2023 நிதியாண்டில் யூனியன் வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு

2023 ஆம் ஆண்டு யூனியன் வங்கிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடமாக அமைந்திருந்ததுடன், வங்கியின் பெரும்பாண்மை பங்குகளை CG Capital Partners Pte. Ltd. தனது துணை நிறுவனமான Culture Financial Holdings Ltd. ஊடாக கையகப்படுத்தியிருந்தது. CG Corp Global (CG) எனும் சர்வதேச நிறுவனத்தின் அங்கமாக CG Capital Partners Pte. Ltd. திகழ்கின்றது.

2023 நிதியாண்டில் நிலவிய மேம்படுத்தப்பட்ட பெரும்பொருளாதார சூழல், வியாபித்திருந்த நிதிசார் கட்டமைப்பில் சிறப்பாக இயங்குவதற்கு யூனியன் வங்கிக்கு வழியமைத்திருந்தது. 2023 நிதியாண்டில் வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்ததுடன், நிகர வருமானத்தில் 18% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. ஆண்டின் நிகர வருமானம் ரூ. 22,410 மில்லியனாக பதிவாகியிருந்தது.

கடன்கள் மற்றும் திறைசேரி சொத்துக்களிலிருந்து கிடைத்த முன்னேற்றகரமான விளைவுகளின் பெறுபேறாக, வருமானத்தில் பிரதான பங்காக தேறிய வட்டி வருமானம் (NII), 8% இனால் அதிகரித்து ரூ. 6,290 மில்லியனாக பதிவாகியிருந்தது. சொத்துக்கள் புத்தக மீள் விலையிடல் மற்றும் வட்டி செலவுகளை கவனமாக நிர்வகித்திருந்தமை போன்றவற்றினூடாக, தேறிய வட்டி எல்லைப் பெறுமதி 4.7% ஆக பதிவாகியிருந்தது. தேறிய கட்டண மற்றும் தரகு வருமானம் 5% இனால் அதிகரித்து ரூ. 1,200 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில் வியாபார செயற்பாடுகள், கடன் அட்டைகள் மற்றும் பாங்கசூரன்ஸ் (Bancassurance) கட்டணங்கள் போன்றன பங்களிப்பு செய்திருந்தன. மதிப்பிறக்கத்துக்கு முன்னதான வங்கியின் தொழிற்பாட்டு வருமானம் ரூ. 8,098 மில்லியனாக காணப்பட்டது. இது 4% அதிகரிப்பாகும். இக்காலப்பகுதிக்கான மதிப்பிறக்க கட்டணம் ரூ. 1,643 மில்லியனாகும். கவனமான செலவு முகாமைத்துவ செயற்பாடுகளுக்கு மத்தியிலும், வங்கியின் மொத்த தொழிற்பாட்டு செலவீனங்கள் 20% இனால் அதிகரித்து ரூ. 5,120 மில்லியனாக பதிவாகியிருந்தது. பண வீக்கத்தினால், கட்டணப் பட்டியல் விலைகள் அதிகரிப்பு மற்றும் பொது செலவுகள் அதிகரிப்பு போன்றன இதில் தாக்கம் செலுத்தியிருந்தன.

2023 டிசம்பர் 31 ஆம் திகதியன்று, துணை நிறுவனங்களின் பங்குகள் அடங்கலாக, வங்கியின் வரிக்கு முன்னைய இலாபம் (PBT) 119% இனால் அதிகரித்து ரூ. 780 மில்லியனாக பதிவாகியிருந்தது. வரிக்கு பிந்திய இலாபம் (PAT) 21% இனால் அதிகரித்து ரூ. 379 மில்லியனாக காணப்பட்டது. வருடத்தில் வரிகள் மற்றும் கட்டணங்கள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருந்தன. குறிப்பாக நிதிச் சேவைகள் மீதான சமூக பாதுகாப்பு வரி (SSCL) மற்றும் பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் கூட்டாண்மை வரி வீதங்கள் போன்றன அதிகரித்திருந்தமை இதில் தாக்கம் செலுத்தியிருந்தன.

வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 139,087 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7% வளர்ச்சியாகும். மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வங்கி உறுதியான திரள்வு நிலையை பேணியிருந்ததுடன், திரள்வு சொத்து விகிதம் 37.93% ஆக காணப்பட்டதுடன், சகல நாணயங்களுக்குமான திரள்வு வலையமைப்பு விகிதம் 787.67% ஆக காணப்பட்டது. இது ஒழுங்குபடுத்தல் தேவைப்பாட்டை விட உயர்வானதாகும்.

வங்கியின் கடன்கள் மற்றும் முற்பணங்கள் ரூ. 62,208 மில்லியனாக காணப்பட்டதுடன், வாடிக்கையாளர் வைப்புகள் ரூ. 87,985 மில்லியனாக அமைந்திருந்தது. சகல வியாபார பிரிவுகளிலும் உறுதியான செயற்பாடுகளின் ஆதரவுடன், வங்கியின் CASA விகிதம் 27% ஆக பதிவாகியிருந்தது. வியாபார பிரிவுகளில் CASA நோக்குடனான செயற்பாடுகளினூடாக CASA பிரிவில் 8% அதிகரிப்பு பதிவாகியிருந்தது.

வங்கியின் நிலை 3 கடன்கள் விகிதம் என்பது 12.5% ஆக காணப்பட்டதுடன், சில பாரிய கடன்படுனர்கள் செயற்படா நிலைக்கு (நிலை 3) தள்ளப்பட்டதன் காரணமாக மேற்படி விகிதம் அதிகரித்தது. வங்கி உறுதியான மூலதன போதுமை நிலையை பேணியிருந்ததுடன், ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை விட உயர்வாக கொண்டிருந்தது. 2023 டிசம்பர் 31 ஆம் திகதியன்று வங்கியின் மொத்த மூலதன விகிதம் 18.2% ஆக காணப்பட்டது.

