0117 818181

இரு தசாப்தங்களுக்கு மேலாக வியாபாரங்களுக்கு உதவுவதன் மூலமாக நாம் கொண்டுள்ள அனுபவம் மற்றும் நிபுணத்துவம் ஆகியன உங்களின் வளர்ச்சிக்கான சிறந்த பங்காளராக எம்மை திகழச் செய்துள்ளது. இன்றே எங்களை தொடர்பு கொண்டு, உங்களுக்கு எம்மால் எப்படி உதவ முடியும் என்பது பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

நிறுவனசார் வங்கியியல்

இரு தசாப்தங்களுக்கு மேலாக வியாபாரங்களுக்கு உதவுவதன் மூலமாக நாம் கொண்டுள்ள அனுபவம் மற்றும் நிபுணத்துவம் ஆகியன உங்களின் வளர்ச்சிக்கான சிறந்த பங்காளராக எம்மை திகழச் செய்துள்ளது. இன்றே எங்களை தொடர்பு கொண்டு, உங்களுக்கு எம்மால் எப்படி உதவ முடியும் என்பது பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் ஒரு இறக்குமதியாளர் அல்லது ஏற்றுமதியாளராக இருந்தாலும், நாம் பரந்தளவு வியாபார சேவைகள் மற்றும் தீர்வுகள் ஆகியவற்றை உங்களின் வியாபார கொடுக்கல் வாங்கல்களை வினைத்திறன் வாய்ந்த வகையிலும், திறனான வகையிலும் கையாளக்கூடிய வகையில் வழங்குகிறோம்.

எமது அர்ப்பணிப்பான செயலணியில் முறையான பயிற்சிகளைப் பெற்ற, அனுபவம் வாய்ந்த மற்றும் நிபுணத்துவமான ஊழியர்கள் அடங்கியுள்ளனர். இவர்கள் வெளிநாடுகளில் இடம்பெறும் உங்கள் வியாபார கொடுக்கல் வாங்கல்களின் போது எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளை குறைத்துக் கொள்வதற்கு பங்களிப்பு வழங்குகின்றனர்.

அவர்களின் ஒன்றிணைந்த வலிமைகள் மூலமாக உங்களுக்கு இறக்குமதிகள், ஏற்றுமதிகள், பிணைகள் மற்றும் இதர வியாபாரம் சம்பந்தமான சேவைகள் பற்றிய நிபுணத்துவ வழிகாட்டல்களை வழங்குவதுடன், பொருத்தமான தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கும் வகையி்ல் அமைந்திருக்கும்.

இறக்குமதி சேவைகள்

  • இறக்குமதிக்கான கடன் கடிதங்கள்
  • கப்பல் போக்குவரத்துக்கான உத்தரவாதங்கள்
  • உள்ளக கட்டணப்பட்டியல் சேகரிப்புகள்
  • இறக்குமதி கடன்கள்
  • ஈட்டுறுதிக் கடன்கள்

பிணைகள் மற்றும் உத்தரவாதங்கள்

  • ஏலம் அல்லது பிணை மனுக்கோரல்கள்
  • முற்கொடுப்பனவு உத்தரவாதங்கள்
  • செயற்திறன்மிக்க பிணைகள்
  • கொடுப்பனவு உத்தரவாதம்

ஏற்றுமதிச் சேவைகள்

  • கடன் ஆலோசனைக்கான கடிதம்
  • பொதியிடல் கடன்கள்
  • ஆவணங்கள் சேகரிப்பு
  • ஏற்றுமதி பத்திரங்கள் கொள்வனவு

நாம் குறுங்கால அடிப்படையிலான தொழிற்படு மூலதன தீர்வுகளை இலங்கை ரூபாயில் அல்லது பிரதான வெளிநாட்டு நாணயங்களில் போட்டிகரமான விலைகளில் வழங்குகிறோம். இதன் மூலம் எமது வாடிக்கையாளர்களுக்கு போட்டிகரத்தன்மை வாய்ந்த அனுகூலத்தை பெற்றுக் கொடுக்கிறோம். எமது தொழிற்படு மூலதன நிதிப் பொருட்களில் உள்ளடங்கும் சில தீர்வுகளாக பின்வருவன அமைந்துள்ளன,

  • மேலதிகப் பற்று
  • குறுங்கால கடன்கள்
  • கூட்டாண்மை கடன் பத்திரங்கள்
  • ஃபெக்டரிங்

உங்கள் மாறுபட்ட வியாபார மற்றும் பிரத்தியேக நிதித் தேவைகள் பற்றி யூனியன் வங்கியைச் சேர்ந்த நாம் நன்கு அறிந்துள்ளதுடன், அதற்கேற்ப விரைவாகவும், நெகிழ்ச்சியான முறையிலும் லீசிங் தீர்வுகளை வழங்க நாம் முன்வந்துள்ளோம். வியாபார கையகப்படுத்தல்கள் மற்றும் வாகனங்கள் அல்லது இயந்திர சாதனங்கள் கொள்வனவுக்காக நாம் நிதிசார் தீர்வுகளை போட்டிகரமான கட்டணங்களில் வசதியான மீள்கொடுப்பனவு திட்டங்களினுடாக வழங்க நாம் தயாராகவுள்ளோம்.

நீண்ட கடன்கள் மற்றும் பங்குமயமாக்கல் முறைகளினூடாக நீண்ட கால நிதித்தீர்வுகளை எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் வழங்குகிறோம். இவற்றைக் கொண்டு எமது வாடிக்கையாளர்கள் தமது விரிவுபடுத்தல்கள் மீதான முதலீடுகள், ஆரம்பநிலையிலுள்ள செயற்திட்டங்கள், இடம்மாற்றங்கள் போன்வற்றை மேற்கொள்ள முடியும். வசதியான மீளச் செலுத்தும் திட்டங்கள் ஆகியனவும் உள்ளடங்கியுள்ளன.

வெளிநாட்டு நாணயத்தில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளல், கையாளல் அல்லது விற்பனை செய்தல் போன்ற செயற்பாடுகளை போட்டிகரமான விலையில் முன்னெடுப்பதற்கு வாய்ப்புகளை யூனியன் வங்கி ஏற்படுத்துகிறது.

இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளக்கூடிய வெளிநாட்டு நாணயமாற்று வித்தியாசங்களால் ஏற்படும் இடர்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக ஹெட்ஜ் முன்பதிவு முன்செலுத்துகை ஒப்பந்தங்களையும் நாம் ஏற்படுத்திக் கொடுக்கிறோம்.

உங்கள் வியாபாரத்தை
அடுத்த நிலைக்கு

கொண்டு செல்லல்

நிறுவனசார் / எஸ்எம்ஈ சேவைகள்

தொடர்புகளுக்கு

    எங்களுடன் தொடர்புகொள்ள

    0117 818181

    மின்னஞ்சல்

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC