உள்ளம்சங்களும் அனுகூலங்களும்
- கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள்.
- தியாகா வெகுமதி அட்டை மற்றும் புள்ளிகள் கணக்கை ஆரம்பிக்கும் போதும், கணக்கு மீதி அதிகரிக்கும் போதும் வழங்கப்படும். புள்ளிகளை பயன்படுத்தும் போது ஒரு புள்ளியின் பெறுமதி 1 ரூபாய்க்கு நிகரானதாக அமைந்திருக்கும்.
- புலமைப்பரிசில் சாதனை வெகுமதி – தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், மாவட்டத்தின் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான புள்ளிகளைப் பெற்று சித்தியெய்தும் பிள்ளைகளுக்கு 5,000 தியாகா வெகுமதி புள்ளிகள் வழங்கப்படும்.
- 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பராயமடையாதவர்களுக்கு நிதிசார் அறிவூட்டும் பயிற்சிப்பட்டறைகள்.
- தியாகா றிவோர்ட் புள்ளிகள் மற்றும் பிறந்த தின புள்ளிகள் – ரூ. 75,000 க்கு அதிகமான மீதி – ரூ. 75,000 அல்லது அதற்கு அதிகமான கணக்கு மீதியை பேணும் சிறுவர்களுக்கு தியாகா வெகுமதி புள்ளிகள் வழங்கப்படும் (யூனியன் வங்கியிடமிருந்து வெகுமதி அடிப்படையில் பிறந்தநாள் றிவோர்ட் புள்ளிகள் வழங்கப்படும்).
|
கணக்கு மீதி (ரூ.) |
றிவோர்ட் புள்ளிகள் |
கணக்கு மீதி (ரூ.) |
றிவோர்ட் புள்ளிகள் |
| 2,500 | 1,000 | 100,000 | 5,000 |
| 5,000 | 1,000 | 150,000 | 5,000 |
| 10,000 | 1,000 | 250,000 | 7,500 |
| 25,000 | 1,500 | 500,000 | 10,000 |
| 50,000 | 2,500 | 1,000,000 | 15,000 |
| 75,000 | 3,000 |
- குழந்தை 18 வயதை பூர்த்தி செய்த பின்னர் கிட்ஸ் சேவர் கணக்கு, சேமிப்பு கணக்காக சுயமாக மாற்றமடையும்.
தகைமை
- 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் அனைவருக்கும் பெற்றோர்/பாதுகாவலர் அல்லது நலன்விரும்பியினால் Kidz Saver கணக்கு திறக்கப்படலாம்.
- பண வெகுமதித் திட்டத்துக்கு தகைமை பெறுவதற்கு, பிள்ளை 13 வயதை எய்துவதற்கு முன்னர் கணக்கு திறக்கப்பட வேண்டும்.
- தரம் 5 புலமைப்பரிசிலுக்கு தகைமை – கணக்கு மீதியாக ஆகக்குறைந்தது ரூ. 25,000 பேணப்பட வேண்டும் என்பதுடன், உரிமைகோரல் தினத்துக்கு ஆகக்குறைந்தது 12 மாதங்களுக்கு முன்னதாக கணக்கு திறக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்?
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்.
- பிள்ளையின் பிறப்புச்சான்றிதழ்.
- பெற்றோர்/பாதுகாவலர்/நலன்விரும்பியின் தேசிய அடையாள அட்டை/செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் /செல்லுபடியாகும் கடவுச்சீட்டு.
- இடர் தரப்படுத்தல் படிவம்.
- முகவரியை உறுதி செய்வதற்கு அண்மையில் பெற்ற கட்டணப்பட்டியல் / வங்கி அறிக்கை பிரதி.
- கணக்கை ஆரம்பிக்க ரூ. 2,500/- வைப்பு.
- பெற்றோர், பாதுகாவலர் மற்றும் / அல்லது நலன்விரும்பி ஆகியோர் பிள்ளையின் சார்பாக கணக்கை ஆரம்பிக்கலாம்.
நிபந்தனைகளுக்கு உட்பட்டது
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்






