0117 818181

யூனியன் வங்கி நீண்ட காலமாக சேவையாற்றும் ஊழியர்களை ‘UB Port Paradise’ இல் கௌரவித்தது

யூனியன் வங்கி நீண்ட காலமாக சேவையாற்றும் ஊழியர்களை ‘UB Port Paradise’ இல் கௌரவித்தது

யூனியன் வங்கி நீண்ட காலமாக வங்கியில் சேவையாற்றும் ஊழியர்களை இந்த ஆண்டின் ‘UB Port Paradise’ நிகழ்வில் கௌரவித்திருந்தது. 20 மற்றும் 25 வருட சேவைக் காலத்தை பூர்த்தி செய்திருந்த ஊழியர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது. யூனியன் வங்கியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் ரொட்ரிகோவிடமிருந்து நீண்ட காலமாக சேவையாற்றுகின்றமைக்கான விருதை இந்த ஊ ழியர்கள் பெற்றுக் கொண்டனர். வங்கியின் தொடர்ச்சியான பயணத்தில் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பு ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டிருந்தது.

சரித ராஜகருண (வசூலிப்புகள்), துலினி சரத்சந்திர (மனித வளங்கள்), திலக்ஷ பெர்னான்டோ (சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை மற்றும் பரிவர்த்தனை வங்கியியல்), வருண பொன்சேகா (வசூலிப்புகள்) மற்றும் ரொஷான் டி அல்விஸ் (செயற்பாடுகள்) ஆகியோர் 20 வருட காலமாக சேவையாற்றியமைக்கான விருதைப் பெற்றுக் கொண்டனர். பிமல் டி சொய்ஸா (கடன் நிர்வாகம்) மற்றும் வசந்த டி சில்வா (பிராந்திய அலுவலகம் – மத்திய பிராந்தியம்) ஆகியோர் 25 வருட கால சேவைக்கான விருதைப் பெற்றுக் கொண்டனர். அவர்களின் நீண்ட கால சேவையினூடாக சேவைச் சிறப்பை முன்னெடுத்துச் செல்வதற்கும், வங்கியின் கலாசாரத்தை பேணுவதிலும் காண்பிக்கும் உண்மைத்தன்மை, நிபுணத்துவம் மற்றும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு ஆகியன வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்வின் போது, வங்கியின் சார்பாக விளையாட்டுப் பிரிவில் சிறப்பாக சாதனைகளை பதிவு செய்திருந்தமைக்காக மொஹமட் பசால் (கடன் செயற்பாடுகள்) விசேட கௌரவிப்பைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

படம்: தில்ஷான் ரொட்ரிகோ, பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி, ஜயந்த அமரசிங்க, பிரதம மக்கள் மற்றும் மாற்றியமைப்பு அதிகாரி மற்றும் அசங்க ரன்ஹொட்டி, பிரதம வணிக அதிகாரி ஆகியோர் விருதுகளைப் பெற்றவர்களுடன் காணப்படுகின்றனர்.

யூனியன் வங்கி தைப்பொங்கல் கொண்டாட்டம்

யூனியன் வங்கி தைப்பொங்கல் கொண்டாட்டம்

யூனியன் வங்கி தனது கிளை வலையமைப்பு முழுவதும் தைப்பொங்கலை கொண்டாடி, நன்றியுணர்வு, செழிப்பு மற்றும் ஒன்றுபட்ட மனப்பான்மையை பிரதிபலிக்கும் வகையில் வாடிக்கையாளர்களையும் ஊழியர்களையும் ஒன்றிணைத்திருந்தது.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தேசிய தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கு யூனியன் வங்கி வலுவூட்டல்

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தேசிய தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கு யூனியன் வங்கி வலுவூட்டல்

சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் தேசிய தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்துக்கு (NEDP) வலுவூட்ட யூனியன் வங்கி முன்வந்துள்ளது. மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் தேசிய புத்தாக்க முகவர் நிறுவனம் (NIA) ஆகியன இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுக்கின்றன. இந்தத் திட்டத்தை பூர்த்தி செய்த முதல் தொகுதி மாணவர்களுக்கு, மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் வழங்கும் வைபவம் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொழில்முயற்சியாண்மை கல்வி, திறன் விருத்தி மற்றும் ஆலோசனை வழங்கல் போன்றவற்றினூடாக சமூகங்களுக்கு வலுவூட்டும் வங்கியின் நடவடிக்கைகளுக்கு யூனியன் வங்கி சமூக தொழில்முயற்சியாண்மை பாடசாலை (UBSSE) தொடர்ந்தும் முக்கிய பங்காற்றி வருகிறது.

