யூனியன் வங்கியின் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட BizDirect+ ஊடாக திரள்வு முகாமைத்துவத்திற்கு நிபுணத்துவ சாதனங்கள் வழங்கல்

 

யூனியன் வங்கி தனது BizDirect+ ஐ மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்திய வினைத்திறன் மற்றும் சௌகரியத்தை பெற்றுக் கொடுக்கக்கூடிய புதிய உள்ளம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இந்த BizDirect+ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

BizDirect என்பது யூனியன் வங்கி வழங்கும் புரட்சிகரமான வங்கியியல் கொடுக்கல் வாங்கல் கட்டமைப்பாகும். வியாபாரங்களுக்கு பணப்பாய்ச்சல் முகாமைத்துவ தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டில், யூனியன் வங்கியினால் இலங்கையின் முதலாவது தன்னியக்கமான பணப்பாய்ச்சல் முகாமைத்துவ கட்டமைப்பாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. ஐந்து வருட காலப்பகுதியில், 2020 பெப்ரவரியில், மேம்படுத்திய BizDirect+ கட்டமைப்பை வங்கி பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளது. இதனூடாக, கூட்டாண்மை மற்றும் SME வியாபாரங்களுக்கு அடுத்த கட்ட வெற்றிகரமான செயற்பாட்டை முன்னெடுக்க உதவியாக அமைந்திருக்கும்.

மேம்படுத்தப்பட்ட BizDirect கட்டமைப்பு தொடர்பில் கொடுக்கல் வாங்கல் வங்கியியல் மற்றும் சிறிய, நடுத்தரளவு வியாபாரங்களின் உப தலைவர் அசங்க ரன்ஹொட்டி கருத்துத் தெரிவிக்கையில், ”வெற்றிகரமான வியாபாரத்தில் சிறந்த பண முகாமைத்துவம் என்பது உயிர்நாடியாக அமைந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியில் உயர்ந்த, தன்னியக்கமான பண முகாமைத்துவ கட்டமைப்பினூடாக, வியாபாரங்களுக்கு தெளிவான வகையில் திரள்வு நிலையை நிர்வகித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். சிறியளவு வியாபாரம் அல்லது பாரியளவிலான கூட்டாண்மை நிறுவனங்கள் என அனைத்துக்கும் இது முக்கியமானதாக அமைந்திருக்கும். பணம் என்பது இலங்கையில் அதிகளவு முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் காணப்படுவதால், வினைத்திறன் வாய்ந்த வகையில் பண முகாமைத்துவம் என்பது பெருமளவு பயன்படுத்தப்படுவதில்லை. யூனியன் வங்கியின் புரட்சிகரமான பண முகாமைத்துவ கட்டமைப்பான BizDirect ஊடாக, வியாபார உரிமையாளர்களுக்கு பரிபூரண திரள்வு முகாமைத்துவ கட்டுபாட்டை வழங்குகின்றது. தமது பணப்பாய்ச்சலின் பிரகாரம் உரிய காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த முகாமைத்துவ தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடியதாக அமைந்திருக்கும்.” என்றார்.

தன்னியக்கமான BizDirect பண முகாமைத்துவ கட்டமைப்பினூடாக, சேகரிப்புகள் தொடர்பான செயற்பாடுகள், கொடுப்பனவுகள், திரள்வு முகாமைத்துவம், அறிக்கையிடல் மற்றும் சீராக்கம் போன்றவற்றை பேணக்கூடியதாக உள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் அசல்நேர தரவுகள் கிடைப்பதுடன், பாவனையாளர்களுக்கு உரிய நேரத்தில் பணத்தை திரட்டிக் கொள்ள முடிவதுடன், தமது பண மீதிகளுக்கேற்ப முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும். தன்னியக்கமயமாக்கல், ஒன்லைன் ஆவணப்படுத்தல் மற்றும் அசல் நேர தரவு அறிக்கையிடல் போன்றவற்றினூடாக, மோசடிகள் இடம்பெறக்கூடிய வாய்ப்புகள் குறைக்கப்படுகின்றன. இந்த கட்டமைப்பில் பாதுகாப்புக்கான உயிரியல் உறுதிப்படுத்தல் அடங்கலாக பிந்திய பாதுகாப்பு மேம்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டமைப்பு இணைய அடிப்படையினாலானதாக அமைந்திருப்பதுடன், host-to-host (H2H) அடிப்படையில் ஏற்கனவே காணப்படும் கணக்குகளுடன் ஒன்றிணைப்பதாக அமைந்துள்ளது. பயன்படுத்த மிகவும் இலகுவானதான செயன்முறையைக் கொண்டுள்ளது. யூனியன் வங்கியின் அர்ப்பணிப்பான அணியினால் அவசியமான பயிற்சிகள் மற்றும் உதவிகள் வழங்கப்படும். பண முகாமைத்துவ கட்டமைப்பு தொடர்பான தமது நிபுணத்துவ அறிவை பகிர்ந்து கொள்வார்கள். சர்வதேச ரீதியில் காணப்படும் தீர்வுகளுடன் ஒப்பிடுகையில் BizDirect ஊடாக பரந்தளவு தீர்வுகள் சகாயமான விலையில் வழங்கப்படுகின்றன.

