யூனியன் வங்கி, முன்கூட்டிய சித்திரை புதுவருட வெகுமதி வழங்கலை அளிக்கின்றது

யூனியன் வங்கி, தமிழ் சிங்கள புது வருடத்தினை ஒட்டி ‘முன்கூட்டிய புத்தாண்டு கொடுக்கல்வாங்கல்’ (‘Kalin Avurudu Ganudenu’)என்ற சேமிப்புகள் மீது வியத்தகு வெகுமதிகளை அளிக்கும் முன்;கூட்டிய வழங்கலை அறிமுகம் செய்துள்ளது.

2018 மார்ச் 25ம் திகதி முதல் அளிக்கப்படவுள்ள இந்த வழங்கல்கள், வாடிக்கையாளர்கள், அடுக்குகள் மட்ட முறைமையிலான சேமிப்புகளை மேற்கொள்வதற்கும், குறித்த ஒவ்வொரு இலக்குமட்டத்திற்கும் பெறுமதிமிக்க வெகுமதிகளை பெற்றுக்கொள்வதற்கும் வழியமைக்கும் அதேவேளை, தமது சேமிப்பு மீதி சிறப்பான வளர்ச்சியினை பெற்றுக்கொள்தலையும் நோக்க முடியும். இந்த வருடத்திற்கான ஊக்குவிப்பானது, தெரிவுசெய்யப்பட்ட சேமிப்பு அடுக்கு மட்டங்கள் மீது பல்வேறு வெகுமதிகளை அளிப்பதன் காரணமாக, அளிக்கப்படும் சலுகைகளை மேலும் மேம்படுத்துகின்றது.

குறித்த இந்த வெகுமதிகள், புதிய மற்றும் ஏற்கனவேயுள்ள சேமிப்பு மற்றும் நடைமுறைக் கணக்குகளில் மேற்கொள்ளப்படும் புதிய வைப்புகள் மீது வழங்கப்படும். அடுக்கு அடிப்படையிலான வெகுமதிக் கட்டமைப்பில் ரூ. 10,000 ற்கும் மேற்பட்ட வைப்புகளுக்கு பயணப்;பை ஒன்று அளிக்கப்பட, ரூ. 50,000 ற்கும் மேற்பட்ட வைப்புகளுக்கு மின்சார கேத்தல் ஒன்று அளிக்கப்படும். ரூ. 100,000ற்கும் மேற்பட்ட வைப்புகளை மேற்கொள்வோர், ப்ளுடுத் ஸ்பீக்கர், பொப்-அப் டோஸ்டர் அல்லது மொபைல் பவர் பேங்க் ஆகியவற்றில் ஒன்றினை வெகுமதியாக பெற்றுக்கொள்ள முடியும். ரூ. 500,000 ற்கும் மேற்பட்ட வைப்புகளை மேற்கொள்வோருக்கு கேஸ் சிலிண்;டர் மற்றும் கேஸ் குக்கர் அல்லது ஃபுட் ப்ரொசெசர் அல்லது ரிமோர்ட் கொன்ட்ரோல் ஸ்டேன்ட் ஃபேன் போன்றவற்றில் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும். ரூ. 1,000,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை வைப்புகளுக்கு LED TV ‘கள், மினி பார் குளிர்சாதனப்பெட்டிகள், Tab கள் அல்லது கேஸ் சிலிண்;டர், இரண்டு பேர்னர் க்ளாஸ் டொப் கேஸ் குக்கர் மற்றும் ஒரு சோஸ்பேன் உள்ளடங்கிய சமையலறை பயன்பாட்டு தொகுதி ஆகிய பிரத்தியேக தொகுதி வெகுமதிகளில் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும்.

யூனியன் வங்கியானது, யூனியன் பேங்க் அல்ட்ரா சேவர் மற்றும் யூனியன் பேங்க் சேலறி பவர் கணக்குகள் உள்ளிட்ட ஏராளம் சேமிப்பு மற்றும் வைப்பு சேவைகளை வழங்குகின்றது. இந்த கணக்குகள் கவர்ச்சிகரமான திரும்பல்கள் மற்றும் பெறுமதி சேர் அனுகூலங்கள் ஆகியவற்றினை வழமையான சேமிப்பாளர்களுக்கு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊக்குவிப்பு சலுகையானது, குறித்த இந்த அனுகூலங்களை பெற்றுக்கொள்வதற்கான சிறந்த வழியாக விளங்கும் அதேவேளை, வங்கிச்சேவை சௌகர்யத்தினை, நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள வங்கியின் 67 கிளைகளினூடாகவும், நாடளாவிய ரீதியில் LankaPay ஊடாக விஸ்தரிக்கப்பட்ட 4000ற்கும் மேற்பட்ட ATM வலைமைப்பின் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

யூனியன் வங்கியானது, தமது ஒன்லைன் வங்கியியல் தளத்தின் ஊடாகவும் மொபைல் பேங்கிங் செயலி ஊடாகவும் புத்தாக்க வங்கியியல் அனுபவத்தினை, வாடிக்கையாளர்களின் மேம்படும் வாழ்க்கைப்பாணி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கொடுக்கின்றது.

‘முன்கூட்டிய புத்தாண்டு கொடுக்கல்வாங்கல்’ ஆனது மட்டுப்படு;த்தப்பட்ட காலத்திற்கு அளிக்கப்படும் சலுகையாக விளங்குவதோடு, கையிருப்பு உள்ளவரை அமுலில் இருக்கும். வாடிக்கையாளர்கள், அருகாமையில் உள்ள யூனியன் வங்கிக் கிளைக்கு விஜயம் செய்வதன் ஊடாக அல்லது வங்கியின் 24 மணிநேர அழைப்பு நிலையத்துடன் 011 5 800 800 இல் தொடர்புகொள்வதன் ஊடாக மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்

வங்கிகள்

  • Amana Bank PLC
  • Bank of Ceylon
  • Cargills Bank Ltd
  • Citibank
  • Commercial Bank of Ceylon PLC
  • DFCC Bank
  • Hatton National Bank PLC
  • HDFC Bank
  • HSBC Ltd
  • National Development Bank PLC
  • Nations Trust Bank
  • Pan Asia Banking Corporation
  • People’s Bank
  • Public Bank Berhard
  • Sampath Bank PLC
  • Seylan Bank PLC
  • Standard Chartered Bank

நிறுவனங்கள்

  • Merchant Bank of Sri Lanka Finance
  • Central Finance PLC
  • Commercial Leasing and Finance PLC
  • HNB Finance
  • LB Finance PLC
  • People’s Leasing and Finance PLC
  • Softlogic Finance Plc
  • Singer Finance (Lanka) PLC