0117 818181

யூனியன் வங்கியின் தேசிய தொழில்முயற்சியாண்மை விருத்தி நிகழ்ச்சித் திட்டத்தை புதிய வளர்ந்து வரும் தொழில்முயற்சியாளர்கள் குழுவினர் பூர்த்தி செய்தனர்

யூனியன் வங்கியின் தேசிய தொழில்முயற்சியாண்மை விருத்தி நிகழ்ச்சித் திட்டத்தை புதிய வளர்ந்து வரும் தொழில்முயற்சியாளர்கள் குழுவினர் பூர்த்தி செய்தனர்

யூனியன் வங்கி சமூக தொழில்முயற்சியாண்மை பாடசாலைத் திட்டத்தின் (UBSSE) அங்கமாக, மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றம் தேசிய புத்தாக்க முகவர் அமைப்பு ஆகியவற்றுடன் யூனியன் வங்கி இணைந்து, சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்கு வலுவூட்டும் வகையில் முன்னெடுக்கப்படும் தேசிய தொழில்முயற்சியாண்மை விருத்தி நிகழ்ச்சத் திட்டத்தின் (NEDP) கீழ், வளர்ந்து வரும் தொழில்முயற்சியாளர் குழுவினர் அண்மையில் தமது பயிற்சிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்து, சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

படம்:
யூனியன் வங்கி பிரதம வணிக அதிகாரி அசங்க ரன்ஹொட்டி, சந்தைப்படுத்தல் உப தலைவர் திஷானி திசாநாயக்க, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி பேராசிரியர் தினேஷ் சமரசிங்க மற்றும் வணிக பீடத்தின் தலைமை அதிகாரி கலாநிதி. காயத்ரி குருப்பு ஆகியோர் NEDP சான்றிதழ்களை கையளிக்கின்றனர்.

யூனியன் வங்கி தேசிய தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்துள்ளது

யூனியன் வங்கி தேசிய தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்துள்ளது

யூனியன் வங்கி School of Social Entrepreneurship (UBSSE)இன் தேசிய தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (NEDP) இரண்டாம் கட்டம் அண்மையில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த பொது, தனியார் பங்காண்மையாக அமைந்திருப்பதுடன், யூனியன் வங்கி, மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் தேசிய புத்தாக்க முகவர் அமைப்பு ஆகியன இணைந்து முன்னெடுக்கும் இந்த NEDP திட்டத்தினூடாக, கல்விச் சிறப்பு, நிதிசார் வலுவூட்டல் மற்றும் இலங்கையின் தொழில்முயற்சியாண்மை கட்டமைப்பை வலிமைப்படுத்துவதற்கு அவசியமான புத்தாக்க தலைமைத்துவம் ஆகியன வழங்கப்படுகின்றன. NEDP இரண்டாம் கட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான பங்குபற்றுனர்கள் வரவேற்கப்பட்டுள்ளதுடன், இதில் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்ட வியாபாரத்தைக் கொண்ட வியாபார உரிமையாளர்கள் மற்றும் புதிய வியாபார சிந்தனைகளைக் கொண்ட எதிர்காலத்தில் வியாபாரமொன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளவர்கள் என இருசாராரும் அடங்கியுள்ளனர். அதனூடாக, தொலைநோக்குத் திட்டத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது.

யூனியன் வங்கியினால் ஆரம்ப மூலதன தேவைப்பாடுகள் அற்ற “Home Loan Plus”அறிமுகம்

யூனியன் வங்கியினால் ஆரம்ப மூலதன தேவைப்பாடுகள் அற்ற “Home Loan Plus”அறிமுகம்

இலங்கையில் பூர்த்தி செய்யப்பட்ட மற்றும் நிர்மாணிக்கப்பட்ட வண்ணமுள்ள செயற்திட்டங்களுக்கு 100% முழுமையான நிதி வசதியளிப்பை வழங்கும் முதலாவது தீர்வாக யூனியன் வங்கி Home Loan Plus அமைந்துள்ளது. ஆரம்ப மூலதனம் அவசியமற்ற நிலையில், வீட்டு உரிமையாளர்களுக்கு தமது கனவு இல்லத்துக்கு இலகுவாக மாறிக் கொள்ளும் வசதியை வழங்குகிறது. இந்த புத்தாக்கமான தீர்வில், சம்பளம் பெறும் நிபுணர்கள், வியாபார உரிமையாளர்கள் மற்றும் சொத்து முதலீட்டாளர்கள் என பரந்தளவு வருமான வகைகளுக்கு பொருந்தும் வகையில் மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க மீளச் செலுத்தும் திட்டங்கள் அடங்கியுள்ளன. மாற்றியமைத்துக் கொள்ளத் தக்க மாதாந்த தவணைக் கட்டணங்கள், வட்டி மட்டும் செலுத்தல்களுடன் ரொக்கப் பணத்தை மீளச் செலுத்தல் அல்லது முதலீட்டு வருமானத்துக்கு பொருத்தமான வகையிலமைந்த மூலதன மீளச் செலுத்தும் கட்டமைப்புகள் போன்றன அடங்கியுள்ளன. இவை சொகுசு இல்ல உரிமையாண்மையை மிகவும் இலகுபடுத்தியுள்ளதுடன், ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் மற்றும் பிரைம் குரூப் அடங்கலாக முன்னணி சொத்து வடிவமைப்பாளர்களினூடாக யூனியன் வங்கி Home Loan Plus ஐ பெற்றுக் கொள்ள முடியும்.

யூனியன் வங்கியின் கார்ட்கள் மற்றும் சில்லறைத் தீர்வுகள் முகாமைத்துவ பிரிவின் தலைமை அதிகாரி – உப தலைவர் மலிந்த பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் வீட்டு நிதிவசதியளிப்பு பிரிவில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள தீர்வாக யூனியன் வங்கி Home Loan Plus அமைந்துள்ளது. ஆரம்பத்தில் மூலதனமிடுவதற்கான தேவையை இல்லாமல் செய்து, நெகிழ்ச்சியான மீளச் செலுத்தும் தெரிவுகளை வழங்கி, பல இலங்கையர்களுக்கு ப்ரீமியம் சொத்தொன்றின் உரிமையாளராகும் கனவை நனவாக்க நாம் முன்வந்துள்ளோம்.” என்றார்.

படம்: மலிந்த பெரேரா, உப தலைவர் – கார்ட்கள் மற்றும் சில்லறைத் தீர்வுகள் முகாமைத்துவ பிரிவின் தலைமை அதிகாரி.

யூனியன் வங்கி இலங்கையின் சிறந்த 100 மிகவும் பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்களில் ஒன்றாக கௌரவிப்பைப் பெற்றுள்ளது

யூனியன் வங்கி இலங்கையின் சிறந்த 100 மிகவும் பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்களில் ஒன்றாக கௌரவிப்பைப் பெற்றுள்ளது

யூனியன் வங்கி, இலங்கையின் சிறந்த 100 மிகவும் பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்கள் வரிசையில் மீண்டும் தரப்படுத்தப்பட்டுள்ளது. Brand Finance இனால் Echelon Magazine உடன் இணைந்து வெளியிடப்பட்ட பிந்திய தரப்படுத்தல்களில் இந்த கௌரவிப்பு யூனியன் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. வங்கியின் உறுதியான முன்னேற்றம் மற்றும் போட்டிகரமான நிதிச் சேவைகள் துறையில் வர்த்தக நாமத்தின் வளர்ச்சியடைந்து செல்லும் நிலையை வெளிப்படுத்துவதாக இந்த கௌரவிப்பு அமைந்துள்ளது. யூனியன் வங்கியின் நிதிசார் வினைத்திறன், சந்தை கௌரவம் மற்றும் வாடிக்கையாளர் உறவுகள் போன்றவற்றை பிரதிபலிப்பதாக இந்த தரப்படுத்தல்கள் அமைந்துள்ளன.

இந்த பெருமைக்குரிய தருணம் தொடர்பில் யூனியன் வங்கியின் சந்தைப்படுத்தல் உப தலைவர் திஷானி திசாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “வங்கியின் பெருமளவு பங்குகளை CG Corp Global மூலோபாய ரீதியில் கையகப்படுத்தியிருந்ததை தொடர்ந்து, “வாழ்வை மாற்றியமைத்தல்” எனும் வர்த்தக நாம உறுதிமொழியில் வங்கி கவனம் செலுத்துகிறது. வாடிக்கையாளர்களை மையப்படுத்திய செயற்பாடுகள், புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கம் போன்றவற்றினால் வழிநடத்தப்படுகிறது. யூனியன் வங்கியில் தொடர்ச்சியாக நம்பிக்கை கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம். உறுதியான, எதிர்காலத்துக்கு தயாரான வர்த்தக நாமத்தை கட்டியெழுப்புவதில் எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த கௌரவிப்பு பிரதிபலிக்கிறது.” என்றார்.

யூனியன் வங்கி Turbo-Draft – Bigger & Better வாகனத்துக்கான ஸ்மார்ட்டான வழி

யூனியன் வங்கி Turbo-Draft – Bigger & Better வாகனத்துக்கான ஸ்மார்ட்டான வழி

யூனியன் வங்கி Turbo-Draft, மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க நிதிவசதியளிப்பாக அமைந்திருப்பதுடன், நெகிழ்ச்சியான கொடுப்பனவு நியதிகள் மற்றும் பெருமளவு குறைவான மாதாந்த தவணைக்கட்டணங்களுடன் வழங்கப்படும் தீர்வாக அமைந்துள்ளது. இதனூடாக, தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு வாகன மெருகேற்றங்களை மேற்கொள்வது மற்றும் ப்ரீமியம் வாகனங்களை கொள்வனவு செய்வது என்பது தற்போது மேலும் இலகுவாக்கப்பட்டுள்ளது.

யூனியன் வங்கி Turbo-Draft இனால் வாடிக்கையாளர்களுக்கு தமது கொடுப்பனவு திட்டங்களை 30 மாதங்கள் வரை மீளச் செலுத்தக்கூடிய வகையில் திட்டமிட்டுக் கொள்ளலாம். மாதாந்தம் சிறிய தொகையை மேற்கொண்டு, இறுதியாக பெருமளவு தொகை கொடுப்பனவை செலுத்தி தீர்க்கலாம். அதனூடாக, வாடிக்கையாளர்களுக்கு Bigger and Better வாகனத்தை அதே மாதாந்த கட்டணத்துக்கு கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும். யூனியன் வங்கி Turbo-Draft ஊடாக, ஸ்மார்ட்டான பட்ஜெட் நிர்வகிப்பும், புதிய வாகனங்களை துரிதமாக அணுகும் வசதியும் வழங்கப்படுகிறது.