யூனியன் வங்கி Mind Marathon 2025 இல் எயிட்கன் ஸ்பென்ஸ் Spensonians வெற்றி

யூனியன் வங்கி Mind Marathon 2025 இல் எயிட்கன் ஸ்பென்ஸ் Spensonians வெற்றி

யூனியன் வங்கி ஏற்பாடு செய்திருந்த யூனியன் வங்கி Mind Marathon புதிர் போட்டியில் அதன் கூட்டாண்மை வாடிக்கையாளர்கள் பலர் போட்டியிட்டிருந்தனர். பலசுற்றுகள் விறுவிறுப்பான போட்டியை தொடர்ந்து, எயிட்கன் ஸ்பென்ஸ் நிறுவனத்தின் “Spensonians” அணி வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர். ஹேலீஸ் பிஎல்சி மற்றும் செலிங்கோ லைஃப் அணிகள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களைப் பெற்றுக் கொண்டன.

படம்
UB Mind Marathon வெற்றியாளர்களான எயிட்கன் ஸ்பென்ஸ் அணி, யூனியன் வங்கியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரியான தில்ஷான் ரொட்ரிகோ மற்றும் யூனியன் வங்கியின் கூட்டாண்மை வங்கியியல் அணியினருடன் காணப்படுகின்றனர்.

பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு வலுவூட்ட யூனியன் வங்கி Power H.E.R அறிமுகம்

பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு வலுவூட்ட யூனியன் வங்கி Power H.E.R அறிமுகம்

சர்வதேச மகளிர் தினத்துடன் தொடர்புபடும் வகையில், யூனியன் வங்கியினால் யூனியன் வங்கி Power H.E.R திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு தமது வியாபாரங்களை மேம்படுத்தி புதிய உயர்ந்த ஸ்தானத்துக்கு கொண்டு செல்வதற்கு ஊக்குவித்து வலுவூட்டும் பெண்களுக்காக வங்கியியல் தீர்வாக அமைந்துள்ளது. யூனியன் வங்கி Power H.E.R ஊடாக, தொழில்முயற்சியாளர்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் அமைந்திருக்கும் நிலையில், பெண்களுக்காக வங்கியியல் தீர்வை இலவசமாக வழங்கும், ஒரே தன்னியக்கமயப்படுத்தப்பட்ட பண முகாமைத்துவ தீர்வாக அமைந்திருப்பதுடன், பரந்தளவு மாற்றியமைத்துக் கொள்ளதக்க நிதிவசதியளிப்பு, விசேட வட்டி வீதங்கள், காப்புறுதி, மானியக் கொடுப்பனவுகள், நிபுணத்துவ ஆலோசனை, வியாபார இணைப்புகள் மற்றும் பல அம்சங்கள் அடங்கியுள்ளன.

சந்தைப்படுத்தல் பிரிவின் உப தலைவர் திஷானி திசாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் காணப்படும் பெருமளவு சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகள் பெண்களை தலைமைத்துவமாக கொண்டவையாகும் அல்லது அவர்களின் உரிமையில் இயங்குபவையாகும். பெருமளவு பெண் தொழில்முயற்சியாளர்கள் நிலைபேறான வியாபாரங்களை உருவாக்க முயற்சிப்பதால், இந்தப் பிரிவு வளர்ச்சியடைந்த வண்ணமுள்ளது. யூனியன் வங்கி Power H.E.R ஊடாக, அதன் இலவச பண முகாமைத்துவ தீர்வுக்கு பெருமளவு பெறுமதி சேர்க்கப்படுவதுடன், தொழில்முயற்சியாளர்களுக்கு நிதிசார் முகாமைத்துவம் தொடர்பில் கவலை கொள்ளாமல் தமது வியாபாரங்களை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தக்கூடியதாக இருக்கும். மேலும், தேசிய தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் (NEDP) இலவசமாக இணைந்து கொள்வதனூடாக, அவர்களின் வியாபார ஆற்றல்களை மேம்படுத்தி விரிவாக்கிக் கொள்ள ஆதரவளிக்கப்படும்.” என்றார்.

