வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு “எதெர திரிய” வீடமைப்பு கடன் வசதியை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்துடன் (SLBFE) புரிந்துணர்வு உடன்படிக்கையில் யூனியன் வங்கி கைச்சாத்திட்டுள்ளது. அதனூடாக, ரூ. 10 மில்லியன் வரை கடன் வசதியை வழங்குவதுடன், 10 வருடங்கள் வரை மீளச் செலுத்தும் காலப்பகுதியையும் வழங்குகிறது. இதனூடாக வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு தமது வெளிநாட்டு வருமதிகளை பாதுகாப்பான, நீண்ட கால குடும்ப இல்லங்களாக மாற்றிக் கொள்வதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
படம்: புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) தவிசாளர் திரு. கோசல விக்ரமசிங்க மற்றும் யூனியன் வங்கி பிரதம வணிக அதிகாரி திரு. அசங்க ரன்ஹொட்டி ஆகியோர் SLBFE மற்றும் யூனியன் வங்கி பிரதிநிதிகள் முன்னிலையில் கைச்சாத்திடுகின்றனர்.

