Verified by VISA என்பது VISA வழங்கும் இலகுவான மற்றும் பாதுகாப்பான ஒன்லைன் கொடுப்பனவு சேவையாக அமைந்துள்ளது. உங்கள் யூனியன் வங்கி கடன் அட்டையினூடாக ஒன்லைனில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு கொடுக்கல் வாங்கலின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது.
இந்த சேவை மூலமாக, உங்கள் கடன் அட்டையை பயன்படுத்தி ஒன்லைனில் அங்கிகரிக்கப்படாத கொள்வனவுகள் இடம்பெறுவது தவிர்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஒன்லைன் கொள்வனவின் போதும் பிரத்தியேகமான கடவுச் சொல்லை பதிந்து உங்கள் அடையாளத்தை உறுதி செய்வதை மட்டுமே நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.
இது ஏன் பாதுகாப்பானது?
- ஒன்லைன் கொள்வனவுகளின் போது உங்கள் கடன் அட்டை மோசடிக்குட்படுத்தப்படுவதை தவிர்க்கும்.
- ஒவ்வொரு ஒன்லைன் கொடுக்கல் வாங்கலையும் பிரத்தியேகமான கடவுச் சொல்லினூடாக இது உறுதி செய்யும்.
- ஒவ்வொரு தடவையும் உங்கள் கணக்கு அங்கிகரிக்கப்பட்ட பின்னரே கொடுக்கல் வாங்கல் அனுமதிக்கப்படும்.
இது எவ்வாறு செயற்படுகிறது?
உங்கள் யூனியன் வங்கி கடன் அட்டையில் Verified by VISA வசதியை பயன்படுத்துவது மிகவும் எளிமையானது! இதற்கு பதிவு செய்ய வேண்டியதில்லை. கடவுச் சொல் ஒன்றை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை!
-
- ஒன்லைன் கொடுக்கல் வாங்கல் ஒன்றை ஏற்படுத்தி பாதுகாப்பான உறுதிப்படுத்தல் பக்கத்துக்கு செல்லும் வரை காத்திருக்கவும்.
- அங்கிகரிக்கும் பக்கத்தை https://securepayment.unionb.com என்பதை உறுதி செய்து, உங்கள் கையடக்க தொலைபேசியில் SMS ஊடாக கிடைக்கும் ஒரு தடவை மட்டும் பதிய வேண்டிய கடவுச் சொல்லை (OTP) பயன்படுத்தி உங்கள் கொடுக்கல் வாங்கலை பூர்த்தி செய்யவும்.
ஒரு தடவை மட்டும் பதிய வேண்டிய கடவுச் சொல் (OTP) என்றால் என்ன?
- உங்கள் யூனியன் வங்கி கடன் அட்டையில் ஒன்லைனில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போது கடவுச் சொல் ஒன்றை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை. அதற்கு பதிலாக நீங்கள் ஒரு தடவை மட்டும் பதிய வேண்டிய கடவுச் சொல்லை (OTP) பயன்படுத்தி கொடுக்கல் வாங்கலை உறுதி செய்யலாம். OTP தெரிவு மிகவும் இலகுவானது என்பதுடன், யூனியன் வங்கியிடமிருந்து கிடைக்கும் பாதுகாப்பான ஒன்லைன் கொடுப்பனவு சேவையாக அமைந்துள்ளது.
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