பிரதம வியாபார அதிகாரி அசங்க ரன்ஹொட்டி கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் வங்கி Power H.E.R திட்டத்தினூடாக, வங்கியின் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்காக வழங்கப்படும் தீர்வுகளுக்கு மேலதிகமாக கவர்ச்சிரமான சலுகைகள் சேர்க்கப்படும். இதர அனுகூலங்களுடன், வங்கியினால், விவசாயம், உற்பத்தி மற்றும் சுற்றுலா போன்ற தொழிற்துறைகளுக்கு கடன்வசதிகளை பெற்றுக் கொள்வதற்கான அணுகல் வசதி வழங்கப்பட்டு, நாடு முழுவதையும் சேர்ந்த வங்கியின் பரந்த கிளை வலையமைப்பினூடாக, பெருமளவு பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு ஆதரவளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனூடாக, வியாபாரங்களுக்கு தமது பிரிவுகளில் இயங்குவதற்கு அவசியமான ஆதரவு வழங்கப்படுகின்றது.” என்றார்.

யூனியன் வங்கியின் நத்தார் கரோல் கீத நிகழ்வு

யூனியன் வங்கியின் நத்தார் கரோல் கீத நிகழ்வு

யூனியன் வங்கி தனது வருடாந்த நத்தார் கரோல் கீத சேவையை அண்மையில் சென். அன்ரியுஸ் ஸ்கொட்ஸ் கேர்க் தேவாலயத்தில் முன்னெடுத்திருந்தது. இதில் வங்கியின் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் அனைவரும் பங்கேற்றிருந்தனர். வங்கியின் கிளை வலையமைப்பைச் சேர்ந்த மற்றும் தலைமையகத்தின் ஊழியர்கள் இணைந்து ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் இந்த கரோல் கீதங்களை பாடியிருந்தனர். இதனூடாக யூனியன் வங்கியின் ஊழியர் குழுவினர் ஒன்று திரட்டப்பட்டிருந்தனர். இந்த கீத நிகழ்வுக்கு வங்கியின் திறமை வாய்ந்த ஊழியர் குழுவினரால் இசையூட்டப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் ஊழியர்களின் குழந்தைகளால் பாடல் இசைப்பும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. திரு மற்றும் திருமதி நத்தார் தாத்தா இந்த நிகழ்வில் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியிருந்தனர். யூனியன் வங்கி விளையாட்டு கழகத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

படம்: யூனியன் வங்கி Choir

யூனியன் வங்கியின் பொசொன் பௌர்ணமி பக்தி கீதம் இசைக்கும் நிகழ்வு

யூனியன் வங்கியின் பொசொன் பௌர்ணமி பக்தி கீதம் இசைக்கும் நிகழ்வு

பொசொன் பௌர்ணமி தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், பொசொன் பக்தி கீதம் இசைக்கும் நிகழ்வை யூனியன் வங்கி அண்மையில் முன்னெடுத்திருந்தது. வங்கியின் கிளைகள் மற்றும் தலைமையகத்தைச் சேர்ந்த அணி அங்கத்தவர்கள் பங்கேற்புடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது. வங்கியின் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வங்கியின் ஊழியர்களின் குடும்பத்தாரும் பங்கேற்றிருந்தனர். வங்கியின் நாட்காட்டியில் நீண்ட காலமாக நடைபெறும் நிகழ்வாக இந்த பக்தி கீதம் இசைக்கும் நிகழ்வு அடங்கியிருப்பதுடன், யூனியன் வங்கி விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

படம்: யூனியன் வங்கி பக்தி கீத அணி அங்கத்தவர்களுடன் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க காணப்படுகின்றார்.

