 9 (நிதியியல் சாதனங்கள்) பிரகாரம் தயாரிக்கப்பட்டிருந்தது. இதேவேளை, முன்னைய காலப்பகுதிக்கான கட்டணம் LKAS 39 (நிதியியல் சாதனங்கள்) இன் பிரகாரம் தயாரிக்கப்பட்டிருந்தது.
துணை நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இலாப பகிர்வு ரூ. 62 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ரூ. 22 மில்லியன் அதிகரிப்பாகும்.
இக்காலப்பகுதிக்கான வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 297 மில்லியனாகும், இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 18% அதிகரிப்பாகும். அதிகரித்த வரி வீதங்கள் காரணமாக, வங்கியின் வரிக்கு பிந்திய இலாபம் பாதிக்கப்பட்டிருந்தது. செயற்படு வரி வீதம் (சகல வரிகளும்) முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 70% ஆக அதிகரித்திருந்தது.
வங்கியின் மொத்த பரிபூரண வருமானம் ரூ. 685 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 490% அதிகரிப்பாகும்.
ஜுன் 30 ஆம் திகதியன்று வங்கியின் மொத்த சொத்துக்கள் ரூ. 121,747 மில்லியனாக பதிவாகியிருந்தது. வங்கியின் கடன்கள் மற்றும் கிடைப்பனவுகள் ரூ. 74,222 மில்லியனாக காணப்பட்டது. ஐந்தொகை திகதியன்று, வைப்பு இருப்பு ரூ. 74,609 மில்லியனாகும். கவனமான இடர் முகாமைத்துவ செயற்பாடுகள் ஊடாக சொத்துக்கள் தரம் தொடர்பாக வங்கி தொடர்ச்சியாக கவனம் செலுத்தியிருந்தது. தேறிய NPL விகிதம் அறிக்கை இடப்பட்ட காலப்பகுதியின் இறுதியில் 3.9% ஆக பதிவாகியிருந்தது.
மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் மொத்த சராசரி CASA பெறுமதி ரூ. 3,545 மில்லியாக அதிகரித்திருந்தது. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 23% அதிகரிப்பாகும். ஆரோக்கியமான CASA உட்பாய்ச்சல்களை பேணுவதற்கு, நோக்குடைய கையகப்படுத்தல் மூலோபாயங்கள் பங்களிப்பு செலுத்தியிருந்தன.
வங்கி தொடர்ச்சியாக தனது துரித மூலதன போதுமையை பேணியிருந்ததுடன், மொத்த மூலதன விகிதம் ஐந்தொகை திகதியன்று 17.23% ஆக பதிவாகியிருந்தது.
குழுமத்தில் வங்கி மற்றும் அதன் இரு துணை நிறுவனங்களான UB ஃபினான்ஸ் கம்பனி மற்றும் நஷனல் அஸெட் மனேஜ்மன்ட் லிமிடெட் ஆகியன வரிக்கு முந்திய இலாபமாக ரூ. 799 மில்லியனை பதிவு செய்திருந்தன. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 19% அதிகரிப்பாகும். குழுமத்தின் மொத்த சொத்துக்கள் பெறுமதி ரூ. 130,369 மில்லியனாகும், இது வங்கியினால் 93.4% ஆக பிரதிபலிக்கப்பட்டிருந்தது. ஐந்தொகை திகதியன்று குழுமம் ஆரோக்கியமான பிரதான மூலதன விகிதமாக 15.48% ஐ பேணியிருந்தது.
வியாபார பெறுபேறுகள் மற்றும் மூலோபாய செயற்படுத்துநர்கள்
வங்கியின் கூட்டாண்மை வங்கியியல் வியாபாரம் தொடர்ந்து தனது இலாகாவை உறுதி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தியிருந்ததுடன், விளைவுகள் மற்றும் தொழிற்படா கடன்களை (NPL) நிர்வகிப்பதிலும் கவனம் செலுத்தியிருந்தது. பொருளாதாரத்தில் சவால்கள் காணப்பட்ட நிலையில், கூட்டாண்மை வங்கியியல் வியாபாரம் என்பது தனது நோக்கத்தை மீளமைத்திருந்ததுடன், சந்தை அபிவிருத்தி செயற்பாடுகளை தனது இலாகா அபிவிருத்தியில் ஆரம்பித்திருந்தது. வங்கியின் நவீன வசதி படைத்த வங்கியியல் கொடுக்கல் வாங்கல் தீர்வான யூனியன் வங்கி Biz Direct ஊடாக, நிறுவனங்களுக்கும், கூட்டாண்மைகளுக்கும் மற்றும் சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சிகளுக்கும் பெறுமதி சேர்க்கப்பட்ட தீர்வை வழங்கியிருந்தது. வங்கியின் நடைமுறை மற்றும் சேமிப்பு (CASA) வளர்ச்சியில் பங்களிப்பு செலுத்தியிருந்தது.
சிறிய, நடுத்தரளவு வங்கியியல் வியாபாரம் தொடர்ச்சியாக நாட்டின் வளர்ந்து வரும் வியாபாரங்களுக்கு தனது உதவிகளை வழங்கியிருந்தது. கடுமையான இடர் முகாமைத்துவ மற்றும் கடுமையான கடன் கொள்கைகள் போன்றவற்றினூடாக, வங்கியின் NPL களை நிர்வகிக்கக்கூடிய மட்டத்தில் பேண உதவியிருந்தது. இக்காலப் பகுதியில் 10 வருட காலத்துக்கான கடன் திட்டமொன்றும் (BML) துறைக்காக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. CASA கையகப்படுத்தல்களை ஊக்குவிக்கும் வகையில் மூலோபாய ஊழியர் போட்டிகள் மூன்று வலயங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. நிதி முகாமைத்துவத்துக்காக சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாளர் வாடிக்கையாளர்களை ஒன்றிணைப்பதனூடாக, CASA வளர்ச்சிக்கு உதவி வழங்கப்பட்டிருந்தது.