யூனியன் வங்கியின் லீசிங் பிரிவின் தலைமை அதிகாரி கசுன் பாலசூரிய கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் வங்கி Turbo-Draft இனால், எமது வாடிக்கையாளர்களுக்கு பெருமளவு மாதாந்த சுமைகளின்றி புதிய வாகனமொன்றின் உரிமையாளராவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. நெகிழ்ச்சியான செலுத்தித் தீர்க்கும் வசதியை கொண்டுள்ளது. துரித அனுமதிகள் மற்றும் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய நிதிவசதியளிப்பு தெரிவுகளுடன், யூனியன் வங்கி Turbo-Draft வாடிக்கையாளர்களுக்கு வாகனமொன்றின் உரிமையாளராவதற்கான ஸ்மார்ட்டான மற்றும் சௌகரியமான வசதியை வழங்குகிறது.” என்றார்.

பிரயோக வங்கியியல் பயிற்சிக்காக யூனியன் வங்கி, IBSL உடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைசசாத்து

பிரயோக வங்கியியல் பயிற்சிக்காக யூனியன் வங்கி, IBSL உடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைசசாத்து

யூனியன் வங்கி மற்றும் இலங்கை வங்கியியலாளர் நிறுவகம் (IBSL) புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. வங்கியியல் மற்றும் நிதியியல் பிரிவில் உயர் கல்வியை தொடரும் மாணவர்களுக்கு உயர் பிரயோக பயிற்சிகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்த உடன்படிக்கை அமைந்துள்ளது. இந்த உடன்படிக்கையை யூனியன் வங்கியின் பிரதம மக்கள் மற்றும் மாற்றியமைப்பு அதிகாரி ஜயந்த அமரசிங்க மற்றும் இலங்கை வங்கியியலாளர் நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் சி.பி.ஏ. கருணாதிலக ஆகியோர் வைபவ ரீதியாக பரிமாறிக் கொண்டனர். கல்விசார் அறிவை நிஜ உலக அனுபவத்துடன் இணைக்கும் யூனியன் வங்கியின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக இந்தப் பங்காண்மை அமைந்துள்ளது. அத்துடன் IBSL இன் மாணவர்களுக்கு நிறுவகத்தின் பிரயோக பயிற்சி வழிகாட்டல்களுக்கமைவான பிரயோக பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதாகவும் அமைந்துள்ளது.

யூனியன் வங்கி தனது பிரதம நிதி அதிகாரியாக ஷானக அபேவர்தனவை நியமித்துள்ளது

யூனியன் வங்கி தனது பிரதம நிதி அதிகாரியாக ஷானக அபேவர்தனவை நியமித்துள்ளது

யூனியன் வங்கி தனது பிரதம நிதி அதிகாரியாக (CFO) ஷானக அபேவர்தனவை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.

பெறுபேறுகளை பதிவு செய்து இயங்கியுள்ள நிதித் துறையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள நிபுணரான அபேவர்தன, நிதி மூலோபாயம், அறிக்கையிடல் மற்றும் வணிக வினைத்திறன் செம்மையாக்கல் ஆகியவற்றில் 30 வருடங்களுக்கு மேலான உள்நாட்டு மற்றும் சர்வதேச அனுபவத்தைக் கொண்டுள்ளார். நிதிசார் வினைத்திறன் மேம்படுத்தல், நிறுவனசார் மாற்றங்களை மேற்கொள்ளல் மற்றும் வங்கிச் சூழல்களில் நிலைபேறான பெறுமதி உருவாக்கம் ஆகியவற்றை மேற்கொண்டதில் இவரின் தொழில்நிலை உறுதியான பங்களிப்பைக் கொண்டுள்ளது.

இலங்கை சணச அபிவிருத்தி வங்கியின் பிரதம நிதி அதிகாரியாக அண்மையில் அபேவர்தன செயலாற்றியிருந்தார். இதன் போது, பதில் பிரதம நிறைவேற்று அதிகாரியாக, முக்கியமான நிதிசார் மறுசீரமைப்புகள், வியாபார வளர்ச்சி மற்றும் மூலோபாய மாற்றியமைப்பு செயற்பாடுகள் பலதை முன்னெடுத்திருந்தார். தேசிய அபிவிருத்தி வங்கி (NDB), ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் Mashreq வங்கி மற்றும் ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி ஆகியவற்றில் முக்கிய நிலைகளையும் வகித்திருந்தார்.

இவர் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பட்டய முகாமைத்துவ கணக்காளர் நிறுவகத்தின் அங்கத்தவராக திகழ்வதுடன், பிரான்ஸ் SKEMA Business School இடமிருந்து Master of Science (MSc) பட்டத்தையும் பெற்றுள்ளார். அத்துடன், ஐக்கிய இராஜ்ஜியத்தின், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திடமிருந்து முகாமைத்துவ நிறைவேற்று டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார்.

நியமனம் தொடர்பில் யூனியன் வங்கி பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் ரொட்ரிகோ கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் வங்கியின் மூலோபாய வளர்ச்சி மேற்கொள்ளப்படும் காலப்பகுதியில் ஷானகவை வரவேற்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். உள்நாட்டு மற்றும் சர்வதேச அனுபவத்துடன், உறுதியான நிதிசார் உள்ளம்சங்கள் மற்றும் தலைமைத்துவ ஆற்றல்கள் போன்றன, எமது நீண்ட கால நோக்கை நோக்கி பயணிப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கும்.” என்றார்.

டிஜிட்டல் ரீதியில் புத்தாக்கம், வாடிக்கையாளர்களை நோக்காகக் கொண்ட வங்கியியல் பங்காளராக திகழும் பயணத்தில், தனது தலைமைத்துவ அணியை வலிமைப்படுத்துவதில் யூனியன் வங்கி தன்னை அர்ப்பணித்துள்ளது.

சிக்கல்களில்லாத வங்கிச் சேவைகளுக்கு All-in-One தீர்வாக யூனியன் வங்கியின் UBGO

சிக்கல்களில்லாத வங்கிச் சேவைகளுக்கு All-in-One தீர்வாக யூனியன் வங்கியின் UBGO

தனது செயற்பாடுகளை மேம்படுத்தி மாற்றியமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் யூனியன் வங்கி, தனது டிஜிட்டல் செயற்பாடுகளை மேம்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில், தனது மொபைல் வங்கியியல் கட்டமைப்பான UBgo இல் பல புதிய உள்ளம்சங்களை உள்ளடக்கி அறிமுகம் செய்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு வங்கியியல் அனுபவத்தை எளிமைப்படுத்தி மேம்படுத்தும் வகையிலும், பணப்பரிமாற்றங்கள், சேமிப்பு மற்றும் நிலையான வைப்பு கணக்குகளை உடனுக்குடன் ஆரம்பித்தல், வேகமான QR கொடுப்பனவுகள், நிர்வகிப்பு மற்றும் கட்டணப்பட்டியல் கொடுப்பனவுகள், கார்ட்கள் மற்றும் பல வங்கிசார் அம்சங்களை சுலபமாக மேற்கொள்ளக்கூடிய வகையில் UBgo வடிவமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மெருகேற்றங்களினூடாக தற்போது app இல் வீடியோ KYC வசதி வழங்கப்பட்டு, கிளைக்கு விஜயம் செய்யாமல், கணக்கை ஆரம்பித்துக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வங்கியுடன் சுலபமாக தொடர்புகளை பேணக்கூடிய வகையில் இந்த app இனூடாக Call-Back கோரிக்கைகளை மேற்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் வங்கியியல் பிரிவின் உப தலைவர் மனீஷ பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “டிஜிட்டல் புத்தாக்கங்கள் மற்றும் சேவைச் சிறப்பு ஆகியவற்றினூடாக எமது வாடிக்கையாளர்களின் வாழ்வை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளை வங்கி தொடர்ந்து மேற்கொண்ட வண்ணமுள்ளது. அதற்கமைய சிறந்த டிஜிட்டல் வங்கியியல் அனுபவத்தை வழங்குவது எமது முன்னுரிமை. UBgo மொபைல் வங்கிச்சேவை app இல் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மெருகேற்றங்களினூடாக, எதிர்பார்க்கப்படும் இளம் வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு வெற்றிகரமாக சென்றடைய வங்கிக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், எமது ஏற்கனவே காணப்படும் வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வங்கியியல் அனுபவத்தையும், பெறுமதி சேர்ப்பையும் வழங்கவும் முடியும். ISO 27001:2022 சான்றிதழினால் கௌரவிக்கப்பட்ட முதலாவது வங்கியாக யூனியன் வங்கி திகழ்வதுடன், தரவு பாதுகாப்பில் உயர் நியமங்களை பேணுகின்றமைக்காக Payment Card Industry Data Security Standard (PCI DSS) v4.0 ஐயும் கொண்டுள்ளது. app இனால் பாதுகாப்பான biometric உறுதிப்படுத்தல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் வழங்கப்படுவதால், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான வங்கியியல் அனுபவத்தைக் கொண்டிருக்க முடியும். மாற்றமடைந்து வரும் நுகர்வோரின் தேவைகள் மற்றும் சந்தை போக்குகளுக்கமைய எதிர்காலத்துக்கு தயாரான டிஜிட்டல் தீர்வாக இந்த app தொடர்ந்தும் மெருகேற்றப்படும்.” என்றார்.

யூனியன் வங்கி Product Power Forum 2025 ஐ ஆரம்பித்துள்ளது

யூனியன் வங்கி Product Power Forum 2025 ஐ ஆரம்பித்துள்ளது

வங்கியின் மாற்றியமைப்பு செயற்பாடுகள் மற்றும் புதிய மூலோபாய நோக்கத்தின் அங்கமாக, ஊழியர்களின் திறன்கள் மற்றும் அறிவை மேம்படுத்தும் பணிகளை யூனியன் வங்கி தொடர்ந்தும் முன்னெடுத்த வண்ணமுள்ளது. யூனியன் வங்கியின் கிளைகளைச் சேர்ந்த முன்கள ஊழியர்களின் தயாரிப்பு அறிவை மேம்படுத்தும் ஈடுபாட்டு நிகழ்வொன்றை Product Power 2025 எனும் தொனிப்ப பொருளின் கீழ் வங்கி அண்மையில் முன்னெடுத்திருந்தது. சேமிப்புகள் மற்றும் முதலீடுகள், கடன்கள், கடன் அட்டைகள், அடகுச் சேவைகள், லீசிங், டிஜிட்டல் வங்கிச் சேவை மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மை பெறுமதி பிரிவுகள் போன்ற பிரதான அம்சங்களை உள்ளடக்கி, வங்கியின் தயாரிப்பு நிபுணர்களால் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் முதல் சுற்றில் 200 க்கும் அதிகமான கிளை ஊழியர்கள் பங்கேற்றிருந்ததுடன், ஒன்லைன் தயாரிப்பு புதிர் போட்டி அடங்கலாக பல்வேறு ஈடுபாடுகளுடனான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிகழ்வில் வங்கியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் ரொட்ரிகோ உரையாற்றியிருந்தார். தமது உரையில், 2025 ஆம் ஆண்டுக்கான வங்கியின் மூலோபாய நோக்கு மற்றும் இலக்குகள் பற்றிய தெளிவுபடுத்தல்களை வழங்கியதுடன், தொடர்ச்சியான மாற்றத்துக்கு வங்கியின் அர்ப்பணிப்பு மற்றும் ஊழியர்களின் வளர்ச்சி மற்றும் விருத்திக்காக ஈடுபாட்டு செயற்பாடுகள் பற்றிய விடயங்கள் அடங்கியிருந்தன.