யூனியன் வங்கி வெசாக் பண்டிகையை சூழலுக்கு நட்பான முறையில் கொண்டாடியது

யூனியன் வங்கி வெசாக் பண்டிகையை சூழலுக்கு நட்பான முறையில் கொண்டாடியது

வெசாக் பண்டிகையை முன்னிட்டு யூனியன் வங்கி தமது ஊழியர்களுக்காக ஒளி விளக்குக்கூடு அலங்கார போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வு மே மாதம் 4ஆம் திகதி இடம்பெற்றது. வங்கியின் சகல பிரிவுகளையும் சேர்ந்த ஊழியர்கள் தமது ஆக்கபூர்வமான ஒளி விளக்குக்கூடு அங்காரங்களை அனுப்பியிருந்தனர். இந்த அலங்காரங்கள் மீள்சுழற்சிக்குட்படுத்திய பொருட்களிலிருந்து தயாரிக்கப்படல் எனும் தொனிப்பொருளுக்கமைய வடிவமைக்கப்பட்டிருந்தன.

இந்த வெசாக் பண்டிகைக் கொண்டாட்டங்களில், சூழலுக்கு நட்பான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்த ஒளி விளக்குக்கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. இந்த விளக்குக்கூடுகள் சூழலுக்கு நட்பான அல்லது மீள்சுழற்சிக்குட்படுத்திய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தன. இந்த முன்னெடுப்புக்கு சகல கிளைகள் மற்றும் பிரிவுகளிலிருந்து சிறந்த பங்கேற்பு பதிவாகியிருந்தது. அணி அங்கத்தவர்களிடையே சிறந்த ஒற்றுமை மற்றும் ஈடுபாட்டை ஊக்குவிப்பதாக இந்த நடவடிக்கை அமைந்திருந்ததுடன், சூழலை பாதுகாப்பது தொடர்பில் வங்கியினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகவும் அமைந்திருந்தது.

இந்த ஒளி விளக்கக்கூடுகளை தயாரிப்பதற்கு பல்வேறு மீள்சுழற்சிக்குட்படுத்தப்பட்ட பொருட்களை அணியினர் பயன்படுத்தியிருந்தனர். பிரத்தியேகமான வடிவமைக்கப்பட்ட அலங்காரங்களிலிருந்து, வரகாபொல கிளையைச் சேர்ந்த அணியினர் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டனர். உள்ளக கணக்குமீளாய்வு பிரிவு மற்றும் கண்டி கிளையைச் சேர்ந்த அணியினர் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

படம்: பல்வேறு கிளைகள் மற்றும் பிரிவுகளிலிருந்து அனுப்பப்பட்ட ஒளி விளக்குக்கூட்டு அலங்காரங்களிலிருந்து வெற்றியீட்டிய அங்காரங்களைக் காணலாம்.

யூனியன் வங்கியின் புத்தாண்டுக் கொண்டாட்டம் 2023

யூனியன் வங்கியின் புத்தாண்டுக் கொண்டாட்டம் 2023

யூனியன் வங்கியின் வருடாந்த புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்வுகள் பத்தரமுல்ல, அபே கம பகுதியில் ஏப்ரல் 28 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் இந்த கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. தலைமையகம் மற்றும் கிளைகளைச் சேர்ந்த ஊழியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, புத்தாண்டு விளையாட்டுக்களில் பங்கேற்றனர்.

இந்த கொண்டாட்ட நிகழ்வுகள் களிப்பூட்டுவதாகவும், விறுவிறுப்பானதாகவும் அமைந்திருந்ததுடன், ஊழியர்கள் வர்ணமயமான பாரம்பரிய ஆடைகளை அணிந்து நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தனர். யூனியன் வங்கி புத்தாண்டு குமரர் மற்றும் குமரி தெரிவு இந்நிகழ்வில் நடுவர்கள் அடங்கலாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. பங்கேற்றிருந்தவர்கள் தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தமையினால் நடுவர்களின் பணியும் கடினமானதாக அமைந்திருந்தது. எவ்வாறாயினும், பொரளை கிளையைச் சேர்ந்த துல்ஷான் இந்தீவர மற்றும் அட்டைகள் செயற்பாட்டு பிரிவின் தனேஷினி உதாரி 2023 ஆம் ஆண்டுக்கான யூனியன் வங்கி புத்தாண்டு குமரர் மற்றும் குமரியாக முடிசூடப்பட்டனர்.

புத்தாண்டு விளையாட்டுக்களில் மழை குறுக்கிட்ட போதிலும், அதனால் போட்டிகளுக்கு எவ்விதமான தடங்கல்கள் ஏற்படாத வகையில் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. நிகழ்வில் இணைந்து கொண்ட அனைவருக்கும் பாரம்பரிய உணவுடன், சுவை நிறைந்த இரவு உணவு புஃபே, இசை மற்றும் நடனத்தை அனுபவிக்க முடிந்தது. யூனியன் வங்கி விளையாட்டு கழகத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

படம்: யூனியன் வங்கி புத்தாண்டு குமரர் மற்றும் குமரியாக தெரிவு செய்யப்பட்ட துல்ஷான் இந்தீவர மற்றும் தனேஷினி உதாரி ஆகியோரைக் காணலாம்.

யூனியன் வங்கி டோஸ்ட்மாஸ்டர்ஸ் கழகம் அறிமுகம்

யூனியன் வங்கி டோஸ்ட்மாஸ்டர்ஸ் கழகம் அறிமுகம்

யூனியன் வங்கி தனது முதலாவது டோஸ்ட்மாஸ்டர்ஸ் கழகத்தை நிறுவியுள்ளதாக பெருமையுடன் அறிவித்துள்ளது. வங்கியின் தலைமையகத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வின் போது இந்த கழகம் ஸ்தாபிக்கப்பட்டதுடன், இதன் போது, நடப்பு ஆண்டுக்காக 7 நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்கள் உட்பட, 18 டோஸ்ட்மாஸ்டர்கள் நிறுவப்பட்டனர். வங்கியின் திறன் மேம்படுத்தல் தந்திரோபாயத்தின் அங்கமாக டோஸ்ட்மாஸ்டர்ஸ் கழகத்தை ஸ்தாபிப்பது அமைந்திருப்பதுடன், ஊழியர்களின் தொடர்பாடல் மற்றும் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் தந்திரோபாயத்தின் அங்கமாகவும் அமைந்துள்ளது. 2023/24 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான புதிய குழு அங்கத்தவர்களில், தசுன் சிறிவர்தன (தலைவர்), காமிந்த குமாரசிங்க (உப தலைவர் கல்வி), கிஷோ பிரசாத் (உப தலைவர் அங்கத்துவம்), ஷெஹான் பீரிஸ் (உப தலைவர் பொது உறவுகள்), நிருபமா பண்டார (செயலாளர்), அனுராத ஜயசூரிய (பொருளாளர்), ஷேன் மிரெண்ட (சார்ஜன்ட் அட் ஆர்ம்ஸ்) ஆகியோர் அடங்கியுள்ளனர்.

