யூனியன் வங்கி அண்மையில் தேசிய தொழில்முயற்சியாண்மை விருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (NEDP) மூன்றாம் கட்டத்தை அண்மையில் பூர்த்தி செய்திருந்தது. இதற்காக மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் தேசிய புத்தாக்க முகவரமைப்பு ஆகியவற்றுடன் கைகோர்த்திருந்தது.
மூன்றாம் கட்டத்த்தின் சான்றளிப்பு வைபவம் அண்மையி்ல் மொரட்டுவ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் யூனியன் வங்கி, மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் தேசிய புத்தாக்க முகவரமைப்பு ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆர்வமுள்ள தொழில்முயற்சியாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் வியாபார உரிமையாளர்களை NEDP கவர்ந்திருந்ததுடன், நிலைபேறான வியாபாரங்களை கட்டியெழுப்புவதற்கு அவசியமான அறிவு, திறன்கள் மற்றும் புத்தாக்கமான சிந்தனை ஆகியவற்றை வழங்கியிருந்தது. இந்தத் திட்டத்தினூடாக, இலங்கையில் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை விருத்திக்கு யூனியன் வங்கி தொடர்ச்சியாக ஆதரவளிக்கின்றது.
படம்: யூனியன் வங்கியின் பிரதம வணிக அதிகாரி அசங்க ரன்ஹொட்டி, NEDP சான்றிதழை பங்குபற்றுனர் ஒருவருக்கு கையளிப்பதையும், அருகில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் வணிக பீடத்தின் பீடாதிபதி கலாநிதி. காயத்ரி குருப்பு காணப்படுவதையும் காணலாம்.