யூனியன் வங்கி தேசிய தொழில்முயற்சியாண்மை விருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் தேசிய புத்தாக்க முகவர் அமைப்புடன் இணைந்து ஆரம்பித்துள்ளது

யூனியன் வங்கி தேசிய தொழில்முயற்சியாண்மை விருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் தேசிய புத்தாக்க முகவர் அமைப்புடன் இணைந்து ஆரம்பித்துள்ளது

யூனியன் வங்கி தனது Union Bank School of Social Entrepreneurship இன் முக்கிய மைல்கல் சாதனையாக தேசிய தொழில்முயற்சியாண்மை விருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை (NEDP) அறிமுகம் செய்துள்ளதாக பெருமையுடன் அறிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான கல்விச் செயற்பாடுகள் ஆரம்பித்துள்ளதுடன், மொரட்டுவ பல்கலைக்கழகம் (UoM) மற்றும் தேசிய புத்தாக்க முகவர் அமைப்பு (NIA) ஆகியவற்றுடன் இணைந்து யூனியன் வங்கி இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

2024 டிசம்பர் மாதத்தில் நாடு முழுவதிலும் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில், கிடைத்த விண்ணப்பங்களிலிருந்து இருநூறு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள், தற்போதைய வியாபார உரிமையாளர்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை கொண்ட தொழில்முயற்சியாளர்கள் போன்ற புத்தாக்கமான சிந்தனைகளை கொண்டவர்கள் இந்தத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன், நிகழ்விலும் பங்கேற்றிருந்தனர்.

ஒன்லைன் விரிவுரைகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள் போன்றன இணைந்து இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்படுவதுடன், வியாபார திரட்சியை கட்டியெழுப்ப அவசியமான பரந்த கற்கையை உள்வாங்கியுள்ளது. வியாபார உரிமையாளர்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் நிறைந்த தொழில்முயற்சியாளர்கள் போன்றவர்களின் திறன்களை மேம்படுத்தும் மாற்றியமைக்கும் பயணத்தின் ஆரம்பமாக இந்த மைல்கல் நிகழ்வு அமைந்திருந்தது. நிகழ்வின் முக்கிய அங்கமாக, யூனியன் வங்கியின் வாடிக்கையாளர்களும் நிகழ்வில் இணைந்து கொண்டதுடன், திட்டத்துக்கு பெருமளவு பெறுமதியை சேர்த்திருந்தனர். ஒன்றிணைந்து, தொழில்முயற்சியாண்மை, புத்தாக்கம் மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை இலங்கையில் கட்டியெழுப்புகின்றோம்.

படம்: யூனியன் வங்கியின் பிரதிநிதிகளுடன் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள், மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் தேசிய புத்தாக்க முகவர் அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள், தேசிய தொழில்முயற்சியாண்மை விருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் அறிமுக நிகழ்வில் காணப்படுகின்றனர்.

யூனியன் வங்கி தனது பிரதி தவிசாளராக நிர்வாணா சௌத்ரியை நியமித்துள்ளது

யூனியன் வங்கி தனது பிரதி தவிசாளராக நிர்வாணா சௌத்ரியை நியமித்துள்ளது

யூனியன் வங்கி தனது புதிய பிரதி தவிசாளராக நிர்வாணா சௌத்ரியை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. முன்னர் பிரதி தவிசாளராக செயலாற்றிய ட்ரெவின் பெர்னான்டோபுள்ளே அந்த பதவியிலிருந்து ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து புதிய புதிய நியமனத்தை வழங்கியுள்ளது. 2023 ஒக்டோபர் மாதம் முதல் யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபையில் சுயாதீனமற்ற நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக நிர்வாணா சௌத்ரி திகழ்கின்றார். இவர் பல துறைகளில் பிரசன்னத்தைக் கொண்ட பன்முகப்படுத்தப்பட்ட பல்தேசிய நிறுவனமான CG Corp Global இன் முகாமைத்துவப் பணிப்பாளராவார். யூனியன் வங்கியின் பிரதான பங்காளராக திகழும் CG Corp Global இன் துணை நிறுவனமான CG Capital Partners, இரு நிறுவனங்களின் மூலோபாய பங்காண்மையை மேலும் வலிமைப்படுத்தியுள்ளது. சர்வதேச வியாபார மூலோபாயம், தலைமைத்துவம் மற்றும் கூட்டாண்மை ஆளுகை ஆகியவற்றில் சௌத்ரியின் பரந்த அனுபவம், நிதித்துறையில் தனது சேவைகளை மேலும் விஸ்தரிப்பதற்கு யூனியன் வங்கிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கும்.

படம் – யூனியன் வங்கி பிரதி தவிசாளர் நிர்வாணா சௌத்ரி

யூனியன் வங்கி சமூக தொழில்முயற்சியாண்மை பாடசாலையினால் வளர்ந்து வரும் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கான தேசிய தொழில்முயற்சியாண்மை விருத்தி நிகழ்ச்சித் திட்டம் பற்றி அறிவிப்பு

யூனியன் வங்கி சமூக தொழில்முயற்சியாண்மை பாடசாலையினால் வளர்ந்து வரும் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கான தேசிய தொழில்முயற்சியாண்மை விருத்தி நிகழ்ச்சித் திட்டம் பற்றி அறிவிப்பு

யூனியன் வங்கி சமூக தொழில்முயற்சியாண்மை பாடசாலையினால் (UBSSE) முதலாவது செயற்திட்டமான தேசிய தொழில்முயற்சியாண்மை விருத்தி நிகழ்ச்சியை (NEDP), மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் தேசிய புத்தாக்க முகவர் அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை முழுவதிலும் எதிர்பார்ப்புகள் நிறைந்த தொழில்முயற்சியாளர்களுக்கும், பொருத்தமான ஆரம்பநிலை சிந்தனைகளைக் கொண்டுள்ளவர்களுக்கும் வலுவூட்டும் வகையில் இந்த இணைந்த முயற்சி அமைந்திருப்பதுடன், தமது வியாபாரங்களை கட்டியெழுப்பிக் கொள்ளவும், விஸ்தரித்துக் கொள்ளவும் அத்தியாவசிய அறிவு மற்றும் திறன்களை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

யூனியன் வங்கியின் சந்தைப்படுத்தல் உப தலைவர் திஷானி திசாநாயக்க குறிப்பிடுகையில், “நேபாளத்தின் CG Corp Global Group இன் Nabil Bank இன் வெற்றிகரமான திட்டமான NabilSSE இன் பிரகாரம் UBSSE முன்னெடுக்கப்படுகின்றது. இது CG Corp Global இன் முகாமைத்துவ பணிப்பாளரும், யூனியன் வங்கியின் பிரதி தவிசாளருமான நிர்வாணா சௌத்ரியின் சிந்தனை வெளிப்பாடாகும். இலங்கையின் தொழில்முயற்சியாளர்களுக்கு வலுவூட்டுவது மற்றும் இலங்கையில் உறுதியான தொழில்முயற்சியாண்மை கட்டமைப்பை நிறுவுவது போன்றன அவரின் நோக்காக அமைந்துள்ளது. எமது சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்கு வழங்க நாம் எதிர்பார்க்கும் பெறுமதி சேர் அம்சமாக இந்தத் திட்டம் அமைந்துள்ளதுடன், அவர்களுக்கு தமது வியாபார கொள்ளளவை திரட்டி, வளர்ச்சியை முன்னெடுக்க உதவியாக அமைந்திருக்கும். முக்கியமாக, யூனியன் வங்கிக்கு மாத்திரம் NEDP திறந்திருப்பது மட்டுமன்றி, பொது மக்களுக்கும் விரிவாக்கப்பட்டு, நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த தொழில்முயற்சியாளர்களுக்கு, இந்த பெறுமதி வாய்ந்த நிகழ்ச்சித் திட்டத்தினூடாக அனுகூலம் பெற வாய்ப்பை வழங்கும்.” என்றார்.

மூலோபாய விருத்தி, சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக நாமமிடல், ஊழியர் சட்டம், வியாபார திட்டமிடல், கணக்கீடு மற்றும் நிதியியல், ஒழுக்கச் செயற்பாடுகள், புலமைச் சொத்து மற்றும் தலைமைத்துவம் போன்ற முக்கிய வியாபாரப் பிரிவுகளில் பரந்த பயிலல் அனுபவத்தை NEDP ஒன்லைன் பயிற்சிப் பட்டறை வழங்கும். பங்குபற்றுனர்களுக்கு நிபுணத்துவ வழிகாட்டல், தொடர்புகளை பேணும் பயிற்சிப்பட்டறைகள் மற்றும் நேரடி பயிற்சிகள் போன்றன வழங்கப்படும். அதனூடாக தொழில்முயற்சியாண்மை ஆற்றல்களை மேம்படுத்தவும், தமது வியாபாரங்களை விரிவாக்கம் செய்யவும் உதவியாக அமைந்திருக்கும். இந்த கற்கை வெற்றிகரமாக பூர்த்தி செய்யும்பட்சத்தில் சான்றிதழ் வழங்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கை பிரஜைகளுக்கு இதில் பங்கேற்க முடியும். NEDP இல் 200 பேருக்கு பங்கேற்கும் வாய்ப்புள்ளது. பங்குபற்றுனர்களுக்கு வியாபார வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்தை நாடு முழுவதிலும் கட்டியெழுப்புவதற்கு அவசியமான திறன்களை விருத்தி செய்து கொள்ள சிறந்த பிரத்தியேகமான வாய்ப்பாக இது அமைந்திருக்கும்.

மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகள் காணப்படுவதால், இந்த கற்கைக்கான விண்ணப்பங்களை மற்றும் ஆர்வமுள்ளவர்கள் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு கோரப்படுகின்றனர். விண்ணப்பிப்பதற்கு மற்றும் மேலதிக தகவல்களுக்கு www.unionb.com எனும் இணையத்தளத்தை பார்க்கவும் அல்லது 0117818181 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் அல்லது அருகிலுள்ள யூனியன் வங்கி கிளைக்கு விஜயம் செய்யவும்.