சிறிய, நடுத்தரளவு வியாபாரங்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் யூனியன் வங்கியின் BizDirect+ அமைந்துள்ளது. சகல அளவிலான வியாபாரங்களுக்கும் வேகமான மற்றும் துல்லியமான தீர்மானங்களை மேற்கொள்ள உதவியாக அமைந்துள்ளது. பயன்படுத்த இலகுவான கட்டமைப்பினூடாக வியாபாரத்துக்கு பணத்தை உரிய காலத்தில் திரட்டிக் கொள்ள உதவிகள் வழங்கப்படுவதுடன், நீண்ட காலம் தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகின்றது. மேலும், விநியோகத்தர்களுடன் உரிய காலப்பகுதியில் கொடுப்பனவுகளை மேற்கொள்வதனூடாக சிறந்த உறவை பேண உதவியாக அமைந்துள்ளது.

இந்த கட்டமைப்பினூடாக, ஒன்லைனில் அனுமதிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், கையடக்க தொலைபேசியிலும் அனுமதிகளை பெறக்கூடியதாக இருக்கும். காசோலை ஒன்றை கைகளால் வரைவதற்கான தேவை முழுமையாக நீக்கப்படுகின்றது. தன்னியக்கமயமாக்கலினூடாக, ஒன்லைனில் உடனடியாக ஆவணப்படுத்தலுக்கான ஆவணங்களை பதிவேற்ற முடியும். இதனூடாக குறித்த ஆவணங்களை பிரிதொரு வகையில் அனுப்புவதற்கான தேவை இல்லாமல் செய்யப்படுவதுடன், காலதாமதங்களும் தவிர்க்கப்படுகின்றன. காசோலைகளை சுயமாக வங்கியினால் அச்சிட முடியும் என்பதுடன், BizDirect பாவனையாளருக்கு அல்லது அவர்களின் வாடிக்கையாளருக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரம் பெற்ற சேகரிப்பு சேவை வழங்குநரூடாக, பணம் மற்றும் காசோலைகளை வியாபாரங்களிலிருந்து நேரடியாக திரட்டிக் கொள்ள முடியும் என்பதுடன் வியாபாரத்துக்கு தேவையான போது பணத்தை மீள பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நிறுவனத்தின் பண நிலைப்பாட்டை பாவனையாளர்கள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில், சீராக்கங்களும் தன்னியக்கமாக இடம்பெறும்.

மாற்றியமைக்கப்பட்ட, தன்னியக்கமயப்படுத்தப்பட்ட பண முகாமைத்துவ தீர்வினூடாக, கூட்டாண்மை வியாபாரங்களுக்கு தமது தொழிற்படு மூலதன சுழற்சி முகாமைத்துவ ஆற்றலை மேம்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும். திரள்வு முகாமைத்துவம் தொடர்பான தெளிவான தோற்றப்பாடு மூலமாக, வியாபாரங்களின் பண நிலைமைகள் தொடர்பில் பரிபூரண தோற்றப்பாடு வழங்கப்படுவதுடன், முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும். BizDirect ஊடாக, சிறிய, நடுத்தரளவு வியாபாரங்களை எதிர்காலத்தில் பாரிய நிறுவனங்களாக வளர்ச்சியடைவதற்கு உதவிகள் வழங்கப்படும்.

