மத்துகம பறைகம வித்தியாலய சிறுவர்களுக்கு யூனியன் வங்கி உதவி
யூனியன் வங்கியின் மதுகம கிளையின் ஏற்பாட்டில், மதுகம பறைகம வித்தியாலத்துக்கு நீண்ட கால தேவையாக காணப்பட்ட விளையாட்டு பகுதி, பிள்ளைகளின் பாதுகாப்புக்கு அவசியமாக காணப்பட்ட வேலி மற்றும் பாடசாலை கற்றல் உபகரணங்கள் போன்றன அண்மையில் வழங்கப்பட்டிருந்தன. தரம் 1 முதல் 11 வரை பயிலும் 149 மாணவர்களை இந்த பாடசாலை கொண்டுள்ளதுடன், மதுகமையின் பின்தங்கிய பகுதியில் அமைந்துள்ளது. அடிப்படை வசதிகள் எதுவுமின்றி, கரப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களில் இந்தப் பாடசாலை மாவட்ட மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளைகள் மற்றும் வலய அலுவலகங்களைச் சேர்ந்த ஊழியர்கள், பல்வேறு விளையாட்டுப் பொருட்களை இந்தத் திட்டத்தினூடாக நன்கொடையாக வழங்கியிருந்தனர்.
யூனியன் வங்கியின் வலய அடிப்படையிலான சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் அங்கமாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது. யூனியன் வங்கியின் சமூகப் பொறுப்புணர்வு மூலோபாயத் திட்டத்தின் பிரகாரம் சிறுவர்களின் நலன் தொடர்பில் அக்கறை கொள்ள வங்கி தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், தனது வியாபார செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் பிரதேசங்களைச் சேர்ந்த சமூகங்களுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றது.
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்






