படம்: யூனியன் வங்கியின் சந்தைப்படுத்தல் உப தலைவர், திஷானி திசாநாயக்க

அறிமுகப்படுத்தப்படும் ZERO-DOWN: VIMAN ஜா-எலவில் புரட்சிகரமான வீட்டு உரிமைத் திட்டத்தை வழங்கும் John Keells Properties மற்றும் யூனியன் வங்கி

அறிமுகப்படுத்தப்படும் ZERO-DOWN: VIMAN ஜா-எலவில் புரட்சிகரமான வீட்டு உரிமைத் திட்டத்தை வழங்கும் John Keells Properties மற்றும் யூனியன் வங்கி

VIMAN ஜா-எல குடியிருப்புத் திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்ய விரும்புவர்களுக்கு ZERO-DOWN வீட்டு உரிமைத் திட்டத்தை வழங்குவதற்கான கூட்டாண்மை John Keells Properties (JKP) நிறுவனத்திற்கும் யூனியன் வங்கிக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வீட்டு உரிமைக்கான அணுகலை இலகுவாக்குவதில் இரண்டு தொழில்துறை முன்னணியாளர்கள் கொண்டுள்ள பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் இருந்து இந்த நிதித் தீர்வு உருவாகியிருப்பதுடன், இது VIMAN ஜா-எல குடியிருப்புத்திட்டத்தில் கொள்வனவு செய்ய விரும்புவர்கள் முன்பணம் செலுத்தும் சுமையின்றிக்கொள்வனவு செய்ய வசதியை ஏற்படுத்துகின்றது. ZERO-DOWN மூலம், யூனியன் வங்கி திட்ட நிதியில் 75% ஐ முற்பணமாக வழங்கும் என்பதுடன், பின்னர் கட்டம் கட்டமாக நிதி வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் வங்கியால் வழங்கப்பட்ட தொகைக்கு திட்ட காலத்தில் மாதாந்தம் சமமான தவணைகளை மட்டுமே செலுத்த வேண்டும்.

John Keells Properties நிறுவனம் மற்றும் யூனியன் வங்கியினால் இணைந்து வழங்கப்படும் ZERO-DOWN ஆனது வெறுமனே நிதித் தயாரிப்பு மாத்திரமன்றி, எப்போதும் இல்லாத அளவுக்கு VIMAN ஜா-எல திட்டத்தை அடையக்கூடியளவுக்கு ரியல் எஸ்டேட் துறையை மாற்றியமைக்கும் நோக்கத்துடன், அனைவருக்கும் வாய்ப்பு மற்றும் பாதுகாப்பை வழங்கும் உறுதிமொழியாகும். இளம் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் குடும்பங்கள் மத்தியில் நெகிழ்வுப்போக்கு மிக்க, மலிவான நிதியளிப்புக்கான தெரிவுகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், வீட்டுஉரிமையைப் பெற்றுக்கொள்ளக் கூடிய இந்த தனித்துவமான தீர்வு காலத்தின் தேவைக்கு ஏற்ற ஒன்றாகும். ZERO-DOWN திட்டத்திட்டமானது VIMAN ஜா-எல குடியிருப்புத்திட்டத்தில் சாத்தியமான வாய்ப்புகளை எந்தவித முன்கூட்டிய செலவுகளும் இல்லாமல் பாதுகாக்க உதவுகிறது. இது குடியிருப்பைக்கொள்வனவு செய்பவர்களைத் தடுக்கும் ஆரம்ப நிதித் தடைகளைத் தகர்ப்பதுடன், கொள்வனவு செய்பவர்கள் தங்கள் நிதித்திட்டத்தை தெளிவு மற்றும் நம்பிக்கையுடன் அணுகவும் இது உதவுகின்றது.

ZERO-DOWN திட்டமானது இலங்கையில் வீட்டின் உரிமையைப் பெற்றுக் கொள்வதற்கான தொலைநோக்கு அணுகுமுறையைப் பிரதிநிதித்துவம் செய்வதாக John Keells Properties நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலுக்கான தலைவரும், John Keells Group இன் பிரதித்தலைவருமான நதீம் ஷம்ஸ் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘குடியிருப்புங்களை வாங்குவதில் உறுதியாக இருக்கும் பலருக்கு முற்பணத்திற்கான செலவு அதைரியப்படுத்துவதாக அமைகின்றது. எனினும், ZERO-DOWN திட்டத்தின் ஊடாக VIMAN ஜா-எல திட்டத்தில் தொடர்மாடிக் குடியிருப்பொன்றை வாங்க விரும்புவர்களுக்கு நெகிழ்வான நிதித் தன்மையை ஏற்படுத்திக்கொடுக்கின்றோம். எமது அபிவிருத்தித்திட்டங்கள் ஊடாக மாத்திரமன்றி வீட்டின் உரிமையை மக்கள் பெற்றுக் கொள்வதற்கான வழிகளையும் ஏற்படுத்திக்கொடுப்பதன் மூலம் புதிய உலகத்தை உருவாக்குவது என்ற கோட்பாட்டில் John Keells Properties நிறுவனம் அர்ப்பணிப்புடன் இருப்பதை எடுத்துக் காட்டுகின்றது’ என்றார்.

‘உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ZERO-DOWN திட்டத்தை நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்துவதில் யூனியன் வங்கி பெருமை அடைகிறது’ என யூனியன் வங்கியின் சிரேஷ்ட உபதலைவர் நுகர்வோர் வங்கியியல் பிரிவு, சாயா ஜயவர்தன தெரிவித்தார். ‘இந்த முயற்சியானது முன்பயணத்தைச் செலுத்துவது என்ற நிதி நெருக்கடி இன்றி நிதி நெருக்கடியின்றி நெகிழ்வுத்தன்மை மற்றும் நம்பிக்கையுடன் VIMAN ஜா-எல திட்டத்தில் வீடொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும்’ என்றார்.

VIMAN ஜா-எல பற்றி

ஆறு ஏக்கர் விஸ்தீரணத்தைக் கொண்ட VIMAN ஜா-எல திட்டத்தில் 65% நிலம் திறந்தவெளி மற்றும் வசதிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதுடன், செப்டம்பர் 2023 இல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதன் அறிமுகத்திலிருந்து, வீட்டைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் முதலீட்டாளர்களை விரைவாக ஈர்த்தது. இதன் 1வது மற்றும் இரண்டாவது கட்டங்களில் உள்ள 80% அடுக்குமாடிக் குடியிருப்புக்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தத் தனித்துவமான சமூகம் எதனை வழங்குகின்றது என்பதைப் பார்ப்பதற்கான சரியான நேரம் இதுவாகும். ஜா-எலவின் மையப்பகுதியில் அமைந்துள்ள VIMAN ஜா-எல கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து வெறும் 10 நிமிடங்களில் கொழும்பு நகரத்திற்கு 30 நிமிட பயணத்தை எளிதாக்குகிறது. பசுமை மிக்க மத்திய தோட்டப்பகுதி, தியான கூடம், வெளிப்புற விளையாட்டு இடம், சிறுவர்கள் விளையாட்டு இடம், சைக்கிள் ஓட்டம் மற்றும் நடைபாதைக்கான இடம் உள்ளிட்ட 15 விசேட அம்சங்களையும் இது உள்ளடக்கியுள்ளது.

John Keells Properties பற்றி

John Keells Properties இலங்கையிலுள்ள மிகப்பெரிய ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களில் ஒன்றாகும். தரம், புதுமை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றிற்கான அர்ப்பணிப்புக்காக இந்நிறுவனம் அறியப்படுகின்றது. புதிய உலகத்தை உருவாக்குதல் என்ற அவர்களின் தொலைநோக்குப் பார்வையின் ஊடாக, இலங்கையில் நவீன வாழ்வை மறுவரையறை செய்யும் வெற்றிகரமான செயற்திட்டங்களுடன், John Keells Properties நவீன வாழ்வின் எல்லைகளைத் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

யூனியன் வங்கி பற்றி

யூனியன் வங்கியானது சில்லறை வணிகம், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் மற்றும் பெருநிறுவனப் பிரிவுகளுக்கு பரந்த அளவிலான நிதித் தீர்வுகளை வழங்கும் இலங்கையின் ஒரு முக்கிய தனியார் வணிக வங்கியாகும். அதன் வலுவான மூலதனத் தளம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கு பெயர் பெற்ற யூனியன் வங்கி, CG Corp Global இன் இணை நிறுவனமாகும், இது ஒரு முன்னணி பல்தேசிய நிறுவனம் என்பதுடன், நேபாளத்தில் Nabil வங்கியின் மிகப்பெரிய பங்குதாரர் ஆகும். யூனியன் வங்கி இலங்கை முழுவதும் 61 கிளைகளைக் கொண்டிருப்பதுடன், டிஜிட்டல் வங்கி, 24 மணி நேர அழைப்பு மையம் மற்றும் நாடு முழுவதும் ATM வலையமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடன், நிதிச் சேவைகளுக்கு வசதியான அணுகலை உறுதி செய்துவருகின்றது. யூனியன் வங்கியின் துணை நிறுவனங்களில் National Asset Management Limited மற்றும் UB Finance company Limited ஆகியவையும் அடங்குகின்றன.

VIMAN ஜா-எல குடியிருப்புத் திட்டத்திற்கான வீட்டு உரிமைத் திட்டம் குறித்த மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள என்ற இணையத்தளத்திற்கு விஜயம் செய்யவும் அல்லது John Keells Properties நிறுவனத்தை +94 706 062 062 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளவும்.

2024 மூன்றாம் காலாண்டு நிறைவில் யூனியன் வங்கி கடன்கள் மற்றும் முற்பண வழங்கல் பிரிவில் சிறந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது

2024 மூன்றாம் காலாண்டு நிறைவில் யூனியன் வங்கி கடன்கள் மற்றும் முற்பண வழங்கல் பிரிவில் சிறந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது

2024 செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த 9 மாத காலப்பகுதிக்கான நிதிசார் வினைத்திறனை யூனியன் வங்கி அறிவித்துள்ளது. அதன் பிரகாரம், சவால்கள் நிறைந்த சந்தைச் சூழலை கடந்து வரும் நிலையில், பிரதான பிரிவுகளில் குறிப்பிடத்தக்களவு மீட்சி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை வங்கி வெளிப்படுத்தியுள்ளது.

