0117 818181

யூனியன் வங்கி தனது இரண்டாவது Elite Circle Lounge ஐ யாழ்ப்பாணக் கிளையில் திறந்துள்ளது

யூனியன் வங்கி தனது இரண்டாவது Elite Circle Lounge ஐ யாழ்ப்பாணக் கிளையில் திறந்துள்ளது

யூனியன் வங்கி தனது இரண்டாவது Elite Circle Lounge ஐ யாழ்ப்பாணக் கிளையில் அண்மையில் திறந்து வைத்தது. அதனூடாக வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான Elite Circle வசதிகளை வழங்கும் தனது சேவைகளை மேலும் விரிவாக்கம் செய்துள்ளது. தொடர்பாடல்களை கட்டியெழுப்புவது மற்றும் வணிக சந்திப்புகளை முன்னெடுப்பதற்கான பிரத்தியேகமான பகுதியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Lounge, வாடிக்கையாளர்களுக்கு தொடர்பாடல்களை ஏற்படுத்தி, ஈடுபாட்டைக் கொண்டிருப்பதற்கு பொருத்தமான சூழலை வழங்குகின்றது. வைபவ ரீதியாக இடம்பெற்ற இந்த திறப்பு விழாவில், பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டதுடன், Lounge பகுதியின் வசதிகளை அனுபவிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றனர். வங்கியின் Elite Circle வழங்கலில் யாழ்ப்பாண Lounge பகுதி புதிய உள்ளடக்கமான அமைந்திருப்பதுடன், கொழும்பு 3 கிறீன் பாத் பகுதியில் அமைந்துள்ள Elite Circle Lounge பகுதிக்கு மேலதிகமான உள்ளடக்கமாகவும் திகழ்கின்றது. பிரத்தியேகமான சேவை, மேம்படுத்தப்பட்ட சௌகரியம் மற்றும் உயர் வங்கியியல் அனுபவம் ஆகியவற்றை பெற்றுக் கொடுப்பதற்கான வங்கியின் அர்ப்பணிப்பை இந்த விரிவாக்கம் மேலும் உறுதி செய்துள்ளது.

படம் : யாழ்ப்பாணக் கிளையில் Elite Circle Lounge திறப்பு நிகழ்வில் வாடிக்கையாளர்களுடன் யூனியன் வங்கி அணியினர் காணப்படுகின்றனர்.

யூனியன் வங்கி 2025 மூன்றாம் காலாண்டின் சிறப்பாக செயலாற்றியவர்களை கௌரவித்தது

யூனியன் வங்கி 2025 மூன்றாம் காலாண்டின் சிறப்பாக செயலாற்றியவர்களை கௌரவித்தது

யூனியன் வங்கி 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சிறப்பாக செயலாற்றிய ஊழியர்களை கௌரவிக்கும் UB Heroes விருதுகள் வழங்கும் நிகழ்வை அண்மையில் வங்கியின் தலைமையகத்தில் முன்னெடுத்திருந்தது. தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் இந்த நிகழ்வினூடாக, வியாபார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் கிளைகள் மற்றும் ஆதரவுப் பிரிவுகளின் சாதனைகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கற்கள் போன்றன வெளிப்படுத்தப்படுவதுடன், அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ஊழியர்களின் திறமையான செயற்பாடுகளுக்கு வங்கியின் உபகாரம் தெரிவிப்பும் வெளிப்படுத்தப்படுகிறது. வெற்றியாளர்களுக்கான விருதுகளை யூனியன் வங்கியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் ரொட்ரிகோ வழங்கியிருந்தார்.

யூனியன் வங்கி Satyn பெண்களுக்கு நட்பான பணியிட விருதுகள் 2025 இல் கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டது

யூனியன் வங்கி Satyn பெண்களுக்கு நட்பான பணியிட விருதுகள் 2025 இல் கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டது

யூனியன் வங்கி தலைமைத்துவத்தில் பெண்களை கொண்டுள்ளமைக்காக Satyn பெண்களுக்கு நட்பான பணியிட விருதுகள் 2025 நிகழ்வில் விசேட விருதைப் பெற்றுக் கொண்டது. வங்கியின் மொத்த பணியாளர் குழுவில் 50% அதிகமான பெண்கள் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ள நிலையில், இந்த கௌரவிப்பினூடாக யூனியன் வங்கி பேணும் பெண்களுக்கான சமத்துவம் மற்றும் வலுவூட்டல் செயற்பாடுகள் மீள உறுதி செய்யப்பட்டுள்ளன.

படம் – யூனியன் வங்கி சந்தைப்படுத்தல் உப தலைவர் திஷானி திசாநாயக்க, Satyn சஞ்சிகையின் ஸ்தாபகர் மற்றும் முகாமைத்துவ ஆசிரியர் நயோமினி வீரசூரிய, மக்கள் வங்கி பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் க்ளைவ் பொன்சேகா, யூனியன் வங்கி மனித வளங்கள் பிரதம முகாமையாளர் தேவானி கோனாரா, யூனியன் வங்கி சந்தைப்படுத்தல் முகாமையாளர் நிலுஷா வனசிங்க ஆகியோர் காணப்படுகின்றனர்.

யூனியன் வங்கி நீண்ட சேவை விருதுகளை கௌரவித்துள்ளது

யூனியன் வங்கி நீண்ட சேவை விருதுகளை கௌரவித்துள்ளது

யூனியன் வங்கி அதன் பெருமைமிக்க குழு உறுப்பினர்களின் சிறப்பான பங்களிப்புகளை அங்கீகரித்துள்ளது. 20 மற்றும் 25 வருட அர்ப்பணிப்புமிக்க சேவையை கொண்டாடும் நீண்ட சேவை விருதுகளில் சேவையாற்றியவர்களை கௌரவிக்கும் வகையில், பணிப்பாளர்/CEO மற்றும் நிறுவன முகாமைத்துவ குழுவினால் விருதுகள் வழங்கப்பட்டன.

விருது பெற்றவர்களில் ஷிரான் புஞ்சிஹேவா, இந்திக்க இகலவிதான, மற்றும் ஜனிதி பெரேரா கருணாசிறி ஆகியோர் 25 வருடங்களும், ஜயநாத் காரியகரவன, ஜானக இரோஷன், கார்த்திகா ஸ்ரீதர, நிரோஷா சோமரத்ன, மற்றும் பிரியதர்ஷனி கொரியா ஆகியோர் 20 வருடங்கள் முன்மாதிரியான சேவையாற்றியிருந்தனர்.

நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் விலைமதிப்பற்ற பங்களிப்புகளுக்காக இந்த சிறந்த நபர்களை யூனியன் வங்கி பாராட்டுகிறது.

தலைப்பு: தில்ஷன் ரோட்ரிகோ, இயக்குனர்/CEO மற்றும் கார்ப்பரேட் நிர்வாகக் குழுவுடன் 20 மற்றும் 25 ஆண்டுகள் நீண்ட சேவை விருது பெற்றவர்கள்.

PCI DSS Version 4 சான்றிதழைப் பெற்ற முதலாவது உள்நாட்டு வங்கியாக யூனியன் வங்கி தெரிவு

PCI DSS Version 4 சான்றிதழைப் பெற்ற முதலாவது உள்நாட்டு வங்கியாக யூனியன் வங்கி தெரிவு

யூனியன் வங்கி Payment Card Industry Data Security Standard (PCI DSS) version 4 சான்றிதழைப் பெற்ற முதலாவது வங்கி எனும் முக்கியமான மைல்கல்லை பூர்த்தி செய்துள்ளது. இந்த நிலை கௌரவிப்பைப் பெற்றுக் கொண்ட முதலாவது உள்நாட்டு வங்கி எனும் நிலையை எய்தியுள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் PCI DSS சான்றிதழினூடாக தொடர்ச்சியாக எய்தியிருந்த சாதனைகளின் வெளிப்பாடாக, வாடிக்கையாளர் தகவல் பாதுகாப்பில் உயர் நியமங்களை பேணியிருந்தமைக்காக வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த சான்றிதழ் மேலும் உறுதி செய்துள்ளது.

யூனியன் வங்கியின் பிரதம தகவல் அதிகாரி நிசல கொடிப்பிலி கருத்துத் தெரிவிக்கையில், “PCI DSS version 4 சான்றிதழ் என்பதனூடாக, பாதுகாப்பான கொடுப்பனவு கையாளலில் பிந்திய மற்றும் மேம்படுத்தப்பட்ட நியமங்கள் பிரதிபலிக்கப்படுகின்றன. அதனூடாக பிந்திய பாதுகாப்பு ஏற்பாடுகளினூடாக வாடிக்கையாளர் தரவுகள் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்படுகின்றது. வாடிக்கையாளர் தகவலை பாதுகாப்பதற்கான யூனியன் வங்கியின் அர்ப்பணிப்பு மற்றும் அதன் நிதிச் சேவைகள் மீதான நம்பிக்கையை பேணுவதற்கான எடுத்துக்காட்டாக இந்த சான்றிதழ் அமைந்துள்ளது. இந்த சாதனையை வங்கி கொண்டாடும் நிலையில், சான்றளிப்பு செயன்முறையில் பங்களிப்பு வழங்கியிருந்த அனைவரின் முயற்சிகளை கௌரவிக்க வேண்டியதும் முக்கியமானதாகும். குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அணிகளின் கண்ணியமான மற்றும் நிபுணத்துவமான செயற்பாடுகள் இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றியிருந்தன. பாதுகாப்பு மற்றும் பின்பற்றல் செயற்பாடுகளில் வங்கியின் முன்னாயத்தமான செயற்பாடுகள் தொழிற்துறையில் நியமத்தை தோற்றுவித்துள்ளதுடன், நவீன பாதுகாப்பு செயன்முறைகளை பின்பற்றுவதில் தலைமைத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.” என்றார்.

பாதுகாப்பு மற்றும் பின்பற்றல் செயற்பாடுகளில் யூனியன் வங்கி காண்பிக்கும் அர்ப்பணிப்பினூடாக, வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்கள் மத்தியில் நம்பிக்கை தூண்டுவதாக அமைந்திருப்பதுடன், தரவு பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்பு போன்றவற்றில் உயர் நியமங்களை பேணுவதற்கு உதவியாகவும் அமையும்.

படம்: நிசல கொடிப்பிலி, யூனியன் வங்கியின் பிரதம தகவல் அதிகாரி

நீண்ட காலமாக சேவையாற்றும் ஊழியர்களை யூனியன் வங்கி கௌரவிப்பு

நீண்ட காலமாக சேவையாற்றும் ஊழியர்களை யூனியன் வங்கி கௌரவிப்பு

யூனியன் வங்கியில் நீண்ட காலமாக சேவையாற்றும் ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்றை வங்கி அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. கடந்த காலங்களில் வங்கியின் முன்னேற்றத்துக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றி, சேவைகளை வழங்கி வங்கியில் இருபது மற்றும் இருபத்தைந்து வருட கால சேவையை பூர்த்தி செய்த பத்து ஊழியர்களுக்கு கௌரவிக்கப்பட்டனர். யூனியன் வங்கியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி இந்திரஜித் விக்ரமசிங்க இவர்களுக்கான நினைவுச்சின்னங்களை கையளித்திருந்ததார். வங்கியின் வருடாந்த Dinner Dance நிகழ்வின் போது இந்த கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

வருடாந்தம் கொண்டாடப்படும் இந்த நிகழ்வு தொடர்பாக மனித வளங்கள் பிரிவின் உப தலைவர் லிலந்தி தெல்கொட கருத்துத் தெரிவிக்கையில், “இந்த ஊழியர்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் வங்கியில் பல வருடங்களில் இயங்கியுள்ளதுடன், வங்கியின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திலும் பங்களிப்பு செய்துள்ளனர். வங்கியின் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல் சாதனைப் பயணத்தில் இவர்களும் அங்கம் வகிக்கின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பு, பணியாற்றுவதற்கு தெரிவுக்குரிய வங்கி எனும் கீர்த்தி நாமத்தை கொண்டிருப்பதற்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. யூனியன் வங்கி அணியில் இணைந்து கொள்ளும் சகல புதிய அங்கத்தவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளது. எமது சகல நீண்ட கால சேவை விருதை பெற்றுக் கொள்வோருக்கும் நான் நன்றி தெரிவிப்பதுடன், வங்கியில் அவர்களின் எதிர்கால செயற்பாடுகளுக்கு நல்வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றேன்.” என்றார்.

இருபத்தைந்து வருட கால சேவை பூர்த்திக்கான கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டவர்களில் இந்திக கலஹிட்டியாவ – உதவி முகாமையாளர் கண்டி கிளை, சந்தித்த லியனகே – கிளை முகாமையாளர் அங்குனுகொலபெலஸ்ஸ கிளை, ஹிரான் டி சில்வா – வசூலிப்பு மீட்டல்கள் முகாமையாளர், சைலஜா நடராஜா – சிரேஷ்ட முகாமையாளர் – திறைசேரி, கிறிஸ்டெலா சிவபிரகாசம் – எலைட் சென்ரரின் தலைமை அதிகாரி, ஹிரான விதானராச்சி – கிளியரிங் செயற்பாடுகளுக்கான அதிகாரி மற்றும் காஞ்சன டி சில்வா – சிரேஷ்ட முகாமையாளர் – வர்த்தக செயற்பாடுகள் ஆகியோர் அடங்கியிருந்தனர்.

இருபது வருட கால சேவை பூர்த்திக்கான கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டவர்களில், ரங்கிக ஏக்கநாயக்க – கிளை முகாமையாளர், நுகேகொட, சர்மா சக்திதரன் – சிஸ்டம்ஸ் மற்றும் நெட்வேர்க் அட்மினிஸ்ட்ரேஷன் சிரேஷ்ட முகாமையாளர் மற்றும் ரங்கி மதுசங்க ஜயதிலக – சிரேஷ்ட தர உறுதிப்படுத்தல் பொறியியலாளர் ஆகியோர் அடங்கியிருந்தனர்.

மனித வளங்கள் முகாமைத்துவம் என்பது வங்கியினால் முக்கியத்துவமளிக்கப்படும் தந்திரோபாய ரீதியில் முன்னிலையில் திகழும் பிரிவாகும். வெகுமதிகள் நிறைந்த தொழில்நிலைகளை கட்டியெழுப்புவதற்காக இந்தப் பிரிவு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதுடன், ஊழியர்களில் அக்கறை கொண்ட நிறுவனமாக திகழச் செய்வதற்காகவும் பணியாற்றுகின்றது. வினைத்திறனான முகாமைத்துவ கட்டமைப்புகள் மற்றும் கவர்ச்சிகரமான வெகுமதித் திட்டங்கள் போன்றவற்றிலிருந்து முன்னேற்றகரமான தொழில்நிலை விருத்தியுடன் பயிலல் மற்றும் விருத்தி வாய்ப்புகள் போன்றனவும் வழங்கப்படுகின்றன. ஊழியர்களுக்கு தமது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி உயர்ந்த ஸ்தானத்துக்கு செல்வதற்கான வாய்ப்புகளை யூனியன் வங்கி வழங்குவதுடன், வினைத்திறன் அடிப்படையில் செயலாற்றும் நிறுவனமாகவும் திகழ்கின்றது. ஊழியர்களை தமது உச்ச வினைத்திறன் மட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக வங்கி தொடர்ந்தும் கவனம் செலுத்துகின்றது.

படம்: யூனியன் வங்கியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி இந்திரஜித் விக்ரமசிங்க மற்றும் மனித வளங்கள் பிரிவின் உப தலைவர் லிலந்தி தெல்கொட ஆகியோர் வங்கியில் நீண்ட காலமாக பணியாற்றுகின்றமைக்காக கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டவர்களுடன் காணப்படுகின்றனர்.

பெண்களுக்கு நட்பான பணியிடமாக யூனியன் வங்கி கௌரவிப்பு

பெண்களுக்கு நட்பான பணியிடமாக யூனியன் வங்கி கௌரவிப்பு

பெண் முகாமையாளர்களை கட்டியெழுப்பும் தொடர்ச்சியாக முயற்சிகளுக்காக யூனியன் வங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Satyn CIMA பெண்களுக்கு நட்பான பணியிடங்கள் விருதுகள் 2023 நிகழ்வின் போது இந்த கௌரவிப்பு யூனியன் வங்கிக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த விருதினூடாக, பெண்களுக்கு வலுவூட்டும் சமத்துவமான தொழில் வாய்ப்பு வழங்குநர் எனும் வங்கியின் நிலை மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மனித வளங்கள் பிரிவின் உப தலைவர் லலிந்தி தெல்கொட கருத்துத் தெரிவிக்கையில், “பன்முகப்படுத்தப்பட்ட பணியாளர்களில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், பெண்களுக்கு நட்பான பணியிடச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதனூடாக, வளர்ச்சிக்கும், வெற்றிகரமான செயற்பாட்டுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படுவதுடன், பாதுகாப்பான சூழல் வழங்கப்படுவதும் உறுதி செய்யப்படுகின்றது. பெண்களுக்கு அவர்களின் வளர்ச்சிக்கு தடையாக அமைந்துள்ள சகல தடைகளையும் தகர்த்து, முன்னேறுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கும் நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். ஒவ்வொரு பெண் ஊழியரினதும் கருத்துக்களுக்கு செவிமடுக்கும், பெறுமதியளிக்கும் மற்றும் கொண்டாடப்படும் கலாசாரத்தை நாம் கொண்டுள்ளோம். எமது பணியாளர் குழுவில் சுமார் 45% பெண் பிரதிநிதித்துவத்தை கொண்டுள்ளோம். சகல பிரிவுகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் காணப்படுவதுடன், அதில் சிலர் முக்கியமான நிர்வாகப் பொறுப்புகளையும் வகிக்கின்றனர். அதன் மூலமாக, பெண் தலைமைத்துவதினூடாக, பணியாளர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்குவதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.” என்றார்.

படம்: மனித வளங்கள் பிரிவின் உப தலைவர் லிலந்தி தெல்கொட, திறன் விருத்தி மற்றும் ஈடுபாட்டு பிரிவின் பிரதம தலைமை முகாமையாளர் விசல் ரூபாசிங்க, திறன் விருத்தி மற்றும் ஈடுபாட்டு பிரிவின் உதவி முகாமையாளர் தினிதி பெரேரா, ஆட்சேர்ப்பு மற்றும் வளங்கள் திரட்டல் சிரேஷ்ட முகாமையாளர் தேவானி கோனரா மற்றும் மனித வளங்கள் சேவை விநியோகப் பிரிவின் முகாமையாளர் நிசன்சலா களுபஹான.

யூனியன் அஷ்யூரன்ஸ் – யூனியன் வங்கி பாங்கசூரன்ஸ் டயமன்ட் விருதுகள் வழங்கும் நிகழ்வில், யூனியன் வங்கி அணிக்கு கௌரவிப்பு

யூனியன் அஷ்யூரன்ஸ் – யூனியன் வங்கி பாங்கசூரன்ஸ் டயமன்ட் விருதுகள் வழங்கும் நிகழ்வில், யூனியன் வங்கி அணிக்கு கௌரவிப்பு

யூனியன் அஷ்யூரன்ஸ் – யூனியன் வங்கி பாங்கசூரன்ஸ் டயமன்ட் விருதுகள் 2022 நிகழ்வின் போது யூனியன் வங்கி அணி வெளிப்படுத்தியிருந்த சிறந்த பெறுபேறுகளுக்காக கௌரவிக்கப்பட்டிருந்தது. பாங்கசூரன்ஸ் துறையில் இடம்பெற்ற பெருமைக்குரிய விருதுகள் வழங்கும் நிகழ்வாக இது அமைந்திருந்ததுடன், சிறப்பாக செயலாற்றியிருந்தவர்களை கௌரவிக்கும் வகையில் அமைந்திருந்தது. 2022 ஆம் ஆண்டுக்காக தனிநபர் மற்றும் குழுநிலை சிறந்த செயற்பாட்டாளர்களுக்கான பிரதான பிரிவுகளில் பல முக்கிய விருதுகளை யூனியன் வங்கி பெற்றிருந்தது. வருடாந்த புதிய வியாபார கட்டுப்பணங்கள் (ANBP) பிரிவில் உயர்ந்த தனிநபர் சாதனைக்கான The CEO’s Lounge விருதை, பொரளை கிளையின் லக்சிகா ஹெதிகல்லே பெற்றுக் கொண்டார். வலயப் பிரிவில் டயமன்ட் விருதை, வலயம் 1B இன் தலைமை அதிகாரியான சமிந்த பெர்னான்டோ பெற்றுக் கொண்டார். வலயங்கள் 1A, 1B மற்றும் 2 ஆகியன ANBP இல் சிறந்த மூன்று பங்களிப்பாளர்களாக கௌரவிக்கப்பட்டிருந்தன. 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஷீல்ட் சம்பியன் விருது, சிறப்பாக செயலாற்றியிருந்தமைக்காக பொரளை கிளைக்கு வழங்கப்பட்டிருந்தது. வருடாந்த இலக்குகளை விஞ்சும் வகையில் செயலாற்றியிருந்த சில கிளைகள் மற்றும் ஊழியர் அங்கத்தவர்களுக்கும் இந்த நிகழ்வின் போது கௌரவிப்புகள் வழங்கப்பட்டிருந்தன.

யூனியன் வங்கியின் Retail Liability Products & Alternate Channels இன் உப தலைவர் மனிஷ பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “பாங்கசூரன்ஸ் வியாபாரத்தை கட்டியெழுப்புவதில் வெற்றியாளர்கள் தமது சிறப்பான அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு ஆகியவற்றை காண்பித்திருந்ததுடன், அதனூடாக வங்கிக்கு சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்ய முடிந்திருந்தது. அத்துடன், வாடிக்கையாளர்களுக்கு உயர் தரமான சேவைகளையும், சௌகரியத்தையும் பெற்றுக் கொடுக்க முடிந்தது. யூனியன் அஷ்யூரன்ஸ்-யூனியன் வங்கி பங்காண்மையினூடாக இரு நிறுவனங்களினதும் பெறுமதியை மேம்படுத்திக் கொள்ள முடிந்ததுடன், நிலைபேறான வகையில் வியாபார வளர்ச்சியை எய்த முடிந்திருந்தது. வாடிக்கையாளர்களுக்கு தமது வங்கித் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் அதேவேளையில், பரந்தளவு புத்தாக்கமான ஆயுள் காப்புறுதி தீர்வுகளை ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொள்ளவும் வழிகோலியிருந்தது.” என்றார்.

படம்:
யூனியன் வங்கி பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் ஆகியோர், யூனியன் வங்கி விருதுகளைப் பெற்றவர்களுடன் காணப்படுகின்றனர்.

