புத்தாண்டை முன்னிட்டு யூனியன் வங்கி கடன் அட்டைகளினூடாக சலுகைகள்

 

புத்தாண்டு பருவ காலத்தை முன்னிட்டு தமது கடன் மற்றும் பற்று அட்டைகளின் மீது பெருமளவு அனுகூலங்களை பெற்றுக் கொடுப்பதற்கு யூனியன் வங்கி முன்வந்துள்ளது.

புகழ்பெற்ற ஆடை, ஆபரண விற்பனையகங்கள், உணவகங்கள், தளபாட விற்பனையகங்கள், வீட்டுப்பாவனை பொருட்கள் விற்பனையகங்கள் மற்றும் ஒன்லைன் பகுதிகளில் பரந்தளவு விலைக்கழிவுகள் மற்றும் விசேட சலுகைகளை வழங்க முன்வந்துள்ளது.

புத்தாண்டு காலப்பகுதியில், யூனியன் வங்கி கடன் அட்டைகளினூடாக நாடு முழுவதிலும் காணப்படும் சுப்பர் மார்கெட்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது 20% வரை விலைக்கழிவை பெற்றுக் கொள்ளலாம். முன்னணி ஆடை விற்பனை நிலையங்களில் 30% வரை, வாகன பராமரிப்பு நிலையங்களில் 40% வரை மற்றும் கவர்ச்சிகரமான விடுமுறை பகுதிகளுக்கு 50% வரை விலைக்கழிவுகளை பெறலாம்.

யூனியன் வங்கி கடன் அட்டை விலைக்கழிவுகளை புகழ்பெற்ற ஹோட்டல்கள் மற்றும் விடுமுறை தங்குமிடங்களை வருடம் முழுவதிலும் பெறலாம். இதனூடாக வங்கியின் அட்டைதாரர்களுக்கு தமது அன்புக்குரியவர்களுடன் மனம்மறவாத விடுமுறை அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

கடந்த ஒக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட யூனியன் வங்கி கடன் அட்டை, வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான அறிமுகம் செய்திருந்த ‘Cashback’ ஊக்குவிப்புத் திட்டத்தினூடாக பெருமளவு வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தத் திட்டத்தினூடாக சுப்பர் மார்கெட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் எரிபொருட்கள் கட்டணங்களில் பெருமளவு சேமிப்புகள் வழங்கப்பட்டிருந்தது.

அதிகம் ஸ்வைப் செய்யுங்கள், அதிகம் அனுகூலம் பெறுங்கள் எனும் தனது உறுதிமொழிக்கமைய, யூனியன் வங்கி கடன் அட்டைகள் வழங்கும் விலைக்கழிவுகளுக்கு மேலாக, வாடிக்கையாளர்களுக்கு 0% தவணைக்கட்டண முறைகள், அட்டை மீதான கடன் மற்றும் மீதி மாற்ற வசதி போன்றன வழங்கப்படுகின்றன. உயர் பெறுமதி வாய்ந்த கொள்வனவுகளின் போது வட்டியில்லாத இலகுவான தவணை முறை கொடுப்பனவு வசதி வழங்கப்படுவதுடன், அட்டையின் மீது துரிதமாக மற்றும் இலகுவாக கடன் பெறக்கூடிய வசதி மற்றும் கவர்ச்சிகரமான மீளச் செலுத்தல் வீதங்களில் நெகிழ்ச்சிகரத்தன்மை போன்றனவும் வழங்கப்படுகின்றன.

இந்த சலுகைகள் தொடர்பான மேலதிக தகவல்களை 011 5 800 800 அல்லது www.unionb.com எனும் இணையத்தளத்தை பார்வையிடுவதனூடாக பெற்றுக் கொள்ளலாம்.

வங்கிகள்

  • Amana Bank PLC
  • Bank of Ceylon
  • Cargills Bank Ltd
  • Citibank
  • Commercial Bank of Ceylon PLC
  • DFCC Bank
  • Hatton National Bank PLC
  • HDFC Bank
  • HSBC Ltd
  • National Development Bank PLC
  • Nations Trust Bank
  • Pan Asia Banking Corporation
  • People’s Bank
  • Public Bank Berhard
  • Sampath Bank PLC
  • Seylan Bank PLC
  • Standard Chartered Bank

நிறுவனங்கள்

  • Merchant Bank of Sri Lanka Finance
  • Central Finance PLC
  • Commercial Leasing and Finance PLC
  • HNB Finance
  • LB Finance PLC
  • People’s Leasing and Finance PLC
  • Softlogic Finance Plc
  • Singer Finance (Lanka) PLC