வங்கியின் பெறுபேறுகள்
- செயற்பாட்டு நடவடிக்கைகள் பெறுபேறுகள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 62% வளர்ச்சியை பதிவு செய்து ரூ. 362 மில். ஆக பதிவு
- வரிக்கு முன்னைய இலாபம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 49% வளர்ச்சியை பதிவு செய்து ரூ. 366 மில். ஆக பதிவு.
- தேறிய வட்டி வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19% வளர்ச்சியை பதிவு செய்து ரூ. 1,013 மில். ஆக பதிவு.
- கட்டணம் மற்றும் தரகு வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19% ஆல் அதிகரித்து ரூ. 266 மில். ஆக பதிவு.
- மொத்த மூலதன போதுமை விகிதம் 16.9% ஆக பதிவு
குழுமத்தின் பெறுபேறுகள்
- வரிக்கு முந்திய இலாபம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 31% ஆல் அதிகரித்து ரூ. 401 மில். ஆக பதிவு.
- தேறிய வட்டி வருமானம் 17% ஆல் அதிகரித்து ரூ. 1,219 மில். ஆக பதிவு.
பிரதான வங்கியியல் வளர்ச்சி மற்றும் இலாபகரத் தன்மை
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிர்ணயித்திருந்த மூன்றாண்டு கால வளர்ச்சி மூலோபாயத்தின் பிரகாரம், தொடர்ந்தும் உறுதியான வளர்ச்சியை பதிவு செய்து நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் யூனியன் வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளது. பிரதான வங்கியியல் செயற்பாடுகள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 62% வளர்ச்சியை பதிவு செய்திருந்ததுடன், பிரதான வங்கியியல் செயற்பாடுகளினூடான இலாபம் ரூ. 362 மில்லியன் வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. கடந்த சில காலாண்டுகளாக வங்கித் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த சவால்கள் நிறைந்த பேரளவுபொருளாதார பின்புலத்திலும் இந்த தொடர்ச்சியான வளர்ச்சி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2019 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலப்பகுதியில், யூனியன் வங்கி வரிக்கு முந்திய இலாபமாக முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 49% வளர்ச்சியை பதிவு செய்து ரூ.366 மில். ஆக பதிவாகியிருந்தது. இதனூடாக ஆண்டுக்கான மூலோபாய வளர்ச்சி இலக்குகளை எய்துவதற்கான வங்கியின் தொடர்ச்சியான பெறுபேறுகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
வியாபாரத்தினுள்ளேயும், வியாபார அலகுகளினிடையேயையும் மேற்கொள்ளப்பட்ட இலாகா மீளமைவு நடவடிக்கைகள் ஊடாக வருமான சீராக்கத்தினூடாக தேறிய வட்டி வருமானம் (NII) முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19% வளர்ச்சியடைந்து ரூ. 1,013 மில்லியனாக பதிவாகியிருந்தது. வைப்புகள் மீதான செலவீனங்கள் அதிகரித்திருந்த போதிலும் இந்த பெறுபேறு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில், கட்டணம் மற்றும் தரகு வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19% ஆல் அதிகரித்து ரூ. 266 மில்லியனாக பதிவாகியிருந்தது. கட்டண வருமான வளர்ச்சியில் புதிய அறிமுகமான கடன் அட்டைகள் மீது சேகரிக்கப்பட்ட கட்டணங்கள் போன்றனவும் அடங்கியுள்ளன. வியாபார மற்றும் பண அனுப்பல்கள் தொடர்பான கட்டணங்கள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஓரளவு வீழ்ச்சியை பதிவு செய்திருந்தன.
அரசாங்க முறிகள் மீதான மூலதன வருமானம் ரூ. 71 மில்லியனாகும். இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 23% அதிகரிப்பாகும். குறித்த காலப்பகுதிக்கான அலகுகள் மீதான முதலீடுகளின் மூலமான வருமானம் ரூ. 70 மில். ஆகும். இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 33% வீழ்ச்சியாகும். கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் அமுலுக்கு வந்த வரி விதிமுறைகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் காரணமாக, அலகுகள் மீதான முதலீடுகள் குறைக்கப்பட்டதுடன், இது இந்த மறை வளர்ச்சியில் பங்களிப்பை செலுத்தியிருந்தது. அதேவேளை, வெளிநாட்டு நாணய பரிமாற்று வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 71% வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது. இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வடைந்ததன் காரணமாக மீள்மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டமை இதற்கு காரணமாக அமைந்திருந்தது.
மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில், வங்கியின் மொத்த செயற்பாட்டு வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8% அதிகரிப்பை பதிவு செய்து ரூ. 1,368 மில்லியனாக பதிவாகியிருந்தது. மொத்த செயற்பாட்டு செலவீனங்கள் முறையான வகையில் நிர்வகிக்கப்பட்டதுடன், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2% வளர்ச்சியை மாத்திரம் பதிவு செய்து ரூ. 955 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதன் பெறுபேறாக தொழிற்பாட்டு எல்லைப் பெறுமதி முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 24% ஆல் உயர்ந்து ரூ. 413 மில்லியனாக பதிவாகியிருந்தது.
குறித்த காலப்பகுதிக்கான வலுக்குறைப்புக் கட்டணம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 53% ஆல் குறைந்து ரூ. 51 மில். ஆக பதிவாகியிருந்தது. இந்தப் பெறுமதியில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியை அவதானிக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
துணை நிறுவனங்களினால் பகிரப்பட்ட இலாபம் ரூ. 4 மில். ஆகும், மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் நிலவிய மோசமான சந்தை சூழ்நிலைகள் காரணமாக வங்கியின் இரு துணை நிறுவனங்களும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தமை காரணமாக ரூ. 19 மில். குறைவு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த காலப்பகுதிக்கான நடைமுறைக்கு வந்த வரி வீத அதிரிப்பு காரணமாக இக்காலப்பகுதிக்கான வரிக்கு பிந்திய இலாபம் பாதிக்கப்பட்டிருந்தது. காலாண்டுக்கான வரி வீதம் 72% முன்னைய காலப்பகுதியில் இந்தப் பெறுமதி 52% ஆகும். இலங்கை அபிவிருத்தி முறிகள், நம்பிக்கை அலகுகள் மீதான முதலீடுகள், கடன் பத்திரங்கள் மீதான முதலீடகள் மற்றும் கடன் மீளச் செலுத்தல் கட்டணம் அறிமுகம் ஆகியவற்றினூடாக ஈட்டப்பட்ட இலாபங்கள் மீது வரி விலக்கழிப்புகள் மீளப் பெறப்பட்டமை காரணமாக இந்த வரி வீதத்தில் அதிகரிப்பு பதிவாகியிருந்தது. குறிப்பீட்டு வரி சேர்மானம் மீளப் பெறப்பட்டமைக்கு மேலாக, பிரயோக வரி வீதத்தில் தாக்கம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதன் பெறுபேறாக, இக்காலப்பகுதிக்கான வரிக்குப் பிந்திய இலாபம் ரூ. 105 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19% வீழ்ச்சியாகும்.
வங்கியின் மொத்த பரிபூரண வருமானம் ரூ. 295 மில்லியனாகும். இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ. 246 மில்லியன் அதிகரிப்பாகும். கடன் சாதனங்களின் மீது பதிவாகியிருந்த நேர்த்தியான பெறுமதி இதில் தாக்கம் செலுத்தியிருந்தது.
2019 மார்ச் 31 ஆம் திகதியன்று, வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 124,624 மில்லியனாக பதிவாகியிருந்தது. வங்கியின் கடன்கள் மற்றும் வருமதிகள் போன்றன ரூ. 76,279 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டிலிருந்து இத்திகதி வரை ஒப்பிடுகையில் 3% வளர்ச்சியாகும். ஐந்தொகையில், வைப்புகளின் இருப்பு என்பது ரூ. 77,897 மில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், வைப்புகளுக்கு நிகரான கடன் விகிதம் 99% இலிருந்து 105% ஆக அதிகரித்திருந்தது. வங்கி தொடர்ச்சியாக சொத்துக்களின் தரம் மீது கவனம் செலுத்தியிருந்தது. இதற்காக கடுமையான இடர் முகாமைத்துவ செயன்முறைகளை பின்பற்றியிருந்தது. தேறிய NPL விகிதம் என்பது 3.1% ஆக காணப்பட்டது.
அத்துடன் மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில், மொத்த CASA பெறுமதி ரூ. 20,077 மில்லியனாக அதிகரித்திருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22% வளர்ச்சியாகும். ஆரோக்கியமான CASA உட்பிரவேசத்தை பேணியிருந்ததுடன், வாடிக்கையாளர், கூட்டாண்மை மற்றும் சிறிய, நடுத்தரளவு வங்கியியல் பிரிவுகளின் மூலோபாய கையகப்படுத்தல்களினூடாக உந்துதலளிக்கப்பட்டிருந்தது.