சிறந்த பொது ATM செயற்படுத்துனராக யூனியன் வங்கிக்கு கௌரவிப்பு

சிறந்த பொது ATM செயற்படுத்துனராக யூனியன் வங்கிக்கு கௌரவிப்பு

வாடிக்கையாளர் சௌகரியத்தை மேம்படுத்துவதில் யூனியன் வங்கி தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வரும் செயற்பாடுகளுக்காக 2022 ஆம் ஆண்டுக்கான “சிறந்த பொது ATM செயற்படுத்துனர்” எனும் மெரிட் விருது கௌரவிப்பைப் பெற்றுள்ளது. அண்மையில் இடம்பெற்ற LankaPay Technnovation விருதுகள் வழங்கும் நிகழ்வில், இந்த உயர் கௌரவிப்பு யூனியன் வங்கிக்கு வழங்கப்பட்டிருந்தது. இலங்கையில் கொடுப்பனவு தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தியிருந்த நிறுவனங்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யூனியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சௌகரியம் மற்றும் இலகுவான பண மீளப் பெறல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் நாடு முழுவதிலும் 108 ATM களை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

படம் – இடமிருந்து – யூனியன் வங்கி Retail Liability Products & Alternate Channels முகாமையாளர் யொஹான் அலஹகோன், யூனியன் வங்கி Retail Liability Products & Alternate Channels உப தலைவர் மனிஷ பெர்னான்டோ, இலங்கை நாணய சபையின் அங்கத்தவரான கலாநிதி. ரனீ ஜயமஹா, யூனியன் வங்கியின் பிரதி பிரதம தகவல் அதிகாரி இந்திரஜித் ஹபுஆரச்சி மற்றும் LankaPay (Pvt.)Ltd பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி சன்ன டி சில்வா ஆகியோரைக் காணலாம்.

கூட்டாண்மை அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மையை பேணியிருந்தமைக்காக யூனியன் வங்கிக்கு கௌரவம்

கூட்டாண்மை அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மையை பேணியிருந்தமைக்காக யூனியன் வங்கிக்கு கௌரவம்

படம்:
யூனியன் வங்கியின் சட்டப் பிரிவின் உதவி பிரதித் தலைவர் சந்தமாலி முனசிங்க, கௌரவிப்பு சான்றிதழை, ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நஷனல் ஸ்ரீ லங்காவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நதீஷானி பெரேராவிடமிருந்து பெற்றுக் கொள்கின்றார்.

கூட்டாண்மை அறிக்கையிடலில் சிறப்பை பேணியிருந்தமைக்காக யூனியன் வங்கி, நாட்டிலுள்ள சிறந்த 100 பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டு கௌரவிப்பைப் பெற்றிருந்தது. 2022 ஆம் ஆண்டுக்காக, ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நஷனல் ஸ்ரீ லங்காவினால் (TISL) முன்னெடுக்கப்பட்டிருந்த கூட்டாண்மை அறிக்கையிடல் மதிப்பீட்டின் பெறுபேறினூடாக இந்த உயர் கௌரவிப்பு யூனியன் வங்கிக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த கௌரவிப்பு வழங்கப்பட்ட 100 நிறுவனங்களில் 14 ஆம் இடத்தை யூனியன் வங்கி பெற்றுக் கொண்டதுடன், கூட்டாண்மை அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மையை பேணியிருந்தமைக்காக மொத்தமாக வழங்கப்பட்ட 10 புள்ளிகளில் 8.39 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டது. நிறுவனசார் வெளிப்படைத்தன்மையில் முழுமையான வெளிப்படுத்தலைக் கொண்டுள்ளதாகவும், மோசடி தவிர்ப்பு மற்றும் உள்ளக நிதி அறிக்கையிடல் ஆகியவற்றில் பெருமளவு வெளிப்படைத்தன்மையை கொண்டுள்ளதாகவும் தரப்படுத்தப்பட்டிருந்தது.

மோசடி தவிர்ப்பு நிகழ்ச்சிகள், நிறுவனசார் வெளிப்படைத்தன்மை, உள்ளக நிதி அறிக்கையிடல், நாடுகளுக்கிடையிலான அறிக்கையிடல், பாலினம் மற்றும் பாகுபாடற்ற கொள்கைகள் மற்றும் அரசாங்கத்தின் விலைமனுக்கோரல்கள்/ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய கொள்முதல் சார்ந்த அறிக்கையிடல் போன்றவற்றுக்கான TISL வழிகாட்டல்களுக்கமைய, கூட்டாண்மை அறிக்கையிடல் செயன்முறையின் பிரகாரம் நிறுவனங்கள் முன்னெடுத்திருந்த முன்னேற்றகரமான செயற்பாடுகளின் பிரகாரம் இந்த கௌரவிப்பு அமைந்திருந்தது.

வெளிப்படையான கூட்டாண்மை அறிக்கையிடல் மதிப்பாய்வு 2022 என்பது, இலங்கையின் சிறந்த 100 பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் மத்தியில் சுயாதீனமான முறையில் TISL இனால் மேற்கொள்ளப்படும் கூட்டாண்மை வெளிப்படுத்தல் தொடர்பான மதிப்பாய்வாக அமைந்துள்ளது. பின்பற்றப்படும் ஆய்வு முறையில், ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நஷனலின் நியம TRAC முறைமை பின்பற்றப்படுகின்றது.

இலங்கையின் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனங்கள் வரிசையில் யூனியன் வங்கியும் தரப்படுத்தப்பட்டுள்ளது

இலங்கையின் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனங்கள் வரிசையில் யூனியன் வங்கியும் தரப்படுத்தப்பட்டுள்ளது

இலங்கையின் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனங்கள் 2022 வரிசையில் யூனியன் வங்கியும் தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தரப்படுத்தலை வருடாந்தம் LMD சஞ்சிகை மற்றும் Nielsen IQ ஆகிய நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. 800 ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களின் கருத்துக்களையும், அவர்களின் சிறந்த நிறுவனங்கள் தெரிவுகளின் அடிப்படையில் முன்மொழிவுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டதுடன், நிதிப் பெறுபேறுகள், தரத்தில் கவனம் செலுத்துகின்றமை, நிர்வாகக் கட்டமைப்பு, நேர்மைத்தன்மை, புத்தாக்கம், கூட்டாண்மை கலாசாரம், சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகள், நோக்கம் மற்றும் தேசத்தை கவனத்தில் கொண்டு செயலாற்றுகின்றமை போன்ற அம்சங்களும் இந்த கருத்தாய்வின் போது கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தன.

இந்த கௌரவிப்பு தொடர்பில் யூனியன் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “2022 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனங்கள் வரிசையில் யூனியன் வங்கியும் தரப்படுத்தப்பட்டுள்ளதையிட்டு நான் மிகவும் பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கின்றேன். நெருக்கடியான பொருளாதாரச் சவால்கள் மிக்க சூழலிலும், எமது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கான எமது முயற்சிகளுக்கு கௌரவிப்பு கிடைக்கின்றமை உண்மையில் பெருமைப்பட வேண்டியமாக அமைந்துள்ளது. தேசத்துக்கு 25 வருடங்களுக்கு மேலான சேவையினூடாக, எமது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கான எமது பெறுமதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றோம். தொடர்ச்சியான 25 வருட கால சேவைகளை வழங்குவதுடன், தனது கூட்டாண்மை கொள்கைகள் மற்றும் பெறுமதிகள் போன்றவற்றுக்கு நேர்த்தியாக யூனியன் வங்கி திகழ்வதுடன், கடந்த காலங்களில் நாம் முன்னெடுத்திருந்த சாதனைகளை பிரதிபலிக்கும் மற்றுமொரு கௌரவிப்பாக இது அமைந்துள்ளது.” என்றார்.

இலங்கையின் அதிகளவு மூலதன இருப்பைக் கொண்ட வங்கிகளில் ஒன்றாகவும், 25 வருடங்களுக்கு மேலான சேவையை வழங்கி வருவதுடன், சர்வதேச முதலீட்டு நிறுவனமான TPG இன் வலிமையான ஆதரவுடனும் இயங்கும் வங்கியாக யூனியன் வங்கி திகழ்கின்றது. நிதி உறுதித்தன்மை மற்றும் சர்வதேச அறிவு போன்றவற்றுடன், உறுதியான அடித்தளத்தைக் கொண்டு, யூனியன் வங்கி பரந்தளவு தீர்வுகள் மற்றும் சேவைகளை, வாடிக்கையாளர்கள், கூட்டாண்மை நிறுவனங்கள், சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மைகள் போன்ற பிரிவுகளில் வழங்கி வருகின்றது. யூனியன் வங்கியின் தீர்வுகள் மற்றும் சேவைகள் பற்றிய மேலதிக தகவல்களை 24 மணி நேர ஹொட்லைன் இலக்கமான 011 5800 800 உடன் தொடர்பு கொண்டு அல்லது www.unionb.com எனும் கூட்டாண்மை இணையத்தளத்தில் பிரவேசித்து பெற்றுக் கொள்ள முடியும்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பாங்கசூரன்ஸ் விருதுகள் 2022 நிகழ்வில் யூனியன் வங்கி அணி சிறந்த கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டது

யூனியன் அஷ்யூரன்ஸ் பாங்கசூரன்ஸ் விருதுகள் 2022 நிகழ்வில் யூனியன் வங்கி அணி சிறந்த கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டது

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரியின் விருதுகள் 2022 நிகழ்வின், வருடாந்த பாங்கசூரன்ஸ் விருதுகள் வழங்கும் போது, யூனியன் வங்கியின் அணி கௌரவிக்கப்பட்டிருந்தது. பாங்கசூரன்ஸ் நாட்காட்டியில் மிகவும் பெருமைக்குரிய விருதுகள் வழங்கும் நிகழ்வாக அமைந்திருப்பதுடன், சிறந்த செயற்பாட்டாளர்களை இனங்கண்டு கௌரவிப்பதாக அமைந்துள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான தனிநபர் மற்றும் அணிப் பிரிவுகளில், யூனியன் வங்கி சில உயர் விருதுகளை சுவீகரித்திருந்தது. பிரிவு 6 இன் கீழ், கம்பஹா கிளையைச் சேர்ந்த திலுக்சன் லக்சித ஜயகொடி உயர் விருதைப் பெற்றுக் கொண்டார். வலய தலைமை அதிகாரி பிரிவின் வெற்றியாளராக வலயம் 1 B ஐச் சேர்ந்த சமிந்த பெர்னான்டோ வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், 2021 ஆம் ஆண்டுக்கான பாங்கசூரன்ஸ் சம்பியன்ஸ் ஷீல்ட் விருதை கம்பஹா கிளை பெற்றுக் கொண்டது. வருடாந்த இலக்குகளுக்கு மேலாக, சாதனைகளைப் பதிவு செய்திருந்த கிளைகள் மெரிட் விருதுகளை பெற்றுக் கொண்டன.

யூனியன் வங்கி மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் 2015 இல் பங்காண்மையை ஏற்படுத்தியிருந்ததுடன், 2018 முதல், ஆயுள் காப்புறுதி சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான பிரத்தியேகமான உடன்படிக்கையிலும் கைச்சாத்திட்டிருந்தது. இந்தப் பங்காண்மையினூடாக, வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நிதித் தீர்வுகளுடன், எதிர்பாராத தருணங்களில் அரவணைப்பை வழங்கக்கூடிய நீண்ட கால பாதுகாப்பை வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த சாதனைகள் தொடர்பில் யூனியன் வங்கியின் நுகர்வோர் பொறுப்புத் தீர்வுகள் மற்றும் மாற்று நாளிகைகள் பிரிவின் உப தலைவர் மனிஷா பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் வங்கி அணியின் சாதனைகள் தொடர்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைவதுடன், வெற்றியாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அணியின் அர்ப்பணிப்புடனான செயற்பாடுகளினூடாக, எம்மால் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பெறுமதியை வழங்க முடிந்துள்ளதுடன், அணியின் வினைத்திறனில் இது பிரதிபலிக்கப்பட்டுள்ளது. அணியாக, நாம் தொடர்ச்சியாக எமது பிரிவுகளையும் மேம்படுத்தி, எமது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் தீர்வுகளை வழங்குவோம்.” என்றார்.