யூனியன் வங்கி டோஸ்ட்மாஸ்டர்ஸ் கழகத்தை யூனியன் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், பணிப்பாளருமான இந்திரஜித் விக்ரமசிங்க நிறுவியதுடன், இந்நிகழ்வில் யூனியன் வங்கியின் நிர்வாகத்தார் மற்றும் ஊழியர்களுடன், இதர விருந்தினர்களும் கலந்து கொண்டனர். டோஸ்ட்மாஸ்டர்ஸ் கழகச் சமூகத்தின் சார்பாக, District 82, Area E4 மாவட்ட பணிப்பாளர் டோஸ்ட்மாஸ்டர் நிசல் வீரகோன் கலந்து கொண்டதுடன், கழகத்தின் இதர அங்கத்தவர்களும் பங்கேற்றிருந்தனர். இந்த குழு ஸ்தாபிப்பு நிகழ்வில் யூனியன் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “இன்றைய காலகட்டத்தில் எழும் பெருமளவான சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு, யூனியன் வங்கி அணியினர் மத்தியில் மேலதிக திறன்கள் மற்றும் ஆற்றல்களை கட்டியெழுப்புவது முக்கியமானதாகும். அதன் பிரகாரம், யூனியன் வங்கி டோஸ்ட்மாஸ்டர்ஸ் கழகத்தினால், ஊழியர்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்பவும், தலைமைத்துவப் பண்புகளை ஊக்குவிப்பதற்கும் பங்களிப்பு வழங்கப்படுவதுடன், ஊழியர்களுக்கு எழும் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு அவர்களை தயார்ப்படுத்துவதாகவும் அமைந்திருக்கும்.” என்றார்.

டோஸ்ட்மாஸ்டர்ஸ் என்பது அதன் அங்கத்தவர்களின் பொதுப் பேச்சாற்றல் மற்றும் தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்துவதில் பங்களிப்பு வழங்கும் இலாப நோக்கற்ற சர்வதேச அமைப்பாக திகழ்வதுடன், அதன் தலைமையகம், அமெரிக்காவின் என்கெல்வுட், கொலராடோவில் அமைந்துள்ளது. 1924 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தக் கழகத்தில் 144 நாடுகளைச் சேர்ந்த 14700 க்கும் அதிகமான கழகங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

படம்:
யூனியன் வங்கி டோஸ்ட்மாஸ்டர்ஸ், யூனியன் வங்கி பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி இந்திரஜித் விக்ரமசிங்க மற்றும் நிர்வாகக் குழு அங்கத்தவர்களுடன் காணப்படுகின்றனர்.

நீண்ட காலமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு யூனியன் வங்கி கௌரவிப்பு

நீண்ட காலமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு யூனியன் வங்கி கௌரவிப்பு

படம்: இடமிருந்து:
நில்மினி வீரசேகர (கூட்டாண்மை வங்கியியல்), தனுஷ்க செதுஹேவா (இடர் முகாமைத்துவம்), மினோலி பெர்னான்டோ (நிதியியல்), சரித டி சில்வா (சட்டப் பிரிவு), ரமிதுனி வெல்லாலகே (அத்திடிய கிளை), ஓஷதி குணசேகர (உள்ளக கணக்காய்வு), விந்தியா குணசேகர (மொரட்டுவ கிளை), சண்முகேஸ்வரன் ஜெஸ்டராஜன் (கொட்டாஞ்சேனை கிளை).

யூனியன் வங்கியில் நீண்ட காலமாக சேவையாற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் நீண்ட கால சேவை விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இவ்வாண்டு வங்கியில் நீண்ட காலமாக பணியாற்றும் எட்டு ஊழியர்களின் நீண்ட கால சேவையை கௌரவித்து பெறுமதி வாய்ந்த நினைவுச்சின்னங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தன. யூனியன் வங்கியின் தலைமையகத்தில் அண்மையில் இடம்பெற்ற விசேட வைபவத்தின் போது யூனியன் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்கவினால் இந்த கௌரவிப்பு விருதுகள் வழங்கப்பட்டிருந்தன.