பிரதான நிதிசார் சிறப்புக்கூறுகள்

சந்தை வட்டி வீதங்களில் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் குறுகிய எல்லைப் பெறுமதிகளுக்கு முகங்கொடுத்த போதிலும், மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் சிறந்த மைல்கல்லை யூனியன் வங்கி எய்தியிருந்தது. வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் முற்பணங்கள் பிரிவில் வங்கி 22% எனும் உயர்ந்த அதிகரிப்பை வங்கி பதிவு செய்து, ரூ. 75,744 மில்லியனை எய்தியிருந்தது. மேலதிகமாக, வைப்புகள் உறுதியான 9% வளர்ச்சியை எய்தி ரூ. 96.328 மில்லியனாக பதிவாகியிருந்தது. அதனூடாக வாடிக்கையாளர் இருப்பை விரிவாக்கம் செய்வதற்கான வங்கியின் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

மொத்த சொத்துக்களின் பெறுமதி 2% இனால் அதிகரித்து ரூ. 142,474 மில்லியனாக பதிவாகியிருந்தது. அதனூடாக, வங்கியின் உறுதியான நிதிசார் நிலை பிரதிபலிக்கப்பட்டிருந்தது. மொத்த மூலதன போதுமை விகிதம் உறுதியானதாக பதிவாகியிருந்ததுடன், ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுக்கு மேலானதாக காணப்பட்டதுடன், யூனியன் வங்கியின் உறுதித் தன்மை மற்றும் நிதிசார் சுகாதாரம் ஆகியவற்றை வெளிப்படுத்தியிருந்தது.

வங்கியின் மொத்த நிகர வருமானம் 29% இனால் குறைந்து ரூ. 12,324 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய வருமானம் 26% இனால் குறைந்து ரூ. 3,573 மில்லியனாக பதிவாகியிருந்தது. தொழிற்பாடு சார் வினைத்திறனில் கவனம் செலுத்துவதற்கு வங்கிக்கு இந்த சவால்கள் வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தன. மொத்த தொழிற்பாட்டு செலவுகள் 5% இனால் மாத்திரம் அதிகரித்து ரூ. 4,032 மில்லியனாக பதிவாகியிருந்தது. அதனூடாக வங்கியினால் முன்னெடுக்கப்படும் வினைத்திறனான செலவு நிர்வாக மூலோபாயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

நிறைவடைந்த 9 மாத காலப்பகுதிக்கான வரிக்கு முந்திய இலாபம் ரூ. 358 மில்லியனாகும். வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 117 மில்லியனாக பதிவாகியிருந்தது. குழுமத்தின் செயற்பாடுகளும் இதே போக்கை வெளிப்படுத்தியிருந்ததுடன், வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 111 மில்லியனாக பதிவாகியிருந்தது.

மூலோபாய செயற்பாடுகள்

வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர் ஈடுபாடு ஆகியவற்றை இலக்காகக் கொண்டு யூனியன் வங்கியினால் பல்வேறு மூலோபாய செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. வங்கி தனது லீசிங் மற்றும் அடகுச்சேவை வியாபாரத்தை மீள அறிமுகம் செய்திருந்ததுடன், அதற்கு ஆதரவளிக்கும் வகையில் சந்தைப்படுத்தல் செயற்திட்டங்களை தனது நாடளாவிய கிளை வலையமைப்பில் முன்னெடுத்திருந்தது. புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்தத் திட்டம் அமைந்திருந்ததுடன், ஏற்கனவே காணப்படும் வாடிக்கையாளர்களுக்கு மேலும் பரந்த நிதிசார் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையிலும் அமைந்திருந்தது. மேலும், யூனியன் வங்கி, ஜோன் கீல்ஸ் CG Auto உடன் கைகோர்த்து, புதிய BYD மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய முன்வந்திருந்தது. அதனூடாக, நிலைபேறான போக்குவரத்து தெரிவுகளுக்கான வங்கியின் அர்ப்பணிப்பை உறுதி செய்திருந்தது. மேலும், தகவல் பாதுகாப்பு தொடர்பில் வங்கி பெருமளவு மைல்கல் சாதனையை எய்தியிருந்தது. PCSIDSS Ver 4.0 மற்றும் ISO 27001 சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்ட முதலாவதும் ஒரே உள்நாட்டு வங்கியாகவும் திகழ்கின்றது. வாடிக்கையாளர்களின் தரவுகளை பாதுகாத்தல் மற்றும் தொழிற்பாட்டு ஒன்றிணைப்பை மேம்படுத்தல் போன்றவற்றுக்கு யூனியன் வங்கி காண்பிக்கும் அர்ப்பணிப்பு இந்த சான்றிதழ்களினூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. USAID இனால் ஆதரவளிக்கப்படும் இலங்கையில் காலநிலை பின்பற்றல் செயற்திட்டத்துடனும் வங்கி கைகோர்த்திருந்தது. விவசாய மற்றும் சுற்றுலா துறைகளில் காலநிலை பின்பற்றல் தீர்வுகளுக்கான நிதி வசதிகளைப் பெற்றுக் கொடுக்க முன்வந்திருந்தது. மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டு, தேசிய தொழில்முயற்சியாண்மை நிகழ்ச்சித்திட்டத்தில் கைகோர்க்க முன்வந்திருந்தது. இது Union Bank School of Social Entrepreneurship (UBSSE) என்பதற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது.

யூனியன் வங்கி மைக்ரோ கார்ஸ் லிமிடெட் உடன் பங்குதாரர்கள்

யூனியன் வங்கி மைக்ரோ கார்ஸ் லிமிடெட் உடன் பங்குதாரர்கள்

யூனியன் வங்கி சமீபத்தில் மைக்ரோ கார்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது வாடிக்கையாளர்களுக்கு வசதியான குத்தகை வசதிகள் மற்றும் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.

யூனியன் வங்கியின் சிரேஷ்ட உப தலைவர் சாயா ஜயவர்தன, லீசிங் பிரிவின் தலைவர் கசுன் பாலசூரிய மற்றும் பொரளை கிளை முகாமையாளர் திலுக்ஷான் ஜெயக்கொடி மற்றும் யூனியன் வங்கியின் ஏனைய பிரதிநிதிகளுடன் பிரஷான் பெரேராவின் பணிப்பாளர் ரவிகா பெரேரா ஆகியோர் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. பொது முகாமையாளர் மற்றும் ஜேக்கப் நிஷாந்தன், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் மற்றும் Micro Cars Limited இன் பிரதிநிதிகள்.

யூனியன் வங்கி ப்ரைம் குழுமத்துடன் கைகோர்க்கிறது

யூனியன் வங்கி ப்ரைம் குழுமத்துடன் கைகோர்க்கிறது

யூனியன் வங்கி சமீபத்தில் புதிய வீடுதாரர்களுக்கு யூனியன் வங்கி வீட்டுக் கடன்கள் மூலம் நெகிழ்வான நிதி தீர்வுகளை வழங்க ப்ரைம் குழுமத்துடன் கைகோர்த்துள்ளது. யூனியன் வங்கி சிரேஷ்ட உப தலைவர் நுகர்வோர் வங்கியியல் தலைவர் சாயா ஜயவர்தன மற்றும் ப்ரைம் குழுமத்தின் நிறைவேற்று இயக்குநர்/ இயக்குநர்-கார்ப்பரேட் அலுவல்கள் நலிந்த ஹீனடிகலா முன்னிலையில் மற்றும் யூனியன் வங்கி மற்றும் ப்ரைம் குழுமத்தின் பிரதிநிதிகள் முன்னிலையில் இரு நிறுவனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) கையெழுத்திடப்பட்டது.

யூனியன் வங்கி தனது டிஜிட்டல் மாற்றியமைப்பு நிகழ்ச்சி நிரலின் அங்கமாக மேம்படுத்தப்பட்ட UBgo Mobile App ஐ அறிமுகம் செய்துள்ளது

யூனியன் வங்கி தனது டிஜிட்டல் மாற்றியமைப்பு நிகழ்ச்சி நிரலின் அங்கமாக மேம்படுத்தப்பட்ட UBgo Mobile App ஐ அறிமுகம் செய்துள்ளது

யூனியன் வங்கி தனது மேம்படுத்தப்பட்ட UBgo mobile app ஐ அறிமுகம் செய்துள்ளது. வங்கியின் டிஜிட்டல் மாற்றியமைப்பு நிகழ்ச்சி நிரலின் மற்றுமொரு முக்கிய அங்கமாக இந்த அறிமுகத்தை மேற்கொண்டுள்ளது. வாடிக்கையாளரை மையப்படுத்திய டிஜிட்டல் புத்தாக்கங்களினூடாக வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வங்கியின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளுக்கான எடுத்துக்காட்டாக இந்த மெருகேற்றம் அமைந்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட UBgo app இனூடாக, பெருமளவு உள்ளடக்கமான, பாதுகாப்பான மற்றும் பரிபூரண வங்கியியல் அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் பல புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பாவனையாளர்களுக்கு தமது யூனியன் வங்கி கணக்கை அல்லது யூனியன் வங்கி கணக்கில்லாத வாடிக்கையாளர்களுக்கு Justpay ஊடாக சுயமாக இந்த சேவையை செயற்படுத்திக் கொள்ள முடியும். உயர் நுட்பத்திறன் வாய்ந்த பயோமெட்ரிக் உறுதி செய்யும் செயன்முறையினூடாக, பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. app இனால் இதர யூனியன் வங்கி கணக்குகளிலிருந்து பணத்தை கோர முடியும் என்பதுடன், முதலீடு மற்றும் கடன் கணிப்பான்கள் போன்ற பயனுள்ள சாதனங்களை வழங்குகின்றது. தேசப்பட காட்டி வசதியுடனான புதிய உள்ளம்சத்தினால், அருகாமையில் காணப்படும்கிளைகள் மற்றும் ATM களை கண்டறிய முடியும் என்பதுடன், கிரெடிட் கார்ட்கள் மீது ஒப்பற்ற கட்டுப்பாட்டை வழங்கும் வகையில் கார்ட் முகாமைத்துவ வசதிகள் போன்றன அமைந்துள்ளன. 360-பாகை இலாகா முகாமைத்துவத்துடன், பாவனையாளர்களுக்கு தமது நிதி நிலை தொடர்பான பரிபூரண தோற்றப்பாட்டை பெற்றுக் கொள்ள முடியும். புதிய மின்னஞ்சல் பெட்டி வசதியினூடாக, வங்கியினுள் தொடர்பாடல் வழிமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இலகுவாக அணுகக்கூடிய வகையில் இலத்திரனியல் கூற்றுகளும் கிடைக்கின்றன.

UBgo app இனால் பணப் பரிமாற்றங்கள், கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள், கொடுப்பனவு முகாமைத்துவங்கள், QR கொடுப்பனவுகள், நாணய மாற்று வீதங்கள், வட்டி வீதங்கள், 24/7 வாடிக்கையாளர் சேவை மற்றும் BBC, CNN ஊடாக செய்திகளை பெறல், புகையிரத அட்டவணை, ஊக்குவிப்புத் திட்டங்கள் மற்றும் ATM/கிளை கண்டறிதல் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
யூனியன் வங்கியின் மூன்று கட்ட டிஜிட்டல் மாற்றியமைப்பு பயணத்தில் முதல் கட்டமாக இந்தமேம்படுத்தல் அமைந்துள்ளது. புதிய மெருகேற்றத்தில் புதிய UI/UX, மேம்படுத்தப்பட்ட பயோமெட்ரிக் பாதுகாப்பு மற்றும் மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க உள்ளம்சங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டங்களில், டிஜிட்டல் கணக்கு ஆரம்பிப்பு, மேம்படுத்தப்பட்ட கொடுப்பனவு தெரிவுகள் மற்றும் பண டோக்கன் மயமாக்கம் போன்றவற்றுடன், AI மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் வங்கிச் சேவைகள் போன்றன அடங்குகின்றன.