இலங்கையின் அதிகளவு மூலதன இருப்பைக் கொண்ட வங்கிகளில் ஒன்றாகவும், 25 வருடங்களுக்கு மேலான சேவையை வழங்கி வருவதுடன், சர்வதேச முதலீட்டு நிறுவனமான TPG இன் வலிமையான ஆதரவுடனும் இயங்கும் வங்கியாக யூனியன் வங்கி திகழ்கின்றது. நிதி உறுதித்தன்மை மற்றும் சர்வதேச அறிவு போன்றவற்றுடன், உறுதியான அடித்தளத்தைக் கொண்டு, யூனியன் வங்கி பரந்தளவு தீர்வுகள் மற்றும் சேவைகளை, வாடிக்கையாளர்கள், கூட்டாண்மை நிறுவனங்கள், சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மைகள் போன்ற பிரிவுகளில் வழங்கி வருகின்றது. யூனியன் வங்கியின் தீர்வுகள் மற்றும் சேவைகள் பற்றிய மேலதிக தகவல்களை 24 மணி நேர ஹொட்லைன் இலக்கமான 011 5800 800 உடன் தொடர்பு கொண்டு அல்லது www.unionb.com எனும் கூட்டாண்மை இணையத்தளத்தில் பிரவேசித்து பெற்றுக் கொள்ள முடியும்.

Daraz இடமிருந்து யூனியன் வங்கி பெருமளவு ஊக்குவிப்புத்திட்ட பங்காண்மைக்கான விருதை சுவீகரிப்பு!

Daraz இடமிருந்து யூனியன் வங்கி பெருமளவு ஊக்குவிப்புத்திட்ட பங்காண்மைக்கான விருதை சுவீகரிப்பு!

Daraz கொடுப்பனவு பங்காளர் விருதுகள் வழங்கும் நிகழ்வில் தொடர்ச்சியான இரண்டாவது வருடமாகவும் யூனியன் வங்கி விருதை சுவீகரித்திருந்தது. ஜுலை 28 ஆம் திகதி கொழும்பு Uga Residencies இல் இடம்பெற்ற விருதுகள் வழங்கும் நிகழ்வில் “பெருமளவு ஊக்குவிப்புத் திட்ட பங்காண்மைக்கான விருதை யூனியன் வங்கி சுவீகரித்திருந்தது.

e-வணிக கட்டமைப்பில், கடனட்டை பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் யூனியன் வங்கி தொடர்ச்சியான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றமையை இந்த விருது மீண்டும் உறுதி செய்திருந்தது. 2021 – 2022 வருட காலப்பகுதியில் Daraz கட்டமைப்பில் பெருமளவு பிரச்சாரத் திட்டங்களை முன்னெடுப்பதில் யூனியன் வங்கி பங்களிப்பு வழங்கியிருந்தது. Daraz கொடுப்பனவு பங்காளர் வினைத்திறன் விருதுகள் என்பது கொடுப்பனவு பங்காளர்கள் மற்றும் வெகுமதித் திட்டங்கள் போன்றவற்றுக்கான வருடாந்த நிகழ்வாக அமைந்திருப்பதுடன், கட்டமைப்பின் வியாபார வளர்ச்சிக்கு வங்கிப் பங்காளர்கள் வழங்கும் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

Daraz உடனான பங்காண்மையின் ஆரம்பம் முதல், வங்கியினால் தொடர்ச்சியாக புத்தாக்கமான செயற்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததுடன், அதனூடாக ஒன்லைன் சொப்பிங் அனுபவத்தை மேம்படுத்துவம் வகையில் பங்களிப்புகள் வழங்கப்பட்டிருந்தன. Daraz உடன் இணைந்து அறிமுகம் செய்யப்பட்ட பரந்தளவு சலுகைகளில், வாராந்த விலைக்கழிவுகள், கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள் மீதான சலுகைகள் மற்றும் விசேட திட்டங்களுடன் கைகோர்ப்பு மற்றும் 11.11, Black Friday, புத்தாண்டு மற்றும் நத்தார் மலிவு விற்பனை போன்றவற்றுடன் இணைவு போன்றவற்றினூடாக, வங்கியின் அட்டைதாரர்களுக்கு விறுவிறுப்பான ஒன்லைன் சொப்பிங் அனுபவத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

தெற்காசியாவின் முன்னணி ஒன்லைன் சொப்பிங் சந்தைப்பகுதியாக Daraz திகழ்வதுடன், சர்வதேச eவணிக ஜாம்பவானாகத் திகழும் Alibaba குழுமத்தின் வலுவூட்டலில் இயங்குகின்றது. இலங்கையின் மாபெரும் e-வணிக கட்டமைப்பாகத் திகழச் செய்யும் வகையில் விற்பனையாளர்களையும் வாடிக்கையாளர்களையும் தம்வசம் கொண்டுள்ளது.

கோல்ட், பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர் போன்ற தெரிவுகளில் யூனியன் வங்கி கடன் அட்டைகள் கிடைக்கின்றன. நாடு முழுவதிலும் காணப்படும் பரந்த கிளை வலையமைப்பினூடாக இந்த அட்டைகள் வழங்கப்படுகின்றன. கடனட்டைக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள், ஒன்லைன் ஊடாக கோரிக்கையை சமர்ப்பிக்கலாம். அல்லது வங்கியின் அழைப்பு நிலைய ஹொட்லைன் இலக்கமான 011 5800 5800 ஊடாக தொடர்பு கொண்டு சேவையைப் பெற்றுக் கொள்ளலாம். யூனியன் வங்கி கடனட்டைகள் மற்றும் வங்கியின் இதர தீர்வுகள் தொடர்பான மேலதிக தகவல்களை, வங்கியின் கூட்டாண்மை இணையத்தளமான www.unionb.com இலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

யூனியன் வங்கி மற்றும் வெஸ்டர்ன் யூனியன் இணைந்து வெளிநாடுகளிலிருந்து பண அனுப்புகைகளுக்கு கவர்ச்சிகரமான அன்பளிப்புகளை வழங்க முன்வந்துள்ளன

யூனியன் வங்கி மற்றும் வெஸ்டர்ன் யூனியன் இணைந்து வெளிநாடுகளிலிருந்து பண அனுப்புகைகளுக்கு கவர்ச்சிகரமான அன்பளிப்புகளை வழங்க முன்வந்துள்ளன

வெஸ்டர்ன் யூனியன் ஊடாக வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணத்தை யூனியன் வங்கிக் கிளைகளிலிருந்து பெற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான அன்பளிப்பு வழங்கும் திட்டமொன்றை வெஸ்டர்ன் யூனியன் மற்றும் யூனியன் வங்கி ஆகியன இணைந்து அறிமுகம் செய்துள்ளன.

ரூ. 25,000 க்கு அதிகமான பெறுமதியுடைய கொடுக்கல் வாங்கல்கள் இந்த அன்பளிப்புத் திட்டத்துக்கு தகைமை பெறுவதுடன், பிரான்டட் பேனா ஒன்றை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். ரூ. 25,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகைகளில் மூன்று கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போது, வாடிக்கையாளர்களுக்கு பிரான்டட் மக் ஒன்றை பெற்றுக் கொள்ளவும், ரூ. 25,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகைகளில் ஐந்து கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போது, பிரயாணப்பை ஒன்றை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படும். இந்தச் சலுகை மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் தொகை கையிருப்பிலுள்ள வரை மாத்திரம் செல்லுபடியாகும்.

வெளிநாடுகளில் பணியாற்றுவோர் இலங்கைக்கு பணத்தை அனுப்பும் போது, அனுப்பப்படும் தொகையில் ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் மேலதிகமாக 2 ரூபாய் வழங்கப்படும் திட்டத்துக்கு மேலதிகமாக இந்த அன்பளிப்புத் திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது.

நாடு முழுவதையும் சேர்ந்த 67 யூனியன் வங்கிக் கிளைகளினூடாக வெஸ்டர்ன் யூனியன் பணப் பரிமாற்ற சேவை வழங்கப்படுவதுடன், 200க்கும் அதிகமான வெளிநாடுகளில் பணியாற்றும் மற்றும் வசிக்கும் தமது அன்புக்குரியவர்கள் அனுப்பும் பணத்தை இலகுவாக பெற்றுக் கொள்ளும் வசதியை வழங்குகின்றது.

இந்தச் சலுகை தொடர்பில் யூனியன் வங்கியின் பாங்கசூரன்ஸ் மற்றும் பண அனுப்புகை பிரதம முகாமையாளர் கிஹான் சமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “வெளிநாட்டு பண அனுப்புகைகள் என்பது மொத்தத் தேசிய உற்பத்தியில் உறுதியான பங்களிப்பை வழங்குவதுடன், இலங்கையின் பல குடும்பங்களின் பிரதான வருமான மூலமாக அமைந்துள்ளது. கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக நாட்டுக்கு வெளி பண அனுப்புகை பாதிக்கப்பட்டுள்ளது. சவால்கள் நிறைந்த சூழலிலும், வெளிநாட்டு பண அனுப்புகையை மேம்படுத்தி தேசிய ரீதியில் பங்களிப்பு வழங்குவதற்காக வெஸ்டர்ன் யூனியன் உடன் கைகோர்த்துள்ளோம். அதனூடாக எமது வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளையும் வழங்குகின்றோம். வெஸ்டர்ன் யூனியன் உடன் இணைந்து, வெளிநாடுகளில் வாடிக்கையாளர்களின் அன்புக்குரியவர்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை சௌகரியமாகவும், பாதுகாப்பாகவும் எமது வாடிக்கையாளர்கள் மத்தியில் பகிர்ந்தளிக்க முடிந்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார்.

வெஸ்டர்ன் யூனியன் பற்றி

நாடுகளுக்கிடையில், பல்வேறு நாணயங்களில் பண அனுப்புகைகளை மேற்கொள்வதற்கான வசதிகளை வழங்கும் நிறுவனமாக வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் (NYSE: WU) திகழ்கின்றது. டிஜிட்டல் மற்றும் நிஜ உலகை இணைத்து, நுகர்வோருக்கும் வியாபாரங்களுக்கும் பணக் கொடுப்பனவுகளை வேகமாகவும், இலகுவாகவும் அனுப்பவும், பெறவும் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. தனது சர்வதேச சென்றடைவுடன், குடும்பங்களை, நண்பர்களை மற்றும் வியாபாரங்களை இணைக்கும் வகையில் பணத்தை மாற்றும் நடவடிக்கைகளை வெஸ்டர்ன் யூனியன் மேற்கொண்டு, நிதிசார் உள்ளடக்கத்தை செயற்படுத்தி பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குகின்றது. மேலதிக தகவல்களுக்கு www.westernunion.com எனும் இணையத்தளத்தை பார்க்கவும்.

யூனியன் வங்கி பற்றி

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச தனியார் முதலீட்டு நிறுவனமான TPG இன் முதலீட்டில் இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் வணிக வங்கிகளில் ஒன்றாக யூனியன் வங்கி திகழ்கின்றது. நிதி உறுதித்தன்மை மற்றும் சர்வதேச அறிவுடனான உறுதியான அடித்தளத்தைக் கொண்டு, இலங்கையில் காணப்படும் அதிகளவு மூலதன இருப்பைக் கொண்ட தனியார் வணிக வங்கிகளில் ஒன்றாகவும் யூனியன் வங்கி திகழ்கின்றது. நுகர்வோர், சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மைகள் மற்றும் கூட்டாண்மை வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு முழு அளவிலான நிதித் தீர்வுகளையும் சேவைகளையும் வழங்குகின்றது.

