யூனியன் வங்கி, Satyn பெண்களுக்கு-நட்பான பணியிட விருதுகள் 2026 நிகழ்வில் தொடர்ந்து இரண்டாவது முறையாக கௌரவிப்பைப் பெற்றுள்ளது. பெண்கள் தலைமை தாங்கவும், வளரவும், மிளிரவும் வாய்ப்பளிக்கும் பன்முகத்தன்மை கொண்ட, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பணியிடத்தை உருவாக்குவதில் வங்கியின் உறுதித் தன்மையை இந்த கௌரவிப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. வங்கியின் சந்தைப்படுத்தல் பிரிவின் துணைத் தலைவர் திஷானி திஸாநாயக்க கூறுகையில், “யூனியன் வங்கி அனைத்து நிலைகளிலும் உள்ள பெண்களைத் தொடர்ந்து ஆதரித்து ஊக்கப்படுத்தி வருகிறது. அவர்களின் வளர்ச்சிக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது. இந்த கௌரவிப்பு, யூனியன் வங்கியிலிருக்கும் அனைத்துப் பெண்களின் அர்ப்பணிப்பு, முயற்சி மற்றும் பலத்தின் பெருமைமிக்க பிரதிபலிப்பாகும்” எனத் தெரிவித்தார்.
படம்:
(இடமிருந்து) யூனியன் வங்கி சந்தைப்படுத்தல் சிரேஷ்ட முகாமையாளர் நிலுஷா வனசிங்க, Satyn சஞ்சிகையின் ஸ்தாபகர்/ஆசிரியர் நயோமினி வீரசூரிய, கலாநிதி. சமந்த ரத்நாயக்க, நடுவர் குழுவின் தலைமைச் செயற்பாட்டாளர், மனித வளங்கள் பிரதம முகாமையாளர் தேவானி கொனாரா மற்றும் யூனியன் வங்கி சந்தைப்படுத்தல் உப தலைவர் திஷானி திசாநாயக்க.