யூனியன் வங்கியின் டிஜிட்டல் வங்கிச் சேவைகளுக்கான உப தலைவர் மனிஷ பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “மேம்படுத்தப்பட்ட UBgo app இன் அறிமுகத்துடன், எமது டிஜிட்டல் மாற்றியமைப்பு பயணத்தில் முக்கியமான படியை நாம் முன்னெடுத்துள்ளோம். எமது வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற, பாதுகாப்பான மற்றும் புத்தாக்கமான வங்கியியல் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பது எமது இலக்காகும். இந்த மெருகேற்றம் ஆரம்பம் மட்டுமே. எமது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்து விஞ்சுவது தொடர்பில் தொடர்ச்சியாக எமது சேவைகளை மேம்படுத்த எம்மை அர்ப்பணித்துள்ளோம்.” என்றார்.

யூனியன் வங்கியின் UBgo app ஐ தற்போது App Store மற்றும் Google Play இல் டவுன்லோட் செய்து கொள்ளலாம். புதிய உள்ளம்சங்கள் மற்றும் டிஜிட்டல் மாற்றியமைப்பு பயணம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு பார்வையிடவும் www.unionb.com

தேசிய தொழில்முயற்சியாண்மை விருத்தி நிகழ்ச்சித் திட்டத்துக்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் யூனியன் வங்கி கைகோர்ப்பு

தேசிய தொழில்முயற்சியாண்மை விருத்தி நிகழ்ச்சித் திட்டத்துக்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் யூனியன் வங்கி கைகோர்ப்பு

தேசிய தொழில்முயற்சியாண்மை விருத்தி நிகழ்ச்சித் திட்டத்தை (NEDP) முன்னெடுப்பதற்காக மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் தேசிய புத்தாக்க முகவர் அமைப்பு ஆகியவற்றுடன் யூனியன் வங்கி புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதனூடாக, இலங்கையின் தொழில்முயற்சியாளர்களாக திகழும் நோக்கில் செயலாற்றும், சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மைகள் மற்றும் இளைஞர்களுக்கு வலுவூட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. யூனியன் வங்கியின் தவிசாளர் நிர்வாணா சௌத்ரி, பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் ரொட்ரிகோ மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் சார்பாக உப வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர். என். டி. குணவர்தன ஆகியோரின் முன்னிலையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

சமூக தொழில் முயற்சியாளர்களுக்கு நிதி வசதிகளுக்கு அத்தியாவசிய அணுகலை வழங்கி, கட்டியெழுப்பல், ஆதரவளித்தல் மற்றும் ஊக்குவிக்கும், யூனியன் வங்கியின் சமூக தொழில்முயற்சியாண்மை பாடசாலையின் (UBSSE) நோக்கத்துடன் பொருந்தும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. இந்த மூலோபாய பங்காண்மை என்பது, நேபாளத்தின் மாபெரும் தனியார் வணிக வங்கியான CG Corp Global Group இன் நபில் வங்கியின் புகழ்பெற்ற தொழில்முயற்சியாண்மை விருத்தி நிகழ்ச்சித்திட்டமான NabilSSE இன் எதிர்பார்ப்புகளுக்கமைவானதாக அமைந்துள்ளது. யூனியன் வங்கியின் பிரதான பங்குதாரராக CG Corp Global Group திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

NEDP சான்றிதழ் கற்கையினூடாக, பங்கேற்பவர்களுக்கு தமது சமூக நிறுவனங்களை அறிமுகம் செய்து கட்டியெழுப்பிக் கொள்வதற்கு அவசியமான அறிவு மற்றும் திறன்களை வழங்குவதாக அமைந்துள்ளது. இலங்கையின் 18 வயதுக்கு மேற்பட்ட குடியுரிமை பெற்றவர்களுக்கு இந்த திட்டத்தில் பங்கேற்க முடியும். சமூக தொழில்முயற்சியாண்மை சிந்தனைகளை கட்டியெழுப்பி, அதனூடாக மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்க்கும் ஆர்வலர்களுக்கு இந்தத் திட்டம் உகந்ததாக அமைந்திருக்கும். இந்த கற்கைகளை வழங்குவதற்கு மொரட்டுவ பல்கலைக்கழகம் முன்வந்துள்ளதுடன், யூனியன் வங்கி மற்றும் தேசிய புத்தாக்க முகவரமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுக்கும். இந்தப் பங்காண்மையானது, இலங்கையில் தொழில்முயற்சியாண்மை மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான யூனியன் வங்கியின் அர்ப்பணிப்பை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

யூனியன் வங்கியின் சந்தைப்படுத்தல் உப தலைவி திஷானி திசாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “இந்தத் திட்டத்தில் கைகோர்ப்பதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம், தொழில்முயற்சியாண்மையை கட்டியெழுப்புவதில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் பல்வேறு பிரிவுகளுக்கு யூனியன் வங்கி ஆதரவளிக்கும். அதில் தொழிற்பாட்டு செலவுகள், நிபுணர் செலவுகள் மற்றும் வசதிகள் மேம்படுத்தல் போன்றன அடங்கியுள்ளன. மேலும், எமது நாடளாவிய ரீதியில் காணப்படும் கிளை வலையமைப்பினூடாக, நாடு முழுவதையும் சேர்ந்த விண்ணப்பதாரிகளை சென்றடைவதற்கு எதிர்பார்ப்பதுடன், அதனூடாக இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் பரந்த அணுகலை உறுதி செய்யக்கூடியதாக இருக்கும். மூலோபாய பங்காண்மைகள் மற்றும் பரிபூரண ஆதரவு போன்றவற்றினூடாக, எதிர்கால தொழில்முயற்சியாளர்களின் விருத்திக்கு பங்களிப்பு வழங்க நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.” என்றார்.

UBSSE நிகழ்ச்சித் திட்டமானது, இலங்கையின் தொழில்முயற்சியாண்மை சூழல் கட்டமைப்பை மேம்படுத்துவதில் முக்கிய படியை ஏற்படுத்தவும், எதிர்பார்ப்புகள் நிறைந்த தொழில்முயற்சியாளர்களுக்கு தமது இலக்குகளை எய்தவும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.

படம்

யூனியன் வங்கியின் தவிசாளர் நிர்வாணா சௌத்ரி, பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் ரொட்ரிகோ, சந்தைப்படுத்தல் உப தலைவி திஷானி திசாநாயக்க மற்றும் கூட்டாண்மை மற்றும் டிஜிட்டல் தொடர்பாடல்கள் முகாமையாளர் நிலுஷா வனசிங்க.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் என்.டி. குணவர்தன, வணிக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர். ஜி.டி. சமரசிங்க, தொழிற்துறை முகாமைத்துவ திணைக்களத்தின் தலைமை அதிகாரி கலாநிதி. காயத்ரி குருப்பு, நிகழ்ச்சி ஒழுங்கிணைப்பாளர் பேராசிரியர். ரொஹான் முனசிங்க மற்றும் தேசிய புத்தாக்க முகவரமைப்பின் பிரதம புத்தாக்க அதிகாரி பேராசிரியர். அஜித் டி அல்விஸ்.

யூனியன் வங்கி தனது புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக தில்ஷான் ரொட்ரிகோ அவர்களை நியமித்துள்ளது

யூனியன் வங்கி தனது புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக தில்ஷான் ரொட்ரிகோ அவர்களை நியமித்துள்ளது

யூனியன் வங்கி தனது புதிய பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரியாக திரு. டில்ஷான் ரொட்ரிகோ அவர்களை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. 2024 ஆகஸ்ட் 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வங்கியியல் துறையில் இரண்டு தசாப்த காலத்துக்கு மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள ரொட்ரிகோ அவர்களின் நியமனம், வங்கியின் மெருகேற்றிடும் மாற்றத்துக்கு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவரின் தலைமைத்துவத்தின் கீழ், இலங்கையின் முன்னேற்றகரமான வங்கியியல் துறையில் உயர்ந்த நிலைக்கு செல்வதற்கு எதிர்பார்ப்பதுடன், டிஜிட்டல் மயமாக்கல் யுகத்தில், புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய மூலோபாயங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அடையாளமாகத் திகழ்கின்றது.

திரு. ரொட்ரிகோ கருத்துத் தெரிவிக்கையில், “வங்கியியல் புத்தாக்கம் மற்றும் சேவைச் சிறப்பு ஆகியவற்றில் முன்னிலையில் திகழ்வதற்கு யூனியன் வங்கி தன்னை அர்ப்பணித்துள்ளது. எமது மூலதன வலிமையை பயன்படுத்தி, வளர்ச்சியை எய்துவதுடன், நுகர்வோர் மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை துறைகளுக்கு எமது பிரசன்னத்தை மேம்படுத்துவது போன்றவற்றில் நாம் அதிகளவு கவனம் செலுத்துவோம். நாடு முழுவதிலும் காணப்படும் எமது கிளை வலையமைப்பினூடாக நாம் உச்ச பயனைப் பெற்று, எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் எமது டிஜிட்டல் ஆற்றல்களை மாற்றியமைக்கவும் எதிர்பார்க்கின்றோம். யூனியன் வங்கி சமூக தொழில்முயற்சியாண்மை பாடசாலை (UBSSE) என்பதனூடாக, நிலைபேறான தொழில்முயற்சியாண்மையை கட்டியெழுப்புவதற்கு யூனியன் வங்கி எதிர்பார்க்கின்றது. நேபாள கோடீஸ்வரரான கலாநிதி. பினோத் சௌத்ரி அவர்களின் வழிகாட்டலில் இயங்கும், யூனியன் வங்கியின் பிரதான பங்காளரான CG Corp Global குரூப்பின் நோக்கத்துடன் பொருந்தியதாக வங்கியின் மூலோபாய முன்னுரிமைகள் அமைந்திருக்கும். இலங்கையின் பொருளாதாரம் அண்மைக் காலத்தில் உறுதித் தன்மையை எய்தி வருகின்றமையானது, யூனியன் வங்கிக்கு அதன் வளர்ச்சி இலக்குகளை எய்துவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்தியுள்ளது. உற்பத்தி பொருளாதாரம், பெறுமதி சேர் ஏற்றுமதிகள் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கவர்தல் போன்றவற்றை வலிமைப்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.” என்றார்.

