0117 818181

புத்தாண்டை முன்னிட்டு யூனியன் வங்கி கடன் அட்டைகளினூடாக சலுகைகள்

புத்தாண்டை முன்னிட்டு யூனியன் வங்கி கடன் அட்டைகளினூடாக சலுகைகள்

 

புத்தாண்டு பருவ காலத்தை முன்னிட்டு தமது கடன் மற்றும் பற்று அட்டைகளின் மீது பெருமளவு அனுகூலங்களை பெற்றுக் கொடுப்பதற்கு யூனியன் வங்கி முன்வந்துள்ளது.

புகழ்பெற்ற ஆடை, ஆபரண விற்பனையகங்கள், உணவகங்கள், தளபாட விற்பனையகங்கள், வீட்டுப்பாவனை பொருட்கள் விற்பனையகங்கள் மற்றும் ஒன்லைன் பகுதிகளில் பரந்தளவு விலைக்கழிவுகள் மற்றும் விசேட சலுகைகளை வழங்க முன்வந்துள்ளது.

புத்தாண்டு காலப்பகுதியில், யூனியன் வங்கி கடன் அட்டைகளினூடாக நாடு முழுவதிலும் காணப்படும் சுப்பர் மார்கெட்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது 20% வரை விலைக்கழிவை பெற்றுக் கொள்ளலாம். முன்னணி ஆடை விற்பனை நிலையங்களில் 30% வரை, வாகன பராமரிப்பு நிலையங்களில் 40% வரை மற்றும் கவர்ச்சிகரமான விடுமுறை பகுதிகளுக்கு 50% வரை விலைக்கழிவுகளை பெறலாம்.

யூனியன் வங்கி கடன் அட்டை விலைக்கழிவுகளை புகழ்பெற்ற ஹோட்டல்கள் மற்றும் விடுமுறை தங்குமிடங்களை வருடம் முழுவதிலும் பெறலாம். இதனூடாக வங்கியின் அட்டைதாரர்களுக்கு தமது அன்புக்குரியவர்களுடன் மனம்மறவாத விடுமுறை அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

கடந்த ஒக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட யூனியன் வங்கி கடன் அட்டை, வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான அறிமுகம் செய்திருந்த ‘Cashback’ ஊக்குவிப்புத் திட்டத்தினூடாக பெருமளவு வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தத் திட்டத்தினூடாக சுப்பர் மார்கெட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் எரிபொருட்கள் கட்டணங்களில் பெருமளவு சேமிப்புகள் வழங்கப்பட்டிருந்தது.

அதிகம் ஸ்வைப் செய்யுங்கள், அதிகம் அனுகூலம் பெறுங்கள் எனும் தனது உறுதிமொழிக்கமைய, யூனியன் வங்கி கடன் அட்டைகள் வழங்கும் விலைக்கழிவுகளுக்கு மேலாக, வாடிக்கையாளர்களுக்கு 0% தவணைக்கட்டண முறைகள், அட்டை மீதான கடன் மற்றும் மீதி மாற்ற வசதி போன்றன வழங்கப்படுகின்றன. உயர் பெறுமதி வாய்ந்த கொள்வனவுகளின் போது வட்டியில்லாத இலகுவான தவணை முறை கொடுப்பனவு வசதி வழங்கப்படுவதுடன், அட்டையின் மீது துரிதமாக மற்றும் இலகுவாக கடன் பெறக்கூடிய வசதி மற்றும் கவர்ச்சிகரமான மீளச் செலுத்தல் வீதங்களில் நெகிழ்ச்சிகரத்தன்மை போன்றனவும் வழங்கப்படுகின்றன.

இந்த சலுகைகள் தொடர்பான மேலதிக தகவல்களை 011 5 800 800 அல்லது www.unionb.com எனும் இணையத்தளத்தை பார்வையிடுவதனூடாக பெற்றுக் கொள்ளலாம்.

