யூனியன் வங்கி தனது பிரதான மற்றும் இடர் மீட்பு டேட்டா நிலையங்களில் பாரிய மெருகேற்றத்தை அண்மையில் மேற்கொண்டிருந்தது. அதன் உட்கட்டமைப்பு, வன்பொருள், பெக்-அப் தீர்வுகள், பாதுகாப்பு உட்கட்டமைப்பு, நிறுவனசார் களஞ்சியப்படுத்தல் மற்றும் கண்காணிப்பு தீர்வுகள் போன்றவற்றில் மேம்படுத்தல்கள் இவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
டேட்டா நிலையத்துக்கு இந்த பிந்திய மெருகேற்ற அமலாக்கத்தினூடாக, வங்கி தற்போது நவீன வசதிகள் படைத்த தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ளத. இதில் Software Defined Network (SDN) மற்றும் Application Centric Infrastructure (ACI) போன்ற பிந்திய தொழில்நுட்பங்கள் காணப்படுகின்றன. இந்த புதிய தொழில்நுட்பங்கள் கட்டமைப்புகளின் தங்கியிருக்கும் திறனை மேம்படுத்துவதாக அமைந்திருப்பதுடன், உயர் கிடைப்பனவு மற்றும் சிறந்த இடர் மீட்சித் திறன்களை வழங்குவதாக அமைந்திருக்கும். குறைந்தளவு சேவை தடங்கல்களை உறுதி செய்யும் வகையில் இந்த டேட்டா சென்ரரில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடு அமைந்திருப்பதுடன், மேலும் அதிகளவு மாற்றியமைப்பு மற்றும் புத்தாக்க ஆற்றல்களை உருவாக்கி, வங்கியின் தூர நோக்குடனான, துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் மாற்றியமைப்பு செயற்பாடுகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இந்த டேட்டா நிலைய மெருகேற்றம் தொடர்பில் யூனியன் வங்கி பிரதம தகவல் அதிகாரி நிசல கொடிப்பிலி கருத்துத் தெரிவிக்கையில், “துரித கதியில் தொழில்நுட்பம் மாற்றமடையும் யுகத்தில் நாம் இயங்குவது மாத்திரமன்றி, தொழில்நுட்பத்தினூடாக மக்களின் வாழ்க்கையும், நாம் வியாபாரத்தை முன்னெடுக்கும் முறையும் துரிதமாக மாற்றமடைந்த வண்ணமுள்ளது. எமது டேட்டா நிலையத்துக்கான இந்த பாரிய மெருகேற்றம் என்பது, அடுத்த கட்ட டிஜிட்டல் மாற்றத்துக்கு வங்கியை தயார்ப்படுத்தும் காலப்பகுதியில் தோற்றம் பெற்றுள்ளது, இதனூடாக, பிரத்தியேகமான தீர்வுகள் பிரயோகம் இடம்பெறுவதுடன், ஒன்றிணைக்கப்பட்ட, பரிபூரண பாவனையாளர் அனுபவம் எமது சகல பங்காளர்களையும் சென்றடைகின்றது. புதிய டேட்டா நிலைய மேம்படுத்தல் என்பது, 360 பாகை சேவை விரிவாக்கலுக்கு வலுச் சேர்ப்பதுடன், பாவனையாளர் அனுபவம், வாடிக்கையாளர் அனுபவம், பல அனுபவ மற்றும் ஊழியர் அனுபவ மேம்பாட்டை உறுதி செய்யும்.” என்றார்.
டேட்டா சென்ரர் மெருகேற்றம் தொடர்பான பிரதான அனுகூலங்கள் பற்றி கொடிப்பிலி மேலும் தெரிவிக்கையில், “அண்மைய மெருகேற்றத்தினூடாக, எமது கட்டமைப்பு தற்போது Tier III டேட்டா சென்ரராக திகழ்வதுடன், 99.98% இயங்கு நேரத்தையும், பராமரிப்பு ஆற்றல்களையும் உறுதி செய்திருந்தது. அதாவது எமது வாடிக்கையாளர்களுக்கு தற்போது துரித வங்கியியல் சௌகரியங்களுடன், மேம்படுத்தப்பட்ட டேட்டா பாதுகாப்பு லேயர்களை கொண்டிருக்கும் தகைமையை பெற்றுள்ளனர். புதிய டேட்டா நிலையத்தின் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நிலைகள் பிரதான உள்ளம்சமாக அமைந்துள்ளதுடன், அதிகரித்துச் செல்லும் இடர்களின் போது தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தற்போதைய சூழல்களில் சிறந்த செயற்படுத்துநராகவும் உள்ளது. டேட்டா சென்ரரின் மெருகேற்றத்தினூடாக, திட்டமிடப்படாத மீட்சி செயற்பாடுகள் எவ்விதமான தடங்கல்களுமின்றி இடம்பெறுவதுடன், அதிகரித்துச் செல்லும் உறுதியற்ற தன்மைகளின் போது வியாபாரங்கள் தொடர்ச்சித் தன்மையை உறுதி செய்ய வேண்டிய தேவையாகவும் அமைந்துள்ளது. எமது உற்பத்தித் திறனை இது அதிகரித்துள்ளதுடன், புதிய செயற்திட்டங்களை வேகமாக பிரயோகிக்கும் எமது ஆற்றலை மேம்படுத்துவதாகவும் அமைந்துள்ளதுடன், உட்கட்டமைப்பு செலவுகளை சீர்ப்படுத்துவதுடன், வங்கியின் கட்டமைக்கப்பட்ட திட்டங்களுடன் டிஜிட்டல் மாற்றியமைப்புக்கு ஏதுவாக அமைந்திருக்கும்.” என்றார்.
வாடிக்கையாளர் அனுபவங்களை தொடர்ச்சியாக மேம்படுத்துவது என்பது இந்த தந்திரோபாயத்தின் ஒரு அங்கமாக அமைந்துள்ளதுடன், மேம்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளில் யூனியன் வங்கி தொடர்ச்சியான முதலீடுகளை மேற்கொள்வதுடன், வங்கி பிரத்தியேகமான மற்றும் உரிய காலத்துக்கான நிதித் தீர்வுகளில் முதலீடுகளை மேற்கொண்டு, வளர்ந்து வரும் பரந்தளவிலான வாடிக்கையாளர்களை தேவைகளை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்துகின்றது. வங்கியின் தந்திரோபாயமான வழிமுறையில், மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய தீர்வுகள், நீடித்த அணுகல் பகுதிகள் மற்றும் தொழில்நுட்பம் செயற்படுத்தப்பட்ட சௌகரியங்கள் போன்றன வாடிக்கையாளர்களுக்கு நேர்த்தியான வங்கியியல் அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச தனியார் முதலீட்டு நிறுவனமான TPG இன் உறுதித் தன்மையுடன் யூனியன் வங்கி இயங்குவதுடன், US$85 க்கு அதிகமான மூலதனத்தை முகாமைத்துவத்தின் கீழ் கொண்டுள்ளது. ஆசியா மற்றும் ஐரோப்பாவில் நீடித்த சர்வதேச வலையமைப்பையும் கொண்டுள்ளது. உறுதியான அடித்தளத்துடன், நிதி உறுதித் தன்மை மற்றும் சர்வதேச அறிவாற்றல் போன்றவற்றினூடாக, இலங்கையில் காணப்படும் அதிகளவு மூலதனவாக்கத்தைக் கொண்ட தனியார் வணிக வங்கிகளில் ஒன்றாக யூனியன் வங்கி அமைந்துள்ளது. இதனூடாக முழுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகள் போன்றன தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு வழங்கப்படுகின்றன.