யூனியன் வங்கியின் புதிய பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரியாக திரு. ரொட்ரிகோ அவர்களை வரவேற்று வங்கியின் தவிசாளர் திரு. நிர்வாணா சௌத்ரி கருத்துத் தெரிவிக்கையில், “அடுத்த 3 – 5 வருட காலப்பகுதியினுள் இலங்கையின் சிறந்த ஐந்து வங்கிகளில் ஒன்றாக யூனியன் வங்கியை தரமுயர்த்துவதற்கு சிறந்த வகையில் பொருத்தமானதாக தில்ஷானின் அனுபவம் மற்றும் டிஜிட்டல் மாற்றியமைப்புக்கான அர்ப்பணிப்பு போன்றன அமைந்துள்ளன. பங்குதாரர்களுக்கு பெறுமதி சேர்ப்பது மற்றும் எமது மூலோபாய இலக்குகளை பூர்த்தி செய்வது போன்றவற்றில் அவர்களின் தலைமைத்துவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கும்.” என்றார்.

வங்கியியல், காப்புறுதி, முதலீட்டு வங்கியியல் மற்றும் ஆடைத் தொழிற்துறை போன்ற பல்வேறு துறைகளிலிருந்து பெருமளவு அனுபவத்தை திரு. தில்ஷான் ரொட்ரிகோ கொண்டுள்ளார். அவர் இறுதியாக ஹற்றன் நஷனல் வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் மற்றும் பிரதம செயற்பாட்டு அதிகாரியாக செயலாற்றியிருந்தார். HNB ஃபினான்ஸ் பிஎல்சி மற்றும் லங்கா ஃபினான்ஷியல் பியுரோ ஆகியவற்றின் தவிசாளராகவும், HNB அசூரன்ஸ் பிஎல்சி மற்றும் கார்டியன் அக்குவிட்டி மனேஜ்மன்ட் லிமிடெட் ஆகியவற்றின் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் பணிப்பாளராக இவர் பணியாற்றுவதுடன், இலங்கை பணிப்பாளர்கள் நிறுவகம் (SLID) மற்றும் ஏசியன் பாங்கர்ஸ் அசோசியேஷன் ஆகியவற்றுக்கும் பங்களிப்பு வழங்கியுள்ளார். ஐக்கிய இராஜ்ஜியத்தின் Cranfield பல்கலைக்கழகத்திலிருந்து MBA பட்டத்தைப் பெற்றுள்ளதுடன், பட்டய முகாமைத்துவ கணக்காளர் நிறுவகம் (FCMA) மற்றும் பட்டய சான்றளிக்கப்பட்ட கணக்காளர்கள் சம்மேளனம் (FCCA) ஆகியவற்றின் அங்கத்துவத்தையும் பெற்றுள்ளார்.

படங்கள்:
தில்ஷான் ரொட்ரிகோ, பணிப்பாளர் /பிரதம நிறைவேற்று அதிகாரி, யூனியன் வங்கி

யூனியன் வங்கியின் Digital Zone தற்போது புறக்கோட்டையில்

யூனியன் வங்கியின் Digital Zone தற்போது புறக்கோட்டையில்

யூனியன் வங்கி தனது புதிய digital zone ஐ கொழும்பு புறக்கோட்டை பகுதியில் திறந்துள்ளது. இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு 24/7 ஸ்மார்ட் வங்கியியல் சேவைகளை அனுபவிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வங்கியின் தொடர்ச்சியான டிஜிட்டல் மேம்படுத்தல் செயற்திட்டங்களின் அங்கமாக இந்த புதிய அறிமுகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புறக்கோட்டை கிளையின் பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுடன், Zone 1A வலய தலைமை அதிகாரி கசுன் டி சில்வா மற்றும் Trade Hub பிரிவு தலைமை அதிகாரி பிராங்க் நேசராஜா ஆகியோர் இந்த அறிமுக நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

யூனியன் வங்கியின் பாங்கசூரன்ஸ் அணிக்கு, யூனியன் அஷ்யூரன்ஸ் டயமன்ட் விருதுகள் 2023 நிகழ்வில் உயர்ந்த கௌரவிப்பு

யூனியன் வங்கியின் பாங்கசூரன்ஸ் அணிக்கு, யூனியன் அஷ்யூரன்ஸ் டயமன்ட் விருதுகள் 2023 நிகழ்வில் உயர்ந்த கௌரவிப்பு

பாங்கசூரன்ஸ் துறையில் யூனியன் அஷ்யூரன்ஸ் டயமன்ட் விருதுகள் என்பது மிகவும் உயர்ந்த கௌரவிப்பாக கருதப்படுவதுடன், இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் யூனியன் வங்கியின் பாங்கசூரன்ஸ் அணியினர் உயர்ந்த கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டனர். ‘Unbreakable Brilliance’ (தகர்க்க முடியாத சிறப்பு) எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், 85 க்கும் அதிகமான வெற்றியாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், பெறுமதி வாய்ந்த பணப்பரிசுகளும், வெளிநாட்டு சுற்றுப் பயண வாய்ப்புகளும் வழங்கப்பட்டிருந்தன.

டயமன்ட் விருது பெற்றுக் கொண்டவர்களில் லக்சிக ஹெதிகல்ல (பொரளை), சுமித் மன்னபெரும (குளியாப்பிட்டிய) மற்றும் ராஜன் சண்முகேஸ்வரன் (கொட்டாஞ்சேனை) ஆகியோர் அதிகளவு பரிந்துரைப்புகளை மேற்கொண்டு வருமானமீட்டியிருந்தமைக்காக அடங்கியிருந்தனர். CEO’s Lounge தனிநபர் விருதுகளை, லக்சிக ஹெதிகல்ல (பொரளை), சுமித் மன்னபெரும (குளியாப்பிட்டிய) மற்றும் டெவொன் ஜோசப் ரெபெர்ட் (கொள்ளுப்பிட்டி – எலைட் சேர்கிள்) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

சிறந்த வலய முகாமையாளருக்கான விருதை சமிந்த பெர்னான்டோ (Zone 1B) வென்றதுடன், வலய முகாமையாளர் பிரிவில், உயர் கட்டண வருமான உருவாக்கத்துக்கான விருதை கசுன் டி சில்வா (Zone 1A) பெற்றுக் கொண்டார். வருடாந்த ஷீல்ட் சம்பியன் விருதை, புறக்கோட்டை கிளை வெற்றியீட்டியது. டயமன்ட் க்ளப் விருதுகளின் உயர்ந்த வெகுமதிகளை, வரகாபொல, குளியாப்பிட்டிய, கொட்டாஞ்சேனை, மொரட்டுவ, நாவல மற்றும் பொரளை கிளைகள் தமக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த ANBP இலக்குகளின் 150% க்கு அதிகமான பெறுமதிகளை எய்திய சாதனைகளுக்கேற்பவும், கட்டுப்பண தொடர்ச்சித்தன்மை மற்றும் காப்புறுதிகளின் எண்ணிக்கை போன்றவற்றுக்கமையவும் பெற்றுக் கொண்டன.

யூனியன் வங்கியின் புதிய டிஜிட்டல் வலயங்களுடன் டிஜிட்டல் வங்கியியல் அனுபவம் மேம்படுத்தல்

யூனியன் வங்கியின் புதிய டிஜிட்டல் வலயங்களுடன் டிஜிட்டல் வங்கியியல் அனுபவம் மேம்படுத்தல்

டிஜிட்டல் வங்கியியல் சேவைகளினூடாக வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் சௌகரியம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில், யூனியன் வங்கி தனது முதலாவது டிஜிட்டல் வலயத்தை, கொழும்பு 3இல் அமைந்துள்ள தனது தலைமையகத்தில் அறிமுகம் செய்துள்ளது. அதனூடாக வாடிக்கையாளர்களுக்கு 24/7 நேரமும் ஸ்மார்ட் வங்கிச் சேவைகளை அனுபவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வங்கியின் டிஜிட்டல் மாற்றியமைப்பு மூலோபாயத்துக்கமைய, நீடித்த சௌகரியம் மற்றும் ஒப்பற்ற வங்கியியல் அனுபவங்களை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் வகையில், எதிர்வரும் காலங்களில் இது போன்ற டிஜிட்டல் வலயங்களை முக்கியமான கிளைப் பகுதிகளில் நிறுவுவதற்கு வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

டிஜிட்டல் வலயங்களில் தன்னியக்க டெலர் இயந்திரங்கள் (ATM), பண மீள்-சுழற்சி இயந்திரங்கள் (CRM) மற்றும் காசோலை வைப்புகள், கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள் மற்றும் பலவற்றுக்கான தன்னியக்கமயமான வசதிகள் போன்றன அடங்கியிருக்கும். இவற்றினூடாக, அத்தியாவசிய வங்கிச் சேவைகளாக கருதப்படும் பண வைப்புகள், பண மீளப் பெறுகைகள், பணப்புழக்கமில்லா வைப்புகள், யூனியன் வங்கிக் கணக்குகளுக்கான பணப் பரிமாற்றங்கள் போன்றவற்றுடன், யூனியன் வங்கி கடன் அட்டைகளுக்கான கொடுப்பனவுகளுடன், கணக்கு மீதி விவரங்களை அறிந்து கொள்ளல் போன்றவற்றை எந்நேரத்திலும் மேற்கொள்ளக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. “வாழ்க்கையை மெருகேற்றிடும் மாற்றம்” எனும் வங்கியின் தொனிப்பொருளுக்கமைய, பெறுமதி சேர் செயற்பாடுகளினூடாக வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் சௌகரியத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும்.

யூனியன் வங்கி, இணைய வங்கிச் சேவையை இலங்கையில் முதன் முறையாக அறிமுகம் செய்த வங்கியாக, 90 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் டிஜிட்டல் வங்கியியல் அனுபவத்தை முதன்முறையாக ஏற்படுத்தியிருந்தது. வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் வங்கியியல் சௌகரியத்தை மேம்படுத்தும் நவீன வசதிகளைக் கொண்ட UBgo மொபைல் app அறிமுகம் மற்றும் நவீன தொழில்நுட்பம், ஒன்றிணைப்பு மற்றும் டிஜிட்டல் ஆற்றல்களுடனான தொழிற்துறையின் முன்னணி பண முகாமைத்துவ தீர்வான கூட்டாண்மை மற்றும் SME வாடிக்கையாளர்களுக்கான BizDirect அறிமுகம் போன்றவற்றினூடாக தனது டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளின் பிரசன்னத்தை தொடர்ந்தும் வியாபித்திருந்தது. பரிபூரண டிஜிட்டல் மாற்றியமைப்பு செயற்பாடுகளுக்கு வலுவூட்டும் வகையில் உறுதியான தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை வங்கி தொடர்ந்தும் மேற்கொண்ட வண்ணமுள்ளது.