எதிர்பார்ப்புகள் நிறைந்த நபர்களின் கனவுகளை நிறைவேற்றும் Union Bank Gold Circle

எதிர்பார்ப்புகள் நிறைந்த நபர்களின் கனவுகளை நிறைவேற்றும் Union Bank Gold Circle
சாயா ஜயவர்தன

படம்: யூனியன் வங்கியின் வாடிக்கையாளர் வங்கியியல் பிரிவின் பதில் தலைவர் சாயா ஜயவர்தன.

யூனியன் வங்கி தனது ‘Union Bank Gold Circle’ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. எதிர்பார்ப்புகள் நிறைந்த நபர்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட விசேட நிதித் திட்டமாக இது அமைந்துள்ளது.

சேமிப்பு மற்றும் கடன் பெறல் பிரிவுகளில் பெருமளவு அனுகூலங்களைக் கொண்டதாக இந்த விசேட வங்கியியல் திட்டம் அமைந்துள்ளது. இதனூடாக இளம் நிபுணர்கள் வியாபாரிகளின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு நெகிழ்ச்சித்தன்மை மற்றும் சௌகரியம் ஆகியவற்றை சேர்த்திடும் வகையில் அமைந்துள்ளது.

Union Bank Gold Circle ஊடாக, கணக்குதாரருக்கு ஒரு மாத சம்பளத் தொகையை ஆகக்கூடியது ரூ. 250,000 வரையில் முற்பணமாக பெற்றுக் கொள்ள முடியும். மேலும், கணக்குதாரர்களுக்கு பெருமளவு வங்கியியல் அனுகூலங்களை அனுபவிக்க முடியும் என்பதுடன், முன் அனுமதிக்கப்பட்ட கடன் அட்டைகள், வீட்டுக் கடன்கள் மீது விசேட வட்டி வீதங்கள் மற்றும் சொத்துக்களுக்கு நிகரான கடன்கள் மற்றும் பிளாட்டினம் கடன் அட்டை வழங்கல் கட்டணத்தில் விலைக்கழிவு போன்றன வழங்கப்படும். கணக்குதாரர்களுக்கு பாதுகாப்பு பண வைப்பு லொக்கர் வசதிகளும் விசேட விலைக்கழிவில் வழங்கப்படும். மேலும் வெளிநாட்டு நாணயங்களை வழங்கும் போதான தரகுக் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.

பிரத்தியேக கவனிப்பு மற்றும் துல்லியமான நிதி ஆலோசனை ஆகியவற்றை பெற்றுக் கொடுக்கும் வகையில், Union Bank Gold Circle ஊடாக கணக்குதாரர்களுக்கு பிரத்தியேகமான சேவைகளை பெற்றுக் கொடுக்கும் உறவு முகாமையாளர் ஒருவர் இயங்குவார். சௌகரியம் மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை உறுதி செய்யும் வகையில், Union Bank Gold Circle கணக்கினூடாக இலவச இணைய வங்கியியல் மற்றும் மொபைல் வங்கியியல் சேவைகள் போன்றவற்றுடன் SMS அலேர்ட்ஸ் வசதிகளும் வழங்கப்படும்.

வியாபார உரிமையாளர்களின் வௌ;வேறு நிதித் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில், இந்த வங்கியியல் கட்டமைப்பினூடாக இலவச பண சேகரிப்பு சேவைகள் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

Union Bank Gold Circle அறிமுகம் தொடர்பாக யூனியன் வங்கியின் வாடிக்கையாளர் வங்கியியல் பிரிவின் பதில் தலைவர் சாயா ஜயவர்தன கருத்துத் தெரிவிக்கையில், ‘இந்த பிரத்தியேகமான சேவை, எதிர்பார்ப்புகள் நிறைந்த அர்ப்பணிப்பாக செயலாற்றும் நிபுணர்கள் மற்றும் வியாபார உரிமையாளர்களின் கனவுகளை வெற்றிப்பாதையில் கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது. எமது வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள பிரத்தியேக வங்கியியல் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில், கட்டமைக்கப்பட்ட வழிமுறையை யூனியன் வங்கி பின்பற்றுகிறது. எனவே, Union Bank Gold Circle என்பது சந்தையில் வளர்ந்து வரும் தேவைகளுக்கமைய நாம் எமது நுகர்வோர் வங்கியியல் சேவைகளை விஸ்தரிக்கும் நடவடிக்கைகளில் காண்பிக்கும் அர்ப்பணிப்பாக அமைந்துள்ளது. Union Bank Gold Circle பல வங்கியியல் அனுகூலங்களை தன்வசம் கொண்டுள்ளதுடன், மத்தியளவு மற்றும் உயர்மட்ட நிபுணர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களுடன் இணைந்து வளர்ச்சிப்பாதையில் பயணிக்க கைகோர்க்க திட்டமிட்டுள்ளோம். அதனூடாக அவர்களை தமது இலக்குகளை நோக்கி கொண்டு செல்ல முடியும் என்பதுடன், யூனியன் வங்கியுடன் வளமான வங்கியியல் பங்காண்மையை ஏற்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்பை வழங்குகிறோம்.’ என்றார்.

Union Bank Gold Circle மற்றும் வங்கியின் பரந்தளவு வாடிக்கையாளர் வங்கிச் சேவைகள் பற்றிய தகவல்களை வங்கியின் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட இணையத்தளமான www.unionb.com இல் பார்வையிட முடியும்.

கண்டியில் யூனியன் வங்கியின் கடன் அட்டைகள் அறிமுகம்

கண்டியில் யூனியன் வங்கியின் கடன் அட்டைகள் அறிமுகம்

யூனியன் வங்கி கொழும்பு பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க.

ஆகஸ்ட் மாதம் யூனியன் வங்கியின் கடன் அட்டைகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, மத்திய மாகாணத்தில் விசேட அறிமுகத்தை மேற்கொள்ளும் வகையில், கண்டி ஏர்ள்ஸ் ரீஜென்ஸி ஹோட்டலில் விசேட நிகழ்வொன்றை யூனியன் வங்கி அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் வாடிக்கையாளர்கள் மற்றும் விசேட விருந்தினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

யூனியன் வங்கியின் கடன் அட்டைகள் தங்கம், பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர் ஆகிய தெரிவுகளில் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததுடன், VISA payWave அம்சத்தையும் கொண்டுள்ளன. சில்லறை வங்கியியல் தயாரிப்பு தெரிவுக்கு புதிய உள்ளம்சத்தையும் சேர்க்கிறது. வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறை தேவைகளை கவனத்தில் கொண்டு, மூலோபாய அடிப்படையில் பரந்தளவு அனுகூலங்கள், சலுகைகள் மற்றும் பிரத்தியேகமான உள்ளம்சங்களை கொண்டு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் யூனியன் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ”யூனியன் வங்கியின் கடன் அட்டைகள் VISA PayWave உள்ளம்சத்தைக் கொண்டுள்ளன. இதனூடாக அதிகளவு வாடிக்கையாளர் சௌகரியத்தை வழங்கும் பிளாஸ்ரிக் அட்டைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. மேலும், இந்த அட்டையினூடாக வருடம் முழுவதிலும் அதிகளவு சேமிப்புகள் மற்றும் அனுகூலங்கள் போன்றன வழங்கப்படுகின்றன” என்றார்.

இந்த நிகழ்வின் நோக்கம், யூனியன் வங்கியின் கடன் அட்டைகளை அறிமுகம் செய்து, பொது மக்கள் மத்தியில் அதில் காணப்படும் அனுகூலங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. இந்த விழிப்புணர்வு செயற்பாட்டுக்கு மேலதிகமாக, 2 நாள் ஊக்குவிப்பு செயற்பாடுகள் கண்டி சிட்டி சென்ரரில் (KCC) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் யூனியன் வங்கியின் ஊழியர்கள் பங்கேற்றிருந்ததுடன், இந்த அட்டையில் காணப்படும் அனுகூலங்கள் தொடர்பான விழிப்புணர்வை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தனர்.

