dotCOMM விருதுகள் 2019 இல் யூனியன் வங்கியின் இணையத்தளத்துக்கு தங்க விருது வழங்கி கௌரவிப்பு

 

யூனியன் வங்கியின் இணையத்தளமான www.unionb.com க்கு, அமெரிக்காவின் dotCoMM விருதுகள் 2019 இல் நிதிப் பிரிவில் தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

சந்தைப்படுத்தல் பிரிவின் உதவி உப தலைவர் திஷானி திசாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், ”எமது சாதனையை பகிர்ந்து கொள்வதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம், இதனூடாக டிஜிட்டல் பிரசன்னத்தை கொண்டிருப்பதற்கு வங்கி காண்பிக்கும் அர்ப்பணிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், டிஜிட்டல் மாற்றத்துக்காக காண்பிக்கும் அர்ப்பணிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட இணையத்தளம் 2019 ஜனவரி மாதம் மீள அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதன் நோக்கம், வங்கியின் டிஜிட்டல் பிரசன்னத்தை மேம்படுத்துவது மற்றும் தற்போது காணப்படும் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அம்சங்களை பயன்படுத்தி பாவனையாளர்களுக்கு பாதுகாப்பான வகையில் தமது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு உதவியாக அமைந்திருப்பதாக அமைந்துள்ளது. மேலும், மேம்படுத்தப்பட்ட இணையத்தளத்தினூடாக, மாற்றமடைந்து வரும் டிஜிட்டல் போக்குகளுடன் முன்னிலையில் திகழ வங்கிக்கு முடிந்துள்ளது. எமது டிஜிட்டல் சேவை வழங்குநரான DigiBrush இன் முயற்சிகள் பாராட்டத்தக்கது.” என்றார்.

இந்த இணையத்தளத்தினூடாக பாவனையாளர்களுக்கு வழங்கப்படும் மேம்படுத்தப்பட்ட அனுபவத்தில், ஆய்வு அடிப்படையிலான தகவல் கட்டமைப்பினூடாக குறைந்த படிமுறைகளில் தகவல்களை பெறும் வசதி, இணையத்தளம் முழுவதிலும் முக்கியமான இடுக்குகளை இலகுவாக அணுகக்கூடிய வகையில் google analytics இன் பிரகாரமான Quick link dropdowns, பெருமளவான பாவனையாளர்கள் இணையத்தளத்தை தமது கையடக்க தொலைபேசியினூடாக பார்வையிடும் காரணமாக, கையடக்க தொலைபேசிக்காக சீரமைக்கப்பட்ட இணையத்தளம், சமூக வலைத்தள ஒன்றிணைப்புகள், சுய விவரக் கோவையை பதிவேற்றக்கூடிய வசதியுடனான தொழில் வாய்ப்பு பக்கம், பங்கு விலைகள் மற்றும் துல்லியமான தரவுகளை பெற்றுக் கொள்வதற்கான நேரலையான, தன்னியக்கமான CSE widget மற்றும் ATM/கிளை தேடல் வசதி போன்றன அடங்கியுள்ளன. மேலும், பாவனையாளர்களுக்கு உயர் மட்ட பாதுகாப்பை இந்த இணையத்தளம் வழங்குகின்றது. இந்த இணையத்தள வடிவமைப்புக்காக வேகமாக வளர்ந்து வரும் புத்தாக்கமான இணையதள வடிவமைப்பு, டிஜிட்டல் ஊடக சந்தைப்படுத்தல் மற்றும் வடிவமைப்பு தீர்வுகள் வழங்கும் நிறுவனமான Digibrush பிரைவட் லிமிடெட் உடன் கைகோர்த்திருந்தது.

dotCOMM விருதுகள் என்பது சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படும் போட்டியாகும். இணையத்தள ஆக்கத்திறன் மற்றும் டிஜிட்டல் தொடர்பாடலில் சிறப்பை கௌரவித்து இந்த போட்டி முன்னெடுக்கப்படுகின்றது. பொருட்கள் மற்றும் சேவைகளை நாம் எவ்வாறு சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல்களை பேணுவது போன்ற முறைகளில் ஆக்கத்திறன் கொண்டுள்ளதை பிரதிபலிக்கும் வகையில் இந்த போட்டி அமைந்துள்ளது. dotCOMM விருதுகளை சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் நிபுணர்கள் சம்மேளனத்தினால் நிர்வகிப்படுவதுடன், மத்தியஸ்தம் வகிக்கப்படுகின்றது. சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் துறையில் காணப்படும் மிகவும் நன்மதிப்பைப் பெற்ற மதிப்பீட்டாளர்களை கொண்ட அமைப்பாக இது திகழ்கின்றது. 1994 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது முதல், AMCP இனால் 200,000 க்கும் அதிகமான விண்ணப்பங்கள் உலகளாவிய ரீதியிலிருந்து மதிப்பிடப்பட்டுள்ளன. AMCP இன் இரண்டு போட்டிகள், MarCom விருதுகள் மற்றும் Hermes Creative விருதுகள் போன்றன வருடாந்தம் சுமார் 6000 விண்ணப்பங்களை கவர்கின்றன.

படம்: திஷானி திஸாநாயக்க, உதவி உப தலைவர் சந்தைப்படுத்தல், யூனியன் வங்கி

வங்கிகள்

  • Amana Bank PLC
  • Bank of Ceylon
  • Cargills Bank Ltd
  • Citibank
  • Commercial Bank of Ceylon PLC
  • DFCC Bank
  • Hatton National Bank PLC
  • HDFC Bank
  • HSBC Ltd
  • National Development Bank PLC
  • Nations Trust Bank
  • Pan Asia Banking Corporation
  • People’s Bank
  • Public Bank Berhard
  • Sampath Bank PLC
  • Seylan Bank PLC
  • Standard Chartered Bank

நிறுவனங்கள்

  • Merchant Bank of Sri Lanka Finance
  • Central Finance PLC
  • Commercial Leasing and Finance PLC
  • HNB Finance
  • LB Finance PLC
  • People’s Leasing and Finance PLC
  • Softlogic Finance Plc
  • Singer Finance (Lanka) PLC