குளோபல் பிஸ்னஸ் அவுட்லுக் விருதுகள் வழங்கும் நிகழ்வில் யூனியன் வங்கிக்கு இலங்கையின் சிறந்த பண முகாமைத்துவ வங்கிக்கான விருது வழங்கி கௌரவிப்பு

 

யூனியன் வங்கி பேணி வரும் தனது நவீன Biz Direct தீர்வுக்காக குளோபல் பிஸ்னஸ் அவுட்லுக் விருதுகள் வழங்கும் நிகழ்வில், இலங்கையின் சிறந்த பண முகாமைத்துவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.

கூட்டாண்மை மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை வாடிக்கையாளர்களுடன் Biz Direct தொடர்ச்சியாக பேணி வரும் கொடுக்கல் வாங்கல்களின் வெற்றிகரமான செயற்பாட்டை இந்த விருது உறுதி செய்துள்ளது.

புரட்சிகரமான வங்கியியல் கொடுக்கல் வாங்கல் முறையானது, பரிபூரண தீர்வாக அமைந்துள்ளதுடன், வியாபாரங்களுக்கு சர்வதேச அணுகல் மற்றும் பாவனையை பெற்றுக் கொள்வதற்கான வசதியை வழங்குவதுடன், உள்நாட்டு மற்றும் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட வியாபாரங்களை ஒரு பொத்தானை அழுத்துவதனூடாக மேற்கொள்ளக்கூடிய வசதியை வழங்குகின்றது. இது பாவனையாளருக்கு நட்பான, மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய வங்கியியல் தீர்வாக அமைந்துள்ளதுடன், குறிப்பிட்ட வியாபார வங்கியியல் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் அமைந்துள்ளது. மேலும் வியாபாரங்களுக்கு தமது கொடுப்பனவு நிர்வாகத்தை சிறந்த முறையில் கட்டுப்படுத்திக் கொள்வதற்கான வசதியையும் வழங்குகின்றது.

இந்த விருதை வென்றமை தொடர்பாக யூனியன் வங்கியின் மொத்த வங்கியியல் பிரிவின் பதில் தலைவர் திருமதி. ஹிரந்தி டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், ‘இந்த சர்வதேச அமைப்பிடமிருந்து இலங்கையின் சிறந்த பண முகாமைத்துவ வங்கியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதையிட்டு நாம் மிகவும் பெருமையும், மகிழ்ச்சியுமடைகின்றோம். 2016 இல் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து குறுகிய காலத்தினுள் Biz Direct இனால் முன்னெடுக்கப்படும் சிறந்த செயற்பாடுகள் இந்த விருதினூடாக மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. Biz Direct என்பது வங்கியின் வியாபார மட்ட வாடிக்கையாளர்களின் குறித்த வியாபார நடவடிக்கைகள் பற்றிய சிறந்த புரிந்துணர்வை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், துறைசார் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடியது. யூனியன் வங்கியினால் வழங்கப்படும் சேவைகளில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதுடன், உள்நாட்டு வங்கிகளில் பண முகாமைத்துவத்தில் சந்தை தலைமைத்துவத்தை வெற்றியீட்டியுள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து கட்டியெழுப்ப நாம் எதிர்பார்ப்பதுடன், மேம்படுத்தப்பட்ட பண முகாமைத்துவ அனுபவத்தை எமது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்தும் பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கின்றோம்.’ என்றார்.