சந்தையை தொடர்ச்சியாக யூனியன் வங்கி கடன் அட்டைகள் கவர்ந்திழுப்பதுடன், அட்டைதாரர்களுக்கு பெருமளவான அனுபவங்களுடன் பாரிய சேமிப்புச் சலுகைகளையும் வழங்குகிறது.

வங்கியின் நாடளாவிய ரீதியில் காணப்படும் கிளை வலையமைப்பில் கடன் அட்டைகளை கொள்வனவு செய்ய முடியும் என்பதுடன், வங்கியின் 24 x 7 அழைப்பு நிலையத்துடன் 011 5800800 ஊடாக தொடர்பு கொண்டு பிரத்தியேகமான சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

யூனியன் வங்கி கடன் அட்டைகள் மற்றும் இதர தயாரிப்புகள் தொடர்பான மேலதிக விவரங்களுக்கு unionb.com எனும் இணையத்தளத்தை பார்க்கவும்.

பாங்கசூரன்ஸ் செயற்பாடுகளை விஸ்தரிக்கும் வகையில் யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் யூனியன் வங்கி இடையே பங்காண்மை கைச்சாத்து

பாங்கசூரன்ஸ் செயற்பாடுகளை விஸ்தரிக்கும் வகையில் யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் யூனியன் வங்கி இடையே பங்காண்மை கைச்சாத்து

யூனியன் அஷ்யூரன்ஸ் பி.எல்.சியின் சிரேஷ்ட முகாமைத்துவ அங்கத்தவர்கள் மற்றும் யூனியன் வங்கியின் அங்கத்தவர்கள் பங்காண்மை உடன்படிக்கையில் கைச்சாத்திடுகின்றனர்.

இடமிருந்து:
கிஹான் சமரசிங்க (சிரேஷ்ட முகாமையாளர் – பாங்கசூரன்ஸ்), மனிஷ பெர்னான்டோ (உதவி பதில் தலைவர் – நுகர்வோர் பொறுப்பு பொருட்கள் மற்றும் மாற்று நாளிகைகள்) சாயா ஜயவர்தன (பதில் தலைவர் – நுகர்வோர் வங்கியியல்) இந்திரஜித் விக்ரமசிங்க (பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி) ஆகியோர் ய+னியன் வங்கி சார்பாகவூம், டேர்க் பெரெய்ரா (பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பணிப்பாளர்) சமந்த ஹேரத் (உதவி பொது முகாமையாளர் – பாங்கசூரன்ஸ்) ஜீவன் புஸ்ப்பரங்க (முகாமையாளர் – பாங்கசூரன்ஸ்) ஆகியோர் யூனியன் அஷ்யூரன்ஸ் பி. எல். சி சார்பாக காணப்படுகின்றனர்.

யூனியன் வங்கியூடன் யூனியன் அஷ்யூரன்ஸ் கைகோர்த்து பாங்கசூரன்ஸ் செயற்பாடுகளை விஸ்தரிக்க முன்வந்துள்ளது.வங்கியின் பரந்தளவு வாடிக்கையாளர் வலையமைப்புக்கு ஆயூள் காப்புறுதி தீர்வூகளை பெற்றுக் கொடுப்பதற்கு இதனூடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வூ கொழும்பு ஹில்டன் ரெசிடென்சிஸ் ஹோட்டலில் 2018 ஒக்டோபர் 19ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் இரு நிறுவனங்களையூம் சேர்ந்த பெருமளவான நபர்கள் கலந்து கொண்டனர்.

நாட்டின் ஆயூள் காப்புறுதித்துறையில் உறுதியான நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்வதுடன் புத்தாக்கமான ஆயூள் காப்புறுதி தீர்வுகளை வெவ்வேறு வாழ்க்கைமுறைகளுக்குப் பொருத்தமான வகையில் வழங்கி வருகிறது. 30 வருடங்களுக்கு மேலாக இயங்குவதனூடாக நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ள அனுபவத்தினூடாக இலங்கையில் ஆயூளை பாதுகாத்து பேணுவதற்கான நிலையை வழங்கியூள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸின் பாங்கசூரன்ஸ் விநியோக பிரிவானது கடந்த காலங்களில் பெருமளவு வளர்ச்சியை பதிவு செய்திருந்ததுடன் தற்போது 500க்கும் அதிகமான வங்கி கிளைகளினூடாக சேவைகளை வழங்கி வருகிறது. நாட்டின் முன்னணி ஐந்து வங்கிகள் இதற்காக யூனியன் அஷ்யூரன்ஸஷுடன் கைகோர்த்துள்ளன. இந்த புரிந்துணர்வவு உடன்படிக்கையினூடாக யூனியன் பாங்கசூரன்ஸ் சேவைகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டு பெருமளவான நபர்களை சென்றடையக்கூடியதாக இருக்கும்.

யூனியன் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியூம் பணிப்பாளருமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில் “முன்னணி வங்கி எனும் வகையில் இந்த பாங்கரன்ஸ் பங்காண்மையை யூனியன் அஷ்யூரன்ஸஷுடன் ஏற்படுத்திக் கொள்வதையிட்டு மிகயூம் மகிழ்ச்சியடைகிறௌம். எம்மைப் போன்றே யூனியன் அஷ்யூரன்ஸஷும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தீர்வூகளையும் சேவைகளையும் பெற்றுக் கொடுப்பதில் அதிகளவு கவனம் செலுத்துகிறது. இதனூடாக வாழ்க்கையை மேம்படுத்தி வளமூட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த மூலோபாய பங்காண்மையினூடாக இரு நிறுவனங்களுக்கும் வளர்ச்சியடையக்கூடியதாக இருக்கும் என்பதுடன் வாழ்க்கையை மாற்றியமைக்கும் பங்காண்மையாக அமைந்திருக்கும்” என்றார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பி.எல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியூமான டேர்க் பெரெய்ரா கருத்துத் தெரிவிக்கையில் “பாங்கசூரன்ஸ் களத்தில் முன்னோடி எனும் வகையில்இ இந்த பங்காண்மையினூடாக வங்கியூடன் உறுதியான கூட்டாண்மை உறவை ஏற்படுத்திக் கொள்ளக்கூடியதாக அமைந்திருக்கும். பரந்தளவு வாடிக்கையாளர்களை சென்றடைவதற்கு உதவுவதாக அமைந்திருக்கும் என்பதுடன் சிறந்த ஆயூள் காப்புறுதி தீர்வூகளை பெற்றுக் கொடுப்பதுடன் சென்றடையாத சந்தைகளில் புதிய உறவூகளை மேம்படுத்திக் கொள்ளவூம் ஏதுவாக அமைந்திருக்கும். தொடர்ச்சியாக மெருகேற்றமடைந்து வரும் எமது தயாரிப்பு லாகா மற்றும் சேவை மாதிரிகளினூடாக புதிய நியமங்களை எய்த முடியும் என்பதுடன் இரு நிறுவனங்களுக்கும் அவற்றின் பங்காளர்களுக்கும் உதவியாக அமைந்திருக்கும்” என்றார்.

சந்தை மூலதன இருப்பு மற்றும் புத்தாக்கத்தை பின்பற்றுவதில் இலங்கையில் காணப்படும் சிறந்த 5 தனியார் வர்த்தக வங்கிகளில் ஒன்றாக யூனியன் வங்கி திகழ்கிறது.

இந்த பங்காண்மை பரஸ்பர அனுகூலங்களை பெற்றுக் கொடுக்கும் என்பதுடன் யூனியன் வங்கிக்கு ஒரே கூரையின் கீழ் நிதித் தீர்வூகளை பெற்றுக் கொடுப்பதற்கு உதவியாக அமைந்திருக்கும். யூனியன் அஷ்யூரன்ஸஷுக்கு பரந்தளவூ வாடிக்கையாளர்களை சென்றடைந்து துறையின் சிறந்த வாடிக்கையாளர் சேவை நியமங்களை பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.இலங்கையின் மாபெரும் ஆயூள் காப்புறுதி சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்வதுடன் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல். சி யின் உறுதியான பின்புலத்துடன் இயங்குகிறது. 30 வருட கால சிறப்பை கொண்டாடுவதுடன் யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ச்சியாக தனது ஊழியர்கள் தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. யூனியன் அஷ்யூரன்ஸின் பன்முகப்படுத்தப்பட்ட விற்பனை நாளிகைகளில் ஒன்றாக பாங்கசூரன்ஸ் திகழ்வதுடன் அனுபவம் வாய்ந்த வினைத்திறன் வாய்ந்த சிறந்த ஊழியர்கள் குழுவினரை தன்வசம் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையூடனான சௌகரியமான சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்காக நவீன தொழில்நுட்ப வசதிகளையூம் தன்னகத்தே கொண்டுள்ளது.

NAMAL நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ருசிரு அபேசிங்க நியமனம்

NAMAL நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ருசிரு அபேசிங்க நியமனம்

நஷனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிட்டெட் (NAMAL) தலைவர், அலெக்சிஸ் லொவெல், நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக ருசிரு அபேசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். 2018 ஆகஸ்ட் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இலங்கையில் 1991 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முன்னணி அலகு நம்பிக்கை முகாமைத்துவ நிறுவனமாக நஷனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிட்டெட் (NAMAL) திகழ்கிறது. பங்கு மற்றும் நிலையான வருமான சந்தைகளில் முதலீடுகளை மேற்கொள்வதில் 27 வருட கால அனுபவத்தை இவர் கொண்டுள்ளார். யூனியன் வங்கியின் துணை நிறுவனமாக NAMAL திகழ்வதுடன், ஏனைய பங்குதாரர்களாக DFCC வங்கி மற்றும் என்னிட் கெப்பிட்டல் பிரைவட் லிமிட்டெட் திகழ்கிறது.

ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்கள் பிரிவில் அனுபவத்தை கொண்டுள்ள அபேசிங்க, பல சாதனைகளை நிறைவேற்றியுள்ளார். 11 வருட காலம் துறையில் பணியாற்றிய அனுபவத்தை கொண்டுள்ள அபேசிங்க, முன்னர் DPMC அசெட்லைன் ஹோல்டிங்ஸ் (பிரைவட்) லிமிட்டெட்டில் (DPAH) பிரதான செயற்பாட்டு அதிகாரியாக பணியாற்றியுள்ளார். டேவிட் பீரிஸ் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமாக DPMC அசெட்லைன் ஹோல்டிங்ஸ் (பிரைவட்) லிமிட்டெட் திகழ்வதுடன், DP ஹோல்டிங்ஸ் (பிரைவட்) லிமிட்டெட்டின் முழு உரிமையாண்மையை பெற்ற துணை நிறுவனமாகும். பீனிக்ஸ் வென்ச்சர்ஸ் பிரைவலட் லிமிட்டெட்டில் முதலீடுகளுக்கான தலைமை அதிகாரியாகவும் அபேசிங்க பணியாற்றியுள்ளார். பிரான்டிக்ஸ் லங்கா லிமிட்டெட்டின் தாய் நிறுவனமாக இது திகழ்கிறது. பரந்தளவு சொத்துக்கள் முகாமைத்துவ செயற்பாடுகளை அபேசிங்க முன்னெடுத்துள்ளதுடன், இதில் பட்டியலிடப்பட்ட பங்குகள், நிலையான வருமானம், தனியார் பங்காண்மை மற்றும் ரியல் எஸ்டேட் போன்றன அடங்கியுள்ளன. சினமன் எயார் சேவையை முன்னெடுக்கும் சஃவ்ரொன் ஏவியேஷன் பிரைவட் லிமிட்டெட்டின் பிரேரிக்கப்பட்ட பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கார்டிஃவ் மெட்ரொபொலிடன் பல்கலைக்கழகத்தில் ஆடீயு பட்டத்தை அபேசிங்க பெற்றுள்ளதுடன், பிரித்தானியாவின் முகாமைத்துவ கணக்காளர்களின் பட்டய கல்வியகத்தின் துணை அங்கத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யூனியன் வங்கி கடன் அட்டைகளுடன் பெருமளவு சலுகைகளை அனுபவியுங்கள்ள்

