ஊழியர்களுக்கிடையிலான ஈடுபாடு மற்றும் நலனை பேணி மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், யூனியன் வங்கி சைக்கிள் பவனியை ஏற்பாடு செய்திருந்தது. யூனியன் வங்கி தலைமையகத்தில் ஆரம்பித்து, வெள்ளவத்தை கிளை வரை முன்னெடுக்கப்பட்டு பின்னர் மரைன் டிரைவ் வீதி வழியாக தலைமை அலுவலகத்தை வந்தடைந்திருந்தது. சகல பங்குபற்றுனர்களுக்கும் விறுவிறுப்பான மற்றும் உற்சாகமூட்டும் அனுபவமாக இது அமைந்திருந்தது.
யூனியன் வங்கி விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வினூடாக, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவிப்பது, ஊழியர் நலனை மேம்படுத்துவது மற்றும் நேர்த்தியான மற்றும் ஒன்றிணைந்து கருமமாற்றும் பணியிடக் கலாசாரத்தை உருவாக்குதல் போன்றவற்றில் வங்கி செலுத்தும் கவனம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
படம்: யூனியன் வங்கி ஊழிய அணியினர் நலன் மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தி சைக்கிளோட்டத்தில் ஈடுபட்டுள்ளதை காணலாம்.

