யூனியன் வங்கியைச் சேர்ந்த நாம், மோசடிகளிலிருந்து உங்களையும் உங்கள் அட்டையையும் பாதுகாப்பதற்கு சகல விதமான முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். உங்கள் கொடுக்கல் வாங்கல்களை பாதுகாப்பதற்கு,
- சிப் கொண்ட அட்டைகளை வழங்கல்
- Verified by Visa கட்டமைப்பினூடாக பாதுகாப்பான ஒன்லைன் கொடுக்கல் வாங்கல்கள்
- அர்ப்பணிப்பான அணியின் மூலமாக 24X7 மோசடி கண்காணிப்பு அணி
- 24X7 இயங்கும் அழைப்பு நிலையம் 0117 818181
- உடனுக்குடன் SMS அலேர்ட்கள்
- அட்டை உரிமையாளருக்கு மொபைல் / ஒன்லைன் சேவையை பயன்படுத்தும் வாய்ப்பு
அடையாள திருட்டிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான சில குறிப்புகள்
- தொலைந்த அல்லது களவாடப்பட்ட காசோலைகள் அல்லது கடன் அட்டைகள் பற்றி உடனடியாக வங்கிக்கு அறிவிக்கவும்.
- ஒருபோதும் PAN, பிறந்த திகதி, SSN அல்லது கடவுச்சொற்கள் அடங்கலான உணர்திறன் வாய்ந்த / பிரத்தியேக தகவல்களை வழங்க வேண்டாம்.
- வங்கி அறிக்கைகள், பயன்படுத்தாத காசோலைகள், வைப்பு சிட்டைகள், கடன் அட்டை அறிக்கைகள், கொடுப்பனவு சிட்டைகள், மருத்துவ கட்டணங்கள் மற்றும் கட்டணப்பட்டியல் போன்ற பிரத்தியேக தகவல்கள் அடங்கிய சகல ஆவணங்களையும் அழிக்கவும்.
- பாதுகாப்பான வழிமுறைகளை பயன்படுத்தாத எந்தவொரு இணையத்தளத்துக்கும் உங்கள் எந்தவொரு பிரத்தியேக தகவல்களையும் வழங்க வேண்டாம்.
உங்கள் யூனியன் வங்கி கடன் அட்டையை நீங்கள் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம்
- உங்கள் அட்டை காலாவதியாகும் திகதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக உங்கள் புதுப்பிக்கப்பட்ட அட்டை கிடைக்காவிடின், அது தொடர்பில் எங்களுக்கு அறியத்தரவும்.
- புதிய அட்டையை பெற்றுக் கொண்டவுடன், உடனடியாக அதன் பின்பகுதியில் உங்கள் கையொப்பத்தை இடவும்.
- உங்கள் கடன் அட்டையை வேறெவரையும் கையாள அனுமதிக்க வேண்டாம். அறிந்தோ அல்லது அறிவிக்காமலோ குடும்ப அங்கத்தவர் ஒருவர் உங்கள் அட்டையை பயன்படுத்தியிருந்தால் (வாழ்க்கைத்துணை, பிள்ளை, பெற்றோர்) அட்டை உரிமையாளராகிய நீங்களே சகல கொடுக்கல் வாங்கல்களுக்கும் பொறுப்பாளராவீர்கள்.
- உங்கள் பழைய, காலாவதியான அட்டைகளை வெட்டி (சிப், காந்தப்புல பகுதி மற்றும் இலக்கங்கள் ஆகியன வெட்டப்பட்டிருப்பதை உறுதி செய்யவும்) அழிக்கவும்.
- அசாதாரணமான பாரிய கொள்வனவுகள் அல்லது வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளீர்களாயின் அது தொடர்பில் எமக்கு முன்கூட்டியே அறிவிக்கவும்.
- உங்கள் அட்டையை பாதுகாப்பான இடத்தில் வைத்திருப்பதுடன், அதை கவனமான முறையில் பணத்தை அல்லது /மற்றும் இதர நிதிசார் ஆவணத்தை போன்று கையாளவும்.
- அட்டை கொடுக்கல் வாங்கல் மற்றும் ATMசிட்டைகளை மூலமாக வழங்கப்படும் சிட்டைகளை கணக்கு அறிக்கையுடன் ஒப்பிட்டு பார்த்த பின்னர் கவனமான முறையில் அழித்துவிடவும். இதனூடாக உங்கள் அட்டைகளுடன் தொடர்புடைய தகவல்களை ஏனையவர்கள் பெற்றுக் கொள்வதை தவிர்த்துக் கொள்ளலாம்.
