Union Bank உடன் மீண்டும் பாடசாலைக்கு
2017 மே மாதத்தில் இலங்கையில் ஏறத்தாள 14 வருடங்களுக்கு பின்னர் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடுமையான வானிலை மாற்றங்கள் காரணமாக சிறுவர்கள் இளைஞர்கள் உள்ளிட்ட 200ற்கும் மேற்பட்ட மக்களின் உயிர் பறிக்கப்பட்டது. இந்த தென்மேற்கு பருவமழையானது, நாடுமுழுவதும் கடும் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளை ஏற்படுத்தியதுடன், காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அண்ணளவாக 717இ622 மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியது
இந்த அநர்த்த நிலையின் போது, வீடுகள், வாழ்வாதாரங்கள் மற்றும் தமது உடமைகளை இழந்த பலரின் வாழ்க்கையினை மீளக்கட்டியெழுப்பும் வகையில் பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயலாற்றின
இந்த அவசரகால நிலையின் போது, பல்வேறு உதவிப்படைகளுடன் இணைந்து, யூனியன் வங்கியானது, குறித்த பிராந்தியத்தில் வசித்து பாதிப்புக்குள்ளான பாடசாலை மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை முடிந்தளவு விரைவாக மீள ஆரம்பிக்கும் வகையில் ‘மீண்டும் பாடசாலைக்கு’ (‘Back to School’) என்ற கூட்டாண்மை சமூகப்பொறுப்புணர்வுத் திட்டத்தினை ஜூன் மாதத்தில் அங்குரார்ப்பணம் செய்தது.
இந்த செயற்திட்டமானது, சிறுவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வங்கியின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வுக் கோட்பாடுகளுடன் இணைந்ததாக யூனியன் வங்கியின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வுக் குழுவினால் யூனியன் வங்கியின் விளையாட்டு கழகத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டது.
அக்குரஸ்ஸ மற்றும் இரத்தினபுரியில் உள்ள இரண்டு தகுதி வாய்ந்த பாடசாலைகள், குறித்த பிராந்தியத்திலுள்ள வங்கியின் பிராந்திய மற்றும் கிளை பிரதிநிதிகளால் சிபாரிசு செய்யப்பட்டதற்கு இணங்க, இந்த செயற்திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டன
பாடசாலை பைகள், உபகரணங்கள, சப்பாத்து கொள்வனவுக்கான வவுச்சர் உள்ளிட்ட முழுமையான பாடசாலை பொருட்கள் அடங்கிய பொதிகள் இந்த செயற்தி;ட்டத்தின் ஊடாக மொத்தமாக 715 மாணவர்களுக்கு அளிக்கப்பட்டன

செயற்திட்டம் 1 – அத்துரலிய மத்திய கல்லூரி, அக்குரஸ்ஸ

செயற்திட்டம் – இர /ஹல்தொல்ல ஆரம்ப பாடசாலை, இரத்தினபுரி
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