நுகர்வோர் வங்கியியல் வியாபாரம், கடன் அட்டைகள், அடைமானம் போன்ற பின்புலத்தை கொண்ட கடன்களில் மற்றும் சேமிப்புகள் மற்றும் முதலீட்டு தீர்வுகள் போன்றவற்றில் வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. சில புதிய நுகர்வோர் வங்கியியல் உள்ளம்சங்கள் மற்றும் பெறுமதி சேர்ப்புகள் போன்றன இந்த மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. அடைமான கடன்கள் மற்றும் கடன் அட்டை மீதான கடன்கள் போன்றன பிரதான புதிய செயற்பாடுகளாகும். கிளைகள் மற்றும் விற்பனை அணியினரூடாக வகைப்படுத்தப்பட்ட இலாபமீட்டும் கையகப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
திறைசேரி பிரிவு, 2ஆம் காலாண்டில் சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது. வெளிநாட்டு நாணய பரிமாற்ற வருமானம் அழுத்தத்துக்கு முகங்கொடுத்திருந்தது, சவால்கள் நிறைந்த பொருளாதார சூழ்நிலைகள் காரணமாக வர்த்தக நிதியியல் வியாபாரங்களில் குறைந்தளவு ஈடுபாடுகள் பதிவாகியிருந்தது.
2019 மே மாதத்தில், யூனியன் வங்கியின் Biz Direct தீர்வுக்காக நவீன நிதி முகாமைத்துவ தீர்வான சர்வதேச வியாபார நோக்க விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. இந்த விருதினூடாக யூனியன் வங்கி Biz Direct இன் தொடர்ச்சியான வெற்றிகர செயற்பாடு உறுதி செய்யப்பட்டிருந்தது.
மே 2019 இல், ஃபிட்ச் ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் யூனியன் வங்கியின் தேசிய நீண்ட கால தரப்படுத்தலை ‘BB+(lka)’ இலிருந்து ‘BBB-(lka)’ஆக உயர்த்தியிருந்தது. இந்த தரப்படுத்தல் மெருகேற்றம், வங்கியின் சிறந்த இடர் நிலையில் பிரதிபலிக்கப்பட்டிருந்ததுடன், பன்முகப்படுத்தப்பட்ட கடன் புத்தகம், அதிகரித்த இலாபகரத்தன்மை மற்றும் சராசரியை விட உயர்ந்த மூலதன இருப்பு ஆகியவற்றையும் கொண்டிருந்தது. வங்கியின் வளர்ந்து செல்லும் வலையமைப்பு மற்றும் தொடர்ச்சியாக அதிகரிக்கும் இலாபகரத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்திருந்தது.
2019 ஜுன் மாதத்தில், பங்கு மீள் கொள்வனவு பற்றி யூனியன் வங்கி அறிவித்திருந்தது. வங்கியின் பிரதான பங்குதாரரான TPG இதற்கு பதிலளிக்காமை காரணமாக, வங்கியின் மீது தனது நீண்ட கால அர்ப்பணிப்பை உறுதி செய்திருந்தது. ஆகக்கூடியது 7,851,844 சாதாரண பங்குகளை கொண்டிருக்கும் ஒவ்வொரு 139 பங்குகளுக்கும் 1 பங்கு வீதம், பங்கொன்றுக்கு ரூ. 15 வீதம் மீள கொள்வனவு செய்யும் சலுகையை வங்கி அறிவித்திருந்தது. 2019 ஜுன் 11 ஆம் திகதி இடம்பெற்ற அசாதாரண பொது சந்திப்பின் போது, பங்கு மீள் கொள்வனவினூடாக ரூ. 117,777,660 ஐ திரட்டுவதற்கான அனுமதியை பங்குதாரர்கள் வழங்கியிருந்தனர். சலுகை காலம் 2019 ஜுன் 27 ஆம் திகதி ஆரம்பித்து, 2019 ஜுலை 11 ஆம் திகதி நிறைவடைந்தது. தகைமை வாய்ந்தவர்கள் அடிப்படையில் 585,485 பங்குகளை மீள வழங்குவதற்கான விண்ணப்பங்களை பங்குதாரர்கள் சமர்ப்பித்திருந்தனர். மேலதிக பங்குகளாக 48,004,755 பங்குகளை கொள்வனவு செய்வதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
2019 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு நிதிப் பெறுபேறுகள் தொடர்பாக யூனியன் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், பணிப்பாளருமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ”2019 ஆம் ஆண்டின் இதுவரை காலமும் பல சவால்கள் மத்தியிலும் மிகவும் நேர்த்தியானதாக அமைந்துள்ளது. பெறுபேறுகள் வரவேற்கத்தக்கது என்பதுடன், வியாபார மூலோபாயத்தை ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளது. இதே போன்று நாம் தொடர்ச்சியாக வளர்ச்சியடைவதுடன், பொருளாதார மீட்சி சூழலுடன், 2019 இன் பிற்பகுதியில் மேலும் சிறந்த பிரதான வங்கியியல் மற்றும் வினைத்திறனை பதிவு செய்ய எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