நில்மினி வீரசேகர (கூட்டாண்மை வங்கியியல்), ஓஷதி குணசேகர (உள்ளக கணக்காய்வு) மற்றும் சண்முகேஸ்வரன் ஜெஸ்டராஜன் (கொட்டாஞ்சேனை கிளை) ஆகியோர் 25 வருட சேவையை பூர்த்தி செய்திருந்தமைக்காகவும், மினோலி பெர்னான்டோ (நிதிப் பிரிவு), சரித டி சில்வா (சட்டப் பிரிவு), தனுஷ்க செதுஹேவா (இடர் முகாமைத்துவம்), விந்தியா குணசேகர (மொரட்டுவ கிளை) மற்றும் ரமிந்துனி சாரங்கிகா (அத்திடிய கிளை) ஆகியோர் யூனியன் வங்கியில் 20வருட சேவையை பூர்த்தி செய்திருந்தமைக்காகவும் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த விருதுகள் தொடர்பில் மனித வளங்கள் பிரிவின் உப தலைவர் லிலந்தி தெல்கொட கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் வங்கியின் நீண்ட கால சேவை விருதுகள் வழங்கல் என்பது, வங்கியின் ஊழியர் ஈடுபாடு செயற்பாடுகளின் ஒரு அங்கமாக அமைந்திருப்பதுடன், இதனூடாக நீண்ட கால சேவை, அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளை கௌரவிக்கப்படுகின்றது. இக் கௌரவிப்பினூடாக பணியிடத்தில் ஊழியர்களுக்கு தமது செயற்பாடுகளில் அனுபவம் மற்றும் ஊக்குவிப்பு ஆகியவற்றை மேம்படுத்த முடிந்துள்ளது.” என்றார்.

யூனியன் வங்கியைப் பொறுத்தமட்டில் மனித வளங்கள் முகாமைத்துவம் என்பது பிரதான தந்திரோபாய முன்னுரிமையாக அமைந்துள்ளதுடன், வெகுமதிகளுடனான தொழில்நிலைகளை எதிர்பார்க்கும் ஊழியர்களை அரவணைக்கும் நிறுவனமாக அமைந்துள்ளது. வினைத்திறனான நிர்வாகக் கட்டமைப்புகள் முதல் கவர்ச்சிகரமான வெகுமதித் திட்டங்கள் வரை, முன்னேற்றகரமான தொழில்நிலை விருத்தியுடன், பயிலல் மற்றும் விருத்திக்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஊழியர்களுக்கு தமது முழுத்திறனை எய்துவதற்கு வங்கியினால் பெருமளவு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. வினைத்திறன் அடிப்படையில் இயங்கும் நிறுவனம் எனும் வகையில், யூனியன் வங்கி தொடர்ச்சியாக தனது ஊழியர்களை தமது உயர்ந்த நிலைகளை எய்துவதற்கு ஆதரவளிக்கும் வகையில் இயங்குகின்றது.

யூனியன் வங்கியில் நீண்ட காலமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு கௌரவிப்பு

யூனியன் வங்கியில் நீண்ட காலமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு கௌரவிப்பு

படங்கள்: சந்தித லியனகே (மாத்தறை கிளை), ரொஷான் விதானாரச்சி (செயற்பாடுகள்), கோலித டி சில்வா (OMS கிளை), காஞ்சன டி சில்வா (செயற்பாடுகள்), கிறிஸ்டெலா சிவபிரகாசம் (கொள்ளுப்பிட்டி கிளை), ரவி ஜயசேகர (உப தலைவர் மனித வளங்கள்), இந்தரஜித் விக்ரமசிங்க (பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி), ஸ்ரீ கணேந்திரன் (உப தலைவர் செயற்பாடுகள்), ஜமுனா ஜெகசோதி (கொட்டாஞ்சேனை கிளை), இந்திக கலஹிட்டியாவ (பிலிமத்தலாவை கிளை), சைலஜா நடராஜா (திறைசேரி), இரந்தி கருணாநாயக்க (கம்பளை கிளை) மற்றும் ஹிரான் டி சில்வா (மீட்புகள்).

யூனியன் வங்கியின் 20 வருட கால செயற்பாடுகளில் அர்ப்பணிப்புடன் நீண்ட காலமாக செயலாற்றிய ஊழியர்களுக்கு கௌரவிக்கும் நிகழ்வொன்றை யூனியன் வங்கி அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வங்கியில் நீண்ட காலமாக பணியாற்றிய பத்து ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

வங்கியின் செயற்பாடுகளில் இரண்டு தசாப்த காலமாக இந்த ஊழியர்கள் வழங்கிய பங்களிப்புக்கு கௌரவிப்பு மற்றும் வெகுமதிகள் போன்றன யூனியன் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்டிருந்தது.

