யூனியன் வங்கி கொழும்பு பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க.
ஆகஸ்ட் மாதம் யூனியன் வங்கியின் கடன் அட்டைகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, மத்திய மாகாணத்தில் விசேட அறிமுகத்தை மேற்கொள்ளும் வகையில், கண்டி ஏர்ள்ஸ் ரீஜென்ஸி ஹோட்டலில் விசேட நிகழ்வொன்றை யூனியன் வங்கி அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் வாடிக்கையாளர்கள் மற்றும் விசேட விருந்தினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
யூனியன் வங்கியின் கடன் அட்டைகள் தங்கம், பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர் ஆகிய தெரிவுகளில் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததுடன், VISA payWave அம்சத்தையும் கொண்டுள்ளன. சில்லறை வங்கியியல் தயாரிப்பு தெரிவுக்கு புதிய உள்ளம்சத்தையும் சேர்க்கிறது. வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறை தேவைகளை கவனத்தில் கொண்டு, மூலோபாய அடிப்படையில் பரந்தளவு அனுகூலங்கள், சலுகைகள் மற்றும் பிரத்தியேகமான உள்ளம்சங்களை கொண்டு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் யூனியன் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ”யூனியன் வங்கியின் கடன் அட்டைகள் VISA PayWave உள்ளம்சத்தைக் கொண்டுள்ளன. இதனூடாக அதிகளவு வாடிக்கையாளர் சௌகரியத்தை வழங்கும் பிளாஸ்ரிக் அட்டைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. மேலும், இந்த அட்டையினூடாக வருடம் முழுவதிலும் அதிகளவு சேமிப்புகள் மற்றும் அனுகூலங்கள் போன்றன வழங்கப்படுகின்றன” என்றார்.
இந்த நிகழ்வின் நோக்கம், யூனியன் வங்கியின் கடன் அட்டைகளை அறிமுகம் செய்து, பொது மக்கள் மத்தியில் அதில் காணப்படும் அனுகூலங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. இந்த விழிப்புணர்வு செயற்பாட்டுக்கு மேலதிகமாக, 2 நாள் ஊக்குவிப்பு செயற்பாடுகள் கண்டி சிட்டி சென்ரரில் (KCC) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் யூனியன் வங்கியின் ஊழியர்கள் பங்கேற்றிருந்ததுடன், இந்த அட்டையில் காணப்படும் அனுகூலங்கள் தொடர்பான விழிப்புணர்வை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தனர்.
சந்தையை தொடர்ச்சியாக யூனியன் வங்கி கடன் அட்டைகள் கவர்ந்திழுப்பதுடன், அட்டைதாரர்களுக்கு பெருமளவான அனுபவங்களுடன் பாரிய சேமிப்புச் சலுகைகளையும் வழங்குகிறது.
வங்கியின் நாடளாவிய ரீதியில் காணப்படும் கிளை வலையமைப்பில் கடன் அட்டைகளை கொள்வனவு செய்ய முடியும் என்பதுடன், வங்கியின் 24 x 7 அழைப்பு நிலையத்துடன் 011 5800800 ஊடாக தொடர்பு கொண்டு பிரத்தியேகமான சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
யூனியன் வங்கி கடன் அட்டைகள் மற்றும் இதர தயாரிப்புகள் தொடர்பான மேலதிக விவரங்களுக்கு unionb.com எனும் இணையத்தளத்தை பார்க்கவும்.