- நீங்கள் ஒவ்வொரு தடவை அட்டையை பயன்படுத்திய பின்னர் அதை மீளப் பெற்றுக் கொள்வதை உறுதி செய்யவும்.
- பாதுகாப்பற்ற வகையில் மின்னஞ்சல் ஊடாக உங்கள் கடன் அட்டை இலக்கத்தை ஒருபோதும் அனுப்ப வேண்டாம்.
- உங்களினதும் உங்கள் மேலதிக அட்டை வைத்திருப்பவரினதும் சகல கொடுக்கல் வாங்கல்கள் பற்றி அறிந்து கொள்ள எமது இலவச SMS அலேர்ட் வசதியை பயன்படுத்தவும்.
- உங்கள் அறிக்கைகளை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ளவும், ஒன்லைன் சேவையினூடாக இதை இலகுவாக மேற்கொள்ளலாம்.
- உங்கள் அட்டையை நீங்கள் தொலைத்திருந்தால் அல்லது களவாடப்பட்டுள்ளதாக நீங்கள் கருதினால் அது தொடர்பில் உடனடியாக 0117 818181 உடன் தொடர்பு கொண்டு அறிவிக்கவும். இதன் பின்னர் அட்டையை இரத்துச் செய்து, அட்டையில் மோசடியான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுவதை தவிர்க்கக்கூடியதாக இருக்கும்.
உங்கள் அட்டை PIN/கடவுச் சொற்கள் ஆகியவற்றை பாதுகாப்பதற்கான குறிப்புகள்
- உங்கள் பணப்பையில் அல்லது நாட்குறிப்பில் ஏனையவர்களுக்கு புலப்படக்கூடிய வகையில் உங்கள் PIN இலக்கத்தை ஒருபோதும் குறித்து வைக்க வேண்டாம்.
- உங்கள் PIN இலக்கம், கடவுச் சொல் அல்லது பாதுகாப்பு தகவல்களை வேறெந்தவொரு நபருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
- ATM இயந்திரத்தில் உங்கள் PIN இலக்கத்தை பதியும் போது ஏனையவர்களுக்கு உங்கள் இலக்கம் தென்படாத வகையில் மறைத்து பதிவு செய்யவும்.
- உங்களுடன் இலகுவாக தொடர்புபடுத்தக்கூடிய வகையிலான PIN இலக்கத்தை தெரிவு செய்ய வேண்டாம், உதாரணம் உங்கள் பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம் அல்லது உங்கள் அட்டை இலக்கத்தின் ஒரு பகுதி.
- உங்கள் PIN இலக்கம் அல்லது அட்டை தொலைந்துவிட்டதாக, களவாடப்பட்டுவிட்டதாக அல்லது வெளிப்படுத்தப்பட்டுவிட்டதாக நீங்கள் கருதினால் அது தொடர்பில் எமக்கு உடனடியாக 0117 818181 ஊடாக அறிவிக்கவும்.
தன்னியக்க டெலர் இயந்திரத்தை (ATM) பயன்படுத்துவதற்கான குறிப்புகள்
- ATMஇயந்திரத்தை பயன்படுத்தும் முன்னர் சுற்றுப்புறச் சூழலை கண்காணிக்கவும்.
- இரவு வேளைகளில் நண்பர் ஒருவரை அழைத்துச் செல்லவும்.
- ATMஇயந்திரத்தை பயன்படுத்தும் போது அறிமுகமில்லாதவரை உங்களுக்கு உதவி செய்ய அனுமதிக்க வேண்டாம்.
- அட்டையை வெளியே எடுத்து பயன்படுத்த தயாராக இருக்கவும்.
- திரையையும் சாவிப்பலகையையும் மறைத்து ATM இயந்திரத்தை பயன்படுத்தவும். இதனூடாக ஏனையவர்கள் உங்கள் PIN இலக்கத்தை பார்ப்பதை தவிர்க்கலாம்.
- உங்கள் பணம், அட்டை மற்றும் பற்றுச்சீட்டு ஆகியவற்றை உடனடியாக எடுத்து, அதை பின்னர் சரிபார்க்கவும். பற்றுச்சீட்டை கையில் வைத்திருக்கவும்.
