நீண்ட காலமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு யூனியன் வங்கி கௌரவிப்பு

படம்: இடமிருந்து:
நில்மினி வீரசேகர (கூட்டாண்மை வங்கியியல்), தனுஷ்க செதுஹேவா (இடர் முகாமைத்துவம்), மினோலி பெர்னான்டோ (நிதியியல்), சரித டி சில்வா (சட்டப் பிரிவு), ரமிதுனி வெல்லாலகே (அத்திடிய கிளை), ஓஷதி குணசேகர (உள்ளக கணக்காய்வு), விந்தியா குணசேகர (மொரட்டுவ கிளை), சண்முகேஸ்வரன் ஜெஸ்டராஜன் (கொட்டாஞ்சேனை கிளை).

யூனியன் வங்கியில் நீண்ட காலமாக சேவையாற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் நீண்ட கால சேவை விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இவ்வாண்டு வங்கியில் நீண்ட காலமாக பணியாற்றும் எட்டு ஊழியர்களின் நீண்ட கால சேவையை கௌரவித்து பெறுமதி வாய்ந்த நினைவுச்சின்னங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தன. யூனியன் வங்கியின் தலைமையகத்தில் அண்மையில் இடம்பெற்ற விசேட வைபவத்தின் போது யூனியன் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்கவினால் இந்த கௌரவிப்பு விருதுகள் வழங்கப்பட்டிருந்தன.

நில்மினி வீரசேகர (கூட்டாண்மை வங்கியியல்), ஓஷதி குணசேகர (உள்ளக கணக்காய்வு) மற்றும் சண்முகேஸ்வரன் ஜெஸ்டராஜன் (கொட்டாஞ்சேனை கிளை) ஆகியோர் 25 வருட சேவையை பூர்த்தி செய்திருந்தமைக்காகவும், மினோலி பெர்னான்டோ (நிதிப் பிரிவு), சரித டி சில்வா (சட்டப் பிரிவு), தனுஷ்க செதுஹேவா (இடர் முகாமைத்துவம்), விந்தியா குணசேகர (மொரட்டுவ கிளை) மற்றும் ரமிந்துனி சாரங்கிகா (அத்திடிய கிளை) ஆகியோர் யூனியன் வங்கியில் 20வருட சேவையை பூர்த்தி செய்திருந்தமைக்காகவும் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த விருதுகள் தொடர்பில் மனித வளங்கள் பிரிவின் உப தலைவர் லிலந்தி தெல்கொட கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் வங்கியின் நீண்ட கால சேவை விருதுகள் வழங்கல் என்பது, வங்கியின் ஊழியர் ஈடுபாடு செயற்பாடுகளின் ஒரு அங்கமாக அமைந்திருப்பதுடன், இதனூடாக நீண்ட கால சேவை, அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளை கௌரவிக்கப்படுகின்றது. இக் கௌரவிப்பினூடாக பணியிடத்தில் ஊழியர்களுக்கு தமது செயற்பாடுகளில் அனுபவம் மற்றும் ஊக்குவிப்பு ஆகியவற்றை மேம்படுத்த முடிந்துள்ளது.” என்றார்.

யூனியன் வங்கியைப் பொறுத்தமட்டில் மனித வளங்கள் முகாமைத்துவம் என்பது பிரதான தந்திரோபாய முன்னுரிமையாக அமைந்துள்ளதுடன், வெகுமதிகளுடனான தொழில்நிலைகளை எதிர்பார்க்கும் ஊழியர்களை அரவணைக்கும் நிறுவனமாக அமைந்துள்ளது. வினைத்திறனான நிர்வாகக் கட்டமைப்புகள் முதல் கவர்ச்சிகரமான வெகுமதித் திட்டங்கள் வரை, முன்னேற்றகரமான தொழில்நிலை விருத்தியுடன், பயிலல் மற்றும் விருத்திக்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஊழியர்களுக்கு தமது முழுத்திறனை எய்துவதற்கு வங்கியினால் பெருமளவு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. வினைத்திறன் அடிப்படையில் இயங்கும் நிறுவனம் எனும் வகையில், யூனியன் வங்கி தொடர்ச்சியாக தனது ஊழியர்களை தமது உயர்ந்த நிலைகளை எய்துவதற்கு ஆதரவளிக்கும் வகையில் இயங்குகின்றது.

வங்கிகள்

  • Amana Bank PLC
  • Bank of Ceylon
  • Cargills Bank Ltd
  • Citibank
  • Commercial Bank of Ceylon PLC
  • DFCC Bank
  • Hatton National Bank PLC
  • HDFC Bank
  • HSBC Ltd
  • National Development Bank PLC
  • Nations Trust Bank
  • Pan Asia Banking Corporation
  • People’s Bank
  • Public Bank Berhard
  • Sampath Bank PLC
  • Seylan Bank PLC
  • Standard Chartered Bank

நிறுவனங்கள்

  • Merchant Bank of Sri Lanka Finance
  • Central Finance PLC
  • Commercial Leasing and Finance PLC
  • HNB Finance
  • LB Finance PLC
  • People’s Leasing and Finance PLC
  • Softlogic Finance Plc
  • Singer Finance (Lanka) PLC