இந்த தொழில்நுட்பம் செலவற்ற தீர்வாக வழங்கப்படுவதுடன், சகல அளவுகளையும் கொள்ளளவுகளையும் கொண்ட வியாபாரங்களுக்கு பல அனுகூலங்களை பெற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளதுடன், பொருளாதாரத்தின் சிறிய செயற்பாட்டாளர்களுக்கு தன்னியக்கமான பண முகாமைத்துவ செயன்முறைகளினூடாக சௌகரியம் மற்றும் வினைத்திறன் போன்றவற்றினூடாக வலுவூட்டுவதாக அமைந்துள்ளது. இந்த சொகுசு முன்னர் சில முன்னணி கூட்டாண்மை நிறுவனங்களுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. பாதுகாப்பு என்பது பிரதான வேறுபடுத்தும் விடயமாக அமைந்துள்ளது. கட்டமைப்பினுள் Secure control ஒன்றிணைக்கப்பட்டுள்ளதுடன், Biz Direct இன் பாதுகாப்பு உள்ளம்சங்கள் என்பது, துறையில் பின்பற்றப்படும் பிந்திய பாதுகாப்பு நியமமான TLS (Transaction Layer Security) இன் மீது செயற்படுகின்றது. ஏனைய பல நிறுவனங்கள் தற்போதும் SSL கட்டமைப்பை பின்பற்றுகின்றன.

மேலும், கொடுக்கல் வாங்கல்களை உறுதி செய்வதற்கு சௌகரியமான தன்னியக்க அலேர்ட்களை உருவாக்கல் ஊடாக Biz Direct இனால் குறிப்பிட்ட வியாபார கொடுப்பனவு செயன்முறைகளை கட்டியெழுப்பிக் கொள்ள முடியும். இதில் சீரமைக்கப்பட்ட சேகரிப்புகள் மற்றும் பெற்றுக் கொண்டவை செம்மைப்படுத்தப்படல் போன்றவற்றுக்கான ஒன்றிணைக்கப்பட்ட சேகரிப்பு முறைமை காணப்படுவதுடன், தினசரி வௌ;வேறு மூலங்களிலிருந்து பாரியளவு தொகையை சேகரிப்பாக பெறும் நிறுவனங்களுக்கு அதிகளவு பெறுமதியை சேர்ப்பதாக அமைந்துள்ளது. பரிபூரண முகாமைத்துவ தகவல் அறிக்கைகளை பார்வையிட வாய்ப்பளிப்பதுடன், விவரமான கூட்டாண்மை நிதியியல் கொடுக்கல் வாங்கல் நிரலை கொண்டுள்ள Biz Direct இனால் முகாமையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தீர்மானமெடுத்தல்களை மேற்கொள்ள முடிகின்றது.

இந்த கட்டமைப்பினூடாக பரந்தளவு இலகு, ஒரு அழுத்த வியாபார கொடுக்கல் வாங்கல்கள், பன் நாணய மற்றும் வெளிநாட்டு பணப்பரிமாற்ற தீர்வுகள், பரிபூரண பணப்பாய்ச்சல் முகாமைத்துவம், Host2Host கொடுப்பனவுகள் மற்றும் அசல் நேர அறிக்கையிடல் போன்றவற்றினூடாக வியாபார வினைத்திறன் மேம்படுத்தப்படுகின்றது. பாதுகாப்பை பொறுத்தமட்டில், Biz Direct இனால் நவீன உறுதிப்படுத்தல் முறைகள் hard/soft tokens போன்றவற்றுடன், SMS மற்றும் மின்னஞ்சல் ஊடான உறுதிப்படுத்தல் போன்றவற்றை வழங்குகின்றது.

Biz Direct இனால் நிறுவனங்களுக்கு தன்னியக்கத்தினூடாக கொடுப்பனவு செயன்முறையில் பொது இயலாமைகள் மற்றும் இடர்கள் போன்றன தவிர்க்கப்படுகின்றன. ஒற்றை உறுதிப்படுத்தல் உள்ளம்சத்தினூடாக காசோலைகள் கையொப்பமிடலின் போது ஒன்றிணைந்த உறுதிப்படுத்தல் மேற்கொள்ளப்படுகின்றது. காசோலைகளுக்கு மேலாக, பங்கிலாபங்கள், கடன் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவு ஆணைகள் போன்ற அச்சிடப்பட்ட ஆவணங்களை கட்டமைப்பு கையாள்கின்றது. இதனூடாக முகாமையாளருக்கு நேரம் மீதப்படுத்தப்படுகிறது. Biz Direct இன் பண மாற்று தெரிவை பயன்படுத்தி, வியாபாரங்கள் கையாளும் செலவை குறைத்துக் கொள்ள முடியும் என்பதுடன், பணி வினைத்திறனை மேற்கொள்ளவும் முடியும்.

