கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கான நிவாரணங்கள்
இலங்கை மத்திய வங்கியின் 2021 மே 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2021 சுற்றறிக்கை இல. 05.
இலங்கையில் மூன்றாம் அலை கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் சுயதொழிலில் ஈடுபடும் வியாபாரங்கள் அடங்கலான வர்த்தகங்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களின் பிரகாரம்,நிவாரணத்தைப் பெற்றுக் கொள்வதற்கான தகைமை வாய்ந்த கடன் பெறுநர்களை தமது நிலைப்பாட்டுடன், எழுத்து மூலமான கோரிக்கையை 2021.06.21 ஆம் திகதிக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட யூனியன் வங்கிக் கிளை / உறவு முகாமையாளரிடம் சமர்ப்பிக்குமாறு யூனியன் வங்கி கோரிக்கைவிடுக்கின்றது.
நிவாரணத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளின் சுருக்கம் வருமாறு;
- தகைமை: 2021 மே 15 ஆம் திகதியில் உள்ளவாறான சகல செயல் நிலையிலுள்ள வாடிக்கையாளர்கள்.
- நிவாரண சலுகைக் காலம்: 2021 மே 15 முதல் ஆகஸ்ட் 31 வரை (மத்திய வங்கியின் சுற்றறிக்கையின் பிரகாரம் இக்காலப்பகுதியில் வரும் தவணைக் கட்டணங்கள்/மீளச் செலுத்துகைகள் மாறுபடலாம்).
- சலுகை நியதிகள்: மீளச் செலுத்தும் வருமானத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை உறுதி செய்ததன் பிரகாரம் சலுகை வழங்கப்படும்.
- நிவாரணச் சலுகையின் வகை: மாறுபடலாம். வாடிக்கையாளரின் கோரிக்கையின் பிரகாரம் முதலுடன் வட்டி அல்லது முதல்.
- நிவாரணச் சலுகையின் மீதான வட்டி:நிறுத்தி வைக்கப்பட்ட கொடுப்பனவின் மீதான வட்டிப் பெறுமதி 365 TB உடன் சேர்ப்பு 1% என்பதை விட அதிகரிக்க முடியாது.
- மீளமைப்பு: மாறுபடும். கடன் பெறுநரின் மீளச் செலுத்தும் திறன் அடிப்படையில், நீண்ட காலப்பகுதிக்கு மீளச் செலுத்தக்கூடிய வகையில் மீளமைக்கலாம்.
- தண்ட வட்டி: சலுகைக் காலப்பகுதியில் அறவிடப்படமாட்டாது.
- கொடுப்பனவு தாமதங்கள்: பிரயாணக் கட்டுப்பாடுகள் காரணமாக ஆகக்கூடியது 10 நாட்கள் வரை வாடிக்கையாளர்களிடமிருந்து மீளக் கொடுப்பனவுகளை மேற்கொள்வதில் தாமதம் தொடர்பான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளலாம்.
- குத்தகை தவிர்ப்பு: 2021 மார்ச் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2021 இன் சுற்றறிக்கை 3 இன் பிரகாரம் தற்போது குத்தகை கொடுப்பனவுகள் மீது சலுகைகளை அனுபவிக்கும் கடன் பெறுநர்கள் அல்லது 2021 மார்ச் 19 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2021 இன் சுற்றறிக்கை 04 இன் பிரகாரம் சலுகைக் காலத்தை அனுபவிப்போர், இந்த சலுகைகளைப் பெறுவதற்கான தகைமையைப் பெறமாட்டார்கள்.
கடன் அட்டைகளுக்கான சலுகைகள்
- நிலுவைத் திகதி நீடிப்புகள்: மேற்படி சுற்றறிக்கை வழங்கப்படுவதற்கு முன்னர் காணப்பட்ட கடன் அட்டைதாரரின் கொடுப்பனவு நிலை COVID-19 தோற்றினால் பாதிக்கப்பட்டவராயின் உரிய திகதிகளில் பணம் செலுத்தாததற்கு நியாயமான காரணங்களுடன் நிரூபிக்க முடியுமென்றால் தொடர்ந்தும் பேணுவதற்கான படிமுறைகளை வங்கி மேற்கொள்ளும். 2021 ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கைகளை வங்கி மேற்கொள்ளும்.
- கொடுப்பனவுகள்: அட்டையில் அறவிடப்பட்ட வட்டியை மீளத்திருப்புவதற்கான முழுத் தகைமையைப் பெறுவதற்கு, கூற்றில் காணப்படும் நிலுவைத் தொகையைச் செலுத்தித் தீர்ப்பதற்கு மேலதிகமாக 10 வேலை நாட்களை (ஆகக்கூடியது) வங்கி வழங்கும். 2021 ஜூன் 30 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கைகளை வங்கி மேற்கொள்ளும்.
- காலம் தாழ்த்திய கொடுப்பனவு கட்டணம்: நிலுவைத் திகதியில் கொடுப்பனவை மேற்கொள்ளாமைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணங்களை முன்வைக்கும் அட்டைதாரர்களுக்கு மீளளிக்கப்படும் அல்லது ஜுன் மாதத்துக்கான (22 மே 2021 முதல் 21 ஜுன் 2021 மற்றும் 5 ஜுன் 2021 முதல் 4 ஜுலை 2021) கூற்று கிடைத்து நிலுவைத் திகதியிலிருந்து நீடிக்கப்பட்ட 10 வேலை நாட்களுள் செலுத்தப்பட்டால் மீளளிக்கப்படும்.
கோரிக்கைகளை சமர்ப்பித்தல்
கோரும் அத்தியாவசிய தகவல் மற்றும் தொடர்பாடல் தகவல்களுடன், வாடிக்கையாளர்களின் பிரிவின் பிரகாரம் கோரிக்கைகளை பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளுக்கு சமர்ப்பிக்க முடியும்.
பிரத்தியேக வங்கியியல் வாடிக்கையாளர்கள்
மின்னஞ்சல்: C19support-retail@unionb.com
தொடர்பு: உங்கள் யூனியன் வங்கி கிளையுடன் தொடர்பு கொள்ளவும்
கிளை இனங்காணல்: https://www.unionb.com/atm-branch-locator/
கோரிக்கையில் பின்வரும் அத்தியாவசிய தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்:
- முழுப் பெயர்
- வதிவிட முகவரி
- தே.அ.அட்டை/ கடவுச் சீட்டு இல:
- பெற்றுக் கொண்ட வசதியின் தகவல்கள் (வீட்டுக் கடன்/ தனிநபர் கடன்/ சொத்தின் மீதான கடன் /குத்தகை / கடன் அட்டை/ அடகுச் சேவை மற்றும் ஏனையவை).
- உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் கோரிக்கைக்கான காரணம்
- சலுகைக் கோரிக்கை காலம்
- தொலைபேசி இல: வதிவிடம்/மொபைல்
SME வங்கியியல் வாடிக்கையாளர்கள்
மின்னஞ்சல்: C19support-sme@unionb.com
தொடர்புகளுக்கு: கீழே தரப்பட்டுள்ள லிங்கில் காணப்படும் படிவத்தை தரவிறக்கம் (Download) மற்றும் பூர்த்தி செய்து, மேலே தரப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் தொடர்பாடல் விவரங்களுடன் அனுப்பவும் அல்லது உங்களின் யூனியன் வங்கிக் கிளையுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.
SME சலுகை விண்ணப்பப்படிவம் (link)
கிளை இனங்காணல்: https://www.unionb.com/atm-branch-locator/
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