யூனியன் வங்கி குழுமத்தில் UB Finance PLC மற்றும் National Asset Management Ltd.ஆகியன அடங்கியுள்ளன. இவையும் முன்னேற்றகரமான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்தன. வரிக்கு முந்திய இலாபத்தில் 72% உயர்வை பதிவு செய்து, ரூ. 901 மில்லியனை எய்தியிருந்தது. அது போன்று வரிக்கு பிந்திய இலாபம் 10% உயர்ந்து ரூ. 464 மில்லியனாக பதிவாகியிருந்தது. குழுமத்தின் மொத்த சொத்துகளின் பெறுமதி ரூ. 147,332 மில்லியனாக காணப்பட்டது. இதில் வங்கியின் பங்கு 94% க்கு அதிகமாக அமைந்திருந்தது.

திரவத் தன்மையான தொழிற்பாட்டு சூழலில் கூட்டாண்மை வங்கியியல் பிரிவை பேணி, கூட்டாண்மை வங்கியியல் அதன் கடன் வழங்கல் மூலோபாயங்களை மீளமைத்திருந்தது. அதனூடாக கடன் தரத்தை பேண முடிந்திருந்தது. யூனியன் வங்கி BizDirect பண முகாமைத்துவ தீர்வைக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு உயர் தரமான உறவு பேண் முகாமைத்துவத்தை வழங்க முடிந்தது. திறைசேரி பிரிவினால், மீள்முதலீட்டு இடர்கள் முறையாக நிர்வகிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக ஆண்டின் இரண்டாம் பாதியில், வட்டி வீதங்களில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததுடன், அரசாங்க முறிகளின் மீது மற்றும் வங்கியின் வெளிநாட்டு நாணய திரள்வு நிலை மீதான வருமானங்களை அதிகரித்துக் கொள்ளும் வகையில் செயலாற்றியிருந்தது. இதனூடாக வங்கியின் தேறிய திறந்த நிலை (NOP) ஒழுங்குபடுத்தல் எல்லையினுள் காணப்பட்டது.

சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் வங்கி வாடிக்கையாளர் மறுசீரமைப்பில் கவனம் செலுத்தி, பொருளாதார மந்தத்தினால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. அத்துடன், தேயிலை சிறு தோட்டச் செய்கையாளர்கள், சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை வியாபாரங்கள் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்களில் கவனம் செலுத்தி SME line of Credit (SMELoC) ஊடாக நிதி வசதிகளையும், ஆலோசனை சேவைகளையும் வழங்கியிருந்தது. பெண்களில் கவனம் செலுத்தும் நிதிச் சேவைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், USAID அமைப்பின் CATALYZE தனியார் துறை அபிவிருத்தி செயற்பாட்டுடன் வங்கி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தது. பொருளாதார தாக்கங்களின் காரணமாக, நுகர்வோர் வங்கியியல் செயற்பாடுகள் தெரிவு செய்யப்பட்ட கடன் வழங்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன், சேமிப்பு ஊக்குவிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. CASA ஐ திரட்டும் வகையில் நிறுவனசார் நாளிகை மற்றும் முகவர் வங்கியியல் வலையமைப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

2023 ஆம் ஆண்டில் வங்கி தனது ஒட்டுமொத்த டிஜிட்டல் வங்கியியல் அனுபவம் மற்றும் IT உட்கட்டமைப்பை மேலும் வலிமைப்படுத்தியிருந்தது. பிந்திய cloud அடிப்படையிலான மென்பொருளை நிறுவி, புதிய மெய்நிகர் கட்டமைப்பை ஸ்தாபித்து, வங்கியின் டிஜிட்டல் விரிவாக்க செயற்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

தொடர்ச்சியாக 12 ஆவது வருடமாகவும், இலங்கையின் சிறந்த 100 வர்த்தக நாமங்கள் வரிசையில் யூனியன் வங்கி தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், LMD இன் நன் மதிப்பைப் பெற்ற நிறுவனங்கள் 2023 வரிசையிலும் உள்வாங்கப்பட்டிருந்தது. Satyn-CIMA பெண்களுக்கு நட்பான பணியிட விருதுகள் வழங்கலில் பெண்களுக்கு நட்பான பணியிடமாக யூனியன் வங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.

படங்கள்:
நிர்வாணா சௌத்ரி, தவிசாளர், யூனியன் வங்கி
இந்திரஜித் விக்ரமசிங்க, பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி, யூனியன் வங்கி

Leave a comment

For security, use of Google's reCAPTCHA service is required which is subject to the Google Privacy Policy and Terms of Use.

வங்கிகள்

  • Amana Bank PLC
  • Bank of Ceylon
  • Cargills Bank Ltd
  • Citibank
  • Commercial Bank of Ceylon PLC
  • DFCC Bank
  • Hatton National Bank PLC
  • HDFC Bank
  • HSBC Ltd
  • National Development Bank PLC
  • Nations Trust Bank
  • Pan Asia Banking Corporation
  • People’s Bank
  • Public Bank Berhard
  • Sampath Bank PLC
  • Seylan Bank PLC
  • Standard Chartered Bank

நிறுவனங்கள்

  • Merchant Bank of Sri Lanka Finance
  • Central Finance PLC
  • Commercial Leasing and Finance PLC
  • HNB Finance
  • LB Finance PLC
  • People’s Leasing and Finance PLC
  • Softlogic Finance Plc
  • Singer Finance (Lanka) PLC