- ஏனையவர்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான விடயங்களை நீங்கள் அவதானித்தால், உங்கள் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ளாமல் அவ்விடத்திலிருந்து உடனடியாக அகன்று செல்லவும்.
- பணத்தை பெற்ற பின்னர் உங்களை எவரும் பின்தொடர்ந்தால், அதிகளவு சனநடமாட்டம் நிறைந்த வெளிச்சமான பகுதிக்கு சென்று பொலிசாரை அறிவிக்கவும்.
- பயணிக்கும் போது பயன்படுத்தக்கூடிய ATM ஐ பயன்படுத்துவீர்களாயின் வாகனத்தின் அனைத்து கதவுகளையும் நன்கு மூடி ஜன்னல்களை மூடியிருப்பதையும் உறுதி செய்யவும்.
- ATMஐ பயன்படுத்த நீங்கள் வாகனத்திலிருந்து இறங்கி செல்லும் போது, வாகனத்தை திறந்த நிலையில் அல்லது என்ஜின் இயங்கும் நிலையில் விட்டுச் செல்ல வேண்டாம்.
- பெருமளவு ATM இயந்திரங்கள் 24 மணிநேரமும் இயங்கும் நிலையில், சில வியாபார நேரங்களில் மாத்திரமே இயங்கும். உங்கள் நலன் மற்றும் வசதி கருதி முன்கூட்டியே பண மீளப் பெறுகைகளை திட்டமிடுங்கள்.
- ATMஇயந்திரங்களில் பரீட்சியமில்லாத ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை அவதானியுங்கள். அவ்வாறான வழமைக்கு மாறான ஏதேனும் அம்சங்கள் காணப்படின் அந்த இயந்திரத்தை பயன்படுத்தாமல், வங்கிக்கு அது தொடர்பில் 0117 818181 ஊடாக தொடர்பு கொண்டு உடனடியாக அறிவிக்கவும்.
ஒன்லைனில் எவ்வாறு பாதுகாப்பாக கொள்வனவு செய்வது
- ஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்கையில் உங்கள் அட்டையை பயன்படுத்த நீங்கள் திட்டமிட்டுள்ளீர்களாயின், புகழ்பெற்ற இணைய விற்பனை தளங்களை மட்டும் பயன்படுத்தவும்.
- குறித்த ஒன்லைன் விற்பனை நிலையம் மீளப்பெறல் அல்லது கட்டணத்தை மீளச் செலுத்தும் கொள்கை எதனையும் கொண்டுள்ளதா என்பதை பரிசோதித்துக் கொள்ளவும்.
- சேவை ஒன்றை பெற்றுக் கொள்ள கடவுச் சொல்லை பயன்படுத்த நேரிட்டால், இதை இலகுவாக இனங்காண முடியாதவாறும், ஏனையவர்களுக்கு தென்படாத வகையிலும் இருப்பதை உறுதி செய்யவும்.
- நீங்கள் ஒன்லைன் கொள்வனவுகள் எதையும் மேற்கொண்டால், குறித்த கொடுக்கல் வாங்கலை உறுதி செய்யும் அச்சுப்பிரதி ஒன்றை எடுத்துக் கொள்ளவும். இதனூடாக உங்கள் கடன் அட்டை அறிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்க இலகுவாக இருக்கும்.
- உங்கள் அறிக்கையில் இனங்காண முடியாத அல்லது அங்கிகரிக்கப்படாத கட்டணங்கள் ஏதேனும் காணப்பட்டால் உடனடியாக யூனியன் வங்கியின் அழைப்பு நிலையத்துடன் 0117 818181 ஊடாக தொடர்பு கொள்ளவும்.
உங்கள் கணனியை பாதுகாப்பதற்கான குறிப்புகள்
- ஒன்லைன் வங்கிச் சேவையை பயன்படுத்த நீங்கள் பாவிக்கும் கணினியை எந்தவொரு நபரும் அங்கிகாரமின்றி பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதை உறுதி செய்யவும்.
- தங்கியிருக்கக்கூடிய வைரஸ் காப்பு மென்பொருளை நிறுவி, அது அடிக்கடி மெருகேற்றம் செய்யப்படுவதை உறுதி செய்யவும்.
- பிந்திய பாதுகாப்பு கோப்புகளை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் உங்கள் ஒபரேட்டிங் சிஸ்டத்தை வழியமைக்கவும்.