யூனியன் வங்கி கடன் அட்டைகளுடன் பெருமளவு சலுகைகளை அனுபவியுங்கள்ள்

பதிவிறக்க

யூனியன் வங்கி, முன்கூட்டிய சித்திரை புதுவருட வெகுமதி வழங்கலை அளிக்கின்றது

யூனியன் வங்கி, முன்கூட்டிய சித்திரை புதுவருட வெகுமதி வழங்கலை அளிக்கின்றது

யூனியன் வங்கி, தமிழ் சிங்கள புது வருடத்தினை ஒட்டி ‘முன்கூட்டிய புத்தாண்டு கொடுக்கல்வாங்கல்’ (‘Kalin Avurudu Ganudenu’)என்ற சேமிப்புகள் மீது வியத்தகு வெகுமதிகளை அளிக்கும் முன்;கூட்டிய வழங்கலை அறிமுகம் செய்துள்ளது.

2018 மார்ச் 25ம் திகதி முதல் அளிக்கப்படவுள்ள இந்த வழங்கல்கள், வாடிக்கையாளர்கள், அடுக்குகள் மட்ட முறைமையிலான சேமிப்புகளை மேற்கொள்வதற்கும், குறித்த ஒவ்வொரு இலக்குமட்டத்திற்கும் பெறுமதிமிக்க வெகுமதிகளை பெற்றுக்கொள்வதற்கும் வழியமைக்கும் அதேவேளை, தமது சேமிப்பு மீதி சிறப்பான வளர்ச்சியினை பெற்றுக்கொள்தலையும் நோக்க முடியும். இந்த வருடத்திற்கான ஊக்குவிப்பானது, தெரிவுசெய்யப்பட்ட சேமிப்பு அடுக்கு மட்டங்கள் மீது பல்வேறு வெகுமதிகளை அளிப்பதன் காரணமாக, அளிக்கப்படும் சலுகைகளை மேலும் மேம்படுத்துகின்றது.

குறித்த இந்த வெகுமதிகள், புதிய மற்றும் ஏற்கனவேயுள்ள சேமிப்பு மற்றும் நடைமுறைக் கணக்குகளில் மேற்கொள்ளப்படும் புதிய வைப்புகள் மீது வழங்கப்படும். அடுக்கு அடிப்படையிலான வெகுமதிக் கட்டமைப்பில் ரூ. 10,000 ற்கும் மேற்பட்ட வைப்புகளுக்கு பயணப்;பை ஒன்று அளிக்கப்பட, ரூ. 50,000 ற்கும் மேற்பட்ட வைப்புகளுக்கு மின்சார கேத்தல் ஒன்று அளிக்கப்படும். ரூ. 100,000ற்கும் மேற்பட்ட வைப்புகளை மேற்கொள்வோர், ப்ளுடுத் ஸ்பீக்கர், பொப்-அப் டோஸ்டர் அல்லது மொபைல் பவர் பேங்க் ஆகியவற்றில் ஒன்றினை வெகுமதியாக பெற்றுக்கொள்ள முடியும். ரூ. 500,000 ற்கும் மேற்பட்ட வைப்புகளை மேற்கொள்வோருக்கு கேஸ் சிலிண்;டர் மற்றும் கேஸ் குக்கர் அல்லது ஃபுட் ப்ரொசெசர் அல்லது ரிமோர்ட் கொன்ட்ரோல் ஸ்டேன்ட் ஃபேன் போன்றவற்றில் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும். ரூ. 1,000,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை வைப்புகளுக்கு LED TV ‘கள், மினி பார் குளிர்சாதனப்பெட்டிகள், Tab கள் அல்லது கேஸ் சிலிண்;டர், இரண்டு பேர்னர் க்ளாஸ் டொப் கேஸ் குக்கர் மற்றும் ஒரு சோஸ்பேன் உள்ளடங்கிய சமையலறை பயன்பாட்டு தொகுதி ஆகிய பிரத்தியேக தொகுதி வெகுமதிகளில் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும்.