ஏசியன் பாங்கர் கொடுக்கல் வாங்கல்கள் நிதியியல் விருதுகள் 2020 இல் இலங்கையின் சிறந்த பண முகாமைத்துவ வங்கியாக யூனியன் வங்கி தெரிவு

ஏசியன் பாங்கர் கொடுக்கல் வாங்கல்கள் நிதியியல் விருதுகள் 2020 இல் இலங்கையின் சிறந்த பண முகாமைத்துவ வங்கியாக யூனியன் வங்கி தெரிவு

ஏசியன் பாங்கர் கொடுக்கல் வாங்கல்கள் நிதியியல் விருதுகள் 2020 இல் இலங்கையின் சிறந்த பண முகாமைத்துவ வங்கியாக யூனியன் வங்கி தெரிவு செய்யப்பட்டிருந்தது. வங்கியின் நவீன நிதி முகாமைத்துவ தீர்வான யூனியன் வங்கி Biz Direct வெற்றிகரமாக செயலாற்றுவதை இந்த விருது மேலும் உறுதி செய்துள்ளது.

பண முகாமைத்துவம், வர்த்தக நிதி, விநியோகத் தொடர் நிதி மற்றும் கொடுப்பனவுகளுக்காக ஆசியா பசுபிக், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா ஆகிய பிராந்தியங்களிலுள்ள சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் உள்ளக நிதி நிறுவனங்களிடையே கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வது போன்றவற்றில் முன்னோடியாகத் திகழ்கின்றமையை கௌரவிக்கும் வகையில் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றி, வெளிப்படையான வகையில் இடம்பெறும் பெருமைக்குரிய விருதுகள் வழங்கும் நிகழ்வாக த ஏசியன் பாங்கர் கொடுக்கல் வாங்கல் நிதியியல் விருதுகள் அமைந்துள்ளது.

இந்த விருதை வெற்றியீட்டியமை தொடர்பில் யூனியன் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டில் கொடுப்பனவு மற்றும் பண முகாமைத்துவ பிரிவில் யூனியன் வங்கி உறுதியாக பதிவு செய்திருந்த முன்னேற்றத்தை மீளுறுதி செய்யும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது. உள்நாட்டு வணிக வங்கியினால் 2016 ஆம் ஆண்டில் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த இந்த வகையைச் சேர்ந்த முதலாவது தீர்வாக யூனியன் வங்கி Biz Direct அமைந்துள்ளதுடன், பாரிய நிறுவனங்கள் மற்றும் சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மைகளுக்கு தமது திரள்வுத் தன்மையை முறையாகப் பேணிக் கொள்வதற்கு உதவும் வினைத்திறன் வாய்ந்த, சௌகரியமான மற்றும் சிக்கனமான பண முகாமைத்துவ முறையாக அமைந்துள்ளது. புதிய வழமையில் இந்தத் தொழில்நுட்பம் முன்னரை விட முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது எனும் நம்பிக்கையுடன், பண முகாமைத்துவ தன்னியக்கமாக்கல் எனும் பிரிவில் புத்தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த தீர்வை நாம் வெற்றிகரமாக கட்டியெழுப்பியுள்ளோம்.” என்றார்.

யூனியன் வங்கியின் கொடுக்கல் வாங்கல் வங்கியியல் மற்றும் சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை வங்கியியல் பிரிவின் உப தலைவர் அசங்க ரன்ஹொட்டி கருத்துத் தெரிவிக்கையில், “இந்த விருதைப் பெற்றக் கொண்டதனூடாக, நாட்டில் காணப்படும் சிறந்த பண முகாமைத்துவ வங்கியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமையையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கின்றோம். சந்தையில் யூனியன் வங்கியின் BizDirect கொண்டுள்ள சந்தைப் பங்கு மற்றும் வருமானம் ஆகியவற்றுடன், இதர தயாரிப்புகளுடன் ஒப்பிடுகையில் இந்தத் தயாரிப்பு மற்றும் செயற்பாட்டுச் சிறப்பு ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில் த ஏசியன் பாங்கர் சிறந்த பண முகாமைத்துவ விருது அமைந்துள்ளது. யூனியன் வங்கியின் புரட்சிகரமான பண முகாமைத்துவ கட்டமைப்பான BizDirect ஊடாக, நாட்டில் அதிகளவு பணத்தில் தங்கியுள்ள நிதிக் கொடுக்கல் வாங்கல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, தமது பணப்பாய்ச்சல்களின் அடிப்படையில் தன்னியக்கமயமாக்கங்கள் மற்றும் மாற்றியமைப்புகள் போன்ற தீர்மானங்களை உரிய வேளைகளில் மேற்கொள்ள உதவும் வகையில் வியாபார உரிமையாளர்களுக்கு திரள்வு முகாமைத்துவ ஏற்படுத்திக் கொடுப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் முடக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் BizDirect பல வழிகளில் அனுகூலமாக அமைந்திருந்தது. குறிப்பாக உரிய நேரத்தில் பணத்தை சேகரித்தல் மற்றும் கொடுப்பனவு தீர்வுகளை தன்னியக்கமயமாக்கங்களினூடாகவும் தொலைதூர பண முகாமைத்துவ ஆற்றல்களினூடாகவும் மேற்கொள்ள முடிந்தது. கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு இந்த சேவையை மேலும் வழங்கி, மாற்றமடைந்து செல்லும் வியாபார சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையில் அவர்களின் திரள்வு முகாமைத்துவ ஆற்றல்களை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் உதவும் வகையில் எமது நிலையை நாம் தொடர்ந்து வலிமைப்படுத்துவோம்.” என்றார்.

தன்னியக்கமயமாக்கப்பட்ட BizDirect பண முகாமைத்துவ கட்டமைப்பில், திரட்டல்கள், கொடுப்பனவுகள், திரள்வு முகாமைத்துவம், அறிக்கையிடல் மற்றும் சரிக்கட்டல்கள் போன்ற முழு தொழிற்படு நிதிச் சுழற்சியையும் உள்வாங்கியுள்ளது.. ஒவ்வொரு கட்டத்திலும், பாவனையாளர்களுக்கு அவர்களின் பண மீதிகளுக்கமைய முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள அசல் நேர தரவுகளை கிடைக்கச் செய்து உதவியாகஅமைந்துள்ளது. தன்னியக்கமயமாக்கம், ஒன்லைன் ஆவணப்படுத்தல் மற்றும் அசல் நேர தரவு அறிக்கையிடல் போன்றவற்றினூடாக மோசடிகள் இடம்பெறுவதை குறைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பில் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் biometric உறுதிப்படுத்தல் அடங்கலாக நவீன பாதுகாப்பு மேம்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்தக் கட்டமைப்பு இணைய அடிப்படையில் அமைந்திருப்பதுடன், ஏற்கனவே காணப்படும் கணக்கியல் கட்டமைப்பை host-to-host (H2H) அடிப்படையில் ஒன்றிணைப்பதாக அமைந்துள்ளது. இதை நிறுவுவதற்கு எவ்விதமான வன்பொருளும் (hardware) அவசியமில்லை என்பதுடன், எளிமையான முறையில் வேகமாக நிறுவிக் கொள்ளலாம். பண முகாமைத்துவ கட்டமைப்பு தொடர்பில் தமது நிபுணத்துவ அறிவை பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் கொண்ட யூனியன் வங்கியின் அர்ப்பணிப்பான அணியினூடாக, பயிற்சிகளும் தொடர்ச்சியான உதவிகளும் வழங்கப்படுகின்றன. சர்வதேச ரீதியில் வழங்கப்படும் தீர்வுகளுக்கு ஒப்பிடக்கூடிய பரந்தளவு உள்ளம்சங்களை சகாயமான விலையில் BizDirect வழங்குகின்றது.

சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சிகள் மற்றும் பாரிய நிறுவனங்களுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் யூனியன் வங்கியின் BizDirect அமைந்துள்ளதுடன், வேகமான மற்றும் துல்லியமான தீர்மானமெடுத்தல்களை சகல அளவிலான வியாபாரங்களுக்கும் வழங்குகின்றது. பயன்படுத்த இலகுவான செயற்கட்டமைப்பினூடாக, வியாபாரங்களுக்கு பணத்தை உரிய காலத்தில் திரட்டி, ஆகக்கூடிய காலம் தக்க வைத்திருந்து, விநியோகத்தர்களுக்கு உரிய காலத்தில் கொடுப்பனவுகளை மேற்கொண்டு அவர்களுடனான உறவை கட்டியெழுப்பிக் கொள்ளக்கூடியதாக இருக்கும். மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க, தன்னியக்க பண முகாமைத்துவ தீர்வினூடாக, நிறுவனங்களுக்கு தமது தொழிற்படு மூலதன சுழற்சியை முகாமைத்துவ ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்ள முடிகின்றது. திரள்வு முகாமைத்துவம் தொடர்பில் தெளிவான தோற்றப்பாட்டினூடாக, வியாபாரங்களின் பண நிலைப்பாடு தொடர்பான பரிபூரண காட்சியமைப்பை பெற்றுக் கொள்ள முடிவதுடன், முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள முடியும். சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மைகளுக்கு எதிர்காலத்தில் பாரிய நிறுவனங்களாக வளர்ச்சியடைவதற்கு BizDirect இனூடாக உதவிகள் வழங்கப்படும்.

இந்தக் கட்டமைப்பினூடாக கையடக்க தொலைபேசிகளினூடாகக் கூட ஒன்லைன் அனுமதிகளை செயற்படுத்த முடியும். அதனால், காசோலை கையொப்பமிடல் போன்ற மனித ஆற்றலால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் முற்றாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. தன்னியக்கமயமாக்கலினூடாக, செயற்பாடுகளுக்கு அவசியமான ஆவணங்களை ஒன்லைனில் உடனடியாக பதிவேற்ற முடியும். காசோலைகளை வங்கியினால் சுயமாக அச்சிட்டு, BizDirect பாவனையாளருக்கு அல்லது அவரின் வாடிக்கையாளருக்கு விநியோகிக்கக்கூடியதாக இருக்கும். இலங்கை மத்திய வங்கியினால் அனுமதியளிக்கப்பட்ட சேவை வழங்குநர்களால் மேற்கொள்ளப்படும் நிதித் திரட்டல்களினூடாக, பணம் மற்றும் காசோலைகள் போன்றவற்றை வியாபாரங்களிடமிருந்து நேரடியாக பெற்றுக் கொள்ள முடிவதுடன், வியாபாரத்துக்கு அவசியமான போது பணத்தை மீள விநியோகித்துக் கொள்ளலாம். சீராக்கங்களும் தன்னியக்கப்படுத்தப்பட்டுள்ளமையால், பாவனையாளர்களுக்கு தமது நிறுவனத்தின் நிதி நிலையை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

யூனியன் வங்கியின் செயற்பாடுகளின் 50% பங்கை கூட்டாண்மை மற்றும் சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை வங்கியியல் பிரிவு கொண்டுள்ளதுடன், இந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரிவுகளுக்கு பெறுமதி வாய்ந்த சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு பெருமளவு முதலீடுகளை வங்கி மேற்கொண்ட வண்ணமுள்ளது. அதன் BizDirect கட்டமைப்பை மேம்படுத்துவதில் வங்கி அண்மையில் மேற்கொண்டிருந்த முதலீடு என்பது, தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த துறையாக கருதப்படும் சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை துறையின் வளர்ச்சிக்கு தனது அர்ப்பணிப்பை தொடர்ச்சியாக உறுதி செய்துள்ளமைக்கான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க தீர்வுகள், நீடித்த அணுகல் பகுதிகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியில் செயற்படுத்தப்பட்ட சௌகரியங்கள் போன்ற வங்கியின் தந்திரோபாய வழிமுறைகளினூடாக, வாடிக்கையாளர்களுக்கு நேர்த்தியான வங்கியியல் அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளன. வாடிக்கையாளர் பிரிவுகளில் இனங்காணப்பட்ட சில பாரிய இடைவெளிகளை இலக்காகக் கொண்டு, வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வங்கியியல் சௌகரியத்தையும் பெறுமதியையும் சேர்க்கும் வகையில் தயாரிப்பு மற்றும் சேவை மேம்படுத்தல்களை ஏற்படுத்திக் கொடுப்பதில் தொடர்ச்சியாக முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றது.

பத்திரிகை ஆசிரியர்களுக்கான குறிப்பு: த ஏசியன் பாங்கர் கொடுக்கல் வாங்கல் நிதியியல் விருதுகள் பற்றி

முன்னர் கொடுக்கல் வாங்கல் வங்கியியல் விருது என அழைக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல் நிதியியல் விருதுகளினூடாக, பண முகாமைத்துவம், கொடுப்பனவுகள் மற்றும் வியாபார நிதி போன்ற பிரிவுகளில் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனம் படைத்துள்ள சாதனைகள் கௌரவிக்கப்படுகின்றது. இந்த விருதுக்காக மதிப்பீடுகளை மேற்கொள்ளும் போது, கணக்காய்வு அடிப்படையிலான முறைமை பின்பற்றப்படுகின்றது.

இந்த ஆண்டில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக தடங்கல்கள் ஏற்பட்டிருந்த போதிலும், ஆசிய பசுபிக் பிராந்தியத்திலிருந்து 15 க்கும் மேற்பட்ட சந்தைகளைச் சேர்ந்த 50 க்கும் அதிகமான வங்கிகள் மற்றும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து 180 க்கும் அதிகமான விண்ணப்பங்களை 55 விருதுகளுக்காக பெற்றுக் கொள்ள முடிந்தது. இந்த ஆண்டின் விருதுகள் வழங்கலின் போது, பாரம்பரிய வங்கிகளுடன் போட்டியிடக்கூடிய வகையில் நிதியியல் தொழில்நுட்ப (fintech) கட்டமைப்பு எனும் பிரிவையும் கொடுக்கல் வாங்கல் நிதியியல் விருதில் உள்ளடக்கியிருந்தது. இந்த விருதுக்காக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது, விண்ணப்பதாரிகள் அளவிடக்கூடிய தரவு ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பதுடன், பின்னர் துறையில் காணப்படும் இதர நிறுவனங்களின் பெறுபேறுகளுடன் அவை ஒப்பிட்டுப்பார்க்கப்படும். த ஏசியன் பாங்கரின் ஆய்வு அணியினரினால் மேற்கொள்ளப்படும் கருத்துக் கணிப்புகள், நேர்காணல்கள் மற்றும் கள ஆய்வுகள் போன்றவற்றினூடாக இந்த விருதுகளுக்கான வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

SLIM NASCO விருதுகள் 2019 இல் யூனியன் வங்கிக்கு இரு தங்க விருதுகள் வழங்கி கௌரவிப்பு

SLIM NASCO விருதுகள் 2019 இல் யூனியன் வங்கிக்கு இரு தங்க விருதுகள் வழங்கி கௌரவிப்பு

படங்கள்

  • Pic 1 – மொபிடெல் வியாபார மாதிரியின் பொது முகாமையாளர் பிரபாத் கமகேயிடமிருந்து சுமேதா பிரசாதிகா விருதை பெற்றுக் கொள்வதுடன், அருகில் ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் விற்பனை பொது முகாமையாளர் சின்தக பெரேரா அருகில் காணப்படுகின்றார்.
  • Pic 2 – மொபிடெல் வியாபார மாதிரியின் பொது முகாமையாளர் பிரபாத் கமகேயிடமிருந்து சாமர ரொசாரியோ விருதை பெற்றுக் கொள்வதுடன், அருகில் ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் விற்பனை பொது முகாமையாளர் சின்தக பெரேரா அருகில் காணப்படுகின்றார்.

 

யூனியன் வங்கியின் விற்பனை அணியைச் சேர்ந்த இரு ஊழியர்களுக்கு, அண்மையில் இடம்பெற்ற SLIM NASCO விருதுகள் 2019 நிகழ்வில் நிதிச் சேவைகள் மற்றும் வங்கியியல் பிரிவில் தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.

 

சிறந்த பிராந்திய முகாமையாளருக்கான தங்க விருதை யூனியன் வங்கியின் சாமர ரொசாரியோ பெற்றுக் கொண்டதுடன், சிறந்த முன்னிலையாளருக்கான தங்க விருதை சுமேதா பிரசாதிகா வெற்றியீட்டியிருந்தார்.

 

அவசியமான வெளிப்படுத்தல்களுடன் இளம் நிபுணர்களை ஊக்குவிக்கும் முயற்சிகளை வங்கி முன்னெடுக்கின்றமையை இந்த விருதுகள் உறுதி செய்துள்ளன. குறிப்பாக தொழிற்பயிற்சிகளை வழங்குவது மற்றும் தொழில்நிலை முன்னேற்றம் மற்றும் பிரத்தியேக விருத்திக்கு அவசியமான திறனூட்டல் செயற்பாடுகள் போன்றன வங்கியின் அர்ப்பணிப்புகளில் அடங்கியுள்ளன.

 

இந்த விருது தொடர்பில் வாடிக்கையாளர் வங்கியியல் பிரிவின் உப தலைவர் சாயா ஜயவர்தன கருத்துத் தெரிவிக்கையில், ”தேசிய மட்டத்தில் எமது ஊழியர்கள் சிறப்பாக விற்பனை பெறுபேறுகளை வெளிப்படுத்தி அதற்காக கௌரவிப்பையும் விருதுகளையும் பெற்றுக் கொள்வதை காண்பது பெரும் மகிழ்ச்சியளிப்பதாகவும் பெருமை சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது. வங்கியின் மத்திய விற்பனை அணி வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பு மற்றும் குழுநிலை செயற்பாடு ஆகியவற்றை பிரதிபலிப்பதாக இந்த சாதனை அமைந்துள்ளது. இந்த இரு ஊழியர்களும் தமது கடுமையான உழைப்பு மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை காண்பிக்கின்றமைக்காக கிடைத்த கௌரவிப்பாக இது அமைந்துள்ளதுடன், இவ்வாறான அர்ப்பணிப்பான செயற்பாடுகளினூடாக அவர்களுக்கு கடுமையான போட்டியின் மத்தியில் தேசிய மட்டத்தில் போட்டியிட்டு வளர்ச்சியை பதிவு செய்யக்கூடியதாக இருந்தது. சாமர மற்றும் சுமேதா ஆகியோருக்கு அவர்களின் வெற்றிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றார்.

 

மனித வளங்கள் பிரிவின் உப தலைவர் ரவி ஜயசேகர கருத்துத் தெரிவிக்கையில், ”எமது சக ஊழியர்கள் தேசிய மட்டத்தில் அவர்களின் செயற்பாடுகள் மற்றும் பங்களிப்புக்காக கௌரவிக்கப்பட்டுள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். எமது ஊழியர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளினூடாக வங்கி சிறந்த முன்னேற்றங்களை பதிவு செய்துள்ளது. அவர்கள் தமது முழுத்திறனையும் எய்துவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் அவர்களுக்கு ஊக்கமளிப்போம்.” என்றார்.

 

இலங்கையின் வருடாந்த நாட்காட்டியில் அதிகளவு எதிர்பார்ப்புகளைக் கொண்ட நிகழ்வாக அமைந்துள்ள தேசிய விற்பனை காங்கிரஸ் (NASCO) நிகழ்வை இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகம் (SLIM) ஏற்பாடு செய்கின்றது. இந்த ஆண்டு நிகழ்வின் தொனிப்பொருளாக ‘Excel. Engage. Ensure – Beyond all Limits’ அமைந்திருந்தது. 2018 ஜனவரி 1 ஆம் திகதி அல்லது 2018 ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 2018 டிசம்பர் 31ஆம் திகதி வரை அல்லது 2019 மார்ச் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்டிருந்த பெறுபேறுகள் இந்த விருதுகளுக்காக கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தன. புகழ்பெற்ற நடுவர்கள் குழுவில் துறையின் முன்னோடிகள் அடங்கியிருந்தனர். 22 பிரிவுகளில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பிரிவுக்கும் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் போன்ற விருதுகள் முன்னிலையாளர்கள், விற்பனை மேற்பார்வையாளர்கள் மற்றும் பிராந்திய முகாமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. BMICH இல் இடம்பெற்ற கோலாகலமான வைபவத்தில் இந்த விருதுகள் வழங்கப்பட்டிருந்தன.

dotCOMM விருதுகள் 2019 இல் யூனியன் வங்கியின் இணையத்தளத்துக்கு தங்க விருது வழங்கி கௌரவிப்பு

dotCOMM விருதுகள் 2019 இல் யூனியன் வங்கியின் இணையத்தளத்துக்கு தங்க விருது வழங்கி கௌரவிப்பு

 

யூனியன் வங்கியின் இணையத்தளமான www.unionb.com க்கு, அமெரிக்காவின் dotCoMM விருதுகள் 2019 இல் நிதிப் பிரிவில் தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

சந்தைப்படுத்தல் பிரிவின் உதவி உப தலைவர் திஷானி திசாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், ”எமது சாதனையை பகிர்ந்து கொள்வதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம், இதனூடாக டிஜிட்டல் பிரசன்னத்தை கொண்டிருப்பதற்கு வங்கி காண்பிக்கும் அர்ப்பணிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், டிஜிட்டல் மாற்றத்துக்காக காண்பிக்கும் அர்ப்பணிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட இணையத்தளம் 2019 ஜனவரி மாதம் மீள அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதன் நோக்கம், வங்கியின் டிஜிட்டல் பிரசன்னத்தை மேம்படுத்துவது மற்றும் தற்போது காணப்படும் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அம்சங்களை பயன்படுத்தி பாவனையாளர்களுக்கு பாதுகாப்பான வகையில் தமது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு உதவியாக அமைந்திருப்பதாக அமைந்துள்ளது. மேலும், மேம்படுத்தப்பட்ட இணையத்தளத்தினூடாக, மாற்றமடைந்து வரும் டிஜிட்டல் போக்குகளுடன் முன்னிலையில் திகழ வங்கிக்கு முடிந்துள்ளது. எமது டிஜிட்டல் சேவை வழங்குநரான DigiBrush இன் முயற்சிகள் பாராட்டத்தக்கது.” என்றார்.