யூனியன் வங்கி தான் சேவைகளை வழங்கும் சகல வாடிக்கையாளர் பிரிவுகளுக்கும் ஒப்பற்ற வங்கியியல் அனுபவத்தை பெற்றுக் கொடுக்கிறது. மாற்றியமைத்துக்கொள்ளக்கூடிய பொருட்கள், நீடிக்கப்பட்ட அணுகல் புள்ளிகள் மற்றும் தொழில்நுட்பம் செயற்படுத்தப்பட்ட சௌகரியங்கள் போன்ற வங்கியின் வழிமுறைகளினூடாக, வாடிக்கையாளர்களுக்கு நேர்த்தியான வங்கியியல் அனுபவம் சேர்க்கப்படுகிறது. தனது பரந்தளவு வாடிக்கையாளர்களின் பாரிய இடர் பகுதிகளை இனங்கண்டு, அவற்றை நிவர்த்தி செய்து, சௌகரியம் மற்றும் பெறுமதி சேர்க்கக்கூடிய தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதில் வங்கி பெருமளவு முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. குளோபல் அவுட்லுக் விருதுகள் 2019 இல் சிறந்த பண முகாமைத்துவ வங்கி எனும் விருதை பெற்றுள்ளதனூடாக, பரந்தளவு வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் வங்கியியல் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு நவீன வங்கியியல் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கான யூனியன் வங்கியின் அர்ப்பணிப்பு மீள உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

குளோபல் பிஸ்னஸ் அவுட்லுக் விருதுகள் பற்றி

குளோபல் பிஸ்னஸ் அவுட்லுக் விருதுகளினூடாக, உலகளாவிய ரீதியில் இயங்கும் பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் வியாபாரத்தில் சிறப்பாக செயலாற்றும் நடவடிக்கைகளை விருதுகள் வழங்கி கௌரவிப்பது எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. புத்தாக்கம், ஆக்கத்திறன் மற்றும் பெறுமதி உருவாக்கத்துக்கான வழிநடத்தல் போன்றவற்றுக்கு உரித்தான கௌரவிப்பை பெற்றுக் கொடுப்பது இதன் இலக்காகும். வினைத்திறன் வாய்ந்த, நேர்மையான மற்றும் வெளிப்படையான நடுவர் செயன்முறையை கொண்டுள்ளதையிட்டு இந்த விருதுகள் வழங்கும் திட்டம் பெருமை கொள்வதுடன், விருதுகளை வென்ற அனைவரும் தமது விருதுகளை 12 மாத கால மதிப்பீட்டு காலத்துக்கு கொண்டிருப்பார்கள். ஐக்கிய இராஜ்ஜியத்தை தளமாகக் கொண்டியங்கும் சஞ்சிகையானது, வியாபார உலகில் இடம்பெறும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பான முன்னணி தகவல் வழங்குநராக திகழும் இலக்குடன் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை உள்வாங்கும் வகையில் அமைந்துள்ளது.

வங்கிகள்

  • Amana Bank PLC
  • Bank of Ceylon
  • Cargills Bank Ltd
  • Citibank
  • Commercial Bank of Ceylon PLC
  • DFCC Bank
  • Hatton National Bank PLC
  • HDFC Bank
  • HSBC Ltd
  • National Development Bank PLC
  • Nations Trust Bank
  • Pan Asia Banking Corporation
  • People’s Bank
  • Public Bank Berhard
  • Sampath Bank PLC
  • Seylan Bank PLC
  • Standard Chartered Bank

நிறுவனங்கள்

  • Merchant Bank of Sri Lanka Finance
  • Central Finance PLC
  • Commercial Leasing and Finance PLC
  • HNB Finance
  • LB Finance PLC
  • People’s Leasing and Finance PLC
  • Softlogic Finance Plc
  • Singer Finance (Lanka) PLC