யூனியன் அஷ்யூரன்ஸ் பி.எல்.சியின் சிரேஷ்ட முகாமைத்துவ அங்கத்தவர்கள் மற்றும் யூனியன் வங்கியின் அங்கத்தவர்கள் பங்காண்மை உடன்படிக்கையில் கைச்சாத்திடுகின்றனர்.
இடமிருந்து:
கிஹான் சமரசிங்க (சிரேஷ்ட முகாமையாளர் – பாங்கசூரன்ஸ்), மனிஷ பெர்னான்டோ (உதவி பதில் தலைவர் – நுகர்வோர் பொறுப்பு பொருட்கள் மற்றும் மாற்று நாளிகைகள்) சாயா ஜயவர்தன (பதில் தலைவர் – நுகர்வோர் வங்கியியல்) இந்திரஜித் விக்ரமசிங்க (பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி) ஆகியோர் ய+னியன் வங்கி சார்பாகவூம், டேர்க் பெரெய்ரா (பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பணிப்பாளர்) சமந்த ஹேரத் (உதவி பொது முகாமையாளர் – பாங்கசூரன்ஸ்) ஜீவன் புஸ்ப்பரங்க (முகாமையாளர் – பாங்கசூரன்ஸ்) ஆகியோர் யூனியன் அஷ்யூரன்ஸ் பி. எல். சி சார்பாக காணப்படுகின்றனர்.
யூனியன் வங்கியூடன் யூனியன் அஷ்யூரன்ஸ் கைகோர்த்து பாங்கசூரன்ஸ் செயற்பாடுகளை விஸ்தரிக்க முன்வந்துள்ளது.வங்கியின் பரந்தளவு வாடிக்கையாளர் வலையமைப்புக்கு ஆயூள் காப்புறுதி தீர்வூகளை பெற்றுக் கொடுப்பதற்கு இதனூடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வூ கொழும்பு ஹில்டன் ரெசிடென்சிஸ் ஹோட்டலில் 2018 ஒக்டோபர் 19ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் இரு நிறுவனங்களையூம் சேர்ந்த பெருமளவான நபர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டின் ஆயூள் காப்புறுதித்துறையில் உறுதியான நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்வதுடன் புத்தாக்கமான ஆயூள் காப்புறுதி தீர்வுகளை வெவ்வேறு வாழ்க்கைமுறைகளுக்குப் பொருத்தமான வகையில் வழங்கி வருகிறது. 30 வருடங்களுக்கு மேலாக இயங்குவதனூடாக நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ள அனுபவத்தினூடாக இலங்கையில் ஆயூளை பாதுகாத்து பேணுவதற்கான நிலையை வழங்கியூள்ளது.
யூனியன் அஷ்யூரன்ஸின் பாங்கசூரன்ஸ் விநியோக பிரிவானது கடந்த காலங்களில் பெருமளவு வளர்ச்சியை பதிவு செய்திருந்ததுடன் தற்போது 500க்கும் அதிகமான வங்கி கிளைகளினூடாக சேவைகளை வழங்கி வருகிறது. நாட்டின் முன்னணி ஐந்து வங்கிகள் இதற்காக யூனியன் அஷ்யூரன்ஸஷுடன் கைகோர்த்துள்ளன. இந்த புரிந்துணர்வவு உடன்படிக்கையினூடாக யூனியன் பாங்கசூரன்ஸ் சேவைகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டு பெருமளவான நபர்களை சென்றடையக்கூடியதாக இருக்கும்.
யூனியன் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியூம் பணிப்பாளருமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில் “முன்னணி வங்கி எனும் வகையில் இந்த பாங்கரன்ஸ் பங்காண்மையை யூனியன் அஷ்யூரன்ஸஷுடன் ஏற்படுத்திக் கொள்வதையிட்டு மிகயூம் மகிழ்ச்சியடைகிறௌம். எம்மைப் போன்றே யூனியன் அஷ்யூரன்ஸஷும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தீர்வூகளையும் சேவைகளையும் பெற்றுக் கொடுப்பதில் அதிகளவு கவனம் செலுத்துகிறது. இதனூடாக வாழ்க்கையை மேம்படுத்தி வளமூட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த மூலோபாய பங்காண்மையினூடாக இரு நிறுவனங்களுக்கும் வளர்ச்சியடையக்கூடியதாக இருக்கும் என்பதுடன் வாழ்க்கையை மாற்றியமைக்கும் பங்காண்மையாக அமைந்திருக்கும்” என்றார்.
யூனியன் அஷ்யூரன்ஸ் பி.எல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியூமான டேர்க் பெரெய்ரா கருத்துத் தெரிவிக்கையில் “பாங்கசூரன்ஸ் களத்தில் முன்னோடி எனும் வகையில்இ இந்த பங்காண்மையினூடாக வங்கியூடன் உறுதியான கூட்டாண்மை உறவை ஏற்படுத்திக் கொள்ளக்கூடியதாக அமைந்திருக்கும். பரந்தளவு வாடிக்கையாளர்களை சென்றடைவதற்கு உதவுவதாக அமைந்திருக்கும் என்பதுடன் சிறந்த ஆயூள் காப்புறுதி தீர்வூகளை பெற்றுக் கொடுப்பதுடன் சென்றடையாத சந்தைகளில் புதிய உறவூகளை மேம்படுத்திக் கொள்ளவூம் ஏதுவாக அமைந்திருக்கும். தொடர்ச்சியாக மெருகேற்றமடைந்து வரும் எமது தயாரிப்பு லாகா மற்றும் சேவை மாதிரிகளினூடாக புதிய நியமங்களை எய்த முடியும் என்பதுடன் இரு நிறுவனங்களுக்கும் அவற்றின் பங்காளர்களுக்கும் உதவியாக அமைந்திருக்கும்” என்றார்.
சந்தை மூலதன இருப்பு மற்றும் புத்தாக்கத்தை பின்பற்றுவதில் இலங்கையில் காணப்படும் சிறந்த 5 தனியார் வர்த்தக வங்கிகளில் ஒன்றாக யூனியன் வங்கி திகழ்கிறது.
இந்த பங்காண்மை பரஸ்பர அனுகூலங்களை பெற்றுக் கொடுக்கும் என்பதுடன் யூனியன் வங்கிக்கு ஒரே கூரையின் கீழ் நிதித் தீர்வூகளை பெற்றுக் கொடுப்பதற்கு உதவியாக அமைந்திருக்கும். யூனியன் அஷ்யூரன்ஸஷுக்கு பரந்தளவூ வாடிக்கையாளர்களை சென்றடைந்து துறையின் சிறந்த வாடிக்கையாளர் சேவை நியமங்களை பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.இலங்கையின் மாபெரும் ஆயூள் காப்புறுதி சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்வதுடன் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல். சி யின் உறுதியான பின்புலத்துடன் இயங்குகிறது. 30 வருட கால சிறப்பை கொண்டாடுவதுடன் யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ச்சியாக தனது ஊழியர்கள் தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. யூனியன் அஷ்யூரன்ஸின் பன்முகப்படுத்தப்பட்ட விற்பனை நாளிகைகளில் ஒன்றாக பாங்கசூரன்ஸ் திகழ்வதுடன் அனுபவம் வாய்ந்த வினைத்திறன் வாய்ந்த சிறந்த ஊழியர்கள் குழுவினரை தன்வசம் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையூடனான சௌகரியமான சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்காக நவீன தொழில்நுட்ப வசதிகளையூம் தன்னகத்தே கொண்டுள்ளது.