வங்கி தொடர்ச்சியான உறுதியான மூலதன போதுமையை பேணியிருந்தது. மொத்த மூலதன விகிதம் ஐந்தொகையில் 16.9% ஆக பதிவாகியிருந்தது.
வங்கியின் குழுமத்தில் இரு துணை நிறுவனங்கள் காணப்படுகின்றன. UB ஃபினான்ஸ் கம்பனி லிமிடெட் மற்றும் தேசிய சொத்துக்கள் முகாமைத்துவ நிறுவனம் (National Asset Management Limited) ஆகியன இக்காலப்பகுதியில் வரிக்கு முந்திய இலாபமாக 401 மில்லியன் ரூபாயை பதிவு செய்திருந்தன. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 31% வளர்ச்சியாகும். குழுமத்தின் மொத்த சொத்துக்கள் பெறுமதி ரூ. 134,065 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில் 93% ஐ வங்கி பிரதிபலித்திருந்தது. ஐந்தொகை திகதியில் குழுமம் 16% எனும் ஆரோக்கியமான பிரதான மூலதன விகிதத்தை பேணியிருந்தது.
வியாபார பெறுபேறுகள் மற்றும் மூலோபாய செயற்படுத்துநர்கள்
3 ஆண்டு வளர்ச்சி மூலோபாயத்தில் 2ஆம் ஆண்டில் வளர்ச்சியை பதிவு செய்யும் வகையில், யூனியன் வங்கியின் கூட்டாண்மை வங்கியியல் இலாகா மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது. சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளில் உறுதியான வளர்ச்சியை பதிவு செய்திருந்ததுடன், கூட்டாண்மை கடன்கள் இலாகா என்பது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. கூட்டாண்மை வங்கியியல் பிரிவின் வைப்புகள் இருப்பு என்பது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 45% ஆல் அதிகரித்திருந்தது. பண முகாமைத்துவ பிரிவான யூனியன் வங்கி Biz Direct இனால் வங்கியின் CASA வளர்ச்சியில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது.
சிறிய நடுத்தரளவு வங்கியியல் இலாகா என்பது 2019 ஆம் ஆண்டின் 1ல் காலாண்டில் தொடர்ச்சியான வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. இதில் மூலோபாய நிதி வழங்கல் வழிமுறை பங்களிப்பு வழங்கியிருந்ததுடன், தெரிவு செய்யப்பட்ட துறைகளில் பெருமளவு விநியோகங்களை மேற்கொண்டிருந்தது. வங்கியின் சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மை வியாபாரம் என்பது நேர்த்தியான ஆரம்பத்தை ஆண்டில் வெளிப்படுத்தியிருந்ததுடன், சொத்துக்கள் வளர்ச்சியில் உறுதியான பங்களிப்பை செலுத்தியிருந்தது.
வங்கியின் வாடிக்கையாளர் வங்கியியல் பிரிவு வைப்புகள் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கியிருந்தது. CASA இலாகா விரிவாக்கம் என்பது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. யூனியன் வங்கி கோல்ட் சேர்கிள் அறிமுகம் என்பது மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட ஆண்டில் அதிகளவு முக்கியத்துவம் பெற்றிருந்தது. எதிர்பார்ப்புகளை கொண்ட தனிநபர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கு வலுச் சேர்க்கும் வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட நிதியியல் அங்கமாக யூனியன் வங்கி கோல்ட் சேர்கிள் திகழ்கிறது. வங்கியியல் சேவை சேமிப்பு மற்றும் கடன் பெறல் போன்ற தெரிவுகள் அடங்கிய பல்வேறு அனுகூலங்களை தன்வசம் கொண்டுள்ளதுடன், இளம் நிபுணர்கள் மற்றும் வியாபார உரிமையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப நெகிழ்ச்சியான மற்றும் சௌகரியமான நியதிகளையும் வழங்குவதாக அமைந்துள்ளது. அர்ப்பணிப்பான உறவு முகாமையாளர்களினூடாக பிரத்தியேகமான சேவைகளை பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையில் யூனியன் வங்கி கோல்ட் சேர்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது. சந்தையில் அதிகரித்துச் செல்லும் வங்கியியல் தேவைகளுக்கு பொருத்தமான வாடிக்கையாளர் வங்கிச் சேவையை தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்கான வங்கியின் உறுதியான அர்ப்பணிப்பான அமைந்துள்ளது.
மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வங்கியின் வாடிக்கையாளர் சொத்துக்கள் இலாகா என்பது தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டிருந்ததுடன், அதன் அடைமான அடிப்படையிலான கடன்கள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 196% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் கடன் அட்டை பிரிவை அறிமுகம் செய்திருந்ததுடன், வங்கியின் வாடிக்கையாளர் வங்கியியல் செயற்பாடுகள் தொடர்ச்சியான விரிவாக்கல் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தது. கடன் அட்டைகள் மீதான விசேட கொடுப்பனவுகள் இதில் அடங்கியிருந்தன.
மதிப்பீட்டுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வங்கியின் திறைசேரி பிரிவு எதிர்பார்த்ததை விட உயர்ந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்தது. இதனூடாக வங்கியின் இலாபத்துக்கும் பங்களிப்பு சேர்க்கப்பட்டிருந்தது.
வங்கியின் மனித வளங்கள் மற்றும் செயற்பாடுகள் பிரிவும் வியாபார வளர்ச்சியில் தொடர்ச்சியாக பங்களிப்பு வழங்கியிருந்தன. வளங்கள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றின் மீளமைவு போன்றவற்றினூடாக சந்தை போக்குகளுக்கு ஏற்ப செயற்பாடுகள் மீளமைக்கப்பட்டிருந்தன. செலவு கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளினூடாக, வருமானத்தின் மீதான செலவீன விகிதமும் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டிருந்தது.
யூனியன் வங்கியின் சிறிய, நடுத்தரளவு வியாபார பிரிவின் சிறந்த செயற்பாட்டாளர்களை கௌரவிக்கும் வகையில் மார்ச் 30 ஆம் திகதி மரினோ பீச் ஹோட்டலில் யூனியன் வங்கியின் வாடிக்கையாளர் மற்றும் SME வங்கியியல் விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘வெற்றிக்கான ஓட்டம்’ என்பது இதன் தொனிப் பொருளாக அமைந்திருந்தது. 2018 ஆம் ஆண்டில் வங்கியின் சிறந்த கிளை மற்றும் விற்பனை ஊழியர்கள் இதன் போது கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
யூனியன் வங்கியின் வருடாந்த நிதிஅறிக்கை 2018, 2019 பெப்ரவரி மாதம் ‘உறுதியான பிணைப்புகளை கட்டியெழுப்பல்’ எனும் தொனிப்பொருளில் வெளியிடப்பட்டிருந்தது. இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் வணிக வங்கிகளில் ஒன்றாக திகழ்வதற்கான தனது அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், உறுதியான மூலதன இருப்பு, பரிபூரண தயாரிப்பு இலாகா, வலுவூட்டப்பட்ட அணி, தொழில்நுட்ப செம்மை மற்றும் செயற்பாட்டு வினைத்திறன் போன்றவற்றினூடாக, நிலைபேறான வளர்ச்சி வாய்ப்புகளை சகல பங்காளர்களுக்கும் உருவாக்கிக் கொடுக்கும்.
மேலும், 2019, மார்ச் 27 ஆம் திகதி அன்று, வங்கி தனது பணிப்பாளர் சபையினால் 7,875,798 சாதாரண பங்குகள் வரை பங்கொன்று ரூ. 15 க்கு மீளக் கொள்வனவு செய்வது குறித்த தீர்மானத்தை பொருத்தமான விதிமுறைகளின் பிரகாரம் மேற்கொண்டிருந்தது.
1ஆம் காலாண்டில் வங்கியின் பெறுபேறுகள் தொடர்பாக யூனியன் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ‘2019 ஆம் ஆண்டை நாம் நேர்த்தியாக ஆரம்பித்துள்ளோம். பிரதான வங்கியியல் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி பதிவாகியிருந்தது. எவ்வாறாயினும், பேரளவான சூழல் நிலைகள் மிகவும் சவால்கள் நிறைந்தனவாக அமைந்துள்ளன. இந்த உறுதியான பெறுபேறுகளை தொடர்ச்சியாக பேண எதிர்பார்ப்பதுடன், எமது வியாபார வளர்ச்சியை விஸ்தரிப்பதுடன், மூலோபாய வியாபார தூண்களின் அடிப்படையில் விரிவாக்க எண்ணியுள்ளோம். இலாகா கையகப்படுத்தல் அடங்கலாக அசேதன வளர்ச்சி மூலோபாயங்களின் அடிப்படையில் மூலதன பயன்பாட்டுடன் பங்காளர் வருமதிகளை மேம்படுத்த எண்ணியுள்ளோம்.’ என்றார்.