”பல சிறு வியாபாரங்கள் போதியளவு பதிவுகளை பேணத் தவறுகின்றன. இந்நிறுவனங்களின் வெற்றிகரமான செயற்பாட்டுக்கு இது ஒரு தடையாக அமைந்துள்ளது. யூனியன் வங்கியின் BizDirect+ஐ பயன்படுத்துவதனூடாக, சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்களுக்கு கட்டமைக்கப்பட்ட ரீதியில் தமது செயற்பாடுகளின் போது எந்த வகையான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்பது தொடர்பில் கண்காணிக்கக்கூடியதாக இருக்கும். கொடுப்பனவுகள் மற்றும் சேகரிப்புகள் போன்ற பல செயற்பாடுகளை தன்னியக்கமயமாக்கக்கூடியதாக இருக்கும் என்பதுடன், தமது வியாபாரத்தில் கவனம் செலுத்தக்கூடியதாகவும் இருக்கும். BizDirect இன் இந்த சகல பெறுமதி சேர்ப்புகளும், பெறுமதி வாய்ந்த பல நிர்வாக நேரத்தை மீதப்படுத்துவதாக அமைந்திருக்கும், இந்த காலப்பகுதியை வியாபார வளர்ச்சிக்காக கவனம் செலுத்த முடியும். சர்வதேச நியமங்களுக்கமைவான இந்த பரந்தளவு செயற்பாடுகள் சகாயமான விலையில் வழங்கப்படுவதுடன், சகல அளவிலான வியாபாரங்களுக்கும் அணுகக்கூடியதாக இருக்கும்.” என ரன்ஹொட்டி மேலும் தெரிவித்தார்.

கூட்டாண்மை மற்றும் சிறிய, நடுத்தரளவு, வங்கியியல் துறை என்பது யூனியன் வங்கியின் செயற்பாடுகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பங்கை கொண்டுள்ளன. இந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரிவுக்கு பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கான பரந்தளவு முதலீடுகளை வங்கி மேற்கொள்கின்றது. அதன் BizDirect கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு வங்கி அண்மையில் மேற்கொண்டிருந்த முதலீடு என்பது இதற்கான தெளிவான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த துறையாக இனங்காணப்பட்டுள்ள சிறிய, நடுத்தரளவு வியாபாரத்துறையின் வளர்ச்சியில் பங்களிப்பு செய்யும் வியாபாரங்களின் முன்னேற்றத்துக்காக வங்கி தொடர்ந்தும் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. வங்கியினால் முன்னெடுக்கப்படும் மூலோபாய ரீதியில் வடிவமைக்கப்பட்ட, மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய தீர்வுகள், நீடிக்கப்பட்ட அணுகல் பகுதிகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியில் செயற்படுத்தப்பட்ட சௌகரியங்கள் போன்றன வாடிக்கையாளர்களுக்கு நேர்த்தியான வங்கியியல் அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் வகையில் அமைந்துள்ளன. பரந்தளவு வாடிக்கையாளர்களின் பிரதான இனங்காணப்பட்ட பகுதிகளில், வங்கி தொடர்ந்தும் தயாரிப்பு மற்றும் சேவை மேம்படுத்தல்களில் முதலீடுகளை மேற்கொள்வதுடன், தமது பெறுமதி சேர் வாடிக்கையாளர்களுக்கு வங்கியியல் சௌகரியத்தையும் வழங்குகின்றது.

வங்கிகள்

  • Amana Bank PLC
  • Bank of Ceylon
  • Cargills Bank Ltd
  • Citibank
  • Commercial Bank of Ceylon PLC
  • DFCC Bank
  • Hatton National Bank PLC
  • HDFC Bank
  • HSBC Ltd
  • National Development Bank PLC
  • Nations Trust Bank
  • Pan Asia Banking Corporation
  • People’s Bank
  • Public Bank Berhard
  • Sampath Bank PLC
  • Seylan Bank PLC
  • Standard Chartered Bank

நிறுவனங்கள்

  • Merchant Bank of Sri Lanka Finance
  • Central Finance PLC
  • Commercial Leasing and Finance PLC
  • HNB Finance
  • LB Finance PLC
  • People’s Leasing and Finance PLC
  • Softlogic Finance Plc
  • Singer Finance (Lanka) PLC