இலங்கையின் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனங்கள் 2022 வரிசையில் யூனியன் வங்கியும் தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தரப்படுத்தலை வருடாந்தம் LMD சஞ்சிகை மற்றும் Nielsen IQ ஆகிய நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. 800 ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களின் கருத்துக்களையும், அவர்களின் சிறந்த நிறுவனங்கள் தெரிவுகளின் அடிப்படையில் முன்மொழிவுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டதுடன், நிதிப் பெறுபேறுகள், தரத்தில் கவனம் செலுத்துகின்றமை, நிர்வாகக் கட்டமைப்பு, நேர்மைத்தன்மை, புத்தாக்கம், கூட்டாண்மை கலாசாரம், சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகள், நோக்கம் மற்றும் தேசத்தை கவனத்தில் கொண்டு செயலாற்றுகின்றமை போன்ற அம்சங்களும் இந்த கருத்தாய்வின் போது கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தன.
இந்த கௌரவிப்பு தொடர்பில் யூனியன் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “2022 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனங்கள் வரிசையில் யூனியன் வங்கியும் தரப்படுத்தப்பட்டுள்ளதையிட்டு நான் மிகவும் பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கின்றேன். நெருக்கடியான பொருளாதாரச் சவால்கள் மிக்க சூழலிலும், எமது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கான எமது முயற்சிகளுக்கு கௌரவிப்பு கிடைக்கின்றமை உண்மையில் பெருமைப்பட வேண்டியமாக அமைந்துள்ளது. தேசத்துக்கு 25 வருடங்களுக்கு மேலான சேவையினூடாக, எமது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கான எமது பெறுமதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றோம். தொடர்ச்சியான 25 வருட கால சேவைகளை வழங்குவதுடன், தனது கூட்டாண்மை கொள்கைகள் மற்றும் பெறுமதிகள் போன்றவற்றுக்கு நேர்த்தியாக யூனியன் வங்கி திகழ்வதுடன், கடந்த காலங்களில் நாம் முன்னெடுத்திருந்த சாதனைகளை பிரதிபலிக்கும் மற்றுமொரு கௌரவிப்பாக இது அமைந்துள்ளது.” என்றார்.
இலங்கையின் அதிகளவு மூலதன இருப்பைக் கொண்ட வங்கிகளில் ஒன்றாகவும், 25 வருடங்களுக்கு மேலான சேவையை வழங்கி வருவதுடன், சர்வதேச முதலீட்டு நிறுவனமான TPG இன் வலிமையான ஆதரவுடனும் இயங்கும் வங்கியாக யூனியன் வங்கி திகழ்கின்றது. நிதி உறுதித்தன்மை மற்றும் சர்வதேச அறிவு போன்றவற்றுடன், உறுதியான அடித்தளத்தைக் கொண்டு, யூனியன் வங்கி பரந்தளவு தீர்வுகள் மற்றும் சேவைகளை, வாடிக்கையாளர்கள், கூட்டாண்மை நிறுவனங்கள், சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மைகள் போன்ற பிரிவுகளில் வழங்கி வருகின்றது. யூனியன் வங்கியின் தீர்வுகள் மற்றும் சேவைகள் பற்றிய மேலதிக தகவல்களை 24 மணி நேர ஹொட்லைன் இலக்கமான 011 5800 800 உடன் தொடர்பு கொண்டு அல்லது www.unionb.com எனும் கூட்டாண்மை இணையத்தளத்தில் பிரவேசித்து பெற்றுக் கொள்ள முடியும்.