- பிரத்தியேக ஃபயர்வோல் கட்டமைப்பு ஒன்றை பயன்படுத்தி ஏதேனும் சந்தேகத்திற்கிடமான மற்றும் ஊடுருவல்களை இனங்காணவும்.
- இணையத்திலிருந்து கிடைக்கும் இலவச மென்பொருட்கள் அல்லது நம்பிக்கையில்லாத மூலங்களிலிருந்து கிடைக்கும் மென்பொருட்களை கணினியில் பதிய வேண்டாம்.
ஒன்லைன் வங்கிச் சேவையை பயன்படுத்தும் போது பின்பற்றக்கூடிய சிறந்த வழிமுறைகள்
- மின்னஞ்சல் அல்லது தொலைபேசி ஊடாக அட்டை கணக்கு விவரங்களை வழங்குமாறு தனது அட்டை அங்கத்தவர்களிடம் யூனியன் வங்கி ஒரு போதும் கோராது.
- எங்கிருந்து பணம் வருகிறது அல்லது எங்கு அனுப்பப்படுகிறது என்பதை அறியாமல் பணத்தை அனுப்பவோ அல்லது பெறவோ வேண்டாம்.
- தம் சார்பாக பணத்தை பெற்று பின்னர் அவற்றை பிரிதொரு நபருக்கு மாற்றுமாறு கோரும் நிறுவனங்கள் அல்லது நபர்கள் குறித்து எச்சரிக்கையுடன் செயலாற்றவும்.
- உங்கள் பிரத்தியேக தகவல்களை உங்கள் கையடக்க தொலைபேசியிலிருந்து களவாடக்கூடிய மற்றும் SMS தகவல்கள் பாதிக்கக்கூடிய அப்ளிகேஷன்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
- அங்கிகரிக்கப்படாத இணையத்தளங்களிலிருந்து அப்ளிகேஷன்களை உங்கள் கையடக்க தொலைபேசியில் பதிவு செய்ய வேண்டாம். குறித்த பிளே ஸ்ரோரிலிருந்து எப்போதும் பதிவிறக்கம் செய்வதுடன், வெளியிடுபவரின் பெயரை கவனிக்கவும்.
- உங்கள் தொலைபேசி மற்றும் கணினியில் மெருகேற்றப்பட்ட வைரஸ் காப்பு மென்பொருளை பேணி, உங்கள் தகவல்களை பாதுகாத்துக் கொள்ளவும்.
- வாடிக்கையாளர் எனும் வகையில் நீங்கள் வங்கியுடன் ஒன்லைனில் தொடர்பில் இருக்கும் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
வெளிநாடுகளில் உங்கள் கடன் அட்டையை பயன்படுத்தும் போது பின்பற்றக்கூடிய சில சிறந்த வழிமுறைகள்
- விடுமுறையை திட்டமிடும் போது, உங்கள் பிரயாணத் திட்டம் மற்றும் தொடர்பு கொள்ளக்கூடிய விவரங்களை எமக்கு அறிவிக்கவும்.
- SMS அலேர்ட் வசதியை பெற்றுக் கொள்வதன் மூலமாக, நீங்கள் மேற்கொள்ளும் சகல கொடுக்கல் வாங்கல்கள் பற்றி நீங்கள் உடன் அறிந்து கொள்ள முடியும்.
- நீங்கள் வெளிநாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான பற்றுச் சீட்டுக்களை உங்கள் வசம் கொண்டிருக்கவும். அறிக்கை கிடைத்தவுடன், அவற்றை மீள உறுதி செய்து கொள்ள முடியும்.
- அட்டையையும் pin இலக்கத்தையும் ஒன்றாக வைத்திருக்க வேண்டாம்.
- அவசரமான நிலைகளின் போது, கைவசம் மேலதிகமாக பணத்தை வைத்திருக்கவும்.
- உங்கள் அட்டைகளுக்கான 24 மணி நேர தொலைபேசி இலக்கங்களை உங்களுடன் கட்டாயம் வைத்திருக்கவும். காணாமல் போனால் அல்லது களவாடப்பட்டால் அது தொடர்பில் உடனடியாக வங்கிக்கு அறிவிக்க முடியும்.
- வெளிநாட்டில் நீங்கள் தங்கியிருக்கும் காலப்பகுதிக்காக, எமது கடன் அட்டைகள் மீது வழங்கப்படும் பயண காப்புறுதி வசதியை பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது.