இந்த இணையத்தளத்தினூடாக பாவனையாளர்களுக்கு வழங்கப்படும் மேம்படுத்தப்பட்ட அனுபவத்தில், ஆய்வு அடிப்படையிலான தகவல் கட்டமைப்பினூடாக குறைந்த படிமுறைகளில் தகவல்களை பெறும் வசதி, இணையத்தளம் முழுவதிலும் முக்கியமான இடுக்குகளை இலகுவாக அணுகக்கூடிய வகையில் google analytics இன் பிரகாரமான Quick link dropdowns, பெருமளவான பாவனையாளர்கள் இணையத்தளத்தை தமது கையடக்க தொலைபேசியினூடாக பார்வையிடும் காரணமாக, கையடக்க தொலைபேசிக்காக சீரமைக்கப்பட்ட இணையத்தளம், சமூக வலைத்தள ஒன்றிணைப்புகள், சுய விவரக் கோவையை பதிவேற்றக்கூடிய வசதியுடனான தொழில் வாய்ப்பு பக்கம், பங்கு விலைகள் மற்றும் துல்லியமான தரவுகளை பெற்றுக் கொள்வதற்கான நேரலையான, தன்னியக்கமான CSE widget மற்றும் ATM/கிளை தேடல் வசதி போன்றன அடங்கியுள்ளன. மேலும், பாவனையாளர்களுக்கு உயர் மட்ட பாதுகாப்பை இந்த இணையத்தளம் வழங்குகின்றது. இந்த இணையத்தள வடிவமைப்புக்காக வேகமாக வளர்ந்து வரும் புத்தாக்கமான இணையதள வடிவமைப்பு, டிஜிட்டல் ஊடக சந்தைப்படுத்தல் மற்றும் வடிவமைப்பு தீர்வுகள் வழங்கும் நிறுவனமான Digibrush பிரைவட் லிமிடெட் உடன் கைகோர்த்திருந்தது.

dotCOMM விருதுகள் என்பது சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படும் போட்டியாகும். இணையத்தள ஆக்கத்திறன் மற்றும் டிஜிட்டல் தொடர்பாடலில் சிறப்பை கௌரவித்து இந்த போட்டி முன்னெடுக்கப்படுகின்றது. பொருட்கள் மற்றும் சேவைகளை நாம் எவ்வாறு சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல்களை பேணுவது போன்ற முறைகளில் ஆக்கத்திறன் கொண்டுள்ளதை பிரதிபலிக்கும் வகையில் இந்த போட்டி அமைந்துள்ளது. dotCOMM விருதுகளை சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் நிபுணர்கள் சம்மேளனத்தினால் நிர்வகிப்படுவதுடன், மத்தியஸ்தம் வகிக்கப்படுகின்றது. சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் துறையில் காணப்படும் மிகவும் நன்மதிப்பைப் பெற்ற மதிப்பீட்டாளர்களை கொண்ட அமைப்பாக இது திகழ்கின்றது. 1994 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது முதல், AMCP இனால் 200,000 க்கும் அதிகமான விண்ணப்பங்கள் உலகளாவிய ரீதியிலிருந்து மதிப்பிடப்பட்டுள்ளன. AMCP இன் இரண்டு போட்டிகள், MarCom விருதுகள் மற்றும் Hermes Creative விருதுகள் போன்றன வருடாந்தம் சுமார் 6000 விண்ணப்பங்களை கவர்கின்றன.

படம்: திஷானி திஸாநாயக்க, உதவி உப தலைவர் சந்தைப்படுத்தல், யூனியன் வங்கி

குளோபல் பிஸ்னஸ் அவுட்லுக் விருதுகள் வழங்கும் நிகழ்வில் யூனியன் வங்கிக்கு இலங்கையின் சிறந்த பண முகாமைத்துவ வங்கிக்கான விருது வழங்கி கௌரவிப்பு

குளோபல் பிஸ்னஸ் அவுட்லுக் விருதுகள் வழங்கும் நிகழ்வில் யூனியன் வங்கிக்கு இலங்கையின் சிறந்த பண முகாமைத்துவ வங்கிக்கான விருது வழங்கி கௌரவிப்பு

 

யூனியன் வங்கி பேணி வரும் தனது நவீன Biz Direct தீர்வுக்காக குளோபல் பிஸ்னஸ் அவுட்லுக் விருதுகள் வழங்கும் நிகழ்வில், இலங்கையின் சிறந்த பண முகாமைத்துவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.

கூட்டாண்மை மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை வாடிக்கையாளர்களுடன் Biz Direct தொடர்ச்சியாக பேணி வரும் கொடுக்கல் வாங்கல்களின் வெற்றிகரமான செயற்பாட்டை இந்த விருது உறுதி செய்துள்ளது.

புரட்சிகரமான வங்கியியல் கொடுக்கல் வாங்கல் முறையானது, பரிபூரண தீர்வாக அமைந்துள்ளதுடன், வியாபாரங்களுக்கு சர்வதேச அணுகல் மற்றும் பாவனையை பெற்றுக் கொள்வதற்கான வசதியை வழங்குவதுடன், உள்நாட்டு மற்றும் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட வியாபாரங்களை ஒரு பொத்தானை அழுத்துவதனூடாக மேற்கொள்ளக்கூடிய வசதியை வழங்குகின்றது. இது பாவனையாளருக்கு நட்பான, மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய வங்கியியல் தீர்வாக அமைந்துள்ளதுடன், குறிப்பிட்ட வியாபார வங்கியியல் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் அமைந்துள்ளது. மேலும் வியாபாரங்களுக்கு தமது கொடுப்பனவு நிர்வாகத்தை சிறந்த முறையில் கட்டுப்படுத்திக் கொள்வதற்கான வசதியையும் வழங்குகின்றது.

இந்த விருதை வென்றமை தொடர்பாக யூனியன் வங்கியின் மொத்த வங்கியியல் பிரிவின் பதில் தலைவர் திருமதி. ஹிரந்தி டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், ‘இந்த சர்வதேச அமைப்பிடமிருந்து இலங்கையின் சிறந்த பண முகாமைத்துவ வங்கியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதையிட்டு நாம் மிகவும் பெருமையும், மகிழ்ச்சியுமடைகின்றோம். 2016 இல் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து குறுகிய காலத்தினுள் Biz Direct இனால் முன்னெடுக்கப்படும் சிறந்த செயற்பாடுகள் இந்த விருதினூடாக மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. Biz Direct என்பது வங்கியின் வியாபார மட்ட வாடிக்கையாளர்களின் குறித்த வியாபார நடவடிக்கைகள் பற்றிய சிறந்த புரிந்துணர்வை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், துறைசார் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடியது. யூனியன் வங்கியினால் வழங்கப்படும் சேவைகளில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதுடன், உள்நாட்டு வங்கிகளில் பண முகாமைத்துவத்தில் சந்தை தலைமைத்துவத்தை வெற்றியீட்டியுள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து கட்டியெழுப்ப நாம் எதிர்பார்ப்பதுடன், மேம்படுத்தப்பட்ட பண முகாமைத்துவ அனுபவத்தை எமது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்தும் பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கின்றோம்.’ என்றார்.

இந்த தொழில்நுட்பம் செலவற்ற தீர்வாக வழங்கப்படுவதுடன், சகல அளவுகளையும் கொள்ளளவுகளையும் கொண்ட வியாபாரங்களுக்கு பல அனுகூலங்களை பெற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளதுடன், பொருளாதாரத்தின் சிறிய செயற்பாட்டாளர்களுக்கு தன்னியக்கமான பண முகாமைத்துவ செயன்முறைகளினூடாக சௌகரியம் மற்றும் வினைத்திறன் போன்றவற்றினூடாக வலுவூட்டுவதாக அமைந்துள்ளது. இந்த சொகுசு முன்னர் சில முன்னணி கூட்டாண்மை நிறுவனங்களுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. பாதுகாப்பு என்பது பிரதான வேறுபடுத்தும் விடயமாக அமைந்துள்ளது. கட்டமைப்பினுள் Secure control ஒன்றிணைக்கப்பட்டுள்ளதுடன், Biz Direct இன் பாதுகாப்பு உள்ளம்சங்கள் என்பது, துறையில் பின்பற்றப்படும் பிந்திய பாதுகாப்பு நியமமான TLS (Transaction Layer Security) இன் மீது செயற்படுகின்றது. ஏனைய பல நிறுவனங்கள் தற்போதும் SSL கட்டமைப்பை பின்பற்றுகின்றன.

மேலும், கொடுக்கல் வாங்கல்களை உறுதி செய்வதற்கு சௌகரியமான தன்னியக்க அலேர்ட்களை உருவாக்கல் ஊடாக Biz Direct இனால் குறிப்பிட்ட வியாபார கொடுப்பனவு செயன்முறைகளை கட்டியெழுப்பிக் கொள்ள முடியும். இதில் சீரமைக்கப்பட்ட சேகரிப்புகள் மற்றும் பெற்றுக் கொண்டவை செம்மைப்படுத்தப்படல் போன்றவற்றுக்கான ஒன்றிணைக்கப்பட்ட சேகரிப்பு முறைமை காணப்படுவதுடன், தினசரி வௌ;வேறு மூலங்களிலிருந்து பாரியளவு தொகையை சேகரிப்பாக பெறும் நிறுவனங்களுக்கு அதிகளவு பெறுமதியை சேர்ப்பதாக அமைந்துள்ளது. பரிபூரண முகாமைத்துவ தகவல் அறிக்கைகளை பார்வையிட வாய்ப்பளிப்பதுடன், விவரமான கூட்டாண்மை நிதியியல் கொடுக்கல் வாங்கல் நிரலை கொண்டுள்ள Biz Direct இனால் முகாமையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தீர்மானமெடுத்தல்களை மேற்கொள்ள முடிகின்றது.

இந்த கட்டமைப்பினூடாக பரந்தளவு இலகு, ஒரு அழுத்த வியாபார கொடுக்கல் வாங்கல்கள், பன் நாணய மற்றும் வெளிநாட்டு பணப்பரிமாற்ற தீர்வுகள், பரிபூரண பணப்பாய்ச்சல் முகாமைத்துவம், Host2Host கொடுப்பனவுகள் மற்றும் அசல் நேர அறிக்கையிடல் போன்றவற்றினூடாக வியாபார வினைத்திறன் மேம்படுத்தப்படுகின்றது. பாதுகாப்பை பொறுத்தமட்டில், Biz Direct இனால் நவீன உறுதிப்படுத்தல் முறைகள் hard/soft tokens போன்றவற்றுடன், SMS மற்றும் மின்னஞ்சல் ஊடான உறுதிப்படுத்தல் போன்றவற்றை வழங்குகின்றது.

Biz Direct இனால் நிறுவனங்களுக்கு தன்னியக்கத்தினூடாக கொடுப்பனவு செயன்முறையில் பொது இயலாமைகள் மற்றும் இடர்கள் போன்றன தவிர்க்கப்படுகின்றன. ஒற்றை உறுதிப்படுத்தல் உள்ளம்சத்தினூடாக காசோலைகள் கையொப்பமிடலின் போது ஒன்றிணைந்த உறுதிப்படுத்தல் மேற்கொள்ளப்படுகின்றது. காசோலைகளுக்கு மேலாக, பங்கிலாபங்கள், கடன் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவு ஆணைகள் போன்ற அச்சிடப்பட்ட ஆவணங்களை கட்டமைப்பு கையாள்கின்றது. இதனூடாக முகாமையாளருக்கு நேரம் மீதப்படுத்தப்படுகிறது. Biz Direct இன் பண மாற்று தெரிவை பயன்படுத்தி, வியாபாரங்கள் கையாளும் செலவை குறைத்துக் கொள்ள முடியும் என்பதுடன், பணி வினைத்திறனை மேற்கொள்ளவும் முடியும்.