இந்த விருதுகள் தொடர்பில் மனித வளங்கள் பிரிவின் உப தலைவர் ரவி ஜயசேகர கருத்துத் தெரிவிக்கையில், ‘வங்கியின் வெற்றிகரமான செயற்பாடுகளில் ஊழியர்கள் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. வங்கியுடன் 20 வருட கால சேவையை பூர்த்தி செய்யும் 10 ஊழியர்களுக்கு கௌரவிப்பை வழங்குவதையிட்டு நாம் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். நிறுவனம் எனும் வகையில், நீண்ட காலமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு மதிப்பை வழங்குவதையிட்டு நாம் பெருமையடைகிறோம்’ என்றார்.

பொது பக்தி கீத சரணம் இசை நிகழ்வுடன் யூனியன் வங்கியின் வெசாக் கொண்டாட்டம்

பொது பக்தி கீத சரணம் இசை நிகழ்வுடன் யூனியன் வங்கியின் வெசாக் கொண்டாட்டம்

யூனியன் வங்கியின் பக்தி கீத குழுவினர் நிகழ்வில் பாடலிசைக்கின்றனர்

வெசாக் முழுமதி தினத்தினை கொண்டாடும் நோக்குடன், யூனியன் வங்கி அதன் தலைமை அலுவலகத்தில் பொது பக்தி கீத சரணம் 2018 (Bodu Bathi Gee Saraniya 2018) இசை நிகழ்ச்சியினை நடாத்தியது. வங்கியின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. இந்திரஜித் விக்கிரமசிங்க, கூட்டாண்மை மற்றும் சிரேஷ்ட வங்கி முகாமைத்துவத்தினர், பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

யூனியன் வங்கியின் பொது பக்தி கீத சரணம் 2018 நிகழ்வானது, புகழ்பெற்ற இசையமைப்பாளர் நளின் அல்வில் அவர்களினால் நெறிப்படுத்தப்பட்டது. யூனியன் வங்கியின் பக்தி கீத குழுவில், கிஷானி சமரவிக்கிரம, ருமேஷ் வினோத், ரோஷன சம்பத், ஆன் ரொஷ்னி பெரேரா, சச்சிந்த தனுஷ்க குமார, நுவான் சத்துரங்க, வஜிர பெர்ணாண்டோ, பவன் அதுலுகம, சரளா குரே, ஷாலினி விஜேவர்த்தன, கலனி சந்தமாலி, கீத்தானி ரணவீர, யொஹான் ல்யூக், உமேஷா ஹெந்தஹேவ, ஹர்ஷிக்கா ஜயவர்த்தன, ஷாலினி பெரேரா, ஹசங்கி செனவிரட்ண, திலினி ஹேகொட, யதீஷா யுராந்தி, தினேஷி பொன்சேக்கா, ஸ்டெஃபானி பெர்ணாண்டோ, ப்ரவீன் பெரேரா, சச்சினி மதுஷிக்கா ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர். ரித்மா அபேசிங்க மற்றும் நுவன் திலக்கவர்த்தன ஆகியோர் நிகழ்வினை தொகுத்து வழங்கினர்.

வங்கிகள்

  • Amana Bank PLC
  • Bank of Ceylon
  • Cargills Bank Ltd
  • Citibank
  • Commercial Bank of Ceylon PLC
  • DFCC Bank
  • Hatton National Bank PLC
  • HDFC Bank
  • HSBC Ltd
  • National Development Bank PLC
  • Nations Trust Bank
  • Pan Asia Banking Corporation
  • People’s Bank
  • Public Bank Berhard
  • Sampath Bank PLC
  • Seylan Bank PLC
  • Standard Chartered Bank

நிறுவனங்கள்

  • Merchant Bank of Sri Lanka Finance
  • Central Finance PLC
  • Commercial Leasing and Finance PLC
  • HNB Finance
  • LB Finance PLC
  • People’s Leasing and Finance PLC
  • Softlogic Finance Plc
  • Singer Finance (Lanka) PLC