யூனியன் வங்கியானது, யூனியன் பேங்க் அல்ட்ரா சேவர் மற்றும் யூனியன் பேங்க் சேலறி பவர் கணக்குகள் உள்ளிட்ட ஏராளம் சேமிப்பு மற்றும் வைப்பு சேவைகளை வழங்குகின்றது. இந்த கணக்குகள் கவர்ச்சிகரமான திரும்பல்கள் மற்றும் பெறுமதி சேர் அனுகூலங்கள் ஆகியவற்றினை வழமையான சேமிப்பாளர்களுக்கு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊக்குவிப்பு சலுகையானது, குறித்த இந்த அனுகூலங்களை பெற்றுக்கொள்வதற்கான சிறந்த வழியாக விளங்கும் அதேவேளை, வங்கிச்சேவை சௌகர்யத்தினை, நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள வங்கியின் 67 கிளைகளினூடாகவும், நாடளாவிய ரீதியில் LankaPay ஊடாக விஸ்தரிக்கப்பட்ட 4000ற்கும் மேற்பட்ட ATM வலைமைப்பின் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

யூனியன் வங்கியானது, தமது ஒன்லைன் வங்கியியல் தளத்தின் ஊடாகவும் மொபைல் பேங்கிங் செயலி ஊடாகவும் புத்தாக்க வங்கியியல் அனுபவத்தினை, வாடிக்கையாளர்களின் மேம்படும் வாழ்க்கைப்பாணி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கொடுக்கின்றது.

‘முன்கூட்டிய புத்தாண்டு கொடுக்கல்வாங்கல்’ ஆனது மட்டுப்படு;த்தப்பட்ட காலத்திற்கு அளிக்கப்படும் சலுகையாக விளங்குவதோடு, கையிருப்பு உள்ளவரை அமுலில் இருக்கும். வாடிக்கையாளர்கள், அருகாமையில் உள்ள யூனியன் வங்கிக் கிளைக்கு விஜயம் செய்வதன் ஊடாக அல்லது வங்கியின் 24 மணிநேர அழைப்பு நிலையத்துடன் 011 5 800 800 இல் தொடர்புகொள்வதன் ஊடாக மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்

வங்கிகள்

  • Amana Bank PLC
  • Bank of Ceylon
  • Cargills Bank Ltd
  • Citibank
  • Commercial Bank of Ceylon PLC
  • DFCC Bank
  • Hatton National Bank PLC
  • HDFC Bank
  • HSBC Ltd
  • National Development Bank PLC
  • Nations Trust Bank
  • Pan Asia Banking Corporation
  • People’s Bank
  • Public Bank Berhard
  • Sampath Bank PLC
  • Seylan Bank PLC
  • Standard Chartered Bank

நிறுவனங்கள்

  • Merchant Bank of Sri Lanka Finance
  • Central Finance PLC
  • Commercial Leasing and Finance PLC
  • HNB Finance
  • LB Finance PLC
  • People’s Leasing and Finance PLC
  • Softlogic Finance Plc
  • Singer Finance (Lanka) PLC