படம்: யூனியன் வங்கி தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ள டிஜிட்டல் வலயம்

பிரத்தியேகமான வங்கியியலில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் யூனியன் வங்கி Elite Circle

பிரத்தியேகமான வங்கியியலில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் யூனியன் வங்கி Elite Circle

வாடிக்கையாளர்களின் பிரத்தியேகமான தேவைகளுக்கு பொருந்தும் வகையில் புதிய அம்சங்களுடன் “யூனியன் வங்கி Elite Circle” தீர்வை யூனியன் வங்கி அண்மையில் மீள அறிமுகம் செய்துள்ளது. இந்த மெருகேற்றத்துடனான மீள அறிமுகத்தினூடாக வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான வங்கியியல் அனுபவத்துக்கான சொகுசையும், வெகுமதிகளுடான அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட தீர்வு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “வாழ்க்கையின் சிறந்த அம்சங்கள், உங்களின் வங்கிக் கொடுக்கல் வாங்கல்களிலும் தொடர வேண்டும்” எனும் தொனிப் பொருளில் ஊக்குவிப்புத் திட்டமொன்றை வங்கி அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.

வங்கியின் பிரத்தியேகமான உறவு பேண் முகாமையாளர்களினூடாக, பிரத்தியேகமான வங்கியியல் மற்றும் சொத்து முகாமைத்துவம் முதல் நிபுணத்துவ ஆலோசனைகள் வரை பரந்தளவு நிதித் தீர்வுகள் மற்றும் சேவைகள் வழங்கப்படுவதுடன், பிரத்தியேகமான சேவையின் அடையாளங்கள் மீள உறுதி செய்யப்படுகின்றன. கொழும்பின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள பிரத்தியேகமான யூனியன் வங்கி Elite Circle சென்ரரினூடாகவும், கிளைகளில் காணப்படும் பிரத்தியேகமான பகுதிகளினூடாக அங்கத்தவர்களுக்கு அதியுயர் சௌகரியம் ஏற்படுத்தப்படுகின்றமை உறுதி செய்யப்படுகின்றது.

முதலீடுகள் மற்றும் கடன்களில் விசேட வட்டி வீதங்கள், விசேட கட்டணங்கள், பாதுகாப்பு பெட்டக வைப்புகளுக்கு விசேட கட்டணங்கள், காப்புறுதித் தீர்வுகள் போன்றன அடங்கலாக விசேட விலையிடல்கள் மற்றும் பெறுமதி சேர் சேவைகள் மற்றும் முதலீடுகளின் மீதான அவசர நிதியளிப்புத் தெரிவுகளை அணுகும் வசதி மற்றும் பல அம்சங்கள் போன்றன அடங்கியுள்ளன. அங்கத்தவர்களுக்கு முதலீட்டு மற்றும் ஆலோசனை தெரிவுகளுக்கான பரந்தளவு தெரிவுகளை பெற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்தி யூனியன் வங்கி Elite Circle இனால், வரி மற்றும் சட்ட அம்சங்கள் தொடர்பில் நிபுணத்துவ ஆலோசனை சேவைகள் மற்றும் அதன் நஷனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிடெட் ஊடாக நிதி முகாமைத்துவ சேவைகள் போன்றன வழங்கப்படுகின்றன.

யூனியன் வங்கியின் சர்வதேச VISA டெபிட் கார்ட் மற்றும் யூனியன் வங்கி சிக்னேச்சர் கிரெடிட் கார்ட் போன்றவற்றினூடாக சர்வதேச அணுகல் மற்றும் சௌகரியம் ஆகியன மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், வங்கியின் டிஜிட்டல் கட்டமைப்புகளினூடாக பரந்தளவு வங்கியியல் சேவைகளை அணுகக்கூடிய வகையில் இணைப்பில் இருப்பதும் இலகுவாக்கப்பட்டுள்ளது. வெகுமதிகளின் அங்கமாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் லோன்ஞ் பகுதியில் பல இலவச வசதிகளை அனுபவிக்கும் வசதியும் அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. யூனியன் வங்கி Elite Circle அங்கத்தவர்களுக்கு சிறந்த டீல்கள் மற்றும் விலைக்கழிவுகள் போன்றன வழங்கப்பட்டுள்ளன. இதில் Allianz மற்றும் Fairfirst ஆகிய நிறுவனங்களிடமிருந்து சுகாதார மற்றும் ஆரோக்கிய காப்புறுதி அனுகூலங்கள் அடங்குகின்றன. கிரெடிட் கார்ட்களின் மீது வருடம் முழுவதிலும் பரந்தளவு விற்பனை நிலையங்களிலிருந்து 0% இலகு தவணை முறையில் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விற்பனை வங்கியியல் பிரிவின் சிரேஷ்ட உப தலைவர் சாயா ஜயவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் வங்கியின் Elite Circle என்பது, பிரத்தியேகமான வாடிக்கையாளர்களின் பரந்தளவு தேவைகளை இலகுவாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட விசேடமான வங்கியியல் தீர்வாகும். புதிதாக மேம்படுத்தப்பட்ட யூனியன் வங்கி Elite Circle இனூடாக, சேவை மட்டங்களை மேம்படுத்துவதில் வங்கியின் நோக்கம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர் உறவு பேண் முகாமைத்துவத்தில் அதிகளவு அக்கறை செலுத்தி, பிரத்தியேகமான வங்கியியல் அனுபவத்தை மாற்றியமைப்பதிலும், மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய நிதித் தீர்வுகளை வழங்குவதிலும் புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்றார்.

படம் – சாயா ஜயவர்தன, சிரேஷ்ட உப தலைவர் – விற்பனை வங்கியியல் பிரிவு.

யூனியன் வங்கியின் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரியாக தில்ஷான் ரொட்ரிகோ நியமனம்

யூனியன் வங்கியின் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரியாக தில்ஷான் ரொட்ரிகோ நியமனம்

யூனியன் வங்கியின் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரியாக தில்ஷான் ரொட்ரிகோ நியமிக்கப்பட்டுள்ளதாக யூனியன் வங்கி அறிவித்துள்ளது. 2024 ஜனவரி 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வங்கியியல் துறையில் இரு தசாப்த காலங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டிருக்கும் டில்ஷான் ரொட்ரிகோ கொண்டுள்ளார். முன்னர் ஹற்றன் நஷனல் வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர்/பிரதம செயற்பாட்டு அதிகாரி எனும் பதவியை இவர் வகித்திருந்தார். அதன் போது மத்தியசெயலாக்கம், தன்னியக்கமயமாக்கம், வெளியாள் சேவை மற்றும் பயிற்சிகளினூடாக வினைத்திறன்களை அங்கிகரித்தல் மற்றும் சிக்கன முறையில் தெரிவுகளை அறிமுகப்படுத்தல் போன்றவற்றை இவர் மேற்கொண்டிருந்தார்.

வங்கியியல், காப்புறுதி, முதலீட்டு வங்கியியல் மற்றும் ஆடைத் தொழிற்துறை போன்ற பல்வேறு துறைகளில் பல சிரேஷ்ட நிலைகளை ரொட்ரிகோ வகித்திருந்தார். இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் பணிப்பாளராக இவர் தற்போது செயலாற்றுகின்றார். HNB ஃபினான்ஸ் பிஎல்சி மற்றும் லங்கா ஃபினான்ஷியல் சேர்விசஸ் பியுரோ ஆகியவற்றின் தவிசாளராக செயலாற்றியுள்ளார். HNB அஷ்யூரன்ஸ் பிஎல்சி மற்றும் கார்டியன் அக்குவிட்டி மனேஜ்மன்ட் லிமிடெட் ஆகியன அடங்கலாக பல முன்னணி கூட்டாண்மை நிறுவனங்களில் பல பணிப்பாளர் நிலைகளை வகித்துள்ளார். தற்போது இலங்கை பணிப்பாளர் நிறுவகத்தின் (SLID) சம்மேளனங்களில் ரொட்ரிகோ அங்கம் வகிப்பதுடன், 2011/12 மற்றும் 2019/20 காலப்பகுதிகளில் ஆசிய வங்கியாளர் சம்மேளனம் (தாய்வான்) கொள்கை ஆலோசனை செயற்குழுவின் தவிசாளராகவும் பணியாற்றியுள்ளார். CIMA, ACCA மற்றும் இடர் நிபுணத்துவ அமர்வு ஆகியவற்றிலும் இவர் அங்கம் வகித்திருந்ததுடன், இரு தவணைகள் ACCA மற்றும் இடர் நிபுணத்துவ அமர்வின் தலைவராகவும் இயங்கியுள்ளார். ஒரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக, பல்வேறு பட்டப்படிப்பு மற்றும் பட்டப் பின்படிப்பு (CIMA, ACCA, PIM MBA) போன்றவற்றுக்கு விரிவுரையாளராக செயற்பட்டுள்ளார். Cranfield University UK, FCMA UK மற்றும் FCCA UK இன் முதுமானிப் பட்டத்தையும் ரொட்ரிகோ பெற்றுள்ளார்.

யூனியன் வங்கியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி இந்திரஜித் விக்ரமசிங்க இந்த புதிய நியமனம் தொடர்பில் குறிப்பிடுகையில், “யூனியன் வங்கியின் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரியாக டில்ஷான் ரொட்ரிகோவை வரவேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். வங்கியின் அடுத்த கட்ட வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் டில்ஷான் முக்கிய பங்காற்றுவார். நிதிச் சேவைகள் துறையில், அவரின் பெருமளவு தலைமைத்துவ அனுபவம் எமது தலைமைத்துவ அணிக்கு பெறுமதி சேர்க்கும் அம்சமாக அமைந்திருக்கும்.” என்றார்.

CG Corp Global group இன் உறுதுணையுடன் இயங்கும் யூனியன் வங்கி, புத்தாக்கமான நிதிசார் தீர்வுகளை வழங்குவதற்கு தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்ற வங்கியியல் பங்காளர் எனும் தனது நிலையையும் பேணுகின்றது.

படம்.
யூனியன் வங்கி பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் ரொட்ரிகோ.

வங்கிகள்

  • Amana Bank PLC
  • Bank of Ceylon
  • Cargills Bank Ltd
  • Citibank
  • Commercial Bank of Ceylon PLC
  • DFCC Bank
  • Hatton National Bank PLC
  • HDFC Bank
  • HSBC Ltd
  • National Development Bank PLC
  • Nations Trust Bank
  • Pan Asia Banking Corporation
  • People’s Bank
  • Public Bank Berhard
  • Sampath Bank PLC
  • Seylan Bank PLC
  • Standard Chartered Bank

நிறுவனங்கள்

  • Merchant Bank of Sri Lanka Finance
  • Central Finance PLC
  • Commercial Leasing and Finance PLC
  • HNB Finance
  • LB Finance PLC
  • People’s Leasing and Finance PLC
  • Softlogic Finance Plc
  • Singer Finance (Lanka) PLC