SLIM NASCO விருதுகள் 2019 இல் யூனியன் வங்கிக்கு இரு தங்க விருதுகள் வழங்கி கௌரவிப்பு

படங்கள்

  • Pic 1 – மொபிடெல் வியாபார மாதிரியின் பொது முகாமையாளர் பிரபாத் கமகேயிடமிருந்து சுமேதா பிரசாதிகா விருதை பெற்றுக் கொள்வதுடன், அருகில் ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் விற்பனை பொது முகாமையாளர் சின்தக பெரேரா அருகில் காணப்படுகின்றார்.
  • Pic 2 – மொபிடெல் வியாபார மாதிரியின் பொது முகாமையாளர் பிரபாத் கமகேயிடமிருந்து சாமர ரொசாரியோ விருதை பெற்றுக் கொள்வதுடன், அருகில் ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் விற்பனை பொது முகாமையாளர் சின்தக பெரேரா அருகில் காணப்படுகின்றார்.

 

யூனியன் வங்கியின் விற்பனை அணியைச் சேர்ந்த இரு ஊழியர்களுக்கு, அண்மையில் இடம்பெற்ற SLIM NASCO விருதுகள் 2019 நிகழ்வில் நிதிச் சேவைகள் மற்றும் வங்கியியல் பிரிவில் தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.

 

சிறந்த பிராந்திய முகாமையாளருக்கான தங்க விருதை யூனியன் வங்கியின் சாமர ரொசாரியோ பெற்றுக் கொண்டதுடன், சிறந்த முன்னிலையாளருக்கான தங்க விருதை சுமேதா பிரசாதிகா வெற்றியீட்டியிருந்தார்.

 

அவசியமான வெளிப்படுத்தல்களுடன் இளம் நிபுணர்களை ஊக்குவிக்கும் முயற்சிகளை வங்கி முன்னெடுக்கின்றமையை இந்த விருதுகள் உறுதி செய்துள்ளன. குறிப்பாக தொழிற்பயிற்சிகளை வழங்குவது மற்றும் தொழில்நிலை முன்னேற்றம் மற்றும் பிரத்தியேக விருத்திக்கு அவசியமான திறனூட்டல் செயற்பாடுகள் போன்றன வங்கியின் அர்ப்பணிப்புகளில் அடங்கியுள்ளன.

 

இந்த விருது தொடர்பில் வாடிக்கையாளர் வங்கியியல் பிரிவின் உப தலைவர் சாயா ஜயவர்தன கருத்துத் தெரிவிக்கையில், ”தேசிய மட்டத்தில் எமது ஊழியர்கள் சிறப்பாக விற்பனை பெறுபேறுகளை வெளிப்படுத்தி அதற்காக கௌரவிப்பையும் விருதுகளையும் பெற்றுக் கொள்வதை காண்பது பெரும் மகிழ்ச்சியளிப்பதாகவும் பெருமை சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது. வங்கியின் மத்திய விற்பனை அணி வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பு மற்றும் குழுநிலை செயற்பாடு ஆகியவற்றை பிரதிபலிப்பதாக இந்த சாதனை அமைந்துள்ளது. இந்த இரு ஊழியர்களும் தமது கடுமையான உழைப்பு மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை காண்பிக்கின்றமைக்காக கிடைத்த கௌரவிப்பாக இது அமைந்துள்ளதுடன், இவ்வாறான அர்ப்பணிப்பான செயற்பாடுகளினூடாக அவர்களுக்கு கடுமையான போட்டியின் மத்தியில் தேசிய மட்டத்தில் போட்டியிட்டு வளர்ச்சியை பதிவு செய்யக்கூடியதாக இருந்தது. சாமர மற்றும் சுமேதா ஆகியோருக்கு அவர்களின் வெற்றிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றார்.

 

மனித வளங்கள் பிரிவின் உப தலைவர் ரவி ஜயசேகர கருத்துத் தெரிவிக்கையில், ”எமது சக ஊழியர்கள் தேசிய மட்டத்தில் அவர்களின் செயற்பாடுகள் மற்றும் பங்களிப்புக்காக கௌரவிக்கப்பட்டுள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். எமது ஊழியர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளினூடாக வங்கி சிறந்த முன்னேற்றங்களை பதிவு செய்துள்ளது. அவர்கள் தமது முழுத்திறனையும் எய்துவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் அவர்களுக்கு ஊக்கமளிப்போம்.” என்றார்.

 

இலங்கையின் வருடாந்த நாட்காட்டியில் அதிகளவு எதிர்பார்ப்புகளைக் கொண்ட நிகழ்வாக அமைந்துள்ள தேசிய விற்பனை காங்கிரஸ் (NASCO) நிகழ்வை இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகம் (SLIM) ஏற்பாடு செய்கின்றது. இந்த ஆண்டு நிகழ்வின் தொனிப்பொருளாக ‘Excel. Engage. Ensure – Beyond all Limits’ அமைந்திருந்தது. 2018 ஜனவரி 1 ஆம் திகதி அல்லது 2018 ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 2018 டிசம்பர் 31ஆம் திகதி வரை அல்லது 2019 மார்ச் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்டிருந்த பெறுபேறுகள் இந்த விருதுகளுக்காக கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தன. புகழ்பெற்ற நடுவர்கள் குழுவில் துறையின் முன்னோடிகள் அடங்கியிருந்தனர். 22 பிரிவுகளில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பிரிவுக்கும் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் போன்ற விருதுகள் முன்னிலையாளர்கள், விற்பனை மேற்பார்வையாளர்கள் மற்றும் பிராந்திய முகாமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. BMICH இல் இடம்பெற்ற கோலாகலமான வைபவத்தில் இந்த விருதுகள் வழங்கப்பட்டிருந்தன.

வங்கிகள்

  • Amana Bank PLC
  • Bank of Ceylon
  • Cargills Bank Ltd
  • Citibank
  • Commercial Bank of Ceylon PLC
  • DFCC Bank
  • Hatton National Bank PLC
  • HDFC Bank
  • HSBC Ltd
  • National Development Bank PLC
  • Nations Trust Bank
  • Pan Asia Banking Corporation
  • People’s Bank
  • Public Bank Berhard
  • Sampath Bank PLC
  • Seylan Bank PLC
  • Standard Chartered Bank

நிறுவனங்கள்

  • Merchant Bank of Sri Lanka Finance
  • Central Finance PLC
  • Commercial Leasing and Finance PLC
  • HNB Finance
  • LB Finance PLC
  • People’s Leasing and Finance PLC
  • Softlogic Finance Plc
  • Singer Finance (Lanka) PLC