கிரெடிட் கார்ட்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் தொடர்பான அறிவித்தல்
இலங்கை மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட நிவாரணங்கள் 2020 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளன. திருத்தப்பட்ட தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன:
- 2020 ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல், யூனியன் வங்கியின் ”கிரெடிட் கார்ட்களுக்கான திருத்தப்பட்ட கட்டண அட்டவணையின்” பிரகாரம் காலம் கடந்த கொடுப்பனவுக்கான கட்டணம் அறவிடப்படும். மேலதிக தகவல்களுக்கு தயவு செய்து புதிய கட்டண அட்டவணையை பார்க்கவும். (https://www.unionb.com/credit-cards/service-information/credit-card-tariff/)
- 2020 செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் கிரெடிட் கார்ட் வட்டி வீதம் 18% வரை குறைக்கப்பட்டுள்ளது.
- 2020 ஒக்டோபர் மாதத்தின் பின்னர் தினம் குறிப்பிடப்பட்டுள்ள கூற்றுகளுக்கு ரூ. 50,000 வரை வழங்கப்பட்டிருந்த வட்டி நிவாரணம், தற்போது முதல் இரத்துச் செய்யப்படுகின்றது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
COVID-19 இனால் பாதிக்கப்பட்ட கடனாளர்களுக்கான உதவி
இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் பிரகாரம், யூனியன் வங்கியின் பிரத்தியேக வங்கியியல் பிரிவைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு பின்வரும் நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன.
கடன் அட்டைகள்
- சகல யூனியன் வங்கி கடன் அட்டைகளுக்குமான நீடிக்கப்பட்டள்ள நிலுவை செலுத்தும் கடைசித் திகதி வருமாறு:
| அறிக்கை திகதி | நீடிக்கப்பட்டுள்ள நிலுவை செலுத்தும் கடைசித் திகதி | அடுத்த அறிக்கை திகதி | விசேட குறிப்பு |
| 05 மார்ச் 2020 | 26 மே 2020 | 05 ஜூன் 2020 | 2020 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அறிக்கைகள் எதுவும் தயாரிக்கப்படவில்லை. |
| 22 மார்ச் 2020 | 12 மே 2020 | 22 மே 2020 | 2020 ஏப்ரல் மாதத்தில் அறிக்கைகள் எதுவும் தயாரிக்கப்படவில்லை. |
உங்கள் யூனியன் வங்கி கணக்கில் செயற்படுத்தப்பட்டுள்ள நிலையான கட்டளை ஏற்கனவே செயற்படுத்தப்பட்ட திகதியில் முன்னெடுக்கப்படமாட்டாது என்பதுடன், நீடிக்கப்பட்ட நிலுவைத் திகதியில் அறவிடப்படும். எவ்வாறாயினும், உங்கள் கடன் அட்டை கணக்குக்கு கொடுப்பனவை மேற்கொள்ள நீங்கள் விரும்பினால், எமது டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்தி நீங்கள் மேற்கொள்ளலாம்.
- 2020 செப்டெம்பர் 30ஆம் திகதி வரை கடன் அட்டைகளுக்கு காலம் கடந்த கொடுப்பனவு கட்டணம் அறவிடப்படமாட்டாது.
- 2020 மார்ச் 25 ஆம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களுக்கு மாதாந்தம் செலுத்தப்பட வேண்டிய ஆகக்குறைந்த கொடுப்பனவு 50% இனால் (4% இலிருந்து 2%) குறைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை இல்லாவிடின், அது தொடர்பான எழுத்துமூலமான கோரிக்கை ஒன்றை உங்கள் யூனியன் வங்கிக் கிளைக்கு அனுப்பவும்.**
- உங்கள் கடன் அட்டை மீதான வட்டி வீதம் சகல உள்நாட்டு கொள்வனவுகளுக்கும் 2020 மார்ச் 25ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்படும் ரூ. 50000 வரையான கொள்வனவுகளுக்கு வருடாந்தம் 15% வீதம் அறவிடப்படும். ரூ. 50000 க்கு மேற்பட்ட தொகைக்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு கொள்வனவுக்கும், சாதாரண வட்டி வீதம் அறவிடப்படும்.**
- நிலுவைத்திகதிக்கு முன்னதாக மொத்த நிலுவைத் தொகை செலுத்தப்பட்டால் வட்டி அறவிடப்படமாட்டாது.
- 2020 மார்ச் 25 ஆம் திகதிக்கு பின்னர் நீங்கள் ஏதேனும் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளாவிடின், வட்டி மீளளிப்பு பொருந்தாது என்பதுடன் உங்கள் கடன் அட்டையின் மீதான சாதாரண வட்டி வீதம் அறிக்கை மீதியில் அறவிடப்படும். கீழே தரப்பட்டுள்ள உதாரணங்களை பார்க்கவும்.
- உதாரணம் (i) – 2020 மார்ச் 25 ஆம் திகதிக்கு பின்னரான கடன் அட்டை அறிக்கை தயாரிப்பின் போது, மொத்த கொடுக்கல் வாங்கல் பெறுமதி ரூ.120,000 ஆக பதிவாகியிருந்தால், ரூ. 50,000 வரையான தொகைக்கு வருடாந்தம் 15% வட்டி அறவிடப்படும் என்பதுடன், எஞ்சிய ரூ. 70,000 தொகைக்கு சாதாரணை வட்டி வீதம் அறவிடப்படும்.
- உதாரணம் (ii) – 2020 மார்ச் 25 ஆம் திகதிக்கு பின்னரான கடன் அட்டை
அறிக்கை தயாரிப்பின் போது, மொத்த கொடுக்கல் வாங்கல் பெறுமதி ரூ.120,000 ஆக பதிவாகியிருந்தால், அதற்கு அதே அறிக்கை காலப்பகுதியினுள் ரூ. 20,000 கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டிருந்தால், ரூ. 50,000 வரையான தொகைக்கு வருடாந்தம் 15% வட்டி அறவிடப்படும் என்பதுடன், எஞ்சிய ரூ. 50,000 தொகைக்கு சாதாரணை வட்டி வீதம் அறவிடப்படும். - ** மறுஅறிவித்தல் வரை செல்லுபடியாகும். நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்படும்.
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





