யூனியன் வங்கி தனது வருடாந்த நத்தார் கரோல் கீத சேவையை அண்மையில் சென். அன்ரியுஸ் ஸ்கொட்ஸ் கேர்க் தேவாலயத்தில் முன்னெடுத்திருந்தது. இதில் வங்கியின் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் அனைவரும் பங்கேற்றிருந்தனர். வங்கியின் கிளை வலையமைப்பைச் சேர்ந்த மற்றும் தலைமையகத்தின் ஊழியர்கள் இணைந்து ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் இந்த கரோல் கீதங்களை பாடியிருந்தனர். இதனூடாக யூனியன் வங்கியின் ஊழியர் குழுவினர் ஒன்று திரட்டப்பட்டிருந்தனர். இந்த கீத நிகழ்வுக்கு வங்கியின் திறமை வாய்ந்த ஊழியர் குழுவினரால் இசையூட்டப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் ஊழியர்களின் குழந்தைகளால் பாடல் இசைப்பும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. திரு மற்றும் திருமதி நத்தார் தாத்தா இந்த நிகழ்வில் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியிருந்தனர். யூனியன் வங்கி விளையாட்டு கழகத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
படம்: யூனியன் வங்கி Choir