உங்கள் தொடர்பு இலக்கங்களை மெருகேற்றி வைத்திருக்கவும்
- மோசடியிலிருந்து உங்களை பாதுகாப்பதற்கு நாம் எம்மாலான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதுடன், உங்கள் அட்டைகளில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றால் அது தொடர்பில் உங்களுக்கு துரிதமாக அறிவிக்க எமக்கு உங்களை தொடர்பு கொள்ள நேரிடலாம். இவ்வாறு உங்களை துரிதமாகவும் சிறந்த முறையிலும் தொடர்பு கொள்ளக்கூடிய வழிமுறையாக கையடக்க தொலைபேசி அமைந்துள்ளது. எனவே, உங்கள் தொலைபேசி இலக்கங்களை நீங்கள் மாற்றும் சந்தர்ப்பங்களில் அவை தொடர்பில் உடனுக்குடன் வங்கிக்கு அறியத்தரவும்.
உங்கள் கடன் அட்டையில் பதிவாகியுள்ள கொடுக்கல் வாங்கலை எவ்வாறு மறுக்கலாம்
- உங்கள் டெபிட் / கிரெடிட் அட்டையில் இனங்காண முடியாத அல்லது அங்கிகரிக்கப்படாத ஏதேனும் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றிருப்பதை நீங்கள் அவதானித்தால், வங்கியின் அழைப்பு நிலையத்துடன் நீங்கள் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். அந்த விவரங்கள் தொடர்பிலும் நீங்கள் திருப்தியடையாவிடின், குறித்த கொடுக்கல் வாங்கலை மறுக்குமாறு நீங்கள் கோரலாம்.
- கணக்கு அறிக்கை உருவாக்கப்பட்ட திகதியிலிருந்து 20 தினங்களுக்குள் ஏதேனும் கொடுக்கல் வாங்கல்களில் தொடர்பில் நீங்கள் கொண்டிருக்கும் மறுப்பை வங்கிக்கு அறிவிக்க வேண்டும். வங்கியினால் உங்களுக்கு SMS அலேர்ட் மூலமாக அறியத்தரப்படும் எந்தவொரு கொடுக்கல் வாங்கலும் உங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கருதப்படும்.
- உங்கள் மறுப்பை நிவர்த்தி செய்யும் போது, விற்பனை நிலையத்திடமிருந்து கட்டண அறவீடொன்று மேற்கொள்ள வேண்டியேற்படலாம். அவ்வாறான கட்டண அறவீட்டுக்கான விதிமுறைகள் மற்றும் கால எல்லை போன்றன VISA/LankaPay வலையமைப்புகளின் நியதிகளுக்கமைய அமைந்திருக்கும்.
- கொடுக்கல் வாங்கலுக்கு நீங்கள் முதலில் உடன்பட்டு, பின்னர் அந்த கொடுக்கல் வாங்கலை நிறுத்த வேண்டியிருந்தால் அல்லது விற்பனையாளரிடமிருந்து உங்களுக்கு ஒரு தொகை கிடைக்க வேண்டியிருந்தால், உங்கள் மறுப்பை உறுதி செய்யக்கூடிய சகல ஆவணங்களையும் கைவசம் வைத்திருக்கவும். விற்பனையாளருடன் நேரடியாக கொடுக்கல் வாங்கல் மறுப்பு தொடர்பாக தீர்வுக்கு வர முயற்சி செய்யவும், அது கைகூடாதபட்சத்தில் மாத்திரம் வங்கியுடன் தொடர்பு கொள்ளவும்.
- உங்கள் கோரிக்கைகளை தொடர்புடைய விற்பனை நிலையங்களுடன் நிவர்த்தி செய்யும் காலப்பகுதியில் சில தினங்கள் வரை சீராக்கம் செய்ய செல்லும் (charge-back cutover days ) என்பதை பற்றி அறிந்திருக்கவும்.
- அதிருப்தியான சேவை அனுபவத்தை பெற்றிருந்தால் அல்லது எமது சேவைத்தரத்தை மேம்படுத்த உங்களின் பரிந்துரைகள் உதவியாக அமைந்திருக்கும் எனக் கருதினால் எமது 24×7 அழைப்பு நிலையத்துடன் 0117 818181 ஊடாக தொடர்பு கொள்ளவும்.
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





