0117 818181

பாதுகாப்பாக வங்கிப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதற்கான அத்தியாவசிய குறிப்புகள்

1. தெளிவான மற்றும் துல்லியமான அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்

  • சகல வங்கியியல் பரிவர்த்தனைகள் மற்றும் சேவை கோரிக்கைகளை மேற்கொள்ளும் போதும், எப்போதும் முழுமையான, தெளிவான மற்றும் துல்லியமான அறிவுறுத்தல்களை வழங்கவும்
  • பூர்த்தியற்ற அல்லது தெளிவில்லாத அறிவுறுத்தல்களால் கால தாமதங்கள் ஏற்படலாம் அல்லது உங்கள் கணக்கை பாதுகாத்துக் கொள்வதற்கு மேலதிக உறுதிப்படுத்தல்களுக்கான தேவையை ஏற்படுத்தலாம்.

உங்கள் அறிவுறுத்தல்களை மீளாய்வு செய்வதற்கு தருணத்தை எடுத்துக் கொள்வது, உங்களுக்கு துரிதமாக சேவைகளை பெற்றுக் கொடுக்க எமக்கு உதவியாக அமைவதுடன், உங்களின் பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக அமைவதையும் உறுதி செய்ய முடியும்.

2. பாதுகாப்பான டிஜிட்டல் வங்கியியல் பிரிவுகளை பயன்படுத்தல்

  • உங்களின் சௌகரியம் மற்றும் பாதுகாப்பிற்காக, யூனியன் வங்கியின் உத்தியோகபூர்வ டிஜிட்டல் வங்கியியல் கட்டமைப்புகளை பயன்படுத்துமாறு உங்களை ஊக்குவிக்கிறோம்.
  • எமது மொபைல் வங்கிச் சேவை app UBGO ஐ உங்களின் சாதனத்தில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Download on the App StoreAndroid App on Google Play

 

உங்களின் தகவல்களை பாதுகாக்கும் வகையிலும், நீங்கள் எங்கிருந்தாலும் சிக்கல்களின்றி வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை உறுதி செய்யும் வகையிலும், இந்தக் கட்டமைப்புகள் உயர் பாதுகாப்பு உள்ளம்சங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

உங்களின் தனிப்பட்ட மற்றும் வங்கியியல் தரவுகளை பாதுகாத்தல்

  • யூனியன் வங்கி ஒருபோதும் உங்களின் கடவுச் சொல், PIN அல்லது OTP ஐ தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள், குறுந்தகவல்கள் அல்லது சமூக வலைப்பக்கங்களினூடாக கோராது.
  • பகிரப்பட்ட அல்லது பொது சாதனங்களில் உங்களின் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம்.
  • அவதானத்துடன் இருப்பதனூடாக அங்கீகாரமற்ற அணுகல் மற்றும் நிதி இழப்புகளை தவிர்த்துக் கொள்ளலாம்.
  • விசாரணைகள் அல்லது உதவிகளுக்கு எப்போதும் எமது 24மணி நேர அழைப்பு நிலையத்துடன் தொடர்பு கொள்ளவும்.

மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் அவதானமாக இருக்கவும்

  • நம்பமுடியாத வெகுமதிகள், விலைக்கழிவுகள் அல்லது பரிசுகளை வழங்கும் சந்தேகத்திற்கிடமான linkகள் தொடர்பில் அவதானமாக இருக்கவும்.
  • வங்கியின் அப்ளிகேஷன்கள் அல்லது அதனைப் போன்ற வடிவமைப்பிலமைந்த போலியான மொபைல் appகளை டவுன்லோட் செய்வதை தவிர்க்கவும் (apk கோர்ப்புகள் போன்றவை)
  • வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி அழைப்பதாக தெரிவிக்கும் தரப்பினருக்கு அல்லது அறிமுகமில்லாத இலக்கங்களிலிருந்து வரும் அழைப்புகளுக்கு அழைப்புகள், WhatsApp தகவல்கள் அல்லது மின்னஞ்சல்கள் தொடர்பான தகவல்களை வழங்க வேண்டாம்.
  • தனிப்பட்ட அல்லது வங்கித் தகவல்களை பகிர்ந்து கொள்ளுமாறு அவசரமாக அழுத்தம் கொடுக்கும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டாம்.

மோசடி தொடர்பான சந்தேகங்கள் உள்ளதா? உடனடியாக யூனியன் வங்கியின் 24-மணி நேர அழைப்பு நிலையத்துடன் தொடர்பு கொள்ளவும் – 011 781 8181

முறையான அறிவித்தலை வழங்குவதனூடாக, உங்களின் கணக்கை பாதுகாத்திட உதவியாக அமையும்.

தொடர்புகளுக்கு

    எங்களுடன் தொடர்புகொள்ள

    0117 818181

    மின்னஞ்சல்

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC