வாடிக்கையாளர் சௌகரியத்தை மேம்படுத்துவதில் யூனியன் வங்கி தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வரும் செயற்பாடுகளுக்காக 2022 ஆம் ஆண்டுக்கான “சிறந்த பொது ATM செயற்படுத்துனர்” எனும் மெரிட் விருது கௌரவிப்பைப் பெற்றுள்ளது. அண்மையில் இடம்பெற்ற LankaPay Technnovation விருதுகள் வழங்கும் நிகழ்வில், இந்த உயர் கௌரவிப்பு யூனியன் வங்கிக்கு வழங்கப்பட்டிருந்தது. இலங்கையில் கொடுப்பனவு தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தியிருந்த நிறுவனங்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யூனியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சௌகரியம் மற்றும் இலகுவான பண மீளப் பெறல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் நாடு முழுவதிலும் 108 ATM களை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
படம் – இடமிருந்து – யூனியன் வங்கி Retail Liability Products & Alternate Channels முகாமையாளர் யொஹான் அலஹகோன், யூனியன் வங்கி Retail Liability Products & Alternate Channels உப தலைவர் மனிஷ பெர்னான்டோ, இலங்கை நாணய சபையின் அங்கத்தவரான கலாநிதி. ரனீ ஜயமஹா, யூனியன் வங்கியின் பிரதி பிரதம தகவல் அதிகாரி இந்திரஜித் ஹபுஆரச்சி மற்றும் LankaPay (Pvt.)Ltd பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி சன்ன டி சில்வா ஆகியோரைக் காணலாம்.

