யூனியன் வங்கியின் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக சரத் விக்ரமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக வங்கியின் பணிப்பாளர் சபை அறிவித்துள்ளது. ஜுன் மாதம் 21 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளது.
வங்கியியல் துறையில் 16 வருட கால அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், சிரேஷ்ட நிதியியல் நிறைவேற்று அதிகாரியாக 27 வருட காலம் கடமையாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். தேசிய அபிவிருத்தி வங்கி அடங்கலாக முன்னணி நிறுவனங்களின் பணிப்பாளர் சபையில் இவர் அங்கம் வகித்துள்ளார். யூனியன் அஷ்யூரன்ஸின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக 1999 முதல் 2003 வரையில் பதவி வகித்திருந்தார். இதற்கு முன்னதாக பேர்மியுடாவிலுள்ள வங்கியான பாங்க் ஒஃவ் பட்டர்ஃபீல்டில் 19 வருடங்கள் பணியாற்றியுள்ளார். அக்காலப்பகுதியில், நிறைவேற்று உப தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இவர் பதவி வகித்திருந்தார். பிரத்தானியா, செனல் தீவுகள், ஹொங் கொங், சிங்கப்பூர் மற்றும் கேமன் தீவுகள் போன்றவற்றுக்கான செயற்பாடுகளை நிறைவேற்றும் பொறுப்பை கொண்டிருந்தார்.
இவர் AIA இன்சூரன்ஸ் லங்கா பிஎல்சி, NDB வெல்த் மனேஜ்மன்ட் லிமிடெட், NDB இன்வெஸ்ட்மன்ட் பாங்க் லிமிடெட், NDB கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் லிமிடெட், NDB செபைர் பார்ட்னர்ஸ் லங்கா (பிரைவட்) லிமிடெட் மற்றும் NDB கெப்பிட்டல் லிமிடெட் (பங்களாதேஷ்) ஆகியவற்றில் பணிப்பாளராக செயலாற்றி வருகின்றார்.
1979 ஆம் ஆண்டு முதல் இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தின் அங்கத்துவத்தை விக்ரமநாயக்க கொண்டுள்ளார்.