யூனியன் வங்கி தான் சேவைகளை வழங்கும் சகல வாடிக்கையாளர் பிரிவுகளுக்கும் ஒப்பற்ற வங்கியியல் அனுபவத்தை பெற்றுக் கொடுக்கிறது. மாற்றியமைத்துக்கொள்ளக்கூடிய பொருட்கள், நீடிக்கப்பட்ட அணுகல் புள்ளிகள் மற்றும் தொழில்நுட்பம் செயற்படுத்தப்பட்ட சௌகரியங்கள் போன்ற வங்கியின் வழிமுறைகளினூடாக, வாடிக்கையாளர்களுக்கு நேர்த்தியான வங்கியியல் அனுபவம் சேர்க்கப்படுகிறது. தனது பரந்தளவு வாடிக்கையாளர்களின் பாரிய இடர் பகுதிகளை இனங்கண்டு, அவற்றை நிவர்த்தி செய்து, சௌகரியம் மற்றும் பெறுமதி சேர்க்கக்கூடிய தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதில் வங்கி பெருமளவு முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. குளோபல் அவுட்லுக் விருதுகள் 2019 இல் சிறந்த பண முகாமைத்துவ வங்கி எனும் விருதை பெற்றுள்ளதனூடாக, பரந்தளவு வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் வங்கியியல் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு நவீன வங்கியியல் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கான யூனியன் வங்கியின் அர்ப்பணிப்பு மீள உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

குளோபல் பிஸ்னஸ் அவுட்லுக் விருதுகள் பற்றி

குளோபல் பிஸ்னஸ் அவுட்லுக் விருதுகளினூடாக, உலகளாவிய ரீதியில் இயங்கும் பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் வியாபாரத்தில் சிறப்பாக செயலாற்றும் நடவடிக்கைகளை விருதுகள் வழங்கி கௌரவிப்பது எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. புத்தாக்கம், ஆக்கத்திறன் மற்றும் பெறுமதி உருவாக்கத்துக்கான வழிநடத்தல் போன்றவற்றுக்கு உரித்தான கௌரவிப்பை பெற்றுக் கொடுப்பது இதன் இலக்காகும். வினைத்திறன் வாய்ந்த, நேர்மையான மற்றும் வெளிப்படையான நடுவர் செயன்முறையை கொண்டுள்ளதையிட்டு இந்த விருதுகள் வழங்கும் திட்டம் பெருமை கொள்வதுடன், விருதுகளை வென்ற அனைவரும் தமது விருதுகளை 12 மாத கால மதிப்பீட்டு காலத்துக்கு கொண்டிருப்பார்கள். ஐக்கிய இராஜ்ஜியத்தை தளமாகக் கொண்டியங்கும் சஞ்சிகையானது, வியாபார உலகில் இடம்பெறும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பான முன்னணி தகவல் வழங்குநராக திகழும் இலக்குடன் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை உள்வாங்கும் வகையில் அமைந்துள்ளது.

லங்காபே டென்னோவேஷன் விருதுகள் 2018 இல் யூனியன் வங்கிக்கு கௌரவிப்பு

லங்காபே டென்னோவேஷன் விருதுகள் 2018 இல் யூனியன் வங்கிக்கு கௌரவிப்பு

பட விளக்கம்: இடமிருந்து: யூனியன் வங்கியின் வாடிக்கையாளர் தீர்வுகள் பொறுப்பு மற்றும் மாற்று நாளிகைகள் உதவி பதில் தலைவர் மனிஷ பெர்னான்டோ, யூனியன் வங்கியின் மாற்று நாளிகைகள் முகாமையாளர் யொஹான் அலஹகோன், நடுவர் குழாமின் தலைவரும், தொலைத்தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அமைச்சின் முன்னாள் செயலாளருமான வசந்த தேஷப்பிரிய, இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகளுக்கான பணிப்பாளர் தர்மசிறி குமாரதுங்க, லங்காகிளியர் தலைவர் அனில் அமரசிங்க, லங்காகிளியர் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சன்ன டி சில்வா ஆகியோர் காணப்படுகின்றனர்.

யூனியன் வங்கி சிறந்த பின்-புல செயற்பாடுகளை பேணி வருகின்றமைக்காக லங்காபே டெக்னோவிஷன் விருதுகள் 2018 இல் கௌரவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வு கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் நடைபெற்றது. வாடிக்கையாளர்களுக்கு துரித மற்றும் வேகமாக சேவைகளை வழங்குவதற்காக மேற்கொள்ளும் தொழில்நுட்ப மேம்படுத்தல்களுக்கு காண்பிக்கும் அர்ப்பணிப்புக்கு கிடைத்துள்ள மற்றுமொரு கௌரவிப்பாக இந்த விருது அமைந்துள்ளது. வங்கியின் காலம் தவறாத விநியோகம், இணைப்புத்திறன், வியாபார நோக்கு, செயன்முறைகள் மற்றும் பொறிமுறைகள் போன்ற சிறந்த இயலுமைகளை கௌரவிக்கும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது.

யூனியன் வங்கியின் வாடிக்கையாளர் வங்கியியல் பிரிவின் உப தலைவி திருமதி. சாயா ஜயவர்தன கருத்துத் தெரிவிக்கையில், ‘இந்த விருதை வெற்றியீட்டியுள்ளமையையிட்டு நாம் பெருமை கொள்கிறோம். ஊழியர்களால் வெளிப்படுத்தப்படும் கடின உழைப்புகளை இது இலகுவாக்குவதுடன், பின்-புலத்தில் இடம்பெறும் நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. டிஜிட்டல் வங்கியியல் என்பது, கடதாசியின்றிய செயற்பாடுகள் மாத்திரமல்ல. நாட்டில் காணப்படும் வேகமாக வளர்ந்து வரும் வர்த்தக வங்கி எனும் வகையில், மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் வேகமான மற்றும் வினைத்திறன் வாய்ந்த சேவைகளை பெற்றுக் கொடுக்க உதவியாக அமைந்திருக்கும்’ என்றார்.

வங்கிகள் மற்றும் வாடிக்கையாளரிடையே முக்கியமான பிணைப்பை ஏற்படுத்தும் பகுதியாக ATM கள் காணப்படுகின்றன. 24/7 சுயமாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் சௌகரியத்தை வழங்குகின்றன. வளர்ச்சி மூலோபாயத்துக்கமைய, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைக் கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான மற்றும் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளச் செய்ய யூனியன் வங்கி பெருமளவு முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. லங்காகிளியரின் பொது ATM switch இனால் வலுவூட்டப்பட்டுள்ளதுடன், CEFTS மற்றும் SLIPS இன் கொடுப்பனவு முகாமைத்துவ வினைத்திறனை வழங்குகிறது. தனது வாடிக்கையாளர் பிரிவுகளில் மேம்படுத்தப்பட்ட தீர்வுகளை வழங்குவதற்காக தனது ATM வலையமைப்பை விஸ்தரிப்பது, மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் வங்கியியல் கட்டமைப்பு, ஒன்றிணைந்த வீதியுலாக்களினூடாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டல் மற்றும் பண முகாமைத்துவ சேவைகளை மாற்றியமைத்தல் போன்றன யூனியன் வங்கியினால் மேற்கொள்ளப்படும் பாரிய படிமுறைகளாக அமைந்துள்ளன.

SLIM NASCO விருதுகள் வழங்கலில் யூனியன் வங்கி ஊழியர்களுக்கு 2 விருதுகள்

SLIM NASCO விருதுகள் வழங்கலில் யூனியன் வங்கி ஊழியர்களுக்கு 2 விருதுகள்

படம்: மனித வளங்கள் பிரிவின் உப தலைவர் ரவி ஜயசேகர, வாடிக்கையாளர் வங்கியியல் உப தலைவர் திருமதி. சாயா ஜயவர்தன, சாமார ரொசாரியோ மற்றும் எம்.ஏ.சுமேத பிரசாதிக, பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க, சில்லரை சொத்துக்கள் விற்பனை பிரிவின் பிரதம முகாமையாளர் துமித் சுமதிரத்ன ஆகியோர் காணப்படுகின்றனர்.

தேசிய விற்பனை காங்கிரஸ் விருதுகள் (NASCO) நிகழ்வில் இரு பிரதான விருதுகளை யூனியன் வங்கி தனதாக்கியிருந்தது. விற்பனை பிரதிநிதிகளின் செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில், இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகத்தினால் (SLIM) ஏற்பாடு செய்யப்படுகிறது. NASCO 2018 என்பது விற்பனை பிரதிநிதிகளின் முயற்சிகள் மற்றும் செயற்பாடுகளை கௌரவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்படும் பிரதான நிகழ்வாகும். வௌ;வேறு நிறுவனங்களில் பணியாற்றும் இலங்கையின் விற்பனை அதிகாரிகளுக்கான ஒரே தேசிய மட்ட கௌரவிப்பு நிகழ்வாகவும் அமைந்துள்ளது. இந்த ஆண்டில், சுமார் 750க்கும் அதிகமான விண்ணப்பங்கள் இந்த விருதுகள் வழங்கலுக்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்தன. முன்னிலையாளர்கள், நிறைவேற்று அதிகாரிகள், பிராந்திய முகாமையாளர்கள் என பிரிவுகளில், 116 நிறுவனங்களிலிருந்து விண்ணப்பங்கள் வழங்கப்பட்டிருந்தன. இதில் 42 நிறுவனங்கள் முதன் முறையாக பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனூடாக இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வின் போட்டிகரத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வங்கியியல் பிரிவில் கிடைத்திருந்த 50க்கும் அதிகமான விண்ணப்பங்களிலிருந்து யூனியன் வங்கியின் சாமர ரொசாரியோ மற்றும் எம்.ஏ.சுமேத பிரசாதிக ஆகியோர் வெள்ளி விருதை விற்பனை நிறைவேற்று அதிகாரிகள் பிரிவிலும், முன்னிலையாளர் பிரிவில் வெண்கல விருதையும் பெற்றிருந்தனர்.

இந்த விருதுகளை சுவீகரித்திருந்தமை தொடர்பில், வாடிக்கையாளர் வங்கியியல் உப தலைவர் திருமதி. சாயா ஜயவர்தன கருத்துத் தெரிவிக்கையில், ‘இந்த சாதனைகள் தொடர்பில் நாம் பெருமை கொள்வதுடன், எமது இளம் விற்பனை அணியினரின் சிறந்த பெறுபேறுகளுக்காக இந்த கௌரவிப்பு கிடைத்துள்ளது. அர்ப்பணிப்பு, ஈடுபாடு மற்றும் கடின உழைப்பு போன்றன இந்த விருதுகளை பெற்றுக் கொள்ள தேவையானவையாக அமைந்துள்ளன. யூனியன் வங்கியில் இந்த இலக்குகளை எய்தக்கூடிய சாதனையாளர்களை கொண்டிருப்பதையிட்டு நாம் பெருமை கொள்கிறோம்’ என்றார்.

வங்கிகள்

  • Amana Bank PLC
  • Bank of Ceylon
  • Cargills Bank Ltd
  • Citibank
  • Commercial Bank of Ceylon PLC
  • DFCC Bank
  • Hatton National Bank PLC
  • HDFC Bank
  • HSBC Ltd
  • National Development Bank PLC
  • Nations Trust Bank
  • Pan Asia Banking Corporation
  • People’s Bank
  • Public Bank Berhard
  • Sampath Bank PLC
  • Seylan Bank PLC
  • Standard Chartered Bank

நிறுவனங்கள்

  • Merchant Bank of Sri Lanka Finance
  • Central Finance PLC
  • Commercial Leasing and Finance PLC
  • HNB Finance
  • LB Finance PLC
  • People’s Leasing and Finance PLC
  • Softlogic Finance Plc
  • Singer Finance (Lanka) PLC